கமல் காப்பி அடிப்பவரா?
போன பதிவான பர்சூட் ஆப் ஹேப்பி படத்தின் விமர்சனத்தில் ஹாலிவுட் நடிக்ர் வில்ஸ்மித்தை கமலுக்கு இனையான என்று வார்த்தையை போட பலர் வருத்தப்பட்டு பின்னுட்டம் இட்டார்கள்... கமல் ஒரு நல்ல நடிகனே அல்ல அவர் எல்லாவற்றையும் ஆங்கில படத்தில் இருந்தது காப்பி அடித்து ஓப்பேற்றுகின்றார் என்ற அளவில் பதில் போட்டு இருந்தார்கள்...
காப்பி அடிப்பது என்றால் என்ன???
இங்கு எதுவும் சுயம்பு அல்ல, எல்லாமே மனிதர்களின் வலிகளும் அனுபவங்களும் மற்றவனுக்கு பாடம்...நம் பாடத்திட்டமே ஈ அடிச்சான் காப்பி முறைதான்...சினிமா நமது கண்டுபிடிப்பே அல்ல... அது நமது நாட்டுக்கு அறிமகமானபோது பல வெளிநாட்டினர் வந்து மொழி தெரியாமல் இந்தியா வந்து வேலை செய்து விட்டு போனார்கள் (உம்) எல்லிஸ் டங்கன்... இன்று தமிழகத்தில் பலர் சிகரெட்பிடிக்க காரணம் திரைபடங்களில் நாயகன் ஸ்டைலாக சிகரேட் பிடிப்பதுதான்... ஏன் நானே அப்போது ரஜினி ரசிகனாக இருந்த போது வெறும் பேப்பரை சுற்றி மண்ணெண்னைய் விளக்கில் அந்த பேப்பரை கொளுத்தி, சிகரெட் பிடித்து இரும்பி அம்மாவிடம் மாட்டி வாயில் ரெண்டு போடு போட்டு, நான் சிகரேட் பிடித்தது கூட ரஜினி என்ற தனிமனிதனின் அப்பட்டமான காப்பிதான்.....
பிள்ளைகளின் முதல் ஹீரோ அப்பாதான் அவரை பார்த்து அவர் மீசை வைத்துக்கொள்வது போல் வைத்துக் கொள்வதும் அவரை போல் கிருதா வைத்துக்கொள்வதும் எல்லாமே ஒரு காப்பிமயம்தான்..
இன்று நான் எழுதும் எழுத்து எதாவது ஒரு எழுத்தாளனின் காப்பிதான் அந்த எழுத்தாளர் வேறு ஒருவரை காப்பி அடித்து இருப்பார்... இதில் காப்பி என்பதை விட ஆதார தழுவல் என்ற வார்த்தை ரொம்ப பொறுத்தமாக இருக்கும்.... கேட்ச்மீ இப்யு கேன் படத்தை போல இருந்தது என்று சொன்னதற்க்கு எல்லா போலிஸ் திருடன் கதையும் அப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்கள்...அது மிகவும் சரிதான் .... ஆனால் ஒரு படத்தை கமல் ஈ அடிச்சான் காப்பியாக அடிக்ககின்றாரா என்பதே என் கேள்வி... சரி ஈ அடிச்சான் காப்பி என்பது என்ன? தெலுங்கில் எடுத்த பிரபுதேவா படத்தை துளியும் அதாவது காஸ்ட்யூம் கூட மாற்றாமல் சம்திங் சம்திங் எடுத்தால் அது ஈ அடிச்சான் காப்பி... அது கூட பல கோடி ரூபாய் முதல் போட்டு நடத்தும் வணிகம் சிலர் அப்படித்தான்....
சரி கமல் அப்படியே காப்பி அடித்தாலும் அந்த படத்தின் ஒன்லைன் ஆர்டர் மட்டும் எடுத்து கதை பண்ணுவார்.... தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...தமிழகத்தில் எம்ஜீ ஆரை போல சிவாஜி போல ரஜினி போல தன் வாழ்க்கையை காப்பி வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் ஏராளம்.... இலக்கியத்தில் சுவை குன்றாத இலக்கியம் என்று போற்றபடும் கம்பராமாயனம், வால்மீகியால் எழுதப்பட்ட ராமாயணத்தை கம்பர் தன் நேட்டிவிட்டிக்கு ஏற்றார் போல் எழுதினார், அதனால் அவர் காப்பியடித்தது என்று சொல்ல முடியுமா?
சரி இதையெல்லாம் கூட பொறு்த்துக்கொள்ளலாம் ஆனால் கமலுக்கு நடிக்க தெரியாது என்பது போல் சொன்னதுதான் என்னை வருத்தம் கொள்ள செய்தது...
சலங்கை ஒலியில் கமல் டெல்லியில் நடக்கபோகும் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அழைப்பிதழை புரட்டிக்கொண்டே, அந்த மேதைகளை பற்றியம் அவர்கள் சிறப்புபற்றியும் சொல்லிக்கொண்டே வர சில பக்கங்கள் கழித்து அவர் போட்டோ இருக்க அப்போது கமல் காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் வேறு யாராலும் நினைத்த கூட பாரக்க முடியாத நடிப்பு அது... அந்த பரவசத்தை பார்வையாளனுக்கு வர வைப்பவனே நல்ல நடிகன் ஆவான்.....
கமலின் ஏழு படங்கள் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பபட்டன.. இந்தியாவில் நான்கு தேசிய விருதுகளையும், 18 பிலிம் பேர் விருதுகளையும் பெற்ற ஒரே நடிகர் கமல்தான்...
இந்த கட்டுரை படித்த பிறகும் ஆம் கமல் காப்பி ஆடிப்பவர், நடிக்க தெரியாதவர் என்று நீக்ஙள சொன்னால் எனது பதில் ஆம் கமல் காப்பி அடிப்பவர்தான், நடிக்க தெரியாதவர்தான்...
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
எனது பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
இந்த கட்டுரை படித்த பிறகும் ஆம் கமல் காப்பி ஆடிப்பவர், நடிக்க தெரியாதவர் என்று நீக்ஙள சொன்னால் எனது பதில் ஆம் கமல் காப்பி அடிப்பவர்தான், நடிக்க தெரியாதவர்தான்...
ReplyDelete]]
யோரோ சொன்னா நீங்க ஒத்துகிடனுமா
யார் சொன்னாலும் நான் ஒற்றுகொள்ள போவதில்லை
ஒரு சிலருக்கு கமலைத் திட்டினால் தான் சாப்பாடே சமிக்கும். கேவலமான ஈனப்பிறவிகள் அவர்கள். ஒரு தேவர்மகன், மகாநதி, அன்பே சிவம் நடிப்புகள் எல்லாம் எந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என அந்த ஈனப்பிறவிகள் சொல்லட்டும்.
ReplyDelete//தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...//
ReplyDeleteநம்பற மாதிரி இல்லையே. . . இந்த பிட் தேவைதானா. . .
ஆமய்யா! கமலுக்கு நடிக்க தெரியாது . சவுந்தர்ராஜனுக்கு பாட தெரியாது .இளையராஜாவுக்கு இசையே தெரியாது -ன்னு வீணாப்போன நாலு பேரு சொல்லுவான் ..அதுக்கு விளக்கம் வேற !
ReplyDelete////தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...//
ReplyDeleteநம்பற மாதிரி இல்லையே. . . இந்த பிட் தேவைதானா. . .
//
:)))))))
chumma ullarathinga kamale kaapi enntral matha heroes enna oopia///
ReplyDeleteஇன்ஸ்பிரேஷன் என்ற சொல்லை நம்ம மக்கள்ஸ் அடிக்கடி மறந்து போறாங்க.
ReplyDeleteநடிக்கத் தெரியலைன்னு சொல்றவங்க சொல்லிட்டுப் போகட்டுமே....அதுலே அவுங்களுக்கு ஒரு திருப்தி.
பொதுவாச் சொன்னால் நடிக்கத்தெரியாத மனுசன் இனிமேத்தான் பொறக்கணும். தினசரி வாழ்க்கையில் நாமெல்லாம் என்னமா நடிக்கிறோம்!!!!
இல்லாமலா.... ஷேக்ஸ்பியர் 'உலகமே நாடகமேடை, எல்லோரும் வெறும் நடிகர்கள்'ன்னு சொல்லி இருக்கார்.
நல்ல பதிவு ஜாக்கி..
ReplyDeleteகமல்...
தசாவதாரம் படத்தின் வில்லன் ஃப்ளெட்சர் கேரக்டரில் அமெரிக்க கொரியர் கம்பெனியில் ஒரு நடை நடந்து வருவார்..எந்த ஹாலிவுட் நடிகராலும் அதை காப்பி அடித்துக்கூட நடக்க முடியாது.
போலவே..
வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவியின் தம்பி நாய் என்று சொன்னவுடன் ஆமோதித்து பாட்டி சத்தம் போட்டவுடன் அதே ஆமோதித்தலை அப்படியே எதிராக மாற்றுவார்..இது போன்ற சின்னச் சின்ன டீட்டெய்லிங்களையே யாராலும் மறுபடியும் செய்ய முடியாது..
புது புது அர்த்தங்கள் படத்தில் குருவாயூரப்பா பாடலில் கீதா ரகுமானின் டீசர்ட்டைப் பிடித்து இழுப்பது போலவும் அதனடுத்த ரகுமான் கீதாவின் பால் விழுவது போலவும் ஒரு காட்சி இருக்கும்..அந்தக் காட்சியைப் பாருங்கள்..அது செயற்கையாக மிக செயற்கையாக இழுபதற்கு முன்பே போய் விழுவார்..கமலைப் பார்த்து டைமிங்கை பழகிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்பட்டதாம்.
Jacki take it easy
ReplyDeleteand Cool....
India all state super stars knows who is Kamal..
and his performance they accept only one super star in India that's Kamal..
Good Post Jacki thanks
கமலின் நடிப்பில் எனக்குப் பிடித்த படங்கள் நிறைய.
ReplyDeleteநீங்க சொல்லியதுப் போல், அது காப்பி என்று கூற இயலாது. ஆதாரத் தழுவல் என்று கூறலாம்.
தமிழ் மணத்தில் இணைத்துவிட்டு, நீங்களும் ஒரு ஓட்டுப் போடுங்களேன். நான் ஓட்டுப் போடும்போது 0/0 என்று காண்பிக்கின்றது.
ReplyDeleteபோற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்...... ன்னு போயிகிட்டே இருக்கணும்.
ReplyDeleteசிலர் இருக்காங்க எதுக்கு எடுத்தாலும் நொட்டை சொல்லுறவங்க. அவங்கள ஆண்டவனே வந்தாலும் திருத்த முடியாது. உங்கிட்ட கமல் சரில்ல ரஜனி தான் நல்ல நடிகர்னு சொல்லுவாங்க. வேற யாராவது ரஜனி நல்ல நடிகர்னு சொன்னா, அவரால கமல் கிட்ட கூட வரமுடியாதுனு சொல்லுவாங்க, அவங்க அப்படிதான், அவங்கள ஒன்னும் பண்ண முடியாது
ReplyDeleteபதிலடி நன்று!!
ReplyDeleteடென்ஷனை குறைச்சிகோங்கணே...
இதுக்கெல்லாம் ஒரு பதிவு வேற..? டைம் வேஸ்ட்டு..!
ReplyDeleteமர்பீஸ் லா கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ReplyDeleteஒரு இடத்தில் திருடினால் காப்பி. அதுவே பல இடம் என்றால் அனாலிசிஸ்-இது சும்மா ஜோக். நல்ல கட்டுரை. உபயோகமான விஷயங்கள் எங்கே இருந்தாலும் அடாப்ட் செய்வதற்குப் பெயர் காப்பி இல்லை என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் கட்டுரை.
http://kgjawarlal.wordpress.com
//தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...//
ReplyDeleteநம்பற மாதிரி இல்லையே. . . இந்த பிட் தேவைதானா. . .///
அது அப்ப. இது இப்ப.
அவ்வ்வ்வ் ...
நல்ல பதில் தல.. ஸ்டே கூல் மா..
ReplyDeletekamal நல்ல நடிகன் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களை ஒரு ப்பொருட்டாக மதிக்காதீர்கள்.. ஏனென்றால் சிவாஜியையே என்னத்த பெரிசா நடிக்கிறான்னு சொன்ன ஊருதான் நம்ம ஊரு.. இதுக்கு பதில் சொல்லி அவங்களை பெரியாளாக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
ReplyDeleteஅண்ணே கமல் நடிப்பு நாம் பேசுவதற்க்கு எழுதுவதற்க்கு அப்பாற்பட்டது..
ReplyDelete//அண்ணே கமல் நடிப்பு நாம் பேசுவதற்க்கு எழுதுவதற்க்கு அப்பாற்பட்டது..//
ReplyDeleteஅண்ணே ஒரு சினிமா நடிகனின் நடிப்பை வெறும் நடிப்பாக மட்டுமே பாருங்க, அதை விட்டுட்டு அதீத முக்கியத்துவம் கொடுக்காதீங்க .. நமக்கு எல்லாமே அவங்கவங்க சொந்த வாழ்க்கையில தீர்க்க வேண்டிய, சாதிக்க வேண்டிய விஷயங்க ரொம்ப இருக்க , அதை பார்ப்போம், கமல் நடிச்சார, தேயட்டரில போய் பார்ப்போம், மூணு மணி நேரம் முடிஞ்சுதா மத்த விஷயங்களை கவனிப்போம், அம்புடுதேன்..
//அண்ணே கமல் நடிப்பு நாம் பேசுவதற்க்கு எழுதுவதற்க்கு அப்பாற்பட்டது..//
ReplyDeleteஅண்ணே ஒரு சினிமா நடிகனின் நடிப்பை வெறும் நடிப்பாக மட்டுமே பாருங்க, அதை விட்டுட்டு அதீத முக்கியத்துவம் கொடுக்காதீங்க .. நமக்கு எல்லாமே அவங்கவங்க சொந்த வாழ்க்கையில தீர்க்க வேண்டிய, சாதிக்க வேண்டிய விஷயங்க ரொம்ப இருக்க , அதை பார்ப்போம், கமல் நடிச்சார, தேயட்டரில போய் பார்ப்போம், மூணு மணி நேரம் முடிஞ்சுதா மத்த விஷயங்களை கவனிப்போம், அம்புடுதேன்..
போ..போய் புள்ளகுட்டியை படிக்க வையுங்க(கமல் டயலாக்தான்)
ReplyDeleteசூரியன் said...
ReplyDeleteஅண்ணே கமல் நடிப்பு நாம் பேசுவதற்க்கு எழுதுவதற்க்கு அப்பாற்பட்டது..
ரிப்பிட்டே
அண்ணன் உ த வை வழி மொழிகிறேன்
ReplyDeleteஏன் கமல் படங்களில் மட்டும் காப்பி காப்பி என்று கத்துகிறார்கள் என்று புரியவில்லை..
ReplyDelete‘தலைநகரம்' படத்தில் சுந்தர்.சியும், போஸ் வெங்கட்டும் ஒரு பெரிய மனிதரைக் கொலை செய்ய ஜூடோ ரத்னம் மற்றும் டெல்லி கணேஷால் அனுப்பப் படுவார்கள். ஏன் அந்த மனிதர் கொல்லப்பட வேண்டும் என்பதற்கான காரணமும்,
சுந்தரும், வெங்கட்டும் அந்த மனிதர் வீட்டிலிருந்து வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். திடீரென அவரது காரில் அவரது குழந்தைகள் ஏற்றப் படுவார்கள்.. அதனால் அந்தப் பிளானைக் கைவிடுமாறு சுந்தரும் போஸும் துடிப்பார்கள். அந்தக் காட்சியும்
அப்பட்டமாக Scarface படத்தில் சுடப்பட்டவை. அதுவும் காருக்குள் இருக்கும் சின்னப்பிள்ளைகளைக் காட்டும் காட்சிகளில் ஒரு வித்தியாசம்கூட இல்லை. இதைப் பற்றி யாருமே பேசியதில்லை... கமலைப் பற்றி மட்டும் திட்டித் தீர்ப்பார்கள்... காய்க்கிற மரம் கல்லடி படும்
தல அந்த ஒரு பக்கியோட பின்னூட்டதுக்கா இவ்ளோ பெரிய பதிவு ?? .. லூஸ்ல விடுங்க ...
ReplyDelete//If Olivier's cries were the greatest non-verbal sounds of the Western Stage, Kamalhaasan's inarticulate cries are perhaps the greatest non-verbal sounds of the Indian Screen.//
ReplyDeleteலாரன்ஸ் ஆலிவியர் - கமல் இருவரையும் வைத்து நண்பர் ஒருவர் எழுதிய பதிவொன்று. விரும்புபவர்கள் படித்துப் பார்க்கலாம். இரு பெரும் நடிகர்களைப் பற்றிய ஓராய்வு.
ஆனாலும் எல்லோரும் மகாநதி, ச.ஒலி எல்லாம் சொல்றீங்க... ஆனா , என்ன சொல்லுங்க அவரோடு நகைச்சுவைப் படங்கள் ... அம்மாடி, பெரும் விருந்து அவைகள். எத்தனை முறையும் பார்க்கலாம்.
இந்த கட்டுரை படித்த பிறகும் ஆம் கமல் காப்பி ஆடிப்பவர், நடிக்க தெரியாதவர் என்று நீக்ஙள சொன்னால் எனது பதில் ஆம் கமல் காப்பி அடிப்பவர்தான், நடிக்க தெரியாதவர்தான்...
ReplyDelete]]
யோரோ சொன்னா நீங்க ஒத்துகிடனுமா
யார் சொன்னாலும் நான் ஒற்றுகொள்ள போவதில்லை--
நன்றி ஜமால்... உண்மைதான்
ஒரு சிலருக்கு கமலைத் திட்டினால் தான் சாப்பாடே சமிக்கும். கேவலமான ஈனப்பிறவிகள் அவர்கள். ஒரு தேவர்மகன், மகாநதி, அன்பே சிவம் நடிப்புகள் எல்லாம் எந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என அந்த ஈனப்பிறவிகள் சொல்லட்டும்.//
ReplyDeleteஉங்கள் கோபத்துக்கு நன்றி வந்திய தேவன்
/தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...//
ReplyDeleteநம்பற மாதிரி இல்லையே. . . இந்த பிட் தேவைதானா. . .//நம்புங்க வீ
ஆமய்யா! கமலுக்கு நடிக்க தெரியாது . சவுந்தர்ராஜனுக்கு பாட தெரியாது .இளையராஜாவுக்கு இசையே தெரியாது -ன்னு வீணாப்போன நாலு பேரு சொல்லுவான் ..அதுக்கு விளக்கம் வேற !/=/
ReplyDeleteநன்றி ஜோ
chumma ullarathinga kamale kaapi enntral matha heroes enna oopia/////
ReplyDeleteநன்றி குரு
இன்ஸ்பிரேஷன் என்ற சொல்லை நம்ம மக்கள்ஸ் அடிக்கடி மறந்து போறாங்க.
ReplyDeleteநடிக்கத் தெரியலைன்னு சொல்றவங்க சொல்லிட்டுப் போகட்டுமே....அதுலே அவுங்களுக்கு ஒரு திருப்தி.
பொதுவாச் சொன்னால் நடிக்கத்தெரியாத மனுசன் இனிமேத்தான் பொறக்கணும். தினசரி வாழ்க்கையில் நாமெல்லாம் என்னமா நடிக்கிறோம்!!!!
இல்லாமலா.... ஷேக்ஸ்பியர் 'உலகமே நாடகமேடை, எல்லோரும் வெறும் நடிகர்கள்'ன்னு சொல்லி இருக்கார்.//
உண்மை டீச்சர் நம்மாளுங்களுக்கு இது புரியாது...
நல்ல பதிவு ஜாக்கி..
ReplyDeleteகமல்...
தசாவதாரம் படத்தின் வில்லன் ஃப்ளெட்சர் கேரக்டரில் அமெரிக்க கொரியர் கம்பெனியில் ஒரு நடை நடந்து வருவார்..எந்த ஹாலிவுட் நடிகராலும் அதை காப்பி அடித்துக்கூட நடக்க முடியாது.
போலவே..
வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவியின் தம்பி நாய் என்று சொன்னவுடன் ஆமோதித்து பாட்டி சத்தம் போட்டவுடன் அதே ஆமோதித்தலை அப்படியே எதிராக மாற்றுவார்..இது போன்ற சின்னச் சின்ன டீட்டெய்லிங்களையே யாராலும் மறுபடியும் செய்ய முடியாது..
புது புது அர்த்தங்கள் படத்தில் குருவாயூரப்பா பாடலில் கீதா ரகுமானின் டீசர்ட்டைப் பிடித்து இழுப்பது போலவும் அதனடுத்த ரகுமான் கீதாவின் பால் விழுவது போலவும் ஒரு காட்சி இருக்கும்..அந்தக் காட்சியைப் பாருங்கள்..அது செயற்கையாக மிக செயற்கையாக இழுபதற்கு முன்பே போய் விழுவார்..கமலைப் பார்த்து டைமிங்கை பழகிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்பட்டதாம்.//
நஙனறி நர்சிம் மங்கள் விரிவான பின்னுட்டத்திற்க்கு.. உண்மைதான் பல நடிகர்கள் அவர் டைமிங் கண்டு வியந்து இருக்கின்றனர்... மிக முக்கியமாக அவரது காமெடி போர்ஷன்ஸ்....
Jacki take it easy
ReplyDeleteand Cool....
India all state super stars knows who is Kamal..
and his performance they accept only one super star in India that's Kamal..
Good Post Jacki thanks//
நன்றி சிவா
கமலின் நடிப்பில் எனக்குப் பிடித்த படங்கள் நிறைய.
ReplyDeleteநீங்க சொல்லியதுப் போல், அது காப்பி என்று கூற இயலாது. ஆதாரத் தழுவல் என்று கூறலாம்.//நன்றி ராகவன் நைஜீரியா... தொடர் வாசிப்புக்கு
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்...... ன்னு போயிகிட்டே இருக்கணும்.//
ReplyDeleteநன்றி ராஜா
சிலர் இருக்காங்க எதுக்கு எடுத்தாலும் நொட்டை சொல்லுறவங்க. அவங்கள ஆண்டவனே வந்தாலும் திருத்த முடியாது. உங்கிட்ட கமல் சரில்ல ரஜனி தான் நல்ல நடிகர்னு சொல்லுவாங்க. வேற யாராவது ரஜனி நல்ல நடிகர்னு சொன்னா, அவரால கமல் கிட்ட கூட வரமுடியாதுனு சொல்லுவாங்க, அவங்க அப்படிதான், அவங்கள ஒன்னும் பண்ண முடியாது//
ReplyDeleteஉண்மைதான் யோ
நன்றி கலையரசன், உண்மைதமிழன்
ReplyDeleteமர்பீஸ் லா கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ReplyDeleteஒரு இடத்தில் திருடினால் காப்பி. அதுவே பல இடம் என்றால் அனாலிசிஸ்-இது சும்மா ஜோக். நல்ல கட்டுரை. உபயோகமான விஷயங்கள் எங்கே இருந்தாலும் அடாப்ட் செய்வதற்குப் பெயர் காப்பி இல்லை என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் கட்டுரை.
//
ஜவர் லால் உண்மையை உறத்து சொல்லி இரக்கின்றீர்கள்
//தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...//
ReplyDeleteநம்பற மாதிரி இல்லையே. . . இந்த பிட் தேவைதானா. . .///
அது அப்ப. இது இப்ப.
அவ்வ்வ்வ் ...//
ஏன்யா ஒரு பேச்சுக்கு சொல்லிட்டேன்.. ஊடுகட்டி அடிக்கிறீங்க நடத்துஙக.
நன்றி முரளி, கோஸ்ட், சூரியன் தண்டோரா..
ReplyDeleteநன்றி கார்திகை பாண்டி , மங்களுர் சிவா..
ReplyDeleteசரியா சொன்னிங்க கேபிள் ஜீ
ReplyDelete/அண்ணே கமல் நடிப்பு நாம் பேசுவதற்க்கு எழுதுவதற்க்கு அப்பாற்பட்டது..//
ReplyDeleteஅண்ணே ஒரு சினிமா நடிகனின் நடிப்பை வெறும் நடிப்பாக மட்டுமே பாருங்க, அதை விட்டுட்டு அதீத முக்கியத்துவம் கொடுக்காதீங்க .. நமக்கு எல்லாமே அவங்கவங்க சொந்த வாழ்க்கையில தீர்க்க வேண்டிய, சாதிக்க வேண்டிய விஷயங்க ரொம்ப இருக்க , அதை பார்ப்போம், கமல் நடிச்சார, தேயட்டரில போய் பார்ப்போம், மூணு மணி நேரம் முடிஞ்சுதா மத்த விஷயங்களை கவனிப்போம், அம்புடுதேன்..//
உங்கள் மனநிலைதான் என் நிலையும்..
நன்றி சம்பத்
ReplyDeleteநன்றி கீத் குமாரசுவாமி அது போல் நான் பல படங்களை உதாரணத்துக்கு சொல்ல முடியும் இருப்பி்னும் பகிர்விவுக்கு நன்றி
ReplyDeleteதருமி சார் உங்கள் பின்னுட்டம் மற்றும் பகிர்வுக்கு தொடர் வாசிப்புக்கும் நன்றி
ReplyDeleteகமலுக்கே நடிக்க தெரிய வில்லை என்றால் வேறு எந்த நாய்க்கும் நடிக்க அருகதை இல்லை சிவாஜியும் சில நல்ல நல்ல நடிகர்களையும் தவிர்த்து .பீடியை தூக்கி போட்டு பிடிபதும் ,மயிரை கோதுவதும் நடிபல்ல நண்பர்களே.நல்ல பட்ஜிவு சேகர் சவுக்கால் அடித்து விட்டீர்கள் .
ReplyDeleteநான் முதன் முதலாக இடுகை இடுவது இந்த பதிவில் தான் ஏன்னா நானும் ஒரு பதிவு ஆரம்பித்து அதிலும் இந்த மாதிரி கமலுக்கு வக்காலத்து வாங்கி சில பேரிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன். இதுமாதிரியான பதிவுகள் அதிலும் ஊடக துறையில் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்பு வைத்துள்ள நீங்கள் சொல்லும் போது அது இன்னும் வீரியம் மிக்கதாகிறது. தொடர வாழ்த்துகள்.
ReplyDeletei also agree for that coz some useless felow says like that... idiots
ReplyDeleteகமல் நடிப்பில் கில்லாடி... சில படங்களில் அவரைத் தவிர வேறு யாரையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதபடி நடித்திருப்பார்..
ReplyDeleteஅதிலே எந்த சந்தேகமும் இல்லை..
ஆனால் வரலாற்றை மறைக்காமல் இருப்பது நல்லது.. உண்மையாகவே காப்பி அடிக்கப் பட்டிருப்பேன், அந்த உண்மைப் படைப்பாளனுக்கு ஒரு நன்றி தெரிவித்து படத்தின் டைட்டிலில் இணைப்பது சிறந்த மனிதனுக்கு அழகு.. அதைச் செய்யாவிடில், மக்கள் இவரே தயாரித்தது போல் நினைப்பர்.. அது தன்னையே நம்பி இருக்கும் ரசிகர்களை ஏமாற்றும் செயலாகவே கருத முடியும்.. கண்ணியம் என்பது சாதாரண மனிதர்களுக்கே வேண்டும்.. புகழில் இருப்பவர்களுக்கு அது இன்னும் அதிகமாகவே வேண்டும்..
ஆனாலும் பம்மல் கே சம்பந்தம், சதிலீலாவதி படங்கள் அவரது சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டே...
I am not a hater of kamal. But the reality is,
ReplyDeleteMahanathi - Copied from Thorns novel written by north indian author, I read it on my college days.
It is the story about a father searching her missing daughter & finally found her in tharaavi.
Anbe Sivam - Planes Trains and automobiles film
Thevar magan - may be it is a original story.