JUST ABOUT LOVE ?-2007/ உலகசினிமா/பிரெஞ்/இதுதான் காதலா??



டீன் ஏஜ் காதல் பெரும் பாலும் இனக்கவர்ச்சியாகவே இருக்கின்றது என்பது எல்லோருக்கும்  தெரிந்த விஷயம்தான்...எனக்கு தெரிந்து ஐந்து பர்சென்ட் காதல்தான்.. உண்மையான காதலாக அது கடைசிவரை நீடித்து இருக்கின்றது என்பேன்...

ஆனால் பெரும்பாலான டீன் ஏஜ் காதல்கள் உறுப்பு உரசல்கள் மற்றும் உடல்உறவு முடிந்தவுடன் சடுதியில் பிரிந்து விடுகின்றார்கள்....நம்ம ஊரில் இது சகஐமான விஷயம் இல்லை..ஆனாலும் இருக்கின்றது.. தெரியாமல் நடக்கின்றது...பட் பிரெஞ் தேசத்தில் இது  சர்வசாதாரணம்...... அப்படி ஒரு நான்கு ஜோடிகளை பற்றிய கதைதான் இந்த பிரான்ஸ் நாட்டு திரைப்படம்....


===============================================

JUST ABOUT LOVE  ? உலகசினிமா/பிரெஞ்/ படத்தின் கதை என்ன???

வின்சென்ட் ஜுலி மற்றும் நிக்கோலஸ் ஈலோடி எல்லோரும் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் இதில் வின்சென்ட் மட்டும் கருப்பின மாணவன்... ஆனால் அப்படி யாரும் பேதம் காட்டி பழகவில்லை...முதலில் வின்சென்ட் ஜுலியோடு காதலில் விழ மறுநாளே நம் இருவருக்கும் ஒத்துவராது என்று பிரிகின்றார்கள்...நிகோலஸ் ஈலோடியும் முதலில் நண்பர்களாக பிறகு காதலர்களாக மாறி நம்ம இரண்டு பேருக்கும் சரிவாராது என்று பிரிகின்றார்கள்.. ஆனால் வின்சென்டுக்கு ஈலோடி மீது ஒருஈர்ப்பு இருக்கின்றது.. ஆனால் ஈலோடி கெவின் என்பவன் மீது ஒருதலையாய் காதல் கொண்டு இருக்கின்றாள்...வின்சென்ட் ஈலோடி மீது வைத்த காதல் ஜெயித்ததா? என்பதை வெண்திரையில் காணுங்கள்...
===============================================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படத்தின் இயக்குனர்
Lola Doillon ஒரு பெண்... இந்த காலத்து இளவட்டங்களின் வாழ்க்கை முறை அவர்களின் ஜஸ்ட்லைக்தட் காதல் போன்றவற்றை கிழி கிழி என்று கிழிக்கின்றார்..

கல்லூரி லேப்பில் இருந்து உடை மாற்றும் அறைக்கு பத்து நிமிடத்துக்கு முன்னே சென்று உடலுறவுக்கு வின்சென்ட் மற்றும் ஜுலி இருவரும் முயற்சி செய்வது செம ஹாட் மச்சி....

வின்சென்ட் பாத்திரம் மிக அழகாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது...

பிரான்சில் இருக்கும் இளைஞர்கள் பாதிக்கு பேருக்கு மேல் எத்தனைபெண்களை படுக்கையில் சாய்த்து இருக்கின்றேன் என்று சொல்வதும், பெண்களில் வீக்கென்ட் பார்ட்டிக்ள் கொண்டாடி தனக்கு பிடித்த ஆடவனோடு டேட்டிங் போவதுதான் பிராதான வேலையாக இந்தபடம் சித்தரிக்கின்றது...

இரவில் பெண் வெளியிடத்தில் தங்குகின்றாள் என்பதையும் எந்த இடத்தில் தங்குகின்றாள் ?கூட யார் யார் இருக்கின்றார்கள்?? என்று விசாரிப்பதோடு பெற்றோர்களின் பணி முடிந்து விடுகின்றது....

வின்சென்ட் ஈலோடியுடன்  முழு போதையில் படுக்கையில் சாய்த்து ஒரு கிஸ்ஸுக்கு அவளிடம் கெஞ்ச அவள் மறுக்க இன்னைக்கு எனக்கு பர்த்டே பிளிஸ் என்று கெஞ்சுவதும் அதுக்கு அவள் அமைதியாக இருக்கு அவன் கிஸ் கொடுத்து விட்டு மேற்க்கொண்டு முன்னேற அவள் வேண்டாம் என்று தடுத்து விட நேராக கோபமாக கேரேஜில் இருக்கும் காரில் டிரைவிங் சீட்டில் இரவில் உட்கார்ந்து இருப்பவன் காலை வரை அப்படியே அந்த காமக்கோபத்துடன் உட்கார்ந்து இருக்கும் அந்த ஊடல் அழகோ அழகு....


ஆனால் காதல் என்பது வேறு ஒரு விதமான ஈர்ப்பு என்பதை வின்சென்டிடம் ஈடோல் எது வேண்டுமானால் தன்னை செய்துக்கொள் என்று சொல்லும் போது அந்த காட்சி ரசிக்க வைக்கின்றது......

இந்த படம் லூமியர் சேனலில்  காணக்கிடக்கின்றது.. லூமியர் பெண்களூரில் கேபிளில் தெரிகின்றது... என்ன செய்ய நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்.....
==============================================
படக்குழுவினர் விபரம்...

Production Manager : Henri Deneubourg
Press Attachés (film) : Leslie Ricci, Laurent Renard
Editor : Enrica Gattolini
Sound Editor : Vincent Pateau
Continuity supervisor : Chloé Rudolf
Production Designer : Grégory De Min
Casting : Stéphane Batut
Costume Designers : Céline Collobert, Nadine Boucher
Sound Mixer : Cédric Lionnet

Still Photographer : David Koska
Genres : Fiction
Subgenres : Comedy
Production language : French
Nationality : 100% French (France)
Production year : 2006
French release : 13/06/2007
Runtime : 1h 30mn
Current status : Released
Visa number : 115.006
Visa issue date : 31/05/2007
Approval : Yes
Screening format : 35mm
Color type : Color
=============================================
படத்தின் டிரைலர்..






========================================
பைனல்கிக்...

அவசியம் இந்த படத்தை கல்லூரி மாணவர்கள் பார்க்க வேண்டும்... இந்த படம் பார்க்கவேண்டியபடம்...

இந்த படம் பர்மா பஜார் மூவிஸ் நவ் கடையில் கிடைக்கின்றதா இல்லையா என்று தெரியவிவல்லை.. இருந்தாலும் முயற்சிக்கவும்....கைபேசி எண்.9003184500..

==================================================




பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்




இந்த தளம் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்...முக்கியமாக சினிமா ரசிகர்களுக்கு...




(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...




 


==============



==================================

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner