The Grocer's Son/உலகசினிமா/பிரெஞ்சு/பிரான்ஸ் எம்டன்(மளிகைகாரர்) மகன்....



சிறுவயதில் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் தபால்காரர் எல்லோருடைய வீட்டில் உள்ளவர்களின் பெயர்களையும் எப்படி மறக்காமல் நினைவுவைத்துக்கொள்கின்றார் என்று நினைத்து அதிசியத்து இருக்கின்றேன் 

என் அப்பாவுடைய பெயரை நினைவு வைத்து இருக்கலாம் ஆனால் எனக்கு  மூன்றாம் வகுப்பு பரிட்சை ரிசல்ட் கார்டை என்னிடம் சரியாக வந்து கொடுத்த போது பிரமித்த போய் இருக்கின்றேன்... ஆனால் இப்போது ஏழுகழுதை வயசாகி போனபிறகுதான் அந்த உண்மை தெரிகின்றது...



எங்கள் தெருவுக்கு வரும் தபால்காரர் கடமைக்கு வேலை செய்யவில்வலை.... உணர்வாய் வேலை செய்து இருக்கின்றார் என்பதை.....அதே போல கிராமம் தோறும் தண்டலுக்கு பணம் கொடுத்து வசூலிப்பவரும்,தவனை முறையில் புடவை மற்றும் பண்டபாத்திரம் கொடுத்து வாரம் அல்லது மாத மாதம் பணம் வசூலிக்கும் அத்தனை பேருக்கும் அந்த கிராமத்தின் வெள்ளந்திமனிதர்களும் அவர்களின் உறவுகளும் அவர்களுக்கு அத்துப்படி....


அதே போல கிராமத்தின் எந்த திசையில் இருந்து யார் ஊருக்கு
உள்ளே வந்தாலும், அவர்கள் வெகு எளிதாக அடையாளம் கண்டுவிடுவார்கள்...

//சீ டூவுல இருக்கும் பொம்பளை சரியல்லை..கண்ட கண்ட பயலுங்க வந்துட்டு போறாங்க... எவனோ சீடுவுக்கு  போறான்... அவன் அந்த பிளாட்டு உள்ள போனதும் வீல்ன்னு ஒரு சத்தம்...//

/அப்புறம் என்னஆச்சு????//

//அப்புறம் என்ன ஆச்சா? நமக்கு எதுக்கு வம்புன்னு கதவை சாத்திகிட்டு டிவி சிரியலை சத்தமா வச்சி பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.//


ஆனா கிராமத்து மனிதர்கள் அப்படி எளிதில் எனக்கென்ன என்று எந்த விஷயத்திலும் போய்விடமாட்டார்கள்.. அதனால அந்த வெள்ளந்தி மனிதர்களுக்கு உதவி செய்ய மனம் ஏங்கும்.. அப்படியே உதவி செய்தாலும் எளிதில் மறக்கமாட்டார்கள்....

அப்படிபட்ட மனிதர்களோடு பழகுவது என்பது எல்லோருக்கும் கை வராது ஒரு சிலருக்குமட்டும்தான் கைவரும் அப்படி கைவரச்செய்தவன் ஒரு இளைஞன்... அப்படி அவன் என்ன செய்தான்?? பார்ப்போம்.......

நம்ம ஊரில் மொபைல் கோர்ட் இருக்கின்றது...மொபைல் பிரைட்ரைஸ்கடை,மொபைல் நூலகம் இருக்கின்றது,மொபைல்இரத்தவங்கி இருக்கின்றது...ஆனால் மொபைல் மளிகைகடை இருக்கின்றதா? என்ன சார் நம்ம  ஊருல படியை விட்டு கிழ இறங்கினா.. நம்ம நாடார் கடை அல்லது நம்ம செட்டியார்கடை இருக்க போகுது.... இதை எவனாவது வண்டிவச்சிகிட்டு சுத்துவானா???


கரெக்ட்  சென்னையில் நீங்க சொல்லற சௌவுக்கார் பேட் ஏரியாவுல ஒரு தெருவுல ஆயிரம் பேமிலி இருக்கும் அதனால் அது பிரச்சனை இல்லை.. பட் பிரான்ஸ்  நாட்டு புறநகர்களில் வீடுகள் ஒரு கிலோமீட்டருக்கு ஒன்னுதான் இருக்கும் இவுங்களுக்கா ஒரு மளிகைகடை ஒரு செட்டியார் திறந்தார்னா? இரண்டே நாளில் துண்டு போட்டுகிட்டு போக வேண்டியதுதான்... அது போலான கிராமத்துக்கு மொபைல் மளிகைகடைதான் சிறந்தது.. அல்லவா?? அப்படி ஒருத்தன் கிராமத்து மனிதர்களின் அன்பில் நனைந்து அவனும் வளர்ந்த கதை.....


 
The Grocer's Son/உலகசினிமா/பிரெஞ்சு/பிரான்ஸ் எம்டன்(மளிகைகாரர்) மகன்.... படத்தின் கதை என்ன??

டேனியில் என்பர் மளிகை கடை நடத்தி வருகின்றார்.. அவருக்கும் இரண்டு பிள்ளைகள்... அவருக்கு ஹார்ட் அட்டாக் அதனால் தனக்கு பின் தன் மகன்கள் கடையை பார்த்துக்கொள்வான் என்று நினைக்கின்றார்.... ஆனால்  அவரது இரண்டாவது மகன் ஆன்டனி.... அவர் வைத்து இருக்கும்  நடமாடும் மளிகைகடை வேனை எடுத்துக்கொண்டு புறநகர் பகுதிகளில் மக்களோடு மக்களாக பழகி பிசினஸ் டெவலப் செய்து , அப்பா புகழும்  அளவுக்கு எப்படி வாழ்வில் வெற்றி பெருகின்றான் என்பது மீதி கதை.....
 
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....


வேனை எடுத்துக்கொண்டு  முதலில் வேண்டாவெறுப்பாக கிராமத்து பக்கம் போய் அந்த மனிதர்களிடம் முதலில் கரார் தனத்தை காட்டி, அதன் பிறகு அவர்களிடத்தில் விட்டு கொடுத்து பழகும்  இடங்கள் ரசிக்க வைப்பவை....


அவன் போகும் எல்லா கிராமத்துக்கும் குண்டு ஊசியில் இருந்து ஸ்டேப்பிரி வரை சப்ளே செய்வது அவன்தான்......

ஒரு கட்டத்தில் என்னதான் காசுக்கு பொருள் விற்றாலும் அதுவும் ஒரு சேவை என்பதை உணர்கின்றான்...ஒரு நாள் அவன் வேன் வரவில்லை என்றாலும் மக்கள் தவித்து போய் விடுவதை உணர்கின்றான்.

நீ பேரம் பேசுவது போல உன் அப்பா பேசமாட்டார் எனபது போல அவ்வப்போது அவன் அப்பாவை பற்றிய ஓப்பிடும் வியாபாரத்தின் போது  இருக்கும்.....

முதியவர்கள் பொருள் வாங்கினால் அதனை எடுத்துக்கொண்டு போய் வீடுவரை அவர்களோடு நடந்து போய் கொடுப்பதும்......

கோழிப்பண்ணை வைத்து இருக்கும் முதியவரின் பண்ணையின்  ஜன்னல் பிய்ந்து இருப்பதை பார்த்து விட்டு அதற்கு வலை அடித்து கொடுப்பதால் வெளியே கோழிகள் முட்டையிடுவதை தடுத்து அந்த பெரிவருக்கு ஹெல்ப் செய்வது என அவன் உதவிகள் நீள்கின்றன...

ஒரு கிழவிக்கு இவனுக்கு  சண்டை.. ஆனால் அந்த கிழவியடம் திரும்ப அன்பு பாராட்டி, அது  வைத்து இருக்கும் புறநகர் கிராமத்து வீட்டில் பர்மிஷன் கேட்டு ஓய்வு எடுக்கவைத்துகொள்வதும்.. எவரையும் வண்டியில் ஏற்றாத அவன் அந்த கிழவியை வண்டியில் ஏற்றி நகரங்களில் உள்ள கடைத்தெருவுக்கு அழைத்து செல்வது என அந்த நட்பு நீடிப்பது அருமை....


இந்த படத்தின் இயக்குனர் Eric Guirado ஒரு டாக்கு மென்ட்டரி இயக்குனர்... அதனால் பல மெல்லிய உணர்வு பூர்வமான விஷயங்களை அவருக்கே தெரியாமல் இந்த படத்தில் நுழைந்து இருப்பதை படத்தில் நீங்கள்  பார்க்கலாம்....

படத்தின் கவிதையான விஷயம்... போட்டோகிராபியும் அத்ன் பின்னனி இசையும்தான்... சான்சே இல்லாத லேண்ட்ஸ்கேப் ஷாட்டுகள்.... அந்த ஷாட்டுகளை பார்க்கும் போதே மனதில் ஒரு சந்தோஷம் குடி கொள்ளும் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்வீர்கள்..

படத்தில் இருக்கும் மெல்லிய காதல் அது ஒரு தனி டிராக்..

கடைசி காட்சியில் அப்பாவுக்கு மகனுக்குமான அந்த உரையாடல் அன்பே சிவம் படத்தில் கமல் மாதவனுக்கு இடைய நடக்கும் உரையாடலை போன்று நெகிழ்ச்சியாக இருக்கும்...

இந்த படம் தமிழில் எம்டன்மகன் படத்தை லைட்டாக நினைவுபடுத்தினாலும், இரண்டு படத்துக்கும் நிறைய பின் புல வேறுபாடுகள் நிறைய.....பட் ஒன்லைன்..... சரி விடுங்க.....

 =================
படத்தின் டிரைலர்....
 ===========
இந்த படம் வாரிகுவித்த விருதுகள்.
Winner
Shooting Star Award for Outstanding Acting
Berlin International Film Festival    
       
       
    Winner
Audience Award
Berkshires International Film Festival    
       
    Official Selection
Rendez-Vous with French Cinema    
       
       
    Official Selection
German Int’l Francophone Film Festival    
       
    Official Selection
Belgian Int’l Francophone Film Festival    
       
       
    Nominated
Best Breakthrough Performance, Actor
César Awards    
       
    Official Selection
Edmonton Int'l Film Festival    
   
=================

படக்குழுவினர்  விபரம்....

Director:
Eric Guirado
Writers:
Eric Guirado (scenario), Florence Vignon (scenario),
Stars:
Nicolas Cazalé, Clotilde Hesme and Daniel Duval
=======
 பைனல்கிக்..

தன்னம்பிக்கையை சொல்லும் அனைத்து வெற்றிபடங்களும் அனைவருக்கும்  பிடிக்கும்
 உங்களுக்கும் இந்த படம் பிடிக்கும் காரணம் ஒருவன் எப்படி வெற்றி பெறுகின்றான் என்பது கதை...... இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்..
=======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

இந்த தளம் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.





FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...

 




==============

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner