possessive- அதீதபற்று .. சிறுகதைஎனக்கு பிடித்த எல்லமே என் காதலிக்கும் பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை...அவள் என் அடிமையும் அல்ல.. அவள் ரத்தமும் சதையுமான மனுஷி... ஆனால் சில நேரங்களில் வாழ்க்கையில் ஏட்டு சொரக்காய்கள் கறிக்கு உதவுவது இல்லை....

எனக்கு சிக்கன் பிரைட் ரைஸ் பிடிக்கும்
அவளுக்கு தயிர்சாதம்எனக்கு கமல்,ஜாக்கி பிடிக்கும்
அவளுக்கு ரஜினி, அஜய்தேவ்கான் பிடிக்கும்..

எனக்கு பெட்ரோல் வாசனை ரசித்து சிலாகிக்கும் அளவுக்கு பிடிக்காது...
அவளுக்கு பெட்ரோல் வாசனை என்றால் அவ்வளவு பிடிக்கும்..

இப்படி காதலன் காதலிக்கு இடையே இருக்கும் ரசனைகள் வேறானவையாக இருந்தாலும் கொண்டாடும் போது இரண்டு பேருமே ஒருவருக்கு ஒருவர்  விட்டுக்கொடுப்பதில்லை..

ஒரு டீசர்ட் பெண்ணின் இறக்க உடைபற்றி நான்  என் காதலியிடம் சிலாகித்து கமென்ட் அடித்து இருக்கின்றேன்...

மிக அழகாய் கார்பரேட் தனமாக உடை அணிந்து ஸ்டைலாக கண்ணாடி அணிந்தவனை, அவள் ரசித்து என்னித்தில் சொல்லி இருக்கின்றாள்... 

ஆனால் எல்லாக்காதல்களிலும் பொசசிவ் அதிகம் இருக்கும்.. மிக முக்கியமாக காதலின் ஆரம்பகாலங்களில் அது நிறையவே இருக்கும்.....காரணம் அதீத பயம், மற்றும் நம்பிக்கைஇன்மை முதல் காரணம்...

ஒரு செக்யூரிட்டி பயம்... இவளுக்கு நம்மை பிடிக்காமல் போய் விடுமோ?இவனுக்கு நம்மை பிடிக்காமல் போய் விடுமோ? என்ற பயமும், என் காதலி மனது முழுதும் நானே இருக்கின்றேன்  என்ற கர்வம் எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவையாய் இருக்கின்றது...என்னை  என் காதலி  தீவிரமாக காதலித்த சமயம்....அப்போது அவள் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள்...எதேச்சையாக ஏதோ பணம் எடுத்து சில்லரை தருகையில் அவளது பர்சில்  பாடகர் உன்னிக்கிருண்னன் போட்டோ இருந்தது.. என் போட்டோ இருக்கும் இடத்தில் உன்னிக்கிருஷ்ணனா? உஷ்னம் தலைக்கேறியது...

எதுக்கு இவன் போட்டோவை பர்சில் வச்சி இருக்கே??

அவரு  வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

அதான்  காதால  கேக்கற இல்லை அப்புறம் என்ன??

எந்த  பாட்டு ரொம்ப பிடிக்கும்???

ஜீன்ஸ் படத்துல வரும் பூவுக்குள் ஒளிந்து இருக்கும் கனிக்கூட்டம் பாட்டு எனக்கு ரொம்ப  பிடிக்கும்...

அதுக்காக பர்ஸ்ல போட்டோவா?...

அபர்னா வீட்ல வாங்கன மேகசீன்ல இந்த போட்டோ இருந்து இருக்கு... எனக்கு  உன்னி வாய்ஸன்னா ரொம்ப பிடிக்கும்னு அவதான் கட் பண்ணிக்கிட்டு வந்து கொடுத்தா...


எனக்கு கூடத்தான் ஜாக்கிசானை ரொம்ப பிடிக்கும் அதுக்காக அவன் போட்டோவை  பர்ஸ்ல வச்சிகிட்டு சுத்திகிட்டு இருக்கேனா?? இவ்வளவு ஏன் கமலை கூடத்தான் பிடிக்கும் அதுக்காக அவன் போட்டோ வச்சிகிட்டு இருக்கேனா??

ஐயோ, இப்ப இந்த போட்டோவை  வச்சி இருக்கறதுல இப்ப என்ன பிரச்சனை??? நானே  உன்னை அஞ்சு நாளா பார்க்க முடியலைன்னு ஆசையா வந்தா? இதை பத்தி பேசி ஏன்  என்னோட  மூட் அவுட் பண்ணறே....???

நான்  உன் மூட் அவுட் பண்ணறனா??? நீதான் கண்டவன் போட்டோவை எல்லாம் பர்ஸ்ல வச்சி என்னை மூட் அவுட் பண்ணறே??உன்னிகிருஷ்ணன் வாய்ஸ் மட்டும்தான் பிடிக்கும்... ஆனா உன்னை எனக்கு எல்லா விஷயத்துலையும் பிடிக்கும்...  அது ஏன் உனக்கு புரியவே மாட்டுது?? இப்ப நீ எடுத்த போட்டோவை பாராட்டலை அது போலத்தான்....


அப்ப வாய்ஸ்  நல்லா இருந்தா போடோ வச்சிக்குவே?? அப்படித்தானே??..எங்க மைக்கேல் ஜாக்சன் போட்டோ??? எங்க எம் எஸ் சுப்புலட்சுமி போட்டோ???


 இது விதன்டாவாதம்...அபர்னா ஆசையா கொடுத்தான்னு வச்சேன்.. இரண்டு நாள் கூட இருக்காது...இதுக்கு போய் ஏன் உன் மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்குது???
அப்பா... சாமி.... இப்ப நான்  என்ன செய்யட்டும்....???

அந்த போட்டோவை கிழிச்சி போடு....

நான் சொன்ன மூன்றாவது  நொடியில் நாலாய், எட்டாய் உன்னிகிருஷ்னன் சிரித்தபடி கிழிந்து என் காதலி பர்சை விட்டு தரைக்கு போனார்....

அந்த நொடியில் இருந்து அப்பாவி பாடகர் உன்னிகிருஷ்னனை எனக்கு பிடிக்காமல் போயிற்று...

சில வருடங்கள் கழித்து......

மெரினாவில் நானும் என் காதலியும் சந்தித்த போது..

இப்ப துள்ளுவதோ  இளைமைன்னு ஒரு படத்து பாட்டு ரிலிஸ் ஆகி இருக்கு.... அதில் தீண்ட தீண்டன்னு ஒரு சாங்... அதுல மேல் பீமேல் வாய்ஸ் ரெண்டுமே நல்லா இருந்தாலும், மேல் வாய்ஸ் சான்சே இல்லை....காமத்துல விழுந்து அனுபவிச்சவன் மாதிரி பாடற ஒரு பீலிங்... அது யார் வாய்ஸ்..... உனக்கு தெரியுமா?????


நக்கலாக என் காதலி சொன்னாள்...போட்டோவை சுக்கு சுக்கா கிழிச்சி போட சொன்ன பாடகர் பாடியது...

 உண்மையில் நான் சங்கீதத்தில் ஞானசூன்யம் என்பதால் அந்த மொக்கையை என் காதலியிடத்தில் இருந்து  வாங்கி கொண்டேன்..
நான் பேச்சை மாற்றினேன்...இன்னும் பாடகர் உன்னி மீது  கொஞ்சம் கோபம் மிச்சம் இருந்தது...

ஆனால் வாழ்வில் சில தருணங்களில் சில காமெடிக்கள் நடந்துவிடுகின்றன...

திருமணத்துக்கு பிறகு என் மனைவிக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கையில் உன்னிகிருஷ்னன் கலெக்ஷன் சிடியை பரிசு பொருளில் சேர்த்து கொடுத்தேன்...பிடித்ததை கொடுப்பதுதானே பரிசு... என் மனைவி மகிழ்ந்தாள்...நிறைய பாடல்களை தனது கைபேசி சேமிப்பு கிடங்கில் சேமித்துக்கொண்டாள்..

நான் என்  நண்பர்கள் வீட்டில் இருக்கும் போது  டிவியில்  நறுமுகையே போல உன்னி பாடிய பாடல் ஒளிபரப்பினால்...  என் மனைவிக்கு வாட்ச் ஜெயா மியூசிக், வாட்ச் சன்மியூசிக், வாட்ச் இசையருவி என்று மொட்டையாக வேறு எதையும் டைப் செய்யாமல் எஸ்எம் எஸ் அனுப்புவேன்..

தேங்ஸ் டியர் என்று பதில் வரும்...

ஆனால் திருமணத்துக்கு முன் இருந்தது போல் இப்போது நாங்கள் இருவருமே இல்லை சில நாட்களுக்கு முன்......
ஹேய் இங்க வாயேன்... விஜய் டிவியில ஏர்டெல் சூப்பர் சிங்கர் புரோகிராம்ல உன்னோட பேவரிட் பாடகர்தான் சீப் ஜட்ஜ் வந்து பாரேன்....

சமையல் அறையில்  இருந்து என் மனைவி தாளிக்கும் வாசனையோடு குரல்கொடுத்தாள்...
கத்திரியை வாணலியில போட்டு வதக்கிண்டு இருக்கேன்... கொஞ்சம் விட்டா கருகிடும்... 

என்  சார்பா நீங்களே பாருங்க.... 

தொலைகாட்சியில் பாடகர் உன்னிகிருஷ்ணன் குளோசப்பில் மைக்குக்கும் உதட்டுக்கும் மில்லி மீட்டர் கேப்  கொடுத்துக்கொண்டு...
பவித்ரா படத்தில் ஏஆர் மியூசிக்கில் வரும்...

உயிரும் நீயே....
உடலும் நீயே
உறவும் நீயே.. தாயே....
தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே.......என்று உண்ர்ச்சிவயப்பட்டு அந்த பாடலை பாடிக்கொண்டு இருந்தார்....

நான் சேனல் மாற்றாமல் உன்னியின் நிகழ்ச்சியை விரும்பி பார்க்க ஆரம்பித்தேன்...============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

 குறிப்பு..

ஒரு தெலுங்கு காதல் படத்துக்கு விமர்சனம் எழுதும் போது எதேச்சையாக அந்த நிகழ்வுகள் சிறுகதை போன்ற தோற்றத்தை கொடுக்க, அதை அப்படியே கொஞ்சம் நாகாசு செய்து  அதனை சிறுகதை என்று சொல்லிவிட்டேன்...எனக்கு தெரியும் சிறுகதை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று..... 

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
 


======================

4 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner