ரஜினியின் உடல்நிலை....??


உலக அளவிலும் தமிழக அளவிலும் ஒரு மனிதனின் உடல்நிலையை  மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள்.. அந்த மனிதர் ரஜினி....

தமிழ்ரசிகனுக்கு ஸ்டைலை அறிமுகபடுத்தியவர்...ரஜினியின் பாடிலாங்வேஜை தமிழ்சினிமா ரசிகன்  வாழ்வில் அந்த பாதிப்பு இல்லாமல் கடந்து வருவது அபூர்வமே...


மே 13ம்தேதி எலக்ஷன் ரிசல்ட் வந்து கொண்டு இருந்த போதுதான்.. அந்த வதந்தி தமிழகம் முழுவதும் தீயாய் பரவியது...தேர்தல் செய்திக்காக தள்ளி வைத்து இருக்கின்றார்கள் என்று சொன்னார்கள்..

ஜுனியர்விகடன் ஒரு படி மேலே போய் திமுக தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல்தான் இந்த வதந்தியை பரப்பி விட்டது என்று மிக அழகாய் தேன் தடவி சொன்னார்கள்..

அதன் பின் ரஜினி அமெரிக்காவுக்கு மேல் சிகிச்சைக்கு செல்ல விசா அப்ளை செய்து கிடைத்து விட்டதாக சொன்னார்கள்.. அதுதான் கடைசி கட்ட  செய்தி....

அதன் பிறகு ரஜினிக்கு லங் கேன்சர் இருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்தது.... இப்போது ரஜினி பற்றி வரும் பல செய்திகள் வதந்தியாகவே பரவுகின்றன....

ரஜினி குடும்பத்தினர் தரப்பில் இதுவரை புட்பாய்சன்   அதனால் ரஜினிக்கு சிகிச்சை என்று  சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இசபெல்லா மருத்தவமணையில்  இருந்து டிஸ்சார்ஜ் ஆகி  சில நாட்கள் ஓய்வில் இருந்துவிட்டு திரும்ப ராமச்சந்திராவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்..

எனது நண்பியின் அப்பாவுக்கு முந்தநாள் மைல்டு அட்டாக்.. ராமச்சந்திராவில்தான்  ஐசியூவில் சேர்த்து இருக்கின்றார்கள்.. ரஜினியும் அங்கே இருப்பதால் பாதுகாப்பு எற்பாடுகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் ஐசியூ பக்கமே போக முடியவில்லை , அவளது பாட்டி மட்டுமே அருகில் இருப்பதாக சொன்னாள்..

ராமச்சந்திராவில் ஐசியுவில் அப்பாவுக்கு நான்காவது பெட்டில் ரஜினி இருப்பதாகவும் அவள் சொன்னபோது நம்பும் படி இல்லை....ஆனால் ரஜினி ரசிகர்கள் ரஜினி அப்பல்லோவிலேயே சேர்த்து இருக்கலாம்...ராமச்சந்திராவில் எதற்கு  சேர்த்தார்கள் என்று கேள்விகள் கேட்கின்றார்கள்..  காரணம் ராமச்சந்திரா மருத்துவமனை ராசிதான்..

இருப்பினும் ரஜினியை பற்றிய வதந்திஓய்வதாக இல்லை.. இன்று அளவுக்கு அதிகமாகவே பரப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்..அதனால்தான் இந்த தகவல் பதிவு.....ரஜினி நலமாக இருக்கின்றார்...வதந்திகளை நம்பவேண்டாம்..

இன்று சன் செய்தியில் திருமதி லதாரஜினிகாந் ரஜினி சாப்பிட்ட மெனுக்களை சொல்லி நலமாக இருப்பதாக சொன்னாலும் முகத்தில் தெளிவு இல்லை....

தொடர்ந்து குடும்பத்தலைவனை பற்றி கஷ்டமான  வதந்திகளை கேட்டு கேட்டு சலிப்பாக போய் இருக்கும்...


இருப்பினும் ரஜினி உடல்நிலை முன்னேற்றம் அடைந்து திரும்பவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள பரம்பொருளை வேண்டிக்கொள்வோம்...

ரஜினி என்றால் முள்ளும் மலரும் படத்தில் வரும் அந்த டயலாக் எனக்கு நிச்சயம் நினைவுக்கு வரும்...

காளி ரொம்ப கெட்ட பய சார்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...===================

6 comments:

 1. டி வி யில் ரஜினியை நேரலையில் காட்டி விட்டால் இந்த வதந்திகள், தவறான கருத்துக்கள், ரசிகர்களின் கவலை எல்லாம் இருக்காது

  ReplyDelete
 2. உண்மைதான் ராம்ஜி யாஹு, உடல்நிலை சரியில்லாத போது அவர்கள் மீடியாவில் வருவதை அவர் விரும்பமாட்டார்... அதனால்தான் ஸ்ரீவித்யா மருத்துவமனையில் இருக்கும் போது கமலை தவிர யாரையும் அவர் சந்திக்கவில்லை.. காரணம் அந்த பிம்பம் உடைந்து விடக்கூடாது என்பதே.... அதனால்தான் என் நண்பியின் அப்பாவுக்கு நாலாவது பெட் என்ற போது நம்பவில்லை.. ஐசி யூனிட்டில் தனி அறையில்தான் வைத்து இருப்பார்கள்... அவர்களிடம் இருக்கும் பணத்துக்கு தனி அறையில் தான் இருப்பார்கள்..... அவர்களுக்கு பிரைவசி முக்கியம்...காரணம் அவர் நடிகன்... அவர்களுக்கு முகமும் பர்சனாலிட்டியும் முக்கியம் அதனால்தான் பேட்டி அவரை காண்பிக்காமல் இருக்கலாம்...

  ReplyDelete
 3. காளி ரொம்ப கெட்ட பய சார்..

  oru kai ponaalum pozhaichippan sir intha kali

  let us pray for his speedy recovery (whatsoever good or bad he is)

  ReplyDelete
 4. முரட்டுகாளை, கழுகு சூட்டிங்-காக குற்றாலத்தில் தங்கியிருந்த போது அவரை சந்தித்து கைகுலுக்கி இருக்கிறேன். அப்போ நான் +2 படித்த காலம். தர்மயுத்தம் பட ஸ்டில்-ஐ வரைந்து ஒன்றை அவரிடம் கொடுத்து மற்றதில் கையெழுத்து வாங்கினேன். காலப்போக்கில் அந்த படங்கள் எல்லாம் மறைந்து விட்டன. கூடியிருந்த ரசிகர்களுக்காக கண்ணாடியை கழற்றி சுழற்றி ஸ்டைலாக மாட்டினார்.

  ReplyDelete
 5. அதனால்தான் என் நண்பியின் அப்பாவுக்கு நாலாவது பெட் என்ற போது நம்பவில்லை.. ஐசி யூனிட்டில் தனி அறையில்தான் வைத்து இருப்பார்கள்... அவர்களிடம் இருக்கும் பணத்துக்கு தனி அறையில் தான் இருப்பார்கள்..... //

  சென்ற வருடம் என் தந்தை ராமச்சந்திரா ICU வில் ரஜினிக்கு ஏற்பட்டிருக்கிற சுவாசப் பிரச்சினை போன்ற கோளாறுக்காக அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். பக்கத்தில்தான் திருமாவளவனின் தந்தையும் அனுமதிக்கப்பட்டிருந்தார். ராமச்சந்திராவில் ஒரு ICU தான் இருக்கிறது. அதிலும் தனிதனி அறைகள் கிடையாது.

  மேலும் ராமச்சந்திரா ராசி பற்றி என்னவோ சொன்னீர்களே. மருத்துவமனைகள் இடையே வசதிகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால் ராசி என்று ஒன்றும் கிடையாது என்றே கருதுகிறேன். ராமச்சந்திரா சிகிச்சை பலனளிக்காத ஒரு பிரபலம் மூப்பனார் அவர்கள். என் நண்பரின் மாமியார் ஒருவருக்கும் ராமச்சந்திரா சிகிச்சை பலனளிக்கவில்லை. ஆனால் அப்போலோவோடு ஒப்பிடும்போது இந்த விகிதம் குறைவுதான்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner