ஊர் கோவில் திருவிழாவுக்கு நீங்கள் வசூலுக்கு போனதுண்டா?? நான் போய் இருக்கின்றேன்..அடுத்த மாதம் 15ம்தேதி திருவிழா ஆரம்பிக்க போகின்றது என்றால் ஒரு மாதத்துக்கு முன் 100 பக்க பைண்டிங் செய்யப்பட்ட நோட்டு புத்தகத்தை எடுத்தக்கொண்டு காலை எழு மணிக்கு முப்பதில் இருந்து 40 பேர் வரை வீடு வீடாக போய் பணம் வசூலித்து வருவோம்.... பத்து மணிக்கு எல்லாம் ஒரு ரவுண்ட் அடித்து விடுவோம்... அது போல ஒரு மாதம் முழுவதும் தினமும் செல்வோம்...
சிலர் ஊர் கோவில் வசூல் என்றால் எந்த பேச்சும் இல்லாமல் பணத்தை எடுத்து நீட்டி விடுவார்கள் சிலர் சாக்கு போக்கு சொல்லுவார்கள்.. அதனால் அவர்களை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் வீட்டுக்கு வசூலுக்கு போவது என்று கட்டம் கட்டிவிடுவோம்..
சரியாக சனிக்கிழமை காலை ஏழுமணிக்கு , ஊரில் உள்ள முக்கியமனிதர்கள் மற்றும் நஞ்சு குஞ்சுக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு 40 பேருக்கு மேல் ,நாளைக்கு வா, நாளைக்கு வா என்று போக்கு காட்டியவனின் வீட்டு வாசலில் கும்பலாய் வந்து நிற்ப்போம், காலையில் தூக்க கலக்கத்தோடு கதவு திறந்தவனுக்கு இத்தனை பேர் வீட்டு வாசலில் நிற்பதை பார்த்து விட்டு, அசிங்கமாக பீல் செய்து எதிர் பேச்சு பேசாமல் காசை எடுத்துக்கொடுத்து விடுவான்...
சில நேரங்களில் 150ரூபாய்தான் வசூல் ஆகி இருக்கும் வசூலுக்கு வந்தவர்களுக்கு டீ மற்றும் பஞ்சி வாங்கி கொடுத்த கணக்கு மட்டும் 100ரூபாய்க்கு வந்து நிற்கும்.. ஆனால் அதுக்கு கணக்கு பார்த்தால் மறுநாள் வசூலுக்கு யாரும் வரமாட்டார்கள்.. கூட்டம் வந்தால் மட்டுமே வசூல் நடக்கும்... சில பேர் வந்த கூட்டத்தை பார்த்ததுமே பந்தாவுக்காக 500ரூபாய் ஊர் நிர்னியத்தை தொகைக்கு ஆயிரம் ரூபாய் எழுதுவார்கள்.
எங்கள் ஊர் கூத்தபாக்கம் பொன்விளைந்த களத்துர் கோவிலில் இருந்து அய்னாரப்பனுக்கு குதிரைகள் எடுத்து போய் பொங்கலிட்டு படையலிட்டு குதிரைகளை அங்கேயே விட்டு விட்டு வந்து விடுவோம்.... இரவில் அய்யனார் அந்த குதிரைகளில் வேட்டைக்கு போவார் என்று நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்த போது ஊர் பெருசுகள் கதையை அவிழ்த்து விட்டு இருக்கின்றார்கள்...
மறுநாள் அய்யனார் கோவிலுக்கு போய் பார்த்தால் குதிரைகள் கால்கள் மற்றும் தலை இழந்து சிதறிக்கிடக்கும்... காரணம் அய்யனார் வேட்டைக்கு போய் விட்டு வந்ததும் குதிரைகள் சண்டை போட்டுக்கொள்ளும் என்று சொல்வார்கள்... மீசை முளைக்கும் காலத்தில் எங்களுக்கு புரிந்து போனது...
பக்கத்தில் வேலிமுட்டி குடித்து விட்டு குடிகார பசங்கள் வந்து குதிரைகளை போட்டு போதையில் உடைத்து விடுகின்றார்கள் என்று...
இன்றும் கூத்தபாக்கம் செல்வம் ரைஸ்மில்லுக்கு பக்கத்தில் இருக்கும் குமாரசாமி பத்தர்தான் மண்குதிரைகளை செய்வார்..ஒரு முறை கோவிலில் மண்குதிரையை நகர்த்தி வைக்கும் போது ஒரு குதிரை காலை என் அப்பா உடைத்து விட்டார்... அதனால்தான் என் அப்பாவுக்கு கால் உடைந்து படுத்த படுக்கையாக ஆகிவிட்டதாக இன்னமும் குமாரசாமிபத்தர் சொல்லி வருகின்றார்...
ஒருவாரத்துக்கு முன்தான் அய்யனாருக்கு மண்குதிரைகள் எடுத்து சென்று பொங்கல் மற்றும் படையல் வைத்து விட்டு வந்தார்கள்... எந்த ஊரில் இருந்தாலும் திருவிழாவுக்கு நான் சரியாக போய்விடுவேன்.. ஆனால் இந்த முறை எனக்கு ஊர்திருவிழா பற்றி யாரும் எனக்கு தகவல் கொடுக்கவில்லை..
இவன் சொல்லுவான் என்று அவனும் அவன் சொல்லுவான் என்று இவனும் என் நண்பர்கள் என்னை டீலில் விட்டு விட்டார்கள்.. சொந்தங்கள் அப்படியே.. அவைகள்தான் அப்படி என்றால் என் சொந்த தங்கைகள் எனக்கு திருவிழா பற்றி தகவல் சொல்லவில்லை.. மூன்று தங்கைகள் மற்றும் என் அப்பாவிடம் செல்போன் இருக்கின்றது ஒரு மேசேஜ் தட்டி விட அவர்களால் முடியவில்லை....கல்யாணம் செய்து வைக்க மட்டும் அண்ணன் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார்கள் போலும்... அதனால் இந்த வருட அய்யனார் மண்குதிரைகளை என்னால் பார்க்க முடியவில்லை.. ஆனால் வேறு ரூபத்தில் அழகர்சாமி குதிரை திரைபடத்தின் மூலம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது...அதற்கு முதலில் சுசீந்திரன் மற்றும் பாஸ்கர் சக்திக்கு என் நன்றிகள்.
============================================
அழகர்சாமிகுதிரை படத்தின் கதை என்ன??
தேனி மல்லையாபுரம் கிராமத்தில் மாரி மழை பொழிந்து பல வருடங்கள் ஆகின்றது..எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருக்கும் கிராமத்து மக்களுக்கு இரண்டு தரப்பின் ஈகோ காரணமாக அழகர்சாமிக்கு நடக்கும் ஊர் திருவிழா தள்ளிப்போய்கொண்டே இருக்கின்றது..
சரி தெய்வ குற்றத்தால்தான் மழை பெய்யவில்லை என்பதால் ஊர் திருவிழா நடத்த தீர்மாணிக்கின்றனர்... அழகர்சாமிக்கு ஓர் மரக்குதிரை ரெடி செய்கின்றார்கள்.. திருவிழா ஆரம்பிக்க இருக்கும் நேரம் பார்த்து அந்த அழகர்சாமியின் மரக்குதிரை காணாமல் போகின்றது.
இதனால் திருவிழா தடைபடுகின்றது...ஆனால் வழி தப்பிய ஒரு வெள்ளை உயிர்க்குதிரை அந்த கிராமத்துக்கு கிடைக்கின்றது.. அதை வைத்து திருவிழா நடத்தலாம் என்று நினைக்கும் போது அதையே நம்பி ஜீவனை நடத்தும் குதிரைக்காரன் குதிரைக்கு உரிமை கோருகின்றான்.. ஆனால் கிராமத்தினர் அவனிடம் அவன் குதிரையை தர மறுகின்றனர்.. அவன் குதிரையை அவன்கிட்ட கொடுப்பதுதானே நியாம் என்று நீங்கள் வாய்விட்டு சொன்னது என் காதில் விழுகின்றது.. அதுக்கு போய் தியேட்டர்ல போய் படத்தை பாருங்க...
=========================================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
ஒரு சிறப்பான சிறுகதையை எழுதிய பாஸ்கர் சக்திக்கும்,அதை படமாக்க வேண்டும் என்று தோன்றியஇயக்குனர் சுசீந்திரனுக்கு தமிழ்சினிமா கடமைபட்டுள்ளது... மிக முக்கியமாக அதன் இயல்புத்தன்மை மாறாமல் அதனை படமாக்கிய குழுவினருக்கு என் நன்றிகள்.
முதல் பாதி முழுவதும் வெகு கலகலப்பாக செல்கின்றது சிரித்து சிரித்து வயிறு வலிக்கின்றது..இரண்டாம் பாதிசென்டிமென்ட்டும் கலகலப்பாகவும் செல்கின்றது...
படத்தில் இரண்டு காதலர்களின் கதைகள்... ஒரு காதல் ஜாதியால் பயந்து போய் இருக்கின்றது..இன்னோரு காதல் வாழ்வதார பிரச்சனைக்கு முடிவு தெரியாமல் தத்தளிக்கின்றது.
சும்மா சொல்லக்கூடாது.. அப்புக்குட்டி என்ட்ரியின் போது எம்டி பிரேமில் சைக்கிளில் வரும் போது இளையராஜா கொடுக்கும் அந்த பின்னனி இசை நெகிழ்ச்சியாக்குகின்றது..
இந்த படத்திலும் கதையின் நாயகன் ஒரு 15 பேருக்கு மேல் இழுத்து போட்டு உதைக்கின்றான்... ஆனால் எதுக்கு உதைக்கின்றான்?? அந்த கோபம் எப்படி வருகின்றது? எதனால் வருகின்றது..? என்பதை சொன்ன விதத்தில் உணர்பூர்வமாய் ஜெயித்து இருக்கின்றார்கள் என்பேன்.....
5 நிமிடம் மணலில் பிரண்டி போடும் அந்த சண்டைகாட்சி இயக்குனர் மகேந்திரன் படத்துக்கு அப்புறம் இயல்பான எக்ஸ்ட்ரா சவுண்ட் இல்லாமல் லைவ்வாக சண்டை போடுவதை போல படமாக்கிய கேமராமேன் தேனிஈஸ்வருக்கும் மற்றும் ஸ்டன்ட் மாஸ்டருக்கும் ஒரு ஸ்பெஷல் ஷொட்டு....
ஒருவன் வாழ்வாதாரத்தில் கைவைத்தால் எவ்வளவு கோபம் வரும் என்பதை அந்த சண்டையில் சொன்னவிதம் தமிழ்சினிமாவுக்கு ஆச்சர்யம்...
கிராமங்களில் பண வசூலுக்கு போகும் போது மனிதர்களை காட்சி படுத்தி இருக்கும் விதத்தில் மனிதர்களை நிறைய படித்து இருக்கின்றார்கள் என்பதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள்..
ஒரு திருவிழா அதுக்காக ஒரு கிராமம் எப்படி தயார் ஆகின்றது என்பதை சின்ன சின்ன ஷாட்டுகளில் நெஞ்சை கொள்ளை கொள்கின்றார்கள்.....
இந்த கிராமத்தில் இருக்கும் ஒரு ஊர் மைனர் ஊர் மேய்வதை மிக காமெடியாக சொல்லி இருக்கின்றார்கள். அதே போல அவருக்கும் ஏற்படும் முடிவு சிரிச்சி மாளலை......
எப்போதுமே மேட்டுக்குடி தலைகாய்தவனை எப்படி டீரிட் செய்யும் என்பதை கிராமத்து மனிதர்கள் குதிரைக்காரனான அப்புக்குட்டியை போட்டு உதைக்கும் இடத்தில் மிக அழகாய் சொல்லி இருக்கின்றார்கள்...
எப்போதுமே இல்லாதவனுக்குதான் விசாலமான பார்வை இருக்கும் விட்டுக்கொடுத்து விட்டு போகும் குணம் இருக்கும்...குதிரையை இரவோடு தருகின்றேன் என்று சொல்லியும்.. மக்கள் எல்லோரும் சந்தோஷத்தில் இருக்கும் இந்த சந்தோஷத்தை என் சுயநலத்துக்காக நான் கெடுக்க முடியாது என்று சொல்லும் காட்சியில் அந்த கேரக்டர் மனதில் நின்று விடுகின்றது.
ஊரில் பொது மக்கள் கூடும் இடங்களில் எப்படி காதல் வளர்கின்றது என்பதையும் அதனை பெரியவர்களை விட சில பள்ளிக்கூட விடலை பசங்கள் நோட்டம் விடும் காட்சி அமைப்பு எதார்த்தம்
போலிஸ் இன்ஸ்பெக்ட்ராக கேமராமேன் அருள்தாஸ் நடித்து இருக்கின்றார்.. நான் மகான்அல்ல படத்தின் ஒரு நல்ல ரோல் இதில் அதைவிட சிறப்பான ரோல்.....
ஒரு கிராமத்தில்இருக்கும் வெள்ளந்திமனிதர்களை எப்படி எல்லாம் சாமியார்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பதை மிக அழகாக புட்டு புட்டு வைத்து இருக்கின்றார்கள்..
சரண்யா மோகனுக்கு பெண் பார்க்கும் இடத்தில் மட்டும் கொஙசம் நல்ல மேக்கப் மற்ற இடங்களில் டல் மேக்கப்பில் நன்றாக இருக்கின்றார்....
என்னை போன்ற இன்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் பயலுக்களுக்காவது.. சரண்யாவை அப்புகுட்டி சின்னதாக அனைப்து போலவாவது காட்டி இருக்கலாம் என்பது எனது ஆசை விரல் மட்டும் தொடுவது போல்.... காட்சி அமைத்து இருப்பது கொடுமை...
இந்த வருடத்திய சிறந்த நடிகர் விருது அழகர்சாமி அப்புக்குட்டிக்கு கிடைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை...மிக முக்கியமாக போலிஸ் பஞ்சாயத்து பண்ணும் இடத்தில் என் குதிரையை என்கிட்ட கொடுங்க என்று சீறும் இடத்திலும் குதிரையை மீட்டுதாருங்கள் என்று போலிஸ் நிலையத்தில் திருடன் காலில் விழுந்து கதறும் இடத்திலும் நல்ல நடிப்பு....
பாஸ்கர் சக்தி இந்த படத்தில் உதவி இயக்குனர்... இன்னும் நிறைய சிறுகதைகள் இதே போல் செல்லுலாய்டில் பதிய வாழ்த்துகள்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ராஜா அசத்தல் ராஜா...குதிரைக்கு அப்புக்குட்டிக்கும் இருக்கும் சினேக காட்சிகளில் அட்டகாசம்.. முக்கியமாக அப்புகுட்டி என்ட்ரி.. முக்கியமாக குதிரை பாடல் ரொம்ப நன்றாக இருக்கின்றது....அவதாரம் படத்தில் வரும் ஒரு குண்டு மணி குலுங்குதடி கண்ணம்மா காதுல காதுல என்ற அந்த பாடலை நினைவுபடுத்துகின்றது...பல நாட்களுக்கு பிறகு ராஜாவின் இசை ராஜாங்கம்...
முக்கியமாக பாடலில் குதிரை அப்புகுட்டி வெயிலில் இருப்பதை பார்த்து விட்டு அவனருகே வந்து நின்று நிழல் கொடுப்பது சலித்து போன காட்சியாக இருந்தாலும் கவிதை......
தேனி ஈஸ்வரின் கேமரா காடு மேடு மலை பொட்டல்காடு என்று பல இடங்களிவ் பிரயாணிக்கின்றது... முக்கியமாக அந்த சண்டை காட்சியின் லைவ்லினெஸ் காட்சி படுத்தலுக்கு ஒரு பொக்கே......பிடியுங்கள்...
படக்குழுவினர் விபரம்...
Directed by Suseenthiran
Produced by P. Madhan
Written by Bhaskar Sakthi
Screenplay by Suseenthiran
Based on Azhagarsamiyin Kudhirai by Bhaskar Sakthi
Starring Appukutty
Saranya Mohan
Music by Ilaiyaraaja
Cinematography Theni Eashwar
Editing by Kasi Viswanathan
Studio Escape Artists Motion Pictures
Distributed by Cloud Nine Movies
Release date(s) May 12, 2011[1]
Country India
Language Tamil
படத்தின் டிரைலர்....
தியேட்டர் டிஸ்கி....
இந்த படத்தை நான் சென்னையில் எக்ஸ்பிரஸ்மாலில் எஸ்கேப் தியேட்டரில் பார்த்தேன்..
வானம் படத்தில் சந்தானம் சொல்வது போல மனது விட்டு சிரிக்கவும் கைதட்டி ரசிக்கவும் நிறைய யோசித்தார்கள்...
நண்பர் பாலபாரதி பஸ்சில் சொல்லியிருந்தது போல அப்புக்குட்டி சரண்யா காதலை சொல்லும் இடங்களில் ஏ ரோ மற்றும் பி ரோவில் ஒரு சலசலப்போடு, சத்தமான பேச்சுங்ம கெக்கே பெக்கே சிரிப்புகளும் இடம் பெற்றன..
ஒரு பெண் கருப்பு மசக்களி உடையில் நல்ல உடற்கட்டுடன் இறங்கி ஸ்கிரின் பக்கத்தில் நின்று அவளத நண்பியை அழைத்தார்...
என் மச்சான் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு திடிர் என்று ஒரு கவிதை சொன்னான்...
அழகர்சாமி குதிரையை
ஒரு அரேபியன் குதிரை
கருப்பு உடையுடன்
பார்க்க வந்து இருக்கின்தே.....
அடடே
ஆச்சர்யகுறி..
என்று ஒரு இன்ஸ்டென்ட் கவிதை சொன்னான்..
என் மச்சான் வேற எப்படி இருப்பான்??? என்று மனதில் நினைத்துக்கொண்டேன்....
இன்டர்வெல்லில் பர்ஸ் வீக்கம் குறைந்து விடும் என்பதால் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை....
பைனல்கிக்...
5மணிநேரமாக இந்த படத்தின் விமர்சனத்தை எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.. எதை விடுவது எதை எழுதுவது என்பது தெரியாமல்...சிலர் இந்த படத்தை வேறு மாதிரி பார்வையில் பார்க்கின்றார்கள்... பட் என்னை பொறுத்தவரை இந்த படம் தமிழில் ஒரு உலகதரம்....மேலே அதுக்குத்தான் உலகசினிமா என்று டைட்டிலில் எழுதினேன்....
நம்மிடம் உலக படவிழாவில் இந்த படத்தை பிரமோட் செய்தால் பல விருதுகள் நிச்சயம்...உலக படவிழாவில் பல மொக்கைபடங்கள் சில நேரங்களில் விருது வாங்கி விடுவதுண்டு... ஆனால் இந்த படம் எந்தவிதத்திலும் உலகதரத்துக்கு சற்றும் குறைவில்லை.... இந்த படம் அவசியம் பார்த்தேதேதேதே தீர வேண்டிய படம்...குடும்பத்துடன் பார்க்க வேண்டும்.. நம் கிராமத்தின் மண்ணின் வாசனையை மிக அழகாக செல்லுலாய்டில் பதிந்து இருக்கின்றார்கள்....
============================================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
===================
World Class Movie. Vow. Great Alagu Kudhirai.
ReplyDeleteஒரே துறையில் இருப்பவர்கள் மத்தவர்களை பாராட்ட நல்ல மனது வேண்டும்
ReplyDeleteவாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
நானும் பார்துட்டேன் அலுவலக பணிகளிடையே.. நிதானமாக இன்னொரு முறை நீங்கள் கூறியுள்ள விமர்சனப் படி பார்க்கவேண்டும்
ReplyDeleteஆதவன்லாம் அவார்டு வாங்குச்சி நம்ம அப்புக்குட்டிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
ReplyDeleteநல்ல படம். அதற்கேற்ற நல்ல மதிப்புரை இது. கேபிள் சங்கர் எழுதிய விமர்சனத்தை வாசித்துவிட்டு, படம் அவ்வளவு நன்றாக இருக்காதோ என்று அஞ்சியிருந்தேன். ஆனால் படம் நன்றாக வந்திருக்கிறது. நண்பர் எதிர்பார்க்கிற நாடக வழக்கு (dramatic form) வெற்றி வாய்ப்புக்குரியதோர் வடிவமாக இருக்கலாம். ஆனால் கவிதை வடிவம்தான் படைப்புத் திறனின் உச்சம் என்று கருதுகிறேன். இப் படம் அவ் வடிவத்தை ஓரளவுக்கு எட்டியிருக்கிறது.
ReplyDelete'நான் மகான் அல்ல' படத்தில் ஏழைகளை இழித்துக்காட்டிய சுசீந்திரன் இதில் அதற்குப் பரிகாரம் தேடிக்கொண்டார். அழகர்சாமி (பெருமாள்) அருள்வாராக!
'சத்யம்', 'PVR', 'எக்ஸ்பிரஸ் மால்' இன்ன அரங்குகளில் உணர்ச்சியற்ற உடம்புகளே வந்து சாயும். ரசனை உள்ளவர் எவரும் அந்தத் திக்கம் எட்டுவைக்கக் கூடாது, ஆமாம்.
என் திருமணம் முடிந்து நான் பார்த்த முதல் படம் இது. இந்த படத்தைய பார்த்தே என்று அனைவரும் கேட்டனர். கழுதைக்கு தெரியும கற்பூர வாசனை. நான் மிக மிக ரசித்து பார்ஹ்த்த தமிழ் படம் இது தங்கள் விமர்சனம் அருமை
ReplyDeleteயாழினியன்
yazhiniananup@gmail.com