என்ன பேசினாலும் என்ன எழுதினாலும் மக்கள் கொடுத்த தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே ஜனநாயகத்தின் மான்பு...நான் பொதுமக்களிடம் பேசிய வரையில் பல பத்திரிக்கை கருத்துகணிப்பு சொன்னவரையில் திமுக கழகம் ஜெயிக்கும் அல்லது இழுபறி என்றார்கள்...இதுதான் எல்லா பத்திரிக்கை தொலைகாட்சியும் சொன்னது.. நானும் சொன்னேன். ஆனால் இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும் தனித்தே ஜெ 168 சீட்டுக்கு மேல் வருவார் என்று சொன்ன ஒரே ஆள் துக்ளக்சோ மட்டுமே... மற்றபடி வேறு யார் கணித்ததும் தோல்வியை சந்தித்து.....
ஒரு படத்தின் வெற்றித்தோல்வியை எப்படி யாராலும் கணிக்க முடியாதோ அது போலதான்..தேர்தல் கருத்து கணிப்புகளும்... காரணம் மாஸ் மீடியம்.... அந்த நேரத்து பட்டணை அழுத்தும் போது ஏற்படும் மன உணர்வு அது...
நானாவது சரியோ தவறோ இவ்வளவு வரும் என்று கணித்தேன்... நான் என்ன ஏசி நில்சன் கருத்துகணிப்பா வைத்து நடத்துகின்றேன்.. எனது பார்வையில் நான் மக்களோடு பழகிய வரையில் எனது கெஸ் இது என்றேன்... அதே போலயாராவது ஒரு கெஸ் சொன்னவர் என்னை கேள்வி கேட்டாலும் பரவாயில்லை... ரிசல்ட் வரை அமைதிகாத்து விட்டு இப்ப என்ன சொல்கின்றீர்கள் என்று சொல்லும் நபர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பாய் வருகின்றது....
காலையில் ரபிபெர்ணான்ட் இல்லாமல் ஜெயாடிவியில் நான்கு ஜோசியக்காரர்கள் அதிமுக வெற்றித்தோல்வியை கணித்துக்கொண்டு இருந்தார்கள்.. காரணம் அவர்களே எதிர்பார்க்காத ஒரு நிலையைத்தான் காலையில் அதிமுக பக்கம் இருந்தது என்பது உண்மை... இதை யாராலும் மறுக்க்க முடியாது....
இந்த பக்கம் நக்கீரன் கோபால் நாங்கள் மக்களிடம் கருத்துகணிப்பு செய்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்... முதல் 20 இடத்தில் இருந்த திமுகாவை 30க்கு அதிமுக முந்திக்கொண்டு போனதும்.. நக்கீரன் கோபால், ரமேஷ் பிரபா ஆளைக்கானோம்..அதன் பிறகு.. சுப வீரபாண்டியன் கலைஞர் டிவியில் பேச, ஜெயா டிவியில் என்டிடிவி விஜய் செய்தியில் பணி புரிந்த மதிவாணன் வந்து தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியை கவனித்தார்.....
காலையில் இருந்து நமக்கு அழைப்பு இல்லை என்று நினைத்த படி ஒரு பேக் போட்டுக்கொண்டு இருந்த போது அம்மா இண்டர்வியூ எடுக்க வேண்டும் என்று சொன்னதும் அவசர அவசரமாக கிளம்பி வந்தது போலவே இண்டர்வியூ எடுக்கும் போது ரபிபெர்னாட் இருந்தார்...
பஸ்சிலோ அல்லது பேஸ்புக்கிலோ டுவிட்டரிலோ நான் திமுகாவை கண்ணை மூடிகொண்டு ஆதரித்தவன் இல்லை...எந்த இடத்திலும் நான் திமுகவுக்கு வக்காலத்து அப்பட்டமாக வாங்கியது இல்லை....அரசின் பல பிரச்சனைகள் எனது தளத்தில் கண்டித்து எழுதி இருக்கின்றேன்.. தப்பு யார் செய்தாலும் தப்புதான்.. ஆனால் மக்கள் நலத்திட்டங்கள் அதிக அளவில் முக்கியமாக கிராம புறங்களில் 100 நாள் வேலைதிட்டம்.,குடிசை வீடுகள் கான்கீரிட் வீடுகளானது,குடும்பத்தில் முதல் டிகிரி படிப்பவனுக்கான தொகையை அரசே ஏற்றுக்கொள்ளுதல், என்று பல திட்டங்கள் மக்களை சென்று அடைந்த காரணத்தால், திமுக வரும் என்று அனைவரும் கணித்தனர்.. அதே போல்தான் நானும் கணித்தேன்......
எனக்கு திருடா திருடியில் எனக்கு திருடனை பிடிக்கும் அவ்வளவே..
அடுத்த முதல்வர் யார் என்று ஒரு பதிவு எழுதினேன் அந்த பதிவில் நான் கணித்தவற்றை சொல்லிவிட்டு நான் ஒன்றை சென்னேன்.....அது கீழே....
=======================
70 சதத்துக்கு மேல் வாக்குபதிவு நடந்தால் அந்த தேர்தலில் திமுக வெற்றி பிரகாசமாக இருக்கும் என்று சொல்லி வருகின்றார்கள்.. பட் இந்த இடத்தில் ஒரு சின்ன நெருடல்.... ஸ்பெக்ட்ரம் மட்டும் இல்லையென்றால் ஏற்றுக்கொள்ளலாம்.. பட் இந்த எலெக்ஷன்... அப்படியே தலைக்கிழாக மாறவும் வாய்ப்பும் இருக்கின்றது.. அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்... வளர்ப்பு மகன் திருமணத்தால் அதிமுக எதிர்ப்பு அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விஷயம் கிராமபுறமக்களிடத்தில் இல்லை அதனால் திமுக வாஷ் அவுட் ஆக வாய்ப்பு இல்லை.............
எது எப்படியோ அடுத்த மாதம் இதே நேரத்தில் தமிழக முதல்வர் யார் என்று தெரிந்து விடும்... யார் முதல்வர் பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்..எவ்வளவு அடித்தாலும் மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்ய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றேன்.
==============================================
வளர்ப்புமகன் திருணமத்தின் காரணமாக ஜெவும் தோல்வியை சந்தித்தார்...திமுக வாஷ் அவுட் ஆகாது என்று சொன்னேன்.. அதுதான் நடந்தும் இருக்கின்றது...
இந்த தலைக்கீழ் மாற்றத்துக்கு என்ன காரணம்... இந்த தேர்தலில் புதிய வாக்களார்கள்...
அதாவது எட்டு சதவிகித்துக்கு மேல் முதல் முறை ஒட்டு போடுபவர்கள் எல்லோரும் திமுகவுக்கு எதிர்பாய் குத்தி இருக்கின்றார்கள்.... காரணம்.....
திமுக நாங்கள் அது செய்தோம், இது செய்தோம் என்று சொல்லியது....
எட்டு சதவீகித புது வாக்காள இளைஞர்கள் ஒன்றை சொன்னார்கள்.. அது உன் கடமை... உன் பாக்கெட்டில் இருந்து செலவு செய்யவில்லையே..??? என்று கேள்வி எழுப்பினர்...
இல்லை இது போல எந்த திட்டமும் இதற்கு முந்தைய ஆட்சியில் செய்யவில்லை, அவர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று திமுக கத்தியது....
புது வாக்களார்கள் சொன்னார்கள்... அதுக்குதான் அவுங்களை வீட்டுக்கு அனுப்பி உங்களிடம் ஆட்சியை கொடுத்தோம்..
மிக்க நன்றி.. நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டோம்.... என்று இளைஞர்களிடத்தில் மார்தட்டியது திமுக...
உண்மைதான்...இலை நிறைய நல்ல உணவை வைத்து விட்டு சைடில் கொஞ்சம் எதுவோ வைத்தது போல ஸ்பெக்ட்ரம் ஊழலும் உங்கள் மத்திய அமைச்சர் கைது செய்ததையும் நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் என்றார்கள்....உங்கள் மகள் கனிமொழியையும் சிபிஐ நீதிமன்றம் விசாரிக்கின்றது.... என்று இளைஞர்கள் விளக்கி சொன்னார்கள்...
அவர்களை பொறுத்தவரை திமுகவின் பாரம்பரியமோ எதுவும் அவர்கள் பொருட் படுத்தவில்லை... ஊழல் செய்தாயா? இல்லையா?? ஊழல் செய்து இருக்கின்றாய்.... அப்போது எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை... என்று சொல்விட்டார்கள்..
அதே போல கலைஞர் கொடுத்த இலவச டிவி மூலம் தினமும் ஆளும்கட்சியின் தவறுகளை அவர்கள் சீரியலுடன் இதையும் பொதுமக்கள் பார்த்து வந்து கொண்டு இருக்கின்றார்கள்.. இது கலைஞரே தேடிப்போய் உட்கார்ந்து ஆப்பு...
தேர்தல் கமிஷன் தடுத்தும் பணம் பாய்ந்தாலும் மக்கள் அதனை பொருட்படுத்தவில்லை...
ஜாதிகட்சிக்கு என்று ஓட்டு வங்கி என்று ஏதும் இல்லை என்று அடித்து சொல்லி இருக்கின்றார்கள்..
எம்ஜிஆருக்கு மாஸ்சுக்கு பிறகு அதாவது 13 வருடம் தவிர்த்து ,ஆளும் கட்சி செய்தாலும் செய்யாவிட்டாலும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடபடவேண்டும்...
1996 டூ2001 திமுக ஆட்சியில் நிறைய பாலங்கள் கட்டி, கிராமபுற சாலைகள் அமைத்து எந்த ஊழல் குற்றசாட்டிலும் சிக்காமல் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள்..
வளர்ப்புமகள் திருமணத்தில் அதிமுக வாஷ் அவுட் ஆனாது போல இல்லாமல் திமுக 22 சீட் வாங்கியதுக்கு முக்கிய காரணம் ஊழலை மீறி அவர்கள் செய்த நலத்திட்டங்கள் என்றால் மிகையாகாது...
எம்ஜிஆருக்கு பிறகு செய்தாலும் செய்யாவிட்டாலும் 5 வருடம்தான் டார்கெட்.... இதுதான்தமிழக மக்களின் அடிப்படை மந்திரம்..
ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்....
என்னை பொறுத்தவரை....ஸ்பெக்ட்ரம் கிராமபுறத்தில் மக்களிடத்தில் அவ்வளவு இம்பெக்ட் ஏற்படுத்தாது என்பதே எனது கருத்தாக முதலில் இருந்தது...
ஆனால் அடுத்த முதல்வர் பதிவில் எழுதியது போல சப்போஸ் ஸ்பெக்ட்ரம் ஊழல் மக்களிடம் சென்று சேர்ந்து விட்டால் அப்படியே தலைக்கீழாக மாறும் என்று சொல்லி இருந்தேன் அதை இந்த தேர்தல் உணர்த்திவிட்டது..
தமிழக கம்யுனிஸ்ட் மாநில செயலர் தா பாண்டியனிடம் ஒரு கேள்வி கேட்கபட்டது...
சார்.. ஸ்பெக்ட்ரம் ஊழல் கிராமத்து மக்களிடம் என்னவென்று தெரியாதே....அவர்களுக்கு எப்படி புரியும் என்று நிருபர்கள் கேட்டகேள்விக்கு ...
கிராம புற மக்களுக்கு ரொம்ப விவரமாய் தெரியாவிட்டாலும், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கோடிக்கணக்கில் பணம் அடிக்கபட்டு இருக்கின்றது....நமது மாநிலத்து மத்திய அமைச்சர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகாரில் உள்ள ஜெயிலில் களிதின்று கொண்டு இருக்கின்றார் என்று நன்கு கிராமபுறமக்களுக்கு தெரியும் என்று சொன்னார்....
அதனால்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த தேர்தல் முடிவை தலைகீழாக மாற்றும் ஒரு காரணியாக இருக்கும் என்று சொன்னேன்....
மின்வெட்டையும், விலைவாசிஉய்யர்வையும் மக்கள் சுத்தமாக சகித்துக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட் வேண்டும்.. கலைஞர் குடும்பத்து செல்வாக்கினால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்பதை நான் ஏற்றக்கொள்ள முடியாது....
காரணம்.... அவர்கள் பல வருடங்களாக அரசியலில் இருக்கின்றார்கள்...பல தொழில்களில் இருக்கின்றார்கள்...புதிதாய் அவரின் பேரன்கள் சினிமா தொழிலில் கால் ஊன்றியது வேண்டுமானால் எல்லோருக்கும் குடும்ப ஆதிக்கம் என்று தெரிந்தாலும்... அது பொதுமக்களை பாதிக்கும் காரணியாக சொல்ல முடியாது என்பதே என் எண்ணம்....
காமராஜர் அவர்கள் முதல்வர் பதவி ஏற்றதும் அவரது குடும்பத்தினர் ஒருவரை கூட தன்னோடு வைத்துக்கொள்ளவில்லை.. பத்து பைசா கூட தனக்கு என்று சொத்து சேர்த்துக்கொள்ளவில்லை.. அப்படிபட்டவருக்கே கிரிஸ் தடவி வீட்டுக்கு அனுப்பியவர்கள் நம்மவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட்டக்கூடாது....
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று மிகச்சரியாக கணித்த ஸ்டாப் வாட்ச் அதாவது கவுண்ட் டவுன் ஒன்றரை வருடத்துக்கு முன் ஆன் செய்தஒரே இணையயதளம் சவுக்கு மட்டுமே..நேற்று 13ம்தேதி அந்த தளத்தில் போய் பார்த்த போது ஜீரோ என்று காட்டிக்கொண்டு இருந்தது....இதே கலைஞர் எதிர்ப்பு போல ஜெ தவறுகளையும் அந்த தளம் செய்யுமா? அல்லது பொதுவாய் ஆளும் கட்சி தவறுகளைசுட்டிக்காட்டுமா? என்பது போக போக தெரியும்....
ஆனால் பல தவறுகளை மிகத்துணிச்சலாக சவுக்கு தளத்தினர் அடித்து சொன்னார்கள்... திமுக ஆட்சி வீட்டுக்கு கண்டிப்பாக போகின்றது என்று.....
பார்ப்போம்...இனி அவர்கள் நிலைப்பாடு என்ன என்று??
மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் சொல்லிராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து விட்டார்...
நேற்று மக்களுக்கு அளித்த செய்தியில் ஜெ மிகவும் தன்மையாக பேசினார்...நல்லது...
ஆனால் பழைய குருடி கதவை திருடி என்பது போல் புது தலைமை செயலகம் போகாமல் பழைய தலைமை செயலகத்தில் தான் பணியாற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார்..
இவர்தான் இடம் பத்தவில்லை என்று குயின்மேரிஸ் கல்லூரியில் கட்ட டிக் அடித்தார்..இப்போது புதிது கட்டியாவிட்டது.. கலைஞர் கட்டினார் என்பதாலும் அது பாண்டிச்சேரி போலிஸ் தொப்பி போல் இருக்கின்றது என்று நக்கல்விட்டவர் அவர்....
அதனால் அங்கு போக போவதில்லை.. நாளையே கிண்டி மேம்பாலம் பாம்பு போல் வடிவில் இருப்பதால் நாக தோஷம் இருக்கின்றது என்று எதாவது ஜோசியக்காரன் சொன்னால் பாலம் இடிக்கவும் அல்லது அந்த பாலத்தின் மீது பயணிக்காமல் ஹெலிகாப்டர் மூலம் அந்த இடத்தை கடக்கவும்....நமது புது முதல்வருக்கு தில் இருக்கின்றது ...
பார்ப்போம்.. எது எப்படி இருந்தாலும் வைகோவை கழட்டி விட்டு எதை பற்றியும் கவலைபடாமல் தில்லுடன் ஜெயித்த ஜெவுக்கும் கூட்டனி வைத்தவுடன் பிரதான தமிழக எதிர்கட்சி தலைவராகவும் உட்காரப்போகும் விஜயகாந்துக்கும் வாழ்த்துகள்....
ஈழ விஷயத்தில் ரெட்டை வேஷம் போட்ட காங்கிரசுக்கு மக்கள் கல்தா கொடுத்து இருக்கின்றார்கள்..திமுக 63+30+10 பிளஸ் என்று ஒதுக்கியதுக்கு பதில் அல்லது நாங்கள் போகின்றோம் என்று காங்கிரஸ் ஷோ காட்டியதும் காங்கிரசை வெளியே அனுப்பி இருந்தாலே திமுக பிரதானஎதிர்கட்சியாக உட்கர்ந்து இருக்கும்.. இப்போது பேசி பிரயோஜனம் இல்லை...
திமுக வரும் என்றேன் வரவில்லை...அதிமுக வந்து விட்டது வாழ்த்துகள்..
கவிழ்ந்து விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லி வாதிடும் ரகம் நான் இல்லை...நேற்று காலை பதினோரு மணிக்கு என் மீசையில் மண் ஒட்டியது உண்மை ஆனால் அதை உடனே தட்டிவிட்டேன்...மீசை முக்கியம் அல்லவா??
பழைய தவறுகள் இல்லாமல் ஆட்சி செய்தால் ஜெவாழ்க என்று சொல்ல எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்பதை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு தெரிவித்துகொள்கின்றேன்...
நாளைக்கு நைட்டு அதாவது பதவி ஏற்ப்புக்கு முன்பே கண்ணகி சிலையை லாரி விட்டு இடிக்க டிரைவரையும், லாரியையும் தேடிக்கொண்டு இருக்கின்றார்களாம்....கண்ணகிக்கு அஸ்தியில் ஜுரம் வந்து பதட்டத்தோடு காமராஜர் சாலையில் பயணக்கும் அனைத்து லாரிகளையும் பயத்தோடு பார்த்து விருகின்றாளாம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
=====================
//கவிழ்ந்து விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லி வாதிடும் ரகம் நான் இல்லை...நேற்று காலை பதினோரு மணிக்கு என் மீசையில் மண் ஒட்டியது உண்மை ஆனால் அதை உடனே தட்டிவிட்டேன்...மீசை முக்கியம் அல்லவா??//
ReplyDeleteசான்சே இல்லைங்க !......காமெடியில பின்றீங்க!.....
நல்லா அலசி ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க...ஆனாலும் திமுக தோல்வியை நீங்க ஆசைப்படவில்லை என்பது கொஞ்சம் சரியா புரியலை...ஆனாலும் ஜெ வந்தது நல்ல விஷயமா தெரியலை, ஆனா திமுக போனது நல்ல விஷயம்..அதனால பாப்போம், இனிமேல் என்ன நடக்குதுன்னு :)
ReplyDeleteSuresh
But உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
ReplyDeleteஓடி ஒளியாமல், சப்பைகட்டு கட்டாமல் தில்லாக இப்படி ஒரு பதிவு எழுதினதுக்கு Hats of you.
ஆனால் குடும்பத்து செல்வாக்கினால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்பதை நீங்கள் ஏற்றக்கொள்ளாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும்தான் காரணம்.
சபாஷ் .அருமையான பதிவு .......!
ReplyDeleteThillana Pathivu.... Hats off to to Sir!!!!
ReplyDeleteஜாக்கி புதுசா சொல்ல ஒண்ணுமில்லை, நீ போன மாசம் போட்ட இடுகையில் நானிட்ட பின்னூட்டத்தை இன்னொரு முறை படிச்சுப் பாரு
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
உங்க பதிவு open minded.பார்க்கலாம் அம்மா இனி என்ன செய்யப்போகிறார்.
ReplyDeletehttp://zenguna.blogspot.com
#எனது பார்வையில் நான் மக்களோடு பழகிய வரையில் எனது கெஸ் இது என்றேன்... அதே போலயாராவது ஒரு கெஸ் சொன்னவர் என்னை கேள்வி கேட்டாலும் பரவாயில்லை... ரிசல்ட் வரை அமைதிகாத்து விட்டு இப்ப என்ன சொல்கின்றீர்கள் என்று சொல்லும் நபர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பாய் வருகின்றது....#
ReplyDeleteநீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஒரு கொலை செய்தவன்தான் இன்னொரு கொலைகாரனைப் பற்றி பேசணும். லஞ்சம் வாங்கியவன்தான் இன்னொரு லஞ்சம் வாங்கியவனைப் பற்றி பேசணும் என சொல்லுவீர்கள் போல இருக்கு. நீங்கள் எத்தனை படம் இயக்கி இருக்கிறீர்கள் பட விமர்சனம் செய்ய?
நான்கு குறும்படங்கள் இயக்கி இருக்கின்றேன்...3 திரைபடங்களில் வேலை செய்து இருக்கின்றேன்...// ஆன்ந் சதிஷ்...
ReplyDeleteகேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை கேட்க ஒரு முறை இருக்கின்றது...அல்லவா? அனானியாக கேள்வி கேட்கவர்களுக்கும் முகத்தை காட்டாதவர்களுக்கு சொன்ன பதில் அது... ஓகே வா,,
படித்ததில் பிடித்தது....
ReplyDelete@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!
அண்ணே! உங்க நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு. நேற்றே உங்கள் பதிவை எதிர்பார்த்தேன்!. நன்றி
ReplyDeleteகாணாமல் போகப்போகிறவர்கள் பற்றிய அறிவிப்பு
ReplyDeleteகனிமொழி, புதிய தலைமைச்செயலகம், வடிவேலு... இலவச டி.வி, காப்பீட்டுத் திட்டம், மற்றும் பல
என்ன பேசினாலும் என்ன எழுதினாலும் மக்கள் கொடுத்த தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே ஜனநாயகத்தின் மான்பு.
ReplyDeleteமிகவும் சரியானது.
..இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும் தனித்தே ஜெ 168 சீட்டுக்கு மேல் வருவார் என்று சொன்ன ஒரே ஆள் துக்ளக்சோ மட்டுமே... மற்றபடி வேறு யார் கணித்ததும் தோல்வியை சந்தித்து..
சோ என்பவரை பற்றி சில இலங்கை சீனியர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன்.அவர் புலிகளை பற்றி பல வருடங்களுக்கு முன்பே எச்சரித்தது தான் பின்பு உண்மையில் நடந்தது.
நல்ல அலசல். கடந்த ஜெ ஆட்சிகளில் அவர் செய்த தவறு / ஊழல் பற்றி யாராவது விளக்கி கூற முடியுமா? எதனால் மக்கள் ஜெ வை இரண்டு முறை வீட்டிற்கு அனுப்பினார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.
ReplyDelete//காலையில் இருந்து நமக்கு அழைப்பு இல்லை என்று நினைத்த படி ஒரு பேக் போட்டுக்கொண்டு இருந்த போது அம்மா இண்டர்வியூ எடுக்க வேண்டும் என்று சொன்னதும் அவசர அவசரமாக கிளம்பி வந்தது போலவே இண்டர்வியூ எடுக்கும் போது ரபிபெர்னாட் இருந்தார்...//
ReplyDeleteவெள்ளிக்கிழம ஜெயா டிவியில் ரபி பெர்ணார்டின் பேட்டி நீங்க ஒளிப்பதிவு செய்ததா?
பேட்டி என்னவோ சொல்லி வச்சு கேட்ட கேள்விகள் போலிருந்தது. ஜெ. கொஞ்சம் பொறுமையா பேசியது மாதிரி தோன்றியது.
ஜெ வின் ஜோசிய ஆர்வத்தையும் அதன் விளைவுகளையும் நன்றாகவே குறிப்பிட்டு இருந்தீர்கள் . ஆனால் அதே ஜோசியத்தில் அவர் கடந்த கால ஆட்சிக்கு நெருப்பும் (கும்பகோணம் பள்ளி மற்றும் திருச்சி மண்டபம் பிராமிணர்கள் தீ விபத்து ) நீரும் ( சுனாமி மற்றும் மகாமகம் ) எதிரியாக இருந்தது . இந்த ஆட்சியில் நீரும் நெருப்பும் நண்பனாக இருக்கட்டும் .
ReplyDelete//அப்படிபட்டவருக்கே கிரிஸ் தடவி வீட்டுக்கு அனுப்பியவர்கள் நம்மவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட்டக்கூடாது..../// கறைபடியாத ஒரு முதலமைச்சரை "கிறீஸ் தடவி" இந்த சொற்களை உபயோகிக்காமல் இருந்திருக்கலாம்...
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=apkSkb6Ak3I
ReplyDeleteஅவசரத்தில் அள்ளி தெளித்த கோலமாக மக்கள் கொஞ்சம் அதிக தண்டனையை திமுக விற்கு அளித்து விட்டார்கள்!!நல்லாட்சி வழங்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு அம்மா விற்கு உள்ளது!! ஆனால் பழிவாங்குவதுதான் முதல் வேலை என்றால் அது திமுக விற்கு தான் சாதகம் என்பது மறுக்க முடியாதது!!
ReplyDeleteHi
ReplyDeleteromba arumaiyana padhivu. niraiya yosikka vaithu ellvatrukum 'aamaam' endru thalai aata vaithadhu.
ReplyDeleteidhae pol iniyum arasiyaluku adhiga idam odhukungal sir.
இன்றைக்கு யோசனை செய்கிறார் மத்திய அரசில் இருந்து விலக. அன்றைக்க செய்திருந்தால் நன்றாக இருந்திறிக்கும். குடும்பமே சேர்ந்து அடித்த கும்மாலம் இப்போழுது வெளி வருகிறது. மூன்றாவது அணி என்று ஒன்று பலமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திறிக்கும்.
ReplyDeleteஸ்பெக்ட்ரம் ஊழல் ஒன்றால் தான் தி.மு.க. கவிழ்ந்தது என்பது போல எழுதியுள்ளீர்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தி.மு.க.ஆட்சி ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியவில்லை என்றாலும், மோசமில்லை என்று சொல்லும்படியாகவாவது இருந்ததா என்றால் அது கூட இல்லை, மகா கேவலமாக இருந்தது. இலவசம் என்ற குறுக்கு வழியைப் பின்பற்றி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப் படும் பணம் மற்றும் குடியைக் கெடுக்கும் குடி என்னும் சாராய விற்பனையால் வரும் பணத்தை அதற்காக பயன் படுத்தி, மக்கள் வாழ்வையும், தமிழக எதிர்காலத்தையும் அதல பாதாளத்திற்குத் தள்ளும் வேலையை சுய லாபத்திற்காக [வழக்கம் போலவே] செய்தனர். மணல் கொள்ளை, விவசாய நிலங்களை மிரட்டி வாங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றது, கேபிள், திரையரங்கம், படத் தயாரிப்பு, பட விநியோகம், ரியல் எஸ்டேட் என்று எல்லா துறைகளையும் இவர்களது குடும்பத்தினரே கபளீகாரம் செய்ய முனைந்தது ரவுடிகளைக் கட்டவிழ்த்து விட்டு மக்களுக்கு இன்னல்கள் விளைவித்தது என்று இவர்கள் வீழ்ந்தற்க்கான காரணங்களைச் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நாய்க்கு எழும்புத் துண்டு போல போல காசை வீச்சினால் ஓட்டுப் போடும் முட்டாள்களாக மக்களை இவர்கள் பார்த்தனர், மக்கள் அதைத் தவறு என்று நிரூபித்துள்ளனர். அம்மா ஆட்சி சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கா விட்டாலும் இவ்வளவு அயோக்கியத் தனம் நிறைந்ததாக இருக்காது என்று சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம்.
ReplyDelete