இரு சக்கர வாகனம் திடிர் என்று பஞ்சரானால்..இரு சக்கர வாகனம் பஞ்சர் ஆவது என்பது என்னை பொறுத்தவரை எதிர்பாராத சிராய்ப்பு இல்லாத சிறு விபத்து என்று சொல்லுவேன்..

விபத்து நடக்கபோகின்றது என்று நமக்கு முன் கூட்டியே தெரியாது அல்லவா அது போலத்தான்...அதுவும் என் கசின் பரத்தும் நானும் கடலூரில்  இருந்து பாக்சர்  பைக்கில் மிக வேகமாக வந்து கொண்டு இருந்த போது மதுராந்தகம் அருகே கருங்குழி என்ற இடத்தை கடக்கும் போது சட்டென  பின் டயரில் மவுத் அப்படியே பிடிங்கிக்கொள்ள, அப்படியே என்ஹெச் ரோட்டில் பைக்கில் இருந்து விழுந்து பிரண்டோம்...இரண்டு பேருக்கும் சின்ன சிராய்ப்பு மட்டுமே... அது போலத்தான் பஞ்சரும்....

என்ன பஞ்சர் ஆனால் வண்டி அலையும்..  பெரிய பஞ்சர் என்றால் இன்னும் அதிகமாக அலைந்து விழந்து தொலைய வேண்டியதுதான்..பஞ்சரில் மெதுவாக காற்று இறங்குகின்றது என்றால் உடனே பக்கத்தில் இருக்கும் பஞ்சர் கடை பக்கம் வண்டியை விட வேண்டியதுதான்.....ரொம்ப நாள் கழித்து புழுதிவாக்கம் ராவணன் நகரில் இருக்கும் அக்கா வீட்டுக்கு போய் இரவு பதினோரு மணிக்கு மடிப்பாக்கம்  ஆக்சிஸ் பேங்க் தாண்டி ஒரு ஒட்டலில் சாப்பிட்டு விட்டு வண்டியை விரட்டினேன்..வாணுவம்பேட் சர்ச் தாண்டினேன் வண்டி அலைந்தது... சரி இன்னைக்கு சிவராத்திரி என்று நினைத்துக்கொண்டேன்....பின் டயர் சூம்பி போய் இருந்தது..

இரவு பதினோரு மணிக்கு பஞ்சர்கடை எதும் அந்த இடததில் இல்லை .. பக்கததில் எவரை கேட்டாலும் எனக்கு தெரிஞ்சு இங்க பக்கத்தில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நான் நின்ற கடையே பஙசர் கடைதான் ஆனால் ஒன்பது மணியோடு சாத்தி விடுவார்களாம்....ஆயிரக்கனக்கான வண்டிகள் ஓடும் சென்னையில் பஞ்சர்கடைகள் இரவு ஒன்பதுக்கு சாத்தி விடுகின்றார்களே என்று வருத்தம் கொண்டேன்..

சரி அடுத்து என்ன என்று யோசித்த போது  சரி எதாவது வண்டியில் வாகனத்தை ஏற்றி பஞ்சர்கடை அருகில் இறங்கிக்கொள்வோம் என்று முடிவு எடுத்தேன்..

இரண்டு வாகன தடுப்பு முயற்சிக்குபின் ஒரு சின்ன யானை  வண்டியை நிறுத்தி நானும் டிரைவரும் என் இரு சக்கர வாகனத்தை ஏற்ற சிரமபட பக்கத்தில் கடையை பூட்டிக்கொண்டு இருந்த மெக்கானிக் நண்பர் வண்டியை ஏற்ற உதவி செய்தார்....

கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் கம்பீரமா  என் இருச்ககர வாகனத்தில் உட்கார்ந்து வந்தேன்.. பத்து நிமிடத்தில் என் இருசக்கரவாகனமும் நானும் அகதிகள் பயணப்படுவது போல அந்த வாகனத்தில் பயணித்தோம்..சின்ன யானை டிரைவர், ஆதம்பாக்கம் சாஸ்திரி நகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு 24 மணி நேர பஞ்சர் கடையில் வண்டியை நிறுத்தினார்.... என் நேரம் அந்த கடை பூட்டி இருந்தது...இனி எங்கு கடை என்று இருவரும் யோசிக்க.....

ஒரு ஆட்டோ வந்து நின்றது.. என்ன கடை முடி இருக்கா என்றார்.. ஆமாம் என்றேன்... அந்த ஆட்டோ டிரைவர்  இரண்டு கடை தள்ளி ஒரு நீல கலர் ஷட்டர்  உள்ள கதவை தட்டினார்..

டேய் மகாலிங்கம் எழுந்துரு?? என்றார்

உள்ளே டிவியில் 80ஆம் வருட மெலோடிகள் ஓடிக்கொண்டு இருந்தது.. வெளியே கதவை திறந்த மகாலிங்கத்திடம் பஞ்சருக்கு ஆள்  வந்து இருக்கு என்று சொல்ல ,எனது வாகனத்தை கீழே இறக்கி வைக்க சொல்ல எனது வாகனத்தை இறக்க அந்த ஆட்டோ டிரைவரும் உதவி செய்தார்...

சின்ன யானை டிரைவர் 150 ரூபாய் கேட்டவர்... 100ரூபாய் பெற்றுக்கொண்டு சென்று விட்டார்..


ஆணியால் பஞ்சர் ஆகி இருந்தால் கூட என்மனது ஆறி போய் இருக்கும் ஒரு ஷார்ப்பான மரத்துண்டு குத்தி டுயூப்பை கைமா பண்ணி இருக்கின்றது..ஆட்டோ டிரைவர் ரொம்ப டயரில் இருந்த மரத்துண்டை எடுக்க மிகவும் சிரமபட்டார்.. அது உடைந்து, உடைந்து வந்தது...அவரின் சின்ன பையன் வீட்டுக்கு போக அவசரபடுத்த, அட்டோ டிரைவர் பஞ்சர் போடும் மகாலிங்கத்திடம் பத்து ரூபாய் கேட்க நான் பத்து ரூபாய் எடுத்து கொடுத்தேன்.. அவர் வாங்க மறுத்து விட்டார்...உதவி செய்ததுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று சொன்னார்...

அவர் மட்டும் இல்லையென்றால் இன்னும் இரவு வேளையில் பல இடங்களில் அலைந்து இருப்போம்...ஆனால்  அவர் பணம் வாங்க மறுத்து விட்டு தன் நண்பனிடம் வாங்கி சென்றார்... அவருக்கு நன்றி சொல்லி அவர் பெயர் கேட்க சத்யா என்று சொன்னார்..

மகாலிங்கம் பஞ்சர் ஒட்டினார்...ரூபாய் ஐம்பது கேட்டார் கொடுத்தேன், அவரின் கடை உள்ளே இருந்த கலைஞர் டிவியில் எந்தன்  நெஞ்சில் ஏழு உலகங்கள் வராய் கண்ணா வா என்று ஸ்ரீதேவி, தனது 1980 வருடத்திய குழைவான தொப்புளை காட்டி, வெள்ளை சேலையை மழையில் நனைய விட்டு,கமலை இரண்டு கை  விரித்து  வந்து கட்டிக்கொள்ள கெஞ்சிக்கொண்டு இருந்தார்..

நான் அவரிடம் நன்றி சொன்னேன்...24 மணி நேரமும் கடையில் இருப்பேன் என்றார்...

மடிப்பாக்கம், நங்கநல்லூர் பூழுதிவாக்கம்,கிண்டி போன்ற இடங்களில் உங்கள் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் பஞ்சர் ஆகி நின்று விட்டால்  சீங்கள் மகாலிங்கத்தை  அழைக்கலாம்... மகாலிங்கத்திடம் வண்டி இல்லை... சோ ஆட்டோ பிடித்து வந்து வீலை கழட்டி பஞ்சர் ஓட்டி தீரும்ப வந்து உங்கள் வாகனத்தில் மாட்ட கொஞ்சம் செலவு ஆகும்....

இருப்பினும் இரவு நேரத்தில் மகாலிங்கம் மட்டும் கடையில் இல்லையென்றால் நான் சென்னை நகரத்தில் நைட் வாட்ச்மேனாக மாறி இருப்பேன்....மகாலிங்கம் பஞ்சர் கடை..
சாஸ்திரிநகர் மெயின்ரோடு
ஆதம்பாக்கம்
சென்னை..88
கைபேசி...9841101560

சரி பேமலியோடு நைட்டுல பிரண்டு வீட்டுக்கு போய்விட்டு வரும் போது திடிர் என்று பஞ்சர் ஆனால் என்ன செய்வது... இணையத்தில் தேடிய போது இதுக்கு சில தளங்கள்  இருக்கின்றன....அது எல்லாம் பெங்களூரில் வண்டி பஞ்சர் அன என்ன செய்ய வேண்டும் என்று சொல்கின்றன....

பெங்களூரில் வாகனம் பஞ்சர் ஆனால்  என்ன செய்ய வேண்டும் மேலும்வாசிக்க

அவைகளுக்கான லிங் படிக்க இங்கே கிளிக்கவும்....
சென்னையில் இதுக்கு எதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள்.. அதாவது வண்டி பஞ்சர் ஆனால் பெங்களுரில் வருடத்துக்கு 100ரூபாய் கட்டி மெம்பர் ஆகிவிட்டால்  பெங்களூரில் எங்கு பஞ்சர் ஆனாலும் ,30 நிமிடத்தல் பஞ்சா போட்டு கொடுத்து விடுகின்றார்கள்.. இது 24 மணிநேர சேவை... அது போல சென்னையில் இருந்தால் நண்பர்கள் பகிருங்கள்... பிறருக்கு உதவியாக இருக்கும்....

பெங்களூரில் ஒரு பதினைந்து நாட்கள் இருந்துவிட்டு வண்டியை எடுத்தேன்  சென்னை சூட்டில் லைட்டாக காற்று இறங்கி இருந்தது... அப்போதே காற்று பைக்குக்கு அடித்து இருந்தால் இந்த பஞ்சர் ஆகி இருக்காது.. டயரில் முழு காத்து இருக்கும் போது பஞ்சர் ஆவது மிகவும் குறைவு... கொஞ்ச சோம்பேறித்தனம்  நிறைய அலைச்சலுக்கும் பண இழப்பு நேர இழப்புக்கு வழி வகுக்கும் என்பதை ஆதம்பாக்கம் சாஸ்திரி மெயின்ரோட்டில் இருக்கும் மகாலிங்கம் பஞ்சர் கடைவாசலில் நின்று கொண்டு இருக்கும் போது புரிந்துக்கொண்டேன்..பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...==============

5 comments:

 1. சென்னையில் பத்து வருடங்களுக்கு முன்னால் இந்த சர்வீஸ் இருந்தது.. அதை நான் தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் மேன் பவர் ப்ரச்சனையால் மூடிவிட்டார்கள்.

  ReplyDelete
 2. நல்ல உபயோகமான பதிவு அண்ணே....

  நல்ல நேரம் இதுல போலீஸ் இல்ல வேற யாராவது சினிமா பானில வந்து டுவிஸ்ட் கொடுக்கமா போனங்களே....

  ReplyDelete
 3. எனக்கும் இதுபோல அதிகதடவா ஆகி இருக்கு , ஆனாலும் லங்கா la இந்தமாதிரி member ஆகுற வசதி இல்ல, நடுக்காடு ஆகா இருந்தாலும் அம்பு தான்

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி... அவருடைய நம்பரை நோட் பண்ணிக்கொண்டேன்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner