ETHTHAN -2011-எத்தன் காமெடி ஜித்தன்



காலையில் ஒரு போன் வந்தது...
அண்ணே நான் திட்டக்குடி கார்த்திக் பேசறேன்..

நீங்க சென்னையில் இருக்கிங்களா? அல்லது பெங்களூரா??
நான் பெங்களூரில் இருக்கின்றேன் என்று சொன்னேன்...
உங்க கூட ஒரு படம் பார்க்கனும்...
யாழினி பொறந்த அன்னைக்கு கூட நான் பேசி இருக்கேன்... பட் அன்னைக்கு என்னால் வர முடியலை அதான்..

நான் நைட் மச்சானுடன் ஹாங் ஓவர் படத்துக்கு போகின்றேன்.. அதனால் பஸ்ட் ஷோ போலாம் என்று சொன்னேன்...எந்த படம்  என்று கேட்டேன்... எத்தன் இன்னைக்கு ரிலிஸ் ஆகுது அந்த படத்துக்கே  போலாம்  என்று சென்னார்...


மடிவாளா ஐயப்பன் கோவிலுக்கு  அவரது டாட்டா டர்போ காரில் வந்தார்... காரை நன்றாக ஆல்டேஷன் செய்து இருந்தார்... நிறைய பேசினோம்..லால்பார்க் அருகில் இருக்கும் பூர்னா தியேட்டருக்கு போனோம் படம் பார்த்தோம்...படம் சில லாஜிக்கை தவிர்த்து விட்டு பார்த்தால்  பார்க்க வேண்டியபடம்தான்....
 =========================
எத்தன் படத்தின் கதை என்ன??

வாத்தியார் ஜெய்பிராகாஷ் மகனான விமல் பிசினஸ் செய்கின்றேன் பேர்வழி என்று ஊரில் இருக்கும் எல்லோரிடமும் கடன் வாங்கி கொண்டு இருக்கின்றார்... அவர் ஆரம்பித்த பிசினஸ் எல்லாம் படுத்துக்கொள்ள கடன்காரர்கள் அவர் கழுத்தை நெரிக்கின்றார்கள். கல்லூரி மாணவி சனுஜாவோடு விமலுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் பழக்கம் ஏற்படுகின்றது..(அந்த பழக்கம் ஏப்படி ஏற்படுதுன்னு சொன்னா ரொம்ப நல்லா இருக்கும்...) போய் படத்தை தியேட்டர்ல பாருய்யா...பட் இரண்டு பேருக்கும் காதல் இல்லை..ஆனா சனுஜா வோட மாமா அவளை கட்டாயகல்யாணம் பண்ண ஒத்தைகாலில் நிற்க்க... பிரச்சனை ஆரம்பம் ஆகுது.. சனுஜாவோட மாமா ரவுடி ....சனுஜாவை வில்லன் மாமாவிடம் இருந்து விமல் எப்படி காப்பாற்றினான்..கடன் பிரச்சனையை எப்படி சமாளித்தான் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகெள்ளுங்கள்..

==================================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

படம் முழுக்க விரவி இருக்கும் நகைச்சுவை இந்த படத்தை அதிகம்நெளியாமல் ரசிக்க வைக்கின்றது...

அறிமுக இயக்குனர் சுரேஷ் இயக்கி இருக்கும் இந்த படத்தை களவானி படத்தயாரிப்பாளரே தயாரித்து இருக்கின்றார்...

சுரேஷ் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர்...

விமல் படத்துக்கு படம் நடிப்பில் வளர்ச்சி தெரிந்தாலும் ஒரே மாதிரியான பேச்சு சில படங்களில் சலித்து விடும் என்பதால் கவனம் தேவை... ரொம்ப அசால்டாக பேசுவது ரசிக்க வைக்கின்றது...

உதாரணத்துக்கு 100ரூபாய்க்கு சில்லரை கேட்டு இரண்டு 50ரூபாயை அவரது நண்பர் நீட்ட, அதில் 50ரூபாய் எடுத்துக்கொண்டு பிறகு தருகின்றேன் என்று சொல்ல சில்லரை கேட்டு விட்டு கடன் சொல்கின்றாயே? என்று நண்பர் பொரும... கடன் கேட்ட தரவா போற??? என்று சொல்லும் காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார்...

சனுஜா இந்த படத்தில் மெச்சூர்டாக இருக்கின்றார்.. ‘குழந்தை தனம் மிஸ்சிங்.. சின்ன தொப்பை உருவாகி இருக்கின்றது இப்போதே கவனித்தல் நலம்...முக்கியமாக பாவடை தாவாணியில் தெரிகின்றது....சிலகாட்சிகளில் நடித்து இருக்கின்றார்.. சில காட்சிகளில் ரசிக்க வைத்து இருக்கின்றார்...

லோ பட்ஜெட் படம் என்பது பல காட்சிகளில் தெரிகின்றது.. சரி போனி ஆகாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று ஒரு செட் போட்டு ஐட்டம் சாங்கை சேர்த்து இருக்கின்றார்கள்..

சிங்கம்புலி வரும் காட்சிகளில் சில இடங்களில் நகைச்சுவை... பல இடங்களில் வசனங்கள் படுஷார்ப்..


தமிழ் திரைஉலகிற்க்கு நல்லா அப்பா கிடைத்து இருக்கின்றார்.. அவர் பாடி லாங்வேஜ் மற்றும் டயலாக் டெலிவரி அசத்தல்...பையனை பற்றி பெருமையாக மனைவியிடம் பேசும் காட்சியில்  கண்கலங்க வைக்கின்றார்...

ரமேஷ் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு ஏற்றது போல பதிவு செய்து இருக்கின்றது...

இசை தாஜ்நூர்.. வம்சவத்தில் வாய்பிளக்க வைத்தவர் இந்த படத்தில் பெரிதாக சோபிக்க வில்லை...


மயில்சாமி வசிய சாமியார் பற்றி பேசும் காட்சி வடிவேல், பேக்கரி, அக்கா மேட்டர் போல நல்ல காமெடி

ஒரு பிரபல தனியார் வங்கியை சற்றே பெயர் மாற்றி உண்மை சம்பவங்களை வைத்து கிண்டல் அடித்து இருக்கின்றார்கள்..

======================
படக்குழுவினர் விபரம்
Directed by     Suresh
Produced by    Nazir
Written by      Suresh
Starring           Vimal
Sanusha
Ilavarasu
Manobala
Mayilsamy.
Music by         Taj Noor
Studio Sherali Films
Country           India
Language        Tamil

========================
படத்தின் டிரைலர்..



=====================
தியேட்டர் டிஸ்கி..


இந்த படத்தை பெங்களூர் லால் பார்க் அருகே இருக்கும் பூர்னாதிரை அரங்கில் நானும் தம்பி காத்தியும் பார்த்தோம்..

தியேட்டர் ஓகே... டிக்கெட் ஐம்பது மற்றும் என்பதுதான்...

கியூப்,டிடிஎஸ் தியேட்டர்தான்..
கனிசமாக கூட்டம் இருந்தது...
என்பக்கத்து சீட்டில் இருந்து இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்து இருந்தவர் போனில் அடிக்கடி பேசிக்கொண்டே படம் பார்த்தார்... பின்னால் இருந்தவர் நெடுநேரம் தனது செல்போனில் ரிங்டோன் ரொம்ப நேரம் அடிக்க விட்டுக்கொண்டு இருந்தார்....
 

============================
பைனல்கிக்
இந்த படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரசிக்க முடிகின்றது...காரணம் படம் முழுக்க விரவி இருக்கும் காமெடி...அதனால் இந்த படத்தை டைம்பாஸ் லிஸ்ட்டில் சேர்க்காமல் பார்க்க வேண்டியபடத்தில் சோக்கின்றேன்.
=================



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்




(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

 

=======================

3 comments:

  1. //போனி ஆகாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று ஒரு செட் போட்டு ஐட்டம் சாங்கை சேர்த்து இருக்கின்றார்கள்//

    இந்நிலை என்று மாறுமோ!!

    ReplyDelete
  2. nice ..i will go to watch.

    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  3. தாங்கள் பார்த்தது பூர்ணிமா தியேட்டரில் :-)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner