உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு.....


தமிழ்மண நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுக்கபட்ட போதே உள்ளுக்குள் ஒரு குருவி கத்தியது... அதே போல் ஷுட்டிங்கில் வேலை பெண்டு நிமிரும் அளவுக்கு வேலை, வேலை...

ஆனால் தம்பி நையான்டி நைனா கொடுத்த ஐடியா படி எற்க்கனவே பொதுவான பதிவுகள் எழுதி டிராப்டில் சேமித்து வைத்து விட்டேன்....
ஒரு மூன்று நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லை... அப்படிஎன்றால் பெரிதாய் இல்லை எனலாம் ... நான் ஷுட்டிங் போனதும் டிராப்டில் உள்ள போஸ்ட்டைதமிழ்மணத்திலும் தமிளிஷ்லும் இணைக்க என் மனைவிக்கு, ஒரு மணிநேரம் தேவைபட்டது... என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. அதாவது நெட் கனெக்ஷன் வந்து வந்து போய் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது....

அந்த டாட்டா இன்டிகாம் நாதாரிகளுக்கு போன் செய்தால் சர்வர் டவுன் என்று பழைய பல்லவியே பாடிக்கொண்டு இருந்தார்கள்... ஒரு கட்டத்தில் கொஞ்சம் நஞ்சம் வந்து கொண்டு இருந்த நெட் கனெக்ஷன் கூட அதன் பிறகு வர வில்லை... காரணம் கேபிளில் பிரச்சனை என்றார்கள்....நான் தவித்தேன் துடித்தேன் அலறினேன்.... வேலைக்கு ஆக வில்லை.... சரி அதன் பிறகு பெண் டிரைவில் ஏற்க்கனவே நோட் பேடில் எழுதி வைத்ததை பிரவுசிங் சென்ட்ர் போய் போஸ்ட் செய்தேன் அதனாலே யாருக்கும் என்னால் பின்னுட்டம் கூட போட முடியவில்லை....


ஆனால் முகம் தெரியாத உங்களால் இது சாத்தியம் அயிற்று தமிழ்மண பதிவராக நான் முதல் பக்கத்தில் வந்த போது அறிமுக பதிவுக்கு 52 கமென்ட்ஸ்.... என் மெயில் பாக்ஸ் நிரம்பி வழிந்தது....எனக்கு கண்களில் ஒரு ஓரமாக நீர்த்திவிலைகள்..

அதன் பிறகுஎல்லா பதிவுகளுக்கும் குறைந்தது 25 கமென்டாவது நான் பதில் போடாமலும் வந்து கொண்டுதான் இருந்தது... இந்த வெற்றி உங்களாலும் உங்கள் புரிதலாலும் சாத்தியம் ஆயிற்று... நன்றி எனக்கு பிரதிபலன் பார்க்காது இந்த ஒரு வாரத்துக்கு தோள் கொடுத்த தோழர்கள் தோழிகள் கீழே.....

நித்யகுமாரன்... என்னை வலையுலகில் அறிமுகபடுத்தியவர்...முன்பெல்லாம் நிறைய எழுதியவர், கல்யாணம் ஆனதும் எழுதுவதை குறைத்துக்கொண்டவர்...என்னை போல் தடவி டைப் அடிப்பது போல் இல்லாமல் பத்து நிமிடத்தில் பதிவு போடும் வேகம் இருக்கின்றது ஆனால் ஏன் எழுதவில்லை என்று எனக்கே தெரியவில்லை.....

வெட்டிபயல் ....இவர் எப்போதாவது என் வலை பக்கத்து வருபவ்ர் முதல் வாழ்த்து இவருடையதுதான்...

காத்திகை பாண்டியன்.. நல்ல நண்பர் எனது கைபேசி எண் வாங்கி பேசி அறிமுகபடுத்திக்கொண்ட நண்பர்...தன் வரலாறுகளை திறம்பட சொல்லுபவர்...இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை வாத்தியர் தொழில்.....

நட்புடன் ஜமால்.... பதிவு போஸ்ட் பண்ண அடுத்த நொடி இவர்கிட்ட இருந்து பின்னுட்டம் வர தவறுவதே இல்லை...எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும் நபர்,சாட்டில் பேசி என்னிடம் நட்பானவர்....

பிரேம்ஜீ... எந்த ஒரு டெக்னாலஜி பத்தியும் சட்டென தகவல் சொல்லுபவர், இவரது பக்கத்தில் திரைப்பட டிரைலர் என்னை கவர்ந்த விஷயம்...


வந்தியதேவன்.. எனக்கு சுவாரஸ்ய வலை பதிவு விருது கொடுத்த புண்ணியவான், எனது சான்ட்விச் அன்ட் நான்வெஜ் பரம ரசிகன்.... நான்வெஜ் சரியில்லை என்று அடிக்கடி வருத்தம் கொள்பவன்

கேபிள் சங்கர்... இரண்டு பேருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இருவரும்சினிமா காதலர்கள்... அதை தவிர்த்து நல்ல நண்பர்...எனக்கு இவரிடம் மிகவும் படித்தது உணவை ருசித்து சாப்பிடுபவர்.....

மங்களுர் சிவா....பதிவுலகில் நான் முதன் முதலாக நேரில் சந்தித்த நபர், இவர் திருமண போட்டோவை நான்தான் எடுத்தேன் என்று நினைக்கின்றேன்.... என் மேலே ரொம்ப பாசம். பத்து நாள் வலை பக்கம் வரலைன்னாலும், பதினோறாவது நாள் வந்து, எனது எல்லா பதிவையும் படிச்சிட்டு பின்னுட்டம் போடும் பாசக்கார பயபுள்ள.. எனக்கு முதன் முதலில் தொடர்ந்து பின்னுட்டம் போட்டு என்னை உற்சாகபடுத்தியவன்....

கிரி.... கிரி தலைவர் ரஜினி... நம்ம தலைவர் கமல்...அதையும் மீறி எனக்கு கிரியோட எழுத்து பிடிக்கும்.. சிங்கபூர் பற்றி எழுதிய கட்டுரை... சமீபத்தில் பாடகர் மைக்கேல் பத்தி எழுதின கட்டுரை அருமை....

வண்ணத்து பூச்சி... என்னோட நலனில் அதிகம் அக்கரை கொண்டவர், எப்பவும் போன் பண்ணி அடுத்து என்ன பண்ண போற என்று ஆர்வமாய் கேட்பவர்....இவரும் ஒரு சினிமாகாதலர்.. முதன் முதலில் உலக படவிழாவில்தான் சந்தித்து கொண்டோம்.....

கோவி கண்ணன்....மனதில் பட்டதை காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல் விஷயத்தை சொல்லும் வல்லவர் எனக்கு,தொடர்ந்து ஒரு வாரம் பின்னுட்டம் இட்டு அசத்தியவர்....

பைத்தியக்காரன்... பைத்தியக்காரன் அரசியல் பார்வை வித்தியசமானது.. வேற ஒரு கோனத்தில் யோசி்த்து அதனை திறம்பட சவைபட சொல்லுபவர்...எப்போதுமே ஜாக்கி கேமராவோட வந்து விழாவை சிறப்பிக்கனும்னு அன்போடு சொல்லுபவர்....

டோன்லீ... சில பல பதிவுகளை படித்து எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் ஈடுபவர் நல்ல நண்பர்

சந்தனமுல்லை.... எப்போதாவது வந்தாலும், என் நினைவில் இருப்பவர்

குசும்பன்.... பெயருக்கு ஏற்றார் போல் குசும்பு திலகம்தான் இவரின் நக்கல் எனக்கு மிகவும் பிடிக்கும்..பொதுவாக வலைபதிவர்களை கலாய்க்கும் கற்பனைக்கு ஈடு இனை இல்லை.....

நையான்டி நைனா... பார்பதற்க்குதான் நையான்டி நக்கல் எல்லாம்... ஆழ்ந்த கருத்துக்களை சொல்லும் அறிவாளி... எனது உடன் பிறவா சகோதரன்... தானே போன் செய்து அறிமுகப்டுத்திக்கொண்டவன்...இவனின் என் மீதான பாசம் என்னை சிலிர்க்க வைக்கும்...

சரவணகுமரன்.... தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து பின்னுட்டம் பொடுபவர்.... நன்றி தோழர்

துபாய்ராஜா.... சமீபத்தில் எனது பதிவில் பின்னுட்டம் இட்டு அறிமுகமான நண்பர்.. தொடர்ந்து வாசித்து வாழ்த்தும் கமென்டும் சொல்லும்நண்பர்...

கலையரசன்.... எங்கள் ஊர் பக்கத்து ஊர் ஆளு... எப்பவுமே முக்கிய பதிவுக்கு பின்னுடத்தில் தன் கருத்தை சொல்லும் பாசக்கார பய புள்ள... நல்ல நண்பர்,இவர் பதிவுகளின் சில நக்கல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

சுரேஷ்குமார்.... சில நாட்களாய் அறிமுகம்.... என்னை அஜீத்துக்கு பிறகு பலர் தலை என்று அழைக்கின்றார்கள் ஏன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே....

சுப்பையா.... எனக்கும் சுப்பையா சாருக்கும் பெரிய அறிமுகம் இல்லை என்றாலும் வாழ்த்த மனது வேண்டும்.... நன்றி சுப்பையா சார்...

ராஜன்... சமீபமாய் தொடர்ந்து என் பதிவுகளை வாசித்து பின்னுட்டம் இடும் நண்பர்... நன்றி ராஜன்..


ஸடார்ஜன்... வலைப்பூக்களில் இப்போதுதான் அறிமுகம் என்றாலும் விடாமல் வாசி்த்து எனக்கு வாழ்த்தும் பின்னுட்டமும்... போட்டு திக்கு முக்காட செய்பவர்...நன்றி நண்பரே...


புதுவை சிவா..... தொடர் வாசிப்பு நண்பர்...நேரங்கிடைக்கும் போது பின்னுட்டம் இடுவார்.. என் வலையில் சின்ன பிரச்சனை இருந்த போது டோன்டு விடம் ஜாக்கிக்கு பின்னுட்டம் போட முடியவில்லை என்று வருத்தபட்டதாக நியாபகம்...நன்றி சிவா

தண்டோரா.... இவரின் மகள் என் கல்லூரி மாணவி.. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே பாண்டி கன்னியக்கோவிலில் பாரில் பீர் சாப்பிட்டு கலைந்து போய் இருக்கின்றோம்....தலைவருக்கு கோபால புரம் என்றால் எட்டிக்காய் கசப்பு... பதிவை மீறி நல்ல நண்பர்... இவரின் அலுவலகம் எனக்கு இளைப்பாறும் வேடந்தாங்கல்....தமிழ் பிழைகள் நான் திருத்திக்கொள்ள வேண்டி அன்பாய் ,சில நேரங்களில் அதட்டி சொல்லுபவர்....பீர் வாசனையை விட இலக்கிய வாசனை இவரிடம் அதிகம்....


துளசிகோபல்... டீச்சரின் பயண பார்வைகள் வெகு அழகு...சில கருத்துக்களை விதண்டாவாதம் செய்யாமல் உண்மை இருப்பின் அதன் பக்கம் நிற்பவர்.... எப்போதாவது என் வலைபக்கம் வருபவர்.. எப்போதவது வந்தாலும் நல்ல பின்னுட்டம் இட்டு என் தமிழ் பிழைகளை உரிமையாய் திருத்தும் அன்பு டீச்சர்...

ஜெட்லி... என் மீது நேசம் கொள்ளும் இன்னோருதம்பி....முக்கியமாக இசிஆர் பக்க தியேட்டர் பற்றி இவர் எழுதி இருக்கும் பதிவுகள் அருமை என்பேன்....


ஆசிப் மீரான்.... வலையுலகில் அண்ணாச்சி என்று செல்லமாக அழைக்கும் மாஸ் ஹீரோ ....இவ்ரின் பதிவுகள் சிம்பிளாக இருந்தாலும் நீட்டாக இருக்கும்...என் எழுத்து பிழைகளை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்லி காட்டுபவர் நன்றி அண்ணாச்சி....

புருனோ.... பேருக்கதான் டாக்டர் பல விஷயங்களை இவருடன் விவாதிப்பதில் எனக்கு அலாதி ஆனந்தம்...சில கேள்விகளை எதிராளி நகராமல் ஓடாமல் ஓளியாமல் இருக்கும் படி நச் கேள்விகளை லாஜீக்கோடு கேட்பவர்.....நல்ல நண்பர்.....என் மீது எப்போது பாசம் வைத்து இருப்பவர்....நன்றி டாக்டர்....

நான் ஆதவன்.... இப்போதெல்லாம் என் பின்னுட்டங்களில் தொடர்ந்து நண்பர் ஆதவனை பார்க்கின்றேன் மிக்க நன்றி ஆதவன்....


வெயிலான்....நல்ல நண்பர்...நல்ல விஷயங்கள் நடக்கும் போது சட்டென கைகுலுக்கும் தோழர்....

அது ஒரு கனாக்காலம்... நான் சமீபமாய் கேள்வி படும் நபர் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே...

யுவகிருஷ்னா....
ஒரு சில நாட்களுக்கு முன் ,மூத்த பதிவராய் ஒரு மணி நேரத்துக்குமேலாய் என்னை தொடர்பு கொண்டு அறிவுரை சொன்னவர்... என் எழுத்துக்களை பாராட்டியவர்....வளரும் போது வரும் பிரச்சனைகளை களைய கற்றுக்கொடுத்தவர்... நன்றி லக்கி

வெண்பூ.... மங்களுர் சிவா போல் எனக்கு தொடர்ந்து என் எழுத்தை வாசித்து பின்னுட்டம் போட்டு என் எழுத்தை சீர்படுத்திய நண்பர்....தற்போது வேலை பளு காரணமாக எப்போதாவது தலை காண்பிக்கின்றார்... நன்றி நண்பா....

டிவி ராதாகிருஷ்ணன்.... எப்போதாவது வரும் நண்பர் இருப்பினும் வாழ்த்து தெரிவித்தமைக்கு என் நன்றிகள்...

தமிழ் பிரியன்.... தொடர்ந்து நண்பர் தமிழ் என் பதிவுகளை படிக்கின்றார் என்று நினைக்கின்றேன்.... நன்றி தமிழ்பிரியன்

பிஸ்கோத்துபயல்.... தொடர்ந்து வாசிக்கும் நண்பர்...தொடர்ந்து பின்னுட்டம் இட்டு என்னை ஊக்க படுத்துபவர்....நன்றி பிஸ்கோத்துபயல்....

சகாதேவன்.... ஜாம்பவான் ஒளிப்பதிவாளர்களை போல் நான் பிரகாசிக்க வாழ்த்திய நண்பர் சகாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

சதங்கா...பெரிய பரிட்சயம் இல்லா விட்டாலும் என்னை வாழ்த்திய சதங்காவுக்கு என் நன்றிகள்

அக்னிபார்வை.... ஏதாவது டெக்னிக்கலாக தெரியவேண்டுமாயின் உடனே அக்னிக்கு போன் அடித்து சந்தேகம் கேட்பேன்... உடன் சந்தேகம் நிவர்த்தி் செய்யபடும்... நல்ல நண்பர்... பதிவர் சந்திப்பில் கடைசி கடைசியாக போவது நாங்கள்தான்...

வால்பையன்.... தொடர்ந்து பின்னுட்டம் இட்டு கலக்கும் நண்பர் ஆங்கில பட ஹீரோக்களிடம் எனக்கு பிடித்த பல விஷயங்கள் வாலுக்கும் பிடிக்கும்....சில பின்னுட்டங்களில் நக்கல் ஜாஸ்த்தியாக இருக்கும்....நன்றி வால்

சூரியன்... சமீபகாலமாய் பழகிய நண்பர் தொடர் பின்னுட்டம் இட்டு என்னை உற்சாக படு்த்துபவர்...நல்ல நண்பர் உலக படங்கள் மீது காதல் கொண்டவர்..

பிரதீப்பாண்டியன்... எனது பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர் என்னோடு நட்புபாராட்டுபவர் உலகபடவிழாவில் கலந்து கொள்ள துடிப்பவர்... நன்றி பிரதீப்...

ஆர் ஆர்... இப்போதுதான் கேள்வி படுகின்றேன் வாழ்த்தியமைக்கு நன்றி

கீத் குமாரசாமி... இவரும் சினிமா காதலர்தான் பல பதிவுகளை வாசித்து இருக்கின்றேன்... கமல் விரும்பி என்று நினைக்கின்றேன் நன்றி கீத்....

ராஜ்குமார்.... என் எழுத்துக்களில் உள்ள எளிமையையும் வளமையையும் சிலாகிப்பவர்.. என் எண்ணங்களை போலவே சிந்திப்பது ராஜிக்கு மிகவும் பிடித்தமானது. ஒரே அலைவரிசையில் சிந்திப்பது என்பது சந்தோஷமான விஷயம்தானே.... நன்றி ராஜ்

சீனா... எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து என்னை உற்சாகபடுத்தி வருபவர்....
நன்றி சீனா

கல்ப் தமிழன்.... நன்றி கல்ப் தமிழா உங்களை போன்றவர்களின் தட்டிக்கொடுத்தலே எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகின்றது.....

கேஎஸ் முத்துபாலகிருஷ்ணன்.... முகம் தெரியாத நீங்கள் எனக்கு பாராட்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி....

என் பக்கம்.... எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து வரும் என் பக்கத்துக்குநன்றி என் பக்கம் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்கும்... நன்றி

பேரரசன்.... வாழ்த்து தெரிவித்த அரசனாருக்கு என் நன்றிகள்

மஞ்சூர் ராஜா... என்னை பெரிய திரையில் வெற்றி பெற உளமாற வாழ்த்தியமைக்கு என் நன்றிகள்..

சுரேகா..... என்னை பாராட்டி பின்னுட்டம் இட்ட நண்பர் சுரேக்காவுக்கு என் நன்றிகள்


கோஸ்ட்.... என் படங்களை பாராட்டியமைக்கு என் நன்றிகள் நன்பா

நர்சிம்.... நன்றாக கலாய்பதில் வல்லவர்...இவரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும் நல்ல நண்பர்

கதிர் ஈரோடு..... நன்றி கதிர் எனது பக்கத்தை வாசித்து பின்னுட்டம் இட்டதிற்க்கு...

அத்திரி.... நக்கல் நையாண்டியோடு சமகால அரசியலை அலசுபவர் பல நாட்களாக என் வலைப்பக்கம் பார்க்க முடிவதில்லை...நச் சென கமென்ட் போடுபவர்....

ராஜ்... தொடர்ந்து வாசிப்பவர் ஆங்கில படங்கள் மீதான ஆர்வம் நிறைய... மர்டர் அட் 1600 படம் விரைவில் எழுதுகின்றேன்.. டிவிடி கிடைக்கவில்லை அதனால் இந்த தாமதம்...


ஸ்ரீராம்.... பாஸ்டன்.... சமுக கோபங்கள் அதிகம் உள்ள நண்பர்... பேசுவதை விட நம்மால் ஏதாவது செய்யவேண்டம் என்று கங்கனம் கட்டிக்கொண்ட அலைபவர்.. எனத இந்த நிலைபாட்டை எப்படி எடுத்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட நண்பர்.. நன்றி நண்பா... பாஸ்டனில் இருந்தது ஒர மணிநேரத்துக்கு போனில் பேசுபவர்... நன்றி நண்பா....

குடுகுடுப்பை....நல்ல பதிவர் நான் இப்படித்தான் என்று நடிப்பு கலக்காமல் சொல்லுபவர் தமிழ்மண நட்சத்திரமாக பிரகாசிக்க எனது வாழ்த்துக்கள்....

குடந்தை அன்புமணி... சமீபமாய் என் பதிவுகளில் வலம் வந்து பின்னுட்டம் இடும் நண்பர் நன்றி

அகநாழிகை.... இவரின் கவிதைகளுக்கு நான் ரசிகன் நல்ல இலக்கிய எழுத்துகள் இவருடையது... மது மாதுக்கு செலவு செய்யாமல் புத்தகங்களுக்காக செலவு செய்பவர்...நல்ல நண்பர்

கைப்புள்ள... அந்த வடிவேலு படத்துக்கு விசிறிநான்.. நன்றி கைப்புள்ள

அமு செய்யது...எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து பின்னுட்டம் இட்டு உற்சாகபடு்த்தும் நண்பர்..

இராகவன் நைஜீரியா.... நல்ல நண்பர் எவர் மனதையும் காயபடுத்திவிடக்கூடாது என்று நினைப்பவர் சின்ன விஷயத்துக்கு கூட சட்டென மன்னிப்பு கேட்டு விடுபவர்....சிலரால் மட்டுமே எவர் மனதையும் காயபடுத்தாமல் வாழ முடியும்.... நன்றி நண்பரே....

கிஷோர்... தொடர்ந்து என் ஆங்கில படத்தின் விமர்சனங்களுக்கு பின்னுட்டம் போட்டு பாராட்டும் நபர்... நன்றிகிஷோர்

மதுவதனன் மௌ... தொடர்ந்து என் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வாசித்து பின்னுட்டம் இடுபவர்...

காத்திகேயனும் அறிவுதேடலும்.... நல்ல ஆங்கில பட விமர்சகர்....படங்களை மிக விரிவாய் எழுதி விமர்சிப்பவர்... நல்ல நண்பர்.. என் எழுத்து மீது மதிப்பு வைத்து இருப்பவர்... நன்றி கார்த்தி்...


மற்றும், யோ, நேமித்திரன் தமிழன் கறுப்பி, உடன்பிறப்பு, சம்பத் , கிச்சா, அபாபல் ஜோ, உழவன் ,ஜோ, 23சீ, ரூட்டோ, செந்தில், டூ டூ, ஆதித்தன், ஜோதி கார்த்திகை...யூஎம் கிருஷ்னா,சீ,யாசவி, சங்கா, பிளாக்பாண்டி,இளவட்டம் நாஞசில் நாதம்,ராபின் ,ஜாம்பஜார் ஜக்கு, மிஸ்டர் அடோர்...,ராஜாராமன், பராரி ,வேந்தன், என் உலகநாதன், மின்னுது மின்னல், சதிஷ், வெண்காட்டான், செந்தில்வேலன்,கக்குமாணிக்கம், சுவனபிரியன்,நட்ராஜ் ,அன்வர், ராம்ஜியாஹு,அருன்மொழிவர்மன்,உங்களில் ஒருவன் , பரிமளா, மனசு,தமிழ் ஓவியா2009,நிகழ்காலத்தில்,கவிர்மைந்தன், பாஸ்கர்,வலசுவேலனை, பிஜீ,வே இராதாகிருஷ்ணன்,குட்டிபிரபு, குமார், தருமி, போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


அதே போல் மெயிலில் பதிவிலும் அதிகம் நட்பு பாராட்டும், ஹரிராஜகோபாலன், குழந்தை வேலு,புரபசர் பெர்னான்டோ,சிங்கார வேலு ,கல்யான் குமார், அப்புறம் பெயர் சொல்ல வேண்டாம் என்ற... அலட்டி பெண்மணி...போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

இந்த ஒரு வாரத்தில் என் பதிவை பாராட்டி பின்னுட்டம் இட்டவர்களுக்கு என் அன்பை வெளிபடுத்தவே இந்த பதிவு பலரின் வலை தளத்தை போய் நான் பார்த்து கூட இல்லை... இருப்பினும் எனக்கு அதரவு தந்த மேலுள்ள அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்....

என்னை தமிழ் மண நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுத்த தமிழ்மண நிர்வாகத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல

சன்டிவி வருடத்துக்கு ஒரு முறை சொல்வது போல்.... இந்த வெற்றி உங்களால் சாத்தியமாயிற்று....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

96 comments:

  1. நன்றிக் காய்ச்சல்(((((>>>>,,,,///

    ReplyDelete
  2. .பீர் வாசனையை விட இலக்கிய வாசனை இவரிடம் அதிகம்.

    என்ன கொடுமை ஜாக்கி...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பரே!

    நன்றாக மின்னியது.

    ReplyDelete
  4. எத்தனை பெயர்கள்

    அப்பப்பா - அருமை நண்பரே!

    ReplyDelete
  5. உங்க பட்டியல்ல என்னையும் சேர்த்துகோங்க தலைவா...................

    கோகுலகிருட்டிணன்

    ReplyDelete
  6. INTHA ELIYAVANAIYUM KURIPPITTU NANDRI SONNATHU THANGALIN PERUM THANMAIYAI KAATTUKIRATHU.NANDRI SAKOTHARAA.

    ReplyDelete
  7. இன்னாங்கடா இது..

    அதிசயமா கீது..

    நம்ம பேர் வலைவீசி தேடினாலும் கிடைக்க மாட்டேங்குது..!

    அதுக்கெல்லாம் ஒரு லெவல் இருக்கணுமோ..?!!!

    ReplyDelete
  8. இவ்வளவு பணிப்பளுவிற்கு இடையிலும் சிறப்பான முறையில் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்தீர்கள்.
    காரணம் உங்கள் சரியான திட்டமிடல் திறன் தான்.

    எப்படியும் இந்த பதிவு மட்டும் தயாரிக்க உங்களுக்கு ஒரு மணிநேரம் மேல் ஆகியிருக்கும்.அனைத்து நண்பர்களையும் தனித்தனியாக குறிப்பிட்டது நட்பின் மேல் தங்களுக்கு இருக்கும் மரியாதையை காட்டுகிறது.

    உண்மையில் நெகிழ வைத்துவிட்டீர்கள்.

    வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் பலபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //சன்டிவி வருடத்துக்கு ஒரு முறை சொல்வது போல்.... இந்த வெற்றி உங்களால் சாத்தியமாயிற்று....///

    சூப்பர் பஞ்ச்

    நீங்கள் நட்சத்திரமாக ஜொலித்தபோதே தெரிந்துவிட்டது, வேலைப்பளுவினால் பதில் பின்னூட்டங்கள் இடமாட்டீர்கள் என்று. அதற்காக இத்தனை பெரிய பதிவா? அண்ணன் உண்மைத் தமிழன் பார்த்தால் பயப்படப்போகின்றார்கள்.

    //வந்தியதேவன்.. எனக்கு சுவாரஸ்ய வலை பதிவு விருது கொடுத்த புண்ணியவான், எனது சான்ட்விச் அன்ட் நான்வெஜ் பரம ரசிகன்.... நான்வெஜ் சரியில்லை என்று அடிக்கடி வருத்தம் கொள்பவன்//

    அடுத்த பதில் நல்லதொரு நான்வெஜ் தருவீர்கள் என அன்புடன் எதிர்பார்க்கின்றேன். உங்கள் விசுவல்களினதும் பரம ரசிகன் நான்.

    ReplyDelete
  10. :-) நல்லதொரு நட்சத்திர வாரம்!

    ReplyDelete
  11. அட! இந்த ஐடியா நல்லா இருக்கேப்பா!!!

    //எப்போதாவது என் வலைபக்கம் வருபவர்.. எப்போதவது வந்தாலும் நல்ல பின்னுட்டம் இட்டு என் தமிழ் பிழைகளை உரிமையாய் திருத்தும் அன்பு டீச்சர்...//

    அடடா.... இப்பவும் என் காலை இல்லையில்லை கோபாலின் காலை உடைச்சுட்டீங்களே:-)))))))))))

    துளசிகோபல்= துளசி கோபால்

    எப்போதாவதுன்னு இல்லை. ரெகுலர் விஸிட் உண்டு. ஆனால் ஊட்டம் கொடுக்காமப் போவது இப்போதெல்லாம் அதிகமாயிருச்சு(-:

    ரொம்ப ஸ்லோ கனெக்ஷன்.....

    ReplyDelete
  12. நன்றி ஜாக்கி பல வலை உலக சுறாக்களின் நடுவில் என்னையும் நினைவு படுத்தியதற்கு.

    மேலும் உங்கள் பதிவு உயர்வுக்கு இனைந்து உதவிய திருமதி ஜாக்கிக்கும் எங்கள் அனைவரின் சார்பாக நன்றியை கூற கடமை பட்டுள்ளோம்.

    ReplyDelete
  13. நெஞ்ச தொட்டுட்டீங்க!

    ReplyDelete
  14. இந்த ஒரு வாரத்தில் என் பதிவை பாராட்டி பின்னுட்டம் இட்டவர்களுக்கு என் அன்பை வெளிபடுத்தவே இந்த பதிவு பலரின் வலை தளத்தை போய் நான் பார்த்து கூட இல்லை... இருப்பினும் எனக்கு அதரவு தந்த மேலுள்ள அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்....


    உண்மையில் நெகிழ வைத்துவிட்டீர்கள்.

    வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் பலபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நன்றியை புதுமையா சொல்லியிருக்கீங்க :)

    ReplyDelete
  16. சரிதான்.... நன்றி அண்ணே...

    ReplyDelete
  17. சரிதான்.... நன்றி அண்ணே...

    ReplyDelete
  18. இவ்வளவு பேரை ஞாபகம் வைத்து எல்லாருக்கும் நன்றி சொல்லி மேலும் எங்கள் மனதில் உயயயயர்ந்த இடத்தை அடைந்து விட்டீர்கள்! இந்துனை சிரமம் இருந்தும், உங்கள் விடாமுயற்சியினால் தொடர்ந்து பதிவிட்டு எங்களை வியப்பில் ஆழ்த்தி விட்டீர்கள். இந்த விடாமுயற்சிதான், நாளை உங்களை திரைப்பட துறையில் மின்னச்செய்யும் என்பது உறுதி!!

    அதுபோல் உங்கள் மனசை புரிந்து, உங்களுக்கு உதவி மற்றும் ஊக்கம் கொடுத்த என் "அண்ணி"க்கு சுத்திபோடுங்க!!

    ReplyDelete
  19. ஜாக்கி, நன்றிக்கு நன்றி..


    அதெல்லாம் இருக்கட்டும். வேலைய பாரு..

    டைட்டில் கார்டு பார்த்து மகிழ்ச்சியில விசில் அடிக்கணும்.

    ReplyDelete
  20. //அதுபோல் உங்கள் மனசை புரிந்து, உங்களுக்கு உதவி மற்றும் ஊக்கம் கொடுத்த என் "அண்ணி"க்கு சுத்திபோடுங்க!!
    //
    கண்டிப்பா மொதல்ல இதை செய்யுங்க அண்ணே....

    ReplyDelete
  21. //அதுபோல் உங்கள் மனசை புரிந்து, உங்களுக்கு உதவி மற்றும் ஊக்கம் கொடுத்த என் "அண்ணி"க்கு சுத்திபோடுங்க!!
    //
    கண்டிப்பா மொதல்ல இதை செய்யுங்க அண்ணே....

    ReplyDelete
  22. பின்னூட்டத்தில் நன்றி தெரிவிக்காததற்கு பதில் இப்படி போட்டுத் தாக்கிட்டீங்களா... புதுசா இருக்கே... ம்... நடத்துங்க...

    ReplyDelete
  23. \\அகநாழிகை.... இவரின் கவிதைகளுக்கு நான் ரசிகன் நல்ல இலக்கிய எழுத்துகள் இவருடையது... மது மாதுக்கு செலவு செய்யாமல் புத்தகங்களுக்காக செலவு செய்பவர்...நல்ல நண்பர்//

    இன்னுமா உன்னை இந்த உலகம் நம்பிகிட்டிருக்குன்னு தோணுச்சு எனக்கு.

    //மது மாதுக்கு செலவு செய்யாமல்//

    இரண்டையும் ஒன்றாக ஒப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இரண்டும் போதைதான் என்றாலும் ஒன்று போதனை. (பார்ட்டிய எப்போ வெச்சுக்கலாம்..?)

    உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. அன்பிற்கு நன்றி.

    //வண்ணத்துபூச்சியார் said...
    ஜாக்கி,
    டைட்டில் கார்டு பார்த்து மகிழ்ச்சியில விசில் அடிக்கணும்.//

    இத..இதத்தான் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    வாழ்த்துக்களுடன்,
    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  24. எல்லோரையும் ஞாபகம் வைத்து நன்றி சொல்லி நெகிழவைத்து விட்டீர்கள் நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. //நான் ஷுட்டிங் போனதும் டிராப்டில் உள்ள போஸ்ட்டைதமிழ்மணத்திலும் தமிளிஷ்லும் இணைக்க என் மனைவிக்கு, ஒரு மணிநேரம் தேவைபட்டது... என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. அதாவது நெட் கனெக்ஷன் வந்து வந்து போய் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது....//

    உங்களோடு சேர்ந்து உங்கள் மனைவியும் ஸ்டார் !
    :)

    எல்லோரையும் மறக்காமல் குறிப்பிட்டுப் பாராட்டும் உங்கள் பண்பு, மாண்பு பாராட்டத் தக்கது !

    வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஜாக்கி !

    ReplyDelete
  26. உங்கள் பெயர் தமிழ் மணம் நட்சத்திரப் பட்டியலில் பார்த்தது போலவே, இனி திரைப்பட டைட்டில்களிலும் அடிக்கடி வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  27. மாபெரும் சபையினில் நீ நடந்தால்
    மாலைகள் விழ வேண்டும்
    ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று
    போற்றி புகழ வேண்டும்.

    உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.
    என்னுடைய பெயரையும் உங்களுடைய பதிவில் குறிபிட்டதற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  28. நண்பர்களை அள்ள வலை உதவி இருக்கு வலைப்பதிவு என்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது எங்க பக்கமும் கடைக்கண் பார்வையை திருப்புங்கோ தலீவா !
    நேரம் இன்மையால் பின்னூட்டம் இடுவதை நினைப்பதில்லை ஆனால் உங்கள் பின்னூட்டப் பதிவைப் பார்த்தபின் நேரம் ஒதுக்க எண்ணியுள்ளேன் .

    ReplyDelete
  29. அழகாக மின்னுனிங்க, உங்கள் திரை வாழ்விலும் நட்சத்ரம் உதயமாகட்டும் .... மின்னட்டும்

    ReplyDelete
  30. சாதரண வாசகனான என் பெயரை நீங்கள் குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி அதற்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  31. நானாவது எப்பவாவது வருகிறேன்..நீங்கள் எப்போதும் என் வலைப்பக்கம் வந்ததில்லை

    ReplyDelete
  32. பிளாக்கரின் வசதிகளை சரியாக உபயோகிக்காததுதான் உங்கள் கஷ்டங்களுக்கு காரணம். உங்களை யார் டிராஃப்டில் வைக்கச் சொன்னது? பப்ளிஷிங் நேரம், தேதி ஆகியவற்றை முன்னமைவு செய்து கொண்டு பப்ளிஷுக்கான ஆணையை கொடுத்தால் பிளாக்கர் பாட்டுக்கு அந்தந்த நேரத்தில் பப்ளிஷ் செய்து விடுகிறது. அச்சமயங்களில் உங்கள் வீட்டில் இணைய கனெக்‌ஷன் இருப்பதோ இல்லாதிருப்பதோ பிரச்சினையேயில்லை.

    பின்னூட்டங்களும் மட்டுறுத்தாமலே வெளியாகும்படி இருப்பதால் அவை வருவதற்கும் தடையில்லையே.

    இதற்கு என்ன பென் ட்ரைவ் எல்லாம் வைத்து கஷ்டப்பட வேண்டும்? எனது வரும் வியாழனுக்கான பதில்கள் பதிவு சரியாக காலை 05.00 மணிக்கு வெளியாகி விடுமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. நீங்கள் வாழ்த்து சொன்ன விதம் மிகவும் அற்புதம்.

    ReplyDelete
  34. என்ன அண்ணா எனோட நேம் எ விட்டுடிங்கலே இப்படி அநியாயமா ??????

    ReplyDelete
  35. தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்

    ReplyDelete
  36. ஜாக்கி
    என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
    படித்தேன், மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன்.
    பின்னூட்டங்கலுக்கு பதில் போடாதது பற்றி நீ (இனிமேல் “ங்க” கிடையாது) சொன்ன போதே இப்படி ஒன்று எதிர்பார்த்தேன், ஆனால், நிச்சயமாக இவ்வளவு விளக்கமாக, நீளமாக, நன்றாக எதிர்பார்க்கவில்லை.
    வாழ்த்துக்கள்.
    coming to your points,
    சமூக கோபம் இருந்து என்ன செய்ய, இதுவரை நான் ஒன்னும் புடுங்க வில்லையே... வெறும் கோபமும், ஆற்றாமையும், புலம்பல்கலும் தான் உள்ளன என்னிடன்.

    நான் உன்னை கேள்வி கேட்டது, நீ எடுத்த முடிவை பற்றி நாம் இருவரும் (முக்கியமாக நீ) தெளிவு பெறத்தான். Playing the Devil's advocate role என்று சொல்வார்கள். ஓரு விஷயத்தில் (முடிவில்)உள்ள அனைத்து Negative Points பற்றியும் கேள்வி கேட்டு, அனைத்திற்க்கும் பதில் கிடைத்தால், பாசிடிவ் பாயிண்ஸ் மட்டும் நிற்கும், தெளிவு பிறக்கும், உனக்கே தெரியும், நீ எடுத்தது எவ்வளவு பெரிய RISK என்று. சும்மா நண்பன் செய்யும் எல்லா விஷயத்துக்கும் ஆராயாமல் வாழ்த்து கூற என்னால் முடியாது, உன்னுடன் பேசிய பின்பு, நீ எடுத்தது Highly Calculated Risk, The chances of Success is very high and the flip side is not bad too என்று புரிந்தேன், உனக்கும் அவ்வாறே என்று நினைக்கிறேன்.

    கடைசியாக - “நன்றி”, ”நண்பா” இரண்டும் சேரவில்லை, எப்போதும் சேராது நண்பா .

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்.

    ReplyDelete
  37. அன்பு ஜாக்கி...

    உங்களின் நன்றி நவிலல் பண்பு 100 வது பதிவின் போதே கண்டுபிடிக்கப்பட்டு போற்றப்பட்டுவிட்டது. உங்களின் பதிவைப் படித்துவிட்டு, கருத்துச் சொல்லாமல் போன ஆயிரத்துச் சொச்சம் பேருக்கும் உங்கள் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    “என்னடா இது ஒரே ஏழ்ரையா இருக்கு” - என்று நினைத்துக் கொண்டே தான் அன்றொரு நாள் nhm ஐ தரவிறக்கம் செய்து எனக்குத் தெரிந்த அளவு உங்களுக்கு பிளாகர் பற்றி தெரியப் படுத்தினேன். “எனக்கு அப்பவே தெரியும் நீங்க பெரிய ஆளா வருவீங்கன்னு” - என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் உங்ககிட்ட ஒரு பயர் இருக்குது. அதை கவனமா எடுத்துட்டு போங்க.

    அண்ணன் உனா தானாவை வேண்டுமென்றே விட்டிருக்கமாட்டீர்கள் என இன்னும் நான் நம்புகிறேன். என் கண்டனங்களையும் பதிவிடுகிறேன்.

    உச்சங்களையெல்லாம் குனிந்து பார்க்குமளவு வளர அன்பு வாழ்த்துக்கள்.

    பேரன்புடன் நித்யகுமாரன்

    ReplyDelete
  38. உங்க பட்டியல்ல என்னையும் சேர்த்துகோங்க தலைவா...................

    ReplyDelete
  39. அய்யா சாமி, தலைப்பை கண்டதும் பயந்தே போனேன்..
    ”கும்பிடு போட்டுவிட்டு எங்கே போகிறார் “ என்று !
    ”விஷயம்” உள்ளவர்கள் போய்விட்டால் நாங்கள் எல்லாம்
    என்ன செய்வது? ( உங்கள் படத்தை பார்த்தாலே தெரியும் விஷயம் உள்ளவர் என்று!!!!!!)

    இப்படி ஒட்டுமொத்தமாகா கூட பதில் எழுதி ஒரு புது பதிவே
    இடமுடியும் என்று ஆரம்பித்து வைத்தது நன்றாகவே உள்ளது.

    வாழ்த்துக்கள்.

    நம்ம ஷிண்டி க்ராஃபோர்ட் தொகுப்பு எப்ப வரும் தலைவா?

    ReplyDelete
  40. //உடன்பிறப்பு, சம்பத் , கிச்சா, அபாபல் ஜோ//
    தலை இந்த சம்பத் நானா ?? ... நான் உங்க போஸ்ட்ட உடனே படிச்சாலும் ஆடிக்கு ஒருதடவை அம்மாவசைக்கு ஒருதடவை தானே கமெண்ட் போடுவேன் .... ஏன்னா பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி :) ... நானா இருந்த நன்றிஹை ... நானா இல்லாங்காட்டி நெக்ஸ்ட் லிஸ்ட்'ல வர ட்ரை பண்ணுறேன் ( இன்னொரு லிஸ்ட் வரும்ல ?? ) ...

    ReplyDelete
  41. ALMOST 2 HOURS I AM THINKING...HOW TO RESPOND TO THIS POST....END UP WITH ONLY OLD WORD YET POWERFUL WORD "THANKS"

    ReplyDelete
  42. நெஞ்ச தொட்டுட்டீங்க!
    ரிப்பீட்டு !!!

    ReplyDelete
  43. ஜாக்கி அண்ணே,
    இப்படி எல்லா பதிவர்களையும் தேடிபிடித்து நன்றி சொன்ன பாங்கு லட்சத்தில் ஒன்று.
    உஙளிடமிருந்து இந்த நற்பண்பை கற்றுக்கொண்டேன்.
    என்னையும் கவுரவப்படுத்தியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
    கண்டிப்பாக சென்னை வருகையில் சந்திக்கிறோம்.
    மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  44. ஜாக்கி அண்ணே
    தயவு செஞ்சு டாடா இண்டிகாம் கருமாந்திரத்தை தலையை சுத்தி குப்பையில் போடுங்கள்.எனக்கு அந்த நாய்களின் வண்டவாளம் ஆதிமுதல் அந்தம் வரை தெரியும். மாதம் பத்து நாள் மட்டுமே இணையம் வேலை செய்யும்.வாடிக்கையாளர்
    புகார்களுக்கு செவிமடுக்காத செவிட்டு பிணங்கள்.

    தயவுசெய்து எங்கள் வீட்டை போல bsnl அன்லிமிடட் வாங்கிவிடுங்கள்.
    மாதத்தில் ஒரு நாள் தான் இணைப்பு போகும்.

    ஒரு பொருளுக்கு உபயோகிக்காமல் உழைத்த காசு அழும் வேதனை உள்ளதே?
    அதை நான் அறிவேன்.

    ReplyDelete
  45. நன்றி ஜாக்கி சேகர் அவர்களே !!! என்னையும் மதித்து குறிப்பிட்டதற்கு..

    எப்போதும் வருவதுண்டு.பின்னூட்டம் இட நேரம் கிடைக்காததால், சில பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டமிடுகிறேன்.அதுவும் நீளமாக..


    சுவாரஸியமாக எழுதுகிறீர்கள்.சில பதிவுகள் பின்னூட்டாமல் போக விடுவதில்லை.

    ReplyDelete
  46. வணக்கம் jackiesekar

    நன்றி வலைக்கு புதிதான என்னையும் நினைவு கொண்டதற்கு
    Vettipaiyan @ Singaravelu

    ReplyDelete
  47. கலக்கிட்டீங்க... எல்லொரையும் பற்றி சொல்லி.

    நன்றி.

    ReplyDelete
  48. பீர் வாசனையை விட இலக்கிய வாசனை இவரிடம் அதிகம்.

    என்ன கொடுமை ஜாக்கி...-//

    நான் சொன்னதுல தப்பு ஏதாவது இருக்கா சொல்லுங்க மணிஜீ

    ReplyDelete
  49. எத்தனை பெயர்கள்

    அப்பப்பா - அருமை நண்பரே!//

    நன்றி நட்புடன் ஜமால்.. மிக்க நன்றி பிரதி பலன் இல்லாமல் என்னை பின்னுட்டம் இட்டு ஊக்குவித்தவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியின் வெளிப்பாடு இது...

    ReplyDelete
  50. உங்க பட்டியல்ல என்னையும் சேர்த்துகோங்க தலைவா...................

    கோகுலகிருட்டிணன்//

    நிச்சயமா கோகுல்

    ReplyDelete
  51. INTHA ELIYAVANAIYUM KURIPPITTU NANDRI SONNATHU THANGALIN PERUM THANMAIYAI KAATTUKIRATHU.NANDRI SAKOTHARAA.//

    நன்றி சகோதரா....

    ReplyDelete
  52. இன்னாங்கடா இது..

    அதிசயமா கீது..

    நம்ம பேர் வலைவீசி தேடினாலும் கிடைக்க மாட்டேங்குது..!

    அதுக்கெல்லாம் ஒரு லெவல் இருக்கணுமோ..?!!!//

    தலைவரே லேவல்லாம் வேண்டாம்....

    //இந்த ஒரு வாரத்தில் என் பதிவை பாராட்டி பின்னுட்டம் இட்டவர்களுக்கு என் அன்பை வெளிபடுத்தவே இந்த பதிவு பலரின் வலை தளத்தை போய் நான் பார்த்து கூட இல்லை... இருப்பினும் எனக்கு அதரவு தந்த மேலுள்ள அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்....//

    அதாவது இந்த ஒரு வாரத்தில் என்னை பாராட்டி பின்னுட்டம் இட்ட நபர்களுக்கு மட்டும்னு நான் எழுதியதை கவனிக்கவில்லையா? தலை
    நன்றி

    ReplyDelete
  53. இவ்வளவு பணிப்பளுவிற்கு இடையிலும் சிறப்பான முறையில் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்தீர்கள்.
    காரணம் உங்கள் சரியான திட்டமிடல் திறன் தான்.

    எப்படியும் இந்த பதிவு மட்டும் தயாரிக்க உங்களுக்கு ஒரு மணிநேரம் மேல் ஆகியிருக்கும்.அனைத்து நண்பர்களையும் தனித்தனியாக குறிப்பிட்டது நட்பின் மேல் தங்களுக்கு இருக்கும் மரியாதையை காட்டுகிறது.

    உண்மையில் நெகிழ வைத்துவிட்டீர்கள்.

    வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் பலபெற வாழ்த்துக்கள்.//

    நன்றி துபாய் ராஜா.. நான் கஷ்டபட்டதற்க்கு பலன் இது போன்ற உணர்வு பூர்வமான பாராட்டுக்குதான் நன்றி

    ReplyDelete
  54. /வந்தியதேவன்.. எனக்கு சுவாரஸ்ய வலை பதிவு விருது கொடுத்த புண்ணியவான், எனது சான்ட்விச் அன்ட் நான்வெஜ் பரம ரசிகன்.... நான்வெஜ் சரியில்லை என்று அடிக்கடி வருத்தம் கொள்பவன்//

    அடுத்த பதில் நல்லதொரு நான்வெஜ் தருவீர்கள் என அன்புடன் எதிர்பார்க்கின்றேன். உங்கள் விசுவல்களினதும் பரம ரசிகன் நான்.//
    நன்றி வந்தியதேவன்
    உங்கள் பேரன்பிற்க்கு...

    ReplyDelete
  55. :-) நல்லதொரு நட்சத்திர வாரம்!//

    நன்றி சந்தனமுல்லை...

    ReplyDelete
  56. அடடா.... இப்பவும் என் காலை இல்லையில்லை கோபாலின் காலை உடைச்சுட்டீங்களே:-)))))))))))

    துளசிகோபல்= துளசி கோபால்

    எப்போதாவதுன்னு இல்லை. ரெகுலர் விஸிட் உண்டு. ஆனால் ஊட்டம் கொடுக்காமப் போவது இப்போதெல்லாம் அதிகமாயிருச்சு(-:

    ரொம்ப ஸ்லோ கனெக்ஷன்.....//
    குற்றம் கண்டுபிடித்தே போ் வாங்கும் டீச்சர்கள் இருக்கின்றார்கள்... இதில் நீர் எந்த இனத்தை சேர்ந்தவர் என்று எனக்கே விளங்கவில்லை....

    அதுவும் உங்ககிட்ட மட்டும் டாட்டுறேன் பாருங்க அதுதான் கொடுமை..

    நல்லவேளை கோபால் காலை உடைச்சேன்.....

    ReplyDelete
  57. நன்றி ஜாக்கி பல வலை உலக சுறாக்களின் நடுவில் என்னையும் நினைவு படுத்தியதற்கு.

    மேலும் உங்கள் பதிவு உயர்வுக்கு இனைந்து உதவிய திருமதி ஜாக்கிக்கும் எங்கள் அனைவரின் சார்பாக நன்றியை கூற கடமை பட்டுள்ளோம்///

    உலக சுறா உள்ளுர் சுறா நமக்கு எல்லாம் ஒன்னுதான்
    நன்றி பதுவை சிவா

    என் மனைவிக்கு நன்றி பாராட்டியதற்க்கு மிக்க நன்றி.. அவள் இல்லை என்றால் அந்த நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவு கூட போட்டு இருக்கு முடியாது

    நன்றி அவவளை கூறிப்பிட்டு நன்றி பாராட்டியதற்க்கு உனது பின்னுட்டத்தை அவள் படித்து மகிழ்ந்தாள்

    ReplyDelete
  58. நெஞ்ச தொட்டுட்டீங்க!//
    நன்றி ராஜ்

    ReplyDelete
  59. உண்மையில் நெகிழ வைத்துவிட்டீர்கள்.

    வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் பலபெற வாழ்த்துக்கள்.//
    நன்றி கோஸ்ட்

    ReplyDelete
  60. நன்றி நையாண்டி நைனா, நான் ஆதவன்

    ReplyDelete
  61. நன்றி கலையரசன் உன் பின்னுட்டம் படித்து என் மனைவி நெகிழ்ந்து போனாள் ...

    நன்றி

    ReplyDelete
  62. ஜாக்கி, நன்றிக்கு நன்றி..


    அதெல்லாம் இருக்கட்டும். வேலைய பாரு..

    டைட்டில் கார்டு பார்த்து மகிழ்ச்சியில விசில் அடிக்கணும்.//
    கண்டிப்பா சூர்யா

    ReplyDelete
  63. //அதுபோல் உங்கள் மனசை புரிந்து, உங்களுக்கு உதவி மற்றும் ஊக்கம் கொடுத்த என் "அண்ணி"க்கு சுத்திபோடுங்க!!
    //
    கண்டிப்பா மொதல்ல இதை செய்யுங்க அண்ணே....//
    நன்றி ஜெட்லி

    ReplyDelete
  64. நன்றி அன்புமணி மிக்க நன்றி

    ReplyDelete
  65. இரண்டையும் ஒன்றாக ஒப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இரண்டும் போதைதான் என்றாலும் ஒன்று போதனை. (பார்ட்டிய எப்போ வெச்சுக்கலாம்..?)

    உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. அன்பிற்கு நன்றி.

    //வண்ணத்துபூச்சியார் said...
    ஜாக்கி,
    டைட்டில் கார்டு பார்த்து மகிழ்ச்சியில விசில் அடிக்கணும்.//

    இத..இதத்தான் விரைவில் எதிர்பார்க்கிறேன்.


    எப்ப வேண்டுமானாலும் வச்சிக்கலாம்... நன்றி அகநாழிகை

    ReplyDelete
  66. எல்லோரையும் ஞாபகம் வைத்து நன்றி சொல்லி நெகிழவைத்து விட்டீர்கள் நன்றி நண்பரே!//
    நன்றி வால்பையன்

    ReplyDelete
  67. /நான் ஷுட்டிங் போனதும் டிராப்டில் உள்ள போஸ்ட்டைதமிழ்மணத்திலும் தமிளிஷ்லும் இணைக்க என் மனைவிக்கு, ஒரு மணிநேரம் தேவைபட்டது... என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. அதாவது நெட் கனெக்ஷன் வந்து வந்து போய் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது....//

    உங்களோடு சேர்ந்து உங்கள் மனைவியும் ஸ்டார் !
    :)

    எல்லோரையும் மறக்காமல் குறிப்பிட்டுப் பாராட்டும் உங்கள் பண்பு, மாண்பு பாராட்டத் தக்கது !

    வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஜாக்கி !//

    மிக்க நன்றி கோவி .கண்ணன் சார்

    ReplyDelete
  68. நண்பர்களை அள்ள வலை உதவி இருக்கு வலைப்பதிவு என்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது எங்க பக்கமும் கடைக்கண் பார்வையை திருப்புங்கோ தலீவா !
    நேரம் இன்மையால் பின்னூட்டம் இடுவதை நினைப்பதில்லை ஆனால் உங்கள் பின்னூட்டப் பதிவைப் பார்த்தபின் நேரம் ஒதுக்க எண்ணியுள்ளேன் .//
    நன்றி சான்தி மிக்க நன்றி

    ReplyDelete
  69. சாதரண வாசகனான என் பெயரை நீங்கள் குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி அதற்கு என் நன்றிகள்.//
    நன்றிஅபெபல் ஜோ... இதில் சாதாரணம் எல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் என்னை மதித்தீர்கள் நான் உங்களை மதித்தேன்...நன்றி

    ReplyDelete
  70. நானாவது எப்பவாவது வருகிறேன்..நீங்கள் எப்போதும் என் வலைப்பக்கம் வந்ததில்லை//
    நேத்து வந்துட்டேன் தலை

    நன்றி ராதாகிருஷ்னன்

    ReplyDelete
  71. இதற்கு என்ன பென் ட்ரைவ் எல்லாம் வைத்து கஷ்டப்பட வேண்டும்? எனது வரும் வியாழனுக்கான பதில்கள் பதிவு சரியாக காலை 05.00 மணிக்கு வெளியாகி விடுமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    தகவலுக்கு நன்றி டோண்டு சார்... போஸ்ட் போட்டுடலாம் ஆனா புக் மார்க்ல எப்படி இனைக்கிறது????

    ReplyDelete
  72. நீங்கள் வாழ்த்து சொன்ன விதம் மிகவும் அற்புதம்.//
    நன்றி ரஹ்மான்

    ReplyDelete
  73. மாபெரும் சபையினில் நீ நடந்தால்
    மாலைகள் விழ வேண்டும்
    ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று
    போற்றி புகழ வேண்டும்.

    உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.
    என்னுடைய பெயரையும் உங்களுடைய பதிவில் குறிபிட்டதற்கு நன்றிகள் பல.//
    பிளாக் பாண்டி உன் பின்னுட்டத்தை படிச்சதும் எனக்கு ஜலதோஷம் பிடிச்சுடிச்சி

    நன்றி

    ReplyDelete
  74. என்னை தம்பியாக ஏற்றுகொண்டதற்கு ரொம்ப
    நன்றி அண்ணே....

    ReplyDelete
  75. என்ன அண்ணா எனோட நேம் எ விட்டுடிங்கலே இப்படி அநியாயமா ??????--//

    //ஜாம்பஜார் ஜக்கு, மிஸ்டர் அடோர்...,ராஜாராமன்,//

    யார் பெயரையும் விடவில்லை பதட்டத்தில் நம் பெயர் இல்லையே என்று படிக்கும் போது ஏற்படும் காட்சி பிழை இது..

    அடோர்

    ReplyDelete
  76. என்னை தம்பியாக ஏற்றுகொண்டதற்கு ரொம்ப
    நன்றி அண்ணே....

    ReplyDelete
  77. என்னை தம்பியாக ஏற்றுகொண்டதற்கு ரொம்ப
    நன்றி அண்ணே....

    ReplyDelete
  78. தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்//
    நன்றி முரளி கண்ணன்.. உங்கள் வாழ்த்துக்களை எதிர்பார்த்து இருந்தேன்...

    நன்றி தாமதமானாலும் மிக்க நன்றி

    ReplyDelete
  79. சமூக கோபம் இருந்து என்ன செய்ய, இதுவரை நான் ஒன்னும் புடுங்க வில்லையே... வெறும் கோபமும், ஆற்றாமையும், புலம்பல்கலும் தான் உள்ளன என்னிடன்.//

    உண்மைதான் ஆனால் இந்த காலத்தில் குறைந்த பட்ச இந்த கோபம் கூட இல்லாமல் நிறைய பேர் வாழ்கின்றார்கள் ஸ்ரீராம்...

    ReplyDelete
  80. நான் உன்னை கேள்வி கேட்டது, நீ எடுத்த முடிவை பற்றி நாம் இருவரும் (முக்கியமாக நீ) தெளிவு பெறத்தான். Playing the Devil's advocate role என்று சொல்வார்கள். ஓரு விஷயத்தில் (முடிவில்)உள்ள அனைத்து Negative Points பற்றியும் கேள்வி கேட்டு, அனைத்திற்க்கும் பதில் கிடைத்தால், பாசிடிவ் பாயிண்ஸ் மட்டும் நிற்கும், தெளிவு பிறக்கும், உனக்கே தெரியும், நீ எடுத்தது எவ்வளவு பெரிய RISK என்று. சும்மா நண்பன் செய்யும் எல்லா விஷயத்துக்கும் ஆராயாமல் வாழ்த்து கூற என்னால் முடியாது, உன்னுடன் பேசிய பின்பு, நீ எடுத்தது Highly Calculated Risk, The chances of Success is very high and the flip side is not bad too என்று புரிந்தேன், உனக்கும் அவ்வாறே என்று நினைக்கிறேன்.

    கடைசியாக - “நன்றி”, ”நண்பா” இரண்டும் சேரவில்லை, எப்போதும் சேராது நண்பா .

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்.//

    ஸ்ரீராம் மிக அற்புதமாக எழுதி இருக்கின்றாய்.... நானும் என் மனைவி உன் பதிலை படித்து மகிழ்ந்தோம்.. அதிலும் அந்த கடைசி பஞ்ச் சூப்பர்...

    ReplyDelete
  81. “என்னடா இது ஒரே ஏழ்ரையா இருக்கு” - என்று நினைத்துக் கொண்டே தான் அன்றொரு நாள் nhm ஐ தரவிறக்கம் செய்து எனக்குத் தெரிந்த அளவு உங்களுக்கு பிளாகர் பற்றி தெரியப் படுத்தினேன். “எனக்கு அப்பவே தெரியும் நீங்க பெரிய ஆளா வருவீங்கன்னு” - என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் உங்ககிட்ட ஒரு பயர் இருக்குது. அதை கவனமா எடுத்துட்டு போங்க.//


    நன்றி நித்யா நீங்க அன்னைக்கு எனக்கு சொல்லிக்கொடுக்கும் போது நீங்க கொஞ்சம் அன் ஈசியா இருந்திங்க... ஒரே நாள்ள எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனுமா? என்ற மெல்லிய கோபம் கூட உங்களிடத்தில் நான் கவனித்தேன்...

    எனக்கு எழுத்து மீதான எனது ஆர்வமே அந்த நச்சரிப்பு

    நன்றி நித்யா....

    ReplyDelete
  82. உங்க பட்டியல்ல என்னையும் சேர்த்துகோங்க தலைவா................சேர்த்தாச்சு ஷாஜி
    நன்றி

    ReplyDelete
  83. அய்யா சாமி, தலைப்பை கண்டதும் பயந்தே போனேன்..
    ”கும்பிடு போட்டுவிட்டு எங்கே போகிறார் “ என்று !
    ”விஷயம்” உள்ளவர்கள் போய்விட்டால் நாங்கள் எல்லாம்
    என்ன செய்வது? ( உங்கள் படத்தை பார்த்தாலே தெரியும் விஷயம் உள்ளவர் என்று!!!!!!)

    இப்படி ஒட்டுமொத்தமாகா கூட பதில் எழுதி ஒரு புது பதிவே
    இடமுடியும் என்று ஆரம்பித்து வைத்தது நன்றாகவே உள்ளது.

    வாழ்த்துக்கள்.

    நம்ம ஷிண்டி க்ராஃபோர்ட் தொகுப்பு எப்ப வரும் தலைவா?//

    நன்றி கக்குமாணிக்கம்...தங்கள் பாராட்டக்கு... யோவ் நான் என்ன சின்டி மேனேஜரா?

    ReplyDelete
  84. //உடன்பிறப்பு, சம்பத் , கிச்சா, அபாபல் ஜோ//
    தலை இந்த சம்பத் நானா ?? ... நான் உங்க போஸ்ட்ட உடனே படிச்சாலும் ஆடிக்கு ஒருதடவை அம்மாவசைக்கு ஒருதடவை தானே கமெண்ட் போடுவேன் .... ஏன்னா பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி :) ... நானா இருந்த நன்றிஹை ... நானா இல்லாங்காட்டி நெக்ஸ்ட் லிஸ்ட்'ல வர ட்ரை பண்ணுறேன் ( இன்னொரு லிஸ்ட் வரும்ல ?? ) ...//

    அந்த சம்பத் நீதான்பா

    சந்தேகமே வேண்டாம்..

    நன்றி

    ReplyDelete
  85. ALMOST 2 HOURS I AM THINKING...HOW TO RESPOND TO THIS POST....END UP WITH ONLY OLD WORD YET POWERFUL WORD "THANKS"//
    நீங்க சொன்னது உண்மை ராஜ்குமார் 3 மணிநேரம் எடுத்துக்கொண்டு எழுதிய பதிவு இது உங்கள் பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  86. நன்றி வெட்டிபையன் கல்ப் தமிழன், தங்கள் இருவர் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  87. ஜாக்கி அண்ணே,
    இப்படி எல்லா பதிவர்களையும் தேடிபிடித்து நன்றி சொன்ன பாங்கு லட்சத்தில் ஒன்று.
    உஙளிடமிருந்து இந்த நற்பண்பை கற்றுக்கொண்டேன்.
    என்னையும் கவுரவப்படுத்தியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
    கண்டிப்பாக சென்னை வருகையில் சந்திக்கிறோம்.
    மீண்டும் நன்றிகள்.//
    கண்டிப்பாக் சந்திக்கலாம் கார்த்திகேயன்
    நன்றி

    ReplyDelete
  88. ஜாக்கி அண்ணே
    தயவு செஞ்சு டாடா இண்டிகாம் கருமாந்திரத்தை தலையை சுத்தி குப்பையில் போடுங்கள்.எனக்கு அந்த நாய்களின் வண்டவாளம் ஆதிமுதல் அந்தம் வரை தெரியும். மாதம் பத்து நாள் மட்டுமே இணையம் வேலை செய்யும்.வாடிக்கையாளர்
    புகார்களுக்கு செவிமடுக்காத செவிட்டு பிணங்கள்.

    தயவுசெய்து எங்கள் வீட்டை போல bsnl அன்லிமிடட் வாங்கிவிடுங்கள்.
    மாதத்தில் ஒரு நாள் தான் இணைப்பு போகும்.

    ஒரு பொருளுக்கு உபயோகிக்காமல் உழைத்த காசு அழும் வேதனை உள்ளதே?
    அதை நான் அறிவேன்.

    கார்த்தி அடுத்த மாசத்தோட அந்த பிக்காளி பயளுவ டுய டேட் முடியுது... கண்டிப்பா மாத்திடுறேன்

    ReplyDelete
  89. நன்றி ஜாக்கி சேகர் அவர்களே !!! என்னையும் மதித்து குறிப்பிட்டதற்கு..

    எப்போதும் வருவதுண்டு.பின்னூட்டம் இட நேரம் கிடைக்காததால், சில பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டமிடுகிறேன்.அதுவும் நீளமாக..


    சுவாரஸியமாக எழுதுகிறீர்கள்.சில பதிவுகள் பின்னூட்டாமல் போக விடுவதில்லை.//
    நன்றி அமு செய்யது தங்கள் பாராட்டுக்கு....நன்றி

    ReplyDelete
  90. Evvalovo pani sumaigalukku mathiyil nathchathira vaarathai sirappakki irukeereergal...Valthukkal...
    Natpudan,
    um.Krish

    ReplyDelete
  91. \\யார் பெயரையும் விடவில்லை பதட்டத்தில் நம் பெயர் இல்லையே என்று படிக்கும் போது ஏற்படும் காட்சி பிழை இது..அடோர் //

    அம்மம் தலிவரே நான் பார்காம விட்டுடென்

    ReplyDelete
  92. மிக்க நன்றி தலைவரே..
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  93. எல்லோரையும் மறக்காமல் குறிப்பிட்டுப் பாராட்டும் உங்கள் பண்பு, மாண்பு பாராட்டத் தக்கது !

    வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஜாக்கி அண்ணே!

    ReplyDelete
  94. வேலை பளுவின் காரணமாய் இன்று தான் இந்த பதிவை பார்க்க முடிந்தது. இந்த சிறியேனையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.அருமையான திரைப்படங்களை அலசி ஆராய்ந்து எழுதி வருகிறீர்கள்.தொடர்ந்து படித்து வருகிறேன்.வாழ்த்துகள்.தொடருங்கள்.

    ReplyDelete
  95. ஜாக்கி சேகர் விடுமுறையில் இருந்ததால் படிக்க முடியவில்லை..

    நட்ச்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள் என்னை குறிப்பிட்டமைக்கு நன்றிகள்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner