DRAGONFLIES-2001/உலகசினிமா/ நார்வே/ நண்பனின் துரோகம்



சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டின்னு ஒருபழ மொழி இருக்கும்... அது போல நாம பாட்டுக்கு போய்கிட்டு இருப்போம் ஒரு சின்ன இடறல் நம்ம வாழ்க்கையையே மாற்றி போட்டு விடும்... நாம் நினைத்து கூட பார்க்க  முடியாது பிரச்சனைகளை எல்லாம் சந்திப்போம்... காரணம் சும்மா  இருந்த சங்கை எடுத்து ஊதியதால் வந்த பிரச்சனைதான்....அப்படி ஊதியவனின் கதைதான் இந்த படம்.....
 =================================


டிராகன் பிளைஸ் நார்வே நாட்டு படத்தின் கதை என்ன??

தம்பதிகள் இருவர் ஊருக்கு வெளியே இருக்கும் தனியாக இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்கள்... அமைதியான வாழ்க்கை பக்கத்தில் இருக்கும் ஆற்றில் மீன் பிடித்துக்கொள்கின்றார்கள்... தேவை என்றால் மட்டும் நகரத்துக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்வார்கள்.. ஒரு நாள் காதல் தம்பதிகளின் கணவன் பெட்ரோல் ஸ்டேஷனில் தன் நெடுநாளைய நண்பனை  சந்திக்கின்றான்... அவனை சும்மா வீட்டில் வந்து காபி சாப்பிட்டு விட்டு போ என்று அழைக்க அவன் வீட்டில் வந்து டேரோ போடுகின்றான்...நண்பனின் மனைவியை அடைய  நினைக்கின்றான்... அவன் வந்த பிறகு அவர்கள் காதல் வாழ்கையில் புயல் வீசூகின்றது புயல் எப்படி ஓய்ந்தது ?? என்பதை படத்தை பார்த்து  தெரிந்து கொள்ளுங்கள்...
 =================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


 இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் நார்வே  நாட்டு படம்...

படத்தில் மொத்தம் 5 கதாபாத்திரம்தான்... ஒரு வீடு இதுதான் படம்...

நம்ம ஊரில் இப்படி ஒரு படத்தை திரையிட்டால் முன் சீட்டு உடைக்கபட்டு தியேட்டரின் உள்ளே பல திசைகளில் பயணிக்கும்...

மிக மெதுவாக உலகபடங்களுக்கே உரிதான பொறுமையான திரைக்கதை... ஆனால் சில ஷாட்டுகளில் சுவாரஸ்யபடுத்துகின்றார்கள்...

படத்தின் பலம் சினிமோட்டோகிராபி.... அந்த தனியான வீடும் அதை சுற்று இருக்கும் புல்வெளியும் இன்றைக்கு எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்....

என்னடா ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் பத்து நிமிடத்துக்கு மேல் போகின்றதே என்று யோசிக்கும் போது தன் நண்பனுக்கு மீன் பிடித்து அந்த மீனை தூண்டிலில் இருந்து பொறுமையாக எடு என்று சொல்லி முடிக்கும் முன் அந்த மீனை கையால் அடித்து நசுக்கும் போது நண்பனின் கேரக்டர் நமக்கு புரிய வைக்கினறார்கள்.

நாயகி தனிமையான வீடு என்பதால் எப்போதும் மேல் சட்டைக்கு விடுதலை கொடுத்த படியே பல காட்சிகளில் திரிகின்றார்.. பிரா என்ற ஒரு வஸ்த்துவை அவர் உபயோகபடுத்தி நான் பார்த்ததே இல்லை... படத்தின் தொய்வை பல காட்சிகளில் தூக்கி நிறுத்துவது அவரின் அரை நிர்வாணமும்.. அந்த சைகோ நண்பனின்  செயல்கள்தான்...


நாயகிக்கு உற்ற நண்பனாக ஒரு  பேசமுடியாத சின்ன பையனின் சினேகமும் அவர்கள் நட்பும் கவிதை...

சைக்கோவிடம் உறவு கொள்ளலாம் என்று சொல்லி விட்டு அவனை கண்ணை மூடி இருக்க சொல்லிவிட்டு எல்லா உடையும கழட்டி அவனை நிர்வாணபடுத்தும் தனியாக நிற்க்க வைக்கும் காட்சி பலே ரகம்..
மனைவி படுக்கையில் எப்போதும் போல் நிர்வாணமாக படுத்து தூங்குவதை பார்த்து விட்டு நண்பனின் பெட்டில் அவன் இல்லையென்றதும் இருவரும் உறவு வைத்து இருப்பார்கள் என்று நினைத்து பொங்குவது செமை.... ஆனால் எல்லா ஊர்களிலும் ஆண்கள் ஒரே மாதிரிதான்.
 ==============================
படம் பெற்ற விருதுகள்..

Amanda Awards, Norway
Year Result Award Category/Recipient(s)
2002 Nominated Amanda Best Actor (Årets mannlige skuespiller)
Kim Bodnia 

Edinburgh International Film Festival
Year Result Award Category/Recipient(s)
2002 Won New Director's Award - Special Mention Marius Holst 

Ghent International Film Festival
Year Result Award Category/Recipient(s)
2002 Nominated Grand Prix Marius Holst 

Lübeck Nordic Film Days
Year Result Award Category/Recipient(s)
2002 Won NDR Promotion Prize Marius Holst


======================

படக்குழுவினர் விபரம்....

Director: Marius Holst
Writers: Ingvar Ambjørnsen (short story "Natt Til Mørk Morgen"), Nikolaj Frobenius
Stars: Kim Bodnia, Mikael Persbrandt and Maria Bonnevie
Country: Norway
Language: Swedish | Danish
Release Date: September 2001 (Norway) 
Also Known As: Dragonflies 

 =====================================

படத்தின் டிரைலர்..



 ===============================
பைனல்கிக்...

இந்த படம் பார்க்கவேண்டியபடம்..

உலகபடம் பார்த்து பொறுமை இருப்பவர்கள்... இந்த படத்தை பார்க்கும் போது பிரச்சனை இல்லை முதல் முறை பார்த்தால் என்னச்சார் ரொம்ப சுலோவா இருக்கு என்று சொல்லுவார்கள்..


அடிஷ்னல் இன்பர்மேசன்....


இந்த படம் கீழ்கண்ட இடத்தில் கிடைக்கும்...


நான் எழுதும் பல ஹாலிவுட் படங்கள் மற்றும் உலகபடங்கள் சென்னையில் இப்போது கிடைக்கின்றது..டிவிடி கிடைக்கும் இடம்......
அலிபாய்
மூவ்ஸ் நவ்
69A, பார்மா பஜார்
பாரிஸ், சென்னை
கைபேசி..9003184500..

எனது தளத்தில் படித்து விட்டு வருகின்றேன் என்று சொல்லுங்கள்..அவரிடம் படம் இலையென்றாலும் பஜாரில் அந்த படத்தின் டிவிடியை தேடிக்கொடுப்பார்

================================
பிரியங்களுடன் 
ஜாக்கிசேகர்..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
 


================

1 comment:

  1. படத்தில் சீன் இருக்கிறதா ? hehehe....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner