உங்கள் வாழ்க்கையில் இது போல் நிகழ்ந்து உள்ளதா?


வாழ்க்கை எடுக்கும் வகுப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோரு விதமாய் இருக்கும் அது வகுப்பு எடுக்கும் ஸ்டைலே தனிதான்....சிலருக்கு புளிய மரத்தடி, சிலருக்கு கீற்றுக்கொட்டாய், சிலருக்கு டெஸ்க்டேபிள், சிலருக்குஎசி வகுப்பறை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.....

கல்யாண பந்தியில் அப்பளம் வைத்துக்கொண்டே வருவான் நம்மிடம் வந்தது அந்த அப்பளம் ஒன்று சூம்பி போய் இருக்கும் அல்லது உடைந்த அப்பளமாய் பாதியை வைத்து விட்டு தயவுதாட்சனை இல்லாமல் முகம் பார்க்காமல் போய் கொண்டே இருப்பான்....

மெதுவடை ரொம்ப நன்றாக இருப்பதாக நினைத்து இன்னொன்று கேட்கையில் அது தீர்ந்து போய் இருக்கும்.......

புது படத்திற்க்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகவே ஒருவர் மட்டும் நடந்து போகும் அளவுக்கு, டிக்கெட் கவுன்டரில் வால் போன்ற வழியில் வேர்த்து விறுவிறுக்க , கால் மாற்றி நின்று கொண்டு இருக்கையில், மேலுள்ள கம்பிய பிடித்தபடி ஒரு அடாவடி கூட்டம் தான் போட்டு இருக்கும் ஜட்டியை நமக்கு கண்பித்தபடி நம் தலைக்கு மேல் ஸ்பைடர் மேன் போல் போய் கொண்டே இருப்பார்கள்....( ஊரில் எல்லோருஙம் கைலி கட்டிக்கொண்டுதான் படம் பார்க்க வருவார்கள்.... அப்படி பேன்ட் போட்டு வந்தால் அவர்கள் ஏன் 5ரூபாய் டிக்கெட்டுக்கு வர வேண்டும்???15 ரூபாய் பஸ்ட் கிளாஸ் டிக்கெட்டில் படம் பார்க்கலாமே....?)

நமக்கு கீழே பக்கத்தில் இருப்பவன் நிக்கோடின் வாய் நாற்றத்துடனும், பான்பராக் கப்புடனும் சகித்து கொண்டு இருக்கையில், தியேட்டரில் டிக்கெட் கொடுக்க பெல் அடித்து கூட்டம் மெல்ல நகரும் போது கடவுளையும் வேண்டிக்கொள்வோம்... கவுன்டருக்கும் நம் கைக்கும் பத்து இன்ச் இருக்கும் வேளையில், டிக்கெட் இல்லையென சட்டென கவுண்டர் சாத்தப்பட்டு, படுபாவி பசங்கள் விளக்கையும் அனைத்து விடுவார்கள்.... வியற்வையுடன் தொப்பலாக நனைந்து தடவி தடவி வெளியே வந்து வியற்வை நாற்றத்துடன் சுத்தமான காற்றை சுவாசி்த்து, 5 ரூபாய் டிக்கெட்டை 25 ருபாய்க்கு வாங்கி படம் பார்க்கும் போது,

நெரிசலில் சிக்காமல் நேரடியாக பிளாக்கில் டிக்கெட் எடுத்து பார்த்து இருக்கலாமோ ....என்று எவ்வளவுதான் மனசாட்சி சொன்னாலும், அடுத்த புதுபடம் ரிலிசாகும் போது, அதே வியர்வை, கலர் ஜட்டிகள், நிக்கோடின் நாற்றம், கவுன்டர் மூடல்... ச்சே எவ்வளவுதான் பட்டாலும் இந்த மிடில் கிளாஸ் மாதவனுக்கு புத்தியே வராது.....

மனைவிக்கு தலைவலி.... ஜன்டுபாம் வாங்க மெடிக்கல் போவோம்... இப்போதாவது நடந்து போவோமே என்று கைலி கட்டி அடுத்த தெரு்வுக்கு போகும் போது.... ஜன்டுபாம் ஸ்டாக் நேத்துதான் தீர்ந்து போய் விட்டதாய் சொல்லும் போதே நமக்கு உள்ளுக்குள் குருவி கத்த தொடங்கும்....

சரி பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு கடைக்கு போனால் அன்று அந்த கடைக்காரரின் ஒன்று விட்ட மாமா இறந்து போனதால், கடை விடுமுறை விட்டு இருப்பார்... அப்போதுதான் நான் லுங்கியுடன் பக்கத்து தெருதானே என்று வந்த அலட்சியமும், கூடவே வண்டி எடுத்து வராதது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அப்போதுதான் உணர்ந்து நொந்து கொண்டு இருக்கும் சமயம்....


சரி இவ்வளவு தூரம் நடந்து திரிசங்கு சொர்க நிலைக்கு வந்து விட்டோமமே என்று ,ஆண்டவன் மீது பாராத்தை போட்டு இன்னும் அரை கிலோமீட்டர் நடந்து ஒரு மெடிக்கல் ஷாப்பை அடைந்தேன்...

“ஜண்டுபாம் இருக்கின்றதா? ”

“ஓஇருக்கே”

என்று சொல்லி அழுக்கு துணியால் ஜண்டுபாம் கவர் மேலுள்ள புழுதியை துடைக்கும் போது ஒரு வெற்றி சிரிப்பு நம்மிள் கூடி கொண்டு இருக்கும்.... பாக்கெட்டில் இருக்கும் 100 ரூபாய் தாளை நீட்டும் போது, 100ரூபாயா? இப்பத்தானே சில்லரையை கலெக்ஷன்காரன் கிட்ட கொடுத்தேன்.... சுத்தமா சில்லரை இல்லை என்று சொல்லுபவனை செவிட்டிலேயே ஒரு போடு போட மனசு துடித்தாலும்,

ஏன்டா கொய்யாலே ஒரு 100ரூபாய்க்கு சில்லரை கூட வச்சிக்காம இன்னா மயித்துக்குடா கடையை தொறந்து வச்சி இருக்கீங்க???? என்று கோபத்தில் கேள்வி தொண்டை வரை வந்தாலும், கேட்காமல் உதட்டில் ஒரு வெறுமை சிரிப்புடன் வந்து விடுவேன்....

பாய் வீட்டு கல்யாணம் நன்றாக பிரியானி தின்னும் மூடில் போய் இருப்பேன்...எல்லோருக்கும் தட்டு தட்டாய் நண்பர்கள் மூலம் பாஸ் செய்யப்பட்டு பிரியானி தட்டை இலையில் கவிழ்ப்பார்கள்... பக்கத்து இலையில் பார்த்தால் நல்ல பீஸ் நிறைய இருக்கும். என் இலையில் கொழுப்பும், எலும்பும் ஒன்று சேர்ந்து, மே மே மே என்று கத்தி என் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ளும்....

சரி இதெல்லாம் விடுங்கள் தலைவாழை இலையில் சாப்பிடுவது, ரொம்ப பிடிக்கும்..எனக்கு மட்டு்ம்பந்தியில் குட்டி இலை வந்து மெல்லிய பூன்னகை பூக்கும்.. சில நேரத்தில் கிழிந்த இலைகள் கூட வரும்....

ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினால் எல்லோருடைய ரூம் டிவியும் ஒழுங்காக
இருக்கும் என் ரூம் டிவியில் மட்டும் கோடுகோடாக படம் தெரியும்...

ஆம்னி பஸ்சில் நல்லபடம் போடுவார்கள் என்று நினைத்தால் நம்ம நேரம் அன்று எதாவது ராமராஜன் படத்தை போட்டு வைப்பார்கள்....

பேருந்தில் பக்கத்து இருக்கை காலியாக இருக்கும் போது, ஒரு பாட்டியும் பேத்தியும் சீட் தேடி என் பக்கத்தில் வரும் போது,எப்படித்தான் அந்த சித்து வேலை நடக்கும் என்று தெரியாது, பாட்டி கையில் என்பக்கத்தில் இருக்கும் இருக்கை எண் கொண்ட டிக்கெட்டை வைத்து இருக்கும்.... தேவுடா....

இப்படி எழுதி கொண்டே போகலாம்... ஆனால் இது போன்ற விஷயங்கள் எப்போதாவதுதான் நடக்கும் அடிக்கடி நடந்தால் அவ்வளவுதான்.... நல்ல மந்திரவாதியை பார்க்க போய் இருப்பேன்....இல்லையென்றால் கடைசிகட்டமாக அண்ணன் உண்மை தமிழன் போல எம்பெருமான் முருகப்பெருமானை துணைக்கு அழைப்பதை தவிர வேறு வழியி்ல்லை....

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.... இரவில் தூக்கத்தை கண்ணில் வைத்து டைப் அடிப்பதால் ஏதேனும் எழுத்து பிழை இருந்தால் பொறுத்தருள்வீராக.... உங்களுக்கு இது போல் நடந்து இருந்தால் பின்னுட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

17 comments:

 1. நிகழ்வுகள் நிதர்சணங்கள்

  பஸ் ஸ்டாண்டில் நாம் போகும் திசைக்கு மட்டும் பஸ் வராது

  இமிக்ரேஷனுக்காக லைனில் நிற்கும் போது நாம நிற்கும் லைன் மட்டும் ரொம்ப மெதுவாத்தான் போகும்

  ரொம்ப அவசரமா முதல் பின்னூட்டம் போடப்போகும் நேரம் இண்டெர்நெட் புட்டுக்கும் ...

  இன்னும் இன்னும் ...

  ReplyDelete
 2. ஈபி பில், வாட்டர் பில் கவுண்டரில் கால் கடுக்க நிற்கும்போது நம்மட டைம் வரும்போது கவுண்டரில் லஞ்ச் பிரேக் போர்ட் மாட்டும்போது.

  கோயிலில் அல்லது பொது இடத்தில் ஒரு பெண் அழகாக உடைஉடுத்தி பின்புறமாக நிற்பார் முகத்தைப் பார்க்க முன்னால் சென்றால் அழகாக நெற்றியிலும் வடுகிலும் குங்குமம் வைத்து திருமணமான செய்தியைச் அறிவிப்பார்.

  ReplyDelete
 3. ம்....ஏதோ நமக்கு வாய்ச்சது!

  ReplyDelete
 4. //என் ரூம் டிவியில் மட்டும் கோடுகோடாக படம் தெரியும்...//

  எரிச்சலின் உச்சம்

  ReplyDelete
 5. குளிர்காலத்தில் நம்ம முறை வரும்போது வெந்நீர் வராத குளியலறை..........

  ReplyDelete
 6. //ஆம்னி பஸ்சில் நல்லபடம் போடுவார்கள் என்று நினைத்தால் நம்ம நேரம் அன்று எதாவது ராமராஜன் படத்தை போட்டு வைப்பார்கள்....//

  ஏன் அவர் படத்துக்கு என்ன? அவர் படம் சிறந்த பொழுதுபோக்கு படமய்யா.

  ReplyDelete
 7. நீங்கள் சொன்னதில் சிலவற்றை நானும் அனுபவித்திருக்கிறேன்.

  ராமராஜன் படம் பற்றிய தங்களின் கருத்துக்கு என் கண்டனங்கள். (மச்சான்ஸ்.... சபையைக் கூட்டுங்கப்பா...)

  ReplyDelete
 8. சூப்பர் மார்கெட் செக் அவுட்டில் நம்ம முறை வரும்போதுதான் கேஷ் ரெஜிஸ்டரில் ரோல் தீர்ந்து போகும், இல்லாட்டி நமக்கு முன்னால் இருப்பவர்கள் கொண்டுவந்த சாமான்களில் சரியான விலை ஸ்கேன் செய்யாமத் தகராறு இப்படி............

  நல்ல அனுபவம்தான்.

  ReplyDelete
 9. // ஊரில் எல்லோருஙம் கைலி கட்டிக்கொண்டுதான் படம் பார்க்க வருவார்கள்.... அப்படி பேன்ட் போட்டு வந்தால் அவர்கள் ஏன் 5ரூபாய் டிக்கெட்டுக்கு வர வேண்டும்???15 ரூபாய் பஸ்ட் கிளாஸ் டிக்கெட்டில் படம் பார்க்கலாமே....?//

  இதுக்கு என்ன சார் அர்த்தம் ?

  லுங்கி கட்டிகிட்டு வர்றவனுக்கு 15 ரூபாய்க்கு வக்கில்லைன்னு சொல்லுறீங்களா?

  அல்லது பேண்டு போட்டுட்டு வர்றவன் பேண்டை கழட்டி 15 -க்கு வித்துட்டு படம் பார்ப்பான் -ன்னு சொல்லுறீங்களா?

  ReplyDelete
 10. அனுபவங்களின் தொகுப்பு நல்லாருக்கு

  ReplyDelete
 11. ரேஷன் கடையில வெயிலில் காத்துக் கிடந்து கிட்ட போகும் போது ,

  "ஏய் மண்ணன்னெய் தீந்து போச்சுப்பா , போயிட்டு அடுத்த வாரம் வாங்கப்பா " சொல்லும்போது

  அப்படியே ஆ....

  ReplyDelete
 12. என்னை மிகவும் வெறுப்பு ஏத்துவது : நம்ம கார் போகும் லேன் மட்டும் நகராது, சரின்னு கஷ்டப்பட்டு இண்டிகேட்டர் போட்டு, வழி கேட்டு அடுத்த லேன் போனா அந்த லேன் நகராம நிக்கும், நாம மொதல்ல இருந்த லேன் வேகமாக நகரும்,
  அப்போ வரும் வெறுப்புக்கு ஈடு இணையே இல்ல.
  என்றும் அன்புடன்
  ஸ்ரீராம், பாஸ்டன்

  ReplyDelete
 13. ஹா ஹா
  வீட்டுக்கு வீடு வாசப்படி
  :))))

  ReplyDelete
 14. நண்பரே, வணக்கம். இப்போதுதான் உங்க பதிவுகளையெல்லாம் படித்து கொண்டு வருகிறேன். சில பதிவுகள் என் இரகம் இல்லாததால் ஒட்ட முடியவில்லை. ஆனால் இந்த பதிவு நன்று. எல்லோருக்கும் நீங்கள் சொன்னது போல நடக்கும்.
  எனக்கும்....
  சனிக்கிழமையாச்சே, சந்தோஷமா பீர் அடிக்கலாம்னு போணா, 5000 இல்லனு சொல்லுவான், சரி, KF ஆச்சும் இருக்கானு கேட்டா? Bullet இருக்குனு சொல்லுவான். ரொம்ப நாள பிகு பண்ண Figure பிரீயா இருக்கியாட, கால் பண்ணுனு சொண்ணா செல்லுல... Balance இருக்காது. அடிச்சி பிடிச்சி போண் பண்ணா ஜோதில அய்க்கியமாகறதுக்குள்ள, நம்ம கொரியா செட்டு, Low Batter அப்படினு காட்டிட்டு Off ஆய்டும். ஒரு மாசமா ஒரே பேண்ட் போடாதடா நம்ம Figure சொல்லும் போது, சரி இன்னிக்கி துவைக்கிறேன்... பாத்ரூம் போணா தண்ணி வராது. நம்ம அரசு பஸ்சுல சொல்லவே வேணாம்... 5 ரூபா கொடுத்து டிக்கெட் எடுத்தாலும்... 50 பைசா கொடுக்கமாட்டான் அப்படி ஸ்டாப் வர வரைக்கும் கண்டக்டரையே பாத்துகிட்டு இருந்தாகனும், 6.50 பால் வாங்க 10 ரூபா கொடுத்தா மிச்ச 50 பைசாவுக்கு ஓட்ட சாக்லேட் கொடுப்பாண்.... சூப்பர் Figurea இருக்கேனு... சைட் அடிச்சா... 7Gல வர மாதிரி அந்த பொண்ணு கேவலமா நம்மள பாக்கும்... Gym Body ஆகனும்டு மைனக்கட்டு தம்புள்ஸ் அடிச்சா... நாளு நாளைக்கு கை காலியாகும்... கஷ்ட்டப்பட்டு கமெண்ட் எழுதும் போது நெட் கட் ஆகும்... அறிவாளினு என்ன நானெ நினைச்சிகிட்டு கமெண்ட் டைப் பண்ண பண்ண... office word ல காப்பி பண்ணி வைச்சா... முதல்ல நெட் கட் ஆகும்... அப்புறம் நம்ம டப்பா சிஸ்டம் Off ஆகும்... இருந்தாலும் விக்கிரமாதித்தன் மாதிரி திரும்ப திரும்ப கஷ்டபட்டு கமெண்ட் போட்டா... நம்ம கமெண்ட்டுக்கு Replay இருக்காது... போதும்... என் சோககதை... என் சிஸ்டம் ஆப் ஆகறதுக்குள்ள... இந்த கமெண்ட்ட அனுப்பிடறேன்....

  ReplyDelete
 15. ஆமாம்..எப்ப பார்த்தாலும் இந்த பஸ் தான் எதிர் திசையிலேயே செல்லும். யாராவது சாப்பிட வீட்டிற்கு வந்து இருக்கும் போது தான் தோசை சட்டியை விட்டு வரவே வராது. கேஸ் தீர்ந்து போகும். யாரிடமாவது என் பையனை பற்றி ரொம்ப பெருமையாக சொல்லிட்டு இருக்கும் போது தான் கரெக்டாக ஒரு பெண்ணுடன் பைக்கில் வந்து இறங்குவான்.அவசரமாய் வெளியே கிளம்பும் போது தான் ஃபோன் அடிக்கும்.

  ReplyDelete
 16. yes the story for that eatable was more true "sollavum mudiama mellavum mudiama pakkathu yellaia pattu nakkula echil urrum " yenna koduma pa ithu

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner