எனது 300வது பதிவும்,என் பதிவு பக்கம் வந்து போன உங்கள் எல்லோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...



14.04.08 அன்றுதான் நான் வலை உலகிற்கு அறிமுகமானநாள்...வலையில் தமிழில் எழுதலாம் என்பது எனக்கு அப்போதுதான் தெரியும்... எப்போதாவது நெட்டில் மேட்டர் பார்க்க பிரவுசிங் சென்டர் போய் அது டவுன்லோடு ஆகும் வரை வெப்துனியா போன்ற தமிழ் தளங்களில் செய்திகள் வாசி்த்து இருக்கின்றேன்... கம்யுட்ட்ரில் தமிழில் வாசிக்க முடியும் என்பது எனக்கு அப்போதுதான் தெரியும்...

இப்போது போல் இல்லாமல் மெயில் ஒன்றை நண்பர் உதவியுடன் ஓப்பன் பண்ணி வைத்த போது ஈ அடித்தது... இப்போது போல் அப்போது நண்பர்கள் இல்லை... இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறையாவது நெட் சென்டர் போய் பார்த்து விட்டு வந்தேன்....

பிலிம் புரட்சி முடிந்து எல்லா கேமராக்களும் டிஜிட்டல் கார்டுகளுக்கு மாற எனக்கு பர்சனல் பிசி அவசியம் ஆனது... ஏனென்றால் போட்டோ காப்பி பண்ணி சீடியில் ஏற்றி கொடுக்க நிறைய அலட்டினார்கள்..கொஞ்சம் அதிகமான பில்லையும் போட்டு வைத்தார்கள்...

வீட்டில் பிசி வந்தது... நெட்கனெக்ஷன் இழுக்க காரணம்..இந்துஸ்தான் கல்லூரியில், பசங்களுக்கு பாடம் நடத்தும் போது எதாவது சந்தேகம் என்றால் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும், நான் தெளிவு பெறவும் எனக்கு வலை தேவையாய் இருந்தது...

கம்யுட்டர் பற்றி எனக்கு சுத்தமாக எதுவும் தெரியாது இப்போதும்தான்... எனக்கு கம்யுட்டர் பற்றிய, அடிப்படை கத்து கொடுத்து எனது கல்லுரிதான்...முதன் முதலாய் சில போட்டோக்களை சீடியில் இருந்து கம்யுட்டர் ,ஈ டிரைவில் போட்டோக்களை நான் காப்பி செய்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

என் மனைவியின் நண்பர் பதிவர் நித்யா அவர்கள், தான் வலை எழுதுவதாகவும் அதனை வாசித்து பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்... எனக்கு அந்த வலையை திறந்த போது ஆச்சர்யம்... தனி நபர்களால் வலை எழுத முடியுமா? அதுவும் தமிழில்....?


அது ஒரு பெரிய பிரச்சனை தமிழ் டைப் எனக்கு தெரியாது.... ஆங்கில டைப்பும் எனக்கு தெரியாது...ஈவ்வளவு ஏன் ஆங்கிலமே எனக்கு தெரியாது... இரண்டு விரல்கைளை வைத்து தடவி தடவி டைப் அடித்தேன்.... என் முதல் பதிவுகள் பலது 20 வரியை தாண்டாது.. சத்து இல்லாத குழந்தைகள் போல் 5 வரி 10வரியில் முடிந்து கொள்வேன்.... இப்போது அப்படிஇல்லை... ஆனால் எழுத்து பிழைகள் நிறைய இருக்கின்றன... அடித்து அடித்த கீ போர்டுக்கு வயதாகி விட்டது“ ரூ”போட்டால் “ர”விலேயே நிற்க்கின்றது.. இன்னும் வேகம் வரவில்லை... தமிழ் எழுத்துக்களை செய்திதாள்களில் கட் செய்து கீ போர்டில் ஒட்டி பொழைப்பை நடத்துகின்றேன்...எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்... இருப்பினும் மனதில் ஒரு வெறி கற்றுக்கொள்ள வேண்டும் என்று....

ஒரு நல்ல நாளில் அவர் பிளாக்கரில் கணக்கு ஒன்றை ஓப்பன் செய்து சுய முதுகுசொறிதலுக்கு அடி போட்டார்... இதோ 300யை எட்டி விட்டேன்....

பிளாக்கால் என்ன பயன்???

எனக்கு நல்ல நண்பர்களை பெற்ற தந்தது....முகம்தெரியாத நண்பர்கள் என்னை நெசிக்க செய்தது....போனிலும் மெயிலிலும் என்னை தொடர்பு கொள்ளும் நண்பர்கள்... பட விமர்சனம் நல்லா எழுதிரிங்க.... உங்க அனுகவங்களோடு கலந்து எழுதறது நல்லா இருக்கு என்று பாராட்டும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கின்றது...

வலையுலகம் நான் வந்து ,இந்த ஒரு வருடத்தில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனவர்கள்..

நித்யகுமாரன், உண்மை தமிழன், கேபிள் சங்கர், நையான்டி நைனா, நட்புடன் ஜமால்,தண்டோரா,வண்ணத்துபூச்சி, அகநாழிகை, லக்கிலுக், நர்சிம்,அதிஷா, பாஸ்டன் ஸ்ரீராம்,முரளிகண்ணன், அக்னி பார்வை,பைத்தியகாரன், ஜ்யோரோம் சுந்தர், டாக்டர் புருனோ, பாலபாராதி, ஸ்ரீ,கார்ததிகைபாண்டியன்,வடிவேலன், வெண்பூ, மங்களுர்சிவா.... ஆசிப் மீரான் போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும்....எப்போதுவேண்டுமானாலும் போனில் பேசுவேன்.... வலையுலகம் வரும் முன் இவர்கள் எல்லாம் யாரென்றே எனக்கு தெரியாது... எல்லோருக்கும் எனது நன்றிகள்....

எப்போதுமே எனக்கு பின்னுட்டம் இட்டு அசத்தும் எனது வலையுலக நண்பர்கள்...

நையான்டி நைனா, நட்புடன் ஜமால், ராஜ்குமார்,ஜெட்லி, வால்பையன், மங்களுர்சிவா, சூரியன் , ரெட்மகி, துபாய் ராஜா, நாஞ்சில்நாதம், ராஜ், ராஜாகே வி ஆர், திருச்சிகாரன்,ஸ்டார்ஜன், யோ வாய்ஸ், பளாக் பாண்டி, வந்தியதேவன், டிவி ராதாகிருஷ்னன், பாலகுமாரன் வத்திராயிருப்பு,மின்னுது மின்னல் , இளவட்டம் , யோ, கவிதைகாதலன், ஜெர்ரி, ராகவன் நைஜீரியா, வண்ணத்து பூச்சி,சின்னபையன், பிஸ்கோ்து பயல், மஞ்சூர் ராஜா, பிரதிப் பாண்டியன்,வெட்டிபையன், ராம்ஜீ யாஹு, பதுவை சிவா, தருமி,. கலையரசன்,காத்திகேயனும் அறிவுதேடலும்..,கக்குமாணிக்கம்,அமு செய்யது,வடுவூர் குமார், நான் ஆதவன், அது ஒரு கனாக்காலம், போன்றவர்கள் எப்போதும் பின்னுட்டம் இட்டு அசத்துபவர்கள்....


போன் மற்றும் மெயிலில்,

திருமதி பெர்னான்டோ, பாஸ்டன் ஸ்ரீராம், ஹரிராஜகோபாலன், பாலமுருகன், ஆர் ஆர் பேன்றவர்களுக்கு எனது நனறிகள்....

என் எழுத்தை புக்மார்க்கில் போடுவதற்க்குள் படித்து விடும் 170 நண்பர்கள்...


ராஜு, சரவணன்,பிரபு ஜெயா , தன்ராஜ், ஜுயோரக், ஆன்ந், திலிப்இன் பதிவு,சூர்யா, சங்கரராம், ஆர் ஆர்,தத்து பித்து , நல்ல தம்பி, நாகு, விஜயராஜா , ராஜி, ஆன்ந், ராம், சதிஸ் கண்ணன், கந்த குமார், முரளிகண்ணன், புகழினி, லோயர்,ரன்ஜு, சரவணகாந்,பிரபு ஜெயா,எம்ஜெவி, ரவிச்சந்திரன், பாலா, கத்துக்குட்டி , சதா , அருன்கார்த்திக், சரவணன்,தேவதாசன், ராஜ்குமார் சீனிவாசன், மாலாக்க முத்துபிருஷ்னன் , அங்கிள் சென், செந்தில் துபாய், இளங்கோ, துபாய் ராஜா, புரட்சிக்கவி, மின்னுது மின்னல், சில்க் சமிதா, ராத்மாதவ்,நாஞ்சில் நாதம், அன்பு,ஜெட்லி,ரெட்மகி,தாமஸ் ரூபன், இரா சிவக்குமாரன், வாசவன்,ரவி மோகன், 23சீ, கைப்புள்ள,யோ வாய்ஸ், கதிர்ஈரோடு,அருள்பிரகாஷ்,ராமய்யா, ஆர்கே, முருகன், ஸ்ரீராம் நாராயணன்,கேபிள் சங்கர், மேட்ரிக்ஸ்,.முத்து லிங்கம், கேவிபட்டி. சித்து,பனையுரான், சஞ்சனாஎம்எஸ்,இளங்கோவன் ,கண்றாவி,தினேஷ், தமிழ் குடும்பம், சுரேஷ்குமார்,ரெமோபாய், கிருத்திகன் குமாரசுவாமி, நெல்லை சரவணகுமார், ஹெர்வா அனிதா,சுதாகர், ஈஷ்,விஷாலிவின், நையான்டி நைனா, கார்த்திகை பாண்டியன், கக்கு,செல்வகிருஷ்னா, 100 பாலோயர்,பிரதீப்பாண்டியன்,மணிப்பயல் ,வர்ஷா,தேன்மொழிதங்கமணி,பூங்குன்றன், சென்பகநாதன்,ஸ்டாஜ்ன், குடந்தை அன்புமணி,அஜீத் ராஜ்குமார்,சே,இராகவன்நைஜீரியா,ரஹ்மான்,பிஸ்கோத்துபயல், சங்கர், ,கபிலன்,ஷுரிடிசாய்தாசன்,பிரகாஷ்114,கனகராஜா ஜதிஸ்,சுந்தர் ,பாலா, அகநாழிகைபொன்வாசுதேவன்,தேவன்மயம் , நன்னிலங்கைதமிழன்,கலைஅரசன், ஜெய் ஜெய், வினு,இலங்கேஸ்வரன் ,தமிழ் மாங்கனி,ரம்யா, சுரேஷ்,ராஜன்,சுப்பு , சங்கர்கனேஷ், உயிர்நண்பன்,விடிவேலன் ஆர் , விஸ்வம்,ஸ்ரீ.தமிழ்பிளாக்கின் டிப்ஸ்,ரவி சரவணன்டி,யாரோ அவன் யாரோ, வந்தியதேவன்,கிருஷ்ணமூர்த்தி, ச்ங்கொலி, வழிபோக்கன், அத்திரி,உலவு.காம்,ரமேஷ்,பதுவைசிவா,சரவணகுமரன்,கருவெளி,அப்பாவி தமிழன், வண்ணத்துபூச்சி, சந்ரு , அமு செய்யது,என்றென்றும் அன்புடன்பாலா,வால்பையன் , அக்னிபார்வை, உண்மைதமிழன்மங்களுர்சிவா, நட்புடன்ஜமால்,குடுகுடுப்பை, தண்டோரா,கோவிகண்ணன்,சென் ,வெண்பூ,நித்யகுமாரன்,குண்டுமாமா,புதுகைசாரல்,திரட்டி.காம்,மதுவதனன்மௌ,மு்துது கோபாலகிருஷ்னன்,வீனோரதா,பவுலோஸ்,வலைநன்பன் , வேலன்ராஜன்,ரங்ஸ் போன்றவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....உங்களால இது சாத்தியமாயிற்று..... மற்றும் பெயர் விடுபட்ட இருந்தால் மன்னிக்கவும்.

என்னை பதிவுக்கு அறிமுகபடுத்திய நண்பர் நித்யகுமரன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.. எத்தனைமுறைதான் எனது பெயரை சொல்லுவாய் என்று???? என் அம்மா எனக்கு இது செய்தால், அது செய்தால் என்று நான் சாகும்வரை சொல்லிதானே ஆக வேண்டும் அது போல்தான் இதுவும் என்றேன்....

முடிந்தவரை நன்றி மறக்க கூடாது என்ற கொள்கையோடு வாழ்ந்துவருகின்றேன்....

எனது பிளாக்கை அவர்களுடைய பிளாக்கில் லிங்க் கொடுத்து அவர்களுடைய தளத்துக்கு வருபவர்களை படிக்க வைக்கும் பெரியமனதுகாராகள்,


1.புதியவன் http://www.pudiyamanithan.blogspot.com/

2.பேபிஆனந்தன் http://www.babyanandan.blogspot.com/

3.தேவன்மயம் http://abidheva.blogspot.com

4.யோவாய்ஸ்..http://yovoice.blogspot.com

5. வந்தியதேவன்..http://enularalkal.blogspot.com

6.ராஜா கேவிஆர்..http://kvraja.blogspot.com

7. சரவணகுமார் எம் எஸ்கே..http://msk-cinema.blogspot.com/

8. அத்திரி... http://rajkanss.blogspot.com

9.திரட்டி..http://thirati.blogspot.com/

10.விக்னேஷவரன்..http://vaazkaipayanam.blogspot.com

11. புதுவைசிவா..http://puduvaisiva.blogspot.com/மற்றும் எனது தளத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும்

தமிழ்மணம் மற்றும் தமி்ளிஷ் தளங்களுக்கு எனது நன்றிகள்...

நண்பர் கேபிள் இரண்டு நாட்களுக்கு முன் சொன்னார் http://www.alexa.comல் எனது ரேங் ஒரு லட்சத்து பதினெட்டில் இருப்பதாக....அப்போது பார்த்த வரையில்
118425 என்ற அளவில் அதாவது ஒரு லட்சத்தி பதினெட்டு வரை எனது வலைதளம் வந்துள்ளது வலையுலகம் வந்த ஒன்றரை வருடத்தில் இது மிகப்பெரிய செயல்.... அது போல் ஒரு லட்சத்துக்குள் வந்தவர் பதிவர் லக்கிதான்..... வெகுவிரைவி்ல் உங்கள் ஆசியுடன்http://www.alexa.com ரேங்கில் ஒரு லட்சத்துக்குள் வர வேண்டும் என்று எனக்காய் பிரார்த்தனை செய்யுங்கள்....

அதற்க்கு காரணம் நீங்கள், உங்கள் அன்பு, உங்களால் இது சாத்தியமாயிற்று....

நான் பதிவு எழுத மிக உறுதுனையாய் என்னை எப்போதும் ஊக்கபடுத்திய எனது துனைவியார் சுதாதனசேகரன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

பெயர் விடுபட்டவர்கள் என்னை மன்னிக்கவும்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

104 comments:

  1. வாழ்த்துகள் நண்பரே!

    இன்னும் இன்னும் உயரம் எட்டுங்கள்

    ReplyDelete
  2. அசராது பதிவு போட்டு 300 தொட்டாச்சா ?

    வாழ்த்துகள் !

    எனக்கு தெரிந்து நீங்கள் ஒருவர் தான் உங்களுக்கு பின்னூட்டமிட்டவர்களை அடிக்கடி நினைவு கூர்ந்து பாராட்டும் பதிவர்.

    ReplyDelete
  3. ஜாக்கி..விஜயகாந்த் கணக்கா ஷோக்கா புள்ளிவிவரத்தை அடுக்கிட்டே...மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  4. தங்களின் 300வது இடுகைக்கு வாழ்த்துகள். மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

    எல்லார் பெயரையும் கண்டுபிடித்து போட்டு இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    நீங்க சொன்ன மாதிரி வலையுலகம் கொடுத்த நண்பர்கள் ஏராளம்.

    ReplyDelete
  5. நன்றி கோவி... என்னால் படித்து பின்னுட்டம் போட முடியவில்லை ஆனால் போடபவர்களை மதிக்க வேண்டும் அல்லவா... படித்து விட்டு இதற்க்கு பதில் எழுதவேண்டும் என்று நினைத்து அதற்க்கு மெனெக்கெட்டு பதில் டைப் செய்து... பாருங்கள் எவ்வளவு நீளம் பேய்கொண்டு இருக்கின்றது.... அப்படி மெனக்கெடும் நண்பர்கள் நினைவு கூறுதல்தான் முறை அல்லவா?

    ReplyDelete
  6. வாழ்த்துகள் நண்பரே!

    இன்னும் இன்னும் உயரம் எட்டுங்கள்--


    எப்போதும் முதல் பின்னுட்டம் போட்டு எனை வாழ்த்தும் ஜமாலுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  7. ஜாக்கி..விஜயகாந்த் கணக்கா ஷோக்கா புள்ளிவிவரத்தை அடுக்கிட்டே...மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா...//
    நன்றி தண்டோரா...மதிப்பவர்களை மதிக்க வேண்டும் அல்லவா?

    ReplyDelete
  8. முதலில் 300க்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தங்களின் 300வது இடுகைக்கு வாழ்த்துகள். மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

    எல்லார் பெயரையும் கண்டுபிடித்து போட்டு இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    நீங்க சொன்ன மாதிரி வலையுலகம் கொடுத்த நண்பர்கள் ஏராளம்.//
    உண்மை இராகவன் உங்களை சந்தித்தது கூட அது போல ஒரு நிகழ்வில்தான்...

    ReplyDelete
  10. /

    கம்யுட்டர் பற்றி எனக்கு சுத்தமாக எதுவும் தெரியாது இப்போதும்தான்... எனக்கு கம்யுட்டர் பற்றிய, அடிப்படை கத்து கொடுத்து எனது கல்லுரிதான்...முதன் முதலாய் சில போட்டோக்களை சீடியில் இருந்து கம்யுட்டர் ,ஈ டிரைவில் போட்டோக்களை நான் காப்பி செய்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...
    /

    முதல்முதலில் ப்ரிண்ட் அவுட் எடுத்தப்ப எனக்கும் இதே டென்ஷன் , மகிழ்ச்சி ஏற்ப்பட்டது

    ReplyDelete
  11. நன்றி மங்களுர் சிவா..

    ReplyDelete
  12. /
    நண்பர் கேபிள் இரண்டு நாட்களுக்கு முன் சொன்னார் அப்போது பார்த்த வரையில்
    118425 என்ற அளவில் அதாவது ஓரு லட்சத்தி பதினெட்டு வரை எனது வலைதளம் வந்துள்ளது வலையுலகம் வந்த ஒன்றரை வருடத்தில் இது மிகப்பெரிய செயல்.... வெகுவிரைவி்ல் உங்கள் ஆசியுடன் ஒரு லட்சத்துக்குள் வர வேண்டும் என்று
    /

    1180000 எங்க வந்திருக்கு 100000க்குள்ள எங்க வரணும்????

    ReplyDelete
  13. 300க்கு வாழ்த்துகள் ஜாக்கி. உங்களது இந்த அசுர சாதனைக்கு பின்னால் இருக்கும் அனைத்து நண்பர்களின் அன்புக்கும் தலைவணங்குகிறேன்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  14. தல டாப் கியர்ல போய்ட்டே இருங்க ..

    வாழ்த்துக்கள் , அப்புறம் அண்ணிக்கு ஒரு நன்றி கும்மாங்குத்து விடாமல் கம்ப்யூட்டர் பொட்டிய தட்ட இவ்ளொ வேலை பளுவிலும் நேரம் கொடுத்ததுக்கு..

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் என்னையும் உங்கள் கணக்கில் சேர்த்து கொண்டதற்கு மட்டுமல்ல. ட்ரிபள் சென்சரி அடித்ததுக்கும். அடிச்சி தூள் பண்ணுங்க. தொடர்ந்து வாசிக்கிறோம். என்னுடைய பேபரிட் வலைமனைகளில் உங்களது பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும்.... ஒன்று.

    மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நன்றி தல

    ReplyDelete
  16. சிண்டியில் பல ஜாலியோ ஜிம்கானா படங்கள் இருக்கும் போது அதிகமான் உடையுடன் இருக்கும் படத்தை பிரசுரித்தமைக்காக வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  17. 300, 300மடங்காக பெருக வாழ்த்துக்கள் நண்பரே.
    கடந்த சில மாதமா தான் நான் பின்னூட்டம் இட்டு வருகிறேன் எனக்கு போய் நன்றி சொல்லிட்டு..
    நீங்க இல்லாட்டா பல படங்கள நான் மிஸ் பண்ணிருப்பேன்.அதற்கு நான் தான் நன்றி சொல்லணும்

    ReplyDelete
  18. 100வது பதிவு போடும்போது படிக்க ஆரம்பித்தேன்..
    அதுகுள்ள 300 வந்துட்டீங்க..

    அன்புடன் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  19. வாழ்த்துகிறேன்..

    வலையுலக நட்பை மிக அருகையாக கௌரவப்படுத்தியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அண்ணே...
    தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்து இருக்கிறோம்...

    ReplyDelete
  21. எழுத்துலகில் மேலும் சிறந்து வளர என் வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் தலைவரே,

    விரைவில் " ஆயிரம் பதிவு போட்ட அபூர்வ ஜாக்கி" நு நேம் வாங்க வாழ்த்துக்கள்,

    நன்றி
    மிஸ்டர் அடோர்

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் சார் ...

    ReplyDelete
  24. அடேயப்பா!
    அதுகுள்ள 300ஆ!
    நான் வந்து ரெண்டு வருசம் ஆகுது!
    போன மாசம் தான் 200-ஐ தாண்டினேன்!
    ரைட்டு டெண்டுல்கர் மாதிரி அடிச்சி ஆடுறிங்க!
    கலக்குங்க!

    ReplyDelete
  25. உங்கள மாதுரி தான் நானும் ததகாக பித்தாகன்னு தமிழ்ல டைப் பண்றேன் .. இந்த பதிவ படிக்கும் போது நானும் நிறைய பதிவு போடனும்ன்னு தோணுது ..

    வாழ்த்துக்கள் ... உங்களின் 500ராவது பதிவில் இதே போன்று வாழ்த்து சொல்ல ஆசை படுகிறேன் ..

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

    இவ்வளவு சொன்னாலும் என் மனசுக்கு பத்தாது இருந்தாலும் நிறுத்திகிறேன்.

    ReplyDelete
  27. வாழ்த்துகள் ஜாக்கி..

    மேலும் பல சிகரங்களை தொட..கலைத்துறையில் ஜொலிக்க.. குடும்பத்தில் செழிக்க.. 300வது பதிவில் வாழ்த்துகிறேன்.

    500க்கும் வருவேன்.


    பி.கு: ஒசியில பிளாக் கொடுத்த Google நன்றி சொன்னியா..??

    ReplyDelete
  28. மிக மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்... அண்ணா...

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் தல,நல்லா அடிச்சி ஆடுங்க. அப்படியே ஐநூறு ஆயிரம்னு போய் கிட்டே இருங்க.நாங்களும் கூடவே வந்துட்டு இருக்கோம்.

    ReplyDelete
  30. சிறு துளி பெரு வெள்ளம். நீங்கள் இன்னும் பல சிறந்த பதிவுகளை இட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. நிலைச்சி நின்று வெளுத்துக் கட்டுங்க. வாழ்த்துகள். மேன்மேலும் தங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  32. நிலைச்சி நின்று வெளுத்துக் கட்டுங்க. வாழ்த்துகள். மேன்மேலும் தங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  33. வாழ்த்துகள், தொடரட்டும் அரிய பதிவுகள்.

    எப்படி எழுதத் தொடங்கினேன் என சொல்லி அனைவரையும் நினைவு கூர்ந்த விதம் மிகவும் அருமை.

    தமிழுக்கு ஆற்றும் பணி மிகவும் போற்றத்தக்கது. மிக்க நன்றி.

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  35. வாழ்த்துகள், தொடரட்டும்....

    ReplyDelete
  36. \\முடிந்தவரை நன்றி மறக்க கூடாது என்ற கொள்கையோடு வாழ்ந்துவருகின்றேன்....\\
    Ur gr8 ஜாக்கி
    keep on going

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. உங்கள் பதிப்புக்கள் விஷயமுடனும் படித்து மகிழ 'ஜாலியாக' இருப்பதுதான் நீங்கள் இட்ட பட்டியல் நீண்டதாக இருப்பதற்கு காரணம்.வாழ்த்துக்கள் ஜாக்கி முன்னூரை தொட்டதற்கு.
    இந்தவார "சும்மா ஜாலிக்கு" சுமார்தான். long shot ஆக போய்விட்டது!!!அதுசரி அதுதான் அவ்வப்போது கண்ணை குத்துவது போலவும் வருகிறதே!உங்கள் ரசனைக்கு பாராட்டுதல்கள்.

    ReplyDelete
  40. excellent..congrats for your 300...

    really hard to cross this miles.

    keep going my dear friend

    ReplyDelete
  41. நண்பர் கேபிள் இரண்டு நாட்களுக்கு முன் சொன்னார் அப்போது பார்த்த வரையில்
    118425 என்ற அளவில் அதாவது ஓரு லட்சத்தி பதினெட்டு வரை எனது வலைதளம் வந்துள்ளது வலையுலகம் வந்த ஒன்றரை வருடத்தில் இது மிகப்பெரிய செயல்.... வெகுவிரைவி்ல் உங்கள் ஆசியுடன் ஒரு லட்சத்துக்குள் வர வேண்டும் என்று
    /

    1180000 எங்க வந்திருக்கு 100000க்குள்ள எங்க வரணும்????--


    சரி பண்ணி திருத்தி விட்டேன் சிவா நன்றி

    ReplyDelete
  42. 300க்கு வாழ்த்துகள் ஜாக்கி. உங்களது இந்த அசுர சாதனைக்கு பின்னால் இருக்கும் அனைத்து நண்பர்களின் அன்புக்கும் தலைவணங்குகிறேன்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்//

    உண்மை பைத்தியக்காரன் அவர்கள் இல் என்றால் இது சாத்தியம் இல்லை...

    ReplyDelete
  43. தல டாப் கியர்ல போய்ட்டே இருங்க ..

    வாழ்த்துக்கள் , அப்புறம் அண்ணிக்கு ஒரு நன்றி கும்மாங்குத்து விடாமல் கம்ப்யூட்டர் பொட்டிய தட்ட இவ்ளொ வேலை பளுவிலும் நேரம் கொடுத்ததுக்கு..//
    உண்மைதான் சூரியன் என் ஆர்வத்துக்கு எதற்க்குமே அவர்கள் தடை போட்டது கிடையாது...

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள் என்னையும் உங்கள் கணக்கில் சேர்த்து கொண்டதற்கு மட்டுமல்ல. ட்ரிபள் சென்சரி அடித்ததுக்கும். அடிச்சி தூள் பண்ணுங்க. தொடர்ந்து வாசிக்கிறோம். என்னுடைய பேபரிட் வலைமனைகளில் உங்களது பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும்.... ஒன்று.

    மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நன்றி தல//
    நன்றி யோ உங்களை போன்ற நண்பர்களின் ஒத்துழைப்பால் இது சாத்தியம்.. நன்றி

    ReplyDelete
  45. சிண்டியில் பல ஜாலியோ ஜிம்கானா படங்கள் இருக்கும் போது அதிகமான் உடையுடன் இருக்கும் படத்தை பிரசுரித்தமைக்காக வன்மையாக கண்டிக்கிறேன்//

    மிக சீக்கிரம் மாற்ற முயற்ச்சிக்கிறேன்

    ReplyDelete
  46. 300, 300மடங்காக பெருக வாழ்த்துக்கள் நண்பரே.
    கடந்த சில மாதமா தான் நான் பின்னூட்டம் இட்டு வருகிறேன் எனக்கு போய் நன்றி சொல்லிட்டு..
    நீங்க இல்லாட்டா பல படங்கள நான் மிஸ் பண்ணிருப்பேன்.அதற்கு நான் தான் நன்றி சொல்லணும்//


    எனக்கு அப்படி சொல்ி கொடுக்க அறிமுகப்படுத்த யாரும் இல்லை தலைவா அதான்.. நன்றி பாலா.

    ReplyDelete
  47. 100வது பதிவு போடும்போது படிக்க ஆரம்பித்தேன்..
    அதுகுள்ள 300 வந்துட்டீங்க..

    அன்புடன் வாழ்த்துகிறேன்!//
    நன்றி கலை நினைவு கூர்ந்ததிற்க்கு

    ReplyDelete
  48. வாழ்த்துகிறேன்..

    வலையுலக நட்பை மிக அருகையாக கௌரவப்படுத்தியிருக்கிறீர்கள்//
    நன்றி கதிர் அது என் கடமை

    ReplyDelete
  49. எழுத்துலகில் மேலும் சிறந்து வளர என் வாழ்த்துக்கள் நண்பரே !//

    நன்றி கபிலன் உங்கள் ஆசிர்வாதம்

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள் தலைவரே,

    விரைவில் " ஆயிரம் பதிவு போட்ட அபூர்வ ஜாக்கி" நு நேம் வாங்க வாழ்த்துக்கள்,

    நன்றி
    மிஸ்டர் அடோர்//
    நன்றி அடோர் உங்களை போன்றவர்கள் நட்பு இருக்கும் போது எல்லாம் சாத்தியம்

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள் அண்ணே...
    தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்து இருக்கிறோம்.//
    நன்றி ஜெட்லி கண்டிப்பாக...

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள் சார் .//
    நன்றி இளவட்டம்

    ReplyDelete
  53. அடேயப்பா!
    அதுகுள்ள 300ஆ!
    நான் வந்து ரெண்டு வருசம் ஆகுது!
    போன மாசம் தான் 200-ஐ தாண்டினேன்!
    ரைட்டு டெண்டுல்கர் மாதிரி அடிச்சி ஆடுறிங்க!
    கலக்குங்க!//
    நன்றி வால்பையன் உங்கள் தொடர் வருகைக்கு...

    ReplyDelete
  54. நன்றி நையாண்டி நைனா

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

    இவ்வளவு சொன்னாலும் என் மனசுக்கு பத்தாது இருந்தாலும் நிறுத்திகிறேன்.//

    நன்றி பிஸ்கோத்துபயல் மிக்க நன்றி

    ReplyDelete
  56. வாழ்த்துகள் ஜாக்கி..

    மேலும் பல சிகரங்களை தொட..கலைத்துறையில் ஜொலிக்க.. குடும்பத்தில் செழிக்க.. 300வது பதிவில் வாழ்த்துகிறேன்.

    500க்கும் வருவேன்.


    பி.கு: ஒசியில பிளாக் கொடுத்த Google நன்றி சொன்னியா..??//
    நீங்கதான் சொல்லிட்டிங்களே அப்புறம் என்ன நீங்க சொன்னா என்ன? நான் சொன்னா என்ன??

    ReplyDelete
  57. வாழ்த்துக்கள் தல,நல்லா அடிச்சி ஆடுங்க. அப்படியே ஐநூறு ஆயிரம்னு போய் கிட்டே இருங்க.நாங்களும் கூடவே வந்துட்டு இருக்கோம்.//
    நன்றி துபாய் ராஜா மிக்க நன்றி

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. சிறு துளி பெரு வெள்ளம். நீங்கள் இன்னும் பல சிறந்த பதிவுகளை இட வாழ்த்துக்கள்.//
    நன்றி குடந்த அன்பு மணி

    ReplyDelete
  60. நன்றி நாசில் நாதம் தொடர் வாசிப்புக்கும், பின்னுட்டத்துக்கும்

    ReplyDelete
  61. நன்றி கார்த்திகை பாண்டியன்

    ReplyDelete
  62. நன்றி ரெட்மகி,ஹரி

    ReplyDelete
  63. \\முடிந்தவரை நன்றி மறக்க கூடாது என்ற கொள்கையோடு வாழ்ந்துவருகின்றேன்....\\
    Ur gr8 ஜாக்கி
    keep on going//
    நன்றி அஜீத் மிக்க நன்றி

    ReplyDelete
  64. உங்கள் பதிப்புக்கள் விஷயமுடனும் படித்து மகிழ 'ஜாலியாக' இருப்பதுதான் நீங்கள் இட்ட பட்டியல் நீண்டதாக இருப்பதற்கு காரணம்.வாழ்த்துக்கள் ஜாக்கி முன்னூரை தொட்டதற்கு.
    இந்தவார "சும்மா ஜாலிக்கு" சுமார்தான். long shot ஆக போய்விட்டது!!!அதுசரி அதுதான் அவ்வப்போது கண்ணை குத்துவது போலவும் வருகிறதே!உங்கள் ரசனைக்கு பாராட்டுதல்கள்.//
    நீங்கள் சொல்வது உண்மைதான் மாணிக்கம்..

    ReplyDelete
  65. excellent..congrats for your 300...

    really hard to cross this miles.

    keep going my dear friend//
    நன்றி வினோத் மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

    ReplyDelete
  66. நன்றி பிளெட்சர் மற்றும் வழி போக்கன்

    ReplyDelete
  67. இம்புட்டு பெயர்களை எப்படி எழுதி முடித்தீர்கள். பாசக்கார பையபுள்ள நீ்ங்க!! வாழ்த்துகள் அண்ணா! keep rocking!

    ReplyDelete
  68. வாழ்த்துகள், தொடரட்டும் அரிய பதிவுகள்.

    எப்படி எழுதத் தொடங்கினேன் என சொல்லி அனைவரையும் நினைவு கூர்ந்த விதம் மிகவும் அருமை.

    தமிழுக்கு ஆற்றும் பணி மிகவும் போற்றத்தக்கது. மிக்க நன்றி.//
    நன்றி வே இராதாகிருஷ்னன் , மிக்க நன்றி என் பற்றிய புரிதலுக்கு

    ReplyDelete
  69. இம்புட்டு பெயர்களை எப்படி எழுதி முடித்தீர்கள். பாசக்கார பையபுள்ள நீ்ங்க!! வாழ்த்துகள் அண்ணா! keep rocking!//
    நன்ி தமிழ் மாங்கனி

    ReplyDelete
  70. FIRST OF ALL...THANKS MANY FOR YOUR 300 ARTICLES.

    EVERY TIME I OPEN YOUR BLOG...YOU ARE GUARANTYING ENTERTAINMENT, FOR THAT I AM VERY MUCH THANKFUL TO YOU.

    BEST WISHES FOR 300TH ARTICLE...

    ReplyDelete
  71. வாழ்த்துக்கள் அண்ணாச்சி 300 என்ன 3000 போஸ்ட்களே நீங்கள் விரைவில் போடுவீர்கள், 3000 போஸ்ட் என்றால் அதில் எப்படியும் ஒரு 1000 நான் வெஜ் இருக்கும் ஹிஹி.

    உங்கள் போஸ்ட்களை விட இதயத்தில் நிறைந்து நிற்கும் நண்பர்கள் அதிகம். விரைவில் வெள்ளித்திரையில் காண விரும்புகின்றேன்.

    ReplyDelete
  72. வாழ்த்துக்கள் அண்ணாச்சி

    ReplyDelete
  73. வணக்கம் jackiesekar

    பிருந்தாவனமும் , நந்தகுமாரனும்மாக வாழ்த்துக்கள்

    Vettipaiyan @ Singaravelu

    ReplyDelete
  74. வணக்கம் jackiesekar

    பிருந்தாவனமும் , நந்தகுமாரனும்மாக பால்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

    Vettipaiyan @ Singaravelu

    ReplyDelete
  75. வாழ்த்துக்கள் அப்புறமந்த போட்டோ சூப்பரப்பு

    ReplyDelete
  76. 300க்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  77. வாழ்த்துக்கள் தனா..
    என்ன சொல்றதுன்னு தெரியலா, வீட்ல சொல்லி சுத்தி போட சொல்லு, கண்ணு படப் போகுது
    என்றும் அன்புட்ன்
    பாஸ்டன் ஸ்ரீராம்
    bostonsriram.blogspot.com

    ReplyDelete
  78. முன்னூறுக்கு வாழ்த்துகள். உங்கள் அலெக்ஸா ஆசையும் கூடிய சீக்கிரம் நிறைவேறிடும்!

    ReplyDelete
  79. iam really very happy and proud to see a such a big a list of friends and their comments on ur 300th.

    ReplyDelete
  80. என்னையும் ஆட்டையில சேர்த்து கிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  81. தங்களின் 300வது இடுகைக்கு வாழ்த்துகள். மேன் மேலும் வளர வாழ்த்துகள்

    ReplyDelete
  82. 300 என்பது விரைவில் 3000 ஆக என்னுடைய வாழ்த்துக்கள் ஜாக்கி !

    ReplyDelete
  83. அருமை ஜாக்கி அண்ணன் அவர்களுக்கு
    முன்னூறு பதிவுகளை அற்புதமாக கடந்துவிட்டீர்கள்.
    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    உங்கள் திரைப்பட ஆர்வம் எங்களை மலைக்க வைக்கிறது.
    வலையுலகில் மனதில் உதித்ததை வெளியிடும் உங்களைபோல வெள்ளை உள்ளங்கள் காண்பது அரிது.
    வளர்க உங்கள் எழுத்துப்பணி.
    நானும் உங்க தளத்தின் முகவரியை என் வலைப் பூவில் வைத்துள்ளேன்.

    ReplyDelete
  84. வாழ்த்துகள் ஜாக்கி

    இன்னும் இன்னும் உயரம் எட்டுங்கள்

    ReplyDelete
  85. வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  86. FIRST OF ALL...THANKS MANY FOR YOUR 300 ARTICLES.

    EVERY TIME I OPEN YOUR BLOG...YOU ARE GUARANTYING ENTERTAINMENT, FOR THAT I AM VERY MUCH THANKFUL TO YOU.

    BEST WISHES FOR 300TH ARTICLE...--

    நன்றி ராஜ்குமார் மிக்க நன்றி தங்கள் தொடர் பின்னுட்டத்தி்ற்க்கு...

    ReplyDelete
  87. வாழ்த்துக்கள் அண்ணாச்சி 300 என்ன 3000 போஸ்ட்களே நீங்கள் விரைவில் போடுவீர்கள், 3000 போஸ்ட் என்றால் அதில் எப்படியும் ஒரு 1000 நான் வெஜ் இருக்கும் ஹிஹி.

    உங்கள் போஸ்ட்களை விட இதயத்தில் நிறைந்து நிற்கும் நண்பர்கள் அதிகம். விரைவில் வெள்ளித்திரையில் காண விரும்புகின்றேன்.//
    நன்றி வந்தியத்தேவன் உங்கள் ஆசிகளுக்கு நன்றி

    ReplyDelete
  88. நன்றி வெட்டிபையன் அத்திரி உங்கள இரவருடைய வாழ்த்துக்கு என் நன்றிகள்..

    ReplyDelete
  89. நன்றி அக்னிபார்வை ,கல்ப் தமிழன் இருவருக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  90. வாழ்த்துக்கள் தனா..
    என்ன சொல்றதுன்னு தெரியலா, வீட்ல சொல்லி சுத்தி போட சொல்லு, கண்ணு படப் போகுது
    என்றும் அன்புட்ன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//
    சுத்தி போட சொல்லாம் ஸ்ரீ ஆனா ரொம்ப செலவு ஆகும்... அயர்லாந்து போயிட்டு வர்ரது சும்மாவா?

    ReplyDelete
  91. நன்றி சங்கர் மற்றும் கோஸ்ட் உங்கள் இருவருக்கும் என் நன்றிகள்....

    ReplyDelete
  92. iam really very happy and proud to see a such a big a list of friends and their comments on ur 300th.//
    நட்புக்கு முதல் மரியாதை நண்பா...

    ReplyDelete
  93. நன்றி ஜெர்ரி, இளங்கோ... இருவருக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  94. அருமை ஜாக்கி அண்ணன் அவர்களுக்கு
    முன்னூறு பதிவுகளை அற்புதமாக கடந்துவிட்டீர்கள்.
    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    உங்கள் திரைப்பட ஆர்வம் எங்களை மலைக்க வைக்கிறது.
    வலையுலகில் மனதில் உதித்ததை வெளியிடும் உங்களைபோல வெள்ளை உள்ளங்கள் காண்பது அரிது.
    வளர்க உங்கள் எழுத்துப்பணி.
    நானும் உங்க தளத்தின் முகவரியை என் வலைப் பூவில் வைத்துள்ளேன்.//
    நன்றி கார்த்தி மிக்க நன்றி மனம் திறந்த பாராட்டுக்கு... இனைப்புக்கும்

    ReplyDelete
  95. நன்றி புதுவை சிவா, நர்சிம்,ராதாகிருஷ்ணன் மூவருக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  96. வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர் .

    உங்கள் திரைவிமர்சன பதிவுகள் நிறைய படிக்க வேண்டியது இருக்கிறது..நேரம் இல்லை..பொறுமையாக படிக்கிறேன் ..பல படங்கள் பார்க்க வேண்டி உள்ளது

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner