சென்னை, சேலம்,ஈரோடு,கோபி,சத்தி,மைசூர்,வழியாக பெண்களூர் பயணம்

 
பெரிய சூவாரஸ்யம் இல்லாத மிக நீளமான ஒரு பயண பதிவு இது...அதனால் ஜுட் விட விருப்பம் உள்ளவர்கள் என்னோடு பயணப்பட வேண்டியதேவையில்லை...பத்துவருடம் கழித்து நானே படித்தாலும் இந்த தொடர்பயணமும் நான் சந்தித்த மனிதர்களும் என் நினைவில் வருவார்கள்... அதற்க்காகவே இந்த பெரிய பதிவு...

கோபியில் ஒரு போட்டோ ஆல்பம் டெலிவரி செய்யவேண்டும்..அப்படியே பெண்களூர் போக வேண்டும்... இதுதான் பிளான்...வியாழன் இரவு  ஏழரை மணிக்கு கிளம்பினேன்... நண்பர் சையத் ஏற்காடு எக்ஸ்பிரசில் 100 ரூபாய்க்கு  காலையில் ஈரோடு போய் விடலாம்... அங்கிருந்து கோபிக்குஅரைமணி நேரப்பயணம் என்று சொன்னார்... நான் சென்டரலுக்கு போய் அலைய முடியாததையும்  என்னிடம் நிறைய வெயிட் இருக்கின்றது என்றும் சொன்னேன்.


பேருந்தில் செல்வது என்று முடிவு செய்தேன்...கோயம்பேட்டில் பத்தரைக்கு ஈரோட்டுக்கு ஒரு ஏசி பஸ் இருக்க அதில் ஏறி உட்கார்ந்தேன்.
360ரூபாய் டிக்கெட்.. பயணிகள் இருக்கையில் வியாப்பித்தால் மட்டுமே ஏசி போடுவார்கள் என்பதால் கொஞ்ச நேரத்துக்கு உடம்பில் வியர்வை சுரப்பிகள் எக்ஸ்ட்ராவாக வேலை செய்தது.

பக்கத்தில்  கிளம்ப தயரான கோவை ஏசி பேருந்தில்  இருந்து  ஏறிய மக்கள் இறங்கி கொண்டு இருந்தார்கள்... விசாரித்த போது ஏசி வேலை செய்யவில்லை என்று சொன்னார்கள்.. நம்ம பஸ்லயும் அது போல நடந்து விடக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டேன்...

பேருந்து தன் முழு கொள்ளவை எட்டியது.. வண்டியை ஸ்டார்ட் செய்து ஏசியை போட்டார்கள். என் சீட்டுக்கு மேல் எசி ஓட்டிடயில் இருந்து நடுமண்டையில் நச் சென்று குளிர்காற்று வீசத்தொடங்கியது. போரோ பிளஸ்  விளம்பரத்தில் மாடல்கள் காட்டும் ரியாக்ஷன் என் முகத்தில் உணர்ந்தேன்....

பேருந்தில் கோடைவிடுமுறையை கழிக்க நிறைய குடம்பங்கள் பிள்ளை குட்டிகளுடன் ஏறினார்கள்

இரண்டு இளம் பெண்கள் ஏறினார்கள்.. ஒரு பெண் சுடிதாரிலும், ஒரு பெண் டி சர்ட் போட்டு, டிசர்ட்டுக்கு கை மிக சின்னதாக வைத்து இருந்தாள்...கதவை திறந்ததும் வலப்பக்கம் இருக்கும் முதல் இரண்டு சீட்டுகளில் அந்த இரண்டு பெண்களும்  உட்கார்ந்து இருந்தார்கள்.. கதலை திறந்து எறினால் அந்த பெண்தான் முதலில் தென்படுவாள்... அந்த மஞ்சள் டிசர்ட் பெண்.. 1000ரூபாய்க்கு பியூட்டி பார்லரில் கட் பண்ணிய முடியை அவுத்து விடுவதும், பின்பு அதனை ரப்பர் பேண்டில் கொண்டை போடுவதுமாக 4 முறைக்கு மேல் செய்து கொண்டு இருந்தாள்...சரி நமக்கு டைம் போவனுமே.... என்று அந்த பெண்ணை ஜும் லென்ஸ் போட்டு பாலோ செய்ய அரம்பித்தேன்.. அந்தபெண்ணுக்கு பேருந்தில் இருக்கும் ஆண்கள் தன்னை ரசிப்பது தெரிந்து விட்டது.. அதனால் எல்லா ஸ்டைலும் நின்றுக்கொண்டு  செய்து கொண்டு இருந்தாள்...

எனக்கு பக்கத்தில் வெற்றிலைபாக்கு போட்டு குதப்பும் ஒரு லோக்கல் சாமியார் என்பக்கத்தில்  வந்து உட்கார்ந்தார்... எனக்கு முன் இருக்கையில் ஒரு பட படப்பான வயதானவர் தன் மனைவியுடன் உட்கார்ந்து இருந்தார்.... பேருந்தில் ஏறியதில் இருந்து படபடப்பாக இருந்தார்.. அதாவது மற்றவருக்கு எந்த இடஞ்சலும் கொடுக்க கூடாது என்று மனது அளவில்  நினைத்தாலும் பிசிக்கலாக அவருக்கு உடல் ஓத்துழைக்கவில்லை... நிறைய தடுமாற்றம்..

தலையில் டை போட்டு இழந்த இளமையில் 10 பர்சென்டை மிக போராடி தன் முகத்தில் கொண்டு வந்து இருந்தார்... மனைவி பழைய கமலாகாமேஷ்  போல வெட வெடவென இருந்தார்... மனைவியை  அப்படி பார்த்துக்கொண்டார்... அதனால் அவர் சொதப்பிய பல விஷயங்கள் ரசிக்க வைத்தது.,..

பேருந்து கிளம்பியது... வேலூர் கிருஷ்ணகிரி சேலம் ஈரோடு பக்கம் போகும் என்று நினைத்தேன்... ஆனால் பேருந்து பூந்தமல்லி பக்கம் போக ஆரம்பித்ததும், சந்தோஷத்தில் இருந்தேன். சந்தோஷத்தில் மண் விழுந்தது... வேலூர், திருப்பத்தூர், சேலம் என்று பேருந்து பயணித்தது... திருப்பத்தூர் அருகே பேருந்து போகும் போது... நான் போவது ஏசி பேருந்தா? அல்லது லோக்கல் பல்லவனா என்று சந்தேகம் வந்தது.. அந்த அளவுக்கு ரோடு  ரொம்ப கேவலமாக இருந்தது..

எல்லோரும் உறக்கத்தில் இருக்க டிரைவருக்கு டீ குடிக்க வேண்டும் என்பதால் சேலத்துக்கு 60 கிலோ மீட்டருக்கு முன் பேருந்து நின்றது... எல்லோரும் இறங்கி கொண்டு இருந்தார்கள்.. அதீத குளிர் காரணமாக அந்த  மஞசள் டிசர்ட், விழா தலைவர்களுக்கு மரியாதை நிமித்தமாக  போத்தும்
ஒரு ஷாலை போட்டு முகத்தில் இருந்து கால் வரை போத்தி தூங்கி கொண்டு இருந்தது...நான் இறங்கி டீ குடித்து விட்டு பேருந்துக்கு வந்து கொண்டு இருந்த போதுதான்..  பலர் பேருந்தில் இருந்து இறங்கி டீ வாங்கி கொண்டு இருந்தார்கள்.. பேருந்து புறப்பட டிரைவர் ஹாரன் அடிக்கவும், சாதாரண பேருந்து ஞாபகத்தில் டீ கப்போடு ஏற பலர் முயன்றனர்... கண்டக்டர்... இந்த பஸ்ல ஜன்னல் வழியா காலி கப்பை வீசமுடியாது...பஸ்ல போட்டு விட்டு எனக்கு  என்னான்னு இறங்கிடுவிங்க... அதனால் டீ குடிச்சிட்டே ஏறுங்க என்றார்...

அந்த பத்ட்ட பெரியவர் முதலிலேயே கமலாகாமேஷ்க்கு டீ வாங்கி வந்து கொடுத்து விட்டார்... அந்த கப்பை பேருந்துக்கு வெளியே வீசிவிட்டு மற்றவருக்கு வழி விட வேண்டும்  என்ற நல்ல எண்ணத்தில் பதட்டமாக எனக்கு முன்னாடி ஒருத்தருக்கு முன்னாடியாக அவர் பேருந்தில் படியில் வேகமாக ஏறினார்.. நானும் எறினேன்.... ஏறியவர் அந்த மஞ்சள் டீசர்ட்டுக்கு முகத்தில் அவர் கை பட்டுவிட, எவனோ பேருந்தில் இருட்டில் தன்மீது கை வைக்கின்றான் என்று நினைத்து நல்ல தூக்கத்தில் இருந்த அந்த பெண், வாரி சுருட்டி எழுந்துக்கொள்ள,  சில நொடிகள் சகலமும் என் கண்  வளர்ந்த திரட்சியை விழுங்கிகொண்டு இருந்தது... மஞ்சளுக்கு சற்றும் பொறுத்தம் இல்லாத கருப்பு  நிறம்.. உள்ளே என்பதால் அந்த அலட்சியம் போல...எல்லோரும் படியில் ஏறிக்கொண்டு இருக்கின்றார்கள் அதனால் தன் மீது இடித்து இருக்கின்றார்கள் என்று உணர்ந்து திரும்பவும் நெரமுக்காடு போட்டு தூங்க ஆரம்பித்தது... அந்த மஞ்சள்...


அதுக்கு பிறகு எனக்கு துககம் வரவில்லை... விடியலில் பேருந்நது முக்கி முக்கி வனப்பகுதியில் ஏறிக்கொண்டு இருந்தது... ஏசி பேருந்தின் ஜன்னல் கண்ணாடியில் அவ்வளவு அழுக்கு.... கண்ணில் கண் வலிக்கு மருந்து போட்டுக்கொண்டு விட்டால் களங்களாக காட்சிகள் தெரியுமே.... அது போல தெரிந்தது...வனப்பகுதி முழுவதும் மூங்கில்கள் காட்சி கொடுத்துக்கொண்டு இருந்தது...

சேலத்துக்கு ஏழுமணிக்கு வந்தது.. மஞ்சள் திரும்பவும் விடியலில் தலை களைத்து முடிந்து, சீட்டுக்கு மேலே லக்கேஜ்கேரியரில் இருந்த பேகை மிக கவர்ச்சியாக முயற்சி செய்து தன் முயற்சியில் வெற்றி பெற்று பேகை எடுத்தக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கியது...

சேலம், ஈரோட்டில்  பேருந்து போகும் போது வீடுகளுக்கு நடுவில் பேருந்து போவது போல ஒரு பிரமை...காலை ஈரோட்டில்  எட்டு மணிக்கு பேருந்து நின்றது... ஈரோடு வலைபதிவர் சந்திப்புக்கு வந்த பிறகு... இப்போதுதான் திரும்ப வருகின்றேன்.. உடனே ஈரோட்டில் இருந்து கோபிக்கு போகும் பேருந்தை தேடினேன்.. ஒரு அரசு பேருந்து சக்திக்கு கிளம்பியது.. அதில் ஏறினேன்...ஈரோட்டில் இருந்து 8 மணிக்கு சரியாக புறப்படும் என்று ஒரு சின்ன போர்டில் எழுதி இருந்தது...

காரணம் எனக்கு புரிந்து விட்டது...சக்திக்கு போகும் ஒரு தனியார் பேருந்து அரக்கி அரக்கி நகர்ந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தது... அரசு பேருந்து ஓட்டுனார் வேகமாக கிளம்ப அதற்கு முன் அந்த தனியார் பேருந்து வேகம் எடுத்தது... ஒரு பத்து கிலோமீட்டருக்கு மேல் துரத்தி விட்டு, நான் பயணித்த அரசு பேருந்து மிதமான வேகத்துக்கு வந்தது...நடத்துனரிடன் 20 ரூபாய் கொடுத்தேன்... அவர் பத்து ரூபாய் திரும்ப கொடுத்து டிக்கெட்டும் கொடுத்தார்... எதிரில் வீடியோவில் கிரன் மற்றும் விஜயகாந் நடித்த படம் ஓடிக்கொண்டு இருந்தது... கிரன் தனது மிகப்பெரிய மார்புடன் பேசஞ்சர் ரயிலில், தண்டவாளம் ஏற்றி செல்லும் பெட்டியை இணைத்து அதில் ஆடவிட்டு, சாங் எடுத்து இருந்தார்கள்... மனதில் ஒப்பாமல் வெளிப்பக்கம் பார்க்க  ஆரம்பித்தேன்...

கோபியில் இறங்கி என் வேலைகளை முடித்து அன்பு ஹோட்டலில் நண்பர்களுடன் காலைவேளை உணவை முடித்து 10 மணிக்கு பெண்களுர் கிளம்பினேன்... திரும்ப ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, போக மனது ஒப்பவில்லை..... நேற்று பஸ்சில் நான் ஊருக்கு போகின்றேன் என்று செய்தி போட்டதும்...செந்தில் என்பவர் பெங்களூரில் இருந்து போன் செய்து... சக்தி மைசூர் வழியா பெண்களூர் வரலாம் என்று சொன்னார்.. என்ன அது ஹில்ஸ் வழி என்று சொன்னார்... அதனால் சக்திக்கு பேருந்து ஏறினேன். கோபியில் ஆர்கேஎம் தனியார் பேருந்தில் எறினேன்..

காரணம் அரசு பேருந்தை விட தனியார் பேருந்தில் கிராமத்து பக்கம் பயணிக்கும் போது இளையராஜா பாடல்கள் ஒலிக்கசெய்வார்கள்.. அதனை கேட்டுக்கொண்டு பயணிப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.... இளம்பெண்களில் முழுக்கையும் சல்லைத்துணியில் தெரியும் மசக்களி சுடிதார் மற்றும் லிப்லைனர்கள்.. கோபியின் உள் கிராமங்கள் வரை பரவி இருப்பது பெருத்த ஆச்சர்யம்.. நாகரிக உடை என்பது ஏதோ சென்னைவாசிகளுக்கு மட்டுமே உரித்தானது என்ற மாயை இப்போதைய தலைமுறையினர் உடைத்து வருவது மிக்க மகிழ்ச்சி..

பேருந்தில் ஒரு அறுபதை கடந்த திடகாத்திரமான ஜாக்கெட் போடாத அப்பத்தா ஏறினார்.. காலில் மெட்டி.. ஆனால் செருப்பு இல்லை.. இரண்டாவது ஸ்டாப்பில் இறங்கினார்...ஒரு பெரியவர் பெரியார் எப்போதும் போட்டுக்கொண்டு இருக்கும் சட்டை போட்டுக்கொண்டு ஏறினார்...அவர் போட்டு இருந்த கண்ணாடியில் அதிக பவர்காரணமாக கண் மிகப்பெரிதாக தெரிந்தது...உட்காருகின்றீர்களா என்று எனது இருக்கையை காட்டினேன்.. இன்னும் இரண்டு ஸ்டாப்பில் இறங்குவதாகவும் நன்றியும் சொன்னார்..


நடத்துனர் ஏழரை ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார்.... முதலில் கோபி அருகே நின்று நின்று பயணிகள் ஏற்றிக்கொண்டு இருந்தவர்கள்.. சக்தி அருகே போகும் போது டைம் எடுக்க யாரையும் ஏற்றிக்கொள்ளாமல் விரைந்தார்கள்... கோபியில் இருந்து போகும் போது நிறைய பழைய கட்டிடங்கள்... ஒரு பழைய பங்களா எனக்கு பிடித்து இருந்தது.. அதில் வாழும் கலை ரவிசங்கர்  போர்டு காணப்பட்டது....அங்காங்கே நிலபிரபுக்களின் எல்லா வசதியும் கொண்ட பெரிய பெரிய பங்களாக்கள் கெஸ்ட் அவுஸ்கள் காணப்பட்டன..


போகும் வழி எங்கும் கரும்பு தோட்டங்கள்.... பச்சை பசேல் காட்சிகள்...சென்னையின் வாகன நெரிசலில் பயணித்த எனக்கு இந்த கோபி டூ சக்தி சாலை அளவிட முடியாத இன்பத்தை தத்தது... நடு நடுவில் மனைகள் விற்க்கப்படும் என்ற போர்டு இல்லாமல் இருந்தது ரொம்ப சந்தோஷம்.. ஆனால் பல என்ஜினியரிங் கல்லூரிகள் விளை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தன... இந்து மற்றும் காவேரி பள்ளிகள் முகப்பு நன்றாக இருந்தன..


பேருந்தில் ஒலித்த பாடல்கள் ஆளப்பிறந்தமகராசா, அஞ்சிகெஜம், காஞ்சி பட்டு, அத்தைமக  கை பட்டு, டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ்யூ என்று களந்து கட்டி ஒலித்தது..
ஓடையில் நீர் ஒடிக்கொண்டு இருந்து...நிலங்களில் கம்பும், கரும்பும் கவர்சியாய் தள தள என்று வளர்ந்து இருந்தன.


ஒரு கிலோமீட்டருக்கு ஒரு கருப்பனோ, அய்யனாரோ,முனிஸ்வரனோ கையில் கத்தி வைத்துக்கொண்டு குதிரைகளுடன், தங்கள் பரிவாரத்துடன் கலர் கலராக உட்கார்ந்து ஊரை இரவு பகல் பாராமல் காவல் காத்துக்கொண்டு இருந்தார்கள்..



சத்தி போய் இறங்கினேன்...சத்தியில்  இயற்கை உந்த இலவசகழிப்பிடம் போனேன்.. பல நாட்களாக தண்ணிகாட்டப்படாததால் மஞ்சள்தன்மை கட்டிக்கட்டியாக இருந்தது...அதில் விழுந்த சிறு நீர் நம்மீது தெளித்தாலே நமக்கு தீராத நோய்கள் வந்துவிடும். நேற்று இரவு தனது கடும்பணியை முடித்து கழட்டி, விசப்பட்ட நிரோத் அவசரத்துக்கு ஒதுங்கிய அனைவரது சிறுநீரிலும் ஜலக்கரீடை நடத்திக்கொண்டு இருந்தது...


மைசூருக்கு போக ஒரு அரசு பேருந்து தயாராக இருந்தது..ஜன்னல் ஒரத்து சீட்டை பிராக்கெட் போட்டு உட்கார்ந்தேன்... எச்சில் துப்ப அல்ல...மலைவழியாக செல்லும் போது, போட்டோ எடுக்கலாம் என்பதால்...பேருந்து  காட்டு வழியாக பயணிக்க ஆரம்பித்தது.. முதல் முறையாக பண்ணாரி அம்மன் கோவிலை  பார்த்தேன்....175 ரூபாய் டிக்கெட்  சக்தி டூ மைசூருக்கு...திம்பம் மலைபாதை 27 கொண்டை  ஊசி வளைவுகளை கொண்டது என்ற அறிவிப்பு பலகை எனக்கு திரில்லை அதிகபடுத்தியது...வனத்தில் தீவைக்க வேண்டாம் என்று எல்லா அறிவிப்பு பலகையும் சமுக விரோதிகளை கெஞ்சிக்கொண்டு இருந்தன..


மலைப்பாதையில் விலங்குகள் உங்கள் குறுக்கே கடக்கும் என்று அறிவிப்பை எழுதி யானை படத்தை போட்டு வைத்து இருந்தார்கள்...பேருந்து 27 ஊசி வளைவுகளை கடக்கும் போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடந்தேன்... தேவையில்லாமல் மைனா படத்தின் பேருந்து விபத்து கொண்டை ஊசி வளைவுகளில் பேருந்தில் வளையும் போது நினைவுக்கு வந்து தொலைந்தது.. பல வளைவுகளில் பேருந்து எற சிரமபட்டது...லோட்  லாரிகள் இன்னும் தினறின... முக்கியமாக ஒன்பதாவது மற்றும் 23, 24 வளைவுகள் படு ஷார்ப்...

நான் என்ன நினைத்தேன் என்றால் கண்ணுக்கு எதிரில் பெரிய மலை... அதன் மீது ஏறி இறங்கி அடுத்த பக்கம் போனால் மைசூர் வந்து விடும் என்று நினைத்தேன்... மலை மீது ஏறிய பிறகு இன்னும் 100 கிலோமீட்டருக்கு பயணிக்க வேண்டும் என்று குண்டை தூக்கி போட்டார்கள்... பட் இரண்டு பக்கமும் பச்சை பசேல் கண்களுக்கு குளிர்ச்சியை தந்தது...

ஆசனூரில் பேருந்து நின்றது... பேச்சு துணைக்கு யாரும் இல்லை.. சக்தியில் அவசரத்தில் பேருந்து ஏறி விட்டதுக்கு என்னை நானே நொந்துக்கொண்டேன்... ஒரு கட்டிங்காவது அடித்து விட்டு ஏறி இருக்கலாம்....யோசனையோடு இருந்தேன்... இப்போது பழம் நழுவி பாலில் விழுந்தது. எதிரிலேயே தமிழக அரசின் டமாஸ்மார்க் போர்டு கண்ணில் பட, ஒரு ஆசனூர்காரர் ஒரு கட்டிங்போட கையில் நடுக்கத்தோடு காத்து இருந்தார்...30ரூபாய் என்னிடத்தில் கேட்டார்...60க்கு ஒரு டாப்ஸ்டார் வாங்கினார்..  பாதி பாதி கிளாசில் ஊற்றினார்..அளவு பிரிப்பதில் அவ்வளவு கில்லியாக இருந்தார்...எனக்கு தெரிந்து அவரை காவிரி நடுவர் குழுவில் நடுவராக போடலாம்...

சத்தியமாக சொல்கின்றேன்... நானும் எவ்வளவோ சரக்கு அடித்து இருக்கின்றேன்... ஆனால் 30 ரூபாய் கட்டிங்கில் உலகை மாற்றி காட்டிடும் சக்தி,  தமிழக டாஸ்மார்க்  சரக்கு டாப்ஸ்டாருக்கு உண்டு என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.


(இது என்ன தெரியுமா? கெஸ்ட் அவுஸ் அல்ல சாம்ராஜ் நகரில் இருக்கும் ஒரு தியேட்டர்....)


அடுத்து  கன்னட எல்லையை கடந்து சாம்ராஜ் நகர் மற்றும் நஞ்சன் கூடு கடந்தது..சாம்ராஜ் நகர் டூ நஞ்சன் கூடு 40 கிலோமீட்டர்தான்.. ஆனால் அது நரகவேதனை பயணம் ரோடுசரியில்லை.. நஞ்சன் கூட்டில் ஒரு பெரிய சிவன்  கோவில் இருக்கின்றது.. நிறைய பக்தர்கள் இறங்கினார்கள்..ஒரு முறை போய் சிவனை  சேவிக்க வேண்டும்...அடுத்து மைசூருக்கு 4 மணியிளவில் வந்தேன்...ஒரு மட்டன் பிரியானி சாப்பிட்டு விட்டு பெங்களுருக்கு உடனே பேருந்து ஏறினேன்...

 ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி எதையும் மிக்ஸ் செய்யாமல் பெண்களூர் பேருந்தில்  டிரைவருக்கு பக்கத்தில் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்தேன்.. 95 ரூபாய்க்கு டிக்கெட்... ஸ்ரீரங்க பட்டினத்தில்  ஒரு மூன்று பேர் முழு போதையில் ஏறினார்கள்...
மைசூர் டூ பெண்களூர் 150 கிலோ மீட்டர்... மிகச்சரியாக மாண்டியா தாண்டியதும் அசதியில் கண் அயர... அந்த கேப்பில் அந்நத கும்பல் என் வாட்டர் பாட்டிலை ஆட்டையை போட்டு விட்டார்கள்.

வழியில் இருக்கும் எல்லா ஊர் பேருந்து நிலையமும் ரோட்டிலேயே இருந்தது... நம்ம ஊரில் பெரம்பலூர் மற்றும் பொறையார் பேருந்து நிலையங்கள் ஊருக்கு உள்ளே இருக்கும் பேருந்து உள்ளே போய் வர வேண்டும்... ஆனால் எந்த பேருந்து நிலையமும் அப்படி இல்லை...எல்லா பேருந்து நிலையமும் அவ்வளவு சுத்தம்... இங்கேயும் மாவா,பான்பராக் விற்கபடுகின்றன.

மைசூர் டூ பெண்களூர் ரோட்டில் அவ்வளவு அத்தனை பேரும் பசியோடவா அலைகின்றார்கள்.. ரோட்டின் இரு புறமும் அவ்வளவு ஹோட்டல்கள். எல்லாம் காஸ்ட்லி ஹோட்டல்கள்..நாயுடுஹள்ளி அருகே செமை டிராபிக்.. டிரைவர் என்ஜினை ஆப் செய்து விட்டு உட்கார்ந்து விட்டார்...

இரவு ஒன்பது மணிக்கு சாந்தி நகர் பேருந்து நிலையத்துக்கு வந்தேன்.. 26 மணி நேரமாக தொடர் பயணம்.. பட்டைக்ஸ் பரதநாட்டியம் ஆடாதகுறை...டாய்லட்டில் தொடர் பயணம் காரணமாக மேலும் சிறுநீரில் மஞ்சள்காமாலை போல மஞ்சள் தன்மை இருந்த படியால், சிறு முளை வேக வேகமாக பெருமூளைக்கு கட்டளை இட, இரண்டு பீர் அடித்தால் கலர் மாற்றம்  உறுதி என்று நம்பிக்கை தெரிவிக்க... நான் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...வாசக நண்பர் டியர்பாலாஜியோடு இரவு சாப்பாடு... கடைசி பேருந்தாக ஏசி பேருந்து வர மடிவாளாவில் இறங்கி வீடு நோக்கி நடந்தேன்.


குறிப்பு ....
வெகு நாட்களுக்கு பிறகு தொடர்பயணம்.. கோபிக்கு போவது பற்றி வழி  கேட்டு ஒரு பஸ் விட்டதும்...தெளிவாக வழி சொன்ன நண்பர்கள்.. கடற்கரை .கும்க்கி.நாகராஜசோழன் MA,Venkateswaran, Gurumoorthi, Syed Musthafa, மற்றும் மைசூர் வழி சொன்ன செந்திலுக்கும்.. ஈரோடு வந்துவிட்டு எங்களை சந்திக்காமல் ஏன் போனீர்கள் என்று போன் செய்து, தங்கள் கேள்விகளை முன் வைத்த நண்பர்கள் ஈரோடுகதிர், கார்த்திக், ஜாபர் போன்ற நண்பர்களுக்கு என் நன்றிகள்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.. 

இந்த தளம் பிடித்து இருந்தால் மற்றவருக்கு அறிமுகபடுத்துங்கள்..






(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...




===========

15 comments:

  1. உங்கள் பயணுத்தில் எங்களையும் இணைத்து எல்லா விஷயங்களையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது.

    26 மணி நேர பயணம் பறி படித்த எனக்கே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கண்ண கட்டுதே

    படிக்க நன்றாக இருக்கிறது. நன்றி ஜாக்கி

    ReplyDelete
  2. பதிவர் ஆக வேண்டுமென்றால் எவ்வளவு குறிப்பு எடுக்க வேண்டி இருக்கிறது சிறு சிறு அசைவுகளையும், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Something different Post. I like It. Your narrating style is very clear. I am feeling it.

    Thanks
    LV

    ReplyDelete
  4. கலக்கல் பதிவு அண்ணே .. ஜெய் ஜாக்கி

    ReplyDelete
  5. கேவிஆர் . - //மஞ்சளுக்கு சற்றும் பொறுத்தம் இல்லாத கருப்பு நிறம்.. உள்ளே என்பதால் அந்த அலட்சியம் போல.//

    அதெல்லாம் ஃபேஷன் அண்ணே


    கேவிஆர் . - போரடிக்கல, நல்லா இருக்கு



    Nataraj Srinivas - //நேற்று இரவு தனது கடும்பணியை முடித்து கழட்டி, விசப்பட்ட நிரோத் //

    //ஆசனூர்காரர் ஒரு கட்டிங்போட கையில் நடுக்கத்தோடு காத்து இருந்தார்...30ரூபாய் என்னிடத்தில் கேட்டார்...60க்கு ஒரு டாப்ஸ்டார் வாங்கினார்.. பாதி பாதி கிளாசில் ஊற்றினார்..அளவு பிரிப்பதில் அவ்வளவு கில்லியாக இருந்தார்...எனக்கு தெரிந்து அவரை காவிரி நடுவர் குழுவில் நடுவராக போடலாம்...//

    அடிச்சு ஆடியிருக்கீங்க ஜாக்கி..

    ReplyDelete
  6. பெங்களூர்-மைசூர் பாதையில் நிறைய டூரிஸ்ட் ஸ்பாட் உண்டு... அந்த பாதையில் வாரக்கடைசியில், பைக்கோ, காரோ எடுத்துக்கொண்டு ஜூட் விடுபவர்கள் அதிகம்... அதனால் தான் அந்த பாதையில் நிறைய உணவு விடுதிகள்...

    ReplyDelete
  7. கோபியில் இருந்து அத்தாணி செல்லும் பாதை ஒரு அரைமணி நேர பயணம் தான் போயிருந்தீங்கன்னா நிச்சயம் அளவில்லா மகிழ்ச்சி அடைந்திருப்பீர்...

    அடுத்த முறை கோபி சென்றால் ஒரு அரைமணி நேரம் அந்த பாதையில் செல்ல செலவழிங்கள்...

    ஈரோடு, கோபி வந்துட்டு ஒரு வார்த்தை கூட சொல்லலை அதானல கோவிச்சுகிட்டேன் பங்காளி...

    ReplyDelete
  8. பயண கட்டுரை புத்தகம் எழுத இது ஒரு நல்ல முன்னோட்டம் , வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //அந்த கேப்பில் அந்நத கும்பல் என் வாட்டர் பாட்டிலை ஆட்டையை போட்டு விட்டார்கள்.//
    காவிரி தண்ணியையே ஆட்டையை போட்டவங்க கிட்ட ஜாக்கரதையா இருக்க வேண்டாமா.

    ReplyDelete
  10. உங்களுக்கு யாரோ தப்பு தப்பா வழி சொல்லீருக்காங்க பாஸு, அது சரி பெங்களூர் மேல உங்களுக்கு என்ன அப்பிடி கோபம் எல்லா எடத்துலயும் பெண்களுர் அப்பிடினு எழுதுறீங்க? ஸ்பெல்லிங் தெரியாதா?

    ReplyDelete
  11. சரக்கு டாப்ஸ்டார் மாதிரியே..பதிவும்..டாப்ஸ்டார் தான்... நல்ல நியாபக சக்தி...எழுத்து பிழை தவிர்க்ககூடியது.

    ReplyDelete
  12. நன்றி ராஜகிரி..

    ஷபி குறிப்பெல்லாம் எடுக்கும் வழக்கம் எனக்கு இல்லை..


    நன்றி ஜஸ்ட்பார்லாப்
    நன்றி ரோமியோ நன்றி கேவிஆர்

    நன்றிஆல்இன் ஆல்..

    ஆமாம் ரமேஷ் எனக்கு ஸ்பெல்லிங் தெரியாது....

    செமை டைமிங் தமிழா தமிழா

    நன்றி ரசாக்..

    பங்காளி நான் அப்படியே பஸ் மாறி எறினேன்.. அங்க ஒரு இரண்டு நிமிஷம் கூட இல்லை சாரி.

    ReplyDelete
  13. ஜாக்கி அண்ணா மைசூர்ல தானே நான் இருக்கேன் ... உங்களை மிஸ் பண்ணிட்டேன் ...

    ReplyDelete
  14. ஹலோ ஜாக்கி, என் ஊர் சத்தியமங்கலம் (சத்தி) தான். மைசூர் போறது சுத்துவழி. சத்தி-சாம்ராஜ்நகர்-கொள்ளேகால்-மத்தூர்-பெங்களூர் ஒரு 50கிமீ தூரம் குறைவு. தமிழக பேருந்துகள் அவ்வழியே போகும். கர்நாடக பேருந்துகள் மைசூர் வழியே செல்லும். அடுத்த முறை இதை முயற்சித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  15. Plz visit mysore from salem via mettur, maatheswaran malai, kollegal...

    You can get more thrilling experiences...
    I travelled number of times when i was in job training period...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner