விரல் வெட்டி அடுத்த நேர்த்தி கடன்.. அரசு வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம்என்னைக்கும் இல்லாத திருநாளா நேற்று காலையிலேயே சாண்வெஜ் அண்டு நான்வெஜ் எழுதி போஸ்ட் செய்தேன்...
அதுல அதிமுக வெற்றிக்கு ஆண்டவன் கிட்ட வேண்டிகிட்டு நாக்கு மற்றும் விரல்களை வெட்டிக்கொள்ளும் கலாச்சாரம் தமிழகத்த்தில் பரவி வருவதையும் என்ன செய்தால் ???அரசு வேலை பெறலாம் என்பதையும் எழுதி இருந்தேன்..

அதை படிக்காதவர்களுக்கு இங்கே கீழே.....


அம்மா இருக்கும் கோட்டையில் செருப்பு போட்டுக்கொண்டு வரமாட்டேன் என்று சாத்தூர் தொகுதி எம்எல்ஏ உதயகுமார்  சொல்லி இருக்கின்றார்.. அவருக்கு முதல்வர் தொழிலுநுட்பதுறை அமைச்சர் பதவி கொடுத்து இருக்கின்றார்......அந்த விசுவாசம் காரணமாக இருந்து இருக்கலாம்... அமைச்சரிடம் முதல்வர் செருப்பு போட்டுதான் வரவேண்டும் என்று கண்டிப்பு காட்டி இருக்கின்றார்.....

ஒருத்தர் செருப்பு போடமாட்டேன் என்று அடம்பிடித்தால் அம்மா ஜெயித்தால் நாக்கை வெட்டி காணிக்கையாக்குகின்றேன் என்று சொல்லி ஒரு பெண்மணி  நாக்கை வெட்டி நேர்த்தி கடன் செய்து இருக்கின்றார்... அம்மா இருக்கும் தலைமை செயலக கோட்டையில்செருப்பு போட மாட்டேன் என்ற சொன்ன அமைச்சரின் பக்திக்கு முன் நாக்கு இழப்பதே உண்மையான பக்தி என்பது என் கருத்து...நாக்கு சாதாரண விஷயம் இல்லை... சொல்லாமலே படத்துல லிவிங்ஸ்டன் காதலுக்கா நாக்கை கட் பண்ணுங்கன்னு சொன்னதும், டாக்டர் பிரகாஷ்ராஜ் குரல் மற்றும் நாக்கை பற்றி துடிச்சி பேசும் டயலாக்கை முதல்வர் பார்த்து இருப்பார் போல..... அதனால் அந்த பெண்ணுக்கு சத்துணவு பணியாளர் வேலை கொடுத்து இருக்கின்றார்....நாக்கு வெட்டிக்கொண்டால் அரசு வேலையா? என்று எல்லோரும் வாய்பிளந்து நிற்கின்றார்கள்... வாய் பிளப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி... எப்படியும் இரண்டு மாதத்தில் பெங்களூரில் முதல்வர் மீது போடப்பட்ட சொத்த குவிப்பு வழக்கில் எப்படியும் ஜெயித்து விடுவார்..முதல்வருக்கு ஆதரவாக நல்ல தீர்ப்பு வந்தால் என் உடலில் இருக்கு இன்ன சமாச்சாரத்தை கட் செய்து கொள்வேன் என்று உங்கள் ஏரியா வட்டம் அல்லது ஒன்றியம் எதிரில் காதில் போட்டு வையுங்கள்...தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றால் ஒன்னும் பிரச்சனை இல்லை... பட் வந்தால் எதையாவது வெட்டி ஆக வேண்டும்....ஆனால் அரசு வேலை நிச்சயம்....


===========================================
இன்று காலை பேப்பரில் அடுத்து ஒரு பெண்மணி  வலது ஆட்காட்டி விரலை வெட்டி சாமிக்கு காணிக்கையாக்கி இருக்கின்றார்...


சேலத்தில் இருக்கும் தாதகாபட்டி காளிக்குதான் விரல் வெட்டிய காட்சியை பார்க்கும் அதிஷ்ட வாய்ப்பு கிட்டி இருக்கின்றது....விரலை வெட்டி காணிக்கை செலுத்தியவர் பெயர் வாணி.... நேற்று காலை அதாவது ஞாயிறு  காலை பதினோரு   மணிக்கு கெடா வெட்டு போல் விரல் வெட்டு சம்பவம் நடந்து இருக்கின்றது....


இந்த தகவல் கிடைத்ததும்  அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி
மற்றும் எம்எல்ஏக்கள் அவரை பார்த்து இருக்கின்றார்கள்... வெட்டிய விரலை சேலத்தில் பொருத்த போராடி கடைசியில் கோவை மருத்துவமணையில் விரலை பொருத்தி இருக்கின்றார்கள்...

ஆனால் ஜெவின் தீவிர பக்தை வாணி விரலை வெட்டிக்கொண்ட நிலையிலும் இரட்டை விரலை காட்டி போட்டோவுக்கு கொடுத்த போசை என்னால் வாழ்நாளில் மறக்க முடியாது....

ஆனால் பாவம் வாணி......

விரல் பொருந்தி விட்ட காரணத்தால்  அவருக்கு அரசு வேலை  சாத்தியம் இல்லை என்று நினைக்கின்றேன்...முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ஒரு 25,000 கிடைக்க வாய்பு இருக்கின்றது...

எந்த மயிரான்  சொன்னது தற்கொலை செய்துகொள்ளதான் செமை தில் வேண்டும் என்று விரலை வெட்டிக்கொள்ளவும் தில் வேண்டும் அல்லவா?

தமிழகத்தில் முதல்வருக்காக முதன் முதலில் ஒரு ஏட்டுதான் உறுப்பு காணிக்கை செய்வித்து அந்த திருப்பனியை செவ்வனே தொடங்கி வைத்தார் என்று நினைக்கின்றேன்...  

ஒரு மனிதன் விபத்தில் இறந்த பின்பு மூளைச்சாவு அடைந்த பின்பு அவரது உறுப்பு தானங்கள் வழங்குவதை கேள்விபட்டு இருக்கின்றோம்..

உயிரோடு இருக்கும் ஒருவர் உறுப்பை வெட்டி காணிக்கை செலுத்துவது தமிழகம் முதலிடம் என்று நினைக்கின்றேன்...

இன்னும் எத்தனைபேர் உறுப்பு காணிக்கை கொடுக்கின்றேன் என்று வேண்டிக்கொண்டு இருக்கின்றார்கள்  என்று தெரியவில்லை.... அதுவே எனக்கு பயமாக இருக்கின்றது...

கடைசியாக வாணி கொடுத்த ஸ்டேட்மேன்ட் தான் என்னை பதறவைத்துக்கொண்டு இருக்கின்றது... முதல்வர் ஜெவுக்கா உயிரையும் கொடுப்பாராம்....வாணியின் ஆசை ஜெ வை சந்திக்க வேண்டும் என்று ஆசைபடுகின்றார்....முதல்வர்  சந்திக்கவில்லை என்றால் வேறு ஏதாவது விபரீத முடிவு எடுத்து விட போகின்றார்... அதனால்...............

ஆனால் முதல்வர் ஜெ இது போல உறுப்பு காணிக்கை செய்பவர்களை லைம் லைட்டுக்கு எடுத்துக்கொண்டு வராமல் இருந்தாலே இது போன்ற பைத்தியக்கார தனங்கள் குறையும் மேடம் என்று  சொல்லாம் என்று பார்த்தால், எற்கனவே முதல்வர் பள்ளிகளின்  கொள்ளை அடிக்கும் கல்வி கட்டணத்தில் அரசு தலையிடாது என்று சொன்னவர்.... இந்த கோரிக்கையையும் வைத்தால் தனிநபர்  உறுப்பு நேர்த்திக்கடனில் நான் எப்படி தலையிடமுடியும் என்று சொல்லுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

 


==========================

2 comments:

  1. //எற்கனவே முதல்வர் பள்ளிகளின் கொள்ளை அடிக்கும் கல்வி கட்டணத்தில் அரசு தலையிடாது என்று சொன்னவர்.... இந்த கோரிக்கையையும் வைத்தால் தனிநபர் உறுப்பு நேர்த்திக்கடனில் நான் எப்படி தலையிடமுடியும் என்று சொல்லுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே..//

    நச் கருத்து. கடைசியா கரக்டா ஒரு மேட்டர சொல்லி புட்டீங்க ஜாக்கி

    ReplyDelete
  2. என்னடா இன்னும் பதிவ போடவில்லையே என்று நினைத்தேன், பேசாம நீங்க அரசியலுக்கு வரலாம், ஆனால் வந்த பின் இப்படி எல்லாம் பெசுவீங்கலன்னு தான் தெரியேல???

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner