Urvashi Theatre Bangalore-தமிழக தியேட்டர் ஓனர்களே கவனியுங்கள்...




ஒரு தியேட்டடரில் படம் பார்த்து விட்டு அந்த  தியேட்டர் பற்றி  எழுத நீங்கள் நேரம் ஒதுக்குவீர்களா? படம் பார்த்தோமா? இல்லையா? அடுத்த வேலையை பார்க்க  போய்விடுவோம் பட்...  பட் இந்த தியேட்டரில் படம் பார்த்து விட்டு அப்படியே போக எனக்கு விருப்பம் இல்லை... 


நான் தொடர்ந்து 20 வருடங்களாக திரைபடங்கள் திரையரங்கில் பார்த்து வருகின்றேன்... என் சொந்த ஊர் கடலூரில் கூட... நல்ல தியேட்டர்கள் இல்லை.. குறிப்பிட்டு சொல்லக்கூடிய தியேட்டர்கள் என்றால்.. வேல்முருகன், கிருஷ்ணாலயா, நியூசினிமா இதுதான்  இப்போது கடலூர்வாசிகளின் எண்டர்டெய்னர்...

ஆனால் இப்போதுதான் இங்கு டிடிஎஸ் செய்து இருக்கின்றார்கள்.. பட் முன்பெல்லாம் அப்படி இல்லை... திரை அழுக்கா இருக்கும்... பட் நாங்கள் அப்போதே சவுண்டுக்கு நான் ரெம்ப முக்கியத்துவம் கொடுப்பேன்...


பாண்டி ரத்னா தியேட்டர் பழைய தியேட்டர் என்றாலும் சவுன்ட் சிஸ்டத்துக்கு அந்த தியேட்டரிடம் மற்ற தியேட்டர்கள் தாயம் வாங்க வேண்டும்...பாண்டி ஆனந்தா தியேட்டராக இருந்தாலும் அப்படியே.. பட் டிடிஎஸ் சவுண்ட் எல்லா தியேட்டருக்கும் வந்த பிறகு படம் பார்பவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது.. என்றால் மிகையில்லை...


டிடிஎஸ் சவுண்ட் து உள்ள காதலின் காரணமாக இன்று வரை எனது மெயில் ஐடியில் டிடிஎஸ் முதலிலும் போடோகிராபி மீது  உள்ள காரணமாக டிடிஎஸ்போட்டோகிராபி என்று எனது மெயில்ல ஐடி வைத்து இருக்கின்றேன்.. அந்த அளவுக்கு திரைப்பட துறையில் அந்த சவுண்ட் மாற்றம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பேன்...


என் வீட்டிலேயே 5.1 ஹோம் தியேட்டர் செட் செய்து இருக்கின்றேன்..,. அப்படித்தான் நான் படங்களை பார்ப்பேன்...ஆனால் இப்போது பல தியேட்டர்களில் வசனம் வரும் சென்டர் ஸ்பீக்கர் சவுன்டை குறைந்து விட்டு ரியர் லெப்ட் ரைட், மற்றும் பிரனட் லெப்ட் ரெட் சவுண்டுகளை அதிகம் வைத்து விடுகின்றார்கள்... அதனால் வசனம் சரியாக புரிவதில்லை.. அதுதான் தியேட்டர் ஆப்பரேட்டர்களின், மேனேஜர்களின் தொழில் நுட்ப அறிவு... அதே போல் சவுண்ட் மிக்சிங் செய்யும் போது அமைதியாக மினி தியேட்டரில் எந்த டிஸ்டபன்சும் இல்லாமல் ஒலி  கேட்டு  சவுண்ட் மிக்சிங் செய்கின்றாகள். ஆனால் தியேட்டா அப்படி  அல்ல பலதரப்பட்ட மனிதர்கள் சங்கமிக்கும் இடம் நிறைய டிஸ்டர்ப்  இருக்கும்  அதை எல்லாம் புரிந்து கொள்வது இல்லை... மிக்சிங் பண்ணும் இடத்தில் நமக்கு கேட்டால் போதும்.. அது பல ஆயிரக்கனக்கான மக்களுக்கு கூட கேட்கும் என்பது ஆறிவீனம்.... பல மணிரத்னபடங்கள் அந்த வகையை சார்ந்தவையே என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்..






நம்ம தமிழ்நாட்டில் தியேட்டர் ஓனர்கள் ஒரு ஸ்டேட்மென்ட் சொல்லுவார்கள்... படம் பார்க்க இப்போது எல்லாம் ஆட்கள் வருவதில்லை... அதனால் நாங்கள் தியேட்டரை கல்யாண மண்டபங்கள்க ஆக்கி கொண்டு இருக்கின்றோம் என்று சொல்வார்கள்... ஆனால்அதில் பாதி உண்மைதான்... தொலைகாட்சி வருகைக்கு பிறகு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்  கூட்டம் குறைந்து விட்டது.....


அனால் படம் பார்க்க வருபவனுக்கான வசதியை உண்மையாக நிர்வாகம் செய்து கொடுக்கின்றதா என்றால் இல்லை... எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் பகுத்தாதமல் கொள்ளை விலைக்கு டிக்கெட் விற்ப்போம்.. வந்து பார்ப்பது அலேன் தலையெழுத்து என்றால் எவன் படம் பார்க்க வர போறான்.. எனக்கு தெரிந்து இன்னும்  கோயம்பேடு ரோகினியில் இன்னும் டிடிஎஸ் சவுண்ட் செய்யவில்லை என்று நினைக்கின்றேன்... அப்பறம்  எப்படி பார்வையாளன் வருவான்...??? 


பல தியேட்டர்களில் டாயலட்டில் சுத்தமின்மை, முன்னாடி உட்கார்ந்து இருப்பவனின் தலை ஏவிஎம் ராஜேஸ்வரியல் இன்னும் தெரிந்துக்கொண்டுதான் இருக்கின்றது... அப்படி ஒரு சீட்   அமைப்பு... இன்னும் ஜோதியில் இவ்வளவு பணம் செலவு செய்து தியேட்டரை ரெடி செய்து விட்டு இன்னும் ஒழக்கு ஸ்கிரினில்  படத்தை ஓட்டிகொண்டு இருக்கின்றார்கள்..  இப்படி எல்லாம் இருந்தால் படம் பார்க்க எவன் வருவான்... பல தியேட்டர்களில் பார்க்கிங் கொள்ளை அதுக்கு மேல........




பாண்டிகாரர்களிடம் இன்னமும் எந்த தியேட்டரில் படம் பார்க்க விருப்பம் என்றால் சவுன்டுக்கா இன்னுமும் ரத்னா தியேட்டரை சொல்லுவார்கள்.. சரி...  சென்னை வாசிகளில் எந்த தியேட்டரில் படம் பார்க்க விருப்பம் என்றால் என்னையும் சேர்த்து சத்தியம் மெயின் ஸ்கிரின் மற்றும் தேவியில் படம் பார்க்க எனக்கு பிடிக்கும் என்றுதான் நான் இன்று வரை சொல்லிவந்தேன்.. பெங்களூர் ஊர்வசி தியேட்டரில் படம் பார்த்த உடன் தமிழகத்தில் உள்ள எல்லா தியேட்டர்களும்  இவர்களிடம் தாயம் வாங்க வேண்டும்... சான்சே இல்லை....சத்தியம் கூடவா சார்?? அமாய்யா.. போய் ஒரு முறை பார்த்து விட்டு சொல்லுங்கள்...


  பெங்களூரில் லால் பார்க் எதிரில் இருக்கும்  சிங்கள் ஸ்கிரின் தியேட்டர்... இது... நான் இந்த  இடத்தை கடக்கும் போது ஒரு பழைய தியேட்டர் என்ற மனநிலையில் கடந்து இருக்கின்றேன்... பிவீ ஆர், ஐனாக்ஸ், கோபலான் சினிமா, போன்றவைதான் நல்ல தியேட்டர் என்ற இமேஜை  அவ்வளவு சத்தியம் தியேட்டரை விட நல்லல தியேட்டர் என்ற இமைஜை கொண்டு வந்து விட்டது.....


காரணம் இந்த  ஊர்வசி தியேட்டர் 3டி பாமெட் தியேட்டர்....2கே பிலிம் புரோஜக்ஷன்... இங்க தான் நான்  தற்போது வெளியான பாஸ்ட் பியூரிஸ் ஐந்தாம் பாகம் பார்த்தேன். கொய்யால சான்சே  இல்லை.. பின்ன்னாடி எக்ஸ்ட்ரா சப் ஊபர் வைத்து இருக்கின்றார்கள்... சீட்டு எல்லாம் நடக்குது,  அதிருது, அற்புதமா சவுண்ட் செட்டப் செய்து இருக்கின்றார்கள்..
ரயிலில் இருந்து கார் வரை நாம் பயணிக்கும் உணர்வை  அதிகம்  அவர்கள் செட் செய்து இருக்கும் சவுண்ட் எபெக்ட் கொடுக்கின்றது...  நான் எந்ததியேட்டரிலும் இந்த அனுபவத்தை நான் பெறவில்லை....சத்தியத்திலும்.....


படம் பார்க்கவருபவன் கேனை அவன் பாக்கெட்டை எப்படியும் காலி செய்மு விடுவோம் என்று சென்னையில் உள்ள எல்லா தியேட்டர் நிர்வாகமும்  நினைக்கின்றனர்...சந்தியமாக  பாக்கெட்டை காலி செய்யும் எண்ணம் ஊர்வசி தியேட்டர் நிர்வாகத்துக்கு  இல்லை...

20ரூபாய்க்கு கோக் கொடுக்கின்றார்கள்..


40ரூபாய்க்கு சாண்ட்வெஜ் கொடுக்கின்றார்கள்.. 


30ரூபாய்க்கு பார்ப்கான் கொடுக்கின்றார்கள்...

ஒரு சான்டவெஜ் வாங்கினால் பசி பற்நத போய் விடுகின்றது.. இரண்டு பிரட் சிலைஸ் இல்லை.. ஆறு பிரட் சிலைஸ் வைக்கின்றார்கள்.. பசியில் படம் பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு பசியாற்றும் அளவுக்கு கேண்டினில் விலை பட்டியல்  வைத்த ஊர்வசி தியேட்டா ஓனருக்கும் நிர்வாகத்துக்கும் மிக்க நன்றி.....


டாய்லட் சுத்தமோ சுத்தம்... பார்க்கிங் இங்கு ஜோதி தியேட்டரிலோ அல்லது கமலாவிலோ 15 ரூபாய், அங்கு பத்து ரூபாய்தான்.


இதுவே மற்ற மால்டிபிளக்சில் ஒரு  வார இறுதியில் 280 வரை ஒரு டிக்கெட்டை விற்க்கின்றார்கள்... 


பட் வார இறுதி சனிக்கிழமை கூட  ஊர்வசியில் 100ரூபாய் 150ரூபாய்தான் டிக்கெட் விலை....பெரிய தியேட்டர்... ஒரு 750 சீட்டுக்கு  மேல் இருக்கும்.....




எனக்கு மட்டும் அதிகம் பணம் இருந்தால் 300 சீட் மட்டும் இருக்கும் மினி தியேட்டர்  என் ஊர் கடலூரில் திறப்பபேன்... ஒரு தியேட்டர் எப்படி நடத்த வேண்டும் என்று நடத்தி காட்டுவேன்...முக்கியமாக ஊர்வசி தியேட்டர் போல சவுண்ட் சிஸ்டம்....வைப்பேன்..முன்னாடி உட்கார்ந்து படம் பார்ப்பவன் எவன் தலையும் மறைக்காத அளவுக்கு சீட் அரென்ஞசு செய்வேன்.......தமிழக ஓனர்களே உங்கள் தியேட்டர் பட்ம பார்க்க ரசிகளை ஈர்க்க ஊர்வசி தியேட்டர் சவுண்ட் சிஸ்டத்தை ஒரு முறை பார்த்து விட்டு வாருங்கள்..


இனி நான் பெங்களூர் ஊர்வசி தியேட்டரில்தான் படம் பார்க்கலாம்  என்று இருக்கின்றேன்.... பிலிம் குவாலிட்டியான 2கேவில் டிஜிட்டல் புரோஜக்ஷன்... சான்சே இல்லை ஒளியின் துல்லியம்...

அவர்களை பற்றி அவர்களே சொன்ன தகவல்.... அவர்கள் தளத்தில் இருந்து எடுத்து உங்களுக்கு கொடுத்து இருக்கின்றேன்....

 
Urvashi Cinema is Bangalore’s hottest entertainment destination for people from all walks of life, across a wide age group and user profile. At any time of the year, Urvashi Cinema averages about 60% occupancy in the heart of Bangalore city. More facts about Urvashi Cinema are given below:

Balcony 464 seats, Rear Circle 697 seats. Total 1161 Seats.

84,000 tickets sold for movies on a average every month

An average occupancy of 60%

Centrally located on Bangalore's Lalbagh Road, Urvashi Cinema is a major draw to students, residents and professionals of all age groups throughout the week. With more than adequate parking for 150 cars in its main parking lot besides a capacity of 500 two wheelers per show, advertisers are guaranteed a phenomenal touch point with potential customers when they choose Urvashi Cinema as their advertising destination.

Urvashi Cinema is among the first in Karnataka to introduce Digital and 3D Projection in its screen and has a lot more lined up to give Bangalore its finest entertainment experience

 =======

சின்ன சின்ன மல்ட்டி பிளக்ஸ் தியேட்டாகளிள் படம் பார்த்து விட்டு 1168 சீட் இருக்கும் பெரிய தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் நிச்சயம் பெரிய விஷயம்தான்..தமிழக தியேட்டர் ஓனர்கள் மற்றும் மேனேஜர்கள் அந்த தியேட்டரில் படம் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.. அப்படி மட்டும் தமிழகத்தில் ஒளி ஒலியை தங்கள் தியேட்டர்களில் ஓனர்கள் செய்து கொடுத்தால் நிச்சயம் ரசகர்கள் தியேட்டரில் வந்து படம் பார்ப்பார்கள்.. காரணம் நல்ல ஒளி ஒலிக்கா பாண்டி போய் ரத்னா தியேட்டரில் போய்  படம் பார்த்த ருசிகர் கூட்டதில் இருந்து எழுதுகின்றேன்.


பெங்களுர்வாசிகளே அல்லது சென்னையில் இருந்து பெங்களூருக்கு போகும் நண்பர்களே.. நேரம் கிடைத்தால் நல்ல ஆங்கில ஆக்ஷன் படத்தை அந்த தியேட்டரில் பாருங்கள்.. வித்யாசத்தை உணர்வீர்கள்.. இனி அந்த தியேட்டரில்தான்  பெங்களூர் போகும் போது எல்லாம்  படம் பார்க்க போகின்றேன்...

இரகூ நேரக்காட்சி என்பதால் மேனேஜர் யாரும் இல்லை..... இருந்து இருந்தால்  இரண்டு வார்த்தைகள் சொல்லி பாராட்டி விட்டு வந்த இருப்பேன்.... அப்போதுதான்  பாராட்ட பாரட்டதான் நிறைய நல்லவைகள் நடக்கும் என்பது என் எண்ணம்..


நல்ல ஒளி ஒலி அமைப்போடு, நியாயமான விலைபட்டியலோடு தியேட்டர் ஓனருக்கும், நிர்வாகத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

டிஸ்கி...
இப்போதுதான் தியேட்டர் ஓனர் ரவிசங்கர்  அவர்களிடம் பேசினேன்... அவரின் தியேட்டரை பாராட்டினேன்.. இந்த சவுண்டுக்கு மட்டும் 47 லட்சம் செலவு செய்து இருக்கின்றார்கள்.. நம்ம ஆட்கள் மட்டும் செலவு செய்து இருந்தாள்  டிக்கெட் விலையை உயர்த்தி இருப்பார்கள்... அவ்வளவு ஏன் பேங்களுரில் 500க்கு மேல் டிக்கெட் வைத்து இருபபார்கள்.. இன்னும் 100ரூபாய் 150தான்...

ஜுலையில் இருந்து 4கே வுக்கு புரோஜக்ஷ்ன் மாறப்போகின்றதாம்... சவுண்டுக்கு மட்டும் ஒன்றரை கோடி செலவு செய்ய போகின்றார்களாம்...இந்த சவுண்ட் சிஸ்டம் இன்னும் துள்ளியமாம்...ரகுமான் கான்சர்டுகளில் யூஸ் செய்யும் தொழில் நுட்பமாம்...


நான் அவலாய் இருக்கின்றேன்.. ஒரு தியேட்டரில் படம் பார்த்து விட்டு அந்த தியேட்டரை பற்றி எழுதும் அளவுக்கு அந்த தியேட்டரை நடத்தும் உரிமையாளர் ரவிசங்கருக்கு எனது நன்றியும் அன்பும்...








பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 


====================

12 comments:

  1. பெங்களூரு போனா நிச்சயம் ஊர்வசில படம் பார்க்கணும்....

    ReplyDelete
  2. PVR இல் 800 ருபாய் குடுத்து பார்கனுமான்னு இந்த theatre ல AVATAR பார்த்தேன். மிக மிக நன்றாக இருந்தது.

    ReplyDelete
  3. நானும் உங்க கட்சித்தான். விழுப்புரத்திலிருந்து இருந்து ஹே ராம், இந்தியன், படங்கள் பார்க்க என்றே சென்னை வந்து தேவி, சத்யம் என்று பார்த்து இருக்கிறேன். முதன்முதலில் குருதிப்புனல் படம் தேவி தியட்டரில் பாத்துட்டு வந்து நண்பர்களிடம் பல நாட்கள் அதன் சவுண்ட் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். சென்னையில் தற்போது கோ படம் பார்த்தேன். Ecstasy theater really superb. wonderful interior decoration.

    2K,,4K ... 3D projection பற்றி கொஞ்சம் எழுதுங்கள்.

    ReplyDelete
  4. நன்றி டகால்ட்டி, பொன் சந்தர், பொன்மலர்,ராகவ்,ஜெகன் போன்றவர்களுக்கு என் நன்றிகள்.

    ஜெகன் நிச்சயம் நேரம்கிடைப்பின் எழுதுகின்றேன்..விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா பார்த்து இருப்பது பெரிய விஷயம்தான்..

    ReplyDelete
  5. நல்ல தகவல், ஜாக்கி.

    ReplyDelete
  6. I saw Pokiri in Hyderabad Hi Tech Theater in 2007. film is super hit & Seventh day Ticket was Rs.50 only for first class ie Rs.35 + Rs 15 for Reservation. If we take in counter only Rs.35. Theater was Neat, A/c 70 mm screen. After i saw many films in Hyderabad all theaters have 70 mm screen charge only Rs.35.So after coming to TN i donot goto theater. In Trichy after 30 days Rs.200 for singam movie during sunday.

    ReplyDelete
  7. அதிகம் போறதில்லை.. இனி அங்கு தான்.. நன்றி ஜாக்கி
    இவ்ளோ ரசித்து எழுதறீங்க.. நைஸ்!

    BTW, நெறைய படம் பார்க்கறீங்க போல.. என்ஜாய்! :)

    ReplyDelete
  8. Hi Jackie! before i read this, i got d same feeling like u that it will be a old and average theatre. I have been living in hosur for the past twelve years and i crossed this theatre in twice a week.. its an interesting information.. I dont know how to thank and please continue these kind of writings,---Senthil kumar, Hosur

    ReplyDelete
  9. உங்கள் ஆதங்கம் புரிகிறது.
    அவசர அவசரமாக டைப் செய்தீர்களா?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner