(வேளச்சேரி ரோட்டில் இருக்கும் ஒரு ஆலயம்)
பொதுவாக இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்ற ஒரு நாடு...திட்ட மிட்ட நகரம் என்பது இந்தியாவில் ஒரு சில இடங்களை தவிர வேறு எங்கும் இல்லை...எனக்கு தெரிந்த வரையில் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்த புதுவையை தவிர திட்ட மிட்டநகரம் என்பதை நான் வேறு எங்கும் நான் கண்டதில்லை...(எனக்கு தெரிந்தவரையில் நான் சொல்லி இருக்கின்றேன்)
நெய்வேலி, கல்பாக்கம் போன்ற அரசு ஊழியர்கள் தங்கி வேலை செய்யும் இடங்களை திட்டம் இட்டு உருவாக்குவதால் அந்த டவுன்ஷீப்புகள், எந்த இடத்தில் கோவில், எந்த இடத்தில் குளம் ,எந்த இடத்தில் சர்ச், எந்த இடத்தில் மசூதி, போன்றவற்றை திட்டமிட்டு உருவாக்கி அதற்க்கான இடம் அமைத்து கொடுக்க, அது போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கின்றது... மக்களும் எந்த சிரமும் இன்றி வழிபாடு செய்கின்றனர்....
ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் அப்படி அல்ல.. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றவை... கும்பகோணத்தில் தெருவுக்கு தெருவுக்கு கோவில் வைத்து வணங்கி வழிபட்ட சமுகம் நம்முடையது என்றால் அது மிகையில்லை..
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளை எடுததுக்கொண்டால் எல்லா இடத்திலும் அம்மன் கோவில் மற்றும் பிள்ளையார் கோவில் இல்லாத இடங்கள் இல்லை எனலாம்.... ஆனால் இதில் பெரும்பாலான கோவில்கள் இருப்பதும் தெருவின் ஓரத்தில்....
உதாரனமாக வேளச்சேரி, ராமாபுரம், வளசரவாக்கம் போன்ற இடங்கள் எல்லாம் 15 வருடங்களுக்கு முன்பு குட்டையும் ,குளமுமாக, ஏரியாக, முள் புதர்களாக காட்சி அளித்தவை... அப்போதில் இருந்தே இந்த இடங்களி் ல் வசித்த மக்கள் சாலையோரங்களில் கோவில் கட்டி வைத்து வழிபட ஆரம்பித்தார்கள்...
ஆனால் இன்று சென்னை வாழ் மக்கள் தொகையின் அளவும், வாகன பெருக்கமும், கட்டுக்கடங்காமல் போய் கொண்டு இருக்ககின்றது... அது மட்டும் இல்லாமல் சாலையோரம் உள்ள வேப்ப மரம் மற்றும் அரச மரங்கள் எல்லாம் திடிர் மஞ்சள் துணி கட்டிக்கொண்டு எதாவது ஒரு அம்மன் பேர் வைத்து மக்கள் வழிபட ஆரம்பித்து விட்டார்கள்....
மற்ற மதத்து கோவில்கள் இந்து கோவில்களை காட்டிலும் ரேஷியோவில் மிகவும் பின்தங்கி காணப்படுகின்றன... சர்ச்களும் மசூதிகளு்ம் இது போன்று சாலை ஓரங்களில் மிகவும் குறைவு....அதற்க்காக இல்வே இல்லை என்று யாரும் வாதம் செய்ய முடியாது....
பொதுவாக இந்த மாதிரி கோவில்கள் சிறிய அளவில் தோன்றுகின்றன... தோன்றும் போது சாலையில் இருந்து பின்புறம் அதாவது 20 அடி பின்னேதான் இருக்கின்றன... ஆனால் கோவிலுக்கு நிதி சேர சேர முதலில் கோவிலுக்கு முன் ஒரு சிறிய அளவிலான முன் மண்டபம் கட்டி அது சாலையின் முனை வரை வந்து விடுகின்றது...
மதப் பிரச்சனை என்பதால் போக்குவரத்து போலிசார் மற்றும் அந்த பகுதி மக்களே கூட வாய் பொத்தி மவுனம் காக்க வேண்டி உள்ளது...ஒரு தெருவில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு கோவில் வீதம் இருப்பதுதான் இதில் ஆச்சர்யமான விஷயம்....
வேளச்சேரியில் இருந்து விஜய நகர் பெருந்து நிலையம் செல்வதற்க்குள் சின்னதும் பெரிதுமாக சாலையோர கோவில்கள் எப்படியும் அந்த 5 கீலோமீட்டர் இடைப்பட்ட பகுதியில்.. குறைந்தது 5 கோவில்களாவது இருக்கும்...
(மேலுள்ள படம் விஜய நகர் போகும் வேளச்சேரி பைபாஸ் சாலை சிக்கனல் அருகில் இருக்கும் கோவில்....)
கோவில் என்பது மனம்முவந்து பிரார்த்தனை செய்யும் இடம்... எந்த சத்தமும் இல்லாமல் மனதை தனிமை படுத்தும் இடமாக இருக்க வேண்டும்.... எந்த கார் சத்தமோ அல்லது எந்த தண்ணீர் லாரி சத்தமோ நமது பிராத்தனையை கலைக்க கூடாது....
ஆனால் அப்படி எடுத்துக்கொண்டால் தமிழகத்தின் பல பகுதிகளில் பல கோவில்கள் சாலையோரத்தில் இருக்கின்றது...ஆடிமாசத்தின் போது அம்மன் கோவில்களுக்கு விழா எடுக்கும் விதமாக கோவிலுக்கு முன் பெரிய பந்தல் போட்டு சாலையில் பயணிக்கும் பலருக்கு இடைஞ்சல் எற்படுத்துகின்றார்கள்...
அலங்கார மின் விளக்கு வைக்க, அரசியல்வாதிகள்தான் நேற்று போட்ட ரோட்டை மனசாட்சி இல்லாமல், குழி தோண்டி நாஸ்த்தி செய்கின்றர்கள் என்றால் ,ஆன்மீக அருள் பெயரில் இவர்களும் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்பதை காலம் காலமாய் இவர்களும் நிருபித்து வருகின்றனர்....
(வேளச்சேரி செல்லும் சாலையல் ஓரு ரோட்டோர ஆலயம்...)
விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் அருகில் இருக்கும் வேம்புலி அம்மன் கோவில்... வளசரவாக்கம் மற்றும் வடபழனி, போரூர் வாசிகளுக்கு நன்கு தெரியும்... ரோட்டில் அதன் வாசல் இருக்கும் அந்த இடத்தில் ஒரு லாரி வளையவே சிரமபடும் இடம் அது... ஆனால் அந்த இடத்தில் நேற்று அம்மனுக்கு பாட்டுகச்சேரி வைக்க ரோட்டை அடைத்து பந்தல் போட்டு டிராபிக்கை படுத்தி எடுத்து விட்டார்கள்.. இன்னும் பிள்ளையார் சக்தி திருவிழா வேறு வரப்போகின்றது....
தினமும் நாம் போகும் ரோடு... இரவுதானே ... சீக்கரம் போய் படுக்கலாம் என்று அந்த வழியே போனால் கயிறு கட்டி ரோட்டை அடைத்து சற்று துரத்தில் கலர் கலர் லைட் அடித்து செல்லாத்தா எங்கள் மரியாத்தா பாடுவதற்க்கு பதில் ... கண்ணதாசன் காரக்குடி பேரைச்சொல்லி ஊத்திக்குடி என்று அம்மனுக்கும் பிள்ளையாருக்கும் பக்தியோடு சொல்லி வைப்பார்கள்....
ரோட்டை ஆக்கிரமிக்க இந்த ரோட்டு ஓர கோவில்கள் பெரிதும் பயன்படுகின்றன...அந்த கோவிலுக்கு பக்கத்தில் பூக்கடை வெற்றிலை பாக்கு தேங்காய் கடைகள் முலைத்து, அக்கிரமிக்க அதே நேர் கோட்டில் பக்கத்து கடைகாரர்கள் முன்னே வந்து தங்கள் ஆக்கிரமிப்பை வைத்தக்கெள்கின்றார்கள்..
மேலுள்ள படத்தில் இருக்கும் கோவில் ராமபுரத்தில் உள்ள ரோட்டோரத்தில் இருக்கும் வினாயகர் கோவில் காலையில் இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாது....இந்த வழியாக அலுவலகத்து போகின்றவர்கள்,மற்றும் ஈஸ்வரி பொறியல் கல்லூரி பேருந்துகள், எஸ் ஆர் எம் பல் கல்லூரி பேருந்தகள் எல்லாம் இந்த வழியாக செல்ல வேண்டும்... கூடவே இந்த தடத்து அரசு பேருந்துகள் மற்றும் மணல் லாரி தண்ணீர் லாரி போன்றவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்... எல்லாம் இந்த வழியாக பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்....
மேல்மருவத்தூர் கோவில்15 வருங்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்தது... மக்களின் ஏகோபித்த ஆதரவுக்கு பின் நெடுஞ்சாலையே சற்றே நகர்ந்து வளைந்து போனது வரலாறு.
தென் மாவட்டத்துக்கு சாலைவழியாக பயணம் செய்பவர்கள் இதை கவனித்து இருக்கலாம்... தாம்பரம் தாண்டியதும் வேகம் எடுக்கும் பேருந்துகள் பெருங்களத்தூர் அருகில் வேகம் குறையும் அங்கே ரோட்டு ஓரமாக இருக்கும் அம்மன் கோவிலில் சாமி கும்பிட நடு ரோட்டில் நிறுத்தி எலுமிச்சை பழம் வைத்து நம் மக்கள் செய்யும் அராஜகம் வார்த்தைகளில் சொல்ல முடியாது...
வழிபாட்டை நான் குற்றம் சொல்லவில்லை... ஆனால் அதனை செயல்படுத்தும் மக்களின்மீதுதான் எனது வருத்தங்கள் எல்லாம்... இதனால் பலதரப்பட்ட ம்க்கள் பாதிக்கபடுகின்றார்கள்....
எங்கள் ஊர் கடலூரில் இதே போல் சாலை யோரத்தில் இருந்த ஐயனாரை ரோட்டில் காரை நிறுத்தி வழிபடும் போது பள்ளி பிள்ளைக்ளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் எதி்ரில் வந்த பேருந்தில் மோதி, சம்பவ இடத்தில் பத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்து பேனார்கள்...
மேற்சொன்ன கோவில்களில் சன் டீடிஎச் விளம்பரம் போல் வாகனத்தி்ல்போகும் போது, நானும் சலாம் போட்டு கற்புரம் ஏற்றி வழிபட்டு சென்று இருக்கின்றேன் ஆனால் ரோட்டில் மற்றவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தாமல் வழிபட்டு இருக்கின்றேன்....
எந்த கடவுளும் இந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை ஆனால் மக்கள்தான் கடவுளின் பெயரை சொல்லிஎல்லாவற்றையும் செய்கின்றனர்..... இந்த சாலையோர கோவில்களால் ஏற்படும் விபத்துகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.. இதனை உணர்ந்து பொதுமக்களும் அதற்க்கு ஏற்ற வகையில் பெதுமக்களுக்கும் வாகன போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில் வழிபாட்டு தளங்களை அமைக்க வேண்டும் என்பதே எனது ஆசை....
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வரையில் விழிபாட்டுதளங்களை அமைக்கலாம் ஆனால் அதற்க்கு பெரிய மனது வேண்டும்... நம்மவர்கள் அதனை எப்போதும் ஈகோ பிரச்சனையாக பார்ப்பார்கள்...
ஆம் இந்தியா கலாச்சார பெருமைகள் தன்னகத்தே கொண்டவளரும் நாடு அல்லவா?????
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நல்ல பதிவு ஜாக்கி..
ReplyDeleteம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்!
ReplyDeleteதகவல்,செய்தி,புகைப்படம்,அருமை.வேறு என்ன செய்ய?மதம் இன்றைக்கு வணிக தளமாகவும், அரசியல் களமாகவும்,தகவமைத்து கொள்கிறது.இந்த பூமி மதத்தின் பெயரால் மாண்டவர்களின் ரத்தத்தை தான் அதிகமாக குடித்திருக்கிறது.
ReplyDelete"ஜெரிஈசானந்தா"-மதுரை
மதுரையிலும் இதுமாதிரி நிறைய இருந்தது!
ReplyDeleteஇப்போ முக்கால்வாசி தரைமட்டம் ஆகிவிட்டது!
உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு தல.. கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.. நல்ல இடுகை..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமிகச்சிறந்த தகவல்.
இதையெல்லாம் அடுத்தவங்கள காட்டாம நாமே நமக்குள் புரக்கணித்தல் நல்லது என நிணைக்கின்றேன். குறைந்தபட்சம் இதுபோல் புதிதாக உருவாகும் கோவில்களுக்காவது நாம் ஆதரவு தராமலிருப்பது சரி.
இராஜராஜன்
present sir.
ReplyDeleteபொதுவாக இந்த மாதிரி கோவில்கள் சிறிய அளவில் தோன்றுகின்றன... தோன்றும் போது சாலையில் இருந்து பின்புறம் அதாவது 20 அடி பின்னேதான் இருக்கின்றன... ஆனால் கோவிலுக்கு நிதி சேர சேர முதலில் கோவிலுக்கு முன் ஒரு சிறிய அளவிலான முன் மண்டபம் கட்டி அது சாலையின் முனை வரை வந்து விடுகின்றது...
ReplyDeleteரொம்ப சரி .சென்னையில் அண்ணா நகர் , அண்ணா ஆர்ச் அருகே ஒரு அம்மன் கோவில் இருக்கும் அதுவும் இப்படித்தான்.
எனக்கு தெரிந்த ஒருவர் அவர் வீட்டின் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமிக்க கோவில் கட்டினார் .
மதுரையில் சில வருடங்களுக்கு முன் அங்கிருந்த மேயரின் முயற்சியால் இப்படிப்பட்ட கோவில்கள் பல அகற்றப்பட்டன .அதில் ஒரு கோவிலில் பேஸ்மன்ட்டும் அதில் அறைகளும் கழிவறை உட்பட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்டதும் தெரிய வந்தது
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
கோயிலுக்கு வசூல் செய்யும் பணத்தில் லைட் மியுசிக் டான்ஸ் எல்லாம் வைக்காமல் அந்த பகுதியை மேம்படுத்தபயன்படுத்தலாம் அல்லது படிக்கும் குழந்தைகளுக்கு உதவுமாறு எதையாவது செய்யலாம் அதெல்லாம் நம்ம சொன்னா கேப்பாங்களா ?
ReplyDeleteஅப்படியும் நான் கேட்டு தொலைச்சேன்!
அதற்கு பதில்?
காசை வாங்கிட்டு
கேவலமா ஒரு பார்வை பார்த்துட்டு போனாங்க
Raj said...
ReplyDeleteம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்!
ரிப்பிட்டேய்ய்ய்ய்
/ம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்//
ReplyDelete3 repeattunu
பின்னுட்டம் போட்டா கூழ் ஊத்துவீங்களா?
ReplyDeleteநல்ல பதிவுதான்.... ஆனால்??? !!!!!
ReplyDeleteநம்ம ஏரியா திருவான்மியூரில் பஸ் டிப்போ அருகில் வால்மீகி
ReplyDeleteகோவில் நடு ரோட்டில் இருக்கும் அண்ணே..........என்ன பண்றது
வால்மீகி இங்க இருந்ததற்கு அது ஒரு சான்று...
பின்னுட்டம் போட்டா பீர் ஊத்துவீங்களா?
ReplyDeleteஇது புதுசு..
கும்பிட போன தெய்வம் (சாலையின்) குறுக்கே வந்ததம்மா
ReplyDeleteIF I GOT POWER...I WILL DEMOLISH ALL SUCH TEMPLES ALL OVER TAMIL NADU....IRRESPECTIVE OF RELIGIONS.....ULTIMATE NONSENSE....
ReplyDeletePresent Sir
ReplyDeletePresent Sir
ReplyDelete//ஆனால் அதற்க்கு பெரிய மனது வேண்டும்...
ReplyDeleteரொம்பத்தான் பேராசைங்க உங்களுக்கு !!!
//செல்லாத்தா எங்கள் மரியாத்தா பாடுவதற்க்கு பதில் ... கண்ணதாசன் காரக்குடி பேரைச்சொல்லி ஊத்திக்குடி என்று அம்மனுக்கும் பிள்ளையாருக்கும் பக்தியோடு சொல்லி வைப்பார்கள்...
இந்த முரண்பாடுகள்தான் இடிக்கிறது..
எனக்கென்னவோ இதைப்பற்றி சிந்தித்தால், தோன்றிய காரணங்கள் சில..
முதியோர் இல்லம் ஏன் அதிகரிக்கின்றன..? வீட்டில் பெரியவர்களை வைத்திருக்கப்பிடிக்காமல் ! சரிதானே? அதேபோல, கடவுளையும் நம் மனதில் வைத்திருக்கமுடியாமல், வெளியேற்றுகிறோமோ ??
அல்லது, கடவுளே மனிதமனதில் இருக்கப்பிடிக்காமல், வெளியேறுகிறானோ??
வேறொரு, காரணமும் தோன்றியது..
தற்பொழுதெல்லாம், சிறு நகரங்களிலிருக்கும் வீடுகளில் கூட வழிப்பாட்டிற்கென தனியறை கிடையாது.. அல்லது அளவு குறைகிறது... பொது இடத்தில், ரோட்டை ஆக்கிரமித்து வீட்டை கட்டமுடியாது.. என்றாவது ஒருநாள் புல்டோசர் வந்து நிற்கும். ஆனால், பொது இடங்களில், ஆலயங்கள் ஏற்படுத்தலாம்.. அதனால்தான், இம்மாதிரி ஆலயங்கள் நிறைய தோன்றுகிறதோ என எப்படியெப்படியெல்லாமோ தோன்றுகிறது..
ராமாபுரத்தில் தாங்கள் குறிப்பிட்ட கோவிலருகேதான் முன்னே தங்கியிருந்தேன்.. ஒரு சதுர்த்தியின் போது, அந்த சித்தி விநாயகருக்கே மூச்சு முட்டுகிற அளவுக்கு கூட்டமும், நெரிசலும் இருந்தன..
ஏற்கனவே, பள்ளம்மேடுகளுடன் இருந்த சாலைகளில் சிக்கித்தவித்த வாகனங்கள்... எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது..
நன்றிங்க..
நல்ல பதிவு ஜாக்கி....me too in Velachery ;-)
ReplyDeleteநீங்கள் சொன்னது போல அன்று கடலூர் அய்யனார் கோயில் விபத்து கொடுமையானது.
ReplyDeleteஇதுவெல்லாம் பக்தியின் பெயரால் மக்கள் செய்யும் தவறுகள்..!
ReplyDeleteசிலர் செய்யும் கொள்ளைகள்.. பலர் செய்யும் தெய்வத் துரோகம்..
என் வீட்டுக்கருகில் மாரியம்மன் கோவில் தெருவில் தெருவில் பாதியை ஆக்கிரமித்து ஒரு இடத்தை ஒதுக்கிவிட்டார்கள். அங்கே வருடாவருடம் ஆடி மாத திருவிழாவில் தீ மிதி மட்டும் நடக்கும். அந்த இடத்தில் பேருந்துகளும், லாரிகளும் திரும்புவதற்கு படம் சிரமங்கள் சொல்ல முடியாதது.
இத்தனைக்கும் காரணம் அதே தெருவில் அருகருகே இருக்கும் இரண்டு மாரியம்மன் கோவில்கள்.. ஒன்று புராதன மாரியம்மன்.. இன்னொன்று சாதா மாரியம்மன்.. இரண்டிலும் யார் அதிக காசை அள்ளுவது என்று தர்மகர்த்தாக்களுக்கிடையே போட்டி..
இது எங்கே போய் முடியும்..?
ஜாக்கி சிறந்த ஒரு பதிவை இட்டுள்ளீர்கள்..
நன்றிகள்.. பாராட்டுக்கள்..!
வால்ஸ் சொன்னது முழுவதும் சரியில்லை. எல்லாம் இன்னும் அப்படியேதான். சில கோயில்கள் மட்டும் இடிபட்டன. மற்றவை...இன்னும் நீண்டு நெடுங்காலமாய் இருக்கிறன!
ReplyDeleteஇதையும் பாருங்கள்.
நல்ல இடுகை! வாழ்த்துகள்!
ReplyDeletenalla pathivu jackie நல்ல பதிவு ஜாக்கீ !!
ReplyDeleteGood posting. I am from Ahmedabad. You will not beleive if I say that couple of months back on a fine early morning, the Modi's Governement has demolished all (?).. yes most of the road side hindu temples, Masjids etc., in spite of the stiff resistaance from the people, making the roades wider and usable for the ever increasing traffic. In spite of his strong administration and development mind, he is seen as a muslim murderer to this world. Tamilnadu (Chennai) should follow his example atleast in this regard.
ReplyDeleteneenga solradhu romba sari! konjam peedhi kelappura madhiri yedhavadhu panna thaan ivinga niruthuvaanga!
ReplyDeleteமிக நல்ல பதிவு.
ReplyDeleteஇது எங்கே போய் முடியும்..?
ReplyDeleteஜாக்கி சிறந்த ஒரு பதிவை இட்டுள்ளீர்கள்..
நன்றிகள்.. பாராட்டுக்கள்..!
voted in tamilish and tamilmanam
நல்ல பதிவு
ReplyDeleteநல்ல பதிவு ஜாக்கி..//
ReplyDeleteநன்றி கேபிள்
ம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்!//
ReplyDeleteவழி காட்டுவாங்க ராஜ்
தகவல்,செய்தி,புகைப்படம்,அருமை.வேறு என்ன செய்ய?மதம் இன்றைக்கு வணிக தளமாகவும், அரசியல் களமாகவும்,தகவமைத்து கொள்கிறது.இந்த பூமி மதத்தின் பெயரால் மாண்டவர்களின் ரத்தத்தை தான் அதிகமாக குடித்திருக்கிறது.
ReplyDelete"ஜெரிஈசானந்தா"-மதுரை//
உண்மைதான் ஜெர்ரி தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும்...
மதுரையிலும் இதுமாதிரி நிறைய இருந்தது!
ReplyDeleteஇப்போ முக்கால்வாசி தரைமட்டம் ஆகிவிட்டது!//
நன்றி வால்பையன் மதுரை செய்தி பகிர்தலுக்கு
உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு தல.. கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.. நல்ல இடுகை..//
ReplyDeleteநன்றி பாண்டியன் தொடர் வாசிப்புக்கு
வணக்கம்
ReplyDeleteமிகச்சிறந்த தகவல்.
இதையெல்லாம் அடுத்தவங்கள காட்டாம நாமே நமக்குள் புரக்கணித்தல் நல்லது என நிணைக்கின்றேன். குறைந்தபட்சம் இதுபோல் புதிதாக உருவாகும் கோவில்களுக்காவது நாம் ஆதரவு தராமலிருப்பது சரி.
இராஜராஜன்//
நன்றி ராஜன் கண்டிப்பாக
நன்றி நைனா
ReplyDeleteபொதுவாக இந்த மாதிரி கோவில்கள் சிறிய அளவில் தோன்றுகின்றன... தோன்றும் போது சாலையில் இருந்து பின்புறம் அதாவது 20 அடி பின்னேதான் இருக்கின்றன... ஆனால் கோவிலுக்கு நிதி சேர சேர முதலில் கோவிலுக்கு முன் ஒரு சிறிய அளவிலான முன் மண்டபம் கட்டி அது சாலையின் முனை வரை வந்து விடுகின்றது...
ReplyDeleteரொம்ப சரி .சென்னையில் அண்ணா நகர் , அண்ணா ஆர்ச் அருகே ஒரு அம்மன் கோவில் இருக்கும் அதுவும் இப்படித்தான்.
எனக்கு தெரிந்த ஒருவர் அவர் வீட்டின் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமிக்க கோவில் கட்டினார் .
மதுரையில் சில வருடங்களுக்கு முன் அங்கிருந்த மேயரின் முயற்சியால் இப்படிப்பட்ட கோவில்கள் பல அகற்றப்பட்டன .அதில் ஒரு கோவிலில் பேஸ்மன்ட்டும் அதில் அறைகளும் கழிவறை உட்பட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்டதும் தெரிய வந்தது//
பூங்குழலி தங்கள் விரிவான தகவலுக்கு நன்றி... மதத்தின் போர்வையில் இப்படித்தான் நடக்கின்றது..
கோயிலுக்கு வசூல் செய்யும் பணத்தில் லைட் மியுசிக் டான்ஸ் எல்லாம் வைக்காமல் அந்த பகுதியை மேம்படுத்தபயன்படுத்தலாம் அல்லது படிக்கும் குழந்தைகளுக்கு உதவுமாறு எதையாவது செய்யலாம் அதெல்லாம் நம்ம சொன்னா கேப்பாங்களா ?
ReplyDeleteஅப்படியும் நான் கேட்டு தொலைச்சேன்!
அதற்கு பதில்?
காசை வாங்கிட்டு
கேவலமா ஒரு பார்வை பார்த்துட்டு போனாங்க//
பயல் இது போல் சொல்லி நானம் அவமானபட்டு போய் இருக்கின்றேன்
Raj said...
ReplyDeleteம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்!//
நன்றி கோஸ்ட்
/ம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்//
ReplyDelete3 repeattunu//
நன்றி சூரியன்
பின்னுட்டம் போட்டா கூழ் ஊத்துவீங்களா?//
ReplyDeleteஆத்தா புண்ணியத்துல வசதி இருந்தா ஊத்துவோம்
நல்ல பதிவுதான் என்ன ஆனால் இளவட்டம்???
ReplyDeleteபின்னுட்டம் போட்டா பீர் ஊத்துவீங்களா?
ReplyDeleteஇது புதுசு../ஹ
நன்றி கலை
நம்ம ஏரியா திருவான்மியூரில் பஸ் டிப்போ அருகில் வால்மீகி
ReplyDeleteகோவில் நடு ரோட்டில் இருக்கும் அண்ணே..........என்ன பண்றது
வால்மீகி இங்க இருந்ததற்கு அது ஒரு சான்று...
அது போல் ஒரு சிலதை ஒத்துக்கொள்ளலாம்
கும்பிட போன தெய்வம் (சாலையின்) குறுக்கே வந்ததம்மா//
ReplyDeleteநன்றி பாண்டி
IF I GOT POWER...I WILL DEMOLISH ALL SUCH TEMPLES ALL OVER TAMIL NADU....IRRESPECTIVE OF RELIGIONS.....ULTIMATE NONSENSE....//
ReplyDeleteஉங்க கோபம் நியாமானது பட் இதெல்லாம் வளரும் போதே காவல் துறை தடுத்தால் தேவலை...
நன்றி ஆர் ஆர்
ReplyDeleteராமாபுரத்தில் தாங்கள் குறிப்பிட்ட கோவிலருகேதான் முன்னே தங்கியிருந்தேன்.. ஒரு சதுர்த்தியின் போது, அந்த சித்தி விநாயகருக்கே மூச்சு முட்டுகிற அளவுக்கு கூட்டமும், நெரிசலும் இருந்தன..
ReplyDeleteஏற்கனவே, பள்ளம்மேடுகளுடன் இருந்த சாலைகளில் சிக்கித்தவித்த வாகனங்கள்... எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது..
நன்றிங்க..//
நன்றி காரணம் ஆயிரம் உங்கள் பிரச்சனையும் நீங்க நொந்து போனதும் விரிவான பின்னுட்டத்தில் என்னால் உணர முடியுது...
நன்றி
நன்றி சம்பத்.. இஸ்கான் மிக்க நன்றி இஸ்கான் கடலுர் விபத்தை ஞாபகம் வைத்து இருந்ததிற்க்கு...
ReplyDeleteஎன் வீட்டுக்கருகில் மாரியம்மன் கோவில் தெருவில் தெருவில் பாதியை ஆக்கிரமித்து ஒரு இடத்தை ஒதுக்கிவிட்டார்கள். அங்கே வருடாவருடம் ஆடி மாத திருவிழாவில் தீ மிதி மட்டும் நடக்கும். அந்த இடத்தில் பேருந்துகளும், லாரிகளும் திரும்புவதற்கு படம் சிரமங்கள் சொல்ல முடியாதது.
ReplyDeleteஇத்தனைக்கும் காரணம் அதே தெருவில் அருகருகே இருக்கும் இரண்டு மாரியம்மன் கோவில்கள்.. ஒன்று புராதன மாரியம்மன்.. இன்னொன்று சாதா மாரியம்மன்.. இரண்டிலும் யார் அதிக காசை அள்ளுவது என்று தர்மகர்த்தாக்களுக்கிடையே போட்டி..
இது எங்கே போய் முடியும்..?
ஜாக்கி சிறந்த ஒரு பதிவை இட்டுள்ளீர்கள்..
நன்றிகள்.. பாராட்டுக்கள்..!//
பசுபதி கடைகிட்டதானே,.. அது ரொம்ப மோசமான இடம் மனிதர்களும்தான்
வால்ஸ் சொன்னது முழுவதும் சரியில்லை. எல்லாம் இன்னும் அப்படியேதான். சில கோயில்கள் மட்டும் இடிபட்டன. மற்றவை...இன்னும் நீண்டு நெடுங்காலமாய் இருக்கிறன!
ReplyDeleteஇதையும் பாருங்கள்.//
தருமிசார் உங்கள் இடுக்கையும் படித்தேன் ..நன்றி நீங்கள் ஏற்கனவே இந்த பிரச்சனையை மக்கள் மன்றத்தில் வைத்து வீட்டீர்கள் நன்றி
நன்றி . சந்தனமுல்லை,இந்தியன், கார்திக்,புருனோ,மங்களுர் சிவா...
ReplyDeleteGood posting. I am from Ahmedabad. You will not beleive if I say that couple of months back on a fine early morning, the Modi's Governement has demolished all (?).. yes most of the road side hindu temples, Masjids etc., in spite of the stiff resistaance from the people, making the roades wider and usable for the ever increasing traffic. In spite of his strong administration and development mind, he is seen as a muslim murderer to this world. Tamilnadu (Chennai) should follow his example atleast in this regard.//
ReplyDeleteநன்றி சாம்ப சிவம். மோடியை பற்றி இந்த விஷயத்தை பற்றி கேள்வி பட்டு இருக்கின்றேன்
இது எங்கே போய் முடியும்..?
ReplyDeleteஜாக்கி சிறந்த ஒரு பதிவை இட்டுள்ளீர்கள்..
நன்றிகள்.. பாராட்டுக்கள்..!
voted in tamilish and tamilmanam/
நன்றி கார்த்திகேயன்