ESCAPE CINEMAS சென்னை எஸ்கேப் சினிமாஸ் ஒரு பார்வை...



சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் கிடைத்து விடும் ஆனால் சென்னை ராயப்பேட்டை  மணிக்க்கூண்டு அருகில் இருக்கும், எக்ஸ்பிரஸ்வென்யூவில் சத்யம் சினிமாவின் மற்றும் ஒரு அங்கமான எஸ்கேப் சினிமாவில், டிக்கெட் கிடைப்பது அபூர்வம்...

காரணம் நடுத்தர மற்றும் பணக்கார  இளசுகளின் பேவரிட் தியேட்டர்இதுதான்....பெரிய மாலில் இருப்பதால் ஷாப்பிங் முடித்து விட்டு அப்படியே ஒரு படத்தை பார்த்து விட்டு செல்ல நிறைய குடும்பத்தினர் வருகின்றார்கள்..முக்கியமாக காதலர்கள்.

விடுமுறை நாட்களில் டிக்கெட் கிடைப்பது குதிரைக்கொம்புதான்... நானும் பல நாட்கள் முயற்சி செய்து கடைசியில் அழகர்சாமியின் குதிரை படத்துக்கு தம்பி பரத் டிக்கெட் புக் செய்ய அதில் பார்க்கும் வாய்ப்பு  கிடைத்தது...



மொத்தம் எட்டு தியேட்டர்கள்... இதில் இரண்டு தியேட்டர்கள் 320சீட் கொண்ட பெரிய ஸ்கிரீன்கள்.. மற்ற ஆறு ஸ்கிரீன்கள் 120 பேர் உட்கார்ந்து பார்க்க கூடிய சின்ன திரைகள்....

சென்னையில்  ஊரில் இருந்து எனது நண்பர்கள் வந்தால் சினிமாவுக்கு போக வேண்டும் என்றால் நான் சத்யத்துக்கும் தேவிக்கும்தான் அழைத்து செல்வேன்...
காரணம்  அந்த பிரமாண்டம் சுத்தம் ஹைடெக் போன்றவற்றை வாய்பிளந்து பார்ப்பதுதான்...அடுத்ததாக எனது மனைவி சொல்லுவாள், வருடத்துக்கு ஒரு படம் அழைத்து போனாலும் சத்யம் தியேட்டரில் படம் பார்க்க அழைத்து போனால் போதும் என்று சொல்லும் ரகம்...காரணம் ரொம்ப சிம்பிள்.. யாருடைய இடையூறும் இல்லாமல் படம் பார்க்கலாம்.. முக்கியமாக முன்னால் உட்கார்ந்து இருப்பவனின் தலை மறைக்காது.......தியேட்டர்  சுத்தமாக இருக்கும், அதுக்காகவே நான் சத்தியமின் பியூல் கார்டு  வாங்கி வைத்து இருக்கின்றேன்..


பியூல் கார்டு என்றால் என்ன??
வண்டிக்கு பியூல் போடுவது போல சினிமா பார்க்க சத்யமில் பிரத்யோக கவுண்டரில் சென்று 300ரூபாய் கொடுத்தால் கார்டுக்கு 50ரூபாய் எடுத்துக்கொண்டு உங்கள் பெயர் பொரித்த ஒரு கார்டை அதாவது  ஒரு ஏடிஎம் கார்டு சைசில் ஒரு கார்டை கொடுத்து விடுவார்கள்..உங்களிடம் பணம் இருக்கும் போது அதில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.... அதை வைத்து போனில் டிக்கெட் புக் பண்ணலாம், ஆன்லைனில் டிக்கெட்புக் பண்ணலாம்....தியேட்டருக்கு போய் கூட்டத்தில் போய் முண்டியடிக்காமல் பிரத்யோக கவுண்டரில் போய் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்...750ரூபாய் எனது கார்ட்டில் வைத்து இருக்கின்றேன்.. அது பலகாலமாக  சேப்டிக்காக வைத்து இருக்கின்றேன்.. நேரில் போய் டிக்கெட் கிடைத்தால் மட்டுமே படம் பார்ப்பேன்...
 (பல வண்ணங்களில் பியூல் கார்டு)

காலை பத்து மணிக்கு படம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. நீங்கள் டிபன் சாப்பிடவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்..11.30 மணிக்கு சீ ரோவில் 7,8 சீட் நம்பருக்கு... இரண்டு பாக்கெட் பாப்கார்ன் மற்றும்  சிக்கன் பர்கர் என்று ஆர்டர் செய்து விட்டால் படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே உங்கள் சீட்டுக்கு  பார்ப்கார்ன் மற்றும் பர்கர் வந்து நிற்கும்...

இந்த கார்டை வைத்து சத்தியம் மற்றும் எஸ்கேப் இரண்டு சினிமாவிலும் டிக்கெட் புக் செய்யலாம்...


சோ இதுதான் பியூல் கார்டு.. ஓகே...

பேக் டூ எஸ்கேப் சினிமாஸ்

மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட லவுன்ஜ்கள்... பெரிய ஸ்டார் ஓட்டலில்  நுழைந்த ஒரு பீலிங் ஏற்படுத்தும்...காசு பார்த்து பார்த்து செலவு செய்யும்  ஆட்களுக்கு அந்த இடத்தின் உள்கட்டமைப்பு இன்பிரியாரிட்டி காம்ளக்ஸ் கண்டிப்பாக ஏற்படுத்தும்....



கணவன் மனைவி, காதலன் காதலி, என்று கப்புளாக வருபவர்களுக்கு திரைஅரங்கில் நடுவில்  இருக்கும் பாதைக்கு பக்கத்து இருக்கும் இரண்டு சீட்டுகள்  கப்புள் சீட் என்று அழைக்கபடுகின்றன...இரண்டு பேர் உட்கார கூடிய சோபாபோல்  இருக்கும் நடுவில் கைப்பிடி இருக்காது..காதலனுக்கு ரொம்ப வசதி...

(டிக்கெட் கவுண்டருக்கு மேல் இருக்கும் புரஜக்ஷன் மேசின்கள்..)

இந்த எட்டு தியேட்டருக்கும் ஒரே சிறப்பு என்னவென்றால் எந்த தியேட்டருக்கும் ஆப்ரேட்டர் ரூம் என்பதே இல்லை...டீஜிட்டல் புரஜக்ஷன் வந்த பிறகு ஆப்பரேட்டருக்கு அதிகம் வேலை இல்லாத இந்த நாட்களில் சுத்தமாக அவர்களை எஸ்கேப்சினிமா அப்புறபடுத்தியதும், அவர்களுக்கு என்றுஒரு இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதையும் தவிர்த்து விட்டார்கள்.. அதாவது சின்ன இடத்தையும் விட்டு வைக்காமல் கமர்சியலாக பயண்படுத்திக்கொண்டு விட்டார்கள்.. என்பேன்.. அது போலான கட்டுமானம்...

திரை அரங்கின்  பின்னால் ஒரு சின்ன செவ்வக ஒட்டை பின் பக்கம் ஒரு ஆங்கில் செட் செய்து அதில் புரோஜக்ஷன் மிஷின் வைத்து விட்டார்கள்..


(டாய்லட் போகும் வழியில் மேலே அனாதையாக இருக்கும் புரோஜக்ஷன் மிஷின்)

தேவிடியா பையன் இன்ன மயிராட்டம் படம் ஓட்டறான் என்று இந்த தியேட்டரில் திட்ட முடியாது...எல்லாம் ஆட்டோமேட்டிக் சிஸ்டம்....

சென்னையின் முதல் டிஜிட்டல் புரோஜக்ஷன் ஆர்டிஎக்ஸ் சென்னை சத்தியம் சினிமாஸ்தான் எஸ்கேப் இதிலும் ஆர்டிஎக்ஸ்தான்..  பட் பெங்ளூருவில் இருக்கும் சிங்கிள் ஸ்கிரின் தியேட்டர்கள்... அதாவது  காசி தியேட்டர்,ஏவிஎம் ராஜேஸ்வரி போல் உள்ள தியேட்டர்கள் எல்லாம் 2K ரெசில்யூஷனுக்கு மாறிவிட்டார்கள்.. ஆனால் இங்கு எந்த தியேட்டரும் ஏன் சத்யம் எஸ்கேப் கூட இல்லை என்பேன்..

தியேட்டரின் உள் கட்டமைப்பு அத்தனையும் அருமை... ஒவ்வொரு சீட்டிலும்  ஆஷ் கலரில் ஒரு பாக்ஸ் வைத்து இருக்கின்றார்கள்,... அது என்ன பர்பஸ் என்று எனக்கு தெரியவில்லை....தெரிந்வர்கள் சொல்லவும்..நானும் என் மச்சானும் அதை எவ்வளவோ திறந்த பார்க்க முயற்சி செய்தோம் முடியவில்லை..
 (படத்தில் உட்கார்ந்து இருப்பவருக்கு பக்கத்தில் சீட்டில் ஆஷ் கலரில் ஒரு பாக்ஸ் இருக்கின்றது பாருங்கள் அது என்னவென்று தெரியவில்லை)

அரங்கில் இருக்கும் நடுவில் இருக்கும் பாதையில் நடுவில் படிகளில் நான்கு சின்ன சின்ன  பவர்புல் எல்இடி டைப் பல்புகள் வைத்து இருக்கின்றார்கள்.. அது அப்படியே அரங்கின் மேற்கூரையில் அந்த லைட் பட்டு பவுன்ஸ் ஆகி, திரை அரங்கம் முழுவதும் ஒரு மெல்லிய உறுத்தாத வெளிச்சத்தை உமிழ்கின்றது...  அதனால்  படம் ஓடினாலும் படிகளில் தடுமாறாமல் நடந்து போகலாம்.....


தியேட்டரில் ஒரு பெரிய குறை... என்னதான் செமையாக செய்தாலும் ஒருசில இடங்களில் கோட்டை விட்டு விடுவார்கள்..படம் அரம்பிக்கும் முன் போடும் விளம்பரங்களின் போது மற்ற இடங்களில் லைட் இருந்தால் பரவாயில்லை.. இரண்டு லைட் ஸ்கிரீன் மேல்  அடித்தக்கொண்டு இருக்கின்றது...விளம்பரங்கள் இனாமாக ஒன்றும் ஓட்டவில்லையே.. காசு  வாங்கி கொண்டுதானே விளம்பரம் போடுகின்றீர்கள்.. விளம்பரங்களுக்கும் மிகப்பெரிய உழைப்பு இருக்கின்றது என்பதை மறவாதீர்கள்.. அதனால் சத்தியம் தியேட்டர் ஓனரா இருந்தாலும் பெங்களூர் ஊர்வசி தியேட்டர் போய் பாருங்கள் என்று சொல்கின்றேன்.. படம் போடும் போது அது விளம்பரமாக இருந்தாலும் மெயன் பிக்சராக இருந்தாலும் திரையில் சின்ன வெளிச்சம் கூட லீக் ஆகாது...அது பெங்களூர் ஊர்வசியில் சிறப்பாக செய்து இருக்கின்றார்கள்.
(டிக்கெட் 120ரூபாய்...இடைவேளையில் எல்லாமே கொள்ளை விலைதான்.. அதனால் இடைவேளையில் கேன்டின் பக்கம் போகாமல் இருப்பது நலம்...) 


இரண்டு சக்ர வாகனம் வைத்து இருப்பவர்கள் கவனத்துக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூபாய் 20ரூபாய் பார்க்கிங் சார்ஜ்.. அதனால் எஸ்பேப் சினிமாஸ் நடுத்தர மனிதனின் மதிய சாப்பாட்டுகாசை நைசாக பிடிங்கி கொள்கின்றது...இங்கு பார்க்கிங்கில் எச்சில் தொட்டு பார்க்கிங் டிக்கெட் கிழித்து கொடுக்கும் கதை எல்லாம் இல்லை....

வண்டியை தடுப்பானுக்கு பக்கத்தில் நிறுத்தினால் அதுவே தானியங்கியாக நேரம் எல்லாம் குறித்து காறிதுப்பி டிக்கெட் கொடுக்கின்றது.. பார்கிங்  எக்ஸ்பிரஸ்மாலின் சட்ட திட்டம் என்றாலும் படத்துக்கு பார்கிங் என்று கணக்கு போடும் போது அது அதிகமே.. அதனால் பேருந்து பயணமே பெஸ்ட்...

 (திரை அரங்கின் உள்கடடமைப்பு)

எஸ்கேப் வளாகம் முழுவதும் மேல் வளர்ச்சியில் அபார நம்பிக்கை கொண்ட பெண்கள் நெஞ்சு நிமிர்த்தி மிக அலட்டலாக நடக்கின்றார்கள்...மேல் அழகையும் அதன் வளர்ச்சியையும் எப்படியாவது வெளிபடுத்த முனைந்து இருப்பது அவர்கள் உடைகளில் கண்டு பிடிக்க முடிகின்றது..

டாய்லட் சுத்தத்துக்கு இந்த பணம் சரியாக போகின்றது..... என்று சொல்லலாம்... அந்த அளவுக்கு சுத்தம்...வெட் டாய்லட் என்று பாரின் காரன் பேப்பரை வச்சி துடைக்கிற டாய்லட் இரண்டு மூன்று வரை இருக்கின்றது.. அதுல உட்காரும் இடத்துக்கு நேரே ஒரு சின்ன மினி டிவி வைத்து இருக்கின்றார்கள்...

ஆண்கள் சிறுநீர் கழித்து, உலுக்கி முடித்து கை கழுவி, கர்சிப் மறந்து விட்டு வந்து விட்டால் பேன்ட் பாக்கெட்டில் விட்டு கைதுடைக்கும் விஷயத்தை இங்கு மறந்து விடலாம்.. ஒரு சமாச்சாரம் அதில் கையை விட்ட்டால் கையை சூடான காற்று அடித்து சுத்தபடுத்துகின்றது..


தியேட்டரின் உட்புறத்தில் சைடில் பல பெரிய வண்ண ஓவியங்கள் மற்றும் இயற்கைகாட்சி புகைபடங்கள் வைத்து இருக்கின்றார்கள்..


எல்லாம் முடிந்து இரவு தியேட்டர் விட்டு வெளியே வந்தோம் ஹைபையான அந்த தியேட்டரின் மெயின் கண்ணாடி கேட்டை எஎந்த பூட்டு வைத்து பூட்டுகின்றார்கள் என்று பாருங்கள் என்று எனது மச்சான் ஒரு பூட்டை காட்டினான்.. அதை பார்த்து மிரண்டு விட்டோம். நம்ம ஆளை திருத்த முடியாது.... சைக்கிளை பூட்ட ஒரு ரெடிமேட் பூட்டு இருக்குமே அந்த பூட்டுதான் அது....


சரி திருஷ்ட்டி வேண்டும் அல்லவா???
===============
எக்ஸ்பிரஸ் அவென்யூ பற்றி நான் எழுதிய பதிவை வாசிக்க....






பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




புகைபடங்கள் இணையத்தில் தேடி எடுத்தவை..... அந்த அந்த தளங்களுக்கும் புகைபடம் எடுதத புகைபடகாரர்களுக்கும் எனது நன்றிகள்.


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS... 


=====================================

9 comments:

  1. enga coimbatore'la ore oru nalla theater'na athu senthil kumaran theater thaan...

    ReplyDelete
  2. எஸ்கேப் வளாகம் முழுவதும் மேல் வளர்ச்சியில் அபார நம்பிக்கை கொண்ட பெண்கள் நெஞ்சு நிமிர்த்தி மிக அலட்டலாக நடக்கின்றார்கள்...மேல் அழகையும் அதன் வளர்ச்சியையும் எப்படியாவது வெளிபடுத்த முனைந்து இருப்பது அவர்கள் உடைகளில் கண்டு பிடிக்க முடிகின்றது..


    super... but puriyala

    ReplyDelete
  3. நான் எஸ்கேப் செல்வதென்றால் பைக்கை சத்யம் திரையரங்கின் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு ஐந்து நிமிடங்களில் நடந்து சென்றுவிடுவேன். என்னால் அங்குள்ள உணவுப் பொருட்களுக்கு அதிக விலை கொடுப்பதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் வண்டி நிறுத்துவதற்கு ஒரு படத்திற்கு அறுபது ரூபாய் என்பது பகல் கொள்ளையாகத் தெரிகிறது. இந்த பிரச்சினையால் PVR திரையரங்கம் செல்வதையே நிறுத்தி விட்டேன்.

    ReplyDelete
  4. எஸ்கேப் குறித்த செய்திகளுக்கு நன்றி
    ஜாக்கி சார். எஸ்கேப் தொடர்பான மேலும் சில செய்திகள் என்னிடம் உள்ளன. அதை விரைவில் பகிர்கிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner