ஆல்பம்...
அந்த புள்ள என்ன சொல்லுது ??? யாரு சார்???
அதான் அமெரிக்க தூதரக அதிகாரி பொண்ணு கிருத்திகா அசிங்கமா மெயில் அனுப்பிடுச்சின்னு சொல்லி அது கைல அமேரிக்க போலிஸ் விலங்கை மாட்டி விட்டு விட்டாங்க.... அது இன்னா சொல்லுது.... நான் அப்படி செய்யவில்லை என்கூட படிச்ச சைனிஸ் பையன்தான் அப்படி அனுப்பிச்சான்னு சொல்லுது.....நிறைய பேரு என்ன சொல்லறாங்க.. பெரிய பாலிட்டிக்ஸ் இதுல கிருத்திகாவுக்கு எதிரா விளையாடி இருக்குன்னு பலர் சொல்லறாங்க.....அமெரிக்க நண்பர்கள் யார்மேல தப்புன்னு சொல்லுங்கப்பு.....========================
சமீபத்தில் வந்த எந்திரனை விட சிவாஜி படம் எனக்கு ரொம்ப பிடித்த படம்...காரணம் அதில் பழைய ரஜினியை ஷங்கர், கேவிஆனந் காட்டி இருப்பார்கள்...மன்னன் படத்துக்கு பிறகு நான் ரஜினியை ரசித்த பார்த்த படம் சிவாஜிதான்.. அந்த படத்தில் இளமை துள்ளும்.... அப்படி பார்த்த ஒரு கேரக்டர்.. ரஜினி வாய்ஸ் என்று அவர் சிங்கப்பூர் சிகிச்சைக்கு செல்லும் முன் அவரது மகளால் வெளியிடப்பட்டது.. உடல் தளர்ந்து ஒலித்த அந்த வாய்ஸ் கேட்ட போது ரொம்ப கொடுமையாக இருந்தது....பட் ஹேப்பியா போயிட்டு சீக்கரம் வந்துடறேன் ராஜாக்களா? என்று அவர் சொன்ன போது நான் நெகிழ்ந்து போனேன்.. பணம் வாங்கறேன் நடிக்கின்றேன்.. என் மேல் இவ்வளவு அன்பு எப்படி ? என்பதை அவர் நெகிழ்ச்சியாக உணர்ந்து இருக்கின்றார்... இந்த அன்புக்கு அரசியல் ரீதியாக எதாவது செய்து இருக்கலாமோ? என்று அவர் நெகிழ்ந்து பேசி இருப்பதும் உணர முடிகின்றது... விரைவில் குணம் பெற்று வர பரம் பொருளை பிராத்திப்போம்...
அந்த வாய்ஸ் கேட்காதவர்கள் கேட்க கொடுத்து இருக்கின்றேன்... இந்த வாய்ஸ் கேட்கும் போது எப்படி இருந்த வாய்ஸ் என்று உங்களை யோசிக்க வைக்கும்.........
===================================
ஹெல்மட் பதிவை படித்து விட்டு போன ஆட்சி இந்த ஆட்சி என்று எல்லாம் சிலர் ஜல்லி அடித்தார்கள்...அந்த பதிவின் சாரம்சம்... எல்லா டிராபிக் ரூலையும் கட்டாயமாக்குங்கள் என்பதே... ஹெல்மெட்டை மட்டும் கட்டாயம் என்று குறிப்பாக சொல்லாதே என்பதே அந்த கட்டுரையின் சாரம்சம்... அது யார் ஆட்சி செய்தாலும் பொருந்தும்.....
=========================
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாப்பியனாகி வெற்றிவாகை சூடி இருக்கின்றது..இன்டியா சிமென்ட் ஓனர் பையனை அவ்வப்போது காட்டினார்கள்... மனிதர் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் மேட்ச் பார்த்துக்கொண்டு இருந்தார்... அவரிடம் ஒரு நல்ல ஜோக் சொல்லி சிரிக்க வைக்க வேண்டும் என்பது என் ஆசை... அடக்கம் என்பது வேறு எந்த ரியாக்ஷனும் முகத்தில் காட்டாமல் இருப்பது என்பது வேறு....ஒரு வேளை அதிக டென்ஷனாக இருக்குமோ?? டோனி போல எந்த ரியாக்ஷனும் இல்லை.. அட தோனியாவது ஜெயித்தால் குதிப்பார்... இவர் அதையும் செய்ய மாட்டேன் என்கின்றார்.....அதே போல் நின்று கொண்டேதான் இருப்பார்.... உட்கார்ந்து நான் பார்த்தது இல்லை....டென்ஷன்தான் காரணமோ??? இருக்கலாம்... அது போல தன் அணி தோற்றாலும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கைதட்டி விட்டு சென்று விடுவது சிறப்பு...
=============================
இந்தவார கடிதம்.....
Dear Mr. Jackie Sekar:
Congratulations to both of you! Hope the new born is doing good. I was busy in preparing the proposals for the 12th five year plan, hence the delay in wishing you on a great occasion. Take care.
Regards
Krishnamoorthy
Dr. K. Krishnamoorthy
Scientist
Polymer Science and Engineering Division
National Chemical Laboratory-Pune
Pune 411008
Congratulations to both of you! Hope the new born is doing good. I was busy in preparing the proposals for the 12th five year plan, hence the delay in wishing you on a great occasion. Take care.
Regards
Krishnamoorthy
Dr. K. Krishnamoorthy
Scientist
Polymer Science and Engineering Division
National Chemical Laboratory-Pune
Pune 411008
============
மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.. உங்களை போன்ற நண்பர்கள் என்னோடு இருப்பதிலும் எங்களை வாழ்த்துவதிலும் நான் நெகிழ்ச்சி அடைகின்றேன்..
==============
================================
================================
மிக்சர்..
இன்று பெங்களூரில் தலைவர் இசைஅமைப்பாளர் ரகுமானின் இசைநிகழ்ச்சி நடக்க இருக்கின்றது..... இங்க ஏதோ பேலஸ் ஸ்டேடியம் என்று ஒன்று இருக்கின்றதாம்....நான் ரகுமான் ஸ்டுயோவுக்கு போய் இருக்கின்றறேன்... ஆனால் அவரோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள என்னால் முடியவில்லை.. எனக்கு இளையராஜா மற்றும் ரகுமானோடு ஒரு புகைபடம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை.....பார்ப்போம் அது பரம்பொருளின் விருப்பம்.....ரகுமானுக்காக அவர் இசையமைத்து பாடிய கான்சர்ட்டில் எனக்கு பிடித்த பாடல்.... கீழே வீடியோவில்...
இதில் காம்பயரர் ஒரு கேள்வி கேட்பார்... முதல் முறை அமெரிக்காவில் லைவ் நிகழ்ச்சி நடத்த வந்து இருக்கின்றீர்கள்... ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.. என்று கேட்டதும் ரகுமான் பதில் ஏதும் சொல்லாமல், கீ போர்ட்டில் கட்டைகளை அழுத்திய படி தில்சேரே( உயிரே) என்று உச்சஸ்தாயில் பாட ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் காட்டு கத்தல் கத்த.... ஒரு கர்வ சந்தோஷம், ஒரு வெற்றி சந்தோஷத்தை ஒரு சின்ன புன்னகை மூலம் வெளிபடுத்துவார்... அதுக்காவே இந்த வீடியோவை அடிக்கடி பார்ப்பேன்...
=========================
அம்மா இருக்கும் கோட்டையில் செருப்பு போட்டுக்கொண்டு வரமாட்டேன் என்று சாத்தூர் தொகுதி எம்எல்ஏ உதயகுமார் சொல்லி இருக்கின்றார்.. அவருக்கு முதல்வர் தொழிலுநுட்பதுறை அமைச்சர் பதவி கொடுத்து இருக்கின்றார்......அந்த விசுவாசம் காரணமாக இருந்து இருக்கலாம்... அமைச்சரிடம் முதல்வர் செருப்பு போட்டுதான் வரவேண்டும் என்று கண்டிப்பு காட்டி இருக்கின்றார்.....
=============================
ஒருத்தர் செருப்பு போடமாட்டேன் என்று அடம்பிடித்தால் அம்மா ஜெயித்தால் நாக்கை வெட்டி காணிக்கையாக்குகின்றேன் என்று சொல்லி ஒரு பெண்மணி நாக்கை வெட்டி நேர்த்தி கடன் செய்து இருக்கின்றார்... அம்மா இருக்கும் தலைமை செயலக கோட்டையில்செருப்பு போட மாட்டேன் என்ற சொன்ன அமைச்சரின் பக்திக்கு முன் நாக்கு இழப்பதே உண்மையான பக்தி என்பது என் கருத்து...நாக்கு சாதாரண விஷயம் இல்லை... சொல்லாமலே படத்துல லிவிங்ஸ்டன் காதலுக்கா நாக்கை கட் பண்ணுங்கன்னு சொன்னதும், டாக்டர் பிரகாஷ்ராஜ் குரல் மற்றும் நாக்கை பற்றி துடிச்சி பேசும் டயலாக்கை முதல்வர் பார்த்து இருப்பார் போல..... அதனால் அந்த பெண்ணுக்கு சத்துணவு பணியாளர் வேலை கொடுத்து இருக்கின்றார்....நாக்கு வெட்டிக்கொண்டால் அரசு வேலையா? என்று எல்லோரும் வாய்பிளந்து நிற்கின்றார்கள்... வாய் பிளப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி... எப்படியும் இரண்டு மாதத்தில் பெங்களூரில் முதல்வர் மீது போடப்பட்ட சொத்த குவிப்பு வழக்கில் எப்படியும் ஜெயித்து விடுவார்..முதல்வருக்கு ஆதரவாக நல்ல தீர்ப்பு வந்தால் என் உடலில் இருக்கு இன்ன சமாச்சாரத்தை கட் செய்து கொள்வேன் என்று உங்கள் ஏரியா வட்டம் அல்லது ஒன்றியம் எதிரில் காதில் போட்டு வையுங்கள்...தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றால் ஒன்னும் பிரச்சனை இல்லை... பட் வந்தால் எதையாவது வெட்டி ஆக வேண்டும்....ஆனால் அரசு வேலை நிச்சயம்....
================================
இந்த வார சினிமா நியூஸ்....
இப்போதைக்கு ஹாலிவுட்ல நான் எதிர்ப்பார்க்கற படம் மைக்கேல் பே இயக்கத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் வெளிவர இருக்கும் டிரான்ஸ்பார்மர்ஸ் 3 தான்... அந்த படத்தை பெங்களூர் ஊர்வசிதியேட்டரில் அதுவும் திரீடியில் பார்க்க வேண்டும்.....உங்களுக்காக அந்த டிரைலர்...
அடுத்து ஒரு தெலுங்கு படம் அதுல தானை தலைவி தமன்னா நடிச்சி இருக்கும் படம்...பத்ரிநாத்... படத்தின் ஸ்டில்கள் பார்க்கனும் தோன வைக்குது.. உங்களுக்கா இரண்டு ஸ்டில்கள்..
(மேலே இருக்கும் படத்துக்கும் இந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை.....)
இன்றோடு சென்னையில் கொளுத்தும் வெயில் முடிவுக்கு வருகின்றது...ஜுன் முதல் வாரத்தில் பருவ மழை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் சொல்லி இருக்கின்றது...
படங்கள்...http://moviegalleri.net ....நன்றி
==================
பிலாசபி பாண்டி...
பிலாசபி பாண்டியின் பிரண்டு ஒருத்தன் அவன்கிட்ட வந்து மச்சி நேத்துல இருந்து ஒரே தலைவலி, என்னால பொறுக்கமுடியலைன்னு சொன்னான்... அதுக்கு பாண்டி பண்ணாடை தலைவலி இருக்கும் போது எதுக்கு பொறுக்க போனே? அதான் தலைவலி ஜாஸ்தி ஆயிடுச்சின்னு சொன்னான்..
===================================
நான்வெஜ் 18+
ஜோக்....1
அது எப்படி? எந்ந ஊருக்கு பேபானாலும் உன்புருசன் கரெக்டா பத்து மணிக்கு உங்க வீட்ல இருக்கார்....நான் அவருக்கு செஞ்சு கொடுத்த சத்தியம்தான் அதுக்கு காரணம்....
என்ன சத்தியம்டி???
தினமும் நைட் பத்து பத்துக்கு நான் செக்ஸ் வச்சுக்குவேன்....நீ வந்தாலும் வராவிட்டாலும் என்று எனது முதல் இரவு அன்னைக்கு புருசன் கிட்ட சத்தியம் செஞ்சேன் அதான்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
குறிப்பு
திரட்டிகளில் ஓட்டு போடும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...இந்த தளம் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
===================
naan தான் முதல் ல வாசிச்சு இருக்கேன்
ReplyDeleteeppovum pola kalakal jackie na
ReplyDelete////ஜுன் முதல் வாரத்தில் பருவ மழை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் சொல்லி இருக்கின்றது...///
ReplyDeleteஇங்கே குற்றாலத்தில் சீசன் துவங்குவதற்கான அறிகுறிகள் ஆரம்பித்து விட்டன. "ஜில்"-ன்னு காற்று வீசுகிறது. இந்த பக்கம் எப்போவாவது உண்டா ????
எப்போவாவது வந்தது உண்டா ?
ReplyDeletejackie na.. tammana photo's SUPER...
ReplyDelete