சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டுபிளஸ்)புதன்04-05-2011

அல்பம்...

இன்னைக்கு கத்திரி ஸ்டார்ட் ஆயிடுச்சி... சென்னையில நிச்சயம் வெயில் கொளுத்தும்.... இப்ப நான் பெண்களுர்... குளு குளுன்னு இருக்கு... சென்னைவெயிலை நினைச்சாலே அஸ்தியில ஜுரம் வருது...
=======
மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல பாகிஸ்தானுக்கு இரண்டு பக்கமும் அடி.... ஒரு பக்கம் தாலிபான்கள் துரோகி என்று சொல்கின்றார்கள்..அதனால்தான் லேடன் இறப்புக்கு பாக் ராணுவம் காரணம் அல்ல என்று ஸ்டேட்மேன்ட் விடுத்து இருக்கின்றார்....ஒரு பக்கம் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு அமெரிக்கா ரிவிட் அடிக்கின்றது... எது எப்படியோ பாகிஸ்தான் வேஷம் கலைந்து போய் விட்டது...
=================

வரும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் பெண்களூருவிலும் உலக படவிழா தொடங்க இருக்கின்றது... இதற்க்காக அரசு 5 கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இருக்கின்றது.... என்சாய் மக்களே.....இங்க பெங்களூர் முடிந்து விட்டு அப்படியே சென்னைக்கு வந்திங்கன்னா அங்கயும் பிலிம் பெஸ்ட்டிவல் அட்டன்ட் பண்ணிடலாம்...

============
எப்படியும் உயிர் தப்பிக்க வாய்ப்பு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.. 5 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில் அருணாச்சல முதல் மந்திரி உடல் கிடைத்து இருக்கின்றது...
========
பைலட் போர்கொடி தூக்கியதால் மக்கள் தவித்து போய் இருக்கின்றார்கள்... கோர்ட் உத்தரவையும் அவர்கள் மதிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்.... செம போல்டாக இருக்காங்க... பார்ப்போம்...
============
மிக்சர்....

ஏலம் போகாத கங்குலி புனே அணிக்காக விளையாடுகின்றார்... அசாருக்கு பிறகு இந்திய அணியை தலைநிமிர வைத்த கேப்டன் என்பதில் ஐயம் இல்லை...
==========
சனியன்புடிச்சவன்கள்... அரசு மற்றும்  நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு ஆல்பாஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது....பாடுபாவிங்க நான் படிக்கும் போது மட்டும் இந்த சட்டம் இருந்து இருந்தா? நான் ஒரு வருஷம் ஒரே வகுப்புல் உட்கார்ந்து இருந்திருக்கமாட்டேன்....
எல்லாம் நம்ம நேரம்...

===========
இந்தவாரசலனபடம்...
மாதவி கண்ணுக்கும், போடோகிராபர் பாடிலாங்வேஜுக்காக கமலையும் இந்த பாட்டில் எனக்கு ரொம்ப பிடிக்கும்...இந்த பாடலில் இருவருக்கும் இருக்கும் அந்த ஊடல் அற்புதம்...மியூசியம் எதிரில் ஒரு ஷாட் வச்சி இருப்பாங்க.. இன்னைக்கு போய் அந்த இடத்தை போய் பாருங்க மயக்கமே வந்துடும்..

===========
மங்களகரமான சினிமா நுவிஸ்....

பிரித்திவிராஜ் திருமணம் நடந்து முடிந்து விட்டது
பருத்தி வீரன்கார்த்திக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சி...
நாளைக்கு ஜுனியர் என்டிஆருக்கு திருமணம்.
புதுகோட்டை சரணவணன் ஹீரோயின் அபர்னாவுக்கு டாக்டர் பையனை நிச்சயம் பண்ணிட்டாங்க....
 ===============

 இந்தவாரகடிதம்...
வணக்கம் சார் ,
                             என் பெயர் மணிகண்டன் சொந்த ஊர் கரூர் மாவட்டம். உங்கள் வெப்சைட் பார்த்தேன் ரசித்தேன் மிக அறுமை  சார்.

தேம்ப எ  பாய்  கள்ளேந்து  ஹோப்  படத்தின் கதை பிடித்துவிட்டது. அதை பார்க்க வேண்டும்  பிலிம் டோவ்ன்லோட்ஸ் வெப்சைட் அனுப்பிவைக்கவேண்டும் இது எனது பணிவான வேண்டுகோள்.     

நன்றி 

மணிகண்டன்
============
நன்றி மணிகண்டன்.. குகூளில் தேடுங்கள் நிச்சயம் கிடைக்கும்

===============
பிலாசபி பாண்டி...
 இந்தியாவுல காதலில் விழுவதை தடுக்க முடியாது.. இந்தியாவில் மட்டும்தான்... காதலில் விழுந்தவர்களுக்கு அம்மாவின் பரிசாக துடப்பகட்ட அடியும்... அப்பாவின் பரிசாக பெல்ட் அடியும் கிடைக்கும்..


==========
நான்வெஜ் 18+

படுக்கையில் மனைவியோடு முயங்கிகிட்டு இருந்தான் ஒருத்தன்.. அவன் நேரம், மேல சுத்திகிட்டு இருந்த பேன் அவன் சூத்து மேலவிழுந்து வைக்க டாக்டர் கிட்டட போய் கட்டு போட்டுகிட்டான்...திடிர்னுகதறி அழ ஆரம்பிச்சான்...டாக்டர் அவனை தேத்தினார்... விடுங்க.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிடுச்சின்னு அவனை தேத்தும் விதமா டாக்டர் சொல்ல, அந்த பழ மொழியை கேட்டதும் இன்னும் கதற ஆரம்பிச்சான்... என்னன்னு டாகடர் கேட்டப்ப??  ஒருஅஞ்சி நிமிஷத்துக்கு முன்ன பேன் விழுந்து இருந்தா? என் மண்டையில் விழுந்து இருக்கும் டாகடர்னு சொன்னான்...மக்கு டாக்டருக்கும் புரியலை....

===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS... 









==============

4 comments:

  1. பதிவு நல்லாருக்கு!பிலாசபி பாண்டி??????????

    ReplyDelete
  2. லேட் லேட்டோ லேட் நல்ல வேலை இன்னைக்கு இத காணோம்

    ReplyDelete
  3. இன்னும் 5 நிமிஷம் முன்னாடி விழுந்திருந்தா பொண்டாட்டி தலைல விழுந்துருக்குமா? ஆர்டர் கரெக்டா :))

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner