என்னை பற்றி ஒரு சிறு அறிமுகமும், நன்றிகளும்....

தமிழ்மணம் நட்சத்திர பதிவராக என்னை தேர்ந்து எடுத்து இருக்கின்றது,என்னை பற்றி தெரியாதவர்களுக்கு ,
என்னை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்....

பெயர்... ஜாக்கிசேகர்.... இயற்பெயர்/வ. தனசேகரன் ...வயது 34
தொழில்..கேமராமேன்,போட்டோகிராபர்...
கடந்த 4 வருடங்களாக சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா, விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு “வீடியோகிராபி டெக்னிக்ல் இன்ஸ்டெக்டராக” பணி புரிந்தேன்... தற்போது பெரிய திரையில் கேமராமேன் ஆக முயற்ச்சி செய்து கொண்டு இருக்கின்றேன். எனக்கு சினிமா மீதான காதல் சிறு வயது முதலே. அதில் மிகப்பெரிய கேமராமேனாக , சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். பெரிய அளவிலான இலக்கிய வாசிப்புகள் கிடையாது.... சமுககோபங்களை எனக்கு என் அம்மா ஊட்டி வளர்த்தால்...சில மாதங்களுக்கு முன்தான் எனக்கு திருமணம் நடந்தது.. வசிப்பிடம் சென்னை. எனக்கு சொந்த ஊர் கடலூர்...இப்போது மதுரை காமராஜர் தொலைதூரக்கல்வி அஞ்சல் வழி மூலம் எம் ஏ மாஸ் கம்யூனிக்கேஷன் ஜெர்னலிசம் கடைசி வருடம் படித்து வருகின்றேன்....

நன்றிகள்....

கம்யூட்டரில் தமிழ் எழுத்துக்கள் எழுதி அதனை படிக்க முடியும் என்பதே எனக்கு சில வருடங்களுக்கு முன்புதான் தெரியும்... எனக்கு பதிவுலகை அறிமுகப்படுத்திய நண்பர் நித்யகுமாரனுக்கு என் நன்றிகள், அவர்தான் எனக்கு பிளாக்கரில் கணக்கு தொடங்கி கொடுத்தவர்...
பெரிய அளவிலான வசிகரிப்பான எழுத்து என்னுடையதில்லை என்பது எனக்கே நன்றாக தெரியும்... என்னை விட இலக்கிய வாசனையோடு எழுதுபவர்கள் பார்த்து பொறாமை கொண்டுள்ளேன் . இருப்பினும் என் எழுத்து மேல் நம்பி்கை வைத்து என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுத்த தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், தமிழ்மண நிர்வாகத்துக்கும் மீண்டும் என் இதயம் கனிந்த நன்றிகள்....

என் முதல் பதிவை இப்போது நினைத்து பார்க்கின்றேன் அதனை உங்களுக்காக கீழே கொடுக்கின்றேன்...

சமர்பணம்

கிராமத்தில் பிறந்த எனக்கு கனிப்பொறியும் ,வானவியலும் கற்றூ கொடுத்த ஏகலைவன், கற்றதும் பெற்றதுமில் நான் பெற்றதே அதிகம், ஏன் எதற்க்கு எப்படி படிக்கவில்லை எனில் இன்னும் நான் கோவில் கோவிலாக அலைந்து கொண்டுஇருப்பேன் ,ப்த்தாம் வகுப்பு படித்த நான் blog எழுத இவரே காரணம் என் எழுத்தையும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் , அன்புடன் / ஜாக்கி சேகர்

மேலுள்ளதுதான் என் முதல் பதிவு அந்த பதிவை அடித்து முடிப்பதற்க்குள் மேல் மூச்சு கீழ் மூச்சி வாங்கிவிட்டது.... எப்படி தமிழில் அடித்து எழுத போகின்றோம் என்ற மலைப்பு என்னுள் எழுந்தது... கடவுள் கிருபையால் இப்போது தேவலாம்.... ஆனாலும் எழுத்து பிழைகள் இருக்கின்றன....பதிவை அலசி ஆராய்ந்து போடும் அளவுக்கு நேரமின்மையும் ஒரு காரணம்... எல்லாம் பொறுத்து என்னை ஆதரிக்கும் உங்களுக்கு என் நன்றிகள்

277 பதிவு இதுவரை எழுதி விட்டேன், தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து பி்ன்னுட்டம் இட்டு என்னை தொடர்ந்து என்னை உற்சாகபடுத்தும் முகம் தெரியாத அனைவருக்கும் என் நன்றிகள் பல...

பொதுவாய் பல விஷயங்களை பற்றி எழுதுவதுதான் எனக்கு பிடிக்கும், அப்படிம்தான் எனது தளம் இயங்கி வந்தது... ஆனால் உலக படங்கள் எழுத எழுத நிறைய பேர் என்னை உற்சாக படுத்துவதால் சினிமா பற்றிய விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாய் இருக்கும்...

எனக்கு தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து வரும் 146 பாலோயர்களுக்கும், உடனுக்கு உடன் பின்னுட்டம் இட்டு உற்சாகபடுத்தும், நையாண்டிநைனா,ஜமால்,கலையரசன்,சூரியன்,ஸ்டார்ஜன்,ஸ்ரீ,தன்டோரா,கேபிள் ,நித்யகுமாரன்,மங்களுர் சிவா,ஜெட்லி புதுவை சிவா, வால்பையன், விக்னேஷ்வரன்,கிரி,வந்தியதேவன், வழிப்போக்கன், ராஜா கேவிஆர்,கார்த்திகை பாண்டியன்,பிரிதீப் பாண்டியன்,ராஜராஜன், சரவணகுமரன், வண்ணத்து பூச்சி,பிஸ்கோத்து பயல், இந்த பதிவால் ,என் எழுத்தால் ஈர்க்கப்பட்டு எனக்கு நல்ல நட்பான பெண்மணி(பெயர் வேண்டாமே) போன்றவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுகின்றேன்... சில பிரச்சனைகளின் போது ஒரு மூத்த பதிவராய் எனக்கு அட்வைஸ் செய்த லக்கி லுக்குக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்கின்றேன்...இதில் பலர் தளங்களுக்கு நான் சென்று வாசித்தது கூட இல்லை....இவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல... இது போன்ற நண்பர்களால்தான்,அவர்கள் கொடுக்கும் உற்சாகத்தால்தான், நான் தூங்கும் நேரத்தை குறைத்து கண்களில் தூக்கத்தை மிச்சம் வைத்து எழுதி கொண்டு இருக்கின்றேன்....

மீண்டும் உங்கள் எல்லோருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள் வரும் பத்தாம் தேதி வரை தமிழ்மண முகப்பில் சந்திக்கின்றேன்....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....


52 comments:

  1. தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துகள்! நண்பரே


    மின்னுங்கள் ...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சேகர்.

    ReplyDelete
  4. நட்சத்திரவாரத்தில் ஜொலிக்க வாழ்த்துக்கள் தல. உங்கள் சினிமா முயற்சிகள் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நட்சத்திர வாரம் நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

    என் பெயரை போடாடததினால் இன்னொமொரு கட்டிங் அதிகமாய் அடிக்கப்படும் (உங்க பார்ட்டியின் போது) என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  6. தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஜாக்கி சேகர்

    ReplyDelete
  8. அன்பு ஜாக்கி..

    வாழ்த்துகள்.

    இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். அதற்காக என் பிரார்தனைகள் என்றும் உண்டு.


    தலை பேரை விட்டதற்கு பலன் அடுத்த வாரம் தெரியும்.

    Advance வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ஜாக்கி !

    ReplyDelete
  10. நட்சத்திர வாழ்த்துகள் ஜாக்கி :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் திரு. ஜாக்கி சேகர் :-))

    ReplyDelete
  12. நட்சத்திர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. நட்சத்திர வாழ்த்துக்கள் ஜாக்கி!

    ReplyDelete
  14. நல்ல அறிமுகம். தொடர்ந்து முத்திரை பதித்து செல்லுங்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்... கலக்குங்க...

    ReplyDelete
  16. அறிமுகம் அருமை.எளிமை.

    நட்சத்திரவாரத்தில் ஜொலிக்க வாழ்த்துக்கள். உங்கள் சினிமா முயற்சிகள் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நடுநிலையாய் எழுத முயற்சித்தாலும் யாராலும் உண்மையான நடுநிலையில் எழுத முடியாது. அவரவர்கள் வளர்ந்த சூழ்நிலை, படித்தக் கேட்ட விஷயங்கள், நம்பிக்கைகள் இவை அவரவர் எழுத்தில் தானே தலை காட்டிவிடும். அதனால் பரபரப்பு ஊட்டும் தலைப்புகளில் கவனம் செலுத்தாமல் மனதிற்கு உண்மை, நேர்மை எனப் படும் எதையும் தயங்காமல் எழுதுங்கள்... மேலும் வளர வாழ்த்துக்கள்...

    தமிழ்மண நட்சத்திரத்திற்க்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...
    தமிழ்மண முகப்பில் சந்திப்போம்....

    ReplyDelete
  18. வாழ்த்துகள் தல!!!

    ReplyDelete
  19. நட்சத்திர வாழ்த்துக்கள் வாழ்த்துகள் ஜாக்கி சேகர்******!!!!!!!

    ReplyDelete
  20. தமிழ்மண நட்சத்திரத்திற்க்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. நீங்கள் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிப்பது போல் தமிழ்திரை உலகிலும் ஜொலிக்க வேண்டும் . கூடிய சீக்கிரம் நடக்கும் .

    வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்

    ReplyDelete
  22. வாழ்த்துகள் ஜாக்கி

    ReplyDelete
  23. இந்த வார நட்சத்திரத்துக்கும்,அடுத்த வார நட்சத்திரத்துக்கும்(கேபிள்)வாழ்த்துக்கள்..எலேய் ..ஜமாய்ங்கடா...

    ReplyDelete
  24. நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    கண்ணுகூசுதப்பா:-)))))

    ReplyDelete
  25. ///என்னை விட இலக்கிய வாசனையோடு எழுதுபவர்கள் பார்த்து பொறாமை கொண்டுள்ளேன்//

    இது வேணும்னா உண்மையா இருக்கலாம்.

    //பெரிய அளவிலான வசிகரிப்பான எழுத்து என்னுடையதில்லை என்பது எனக்கே நன்றாக தெரியும்... ///

    ஆனா.. இது நிச்சயம் உண்மையில்லை. சொல்ல வருவதைச் சரளமாகச் சொல்ல முடிகிற உங்களது எழுத்து சுவையானதௌதான்

    நட்சத்திர வாழ்த்துகள்!!

    ReplyDelete
  26. //சுவையானதௌதான்//

    இது போன்ற எழுத்துப் பிழைகளைக் களைய முடிந்தால் (இது என்னுடைய தவறென்ராலும்) வாசிக்கும்போது பல்லிடை பட்ட பாக்குத்துகள்போல உறுத்தாமல் வாசிக்க முடியும் :-)

    ReplyDelete
  27. அப்படி போடு! கலக்குங்க

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் ஜேக்!

    ReplyDelete
  29. வாழ்த்துகள் ஜாக்கி சேகர்

    ReplyDelete
  30. நட்சத்திர வாழ்த்துகள் தலைவரே!

    ReplyDelete
  31. தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  32. நிங்கள் என் பெயரெல்லாம் சொன்னதே
    எனக்கு பெருமைதான்
    வாழ்த்துக்கள்
    கலக்குங்க!!!!!

    ReplyDelete
  33. நிமாய் கோஷ், வின்சென்ட், கர்ணன் போல திரையிலும் நட்சத்திரமாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. தமிழ்மண நட்சத்திரம் திரையிலும் ஜொலிக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  35. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    ReplyDelete
  36. வாழ்த்துகள் தல!!

    ReplyDelete
  37. ஸார், என் பெயரையும் போட்டு புல்லரிக்க வச்சிட்டீங்களே...!(ஸ்பெல்லிங் தப்பா இருந்தாலும் பரவாயில்லை... :)
    வாழ்த்துக்கள் ஜாக்கி ஸார்...

    ReplyDelete
  38. வாழ்த்துகள் சேகர்.

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  40. Good to know about you...the way you expressed is simply superb. Nice

    ReplyDelete
  41. அன்பின் ஜாக்கி சேகர்

    நடசத்திர நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் திரு. ஜாக்கி சேகர்

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள் திரு. ஜாக்கி சேகர் :-))

    ReplyDelete
  45. தமிழ்மண நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள் ....!

    திரு.ஜாக்கி...

    ReplyDelete
  46. அன்பு நண்பரே தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள்.

    பெரிய திரையிலும் விரைவில் நீங்கள் தடம் பதித்து வெற்றிக்கொடி நாட்டவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  47. நட்சத்திரப்பதிவருக்கு ...உளமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner