ஆல்பம்...
இந்த தேர்தலில் திமுக கழகம் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தாலும்..ஸ்பெக்ட்ராம் ஊழலில் கனிமொழி கைது பெரிய அவப்பெயராக போய்விட்டது..திமுக கழகம் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்து இருந்தாலும் ஜாமீன்கிடைத்து விடும் என்று நம்பிக்கையாக இருந்தது. ஆனால் எல்லாம் பொய்த்து போய்விட்டது..இதிலிருந்து மீண்டு கழகம் வெளிவரும் என்றாலும் நாட்களாகும் என்பதில் மாற்றம் இல்லை....70 நாட்களில் தொடங்கபட்ட டிவி... கலைஞர் டிவி என்று பெருமையாக சொன்னாலும் பணம் வந்த விதத்தை பார்க்கும் போது அந்த பெருமைக்கு இழுக்குதான்...
===========================================
சமச்சீர் கல்விக்கு அம்மா வச்சிட்டாங்க ஆப்பு...... அதை நிறுத்தி வச்சிட்டாங்க.... பசங்க பாடு திண்டாட்டம்தான்...இதெல்லாம் நடக்கும்னு எங்களுக்கு முன்னமையே தெரியும்...யோசிச்சி பாருங்க பசங்க நிலைமையை.. ஒரு பணக்க்கார நாயி டிவியில் பேட்டி கொடுக்குது... என் பிள்ளை படிப்பதைத்தான் அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளையும் படிக்குது... இது எப்படி இருக்கு....சிலபஸ் சரியில்லைன்னு கூட சொல்லு ஏத்துக்கலாம்... ஓத்தா செத்தா எல்லாம் மண்ணுக்குதான் போவனும் அது தெரியுமாடா? பாடு....
===========================================
புது தலைமைசெயலகத்தை விட்டு பழைய தலைமை செயலகத்துக்கு ஏன் போகின்றோம் என்று நிர்வாக காரணத்தை சொல்லி இருக்கின்றார்கள்... பெரம்பூர் மேம்பாலம் பல ஆண்டுகளாக கன்னி கழியாமல் கிடந்தது எல்லோருக்கும் தெரியும்....ஒரு வீடு கட்டுகின்றோம் பூசினாலும் பூசாவிட்டாலும் கிரகபிரவேசம் முடிந்ததும் இரண்டு நாள் அந்த வீட்டில் தங்கிவிட்டு, எல்லா பூசு , பெயிண்ட் வேலையும் முடிந்த பிறகு குடி வருவார்கள்... புது முதல்வர்.. இன்னும் வேலை முடியவில்லை என்ற சொல்லி இருக்கின்றார்... சீக்கிரம் புதுதலைமைசெயலகத்தில் வேலைகள் முடித்து விரைந்து புது கட்டிடத்தில் இயங்க வேண்டும்...இந்த புது கட்டிடம் கட்ட ஊழல் நடந்து இருந்தாலும் சம்பந்தபட்டவர் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்....ஆனால் ஜெ ஆட்சியில் இருக்கும்வரை அந்த கட்டிடத்துக்கு உள்ளே போக போவதில்லை... என்பது எல்லோருக்கும் தெரியும்...
ஜெ தனது அமைச்சரவை சகாக்களுக்கு பல புதிய உத்தரவுகளை போட்டு விட்டு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி இருக்கின்றார்...நல்ல மாற்றம்தான்...வரவேற்கின்றோம்..அதே போல் சென்னையில் போக்குவரத்து இடைஞ்சலை தான் போகும் போது ஏக்காரணம் கொண்டும் முடங்கிவிடக்கூடாது என்று உத்தரவு போட்டு இருக்கின்றார்... நல்ல விஷயம்தான்... நிறைய மாற்றங்க்கள் நம்பமுடியாத அளவில் நிகழ்ந்து வருவது மகிழ்ச்சியே.......
============================
உலக அளவில் இந்தியாவுக்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றது.... நமது சிபிஐ... பாக்கிஸ்தான்ல இருக்கறான்னு சொல்லுது.. அவன் இந்தியாவுல இருக்கான்..பட்டியலில் உள்ள பெயர்களில் பெரிய குழப்பம். சிபிஐ தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலை தனது தளத்தில் வெளியிட்டு விட்டு திரும்ப பெற்றுக்கொண்டது... அந்த அளவுக்கு அவர்கள் வேலை செய்யும் லட்சனம் இருக்கின்றது..இந்த செயலால் சிபிஜயால் இந்தியாவுக்கு பெரிய தலைகுனிவுதான்..
====================
இந்தவார சலனபடம்
நினைத்தாலே இனிக்கும் பாடல் போல வேறு வார்த்தைகள் இல்ல்லாமல் நிவேதா நிவேதா என்று இந்த பாடல் ஒலிக்கும்.. வசந்தின் பாடல் மேக்கிங்க்கு நான் ரசிகன்... இந்த பாடல் எடுக்கும் போது வீட்டில் இருந்து தினமும் கவுதமி ஷுட்டிங்குக்கு எந்த காஸ்ட்டியூமில் வருவாரோ அதே காஸ்ட்யூமில் காலையில் வந்ததும் இரண்டு ஷாட் எடுத்து விட்டுதான் அடுத்த சீனுக்கு இயக்குனர் வசந் போவாராம்... இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... நிறைய ஷாட்டுகளில் கவுதமி அழகாய் இருப்பார்...
======================================
மிக்சர்...
போனமுறை ஆட்சிக்கு வந்ததும் அப்பாவை கைது செய்தார்... இந்த முறை மகளை கைது செய்து இருக்கின்றார் ஜெ என்று பைப் சரி செய்ய வந்த பிளம்பர் சொன்னார்.. நான் சொன்னேன் ஏங்க அது எல்லாம் சிபிஐ மேட்டர்.. ஜெவுக்கு அவுங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றேன். சார் உலகம்புரியாதா ஆளா இருக்கிங்க....ஜெயா ஜெயிச்சதும் ,சோனியா போன் பண்ணி வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போனை வச்சி இருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறிங்களா என்றார்...????? என்னிடம் அவரிடம் மேலும் பேச பதில் இல்லை...அவ்வளவு தெளிவாகவும் தீர்ககமாகவும் இருப்பவரிடம்..
=============================
அழகர்சாமியின் குதிரை படம் பார்த்து விட்டு எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் நம்பர் மணிஜியிடம் வாங்கி போன் செய்தேன்.. அப்போது சொன்னேன்.. ஒரு உலகசினிமாவுக்கு உள்ள அத்தனையும் இந்த படத்தில் இருக்கின்றது... அதனால் உலகபடம் இந்தியா என்று டைட்டிலில் போட்டு எழுதுவேன் என்று சொல்லிவிட்டு எழுதினேன்... இன்று விஜய்டிவியில் இளையராஜா பேசும் போது அதே கருத்தை சொன்னார்...அதே போல பலர் எனது விமர்சனத்தை படித்து விட்டு சிலர் பாஸ்கர் சக்திக்கு போன் செய்து எனது விமர்சனத்தை படிக்க சொல்லி இருக்கின்றார்கள்.... என்று பாஸ்கர் சக்தி சொன்னார்... நண்பர்களே நன்றி...
================================================
இந்தவாரசலனபடம்...2
பொதுவா ஹீல்ஸ்போட்டு நடக்கறது ரொம்ப கஷ்டம்தான் போல.. பல ரேம்ப் வாக் நடைகளில் கணநேரத்தில் மாடல்கள் சிலிப் ஆன நிகழ்வை தொகுத்து இங்கு கொடுத்து இருக்கின்றார்கள்...சிலிப் இன் செகன்ட் நிகழ்வை பாருங்கள்..
================================
படித்ததில் சிரித்து ரசித்தது...
உமா சங்கர் ஐஏஸ்...அவர் மீது பெரிய மரியாதை இருந்தது திமுக அரசு அவரை பந்தாடிய போது கூட தன் மன உறுதியை விட்டுகொடுக்காமல் தளராமல் இருந்தவர்... இப்போதும் அவர் நேர்மை குறித்து எந்த சந்தேகமும் இல்லை.. பட்... அவர் ஒரு பேட்டியை ஜுவிக்கு கொடுத்து இருக்கின்றார்... அதை படித்த போது எனக்கு சிரிப்பு வந்து விட்டது...பல சோதனைகள் வந்த போது அந்த இறைவன் என்னை கைவிடவில்லை என்று சொல்லி இருக்கலாம் ஆனால் பேட்டியை படித்து பாருங்கள்.. எனக்கு தெரிந்து ஜெவுக்கு கொடுக்கும் மறைமுக எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாமா??? ஆனாலும் இது டுமச்...
உமாசங்கரிடம் நாம் கேட்டபோது, ''இயேசு கைவிடார் என்பது பைபிள் வார்த்தை. எனது வாழ்க்கையில் இக்கட்டான நேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முதலிலேயே இயேசு என்னிடம் சொல்லிவிடுவார். என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டிய தி.மு.க. ஆட்சியைப்பற்றி இயேசு என்னிடம், 'உன்னைத் தொடுகிறவன், என் கண்மணியைத் தொடுவதற்கு சமம். உன் தலையில் இருந்து முடியைக்கூட விழ நான் அனுமதிக்க மாட்டேன்'னு சொன்னார். அப்படித்தான் நடந்தது. கடந்த ஜூலை மாதத்தில், தி.மு.க. மோசமான தோல்வியை சந்திக்கும்னு இயேசு என்னிடம் தெரிவித்தார். மூணு என்கிற எண்ணையும் சைகையால் காட்டினார். அதை நான் மூணு ஸீட் என்று நினைத்தேன். ஆனால், தேர்தல் முடிவில் மூன்றாம் இடத்துக்கு தி.மு.க. தள்ளப்படும் என்பதைத்தான் ஜனவரி முதல் வாரத்தில் சொன்னார். நான் சஸ்பெண்டு ஆன சில நாட்களில், எனக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கைவிட்டார். அப்போதே, அடுத்த சி.எம். ஆக அவரை கர்த்தர் நியமிச்சிட்டார்னு எனக்குத் தெரியும். ஜெயலலிதா மீது கர்த்தரின் கரம் இருக்கு. அதனால், அவரது ஆட்சிக்கும் ஆசீர்வாதங்கள் உண்டு'' என்றார் நம்பிக்கையுடன்!
(thanks vikatan..... )
(thanks vikatan..... )
சமீபத்தில்தான் சமுக வலைதளங்களில் இந்த வீடியோவை காண நேர்ந்தது.. இந்த வீடியோ ஒரு விதத்தில் தெரியாதவர்களுக்கு இது சொல்லிக்கொடுக்கும் விஷயம் என்றாலும் இந்த வீடியோவில் அவர் எப்படி இந்தியன் டாய்லட்டை யூஸ் செய்ய வேண்டும் என்று அவர் விளக்கும் போதும், செய்துகாட்டும் போதும், சிரிப்பை அடக்கமுடியவில்லை.....பாருங்கள்...இந்த வீடியோவை பார்க்கும் போது தண்ணிர் குடிக்க வேண்டாம் சிரித்து புரையேறிவிட சான்ஸ் அதிகம்..
====================================
பிலாசிபி பாண்டி..
என்னதான் ஆட்டோன்னு பேர் இருந்தாலும் அது ஆட்டோவா வோட்ட முடியாது.. மேனுவலாதான் ஓட்ட முடியும்...
========================================================
நான்வெஜ்18+
ஜோக்..1
மிருககாட்சி சாலையில் இருக்கும் குரங்கு அந்த புலிகிட்ட கேட்டுச்சி?? எதுக்கு அந்த ஆளை சாவடிச்சன்னு...ஓத்தா மூனு மணிநேரம் என்னை உத்து பார்த்துட்டு அவன் சொன்னான்... எவ்வளவு பெரிய பூனைன்னு.........
================
ஜோக்..2
எப்படி உங்க வீட்ல மாமியார், வீட்டு வேலைக்காரி, வாட்சமேன் பொண்டாட்டி , செல்ல நாய் எல்லாம் ஒரே நாளில் செத்து போயிட்டாங்க...?? மாமனார் ரத்த கொதிப்பு மாத்திரைக்கு பதில் 100 வயகரா மாத்திரை தெரியாம மாத்தி வச்சிட்டேன்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
===========================
வழக்கம் போல எல்லாமே நல்ல இருக்கு
ReplyDeleteஇன்றைக்கு கேபிளாரும் கெளதமியின் பாடல் போட்டிருக்கின்றார் நீங்களும் போட்டிருக்கின்றீர்கள் என்ன ஒரு ஒற்றுமை.
ReplyDeleteஎங்கடை ஊரிலை புதுத்தும்புத் தடி நல்லாக் கூட்டும் என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் தான் ஜெயும் ஆரம்பத்தில் நல்லாத்தான் இருப்பார் பின்னர் மாறிவிடுவார்.
toilet mater romba palasu itha naan 2 warusathuku muthale paathiruken
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=gJazvumHNyk&feature=ரேலடேத்
ReplyDeleteஜப்பான் காரன் ஜப்பான் காரன் தான் பாருங்க ப்படி இருக்கு எண்டு
Good mix of things!
ReplyDelete//சமச்சீர் கல்விக்கு அம்மா வச்சிட்டாங்க ஆப்பு......//
ReplyDeleteஓங்கி அறையவேண்டும் போல் இருந்தத்து அவரை..
மக்களின் யதார்த்த நிலை.
"ஒரு பணக்க்கார நாயி டிவியில் பேட்டி கொடுக்குது... என் பிள்ளை படிப்பதைத்தான் அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளையும் படிக்குது... இது எப்படி இருக்கு...."
ReplyDeleteபணம் கொடுத்து படிக்கிறவனும், ஓசியில படிக்கிறவனும், ஒரே படிப்பு படிக்கணும்னு எப்படி நினைக்கலாம்?
எங்க ராஜகுருவின் ராஜகுரு ஆசைய, இந்த ராஜகுருவின் சிஷ்யை மூலமா இப்போதான் நிறைவேத்த முடியும்னு பார்த்தா, வந்துட்டானுங்க....
அதான், ஆடு, மாடுகள ஓசியில குடுக்க போறோமில்ல....போங்கடா, போய் புள்ள குட்டிகள, ஆடு, மாடு மேய்க்க விடுங்கடா..