ஆல்பம்....
ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி... ஆனால் இதில் இரண்டுமே சந்தோஷமான செய்தி...
நல்ல செய்தி...
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணம்.. பையன் சுமார்தான்... ஆனா பொண்ணு செமை என்று தமிழகத்து சீரியல் அதிகம் பார்க்கும் பெண்கள் சொல்கின்றார்கள்... வில்லியம் அப்பாவும் அப்படித்தான்...அவுங்க அம்மா டயனா செமை.....இந்த திருமணத்தால் ஜடியில் யூகே பிராஜக்ட்டில் இந்தியாவில் வேலை செய்பவர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை... இதைதான் கிராமத்தில் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிக்கட்டும் என்று.......
கெட்ட செய்தி....
ஒசாம பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லபட்டுவிட்டான்...மீண்டும் ஒரு முறை பாக் முகத்திரை உலக அளவில் கிழிந்து இருக்கின்றது.... தொய்ந்து போன அதிபர் ஓபாமா செல்வாக்கு இந்த பின்லேடன் மரணம் மூலம் உயரும்.... தொலைகாட்சியில் காட்டினார்கள்... அமெரிக்கர்களின் மகிழ்ச்சியை...புத்தாண்டுக்கும் ,கிருஸ்மஸ்க்கும் அவர்கள் கொண்டடும் அதே மகிழ்சி...........ஆனால் என்ன? பின்லேடன் பக்கம் அதிகமாக தவறு இருந்தாலும் உலக அளவில் தன் அதிமேதாவிதனத்தால் அதிகமான பொதுமக்களை கொன்று குவித்து வாலாட்டும் அமெரிக்கா பின்லேடனை விட மிக கொடிய ஆள்...ஈராக்கில் எண்ணெய் வளத்துக்காக அப்பாவி பொதுமக்கள் இரண்டு லட்சம் பேரை காலி செய்ததை உலகம் என்றும் மறக்காது.. என்ன இனி அமெரிக்காவைமிரட்ட இனி ஆள் இல்லை என்று நினைக்கும் போது பயமாக இருக்கின்றது...
======================
காங்கிரஸ்காரர்களுக்கு கட்டம் சரியில்லை போல இருக்கு......சஞ்சய்காந்தி, மாதவராவ் சிந்தியா, ராஜசேகர ரெட்டி,இப்போ அருணாச்சலமுதல்வர்..டோர்ஜி...எனக்கு என்னம்மோ பிரச்சனைன்னு வந்துட்டா.. வானத்துலயே கதையை முடிச்சிடுவாங்க போல... நான் சொல்லறதலையும் வாய்ப்பு 50 பர்சென்ட் இருந்தாலும் இருக்கும்....யோசிங்க மக்கள்ஸ்.....
===============
எப்ப ஹெலிகாப்டர் தொலைஞ்சலும் இரண்டு நாளைக்கு மேல் ஆக்கிடுறாங்க... அவ்வளவு டேலன்ட் நாம....முடிவு என்னன்னு தெரிஞ்சாலும் அந்த இடத்தை கண்டுபிடிக்கவே நேரம் சரியா இருக்கு....
=========
இயக்குனர் பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கின்றது....
வாழும் போதே கொடுத்து விருதுக்கு கவுரவம் சேர்த்து இருக்கின்றார்கள்..
=========
மிக்சர்...
இங்கு பெண்களருவில் காற்றும் மழையும் கலந்து அடித்தது.. கூடவே ஐஸ்கட்டிகள் வேறு... வாழ்வில் முதல் முறையாக நான் ஐஸ்கட்டி மழையை பார்க்கின்றேன்....
=================
தனது பிறந்தநாளில் தனது ரசிகர்மன்றங்களை கலைத்த நடிகர் அஜீத்துக்கு என் நன்றிகள்.. நிறைய பிரச்சனைகளில் கழுவின மீனில்நழுவின மீனாக செல்லாமல் போல்டாக கருத்து சொல்லும் அஜீத் உண்மையிலேயே தைரியசாலிதான்.. உண்மையிலேயே ஹீரோதான்..
=============
இங்கு பெண்களூர் மருத்துவமனையில் ஒரு சிறுவனிடம் அவனின் அப்பா இரண்டு மலர்களை கொடுத்தார்... அந்த சிறுவன் அதனை எடுத்துக்கொண்டு போய் தன் தாய் தலையில் வைத்து அழகு பார்த்தான்.... என்ன அந்த பெண்மணி பர்தா அணிந்து இருந்தார்.....
======
பிலாசபி பாண்டி..
நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது... உன்னை விரும்பும் உயிர்க்கு உன்னை தவிர வேறு ஒன்றும் தெரியாது...
==========
நான்வெஜ் 18+
வலி, துரோட் இன்பெக்ஷ்ன் எதுவும் இல்லதானே?????
ஜாக்கிசேகர்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
==================
//பிரச்சனைன்னு வந்துட்டா.. வானத்துலயே கதையை முடிச்சிடுவாங்க போல...//
ReplyDeleteஅங்கே இருந்து தான் சொர்க்கமோ நரகமோ பக்கம்... பூமியில இருந்து அனுப்புனா ரொம்ப நேரம் ஆகும்... ஆனால் இது ஏன் சோனியாவுக்கோ ராகுலுக்கோ நடக்க மாட்டேங்குதுன்னு தான் தெரியல...
//இங்கு பெண்களருவில் காற்றும் மழையும் கலந்து அடித்தது.. கூடவே ஐஸ்கட்டிகள் வேறு... வாழ்வில் முதல் முறையாக நான் ஐஸ்கட்டி மழையை பார்க்கின்றேன்....//
நான் பார்த்த ஐஸ்கட்டி மழை அளவுக்கு இது இல்லை... ரொம்ப சின்னதாய் மண்ணை விட சற்றே பெரிதாய் இருந்தது... என்னோட சின்ன வயசுல, கூழாங்கல் அளவுக்கெல்லாம் நான் ஐஸ்கட்டி பார்த்திருக்கிறேன்...
Is there any place called penkalur????
ReplyDelete/////அந்த விடுமுறையின் காரணம் ஐய்க்கிய ராச்சியத்தில் பெரும்பாலான அலுவலகங்கள் விடுமுறையில் இருந்தன./////அடுத்து,கொல்லப்பட்டது ஒசாமா பின் லாடனா என்பதிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன.கொல்லப்பட்ட உடலை முழுமையாக(உண்மையாக)காட்டவில்லை.ஏ.டி.என் பரிசோதனையின் பின் கடலில் வீசி விட்டதாக சொல்கிறார்கள்!புதைத்தால் "நினைவிடம்" ஆக்கி விடுவார்களாம்!இதே போல் முன்னரும் ஒரு "சம்பவம்"நினைவில் வந்து தொலைக்கிறது!!!!!!!!!!
ReplyDeleteஅண்ணே உங்களோட தளத்தில போன மாதம் நீங்க எழுதிய டைம் கருத்துக் கணிப்பு ஓட்டு சம்பந்தமா கொல வெறியோட ஒருத்தரு(அகலிகன்?)என் மேல பாஞ்சாரு.டைம் ராஜபக்ஷே பேர தூக்கினது அவருக்குத் தெரிஞ்சிச்சோ இல்லையோ தெரியல!அவரு(அகலிகன்) நீண்ட காலம் வாழணுமின்னு வாழ்த்துறேன்!!!!!!!!!!!
ReplyDeleteVery Nice
ReplyDeleteகடவுள் நான் இப்பதான் பார்கக்கின்றேன்..தமிழ் மகன் நீங்க இன்னும் வளரனும்..நன்றி கிருஷ்னா.. யோகா நிங்கள் சொல்வதில் உண்மை இருக்கின்றது..
ReplyDelete