(அம்மாவுக்கு அஞ்சலி)ஒரு மகன் தன் அம்மாவிடம் சொல்லக்கூடாத வாக்கியம்.....
ஒரு மகன் தன் அன்னையிடம் இன்னும் 3 மாதத்தில் நீ இறந்து விடுவாய் என்று சொல்வது போல் ஒரு சூழ்நிலை ஒருவருக்கு உருவானால் எப்படி இருக்கும்??? ... எனக்கு அப்படி ஒரு சூழ்நிலை என் வாழ்வில் வந்தது.....
இன்று என் அம்மாவுக்கு தெவஷம்.... என் அம்மா 23.09.1996 அன்று திங்கட்கிழமை காலையில் என் அப்பா,நான் என் வயதுக்கு வந்த 4 தங்கைகளை விட்டு விட்டு எங்களை அம்போவென விட்டு விட்டு இறைவனடி சேர்ந்த நாள் ... நாள் படி நட்சத்திர படி இன்று அவரை31.08.2009 நினைவு கூறும் நாள் ....
ரேஷன் அரிசி சாப்பிட்டு, கூரை வீட்டில் வாழ்க்கை ஓட்டியபோது எங்களுடன் இருந்தவர்... நாங்கள் நல்ல அரிசி சாப்பிடும் இந்த நேரத்தில், அவர் எங்களோடு இல்லை....
காசநோய் எனது பாட்டிக்கு வந்து அவரை கவனித்து கொள்ள போனவருக்கும் அந்த நோய் தொற்றிக்கொண்டது... என் அம்மாவுக்கு அந்த நோய் தாக்கியும் தொற்றியும் இருக்காது.... அவருக்கு சத்து இல்லாததும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போனதும் முக்கிய காரணம்...,பியுசி படித்த என் அம்மாவிக்கு நிச்சயம் தெரியும் இப்படி இருந்தால் நோய் தொற்றிக்கொள்ளும் என்று தெரிந்தும்... என் பாட்டியை அருகில் இருந்து பார்த்துக் கொண்டாள்... காரணம் தன் அப்பா சொந்த சித்தியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் பத்து வயது ஆன என் அம்மாவை அழைத்துக்கொண்டு பண்ரூட்டியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள மந்தகரையில் தனி வீடு எடுத்து வாசம் செய்தவள் அல்லவா அவள் (என் பாட்டி)....
அதுமட்டும் அல்ல தெரு தெருவாய் ஜாக்கெட் துணி விற்று அதன் மூலம் தன் மகளை பியூசி வரை படிக்க வைத்து, ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கை கொடுத்தவள் அல்லவா அவள்... தன் பெண்ணுக்காக உடல் சுகத்தை தூக்கி போட்டவள் அல்லவா அவள்.... அந்த நன்றிகடனுக்காக என் பாட்டி முகம் சுளிக்காமல் என் அம்மா நடந்து கொண்டாள்...
வேண்டாம் என்று சொன்னால் என் அம்மா சொன்னால்...“ காசநோயளி என்று என்னை ஒதுக்குகின்றாயா? “என்று என் அம்மாவிடம் எதிர் கேள்வி கேட்டதால்? தன்னை பெற்ற மகள் ஒதுக்குகின்றாள் என்று அந்த நினைப்பு தன் பெற்றவளுக்கு வரக்கூடாது என்பதற்க்காக தன்னை காச நோய் அரக்கனிடம் தெரிந்தே என் அம்மா தன்னை அற்பனித்து கொண்டவள்....
கண்டிப்பு காட்டும் இடத்தில் கண்டிப்பு, பாசம் காட்டும் இடத்தில் பாசம் காட்டும் என் அம்மா ஒரு விசித்திர பிறவி....
எங்க அம்மா என்னை உதைத்தது போல் எந்த பிள்ளையும் அவர்கள் அம்மாவிடம் உதைவாங்கி இருக்க மாட்டார்கள்....அப்போதெல்லாம் வீட்டில் அடுப்பு எறிக்க உதவும் சவுக்கு கட்டை எடுத்து ஓட ஓட உதைப்பாள்.....
தன் பையன் படிக்காவிட்டாலும் புத்திசாலியாக ,ஸமார்ட்டாக இருக்க வேண்டும் என்று என்னை சிறுவயதிலேயே நிர்பந்திக்க வைத்தவள்....
முதல்நாள் வகுப்புக்கு போகும் போது ஒரு புது பென்சில், பலப்பம், ரப்பர், சிலேட்டு என்று வாங்கி ஒரு ஜோல்னா பையில் போட்டு கொடு்த்தாள் அன்று மாலை பள்ளி விட்டு வீடு வரும் போது, சிலேட்டு மட்டும்தான் இருக்கின்றது...பென்சில் ரப்பர், பலப்பம் எதுவும் இல்லை... தொலைத்து விட்டேன்... தன் ஜுட்டிகை இல்லாத, மக்கு மகனை நினைத்து அப்போதே கவலை கொள்ள ஆரம்பித்து விட்டாள்.... மறுநாள்
1431 பயோரிய பல்பொடியில் ஒரு சின்ன பல்பம், சின்ன பென்சில் , ஒரு ரப்பர் எல்லாம் போட்டு கொடுத்தாள் அதவும் அன்று மாலை தொலைத்து விட்டு தலை சொறிய, என் அம்மா வந்த கோபத்துக்கு பக்கத்தில் உள்ள சவுக்கை மிளாரை எடு்த்துக் கொண்டு பத்ரகாளியாக மாறி பல் கடித்து என்னை ஓட விரட்டி என்னை சுளுக்கெடுத்த ராட்சசி அவள்....
இன்று என் வீட்டில் என் சம்பந்த பட்ட ஆவணங்கள் மிக நேர்த்தியாக கோப்புகளில் அடிக்கு வைத்து இருப்பேன் என் மனைவியின் ஆவணங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் கிடக்கும்... அதற்க்கு காரணம் என் அம்மா கொடுத்த உதைதான்.....
இருமல் மற்றும் சளியோடு போராடிய என் அம்மா...என் அம்மா மருத்துவரை பார்த்த போது என் அம்மாவின் ஒரு பக்க நுரையிரலை காசநோய் கிருமிகள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டன.... அதன் பிறகு ஒரு 5 வருடம் காலம் உயிரோடு இருந்தாள்....
கால் மற்றும் வயிறு உப்பி சிறுநீர் கழிப்பதில் என் அம்மா சிரம பட்ட போது மீண்டும் டாக்டரை பார்த்த போது இன்னும் 3 மாதம் உன் அன்னை உயிரோடு இருப்பார் என்று டாக்டர் சொன்ன போது என் அம்மா என்ன சொன்னார்? என்ன சொன்னா? என்று என்னை நோண்டி நோண்டி கேட்ட போது என்னால் உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை...
அப்போது மரண பயத்தை என் அம்மாவின் கண்களில் பார்த்தேன்.. அந்த கொடுமை எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது... என் அப்பா துவண்டு போய் விட்டார்....
நான் என் அம்மாவை கடலூரில் இருந்து பாண்டி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உள்ள காசநோய் மரு்துதவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க அழைத்து செல்ல என்னிடம் கார் வைத்து அழைத்து போக கூட என்னிடம் அப்போது பணம் இல்லை வீங்கிய காலுடன் உள்ள அம்மாவை பேருந்து ஏற வைத்து பாண்டி பேருந்து நிலயத்தில் இறக்கி ஆட்டோ வைக்க காசு இல்லாமல் டெம்போவில் ஏற சொன்னால்... தன் பிள்ளை தன் கூடவே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்... அவளால் டெம்போ ஏற வீக்கிய காலை அவளால் மடக்கி ஏற முடியவில்லை...
(இன்று என் வீட்டில் சிறு படையல் வைத்து என் அம்மாவை நினைவு கூர்ந்த போது எடுத்தபடம்)
நான் வாடகை சைக்கிள் எடுத்து வந்து பின்புறம் கேரியரை அவள் பின்புறம் வைத்து அதில் உட்கார வைத்து அப்படியே சைக்கிளை நிமிர்த்தி...நான் பேலன்ஸ் பண்ணி ஏறி சைக்கிள் மிதித்தேன் மனம் எல்லாம் காயத்துடன் அம்மா படும் உடல்வலி பொறுக்க முடியாமல்....
ஜிப்மர் மருத்துவமனை பாண்டி பேருந்து நிலயத்தில் இருந்து மேடான பகுதியில் இருக்கும்.... என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்லை ஒரு இரண்டு கிலோமீட்டர் அவளை வைத்து நான் சைக்கிள் மிதித்து சென்றதை என்னால் எப்போதும் மறக்க முடியாது....நாக்கு தள்ளிவிட்டது.... நான் படும் அவஸ்த்தை பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....
அதன் பிறகு டாக்டர் குறித்து கொடுத்த மூன்று மாதத்தில் இருந்து , நான் எடுத்து மேல்கட்ட நடவடிக்கையால் அந்த பாண்டிகாசநோய் மருத்துவமனையில் மேலும் மூன்று மாதங்கள் கடவுள் என் அம்மாவுக்கு உயிர் பிச்சை அருளினார்...
என் அம்மா வயிறு வீங்கி கஷ்டப்பட்ட போது என்னிடம் அப்போது மட்டும் என்னிடம், பணம் இருந்து இருந்தால் இன்னும் கூட ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்து இருக்க முடியும்....5 பிள்ளைகள் உயிர் வாழ ரேஷன் அரிசி உதவி செய்த காலம் அது... என்ன செய்ய...? எல்லாம் விதி...
இறக்கும் முன் மூன்று நாளைக்கு முன்பு என் அம்மா மஞ்சள் பூசி கேசத்துக்கு சிக் ஷேம்பூ போட்டு சி்க்கென்று இருந்தால்....
என் அம்மா என்னிடம் கேட்டாள்???
நான் செத்துட்டா நீ என்ன செய்வாய்? என்று நான் சொன்னேன்... அந்த மரம் ஒருநாள் சாக போகின்றது... இந்ததாத்தா ஒருநாள் சேத்து போவார்.. அந்த புது கார் ஒருநாள் பழசா ஆகும் எல்லாரும் ஒருநாள் சாகப்போறோம்... என்ன நீ கொஞ்சம் சீக்கிரம் என்றேன்...
தன் பிள்ளை புத்திசாலிதனமாய் பேசுவதை நினைத்து வியந்து போனாள்... அந்த கோலத்தில் அவளை போட்டோ எடுக்க சொன்னாள்.... இன்னும் இரண்டுநாளில் நான் கேமரா வாங்கி வந்து எடுக்கின்றேன் என்று சொல்லி இருந்தேன் அதற்க்குள் கடவுளுக்கு அவசரம் என்ன செய்ய ?என் அம்மாவின் கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை....
இதுவரை ஒரு லட்சத்துக்கு அதிகமான காட்சிகளை நான் கேமராவில் சிறைபடுத்தி இருப்பேன்....இன்னும் சிறைபடுத்துவேன்..ஆனால் என் அம்மாவை சிக் ஷேம்பூ போட்டு குளி்த்து சிக்கென இருந்த என் அம்மாவை கேமரா சட்டத்தில் என்னால் சிறைபடுத்த முடியாமல் போய் விட்டது....
இன்றும் என் அம்மா உயிர் விட்டபாண்டி ஜிப்மர் எதிரே உள்ள காசநோய் மருத்துவமனையை கடக்கும் போது, நான் பேருந்தில் சென்றாலும், பைக்கில் சென்றாலும் அந்த மருத்துவமனையை பார்த்து சேவித்து கொள்வேன்....
பேருந்தில் போகும் போது நான் அப்படி சேவிக்கையில் எல்லோரும் எசூதா கோவில் இருக்கின்றது என்று பேருந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க அங்கே மருத்துவமனைதான் இருக்கும்.... குழம்பி போன மனநிலையில் என்னை வித்யாசமாக பார்க்கும், சக பயணியிடம் சொல்ல முடியுமா? என் அன்னையோடு கடைசியாக உறவாடிய இடம் இந்த இடம் என்று.....
என் அம்மாவை பற்றி சில நினைவுகள் இன்னும் பல பதிவுகளில் அவள் நினைவு வரும் போது எல்லாம்....
எனக்கு எல்லாம் கத்து கொடுத்த குரு என் அம்மாவுக்கு இந்த பதிவு சமர்பணம்...மனதில் இருந்த பாராம் குறைந்தது போல் உள்ளது...
நன்றி
அன்புடன்
ஜாக்கிசேகர்...
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
இன்றும் என் அம்மா உயிர் விட்டபாண்டி ஜிப்மர் எதிரே உள்ள காசநோய் மருத்துவமனையை கடக்கும் போது]]
ReplyDeleteரொம்ப கஷ்ட்டமாயிருக்கு நண்பா ...
this post has moved my heart. i am sorry you have lost your mother when you have been struggling in your life.
ReplyDeletejigopi
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது! தங்கள் அம்மாவின் அர்ப்பணிப்புக்கும் மன உறுதிக்கும் தலை வணங்குகிறேன்!
ReplyDeleteஅவருக்கு எனது அஞ்சலிகள்!!
நெகிழ்ச்சியான நினைவுப்பதிவு.
ReplyDeleteஅம்மாவிற்கு எங்களது நினைவாஞ்சலிகளும் நண்பரே...
எனது நினைவாஞ்சலிகள். அம்மாக்கள் எப்போதும் பாவமானவர்கள்
ReplyDeleteதங்கள் அன்னையின் ஆசியுடன் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே ..!
ReplyDeleteமிகவும் நெகிழ்ச்சியான பதிவு.
ReplyDeleteஅம்மாவிற்கு எனது அஞ்சலிகள்
ReplyDelete//பேருந்தில் போகும் போது நான் அப்படி சேவிக்கையில் எல்லோரும் எசூதா கோவில் இருக்கின்றது என்று பேருந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க அங்கே மருத்துவமனைதான் இருக்கும்.... குழம்பி போன மனநிலையில் என்னை வித்யாசமாக பார்க்கும், சக பயணியிடம் சொல்ல முடியுமா? என் அன்னையோடு கடைசியாக உறவாடிய இடம் இந்த இடம் என்று.....//
ReplyDeleteகண்கலங்க வைத்த வரிகள்....
அம்மாவுக்கு நிகர் அம்மா தான். ஆண்டன் கூட பிறகுதான்.
எனது அஞ்சலிகள் சார்.
ReplyDelete//ஜிப்மர் மருத்துவமனை பாண்டி பேருந்து நிலயத்தில் இருந்து மேடான பகுதியில் இருக்கும்.... என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்லை ஒரு இரண்டு கிலோமீட்டர் அவளை வைத்து நான் சைக்கிள் மிதித்து சென்றதை என்னால் எப்போதும் மறக்க முடியாது....நாக்கு தள்ளிவிட்டது.... நான் படும் அவஸ்த்தை பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....//
ReplyDelete:-((((((
அம்மாவிற்கு எனது அஞ்சலிகள்.
கண்கலங்க வைத்து விட்டீர்கள்...
ReplyDeleteஅம்மாவிற்கு எனது அஞ்சலிகள்...
அம்மாவிற்கு எங்களது நினைவாஞ்சலிகளும்
ReplyDeleteநெகிழ்வான பதிவு அடிக்கடி எம்மைப் நெகிழ்விக்கின்றீர்கள்.
ReplyDeleteஎனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் அஞ்சலிகள்..
ReplyDeleteமனசு நெறைய இப்படிப் பாரம் ஏத்திவச்சுட்டீங்களே.....
ReplyDeleteநானும் என் அம்மாவை நினைவு கூர்ந்தேன்.
சிலசமயம் நினைச்சுக்க்றதுண்டு...இன்னும் அந்த மரணங்களுக்குச் சரியானமுறையில் துக்கம் கொண்டாடலையோன்னு.
11 வயசுப் பொண்ணுக்கு அப்ப ஒன்னும் விவரமில்லேப்பா(-:
நம்மைவிட்டுப்போன எல்லா அம்மாக்களுக்கும் அஞ்சலிகள்.
இடுகையை படித்ததும் கண்கள் ஈரமாவதை தவிர்க்க முடியவில்லை தோழரே...
ReplyDeleteகண் கலங்கிருச்சுங்க....
ReplyDeleteஅம்மாவிற்கு என் அஞ்சலிகள்!
ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு. கலங்க வைத்துவிட்டீர்கள்.
ReplyDeleteEnnudaya nilamaiyum ippadi than.
ReplyDeleteDont feel!
என்ன சொல்வதென்று தெரியவில்லை...
ReplyDeleteஇழப்பை ஈடு கட்ட முடியுமா என்ன....
இரு வருடங்கள் முன்புதான் நானும் இழந்தேன்...
ராணி போல வைத்திருக்க வேண்டுமென்றுதான் நெனைக்கிறோம்..
கடவுள் விடுவதில்லை சேகர்..
கண்ணீருடன்..
கண்கலங்க வைத்து விட்டீர்கள் சேகர் ,என் அப்பாவின் நினைவு இன்னமும் என் மனதில்.
ReplyDeleteஹரி ராஜகோபாலன்
அண்ணா...
ReplyDeleteஅன்னைக்கு அஞ்சலிகள்.
அம்மா.... நம்மை ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்.
பெரும்பாலும் அம்மா பக்கத்தில் இருக்கும்போது, நமக்கு அவுங்க அருமை தெரியாது. அந்த நிழலில் இருந்து வெளியே வந்தபிறகுதான் அருமை புரியும். உயிரோடு இருக்கும்போது அந்த நடமாடும் தெய்வங்களை, முதியோர் இல்லங்களில் வச்சிட்டு, இறந்தபிறகு புகைப்படமா மாட்டுறது ரொம்ப நெருடலான விஷயம். கடைசி காலத்தில் அவுங்ககூட இருந்திருக்கீங்க..பெரிய விஷயம்...
ReplyDelete-சங்கர் நவநீத கிருஷ்ணன்--
மனசை கனக்க வச்சிட்டீங்களேண்ணே..
ReplyDeleteஇந்த பதிவு என் இதயத்தை கையால் பிசைந்ததுபோல் இருக்கு...
சொல்ல வார்த்தைகள் தடுமாறுது..
அம்மாவி்ன் ஆத்மா சாந்தியடையட்டும்!
ஜாக்கி சாய்ந்து அழ தோளில்லாத போது இந்த மாதிரி அழுகாச்சி நினைவுகள் வேண்டாம், அது சோகத்தை கூட்டும், சுதா வந்த பிறகு வைத்துக்கொள்ளலாம்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
தாயிழந்த துன்பம் போலே துன்பமது ஒன்ரும் இல்லை.
ReplyDeleteமனம் கனத்து போனது.
இருக்கும் போது வாங்கிக்கொள்ள கொடுத்து வைக்கவில்லையே?
எனக்கும் இதே சோகம்தான்.
நமக்கெல்லாம் சொர்கத்திலிருந்து
பரிபூரண ஆசிர்வாதங்கள் உண்டு.
கலங்க வேண்டாம்
பெற்றவளையும் மனத்தில் வைத்து போற்றும் உன் தாய் பாசத்திற்கு தலை வணக்கு கிறேனடா ஜாக்கி என் பிரிய நண்பனே !
ReplyDeleteஅம்மாவுக்கு என் அஞ்சலி,கலங்க வைத்து விட்டீர்கள்.
ReplyDeleteஜிப்மர் மருத்துவமனையை கடக்கும் போது இனி எனக்கும் உஙகள் நினைவுதான் வரும் சேகர்
ReplyDeleteஅம்மாவிற்கு என் அஞ்சலிகள்!
மிகவும் உருக்கமான பதிவு. அம்மாவிற்கு அஞ்சலி.
ReplyDeleteஅம்மாவிற்கு எங்களது நினைவாஞ்சலி
ReplyDeleteஇன்றும் என் அம்மா உயிர் விட்டபாண்டி ஜிப்மர் எதிரே உள்ள காசநோய் மருத்துவமனையை கடக்கும் போது]]
ReplyDeleteரொம்ப கஷ்ட்டமாயிருக்கு நண்பா --//
நன்றி ஜமால் என் பிரிவு துயரில் பங்கெடுத்துக்கொண்டதற்க்கு என் நன்றிகள்...
this post has moved my heart. i am sorry you have lost your mother when you have been struggling in your life.
ReplyDeletejigopi//
நன்றி கோபி மிக்க நன்றி தங்கள் எண்ணத்திற்க்கு
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது! தங்கள் அம்மாவின் அர்ப்பணிப்புக்கும் மன உறுதிக்கும் தலை வணங்குகிறேன்!
ReplyDeleteஅவருக்கு எனது அஞ்சலிகள்!!//
நன்றி சந்தனமுல்லை தங்கள் வருகைக்கும் மனமுவந்த பாராட்டுக்கும்...
நெகிழ்ச்சியான நினைவுப்பதிவு.
ReplyDeleteஅம்மாவிற்கு எங்களது நினைவாஞ்சலிகளும் நண்பரே.//
நன்றி துபாய் ராஜா....
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு..
ReplyDeleteமனம் கலங்கி விட்டது நண்பரே.
அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய நானும் கடவுளை வேண்டி கொள்கிறேன்.
-நட்புடன்
RAMKUMAR
:-(
ReplyDeleteஉங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை எல்லோர் மனதிலும் இடம் பிடிக்க செய்துவிட்டிர்கள் இப்போது எத்தனை மகன்கள் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார்கள்
ReplyDeleteகலங்கியிருக்கிறீர்கள். கலங்க வைத்துவிட்டீர்கள்.
ReplyDeleteநீங்களும் விழுப்புரம்தானா?
//“ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....////
ReplyDeletehm! :(
கண்கலங்க வைத்து விட்டீர்கள்...
ReplyDeleteஎனது நினைவாஞ்சலிகள். அம்மாக்கள் எப்போதும் பாவமானவர்கள்--
ReplyDeleteஉண்மைதான் யோ வாய்ஸ்...அதிலும் வயதான காலத்தில் ரொம்பவும் பாவம்
தங்கள் அன்னையின் ஆசியுடன் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே ..!//
ReplyDeleteநன்றி பேரரசன் மிக்க நன்றி
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.//
ReplyDeleteநன்றி சந்திர வந்தன உங்கள் முதல் வருகைக்கு...
அம்மாவிற்கு எனது அஞ்சலிகள்//
ReplyDeleteநன்றி ராதாகிருஷ்னன்
/பேருந்தில் போகும் போது நான் அப்படி சேவிக்கையில் எல்லோரும் எசூதா கோவில் இருக்கின்றது என்று பேருந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க அங்கே மருத்துவமனைதான் இருக்கும்.... குழம்பி போன மனநிலையில் என்னை வித்யாசமாக பார்க்கும், சக பயணியிடம் சொல்ல முடியுமா? என் அன்னையோடு கடைசியாக உறவாடிய இடம் இந்த இடம் என்று.....//
ReplyDeleteகண்கலங்க வைத்த வரிகள்....
அம்மாவுக்கு நிகர் அம்மா தான். ஆண்டன் கூட பிறகுதான்.//
நல்லது யோகன் மிக்க நன்றி
கண்கலங்க வைத்து விட்டீர்கள்...
ReplyDeleteஅம்மாவிற்கு எனது அஞ்சலிகள்...//
நன்றி ராஜன் மிக்க நன்றி
எனது அஞ்சலிகள் சார்.//
ReplyDeleteநன்றி இளவட்டம் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்கும்
நன்றி வந்திய தேவன் சூர்யன்
ReplyDeleteநன்றி கிஷோர்
ReplyDeleteமனசு நெறைய இப்படிப் பாரம் ஏத்திவச்சுட்டீங்களே.....
ReplyDeleteநானும் என் அம்மாவை நினைவு கூர்ந்தேன்.
சிலசமயம் நினைச்சுக்க்றதுண்டு...இன்னும் அந்த மரணங்களுக்குச் சரியானமுறையில் துக்கம் கொண்டாடலையோன்னு.
11 வயசுப் பொண்ணுக்கு அப்ப ஒன்னும் விவரமில்லேப்பா(-:
நம்மைவிட்டுப்போன எல்லா அம்மாக்களுக்கும் அஞ்சலிகள்.//
டீச்சர் உங்களுக்கு 11 வயசு..இந்த தடி மாடுக்கு அப்ப 20 வயசு...
என்ன செய்ய... எல்லா பிள்ளைகளும் தவிக்க விட்டு போன அம்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவாக இது இருப்பதில் மகிழ்ச்சு....
இடுகையை படித்ததும் கண்கள் ஈரமாவதை தவிர்க்க முடியவில்லை தோழரே...//
ReplyDeleteநன்றி அன்புமணி தங்கள் உணர்ச்சியை வெளிபடுத்தியதற்க்கு
கண் கலங்கிருச்சுங்க....
ReplyDeleteஅம்மாவிற்கு என் அஞ்சலிகள்!//
நன்றி கபிலன் மிக்க நன்றி
கண் கலங்கிருச்சுங்க....
ReplyDeleteஅம்மாவிற்கு என் அஞ்சலிகள்!//
நன்ற வானம்பாடி ... எல்லோரும் எந்தளவுக்கு அன்னையை நேசிக்கின்றார்கள் என்பது எனக்கு புரிகின்றது....
நன்றி தங்கள் முதல் வருகைக்கு
Ennudaya nilamaiyum ippadi than.
ReplyDeleteDont feel!//
நன்றி வேலி முதல் வருகைக்கும் பகிர்விர்க்கும்
என்ன சொல்வதென்று தெரியவில்லை...
ReplyDeleteஇழப்பை ஈடு கட்ட முடியுமா என்ன....
இரு வருடங்கள் முன்புதான் நானும் இழந்தேன்...
ராணி போல வைத்திருக்க வேண்டுமென்றுதான் நெனைக்கிறோம்..
கடவுள் விடுவதில்லை சேகர்..
கண்ணீருடன்..//
ஆமாம் இளங்கோ கடவுள் நுஙசம் சில நேரத்தில் கல்லாக போய் விடுகின்றது..
கண்கலங்க வைத்து விட்டீர்கள் சேகர் ,என் அப்பாவின் நினைவு இன்னமும் என் மனதில்.
ReplyDeleteஹரி ராஜகோபாலன்//
ந்ன்றி ஹரி உங்கள் அப்பாவை இந்த இடத்தில் நினைவு கூர்ந்ததிற்க்கு
அண்ணா...
ReplyDeleteஅன்னைக்கு அஞ்சலிகள்.
அம்மா.... நம்மை ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்.//
நிச்சயமாக இங்கு பார்வையாளானாய் வந்த அனைவரையும்..
Blogger Sankar Navaneetha Krishnan said...
ReplyDeleteபெரும்பாலும் அம்மா பக்கத்தில் இருக்கும்போது, நமக்கு அவுங்க அருமை தெரியாது. அந்த நிழலில் இருந்து வெளியே வந்தபிறகுதான் அருமை புரியும். உயிரோடு இருக்கும்போது அந்த நடமாடும் தெய்வங்களை, முதியோர் இல்லங்களில் வச்சிட்டு, இறந்தபிறகு புகைப்படமா மாட்டுறது ரொம்ப நெருடலான விஷயம். கடைசி காலத்தில் அவுங்ககூட இருந்திருக்கீங்க..பெரிய விஷயம்...
-சங்கர் நவநீத கிருஷ்ணன்--//
இது இங்க பல பேருக்கு புரியறதில்லை...
மனசை கனக்க வச்சிட்டீங்களேண்ணே..
ReplyDeleteஇந்த பதிவு என் இதயத்தை கையால் பிசைந்ததுபோல் இருக்கு...
சொல்ல வார்த்தைகள் தடுமாறுது..
அம்மாவி்ன் ஆத்மா சாந்தியடையட்டும்!//
நன்றி கலை மிக்க நன்றி உணர்வை பகிர்ந்து கொண்டதற்க்கு...
ஜாக்கி சாய்ந்து அழ தோளில்லாத போது இந்த மாதிரி அழுகாச்சி நினைவுகள் வேண்டாம், அது சோகத்தை கூட்டும், சுதா வந்த பிறகு வைத்துக்கொள்ளலாம்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
நீங்கள் சொல்வது உண்மைதான் இருந்தாலும்...இந்த நேரத்தில் அந்த பாரத்தை இறக்கி வைத்தே ஆக வேண்டும்...
தாயிழந்த துன்பம் போலே துன்பமது ஒன்ரும் இல்லை.
ReplyDeleteமனம் கனத்து போனது.
இருக்கும் போது வாங்கிக்கொள்ள கொடுத்து வைக்கவில்லையே?
எனக்கும் இதே சோகம்தான்.
நமக்கெல்லாம் சொர்கத்திலிருந்து
பரிபூரண ஆசிர்வாதங்கள் உண்டு.
கலங்க வேண்டாம்//
நன்றி கார்த்தி நிச்சயமாக...பகிர்விற்க்கு நன்றி
பெற்றவளையும் மனத்தில் வைத்து போற்றும் உன் தாய் பாசத்திற்கு தலை வணக்கு கிறேனடா ஜாக்கி என் பிரிய நண்பனே !//
ReplyDeleteநன்றி கக்கு மாணிக்கம் மனம் முழுவதும் நேசமும் உணர்ச்சி வசப்படல் இருந்தால்தான் இந்த மாதிரி பின்னுட்டம் இட முடியும்...
நன்றி பிரிய நண்பா..
நன்றி ஸ்ரீ
ReplyDeleteஜிப்மர் மருத்துவமனையை கடக்கும் போது இனி எனக்கும் உஙகள் நினைவுதான் வரும் சேகர்
ReplyDeleteஅம்மாவிற்கு என் அஞ்சலிகள்!//
நன்றி வெட்டிபையன்
மிகவும் உருக்கமான பதிவு. அம்மாவிற்கு அஞ்சலி.//
ReplyDeleteநன்றி சங்கர் தியாகராஜன்
அம்மாவிற்கு எங்களது நினைவாஞ்சலி//
ReplyDeleteநன்றி ரவீ
உங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை எல்லோர் மனதிலும் இடம் பிடிக்க செய்துவிட்டிர்கள் இப்போது எத்தனை மகன்கள் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார்கள்//
ReplyDeleteஉண்மைதான் பிஸ்கோத்து பயல் எத்தனை மகன்கள் மகள்கள்....
கலங்கியிருக்கிறீர்கள். கலங்க வைத்துவிட்டீர்கள்.
ReplyDeleteநீங்களும் விழுப்புரம்தானா?//
நன்றி தமிழ்நாடான்
//“ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....////
ReplyDeletehm! :(//
நன்றி சர்வேசன்
கண்கலங்க வைத்து விட்டீர்கள்...//
ReplyDeleteநன்றி முத்து பாலகிருஷ்ணன்
//பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த//
ReplyDeleteஉங்கள் மன நிலை புரிகிறது. இருக்கும் போது சொல்லும் சில விஷயங்கள், ஆற தழும்புகளாகி விடுகிறது.
This comment has been removed by the author.
ReplyDeleteமிகவும் உருக்கமான பதிவு. கண்கலங்க வைத்து விட்டீர்கள்
ReplyDelete-Nirojan
உங்கள் அம்மாவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன்
ReplyDelete// என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்லை ஒரு இரண்டு கிலோமீட்டர் அவளை வைத்து நான் சைக்கிள் மிதித்து சென்றதை என்னால் எப்போதும் மறக்க முடியாது....நாக்கு தள்ளிவிட்டது.... நான் படும் அவஸ்த்தை பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....//
ReplyDeleteஎன்னால் இந்த வரிகளை மறக்கவே முடியாது.இந்த வரிகளை படித்தவுடன் சில நிமிடங்கள் நிறுத்தி என் மனதில் அந்த நிகழ்வை படம் போல் ஓட்டிப்பார்த்தேன்.2005 ஆம் ஆண்டிலிருந்து பதிவுகளை படித்து வருகிறேன்.ஒரு பதிவை படித்து அது மிக அதிகபட்ச அதிர்வையும்,பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது இதுவே எனக்கு முதல் முறை.அம்மாவிற்கு எனது அஞ்சலிகள்.
// என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்லை ஒரு இரண்டு கிலோமீட்டர் அவளை வைத்து நான் சைக்கிள் மிதித்து சென்றதை என்னால் எப்போதும் மறக்க முடியாது....நாக்கு தள்ளிவிட்டது.... நான் படும் அவஸ்த்தை பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....//
ReplyDeleteஎன்னால் இந்த வரிகளை மறக்கவே முடியாது.இந்த வரிகளை படித்தவுடன் சில நிமிடங்கள் நிறுத்தி என் மனதில் அந்த நிகழ்வை படம் போல் ஓட்டிப்பார்த்தேன்.2005 ஆம் ஆண்டிலிருந்து பதிவுகளை படித்து வருகிறேன்.ஒரு பதிவை படித்து அது மிக அதிகபட்ச அதிர்வையும்,பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது இதுவே எனக்கு முதல் முறை.அம்மாவிற்கு எனது அஞ்சலிகள்.
அம்மாவிற்கு எனது அஞ்சலிகள்.
ReplyDeleteஇருக்கும்வரை குறைந்திருக்கும்
ReplyDeleteஇல்லாதபோது நிறைந்திருக்கும்
பாசம்......
என் அஞ்சலிகள்!!! தைரியமா இருங்க சேகர்!!!
ReplyDeleteகடைசி வரிகளை கண்ணீர் மறைத்துவிட்டது சேகர்!
ReplyDeleteஅம்மா......! உங்கள் மகன் நல்லவராக நல்லவர்களுடன் உள்ளார்!
ஆசீர்வதியுங்கள்!
I am very new to ur blogspot. I read many of yours but this shook me a bit. sorry for your loss brother.
ReplyDeleteஇன்று தான் இந்த கட்டுரை வாசிக்க முடிந்தது. மனது வலிக்கிறது ஜாக்கி;
ReplyDeleteநீ இந்த postஐ வாசித்தபின் என் அம்மா மேல் கொண்ட பாசம் இன்னும் ஒரு சென்டி மீட்டர் கூட வளர்ந்ததாக உணர்கிறேன்.ஜாக்கி!உங்கள் தாய் இறக்கவில்லை,உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
ReplyDeleteயப்பா எ ஜோக் சொல்லும் பயலா இவன் படிச்சு முடிக்கிறதுக்குள்ள அழ வச்சு யப்பா அப்ப
ReplyDeleteசைக்கில் மிதிக்க முடியாம அம்மா கத்தும் மகன்கள் எத்துனைபேர்