(THE PURSUIT OF HAPPYNESS) உலக சினிமா / அமெரிக்கா....கமலுக்கு இனையான நடிகர்...


கடவுள் உங்கள் பிரார்தனைக்கு மூன்று வழிகளில் பதில் தருவார்...கடவுள் உங்களுக்கு உடனே யெஸ் என்ற சொல்லிவிட்டால், நீங்கள் என்ன கேட்டாலும் உடன் கிடைத்து விடும்... அவர் இல்லை என்று சொன்னாலும் இருப்பதில் கொஞ்சம் நல்லது கி்டைத்துவிடும்... அவர் வெயிட் என்று சொல்லிவிட்டாள் கலலைபடாதீர்கள் இருப்பதிலேயே நல்லதைதான் உங்களுக்கு அவர் தருவார்...அப்படி ஒரு கஷ்டபடும் தகப்பனுக்கு கடவுள் ஆறுமாதத்திற்க்கு வெயிட் என்று சொல்ல, கடவுள் ஒரு சாமான்ய தகப்பனுக்கு இருப்பதிலேயே பெஸ்ட்டை எப்படி கொடுத்தார் என்பதுதான்... பர்சூட் ஆப் ஹேப்பினஸ் படத்தின் கதை....

சில விஷயங்கள் தாமதமாய் கிடைக்கின்றது என்றாலும் அதற்க்கு எப்படியும் ஒரு வலுவான காரணம் இல்லாமல் இல்லை... அது நமக்கு தாமதமாய் கிடைத்தாலும் அது தரமானதாய் இருக்கும் என்பதை சொல்லும் படம்...


அமெரிக்காவில் இருக்கும் எல்லோரும் சுபிட்சமான வாழ்க்கை வாழ்வதாக நம்மில் பலர் நினைத்து கொண்டுதான் இருக்கின்றோம், அப்படி இல்லை அங்கேயும் வறுமையும் சோகமும் குடி கொண்டு இருக்கின்றது என்பதை தோலுரித்து காட்டிய படம்.....


இன்ப துன்பத்தில் பங்கு கொள்கின்றேன் என்று கைபிடித்த மனைவி, கட்டிலில் ஆசையோடு எல்லாவற்றிர்க்கும் ஈ டுகொடுத்து, புரண்ட மனைவி, அதன் விளைவாய் பெற்ற ஒரே ஒரு அழகானஆண்பிள்ளை, இப்படி அழகாய் போகும் குடும்பத்தில் வறுமை வலை விரிக்க... அந்த பெண் கணவனிடம் நீ வெட்டிக்கேசு வெண்ணை லிங்கம் என்று சொல்லி வீட்டை விட்டு திடும் என பிரிந்து போனாள் ஒருவன் என்ன செய்வான்-???

பர்சூட் ஆப் ஹேப்பினஸ் படத்தின் கதை இதுதான்...

கிரிஸ் கார்ட்னர் (வில்ஸ்மித்) ஒரு சாதாரன குடும்பத்தலைவன் தன் மனைவி, அழகான ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வருபவன். தெரியாத்தனமாக ஒரு சேகனிங் மெஷினில் அதிக அளவு இன்வெஸ்ட் செய்ய, அந்த மாடல் பெயிலியர் மாடலாக, அவனுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது... வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டபடும் போது அவனது மனைவி லின்டா (தான்டி நுயூட்டன்) இந்த வறுமையை பார்த்து வெறுத்து போய் கணவனையும் பிள்ளையையும் அம்போ என்று நடு ரோட்டில் விட்டு விட்டு போய் விடுகின்றாள்...கார்னர் மனைவி விட்டு போன சோகம், பிசினசில் பெருத்த நஷ்டம், பொதுவாய் இந்த மனநிலையில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முயல்வார்கள், ஆனால் கார்ட்னர் என்ன செய்தான்?, அவன் வறுமை எவ்வாறு அலைகழித்தது? அவன் பிள்ளைக்கு மூன்று வேளை சோறு போட்டானா? போன்ற கேள்விக்கான விடைகளை வெண்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இது ஒரு உண்மைகதை....கிரிஸ் கார்ட்னர் என்ற மனிதர் சந்தித்த வாழ்க்கை பிரச்சனைதான் கதை...
இப்படிகூட அழகாய் கவித்துவமாய் படம் எடுக்க முடியுமா? அப்படி ஒரு அழகியல் இந்த படத்தில் இருப்பதை நாம் யாராலும் மறுக்க முடியாது, அது போன்ற வலுவான திரைக்கதையும் கூட....

நடு ரோட்டில் உன்னை விட்டு போகின்றேன் என்று சொல்லி விட்டு போகும் மனைவியிடம் எவ்வளேவோ சமாதான வார்த்தைகள் சொல்லியும் கேளாமல் போவேன் என்று அடம் பிடிக்கும் போது... போ இந்த இடத்தை விட்டு போ... போய் சந்தோஷமாக வாழ் என்று மனையிடம் சொல்லும் போது அந்த நடிகனை நான் மிகவும் நேசித்தேன்....

மனைவி போய் விட்டாள். ஆறு மாதத்திற்க்கு ஸ்டாக் புரோக்கர் வேலைக்கு டிரைனிங் டைம், சம்பளம் இல்லை, மகன்கூடவே , வாடகை கொடுக்க முடியாமல் வீட்டையும் காலி செய்து நடுத்தெருவில்....சாமி என்னமாதிரியான திரைக்கதை இது????

ஆறுமாத சம்பளம் இல்லாத வேலை, அதற்க்கு 20 பேர் போட்டி அதில் ஜெயித்து ஆக வேண்டிய கட்டாயம் ....ஆறு ஸகேனர் மட்டும்தான் அவன் வசம்... அது கூட விற்றால்தான் கையில் காசு

பார்க்கிங் காசு இல்லாமல் ஜெயிலில் அடைபட்டு இன்ட்ர்வியுவுக்கு போகும் போதே அவன் நேற்று பெயின்ட் அடித்த சட்டையோடு இன்டர்வியு செல்ல, இன்டர்வியுவுக்காக,அழைக்கும் பெண் கிரிஸ் என்று அழைக்க, காதில் விழாதது போல் இருந்து விட்டு, எப்படி இந்த லட்சணத்தோடு உள்ளே செல்வது என்று யோசித்து விட்டு சட்டென எழுந்து உள்ளே செல்வதும்.....


சட்டையே இல்லாமல் இன்டர்வியுவுக்கு வருபவைனை நீ எப்படி பார்ப்பாய் என்று கேட்க அவன் போட்டு இருக்கும் பேண்ட்டை அழகான பேன்ட் என்று பார்ப்பேன் என்று சமயோஜிதமாக சொல்வது அழகு...

அப்பா கஷ்டபடுவது பிள்ளைக்கு தெரிந்து அவன் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் சாக்லெட்டை ஆசையோடு பார்க்க, வேண்டுமா என்ற கேட்க? வேண்டாம் என்று சொல்லும் அந்த குழந்தையை உச்சி முகர்ந்து கொஞ்ச தோன்றும்....

கடைசி ஸ்கானரை வெளிச்சம் இல்லாத இடத்தில் ரிப்பேர் செய்துபோராடுவது அழகு.. படுக்க இடம் இல்லாமல் ரயில்வே ஸ்டேஷன் பார்ரூமில் தன் பிள்ளையுடன் படு்த்து இருக்க அந்த நேரத்தில் பாத்ரூம் போக யாரோ ஒருவன் கதவை தட்ட தன் பிள்ளை தூக்கம் கெட கூடாது என்று சத்தம் வராமல் குலுங்கி விசும்பி அழுவது அழகு...

ஸ்கேனர் தொலைவதும் அதை மீட்க போராடுவதும் கவிதையான காட்சிகள்...

நாளையில் இருந்து நீ வேலைக்கு வரலாம் என்று சொல்லும் போது ,வில்ஸ்மி்த் வெளிபடுத்தும் எக்ஸ்பிரஷன் இன்னோரு கமலை பார்த்தது போல் இருந்தது.. அதே போல் அந்த இடத்தில் முழுவதும் கேமரா குளோசப்பில் ஸ்மித்தை பாலோ செய்வதும், வெளியே வந்து தன் சந்தோஷத்தை பகிர கூட யாரும் இல்லாமல், தனக்கு தானே சந்தோஷம் கொள்ளும் காட்சிகள் கவிதை...

இந்த படத்தின் கதாநாயகி மிஷின் இம்பாசிபிள் படத்தின் இரண்டாம் பாகத்தின் நாயகி..Thandie Newton

வில் ஸ்மித் உண்மையான மகனே இதில் பையன் கேரக்டர் செய்து இருக்கின்றார்.....Jaden Smith

ஸ்மித் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட....

இந்த படம் ஸ்கீரிமர் வெசஸ் ஸ்கீரிமர் படத்தினை லேசாக ஒத்து இருக்கும்

இந்த படத்தை பார்க்காதவர்கள் உடனே இந்த படத்தை பார்க்கவும் சந்தோஷத்தை துரத்தும் ரகசியத்தை நீங்கள் கற்பீர்கள்.....


இந்த படம் விருதை வாரிகுவித்து இருப்பதை பாரீர்,இந்த படத்தின் விருதுகள் விபரம் கீழே....
* Academy Award for Best Actor (Will Smith, nominee)
* Golden Globe Award for Best Actor - Motion Picture Drama (Will Smith, nominee)
* Golden Globe Award for Best Original Song ("A Father's Way," words and music by Seal, nominee)
* Black Reel Award for Best Film (nominee)
* Black Reel Award for Best Actor in a Motion Picture (Will Smith, nominee)
* Black Reel Award for Best Breakthrough Performer (Jaden Smith, nominee)
* NAACP Image Award for Outstanding Motion Picture (winner)
* NAACP Image Award for Outstanding Actor in a Motion Picture (Will Smith, nominee)
* NAACP Image Award for Outstanding Supporting Actor in a Motion Picture (Jaden Smith, nominee)
* NAACP Image Award for Outstanding Supporting Actress in a Motion Picture (Thandie Newton, nominee)
* Screen Actors Guild Award for Outstanding Performance by a Male Actor in a Leading Role - Motion Picture (Will Smith, nominee)* MTV Movie Award for Best Male Performance (Will Smith, nominee)
* MTV Movie Award for Best Male Breakthrough Performance (Jaden Smith, winner)
* Broadcast Film Critics Association Award for Best Actor (Will Smith, nominee)
* BFCA Critics' Choice Award for Best Young Actor (Jaden Smith, nominee)
* BET Award for Best Actor (Will Smith, nominee)
* PFCS Award for Best Performance by Youth in a Leading or Supporting Role - Male (Jaden Smith, winner)
* Chicago Film Critics Association Award for best actor (Will Smith, nominee)
* Italian National Syndicate of Film Journalists for Best Score (Andrea Guerra, nominee)
* David di Donatello Awards for Best Foreign Language Movie (Gabriele Muccino, nominee)
* Capri Award for Movie of The Year (winner)


Directed by Gabriele Muccino
Produced by Will Smith
Steve Tisch
James Lassiter
Todd Black
Jason Blumenthal
Written by Steven Conrad
Starring Will Smith
Jaden Smith
Thandie Newton
Brian Howe
Dan Castellaneta
Music by Andrea Guerra
Cinematography Phedon Papamichael
Editing by Hughes Winborne
Distributed by Columbia Pictures
Release date(s) December 15, 2006 United States
January 12, 2007 United Kingdom
Running time 117 minutes
Country United States
Language English
Budget $55 million
Gross revenue $307,077,295

இந்த படம் பார்க்காதவர்கள் உடனே பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல வாழ்க்கை போராட்த்தையும் சவாலையும் கற்றுத்தரும் படம் இது....

குறிப்பு... சான் பிரான்சிஸ்க்கோ ஹரிராஜகோபாலனுக்கு இந்த பதிவு சமர்பணம்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

21 comments:

 1. படத்த பார்த்தாச்சு நண்பரே!

  அந்த டாய்லெட் சீன்

  நடிப்பு பின்னியிருப்பாரு

  இப்படிப்பட்ட படம் தமிழ்ல்ல எப்பவாவது வரும் வாய்ப்பு இருக்கா ...

  ReplyDelete
 2. ஜாக்கி,
  மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
  நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம்.
  நானும் இதுபற்றி ஏற்கனவே இந்த படம் பதிவு போட்டிருக்கிறேன்.
  நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள்.

  http://aganaazhigai.blogspot.com/2009/03/blog-post_14.html

  ReplyDelete
 3. நல்ல படம் நல்ல பதிவு.. ஜாக்கி..

  ReplyDelete
 4. பார்த்திருக்கேன்..../வில் ஸ்மித் உண்மையான மகனே இதில் பையன் கேரக்டர் செய்து இருக்கின்றார்.....Jaden Smith
  //இந்த தகவல் இப்பதான் கேள்விப்படறேன்.

  ReplyDelete
 5. நல்ல படம் தான் ஜாக்கி. ஆனால் இது உலக சினிமா என்று சொல்ல முடியாது. இது ஒரு நல்ல படம். அவ்வளவு தான்.

  Roberto Benigni இயக்கி நடித்த 'Life is Beautiful' படத்தைப் பாருங்கள், உங்களுக்கு நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று புரியும்.

  ReplyDelete
 6. நான் திரும்ப திரும்ப பார்த்தும் சலிக்காத படம் இது.

  வில் ஸ்மித்தின் நடிப்பில் இது ஒரு பரிமாணம்.

  டாய்லெட் காட்சியும், பிரிந்து போன மனைவியுடன் ஜெயிலிருந்து தொலைபேசியில் பேசும் காட்சியிலும்
  நடிப்பில் கண்கலங்க வைத்து விடுவார்.

  ReplyDelete
 7. நான் மிகவும் ரசித்து பார்த்த படம் இது... உங்கள் மிக விமர்சனம் அருமை.

  ReplyDelete
 8. \\\\ கடவுள் உங்கள் பிரார்தனைக்கு மூன்று வழிகளில் பதில் தருவார்...கடவுள் உங்களுக்கு உடனே யெஸ் என்ற சொல்லிவிட்டால், நீங்கள் என்ன கேட்டாலும் உடன் கிடைத்து விடும்... அவர் இல்லை என்று சொன்னாலும் இருப்பதில் கொஞ்சம் நல்லது கி்டைத்துவிடும்... அவர் வெயிட் என்று சொல்லிவிட்டாள் கலலைபடாதீர்கள் இருப்பதிலேயே நல்லதைதான் உங்களுக்கு அவர் தருவார்... ///////


  நல்ல கருத்துக்கள்

  படம் நன்றாக இருந்தது

  உங்க விமெர்சனத்திலிருந்து படம் பார்த்தேன்

  படம் பாக்க தூண்டுகிறது .

  ReplyDelete
 9. Will smith supera actpanni இருப்பாரு.அத விட அவரு பயன் ஜடேன் ஸ்மித் பின்னி இருப்பான். நான் இவரோட திவிர ரசிகன்.
  ஒரு சின்ல ஸ்மித் & ஸ்மித் பார்க்ல பேசிப்பாங்க , அவ்ளோ அழகா இருக்கும்.அத பாத்து , நான் முடிவே பண்ணிட்டேன் , நான் இப்படி ஓர் நல்ல தகப்பன இருக்கனுமுநு

  ReplyDelete
 10. அருமையா எழுதி இருக்கீங்க தல.. நண்பர் வாசு என்கிட்டே இந்த படத்தோட dvd கொடுத்து பார்க்க சொன்னார்.. இன்னும் பார்க்கல.. கண்டிப்பா பார்க்கிறேன்

  ReplyDelete
 11. நல்ல படம் ஜி...
  நான் சோகமாய் பார்த்த ஒரு ஆங்கில படம்...

  ReplyDelete
 12. ஐயா
  நீங்கள் படத்தை பற்றி சொன்னது அனைத்தும் உண்மை , ஆனால் தயவு செய்து வில் ஸ்மித் வுடன் கமலை கம்பர் செய்து வில் ஸ்மித் தை கெவலபடுதாதீர் , இந்த லிங்க் சென்று பாருங்கள் http://idlyvadai.blogspot.com/2009/07/80-20-100.html அதோடு வண்ணத்து பூச்சி யாரின் கமெண்ட் யும் படிக்கவும் , பெருன்பான்பை கமல் படங்கள் காபி அடித்தே உள்ளனர் , அந்த பதிவை படிக்கும் வரை நானும் கமலை எதோ உலக மகா கலைஜன் என்றுதான் நினைத்து கொண்டு எமாந்தேன்

  ReplyDelete
 13. மகனுக்கு விளையாட்டு காட்டிகொண்டே .. கழிபறைஇல் தங்கி.. அவனை அணைத்துக்கொண்டு.. சத்தம் இல்லாமல் அழும் காட்சி .. சொல்ல வார்த்தைகள் இல்லை.. /

  ReplyDelete
 14. Nice writing style Jackie

  At the end of the movie Will Smith and his son will walk across the real Chris Gartner. Chris Gartner now a Millionare helped in script writing and spent time with the crew when they filmed this movie.

  ReplyDelete
 15. இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுகொண்டிருக்கும்போது, சிறு இடைவேளையில் வில்ஸ்மித்தின் மகனுக்கு பசித்திருக்கிறது அவன் தந்தையிடம் பசிக்கிறது என கேட்க மிக சீரியஸாக முகத்தைவைத்துகொண்டு சொன்னாரம் நம்மிடம் உணவு வாங்குமள்விற்கு பணம் இல்லை எண்டு, அவன் அன்று படப்பிடிப்பு முடியும்வரை உண்ணவில்லை, இதை அவன் படம்வெற்றிபெற்று ஒருவிழாவில் கூறினான், அவ்வாறு ஏன் செய்தீர்கள் என ஸ்மித்திடம் கேட்டபோது அப்போதுதான் அவன் அந்தகாட்சிக்குள் ஒன்றுவான் என கூறினாரம்!!!

  ReplyDelete
 16. நன்றி,அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஜாக்கி!!!!
  ஹரி ராஜகோபாலன்

  ReplyDelete
 17. That's the best of Will Smith and I never expected such a great performance from an action hero. Excellent. Thanks Jackie.

  -Toto
  Http://Film4thwall.blogspot.com

  ReplyDelete
 18. அருமையான திரைக்காவியம் , பல முறை திரும்ப திரும்ப பார்த்த ஒரே திரைப்படம். மகன் தந்தையிடம் புட்பால் மட்ச் பார்ப்பதற்க்காக நடக்கும் அந்த விவாதம் சோகத்திலும் சுகமான நகைச்சுவை.

  தந்தை : Possibly we will go for football match tomorrow

  மகன் : Oh that’s cool

  தந்தை : I told possibly not probably

  தந்தை : possibly means "by chance, in some way" and probably mean "most likely, maybe".

  தந்தை : Have u got it?

  மகன் : Yeh , I got it, we are not going to Football match tomorrow.

  ReplyDelete
 19. /
  இந்த படம் பார்க்காதவர்கள் உடனே பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல வாழ்க்கை போராட்த்தையும் சவாலையும் கற்றுத்தரும் படம் இது....
  /

  பாத்துடறேன்.

  ReplyDelete
 20. கல்லில் எதய் ஒட்டினால் வெட்டினால் சிலை வரும் என்று உம போன்றோர்களுக்கு
  தெரியும் .விமர்சனம் அருமை .கமலை பல பேருக்கு பொறாமை அதான் ஒத்துகொலல மாட்டான்.மிருகம் காலால் நடக்குது !இவன் மிருகதத பார்து
  copy cat செய்தான என்ற சொல்ல முடியும் .

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner