(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...
எப்போதுமே காட்டு விலங்குகள் அது பாட்டுக்கு அதன் வாழ்விடங்களில் வசித்து கொண்டு இருக்கும்.. நாம்தான் அதனை அவ்வப்போது நோன்டி வினையை விலைக்கு வாங்கி கட்டி கொள்கின்றோம்..
ஒரு வாரத்துக்கு முன் கூட ஊட்டி முதுமலையில் ஒரு வெளிநாட்டு கார பெண்மணியை யானை அடித்து போட்டு கொன்று விட்டது.... காரணம் வன விலங்குகளை பார்பதற்க்கு காட்டின் உள்ளே பாதுகாப்பற்ற இடத்துக்கு கைடு அழைத்து்கொண்டு போயிருக்கின்றான்.. அது இடத்துக்கு அழையா விருந்தாளியாக போனதால் அயானை அடித்து போட்டு விட்டது... இது பராவாயில்லை சிங்கம், புலியாக இருந்தால் அவ்வளவுதான் ... மிக வலியுடன் கொடுரமாக இறக்க வேண்டியதுதான்... அப்படி ஆப்பி்ரிக்கா காட்டில் சிங்கம் புலி பார்க்க அழையா விருந்தாளியாக காட்டில் செல்லும் ஒரு குடும்பத்தின் நிலை என்ன என்பதை சொல்லலும் படம்தான் பிரே..
PREY படத்தின் கதை இதுதான்....
நியுமேன் என்பவன் ஆப்பிரிக்க காட்டில் வேலை விசயமாய் தங்கி இருப்பவன் இவனது மனைவி இரு குழந்தைகளும் காட்டு விலங்குகள் பார்க்க ஆசைபட அவர்கள் ஒரு ஜீப்பில் ஒரு கைடுடுன் அனுப்பி வைக்கின்றான்...அந்த இரண்டு பசங்களில் ஒன்று 14 வயது பெண் , ஒன்று10 வயது ஆண்பிள்ளை ... அம்மப ஸ்தானத்தில் இருப்பவள் அம்மா அல்ல...ஸ்டெப் மதர் .. அதனால் முதலில் இருந்தே அவளை அந்த பசங்களுக்கு பிடிக்கவில்லை... அஇவள் எது சொன்னாலும் அவளை ஒரு காமெடி பீஸ் போல் நடத்துகின்றார்கள்....
அழைத்து போன கைடை சிங்கம் அடித்து கொன்று விட அதன் பிறகு அந்த இரண்டு பிள்ளைகளும் அந்த ஸ்டெப் மதர் எனனவானார்கள் என்பது மீதி கதை... ஒரு விஷயம் எடுத்து போன ஜீப் ஆக்கிசடென்ட் ஆகி விட என்ன செய்து இருப்பபார்கள் அவர்கள்???? வெண் திரையில் பாருங்கள்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
இது மாதிரி திகில் படங்களை பொறுத்தவரை நிறைய வந்து விட்டது .... சவுண்டில் மிரட்டியே வயிற்றை கலக்க வைத்து விடுவார்கள்....
இந்த படத்தில் ஆப்பி்ரிக்க காட்டின் அழகை அப்படியே செல்லுலாய்டில் கேமராமேன் பதிய வைத்து இருப்பார்
இந்த படம் உண்மை சம்வங்களின் அடிப்படையில் எடுத்த படம்....
ஸ்டெப் மதரை அம்மா என்று அழைக்கும் அளவுக்கு எடுத்து போன திரைக்கதை அற்புதம்
என்ன இருந்தாலும் இந்த படம் டைம்பாஸ்படம்தான்..
இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ இந்த படம் தமி்ழில் டப் செய்ய பட்டு வருகின்றது...
பல காட்சிகளில் உண்மையிலேயே மிரட்டி வயிற்றை கலக்க வைத்து இருப்பார்கள்...
ஜுராசிக் பார்க்கும் இந்த படத்துக்கு அடிப்படை ஒன்றுதான்
அது பெரிய பட்ஜெட் இது சின்ன பட்ஜெட் படம் .... அவ்வளவுதான்....
படத்தின் டிரைலர்....
படக்குழுவினர் விபரம்
Release: January 30, 2008 (U.S.)
Directed by: Darrell Roodt
Written by: Darrell Roodt, Beau Bauman and Jeff Wadlow
Starring:
Bridget Moynahan as Amy Newman
Peter Welleras Tom Newman
Carly Schroeder as Jessica Newman
Jamie Bartlett as Crawford
Conner Dowds as David Newman
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
டைம்பாஸ் படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
இந்த படம் உண்மை சம்வங்களின் அடிப்படையில் எடுத்த படம்....]]
ReplyDeleteஓஹ்!
ஓகே பார்த்துடலாம் சார்.
ReplyDelete