

எல்லாருக்கும் ஒரு தொழில் தர்மம் என்று உண்டு அது கொள்ளையர்களாக இருந்தாலும் சரி அல்லது கொலை செய்பவர்களாக இருந்தாலும் இருக்க வேண்டும்... அப்போதுதான் உருப்பட முடியும்...
பொருட்களின் மீது ஆசை வரும் போது அதன் வாங்க முடியாத இயலாமை திருட்டாக உருமாறுகின்றது... சின்னவயதில் திரில்லுக்கா திருடி இருக்கின்றேன்... செட்டியார் மெடிமிக்ஸ் சோப் விலைப்பார்பதற்க்குள் ஒரு தக்காளி எனது கால் சட்டை பாக்கெட்டில் போட்டு் இருக்கின்றேன்....அதே போல் மைதா கட்டுவத்ற்க்குள் ஒரு முட்டை என் கால் சட்டை பாக்கெட்டில்.... இதை ஒரு திரில்லுக்காக நான் என் அத்தை மகன்முரளி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு செய்வோம்.... அதே போல் கரெண்ட் போன அடுத்த செகன்ட் செட்டியார்கடையில் எதையாவது வாங்க வரிசையில் நிற்போம்....கொடுத்த 5 ரூபாய்க்கு எப்படி முட்டை வந்திச்சு வராதே என்று என் அம்மா கேட்ட போது பெருமையாக நான் என் சின்ன திருட்டை வெளிபடுத்திய போது அதிலிருந்து சரியாக 5 நாட்கள் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை.... ஒரு நாள் காலில் விழுந்து கெஞ்சி காரணம் கேட்ட போது... என் மகன் என்றால் அந்த ஈன செயலை செய்து இருக்கமாட்டான் என்று சொல்ல நான் கண்களில் கண்ணீரோடு என் அன்னையிடம் மன்னிப்பு கேட்டேன்...

நான் விளையாட்டுக்கு செய்தேன் என்று சொன்னேன்.... இந்த விளையாட்டுதான் நாளைக்கு உன்னை இந்த சமுகம் கேவலமாக பார்க்க வழி வகுக்கும் என்று என் அம்மா இரண்டுமணிநேரம் அட்வைஸ் செய்தால்... என் அம்மா அப்போது அந்த செயலை பாராட்டி இருந்தால் என் வாழ்க்கை திசைமாறி போய் இருக்கும்... உங்களுக்கும் இது போல் நடந்து இருக்கும்... ஒரு சின்ன பென்சிலையாவது நீங்கள் திருடி இருப்பீர்கள்... ஆனால் உங்களுக்கு சொல்வதற்க்கு அல்லது வெளிப்படுத்துவதற்க்கு கூச்சம் காரணணமாக இருக்கலாம்...சரி மேட்டருக்கு வருவோம்....

கத்தியின்றி ரத்தம் இன்றி கொள்ளை அடிக்க முடியுமா? முடியும் என்று சொல்லும் ஒரு கொள்ளை கூட்டம்... அப்படி ஒரு படம் எடுக்க முடியுமா? மடியும் என்ற நிருபித்து இருக்கின்றார்கள் அது என்ன படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடபட்ட இத்தாலியன் ஜாப் படம்தான்
THE ITALIAN JOB படத்தின் கதை இதுதான்.......
குழுவின் தலைவன் John Bridger (Donald Sutherland) தலமையில் வெனிசில் ஒரு பாதுகாப்பான இரும்பு பிரோவில் தூங்கும், ஒரு35 மில்லலியன் மதிப்புள்ள தங்க கட்டிளை கொள்ளை அடித்து அதற்க்கு சுதந்திரம் கொடுக்க திட்டம் தீட்டுகின்றார்கள் எந்த உயிர் சேதம் இல்லாமல் John Bridger குழு அந்த தங்க கட்டிகளை மிக சாதூர்யமாக கொள்ளை அடித்து விடுகின்றார்கள்...ஜான் பிரிட்ஜருக்குஅவர் குழுவில் இருக்கும் Charlie Croker (Mark Wahlberg) என்பவனை ரொம்பவும் பிடிக்கும்.. அவனிடம் வயது வித்தியாசம் பாராமல் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளுபவர்... அவருக்கு ஒரே ஒருமகள் இருக்கின்றாள்Stella Bridger (Charlize Theron) அவள் மீது உயிரையே வைத்து இருக்கின்றார்.... கொள்ளை அடித்து விட்டு போகும் போது அவர் குழுவில் இருக்கும் ஸ்டீவ் என்பவன் டபுள் கிராஸ் செய்து அந்த தங்க கட்டிகள் அனைத்தையும் கொள்ளை அடிக்க முயல தடுக்க வந்த John Bridgerயை போட்டு தள்ளுகின்றான்... பாலத்தின் மீது நடக்கும் இந்த சண்டையில் மற்றவர்களோடு அந்த வேன் ஆற்றில் கவிழ எல்லோரும் ஜல சமாதி அடைகின்றார்கள் என்ற எண்ணி ஸ்டீவ் எல்லா தங்ககட்டிகயோடு எஸ்கேப் ஆகின்றான்... உயிர் பிழைத்த நாலு பேர் கூட்டம் முதலில் John Bridger பெண் ஸ்டெல்லாவை கண்டுபிடிக்கின்றனர்.. அவளும் லேசுபட்டவள் இல்லை கார் வேமாக ஓட்டுவதிலும் எந்த பூட்டையும் திறக்கும் சாமர்த்திய சாலி.... நால்வர் குழுவும் அந்த பெண்ணும் இனைந்து அந்த ஸ்டீவை கண்டுபிடித்தார்களா? தன் அப்பாவை கொன்றவனை ஸ்டெல்லா எப்படி பழி வாங்கினாள்? 35 ில்லியன் தங்க கட்டிகளை ஸ்டிவ் என்ன செய்தான் போன்றவற்றை வெண்திரையில் கண்டு மகிழுங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
இந்த படத்தின் பெயரில் 1969ல் இங்கிலாந்தில் படம் எடுத்து விட்டார்கள்...அந்த படத்தை பார்த்து இன்ஸ்பயர் ஆகி இந்த படத்தினை பல மாறுதல்களுடன் எடுத்தார் இந்த படத்தின் இயக்குனர்...
இந்த படம்ஒரு அற்புதமன விறு விறுப்பான படைப்பு என்றால் அது மிகையில்லை... இந்த படம் பாத்து விட்ட வேளவரும் போது ஒரு உதட்டு புன்னகை உங்கள் உதட்டில் நிச்சயம்... நான் இந்த படத்தை பாண்டி ரத்னா தியேட்டரில் பார்த்ததாக ஞாபகம்...

இந்த படத்தின் இயக்குனர் டேக்கிங் ஸ்டைல் ஒரு அசத்தல் டீரிட்...படத்தின் முதல் டைட்டில் காட்சியில் பின்னனியில் ஒலிக்கும் இசையும் அதற்க்காக வெனிஸ் நகரத்தினை பல கோனங்களில் எடுத்த கட் ஷாட்டுகளில் டைட்டில் போடுவதும் அழகு... அதே போல் கொள்ளை அடித்த தங்க ககட்டிகள் தண்ணீ்ருக்கு அடியில் போவது போல் காட்சியில் தண்ணீ்ரில் இருந்து ஜும் பேக் ஆகி வெனிஸ் நகரத்தை காட்டி அப்படியே வானத்துக்கு போய் அப்படியே கீழே வரும் போது பணி மலையில் போகும் வேனை மெர்ஜ் கட்டிங்கில் பல இடங்களில் விளையாடிய எடிட்டர்Richard Francis-Bruce இருவரையும் பாராட்டலாம்.. முக்கியமாக டைட்டில் ஒர்க் அருமை....
Wally Pfister சினிமோட்டோகிராபர் ஆல்ப்ஸ் மலைதொடரில் எடுத்த காட்சிகளும் வெனிஸ் காட்சிகளும் ரயில் நிலைய சப்வே காட்சிகளும் அவர் ஒரு திறைமையான கேமரா மேன் என்பதை பறை சாற்றும் காட்சிகள்....
கொள்ளை அடித்ததும் ஜான் பிரிட்ஜர் தன் சகாக்களிடம் பணத்தை செலவு செய்யாதீர்கள் என்றும் பணத்தை இன்வெஸ்ட் செய்யுங்கள் என்று சொல்லும் இடம் அழகான கவிதை....
அதே போல் சார்லிக்கும் ஸ்டெல்லாவுக்கும் இருக்கும் மெல்லிய காதல் கலந்த நட்பு ரசிக்க தக்கதாய் இருக்கும்...

ஸ்டெல்லா பாத்திரத்தில் நடித்து இருக்கும்Charlize Theron ஒரு ஆஸ்கார் விருது நாயகி....



சார்லியாக நடித்து இருக்கும் Mark Wahlberg டிபார்டட் படத்தி்ல் நடித்து இருப்பவர் அவரின் ஸ்மார்ட்நெஸ் ரசிப்பதாக இருக்கும்...

ஆல்ப்ஸ் மலையில் படபிடிப்பின் போது குளிர் வாட்டி வதைத்து இருக்கின்றது.. ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து 40 ஆடி நடப்பதற்க்குள் அந்த தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறி விடுகின்றது என்றால் பார்த்து கொள்ளுங்கள்...
டிரான்ஸ்போர்டர் படத்தின் ஹீரோJason Statham இந்த படத்தின் கதநாயகன் நண்பர்கள் பாத்திரத்தை செய்து இருப்பார்....
ஸ்டெல்லாவுக்கு சார்லி தன் நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் அவர்கள் பிளால் சொல்லும் போது சிறு வயதில் அவர்கள் செய்த அட்டுழியங்களை காட்டும் காட்சி கல கல...
இந்த படத்தின் ரயில்வே சுரங்க பாதை காட்சிகள் பலதை செட் போட்டு எடுத்தார்கள்...
டிராபிக் ஜாம் காட்சிக்காக 300 கார்களை வைத்து ஒரு வாரத்துக்கு மேல் அந்த காட்சிகளை எடுத்தார்களாம்.....
படத்தின் இயக்குனர் கூடுமானவரை படத்தின் நடிகர்களே பல காட்சிகளில் டூப் போடாமல் நடிக்க கேட்டுக்கொண்டாராம்....
தொழில் நுட்பமாக கொள்ளை அடிக்கும் அந்த டெக்னிக் செமை திரில் ரகம்

இந்த படத்தின் கார் சேசிங் காட்சிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கும்....
இந்த படத்தி்ன் காட்சிகள் அனைத்தும் வெனிஸ் , இத்தாலி, லாஸ் ஏஞசல்ஸ் போன்ற இடங்களில் ஷட் செய்து இருக்கின்றார்கள்
வசூலில் பிச்சு உதறிய படம் இது...
படத்திற்க்கு கிடைத்த விருதுகள்
F. Gary Gray won a Film Life Movie Award for Best Director at the 2004 American Black Film Festival. Clay Cullen, Michael Gaines, Jean Paul Ruggiero and Mike Massa won an award for Best Specialty Stunt at the 2004 Taurus World Stunt Awards for the boat chase through the canals of Venice

படக்குழுவினர் விபரம்....
Directed by F. Gary Gray
Produced by Donald De Line
Written by Donna Powers
Wayne Powers
Troy Kennedy Martin
Starring Mark Wahlberg
Charlize Theron
Edward Norton
Seth Green
Jason Statham
Mos Def
and Donald Sutherland
Music by John Powell
Cinematography Wally Pfister
Editing by Richard Francis-Bruce
Christopher Rouse
Distributed by Paramount Pictures
Release date(s) May 11, 2003 (Tribeca Film Festival)
May 30, 2003 (United States)
August 21, 2003 (Australia)
September 19, 2003 (United Kingdom)
Running time 110 min.
Country United States
France
United Kingdom
Language English
Russian
Italian
Budget $60,000,000[1]
Gross revenue $176,070,171[1]
குறிப்பு ...ஒரு படம் பார்த்த படமோ பார்க்காத படமோ விமர்சனம் எழுதும் முன் அந்த படத்தை பார்த்து எழுதுவது எனக்கு பிடிக்கும் அந்த வகையில் ஒர படம் பார்த்து உள்வாங்கி விரிவாய் விமர்சனம் எழுத குறைந்தது 5 மணி நேரம் செலவாகின்றது அந்த வகையி்ல் நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு என் நன்றிகள்
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
//உங்களுக்கும் இது போல் நடந்து இருக்கும்... ஒரு சின்ன பென்சிலையாவது நீங்கள் திருடி இருப்பீர்கள்//
ReplyDeleteநானும் திருடிருக்கேன், ஊர் பொங்கல் கடைகளில், அப்பா விட்டார் பாருங்க அடி....
//விமர்சனம் எழுத குறைந்தது 5 மணி நேரம் செலவாகின்றது //
ஏகபட்ட படங்கள் கைவசம் இருந்தும், உங்கள் விமர்சனம் படிச்சபின்னால் தான் அந்த படமே பாக்குறேன்.நீங்க விமர்சித்த படம், என்னிடம் இல்லாவிட்டால் தான் கஷ்டமா இருக்கு.
நன்றி
அருமை ஜாக்கி
ReplyDeleteஇப்படி படத்த போட்டு உசுப்பேத்துதீங்க ...
ReplyDeleteதல...சூப்பர்...
ReplyDeleteடோர்ரன்ட் டவுன்லோட் போட்டாச்சு....
வாழ்க நீங்கள்...வாழ்க டோர்ரன்ட்...வாழ்க என் அலுவலகம்...
the 1969 italian job movie was a classic, its famous for the beautiful car chase using Mini Copper. its the one of the best car coordinated stunts. it made the car popular and still mini copper is famouse among youth.
ReplyDeleteரொம்ப நாளா இந்த படம் பாக்காம தூங்கிகிட்டிருக்கு பாத்துடறேன்.
ReplyDeleteஅண்ணே.. இந்த படத்தில் எனக்கு முக்கியமாக இரண்டு
ReplyDeleteநபர்களை பிடிக்கும் ஒன்று mark இன்னொருத்தர் jason .
என் வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதுமான ஒரு
படம்...............
தலைவா,நீங்க படம் எடுக்கும் போது இரண்டு மாதம் லீவே போட்டு வந்து உங்களோட வேலை செய்கிறேன். கேமரா சாட்ஸ் பற்றி டெக்னிக்கலா சொல்லறது நல்லா இருக்கு.தொடருங்கள்
ReplyDeleteதண்ணீ்ருக்கு அடியில் போவது போல் காட்சியில் தண்ணீ்ரில் இருந்து ஜும் பேக் ஆகி வெனிஸ் நகரத்தை காட்டி அப்படியே வானத்துக்கு போய் அப்படியே கீழே வரும்]]
ReplyDeleteதங்கள் இரசனை தங்களின் தொழிலோடு ஒட்டியிருக்கின்றது ...
(இயல்பு தானே ...)
hi Jackiesekar,
ReplyDeleteஉங்களது பதிவுகளை தொடர்ந்தும் படித்து வருகிறேன்.... இருந்தும் இதுவே என் முதல் பின்னுாட்டம்..
அடிக்கடி பின்னூட்டம் இட முடியாமைக்கு வருந்துகிறேன்...
எழுதும் திரைப்பட விமர்சனங்கள் மிக விமர்சனங்கள் சிறப்பாய் உள்ளது...
சில சமயங்களில் படத்தை விட நன்றாக இருப்பது போல் உணர்கிறேன்..... ;)
தொடர்ந்து எழுதுங்கள்....
:)
படம் சூப்பர் (நடிகை படம்தான்) ..ஹி ஹி ஹி....
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் நானும் திருடியிருக்கிறேன் விளையாட்டுக்கு ஒரு தடவை மாட்டிகிட்டு அசிங்கப்பட்டேன் அன்று திருந்தியது(சின்ன வயசுலதான் இப்பவும் சின்ன வயசுதான் அது நடந்தது குழந்தையா இருக்கும் போது)..
பார்க்க வேண்டிய படங்களை பற்றிய உங்கள் விமர்சனங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteநாங்கள் அனைவரும் பார்த்த ஜுராசிக் பார்க் படத்தை பற்றி நீங்கள் விமர்சனம் செய்வீர்களா?
HAI "J".... EVERY WEEK THERE IS ONLY ONE FRIDAY....WHICH IS OUR HOLIDAY...OUT OF 24 HOURS 16 HOURS I WILL SLEEP....BALANCE 8 HOURS...HOW MANY FILMS I CAN SEE...YOU ARE TEMPTING ME TO SEE THOSE FILMS ONCE AGAIN....LAST FRIDAY...I GOT ORDER FROM HOME MINISTER..."here after I can not touch the laptop on fridays"
ReplyDeleteஅருமை ஜாக்கி//
ReplyDeleteநன்றி ராதாகிருஷ்ணன்
/உங்களுக்கும் இது போல் நடந்து இருக்கும்... ஒரு சின்ன பென்சிலையாவது நீங்கள் திருடி இருப்பீர்கள்//
ReplyDeleteநானும் திருடிருக்கேன், ஊர் பொங்கல் கடைகளில், அப்பா விட்டார் பாருங்க அடி....
//விமர்சனம் எழுத குறைந்தது 5 மணி நேரம் செலவாகின்றது //
ஏகபட்ட படங்கள் கைவசம் இருந்தும், உங்கள் விமர்சனம் படிச்சபின்னால் தான் அந்த படமே பாக்குறேன்.நீங்க விமர்சித்த படம், என்னிடம் இல்லாவிட்டால் தான் கஷ்டமா இருக்கு.
நன்றி//
நன்றி பாலகுமாரன் தங்களின் வெளிப்படையான பாராட்டுக்கு
இப்படி படத்த போட்டு உசுப்பேத்துதீங்க ...//
ReplyDeleteஎன்ன செய்யறது ஸ்டார்ஜன் நம்ம பொழப்பு அது..
தல...சூப்பர்...
ReplyDeleteடோர்ரன்ட் டவுன்லோட் போட்டாச்சு....
வாழ்க நீங்கள்...வாழ்க டோர்ரன்ட்...வாழ்க என் அலுவலகம்...
நன்றி கமல் தங்கள் சந்தோஷமான வாழ்த்துக்கு
the 1969 italian job movie was a classic, its famous for the beautiful car chase using Mini Copper. its the one of the best car coordinated stunts. it made the car popular and still mini copper is famouse among youth.//
ReplyDeleteநன்றி மாயாவி தங்கள் தகவலுக்கு
அண்ணே.. இந்த படத்தில் எனக்கு முக்கியமாக இரண்டு
ReplyDeleteநபர்களை பிடிக்கும் ஒன்று mark இன்னொருத்தர் jason .
என் வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதுமான ஒரு
படம்...............//
எனக்கும் அப்படிதான் ஜெட்லி
ரொம்ப நாளா இந்த படம் பாக்காம தூங்கிகிட்டிருக்கு பாத்துடறேன்.//
ReplyDeleteமுதல்ல படத்தை பாரு சிவா...
தலைவா,நீங்க படம் எடுக்கும் போது இரண்டு மாதம் லீவே போட்டு வந்து உங்களோட வேலை செய்கிறேன். கேமரா சாட்ஸ் பற்றி டெக்னிக்கலா சொல்லறது நல்லா இருக்கு.தொடருங்கள்/=/
ReplyDeleteநன்றி ஜெர்ரி தங்கள் பாராட்டுக்கு அப்படி நான் படம் தனியாக வேலை செய்தால் கண்டிப்பாக் அழைக்கின்றேன்
தண்ணீ்ருக்கு அடியில் போவது போல் காட்சியில் தண்ணீ்ரில் இருந்து ஜும் பேக் ஆகி வெனிஸ் நகரத்தை காட்டி அப்படியே வானத்துக்கு போய் அப்படியே கீழே வரும்]]
ReplyDeleteதங்கள் இரசனை தங்களின் தொழிலோடு ஒட்டியிருக்கின்றது ...
(இயல்பு தானே ...)//
இன்னும் எழுதலாம் பட் எல்லோருக்கும் புரியாது... அதனால்தான் நன்றி ஜமால்
i Jackiesekar,
ReplyDeleteஉங்களது பதிவுகளை தொடர்ந்தும் படித்து வருகிறேன்.... இருந்தும் இதுவே என் முதல் பின்னுாட்டம்..
அடிக்கடி பின்னூட்டம் இட முடியாமைக்கு வருந்துகிறேன்...
எழுதும் திரைப்பட விமர்சனங்கள் மிக விமர்சனங்கள் சிறப்பாய் உள்ளது...
சில சமயங்களில் படத்தை விட நன்றாக இருப்பது போல் உணர்கிறேன்..... ;)
தொடர்ந்து எழுதுங்கள்....//
நன்றி திங்ஸ் மிக்க நன்றி தொடர் பின்னுட்டம் இட்டால்தான் எனக்கு அது உற்சாகம் நன்றி
பார்க்க வேண்டிய படங்களை பற்றிய உங்கள் விமர்சனங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteநாங்கள் அனைவரும் பார்த்த ஜுராசிக் பார்க் படத்தை பற்றி நீங்கள் விமர்சனம் செய்வீர்களா?//
எழுதலாம் பாண்டி அதுவும் எபத வேண்டும் அனால் அதற்க்கு முன் கவனிக்கபடாத படங்கள் நிறைய அதனால்தான்...
படம் சூப்பர் (நடிகை படம்தான்) ..ஹி ஹி ஹி....
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் நானும் திருடியிருக்கிறேன் விளையாட்டுக்கு ஒரு தடவை மாட்டிகிட்டு அசிங்கப்பட்டேன் அன்று திருந்தியது(சின்ன வயசுலதான் இப்பவும் சின்ன வயசுதான் அது நடந்தது குழந்தையா இருக்கும் போது)..//
நன்றி சூரியன் தங்கள் வெளிப்பாடுக்கு
HAI "J".... EVERY WEEK THERE IS ONLY ONE FRIDAY....WHICH IS OUR HOLIDAY...OUT OF 24 HOURS 16 HOURS I WILL SLEEP....BALANCE 8 HOURS...HOW MANY FILMS I CAN SEE...YOU ARE TEMPTING ME TO SEE THOSE FILMS ONCE AGAIN....LAST FRIDAY...I GOT ORDER FROM HOME MINISTER..."here after I can not touch the laptop on fridays"///
ReplyDeleteநன்றி ராஜ்குமார்
பார்த்தேன்....ரசித்தேன்
ReplyDeleteஎதனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் .லாஜிக் லாஜிக் என்று சொல்கிறார்களே அது சற்றும் பிசகாத படம்.
ReplyDeleteஎல்லாம் சொன்னீர்கள். இந்த படத்தின் ஒரிஜினலை சொல்லாமல் விட்டு விட்டீர்கள். 1969 - இல் பிரிட்டிஷ் நடிகரான மைக்கேல் கெய்ன் நடிப்பில் வந்த படம் ‘தி இடாலியன் ஜாப்’. அதன் ரீமேக் தான் இந்த படம். ஒரிஜினல் படத்தைப் பார்த்தீர்களனால் இந்த படம் படு மொக்கையாக இருக்கும். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத நாட்களிலே, அத்தனைச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருப்பார்கள். திரைப்படத்தோடு வாழ்க்கையை தொடர்பு படுத்தி உங்கள் அனுபவங்களை கூறுவது மிகச் சிறப்பாக உள்ளது. அதே போல் படத்தில் நடித்த முக்கியமான ஆளையும் சொல்லாமல் விட்டு விட்டீர்கள். அவர் தான் Edward Norton. ஸ்டீவ் கதாப்பாத்திரத்தில் நடித்தவர். அவரின் The Illusionist, American History X, 25th Hour, Fight Club போன்றவை மிகச் சிறப்பான திரைப்படங்கள்.
ReplyDelete/// மாலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில்... நேரம் மாலை 3மணிக்கு ஒளிபரப்பி திரும்ப அதே படத்தை மாலை 6மணிக்கு ஒளிபரப்ப இருக்கின்றார்கள்..
ReplyDeleteதிரைப்படத்தை பார்க்கும் முன் ஒரு முறை எனது விமர்சனத்தை படித்து விட்டு படத்தினை பார்க்கவும்... ///
தகவலுக்கு நன்றிண்ணா..
/// பணத்தை செலவு செய்யாதீர்கள் என்றும் பணத்தை இன்வெஸ்ட் செய்யுங்கள் என்று சொல்லும் இடம் அழகான கவிதை..///
இந்த வரிகளை ஒரு பத்து வருடத்திற்கு முன் யாராவது என்னிடம் சொல்லிருக்க கூடாதா?