(POWDER BLUE) 18+ துயரத்தின் துரத்தல்....

சிலர் செய்யும் வேலைகள் ரொம்பவும் வித்தயாசமானவை....நாம் அதே வேலைகளை எப்படி இப்படி முகம் சுலிக்காமல் செய்கின்றார்கள் என்று நினைக்கும் போது அந்த வேலைகள்தான் அவர்கள் பசியாற உதவுபவை...


சில பெண்கள் உடலை மூலதனமாக வைத்து வயிற்று பசி ஆற்றுகின்றார்கள்...ஆனால் அவர்கள் நிலை பற்றிநாம் கவலை கொள்வதே இல்லை.... அவர்கள் அந்த பணம் பெற எவ்வளவு வலிகளை சமக்கின்றார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....


இளமையில் செய்த தவறுகளுக்கு சாகும் வயதில் பிராய சித்தம் தேட சிலர் முற்படுவார்கள்... இப்படி நிறைய பேருக்கு வாழ்வின் வலிகளை எதி்ர்கொள்கின்றவர்களை பற்றி கதை இது........ அவனின் வேலை சவப்பெட்டி செய்து விற்பதும் இறந்த உடல்களை அழகுபடுத்தி கொடுப்பது அவன் வேலை...

அவன் அந்த அவலையை ரசித்து செய்கின்றான்.... அவனுக்கு கடன் வேண்டும் எல்லா பேங்குகளிலும் கடன் கேட்க கை விரிக்கின்றது.....

அவன் மனைவியை ரொம்பவும் நேசிப்பவன்... அவனும் மனைவியும் காரில் போகும் போது விபத்தில் அவன் மனைவியை இழக்கின்றான் அதிலிருந்து காரில் ஒரு துப்பாக்கி மற்றும் நிறைய பணத்தை வைத்துக்கொண்டு ,என்னை தயவு செய்து கொன்றுவிட்டு இந்த பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகின்றான்....

கேன்சர் உள்ள ஒருவன்... மரணம் அவனை துரத்திக்கொண்டு இருக்கின்றது... எந்த சேரத்திலும் அவன் இறந்து விடுவான் என்பதை அறிவிக்கும் விதமாக எப்போதும் அவன் மூக்கில் ரத்தம் எட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கும்....

அடைகளை அவிழ்த்து போட்டு வாழ்க்கை நடத்தும் தாய் அவளின் மகன் மூன்று மாதமாய் கோமாவில் இருக்கின்றான்... அவன் கண் சிமிட்ட மறந்து போய் பல மாதங்களாய் அப்படியே இருக்கின்றான்....செக்ஸ் கிளப்பில் வேலை செய்வது அவளுக்கு அறவே பிடிக்கா விட்டாலும் தன் மகன் மருத்துவ செலவுக்கும் வாழ்க்கை நடத்தவும் பணம் தேவையாய் இருக்கின்றது.... (நம்ம ஊராக இருந்தால் இந்த பொழப்புக்கு பத்து பாத்திரம் தேய்த்து உயிர்பிழைக்கலாம் என்பார்கள்... சொல்பவர்கள் யாரும் அடுத்த வீட்டில் பாத்திரம் கழுவும் அனுபவத்தை பெறாதவர்தகள்...)


ஆணாக பிறந்து பெண்ணாக மாறும் ஒருவனின் மன வலிகள்....


கணவனோடு விவகாரத்து பெற்று தனியாக வாழும் ஓட்டலில் சப்ளையர் வேலை செய்யும் பெண்மணி....

இப்படி நிறை கதாபாத்திரங்களை சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் எல்லாம் எப்படி ஒரே நேர்கோட்டில் வருகின்றார்கள் என்பதையும்... இவர்களுக்குள் என்ன சம்பந்தம் என்பதை திரைக்கதையில் எப்படி அவிழ்கின்றார் இப்படத்தின் இயக்குநர் எனபதையும்... அவர் எப்படி அவிழ்க்முற்படுகின்றார் என்பதை பவுடர் பூளு படத்தில் பாருங்கள்......

படத்தின் சுவாரஸ்யங்கள் சில.....

உணர்வுகளின் வலியையும் மிக அழகாய் சொல்ல வந்த படம் இது அதில் நிறையவே வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்பதை சொல்லத்தான் வேண்டும்....

தினமும் தன் கோமா மகனுடன் போனில் ஸ்பிக்கர் விழியே பேசுவதை வழக்கமாக கொண்டவளுக்கு போனுக்கு சில்லரை இல்லாமல் தவிக்கும் முதல் காட்சியும் அதன் பின் அந்த குழந்தைக்கு கோமா என்று காட்டும காட்சி மிகவும் அழுகு...

படத்தில் நிறைய அரை நிர்வாண காட்சிகள் உண்டு,, அதனால் குடும்பத்துடன் பார்க்கும் போது ஜாக்கிரதை...

ஒரு அப்பா வயதுடையவனுடன் அந்த விபச்சார பெண்ணுடன் பேச விரும்ப.. தன்னேடு படுக்கையை பகிர வந்தவன் என்று நினைத்து அவள் அவனுடன் பகிரும் முன் போர் பிளேயில் ஈடுபட அப்போது அவன் என் கால்களுக்கு வயதாகி விட்டது என்று சொல்ல... ஆனால் நிக்க முடியாத அளவுக்கு இன்னும் வலு விழக்கவில்லை என்று அவள் சொல்ல... எனக்கு உன்னிடம் கொஞசம் பேச வேண்டும் என்று சொல்ல... வாயால் மட்டும் பேசிக்கொண்டு இருந்தால் எனக்கு பணம் கிடைக்காது என்று சொல்லும் காட்சி மிகவும் அற்புமான காட்சி...


கிருஸ்மசுக்க தன் மகனுடன் விடுமுறையை கழிக்க வேண்டும் என்று சொல்லும் பெண்ணை பண்டிகை நாட்களில் எனது நண்பர்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை தர முடியாது என்பதை சொல்லும் போது நடக்கும்... அந்த காட்சி ரகம்...

எப்போதுதே அவிழ்த்து காட்டி பழக்கபட்டவள் அவள்.... காதலனுடன் இருக்கும் போது அவள் அவிழ்க்காமல் இருக்க அவன் உடை களைவது கவிதை... அதற்கு முன் அவர்கள் முத்தமிடும் போது பின்னனி்யில் உள்ள வால்பேப்பர்.. ஒரிஜினல் போல் லைட்டிங் அமைத்து இருப்பது அழகு....

அந்த பெண் உனது பாத்ரூம் உபயோகிக்கின்றேன் என்ற சொல்லி விட்டு அவள் போதைக்காக பவுடர் உறுஞ்ச... இங்கே இவன் உயிர் வாழ ஆஸ்துமாவுக்காக இன்ஹேலர் உறியும் காட்சி சின்க் சூப்பர்...

அதே போல் அவள் நிர்வாண நடனம் ஆடும் கிளப்புக்கு வரும் போது அவன் பார்க்கின்றான் என்றதும் தன் திறந்த மார்பகத்தை மறைத்து கொண்டு அந்த ஷோவில் இருந்து அழுது வெளியேறுவத அழகான காட்சி....

அதே போல் தன் மகன் கண் சிமிட்டினான் என்று சொல்வதை நம்பாத டாக்டரிடம் என் குழந்தை எனக்கு வேண்டும் என்று சொல்லி அதற்க்காக என் உடலை எடுத்து கொள்கின்றாயா? என்ற கேட்கும் காட்சி காலம் காலமாய் திரைபடங்களில் வைக்கும் காட்சி என்றாலும்....நம் வாழ்க்கையின் சில அடிப்படை வாழ்க்கை முறை மாறாது என்பதற்கக்கான காட்சி அது...நான் என்ன ஒரு சேஞ்சுக்கு இடது கையால் சாப்பிட்டு பார்ப்போம் என்று.. சாப்பிட்டு நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள போகின்றோமா என்ன????,


Forest Whitaker இந்த படத்தில் நடித்து இருந்தாலும் அவரே தயாரிப்பு அவதாரம் எடுத்தாலும் ... எல்லா படத்திலும் இது போல் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு வருவது எரிச்சலை கிளப்புகின்றது.....


படத்தின் கடைசி காட்சிகள் க்ளிஷே காட்சிகளாய் மனதிற்க்கு பட்டாலும் அற்புதமான காட்சிகள் அவை....

படம் முழுவதும் கதாநாயகி போட்டு கொண்டு இருக்கும் உடைஒரு பக்கம் இறக்கி கொண்டே படம் முழுவதும் வருவார்... அதுதான் எல் ஏ நகர ஸ்டைல் போல் இருக்கின்றது.... மேலே படத்தில் பாருங்கள்...


படத்தின் நாம் சந்தித்த எல்லா கேரக்டர்களுக்கும் ஒரு முடிவை இயக்குனர் வைத்து இருக்கின்றார்

படத்தின் வீடியோ....
படத்தின் குழுவினர் விபரம்....

Directed by Timothy Linh Bui
Produced by Timothy Linh Bui
Forest Whitaker
Ross M. Dinerstein
Bobby Schwartz
Tracee Stanley-Newell
Written by Timothy Linh Bui
Starring Jessica Biel
Forest Whitaker
Patrick Swayze
Ray Liotta
Eddie Redmayne
Alejandro Romero
Distributed by Speakeasy Releasing
Release date(s) May 8, 2009 (limited)
June 9, 2009 (Blu-ray/DVD)[1]
Running time 106 minutes
Country United States
Language English


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

12 comments:

 1. நல்ல பதிவு சார். இந்த படத்தை பார்க்க முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 2. படம் ரொம்ப தீயா இருக்கு

  ReplyDelete
 3. எல்லா படத்தையும் நீயே பார்த்திரு. ஆனா டிவிடி கேட்டா மட்டும் கொடுத்திராத..

  ReplyDelete
 4. babel- படம் போன்ற ஒரு தோற்றம் இருக்கு.

  சரி பார்த்துடுவோம் ...

  ReplyDelete
 5. நல்ல பதிவு சார். இந்த படத்தை பார்க்க முயற்சி செய்கிறேன்.//
  நன்றி சீ வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 6. படம் ரொம்ப தீயா இருக்கு// அதான் 18 + போட்டாசில்ல அதான் தீயா இருக்கு நன்றி ஸ்டாஜன் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும்...

  ReplyDelete
 7. எல்லா படத்தையும் நீயே பார்த்திரு. ஆனா டிவிடி கேட்டா மட்டும் கொடுத்திராத..//

  தலைவரே இந்த டிவிடியெல்லாம் ஒரு சில நண்பர் கூட்டத்துக்கிட்ட இருந்து வாங்கறது... முத டீல் கிராச் பண்ணாம ஒரே நாள்ல குடுத்துடனும் அதான்....
  நன்றி சரவணன்

  ReplyDelete
 8. babel- படம் போன்ற ஒரு தோற்றம் இருக்கு.

  சரி பார்த்துடுவோம் ..//ஜமால் பேபல் படம் போன்ற திரைக்கதைதான் மறக்காமல் பாருங்கள்...

  ReplyDelete
 9. நன்றி நாஞ்சில் நாதம்...

  ReplyDelete
 10. நன்றி ராதாகிருஷ்னன்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner