நாட்டில் கொலையும் கொள்ளையும் பெருகிவிட்டால் நாம் என்ன சொல்லுவோம்? பகவான் கல்கி அவதாரம் எடுத்து தீயவா எல்லாரையும் அழிச்சிடுவா... என்று சொல்லக்கேட்டு இருக்கின்றோம்... சரி சப்போஸ் பகவான் வரவில்லை என்றால் என்ன செய்வோம் தேமே என்று சீரியல் பார்ப்போம்...
சரி நாட்டில் கொலை, கொள்ளை, இவைகள் கட்டுகடங்காமல் போனால் எதாவது யாராவது செய்துதானே ஆக வேண்டும்...யாராவது என்றால் அது யார் எப்படி நடக்கும்? யாராவது அல்லது எந்த குழுவாவது பொறுப்பு ஏற்க்க வேண்டும் அல்லவா?
அப்படி ஏற்பவர்கள் யாராவது ஒருவருக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் அல்லவா..? பணத்தயும் , பெண்களையும், போதையையும் பார்த்துவிட்டால் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் புத்தி பேதலித்து விடும் என்பதுதான் உண்மை... அவர்கள் கட்டுபாடுடன் இருக்க வேண்டும்... யாராவது ஒருவர் மீது பயம் வர வேண்டும்...அல்லது யாருக்காவது ஒருவருக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும்.... அப்படி கடவுளுக்கு விசுவாசமாய் இருப்பவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதுதான்THE BOON DOCK SAINTS படத்தில் மிக சுவாரஸ்யமாக ரொம்பவும் ஸ்டைலாக சொல்லி இருக்கின்றார்கள்....
படத்தின் கதை இதுதான்...... ரிசர்வியர் டாக் என்று ஒரு ஆங்கில படம் இருக்கின்றது... அதன் இயக்குனர் மர்டர் படங்களின் பிதாமகன் குவின்டின் டார்டினோ.... அந்த படத்தை இன்றளவும் உலக சினிமா ரசிகர்ககள் கொண்டாடுகின்றார்கள் அந்த படத்தை போல ஒரு மேக்கிங் இந்த படத்தில் நீங்கள் பார்க்கலாம்...
அமெரிக்க பாஸ்டன் நகரில் இருக்கும் இரட்டையர்கள்Conner (Sean Patrick Flanery) மற்றும்Murphy (Norman Reedus) இருவரும் கத்தோலிக்க கிருஸ்துவர்கள் சர்ச்சி்ல் சாமி கூம்பிட்டு விட்டு ,ஒரு பாரில் தனது நண்பர்களுடன் தண்ணி அடிக்கும் போது.... ரஷ்யன் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் பாரை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் அந்த இடத்தில் வேறு ஒரு காம்ளெக்ஸ் கட்ட போவதாக சொல்ல... வாய் தகராறு முற்றி கைகலப்பாகி இரண்டு பேர் இறந்து போகின்றார்கள்... அங்கு நடந்த கொலையை Paul Smecker (Willem Dafoe) எனும் எப்பீஐ எஜென்ட் வர... அவர் துப்பு துலக்கி அந்த இரட்டையர் இரண்டு பேரையும் கைது செய்து, பின்பு அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள அந்த கொலைகள் செய்தார்கள் என்ற உண்மை தெரிய வர அவர்கள் வெளியே வருகின்றார்கள்....
வந்தவர்கள் சும்மா இல்லை... கைல இருக்கற காசை எல்லாம் எடுத்து போய் நல்ல துப்பாக்கி வாங்கி ரஷ்யன் மாபியா கும்பலை சுட்டு சாகடித் கொண்டே இருக்கின்றார்கள்..எப் பீ ஐ விழி பிதுங்கி வேடிக்கை பார்க்கின்றது... பாஸ்டன் நகர தொலைக்காட்சியில் எத்தனை பேர் செத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. என்பதை போட்டு எப் பி மானத்தை கப்பல் ஏற்றுகின்றார்கள்... அப்படி என்னதான் எப் பிஐ பிடிங்கியது... ஏன் அவர்களை கைது செய்ய முடியவில்லை?, அவர்கள் ஏன் பைத்தியம் போல் மாபியாக்களை சாகடிக்கின்றார்கள்?? அதை விட கொடுமை சாகடித்து விட்டு ,சாகடித்து விட்டு ஏன் சர்ச்சில் போய் பாவமன்னிப்பு கேட்கின்றார்கள்? அவர்கள் என்ன லூசா என்பதை வெண் திரையில் பார்த்து மகிழவும்....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
ரொம்ப ரொம்ப ஸ்டைலான மேக்கிங் படம் இது அதற்க்கு இயக்குனருக்கு ஒரு நன்றி....
துப்பாக்கி் சண்டை போட்டு வரும் படங்கள் இது போன்று ஸ்டைலை தருவதில்லை என்பதை படம் பார்த்து கொண்டு இருக்கும் போது உணர்வீர்கள்....
படம் முழுவதும் ஒரு விறு விறுப்பு நம்மில் தொற்றிக்கொள்ளும்.....
படத்தில் வரும் ஃபன்னிமேன் கேரக்டர் சூப்பர் அவனிடம் ஒரு ரஷ்ய டான் கதை கேட்பதும் அதற்க்கு அவன் கதை சொல்லும் காட்சிகள் திக் திக் ரகம்...
படம் முழுவதும் ரத்தம் ரத்தம், மூளை சிதறல்கள், கண் சிதறல்கள், துப்பாக் தோட்டா சிதற்ல்கள் என படம் முழுவதும் ஒரே சிதறல்கள் மயம்தான்.
முதல் காட்சியில் தம்பியை சாகடிக்ககீழே அழைத்த போக அவனை காப்பாற்ற அண்ணன் என்ன செய்கின்றான் என்பதை படம் பார்க்கும் போது ரசிக்கவும்..
இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் ஒரு கொலை நடக்க போகும் முன் காட்டி விட்டு அதன் பிறகு கொலை நடந்த போன பிறகு அந்த எப்பீஐ போலிஸ் வந்து இந்த தோட்டா இப்படி இருந்தது வந்து இருக்க வேண்டும்... வந்து சுட்டவனில் ஒருவன் உயரம் கம்மியாக இருக்க வேண்டும் என்று சொல்ல சொல்ல அதே போல் காட்சிகள் விரிவதும் அது போல் திரைக்கதை அமைத்து இருப்பதும் அழகிலும் அழகு....
ஒரு வட்டமாக உட்கார்ந்து இருக்கும் ரஷ்ய டான்களை ஏசி ப்ளான்ட் வழியாக அண்ணன் தம்பி இருவரும் வந்து அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டே எதிர்பாராமல் உள்ளே விழ அத்தனை பேரையும் இருவர் சுட்டு சாய்ப்பது அழகு....
இயக்குனர் Troy Duffy வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்தே இந்த படத்தின் திரைக்கதை பின்னபட்டதாம்...
அதே போல் சினிமோட்டோகிராபர்Adam Kane கை வலிக்க கை குலுக்கி் கொண்டே இருக்கலாம்.... படத்தின் பல காட்சிகள் 48 பிரேமில் ஷுட் செய்து இருக்கின்றார்கள்... அப்படி ஷுட் செய்யும் போது எவ்வளவு பிலிம் கேன் யூஸ் ஆகி இருக்கும் என்று நினைக்கும் போது தலை சுற்றுகின்றது..
இந்த படத்தை பார்த்தால் துப்பாக்கி சுடும் ஸ்டைலை நீங்கள் கற்றுக்கொள்ளும் அளவுக்கு துப்பாக்கியை உபயோகிப்பார்கள்....
படக்குழுவினர் விபரம்....
Directed by Troy Duffy
Produced by Elie Samaha
Lloyd Segan
Robert Fried
Chris Brinker
Written by Troy Duffy
Starring Willem Dafoe
Sean Patrick Flanery
Norman Reedus
David Della Rocco
Billy Connolly
Music by Jeff Danna
Cinematography Adam Kane
Editing by Bill DeRonde
Studio Franchise Pictures
Distributed by Indican Pictures
Release date(s) January 21, 2000
Running time 110 min.
Country Canada
United States
Language English
Spanish
Papiamento
Budget $6 million[1]
Gross revenue $30,471[1]
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நிறைய ஆங்கில பட விமர்சனம் போடுறிங்க. இந்த படம் எல்லாம் தியேட்டர்ல பார்ப்பீங்களா? இல்லை டிவிடியா?
ReplyDeleteநல்லாயிருக்கு. விமர்சனம் படம் பாக்குற ஆவலை தூண்டுகிறது
ReplyDeleteதலைவா, ராபெர்ட் டி நீரோ நடித்த" ஹீட்" திரைப்படம் பற்றி விமர்சனம் கட்டாயம் எழுதவும். உங்கள் வலைபடத்தின் ரகசிய காதலன் நான், இன்னும் நீங்கள் ஐந்து நிமிட அல்லது பத்து நிமிட வீடியோ காட்சியும் பதிவில் சேர்க்கலாமே.
ReplyDeleteஇந்த படத்தின் முக்கிய திரைக்கதை சரடு ‘அந்நியன்’ படத்தோடு ஒத்துப் போவதை பல முறை கவனித்து உள்ளேன். Willem Defoe, இரட்டையர்கள் இருவரும் எவ்வாறு கொலை செய்திருப்பார்கள் என்று Reconstruct செய்யும் காட்சி அற்புதம். அந்த மாண்டேஜீம், அதற்கான பிண்ணணி இசையும் மிகச் சிறப்பாக அமைந்து இருக்கும். நல்ல விமர்சனம் பாஸ்...
ReplyDeleteவிமர்சனம் நல்ல இருக்கு சார்.ஆமா உங்களுக்கு படம் பார்க்க எப்படி டைம் கெடைக்குது ?
ReplyDeleteதோட்டாவா தெறிக்குது...
ReplyDeleteபடத்தை பார்க்க தூண்டும் விமர்சனம்.
ReplyDelete/
ReplyDeleteபடம் முழுவதும் ஒரு விறு விறுப்பு நம்மில் தொற்றிக்கொள்ளும்...
/
Super
படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம்.
நிறைய ஆங்கில பட விமர்சனம் போடுறிங்க. இந்த படம் எல்லாம் தியேட்டர்ல பார்ப்பீங்களா? இல்லை டிவிடியா?//
ReplyDeleteநாஞசில் பலது தியேட்டர் சிலது வீட்ல...
தலைவா, ராபெர்ட் டி நீரோ நடித்த" ஹீட்" திரைப்படம் பற்றி விமர்சனம் கட்டாயம் எழுதவும். உங்கள் வலைபடத்தின் ரகசிய காதலன் நான், இன்னும் நீங்கள் ஐந்து நிமிட அல்லது பத்து நிமிட வீடியோ காட்சியும் பதிவில் சேர்க்கலாமே./
ReplyDeleteநன்றி ஜெர்ரி நீங்கள் சொன்னது போலவே செய்தாகிவிட்டது..
இந்த படத்தின் முக்கிய திரைக்கதை சரடு ‘அந்நியன்’ படத்தோடு ஒத்துப் போவதை பல முறை கவனித்து உள்ளேன். Willem Defoe, இரட்டையர்கள் இருவரும் எவ்வாறு கொலை செய்திருப்பார்கள் என்று Reconstruct செய்யும் காட்சி அற்புதம். அந்த மாண்டேஜீம், அதற்கான பிண்ணணி இசையும் மிகச் சிறப்பாக அமைந்து இருக்கும். நல்ல விமர்சனம் பாஸ்...//
ReplyDeleteரிசன்னா ஏதோ விஷயம் உள்ளவர் நினைக்கிறேன் நிறைய படம் பார்த்து இருக்ிஙக போல நன்றி
விமர்சனம் நல்ல இருக்கு சார்.ஆமா உங்களுக்கு படம் பார்க்க எப்படி டைம் கெடைக்குது ?//
ReplyDeleteஓரு நாள்ள மூனு படம் கூட பார்பேன்
நன்றி துபாய் ராஜா ,மங்களுர் சிவா, மற்றும் சூரியன்
ReplyDelete