100% LOVE-2011 TELUGU நூறு பர்சென்ட் காதல் ..தெலுங்கு திரைப்படம். திரைவிமர்சனம்முதலில் இந்த விமர்சனம் படிக்கும் முன் ஒரு விஷயம்....உங்களுக்கு தெலுங்கு தெரியுமா? தெரியாவிட்டாலும் கவலை இல்லை... நீங்கள் காதல்வயப்பட்டவரா? இல்லை என்றாலும் கவலை இல்லை... இந்த படத்தை உடனே போய் பாருங்கள்....கூடவே காதலியும் இருந்தால்  நலம்.....இந்தக்கோடை வெயிலில் காதலை கொண்டாடி மகிழ ,ஒரு படம்.....திரைப்படத்துக்கும் காதலுக்கும்  மொழி ஒரு பொருட்டு அல்ல......

============

 
எந்த காதலனுக்கும் தானே இந்த உலகத்தின் சிறந்த ஆண்மகன் என்று தான் நேசிக்கும் பெண் நினைக்க வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் உண்டு... அரென்ஞ்சடு மேரேஞ் திருமணங்களில் கூட கணவன் தன்னையே உயர்வாய், பெருமையாய் நேசிக்க வேண்டும் என்பது ஆணது இயல்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது...அப்படி இல்லை என்று சொல்லும் ஆண் வெளி வேஷம் போடுகின்றார் என்று அர்த்தம்...

பொசசிவ் மட்டும் ஆண் பெண் உறவில் வந்து  விட்டால் அது நரகவேதனைதான்... ஆனால் அந்த கோட்டை  வாழ்க்கையில் இரண்டு பாலரும் தொட்டுவிட்டே வாழ்க்கை படகில் ஏறவேண்டிய கட்டாயத்தில் இருப்பதுதான் கொடுமை... சரி பொசசிவ் என்றால் என்ன?? இந்த படத்துக்கு நான் எழுதிய மேட்டரை சின்ன சிறுகதையாக எழுதி இருக்கின்றேன்.. வாசித்து விட்டு திரும்பவும் படியுங்கள்..உலகத்தில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் பொதுவான உணர்வு பொசசிவ்....என்னோடு மட்டுமே காமம் கொள்ள வேண்டும்.., என்னோடு மட்டும் காதல் கொள்ளவேண்டும், என்னையே நேசிக்க வேண்டும்...இது இரண்டு பாலருக்கும் பொதுவான எண்ணம் என்றால் அது மிகையில்லைதான்...ஆனால் அது சில நேரங்களில் சாத்தியபடாமல் போய்விடும்....சில நேரத்தில் குரங்கு பிடிக்க பிள்ளையாராய்  போய் விடும் வாய்ப்பும் இருக்கின்றது...அப்படியான படம்தான் இந்த படம்...
 =======================

100 பர்சென்ட் லவ் தெலுங்கு படத்தின் கதை என்ன??


 பாலு (நாகசைத்தன்யா) உயர்நிலைவகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்... அவன் அடுத்து கல்லூரியில் சேருகின்றான்.. அதே கல்லூரியில் தெலுங்கு மீடியத்தில் படித்து விட்டு அவனது வகுப்பில் சேரும் மாமன்மகள் மகாலட்சுமி(தமன்னா)
இவர்களுக்குள் ஏற்படும் முதல் இரண்டாம் இடம் போட்டியே படத்தின் பிரதானம்....  இருவரும் காதல் கொள்கின்றார்கள்..அதிலும் பாலுவின் ஈகோவும் போட்டி போட இருவரும் பிரிகின்றார்கள் எப்படி சேர்கின்றார்கள் என்பதை அரைச்ச மாவு கதையாக இருந்தாலும் ரசிக்க
 வைத்து பிரசன்ட் பண்ணி இருக்கின்றார்கள்.. அதனால் வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்..

============ ======================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இந்த படம் ஒரு கணக்கு லெக்சரர் எடுத்தபடமான்னு சொன்னா நீங்கள் மூக்கில் விரலை
வைப்பிங்க...இந்த படத்தின்  இயக்குனர் சுகுமார் ஆர்யா படத்தின் இரண்டு  பாகங்களையும் டைரக்ட் செய்தவர்... இவர் ஆந்திரிவில் காக்கிநாடாவில் கணக்கு வாத்தியராக பணியாற்றியவர்....

ஆர்யா இரண்டு திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய ஒரு படம் அந்த அளவுக்கு அதில் இருக்கும் திரைக்கதை  யுக்தி...

இந்த படம் முதலில் நாகசைத்தன்யாவுக்கு பதில் வருன் சந்தோஷ்ஷை வைத்து படம் ஆரம்பித்து பின்பு டிராப் ஆகிவிட்டது....வருன் சந்தோஷ் ஹேப்பிடேஸ் படத்தின் ஹீரோ...

இந்த  படத்தின் இயக்குனர் கணக்கு வாத்தியார் என்பதால் அந்த களத்தை நன்கு பயண்படுத்தி இருக்கின்றார்... கணக்கு சம்பந்தமான செட்டுகள் எல்லாம் அற்புதம்.. உங்களுக்கே படத்தை பார்த்தால் தெரியும்...

படம் முழுக்க ஒரு இளமை துள்ளல் அது ரசனையாக  பார்வையாளர்களால் உள் வாங்க பட்டு இருப்பதே படத்தின் வெற்றி.....

ஆங்கில படத்தின் சில  ஹீரோயின்கள் முதலில் பார்த்ததும் பிடிக்கவே பிடிக்காது பிறகு போக போக பிடித்து விடும்.. அது போலான முகம் நகசைத்தன்யாவுடையது.. நிறைய இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்கின்றார்.... முக்கியமாக தன் மன ஆதங்கத்தை தமன்னாவிடம் தண்ணி அடித்து விட்டு கொட்டும் போது ஏ ஒன்...

என்னதான் நான் தமன்னாவோடு திரைபடத்தில் பணிபுரிந்து இருந்தாலும் அந்த பெண்ணிடம் இருக்கும் அந்த சின்ன சின்ன எக்ஸ்பிரஷன் சான்சே இல்லை....

முதலில் பாவடை தாவணி பிறகு சுடிதார் அப்புறம் ஜீன்ஸ் டீசர்ட் என்று மாறும் அழகே அழகு... முதல் பாதி படம் போவதே தெரியவில்லை இரண்டாம் பாதியில் சென்டிமென்ட்காரணமாக கொஞ்சம் லேக் ஆனாலும் அதனை தவிர்க்க முடியாது.....

தம்னனாவின் குழைவான தொப்புளும் இடுப்பும் படத்துக்கும் இளமை துள்ளலுக்கும் பெரிய பலம்..என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்...

இடைவேளையின் போது தமன்னாவிட்ம் கம்யூட்டர் பாஸ்வேர்ட் என்ன என்று நாக சைத்தன்யா கேட்கும் போது தம்ன்னா அழுதுக்கொண்டே சொல்லும் போது என் கண்கள் குளமாகின... சட்டென தியேட்டரில் லைட் போட அனைவரது கண்களும் குளமாகி இருந்தன..

ஏ ஸ்கொய் பீ ஸ்கொயர் பாடல்களில் தேவி/ பிரசாத் அசத்தி இருக்கின்றார்...

அதே போல் இந்த படத்து போஸ்டர் டிசைன் செய்தவரை பாராட்ட வேண்டும் அனைத்தும் அசத்தல் ரகம்.... போஸ்டர்களே படம் பார்க்க தூண்டும் வகையில் இருப்பது படத்துக்கு பெரிய பலம்..

நிறைய எழுதலாம் ஆனால் படத்தை பார்க்கும் போது சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் அடக்கி வாசித்து இருக்கின்றேன்.
படம் முடிந்து வெளிய வரும் போது ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம் பார்த்த திருப்தி...

ஒரு ஆசிரியராக மாணவ, மாணவிகளை கல்லூரியில் கவனித்ததை வைத்து மிக நுனுக்கமான விஷயங்களை படத்தில் சேர்த்து இருக்கின்றார்... ஒரு வாத்தியாராகவும் ஒரு இயக்குனராகவும் சுகுமார் ஜெயித்து இருக்கின்றார்.....
=================
தியேட்டர் டிஸ்கி...


இந்த படத்தை பெண்களூர் தாவக்கரையில் இருக்கும் சினிவாசா தியேட்டரில் பார்த்தேன்...


எல்லா தெலுங்கு மனவாடுகளும் அங்கே ஆஜர்...


படம் முடிந்து போகும் போது எல்லா ஆண் பெண் முகங்களில் தானே காதலித்து ஒன்று சேர்ந்த சந்தோணத்துடன் கலைந்து சென்றார்கள்...


எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்த பெண்ணின் எக்ஸ்பிரசனும் நன்றாக இருந்தது...

               
=================
படக்குழுவினர் விபரம்.....
Directed by     Sukumar
Produced by     Bunny Vasu
Written by     Chandra Sekhar T Ramesh
Hari Prasad
Starring    

    * Naga Chaitanya
    * Tamannaah Bhatia

Music by     Devi Sri Prasad
Cinematography     Prasad
Studio     Geetha Arts
Release date(s)     May 2011 (2011-05)
Country     India
Language     Telugu
===============================================
படத்தின் டிரைலர்..
=================

பைனல்கிக்...

மிஸ்டர் பர்பெக்ட், போல இந்த படமும் பில் குட் மூவி.. இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்... அரைத்தமாவு  திரைக்கதையாக இருந்தாலும் கொடுத்த விதத்தில் அசத்தி இருக்கின்றார்கள்...


====================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.. 
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 

==============

2 comments:

  1. //ஆர்யா இரண்டு திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய ஒரு படம் //

    ஆர்யா2 ரொம்ப நல்ல படம் தெலுங்கு படங்களில் கத்தி ரத்தம் கலர் அதிகமா இருக்கும் அப்ப அப்ப சில பீல் குட் படங்கள் வருவதுண்டு முடிந்தாள் ஆர்யா2 விர்க்கும் விமர்சனம் எழுதுமாறு கேட்டுகொள்கிரேன்

    ReplyDelete
  2. நிச்சய்ம் நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன் ராஜ கோபால்... எனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும்.... நிறைய டுவிஸ்ட் உள்ள படம்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner