எழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்....


ஒரு எழுத்தாளனால் ஒருவனை உருப்பட வைக்க முடியுமா?
என் அம்மா அந்த காலத்து பியூசி,
கதை புத்தகங்களில் என் அம்மா என் கவனத்தை பதியவைத்தாள்....அம்மாவை தான்டிய உலகம் தன் பிள்ளைக்கு தெரிய வேண்டும்... எது நல்லது, எது கெட்டது என்று அலசி ஆராயும் பக்குவம் தன் மகனுக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசை கொண்டாள்.....

கதை படிக்கும் போது பலரது வாழ்க்கையை நெருங்கி, கதாபாத்திரங்கள் அருகில் மிக அருகில் இருந்து பார்த்து அந்த பாத்திர படைப்புகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பது போன்ற பல புத்திக்கொள்முதல்களை தன் மகனுக்கு கதை புத்தகங்கள் தரும் என்று நம்பினாள் ... அதுவே ஒரு காலகட்டத்தில் படிப்பில் நாட்டம் இல்லாமல் கதை புத்தகத்தின் மேல் கவனம் அதிகமான போது அம்மா என்னை சிறிது கடிந்தும் கொண்டால்.....

என்னை முதலில் கிரைம்கதைளே என்னை வசீகரித்தன... அதில் தவறு ஒன்றும் இல்லை அந்த திரில் அந்த வயதுக்கு போதைதான்... ஆனால் குடும்ப பொறுப்புகள் என் தோள்களில் பாத்மாசனம் போட்டு வெகு சீக்கரமாய் உட்கார்ந்த போது, வாழ்க்கை பற்றிய பயம் வந்து துக்க்ம் வராமல் தவித்த இரவுகள் கணக்கில் அடங்கா.....
அம்மா உயிரோடு இருக்கும் போதே பாலகுமாரன் எழுத்துக்கள் அறிமுகம். அதன் பிறகு அந்த எழுத்துக்கள் மீது காதல் இயல்பாய் வந்தது..

அப்பாவுக்கு கைத்தொழில் இல்லை, ஜவுளிக்கடையில் குமாஸ்தா உத்யோகம் வெகு சொற்ப மாத வருமானம், என்னை சேர்த்து 5 பிள்ளைகள், நானே பெரியவன், எனக்கு கீழே நான்கு தங்கைகள் இப்படி ஜீவிதம் போய் கொண்டு இருக்கையில், காசநோய் முற்றி அம்மா எங்களை நடுத்தெருவில் விட்டு விட்டு போனாள்.... எந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை....

என் அம்மா உயிரோடு இருந்த போதே வெற்றி பெற வேண்டும் என்று, சென்னை வந்து அந்த பயணம் தோல்வியில் முடிந்தது பழைய கதை என்றாலும் என்னை தோல்வியில் இருந்து காப்பாற்றியது பாலுகுமாரன் எழுத்துக்கள்தான்.......

அப்படி என்ன பெரிதாய் கிழித்து விட்டார் என்றால்? அவர் கதைகள்என்னை யோசிக்க வைத்தன... நான் யார் என் பிளஸ் என்ன? என் மைனஸ் என்ன? என்றும் என் பின் புலம் என்ன என்பதையும், என்னவெல்லாம் என்னால் செய்ய முடியம் என்பதையும் தனியாக உட்கார்ந்து யோசிக்க வைத்தார்.... எது எனது பக்கம் மைனசாக இருந்ததோ அதனை முயன்றவரை பிளஸ் ஆக்க இன்றுவரை முயற்ச்சிக்கின்றேன்....

மற்ற கதைகள் எல்லாம் இரவில் ஆரம்பி்த்து விடியலில் முடியும்.... பாலகுமாரன் கதைகள் மட்டும்தான் விடியலில் ஆரம்பித்து இரவில் முடியும்....வாழ்க்கை பற்றியும், வாழ்க்கை போராட்டத்தையும் பற்றியும் தன் கதைகளில் அதிகம் சொன்னவர் எனக்கு தெரிந்து அவராகத்தான் இருக்கும்...

எல்லா கதைகளிலும் ஒரு தொழில் அதன் சாதக பாதகங்கள் என்று அலசுவார் அந்த தொழிலில் உள்ள பிரச்சனைகள், அதன் தீர்வுகளை கதாபாத்திரங்கள் உடன் சொல்லுவார்....

அவருடைய பல கதைகள் எனக்கு பிடித்தாலும் குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் பயணிகள் கவனிக்கவும்,உள்ளம் கவர் கள்வன், இரும்பு குதிரைகள்,மெர்க்குரி பூக்கள்,தாயுமானவன், சிநேகமுள்ள சி்ங்கம்,பந்தைய புறா, கடலோர குருவிகள், இனி இரவு எழுந்திரு, வெற்றிலைக்கொடி, தலையனை மந்திரம், போன்றவைகளை சொல்லலாம்

என் பத்து வருட காதலை அவசரபடுத்தாமல், சொதப்பாமல் இருக்க ஒரே காரணம் அவர் எழுதிய உள்ளம் கவர் கள்வன்தான்...நான் காதலில் ஜெயித்தது அதனால்தான்...அவர் படைப்புகள் பலது இருந்தாலும் என் ஆல்டைம் பேவரிட் பயணிகள் கவனிக்கவும்தான், எப்போது வேண்டமானாலும் அந்த கதையை வாசிப்பேன்... மதன் முதலாக சென்னை வந்த போது மீனம்பாக்கம் ஏர்போர்ட்டையும், அதன் குடியிருப்பு பகுதிகளையும் ஆர்வமாய் பார்த்தவன் நான்....சரி அது பற்றி தனியே ஒரு பதிவை போடலாம்...


சோம்பி திரியாமல், பல உயரத்துக்கு போக வேண்டும் என்று வாழ கற்றுக்கொடுத்தவர்... எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்று தன் எழுத்துக்களில் ஊக்கபடுத்தியவர்.... எந்த வேலை செய்தாலும் த பெஸ்ட் என்று செய்ய வேண்டம் என தன் எழுத்துக்களில் போதித்தவர்...அவர் எழுத்துக்களை நான் பொதுவாய் எனக்கு எற்பட்ட அனுபவமாக எடுத்துக்கொண்டவைதான் அதிகம்.... வாழ்க்கை போராட்டத்துக்கு எந்த வயதிலும் தயாராக இருக்க வேண்டும் என்று தன் எழுத்து மூலம் சொல்லிக்கொடுத்தவர்....


அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் ஊரில் இருந்து மஞசள் பை எடுத்துக்கொண்டு மயிலாபூரில் அலையும் நபர் நான் அல்ல.... இருப்பினும் அவரை சந்தித்தேன்.... 1995ல் நான் சென்னை மெரினா பீச் காந்தி சிலை பின்புறம் உள்ள சாகர் விகார் ரெஸ்ட்டாரண்டில் டீ ஊற்றிக்கொடுப்பவனாக வேலை செய்த போது, அப்போது ஷங்கர் ஜென்டில்மேன் முடிந்து காதலன் படத்தினை ஆரம்பிக்க இருந்த நேரம் அப்போது அந்த ஹோட்டலுக்கு பாவ் பஜ்ஜி சாப்பிட வந்தார்கள் அப்போது அவர்களை இருவரையும் அருகில் இருந்து பார்த்து இருக்கி்றேன்.. அப்போதுபாலகுமாரனிடம் உங்கள் கதைகள் எனக்கு பிடிக்கும் என்று ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டேன்... அதுதான் என் கேரக்டர்.... அவரும் நன்றி என்றார்...

சென்னையில் பிளாட்பாராத்தில் தூங்கி, சைக்கிளில் சந்து பொந்துகளில் அலைந்து, இப்போது பைக்கில் சுற்றவும், பத்தாவது படித்த நான் ஒரு கல்லூரியில் வகுப்பெடுக்கும் அளவுக்கு என்னை மென் மேலும் உயர வைத்ததற்க்கு பாலகுமாரன் எழுத்துக்கள்தான் காரணம்....

ஆனால் ஒன்று அப்படி தொடர்ந்து பல வருடம் தீவிர வாசகனாய் பாலகுமாரன் வாசித்த நான், ஆன்மீகம் பக்கம் போனதில் இருந்து அவர் எழுத்துக்களை வாசிப்பது குறைந்து போனது....இருப்பினும் அவர் எழுதிய பல கதைகள்தான்,என் வாழ்க்கையை ஓரளவுக்கு தெளிவாக சிந்திக்க உதவுகின்றன... இப்போதும் அவரின் பல சமுக கதைகளை திரும்பவும் வாசிக்கின்றேன்....

அவருடைய கற்றுக்கொண்டால் குற்றமில்லை புத்தகம் தமிழக இளைஞர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும்.... இருப்பினும் அவரின் பல கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை... ஒரு மனிதன் எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை...ஒரு எழுத்தாளன் எழுதும் அத்தனை எழுத்துக்களையும் கண்முடித்தனமாக நம்ப வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை... அவர் ஒரு மனிதர்.அவ்வளவே...அவர் எனக்கு நல்லவைகளை கற்றுக்கொடுத்தார்.... அதற்க்கான நன்றி தெரிவித்தலே இந்த பதிவு....

இந்த பதிவின் மூலம் பாலகுமாரனுக்கு நன்றி சொல்லி இருக்கின்றேன்...அப்படி பாலகுமாரன் உங்களையும் பாதித்து இருந்தால் பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்..

என் வளர்ச்சிக்கு பின்புலமாய் இருந்த, இப்போதும் இருந்துக்கொண்டு இருக்கின்ற எழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

50 comments:

  1. பாலகுமாரன் புத்தகங்கள் நிறைய படித்ததில்லை. பதிவு நல்லா இருக்கு. குறிப்பிட்ட புத்தகங்களை படிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  2. அன்பின் ஜாக்கி,
    இந்த பதிவு ஏதோ நானே எழுதியது போல தோன்றியது. You have just written my thoughts about Balakumaran.
    +2 சமயத்தில் அமெச்சூர் ஆன்மீக அறிவில் சோம்பேறியாக திரிந்த என்னை ஓரளவுக்கு நேர்வழியில் விட்டது பாலகுமாரன். அதன் பலன் இன்று வரை என் வாழ்வில் தெரிகிறது. நானும் க்ரைம் நாவலில் இருந்து இவர்க்கு வந்தவர் தான்.
    பாலகுமாரன் நாவல்களை சிலாகிப்பவர்கள் அவரது கடலோர குருவிகளை ஏனோ விட்டு விடுவார்கள், அல்லது படித்திர்க்க மாட்டார்கள். என்னை பொறுத்தவரை அது ஒரு ஜெம். His most underrated novel. கட்டுகடங்காத வெறி, வேட்கையுடன் எழுதிய இரும்பு குதிரைகள் வகையாரா ஒரு extreme , இப்பொழுது எழுதும் core ஆன்மீக நாவல்கள் ஒரு extreme என்றால், கடலோர குருவிகள் மிகச்சரியாக இவ்விரண்டும் இணையும் புள்ளியில் எழுதப்பட்டது. டைரக்டர் சங்கர் தனது டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் அதன் கடைசி 5 பக்கங்களை ஒட்டி வைத்து கொண்டதாக சொன்ன நாவல்.
    கடைசியாக, நானும் ஏனோ லேட் 90-இசில் ஆன்மீகத்துக்கும் முக்கியமாக ஆவி, life after death, கூடு விட்டு கூடு பாய்வது டைப் எழுத்துக்களை படிப்பதை குறைத்து கொண்டு விட்டேன். பொட்டி கடைகளில் scan செய்வேன் அவர் நாவல்களை. சமூக டயலாக் மாதிரி தெரிந்தால் மட்டுமே வாங்க ஆரம்பித்தேன்.
    And, நானும் அவரை எழுது சித்தர், நீரே கடவுள் என்ற ரேஞ்சுக்கு கொண்டாடுவதில்லை. என்னை மிகவும் பாதித்த மனிதர் என்றே அவரை பார்க்கிறேன்.

    மறுபடி, இந்த இடுகைக்கு நன்றிகள் பல. You made my day.

    ReplyDelete
  3. Appppppppppaaa.....I am much scared initially....Actullay...my frequency will match most of your feelings...When I started to read this post...I thought...how come this guy deviating from me?...after reading இருப்பினும் அவரின் பல கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை I felt comfortable.....I like sujatha's writing more than BK....Sujitha's writing make me to think scientific...and make me to think logically...also since childhood I don't like to involve in family issues.... think I am writing toooo much.....

    The way you are sharing about your past and bad times increase my respect on you.....

    Great!

    ReplyDelete
  4. //சென்னையில் பிளாட்பாராத்தில் தூங்கி, சைக்கிளில் சந்து பொந்துகளில் அலைந்து, இப்போது பைக்கில் சுற்றவும், பத்தாவது படித்த நான் ஒரு கல்லூரியில் வகுப்பெடுக்கும் அளவுக்கு என்னை மென் மேலும் உயர வைத்ததற்க்கு பாலகுமாரன் எழுத்துக்கள்தான் காரணம்....//

    வாழ்க்கைப்போராட்டத்தில் வென்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பாலகுமாரன் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  5. திரு. பாலகுமாரன் எழுத்து பற்றி நீங்கள் சொல்லிய பல கருத்துக்கள் நானும் என் நண்பர்களிடம் முன்பே கூறியிருக்கிறேன். அதேவேளை நிச்சயமாக பல விஷயங்களை திரு. பாலகுமாரன் அவர்களின் புத்தகங்களின் வாயிலாக தெளிந்திருக்கிறேன். உங்களோடு இணைந்து நானும் எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். நல்ல பதிவிற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  6. பதிவு மிக அருமை.
    நடராஜ் சொல்வது முற்றிலும் உண்மை. நானும் இந்த பதிவு நானே எழுதியது போல்உணர்ந்தேன்.

    என் வாழ்க்கையையும், என் சிந்தனை போக்கும் கூட பாலகுமாரன் பெருமளவு மாற்றி உள்ளார். நானும் வாழ் நாள் முழுதும் நன்றி கடன் பட்டுளேன் பால குமாரனுக்கு.

    என் விடலை மற்றும் வாலிப பருவத்தில் அவரது நாவல்கள், கட்டுரைகள், கேள்வி பதில்கள் நிறைய படித்து உள்ளேன்.

    எனக்கு தமிழ் மீது ஆர்வமா வரவும் பால குமாரன் முக்கிய காரணம்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வணக்கம் ஜக்கிஷேகர்
    //, ஆன்மீகம் பக்கம் போனதில் இருந்து அவர் எழுத்துக்களை வாசிப்பது குறைந்து போனது....இருப்பினும் அவர் எழுதிய பல கதைகள்தான்,என் வாழ்க்கையை ஓரளவுக்கு தெளிவாக சிந்திக்க உதவுகின்றன... இப்போதும் அவரின் பல சமுக கதைகளை திரும்பவும் வாசிக்கின்றேன்....//

    எனது கருத்தும் இதுதான். அவரது கதைகளில் எனக்கு அதிகம் பிடித்த கதைகளில் சிநேகமுள்ள சிங்கம், தாயுமானவனும் அடங்கும். கடலோரக் குருவிகள் கதையில் - கடைசி நான் நினைக்கின்றேன் 34ம் அத்தியாயம் - அவர் சொல்லும் உபதேசமாம் நற்புதமாக இருக்கும்.

    பல சந்தர்ப்பங்களில் அவருடன் தொலைபெசியில் கதைத்திருக்கின்றேன். மிகப்பெரிய போராட்டங்களை வாழ்வில் எதிர்நோக்கி இருந்த அவருடனான பேச்சுகள் எனக்கு நிறாஇய ஆதரவாக இருந்தன. அவர் பற்றி நானும் இரண்டு பதிவுகள் எழுதினேன். நேரம் கிடைக்கும் போது வாசித்து கருத்துகளை சொல்லுங்கள்

    http://solvathellamunmai.blogspot.com/2006/10/blog-post_14.html


    http://solvathellamunmai.blogspot.com/2008/10/blog-post.html

    ReplyDelete
  8. பாலகுமாரன் எழுத்துக்கள் என்னை எழுத்தின் மீது தீராக்காதல் கொள்ளச் செய்ததென்றால் மிகையில்லை.எந்த தொழிலை பற்றி நாவலில் எழுதினாலும்
    அதில் thesis செய்து எழுதுபவர்.
    அந்த துறை வல்லுனர் பல விஷயம் கற்றுக் கொள்ளக்கூடும்
    காமத்தை அவ்வளவு அழகாய் கையாண்டிருப்பார்.
    அவரின் கணவன் மனைவி கூடல்களின் வர்ணனைகலுக்கேன்றே படிக்க ஆரம்பித்தவன்.அவரின் சமூக நாவல்களை படிக்க,
    ஒருவன் வாழ்வில் கல்வியின்றி கூட உயரமுடியும் என்பதை புரிந்தேன்.
    அவரின் திருப்பூந்துருத்தி.
    இரும்புக்குதிரைகள்
    உள்ளம் கவர கள்வன்
    மெர்குரிப் பூக்கள்
    கற்றுக் கொண்டால் குற்றமில்லை
    இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா?..
    அப்பம் வடை தயிர்சாதம்
    உடையார்
    என்று என் வாழ்கையையே திசை மாற்றிய எழுத்துக்கள்
    எனக்கு பயங்கரமாக திக்கு வாய் இருந்தது
    அன்னாரை 12 வருடம் முன்பு ஒரு அலுவலக லிபிடில் வைத்து பார்க்கையில்
    வணக்கம் சொல்ல.
    அவர் உன் பெயர் என்ன ?என்று கேட்கையில்.
    பெயர் சொல்ல வாய் வரவில்லை ....
    அவர்நிதானமாக ஹயக்ரீவ மந்திரத்தை சொல்லி வர சொன்னார்.

    மேலும் எதிராளியின் மேல் உனக்கு மரியாதை இருக்கலாம்,
    பயம் இருத்தல் கூடாது
    பயத்தை விடு.உனக்கு பேச்சு சீராகும்.
    என்றார், உண்மையிலேயே பலனளித்த யோசனை.

    அவர் 2000 ஆண்டுக்கு பின் தீவிரமாக ஆன்மிகம் எழுத ஆரம்பிக்க.
    நான் ஒழுங்கில்லாததால், பல விஷயங்கள் மண்டையில் ஏறாததால்,அறிவுரைகள் கசந்ததால் பின் தொடர முடியவில்லை.
    நான் அவரின் எல்லா படைப்புகளையும் படிக்க முடியவில்லை.

    ஒரு சில அருமையான தொகுப்புகள் வைத்துள்ளேன்.
    ஒரு ஏகலைவனை போல நானும் அவருக்கு கடன் பட்டவன் தான்.


    voted in tamilish/tamilmanam aswell

    ReplyDelete
  9. வணக்கம் ஜாக்கி,
    பாலகுமாரன், எழுத்தாளர்கள், என் வாழ்வ்வை மாற்றமுடியும் என்பதை உணரவைத்தவர், வாழ்க்கையில் நிஜ மனிதர்களை புரியவைத்தவர்,
    நம்மை நாமே உணர வேண்டும் என்பதை புரியவைத்தவர்,

    நானும் வாழ் நாள் முழுதும் நன்றி கடன் பட்டுளேன் பால குமாரனுக்கு
    அவருடைய “ பெண்ணாசை” வரலாறு மற்றும் ஆன்மீகம் சம்மந்த பட்ட்து,

    ஆன்மீகத்தையும் வேறு கோணத்தில் விளங்கவைப்பவர்
    நான் யார் என் பிளஸ் என்ன? என் மைனஸ் என்ன? என்றும் என் பின் புலம் என்ன என்பதையும், என்னவெல்லாம் என்னால் செய்ய முடியம் என்பதையும் தனியாக உட்கார்ந்து யோசிக்க வைத்தார்....

    ”மற்ற கதைகள் எல்லாம் இரவில் ஆரம்பி்த்து விடியலில் முடியும்.... பாலகுமாரன் கதைகள் மட்டும்தான் விடியலில் ஆரம்பித்து இரவில் முடியும்....வாழ்க்கை பற்றியும், வாழ்க்கை போராட்டத்தையும் பற்றியும் தன் கதைகளில் அதிகம் சொன்னவர் எனக்கு தெரிந்து அவராகத்தான் இருக்கும்...”
    சரியான மேற்கோள்


    என் எட்டு வருட காதலை அவசரபடுத்தாமல், பெற்றொர் சம்மத்த்துடன் வெற்றி பெற வைத்தவர்
    நிஜமாக சொல்கிரேன், நானும் இந்த பதிவு நானே எழுதியது போல்உணர்ந்தேன்.
    உங்களோடு இணைந்து நானும் எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்

    1000 நன்றிகள் ஜாக்கி

    ReplyDelete
  10. பாலகுமாரனை பத்தி நிரய சொன்னீங,ஆனா "முன் கதை சுருக்கம் " பத்தி சொல்லாம விட்டுஹு .அதுல சிக்கன் பிரியானில சிக்கன எடுத்துட்டு பசியில அவரு இருந்த நிலமயில அவரு சொல்லுவாரு பாரு,
    ணோ சாண்ஸ்!!!!!!!!!!!!!

    MANIAATTI.BLOGSPOT.COM

    ReplyDelete
  11. பார்ப்பான் பாலகுமாரன் ஆவனி அவிடதிர்க்கு பூனூல் மாத்தினானா? ரெண்டு பொண்டாடிகாரன்,பெண் விடுதலையை பேசுகிரான்.தமிழானீ யோசி!

    ReplyDelete
  12. பார்ப்பான் பாலகுமாரன் ஆவனி அவிடதிர்க்கு பூனூல் மாத்தினானா? ரெண்டு பொண்டாடிகாரன்,பெண் விடுதலையை பேசுகிரான்.தமிழானீ யோசி!

    ReplyDelete
  13. அனைத்தும் உண்மை ஜாக்கி. முழுமையாய் உடன்படுகிறேன் உங்களின் கருத்துக்களோடு.

    ReplyDelete
  14. ஆன்மீகத்தை அனுபவமாக உணர்ந்ததை அவருடைய பாணியில் எழுத்தாக்கி இருப்பார். அவரது சமூக நாவல்களை விட சரித்திர, ஆன்மீக நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  15. பாலகுமாரனின் -கிட்டத்தட்ட - அத்தனை எழுத்துக்களையும் படித்திருக்கிறேன் நான்.
    அற்புதமான எழுத்தாளர் தான் - சந்தேகமே இல்லை !

    ஆனால் - அளவிற்கு மீறிய தற்பெருமையும், சுயபுராணமும் சமயத்தில் எரிச்சலை உண்டு பண்ணுகின்றன.

    அதே போல் தாயின் மீது அவர் வைத்திருக்கும் பற்று நியாயமாக தெரிந்தாலும் - உலகு அறிய தந்தையை பழிக்கும் அவர் போக்கு எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல.

    அதே போலதான் பெண்கள் பற்றி இவ்வளவு எழுதும் அவர் -இரண்டு பெண்களை திருமணம் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்வதே இல்லை. தன்னை உதாரணம் காட்டி ஊருக்கு உபதேசம் செய்பவர் உண்மையில் தானும் உதாரண புருஷனாக இருக்க வேண்டும் அல்லவா ?
    அல்லது கவிஞர் கண்ணதாசனை போல தான் செய்த தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் துணிச்சலும் பக்குவமும் வேண்டும் !

    என்ன நண்பரே - நான் சொல்வதில் தவறு இருக்கிறதா ?

    -vimarisanam.Wordpress.com

    ReplyDelete
  16. நல்ல இடுகை.பாலகுமாரனின் "பச்சை வயல் மனது" எனக்கு மிகவும் பிடித்த கதை.அது தான் அவர் எழுத்தின் உட்சம் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  17. "பச்சை வயல் மனது" குறு நாவல் (விகடனின் பொங்கல் இணைப்பு தேதி 14.1.1984) அவரது master piece!
    அதைக் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்களே சேகர்?

    ReplyDelete
  18. சில எழுத்தாளர்களின் சிலவரிகள் மனசுலே அப்படியே பதிஞ்சுருது. அப்படிப் பதிந்த ஒன்று பலகுமாரனோடது.

    "மனிதன் கண்டுபிடித்த ஆயுதங்களில் ரொம்ப மோசமானது வார்த்தை" ( இப்படிப் பொருள் வரும். சரியான வரி நினைவில் இல்லை.

    வள்ளுவரும் 'நாவினால் சுட்ட வடு'ன்னு இதைத்தானே சொல்றார்!

    போனமாதம் ஒருநாள் பாலகுமாரனைப் பார்த்தேன். இடம் வெங்கடநாராயணாச் சாலை திருப்பதி தேவஸ்தான கோவில். ஒன்னும் பேசலை.

    கடலோரக்குருவியைத் தேடப்போகிறேன்.

    புருஷவதம் கிடைத்தது.

    நல்ல இடுகை ஜாக்கி.

    மேன்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கின்றேன்.

    ReplyDelete
  19. பாலகுமாரன் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
    ஒரு காலத்தில் பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களின் தீவிர இரசிகனாக இருந்திருக்கிறேன். அவரை நேரில் சந்திக்கத் துடித்துக்கொண்டிருந்தேன். அதிர்ஷ்ட வசமாகவும் எதிர்பாராத விதமாகவும் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் வித்தியாசமாகவும் மறக்க முடியாததாகவும் இருந்தது.

    ReplyDelete
  20. Very good post. I used to like his novels a lot when I was in high school and during my undergrad years. I do respect him as a good writer. I did loose my interest when he start focusing more on the movies and religious deliveries.

    Congratulations for making your mark in the world.

    ReplyDelete
  21. பின்னிட்டீங்க பாஸ்... எல்லாரும், பிரிச்சி மேஞ்சிட்டாங்க.. இனி நான் என்ன சொல்ல?

    ReplyDelete
  22. வாழ்க்கையில் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  23. பாலகுமாரன் அவரது எல்லா வாசகர்களையும் பாதித்திருக்கிறார் என்று தெரிகிறது...என்னையும் சேர்த்து!
    என்னுடைய எல்லா பேச்சுக்களிலும் அவரது நாவல் வார்த்தைகள் ஏதாவது உதாரணமாக வந்துவிழும். !

    நீங்க சினிமால இருப்பதால் சொல்கிறேன்.
    அவரது கல்லூரிப்பூக்கள் படித்துவிடுங்கள்! (இதுவரை படிக்காவிடில்)

    மிகவும் அற்புதமாகப்பதிவிட்டிருக்கிறீர்கள்.

    நிறைவான நட்சத்திரப்பதிவு ...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. Parimala said...

    பார்ப்பான் பாலகுமாரன் ஆவனி அவிடதிர்க்கு பூனூல் மாத்தினானா? ரெண்டு பொண்டாடிகாரன்,பெண் விடுதலையை பேசுகிரான்.தமிழானீ யோசி!
    டேய் பரிமளா
    நீ பரி மலம் என்று பேரை மாத்திக்கொடா.
    பாப்பானை பத்தி பேசும் முன் நீ என்ன ஜாதின்னு சொல்லிட்டு திட்டினா
    நான் திருப்பி திட்ட வசதியாயிருக்கும்..

    நீ உன் மூலையில் மலம் வைச்சிருக்கேன்னு எனக்கு தெரியும்
    அதை முதலில் வெளியேற்று....

    ஜாதிகள் இல்லைடா பிணமே..
    குல தாழ்ச்சி எழுச்சி சொல்லல் பாவம்.

    உன்னை பாக்க உன் தளம் போனால் அந்த கக்கூசு பூட்டி கிடக்கு..

    திருந்துடா...

    ReplyDelete
  25. சாரே...

    ரொம்ப பிரமாதமா எழுதறீங்க...

    பாலகுமாரனை ஒரு முறை திண்டுக்கல்லில் படிக்கையில் ஒரு விழாவில் சந்தித்தேன். நல்ல எழுத்தாளர்.

    இப்போதெல்லாம் படிப்பதில்லை.

    பகிர்வுக்கு நன்றி...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  26. பாலகுமாரன் புத்தகங்கள் நிறைய படித்ததில்லை. பதிவு நல்லா இருக்கு. குறிப்பிட்ட புத்தகங்களை படிக்க முயற்சிக்கிறேன்//

    வாசித்து பாருங்கள் சிவா முக்கியமாக பயனிகள் கவனிக்கவும் படித்து பார்க்கவும்

    ReplyDelete
  27. And, நானும் அவரை எழுது சித்தர், நீரே கடவுள் என்ற ரேஞ்சுக்கு கொண்டாடுவதில்லை. என்னை மிகவும் பாதித்த மனிதர் என்றே அவரை பார்க்கிறேன்.

    மறுபடி, இந்த இடுகைக்கு நன்றிகள் பல. You made my day.//

    நன்றி நடராஜன் இப்படீ கூட விரிவாய் பின்னுட்டம் இட முடியுமா? அதுவும்You made my day சூப்பர்

    ReplyDelete
  28. The way you are sharing about your past and bad times increase my respect on you.....

    Great!//
    நன்றி ராஜ்குமார் உங்கள் உணர்ச்சி பிரவாகமான பின்னுட்டத்திற்க்கு மிக்க நன்றி

    ReplyDelete
  29. //சென்னையில் பிளாட்பாராத்தில் தூங்கி, சைக்கிளில் சந்து பொந்துகளில் அலைந்து, இப்போது பைக்கில் சுற்றவும், பத்தாவது படித்த நான் ஒரு கல்லூரியில் வகுப்பெடுக்கும் அளவுக்கு என்னை மென் மேலும் உயர வைத்ததற்க்கு பாலகுமாரன் எழுத்துக்கள்தான் காரணம்....//

    வாழ்க்கைப்போராட்டத்தில் வென்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பாலகுமாரன் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்.
    நன்றி துபாய் ராஜா தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  30. திரு. பாலகுமாரன் எழுத்து பற்றி நீங்கள் சொல்லிய பல கருத்துக்கள் நானும் என் நண்பர்களிடம் முன்பே கூறியிருக்கிறேன். அதேவேளை நிச்சயமாக பல விஷயங்களை திரு. பாலகுமாரன் அவர்களின் புத்தகங்களின் வாயிலாக தெளிந்திருக்கிறேன். உங்களோடு இணைந்து நானும் எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். நல்ல பதிவிற்கும் நன்றி//

    நன்றி அன்வர் என்னோடு இனைந்து நன்றி சொல்லியமைக்கு

    ReplyDelete
  31. என் வாழ்க்கையையும், என் சிந்தனை போக்கும் கூட பாலகுமாரன் பெருமளவு மாற்றி உள்ளார். நானும் வாழ் நாள் முழுதும் நன்றி கடன் பட்டுளேன் பால குமாரனுக்கு.

    என் விடலை மற்றும் வாலிப பருவத்தில் அவரது நாவல்கள், கட்டுரைகள், கேள்வி பதில்கள் நிறைய படித்து உள்ளேன்.

    எனக்கு தமிழ் மீது ஆர்வமா வரவும் பால குமாரன் முக்கிய காரணம்.

    வாழ்த்துக்கள்--//

    நன்றி ராம் ஜி நான்தான் அப்படி என்று நினைத்து இருந்தேன் வெளிபடுத்தும் போதுதான் தெரிகின்றது என்னை போல நிறைய பேர் என்று...

    ReplyDelete
  32. பல சந்தர்ப்பங்களில் அவருடன் தொலைபெசியில் கதைத்திருக்கின்றேன். மிகப்பெரிய போராட்டங்களை வாழ்வில் எதிர்நோக்கி இருந்த அவருடனான பேச்சுகள் எனக்கு நிறாஇய ஆதரவாக இருந்தன. அவர் பற்றி நானும் இரண்டு பதிவுகள் எழுதினேன். நேரம் கிடைக்கும் போது வாசித்து கருத்துகளை சொல்லுங்கள்//

    நன்றிஅருன்மொழி வர்மன் உங்கள் கருத்தில் முழுவதம் உடன்படுகின்றேன்... உங்கள் பதிவை நாளை வாசிக்கின்றேன்

    ReplyDelete
  33. அவர் 2000 ஆண்டுக்கு பின் தீவிரமாக ஆன்மிகம் எழுத ஆரம்பிக்க.
    நான் ஒழுங்கில்லாததால், பல விஷயங்கள் மண்டையில் ஏறாததால்,அறிவுரைகள் கசந்ததால் பின் தொடர முடியவில்லை.
    நான் அவரின் எல்லா படைப்புகளையும் படிக்க முடியவில்லை.

    ஒரு சில அருமையான தொகுப்புகள் வைத்துள்ளேன்.
    ஒரு ஏகலைவனை போல நானும் அவருக்கு கடன் பட்டவன் தான்.
    ///

    இங்கேயும் அதே தான் ... கார்த்தி நீ பின்னுட்டம் இடுவாய் என்று பதிவு எழுதும் போதே எனக்கு தெரியும்...பதிவு எழுதும் போது உன் முகம் நினைவுக்கு வந்தது

    ReplyDelete
  34. ன் எட்டு வருட காதலை அவசரபடுத்தாமல், பெற்றொர் சம்மத்த்துடன் வெற்றி பெற வைத்தவர்
    நிஜமாக சொல்கிரேன், நானும் இந்த பதிவு நானே எழுதியது போல்உணர்ந்தேன்.
    உங்களோடு இணைந்து நானும் எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்

    1000 நன்றிகள் ஜாக்கி//
    ஆயிரம் நன்றினளை சமர்பித்த வெட்டி பயலுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  35. வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்ற உங்கள் அனுபவம் பலருக்கு நல்வழிப் பாதைக் காட்டிக் கொண்டிருக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. உங்கள் போராட்டம், வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் எனும் இலட்சிய உணர்வு எல்லாம் உங்கள் முயற்சியின் வெற்றி. அந்த முயற்சியின், தன்னம்பிக்கையின் வெற்றியை சர்வ சாதாரணமாக ஒரு எழுத்தாளனை கெளரவித்த விதம் உங்கள் தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

    ஒரு எழுத்து தனிமனிதனை நிச்சயம் பாதிக்கும், அதற்கு எழுத்துக்கள் பல உதாரணம் காட்டலாம், ஆனால் தனிமனிதனின் வெற்றி அவனது அடங்கா முயற்சியில் மட்டுமே இருக்கிறது. இன்ஸ்பிரேஷன் ஒரு முறை வாசித்தால் வந்துவிடுவதில்லை, இன்ஸ்பிரேஷன் உள்ளே உலுக்கிக் கொண்டே இருக்கும். உங்கள் தன்னடக்கம் கண்டு போற்றுகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  36. ஜாக்கி "நெல்லுக்கு இரைத்த நீர்" என் வாழ்கையை மாற்றிய சிறுகதை ஏதோ ஒரு நாவலின் இணைப்பாக வந்தது, பாலகுமாரனின் பல மாஸ்டர் பீஸில் ஒன்று.

    பாலா பிறந்ததற்கு இந்த மக்களளுக்கு நிச்சயம் ஏதோ செய்து விட்டார் என்பது மட்டும் உண்மை. நீங்களும் என்னை போல் ஒருவர் என்பதை ninaithu magishchiyaga இருக்கிறது.
    pathivukku நன்றி

    ReplyDelete
  37. அன்புள்ள ஜாக்கி, உங்களை கொஞ்ச நாட்களாக வாசித்து வருகிறேன். நானும் ஒரு பாலகுமாரன் வாசகன் தான். ஓரு நீண்ட பேருந்து பிரயாணத்தில் ஒரே மூச்சில் நான் வாசித்த நாவல் "பயணிகள் கவனிக்கவும்". படித்து முடித்தவுடன், ஒரு சினிமாவுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இருந்ததாக உணர்ந்தேன். இது நடந்தது ஒரு 10 வருடங்களுக்கு முன்பு. இப்போது உங்கள் பதிவைப் படித்தபிறகு, மீண்டும் அந்த நாவலை படிக்கவேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. ஆனால் தற்போது படித்தாலும் ஒரு திரைப்படத்திற்கு உண்டான அம்சங்கள் அதில் இருப்பதாக உணர்வேனா என்று தெரியவில்லை. உங்களுடைய கருத்து என்ன?

    என்னுடைய பால்ய சினேகிதன் ஒருவன் உங்களைப் போலவே காமிரா காதல் உள்ளவன். தற்போது ஊரில் Photo Studio வைத்திருக்கிறான். 10 வது வரை மட்டுமே படித்திருந்தாலும் அவனுடைய தேடல்கள் மிக விசாலமானது. அவனும் உங்களைப் போலவே ஜாக்கி இரசிகன். அதனாலோ என்னவோ உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

    மேலும் திரு.பாலகுமாரனைப் பற்றிய உங்கள் கருத்துகளை, என் போன்ற அவரின் எண்ணற்ற வாசகர்களின் குரலாகவே பார்க்கிறேன். நீங்கள் மென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. exactly what i experienced is written by you.thanks to Balakumaran and wish u all the best

    ReplyDelete
  39. சேகர், என்னையும் புடம் போட்ட வரிகள் பாலகுமாரனின் 'கடலோர குருவிகள்', அதில் வரும் இரண்டு அத்தியாயங்கள் தான், 'அவர்களுக்கு அந்தக் காவிரிக் கரையோரம்' பாடம் நடத்தத் துவங்கினேன் என்று வரும் . . . நான் வெளிநாட்டில் இருப்பதால் அதனை படிக்கும் வாய்ப்பில்லை . . . தங்களிடம் இருந்தால் தயவு செய்து ஸ்கேன் செய்து தங்கள் வலைப்பதிவில் பதிக்கவும் . . . அனைவரும் பயன் பெற வேண்டி . . .
    நன்றியுடன்

    ReplyDelete
  40. எல்லோரும் சொல்வது போல் இந்தப் பதிவு, நான் பாலகுமாரனைப் பற்றி கொண்டிருக்கும் கருத்தினையை சொல்லுகிறது. இதிலிருக்கும் அத்தனை வார்த்தைகளும் எனக்கு சம்மதம். அவர் நம் வாழ்க்கையில் ஏற்படுத்திருக்கும் தாக்கம் அத்தனையும் நிஜம்.

    என் தனிமனித கட்டமைப்பில் அவர் ஒருவகையில் குரு. மற்றவர்கள் சுஜாதாவும், ஓஷோவும்.

    நன்றி ஜாக்கி..இந்தப்பதிவின் மூலம் உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  41. Dear Sir,

    Am sivakumar and working in one IT Company.
    Yennakum Bala Sir na romba pidikum but avar books enga kidaikum eppadi start pandrathu, yentha book first padikarathu nu thariyala and yenakum mind peasure niraiya eruku and can u guide me sir pls...

    ReplyDelete
  42. இந்த பதிவை படித்ததும் பாலகுமாரனின் எழுத்துக்களை படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. நான் இதுவரை படித்ததில்லை.
    நீங்கள் எந்தெந்த புத்தகங்கள் படித்தீர்கள் என்று குறிப்பிட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  43. முதல் முறையாக உங்களுக்கு கருத்துரை இடுகிறேன்.......

    பாலா எனக்கும் குரு........! சமூகம் ஆன்மீகம் பற்றிய தெளிவுகளைக் கொடுத்தவர். கட்டுரை வாசிக்கும் போது மிக சந்தோசமாக இருந்தது. நன்றிகள்!

    ReplyDelete
  44. உங்களோட வெற்றிக்கு நீங்க மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  45. வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினார் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவர் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். ஒரு உணர்வு ரீதியான மாற்றங்களைக் கொடுக்கும் என்று சொல்லலாம். அவரின் எல்லா புத்தகங்களும் படிக்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. ஜெ.மோ அவரை வணிக எழுத்தாளர் என்று எழுதியபோது நான் எழுதிய எதிர் வினை இங்கே:

    http://www.virutcham.com/tag/பாலகுமாரன்


    உங்கள் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் உங்கள் உழைப்பை சொல்லுகிறது. மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. அவரது புத்தகங்களை அதிகம் நான் வாசித்ததில்லை. வாசிக்கத் தூண்டுகிறது அவரது எழுத்தின் மீதான உங்களின் காதல். அவைக்குறிப்பு வார்த்தைகளை மட்டுமே கொண்டு எழுதிய இந்த கட்டுரையும் பிடித்திருக்கிறது. :-)

    ReplyDelete
  47. I like WRITTER BALAKUMARAN .... BUt his writting his not giving much intrest when he is writing about AANMEEGAM related subject. .

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner