சாண்ட்விச் அன்ட் நான்வெஜ்.18+ (17,08,09)

ஆல்பம்....

மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அறிவித்து அது நேற்றில் இருந்து அமுலுக்கு வந்து இருக்கின்றது... வந்த நாளே நான் மெரினாவுக்கு என் மனைவியுடன் போன போது இரண்டு சுக்கு காபி கேட்ட போது பிளாஸ்டிக் கப்பில்தான் டீக்காரர் கொடுத்தார்... அதே போல் அந்த கப்பை குப்பை தொட்டியில் வீச, குப்பை தொட்டி தேடிய போது குப்பைதொட்டியை கானோம்....தீவிரமாக எப்போது அமுல்படுத்த போகின்றார்கள் என்று தெரியவில்லை....

சென்னையில் கொழுப்பெடுத்து திரியும் சில அதிகார வர்கத்து பசங்கள் செய்யும் அடாவடிக்கு அளவே இல்லை... பைக் ரேசிங் என்ற பெயரில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் மெரினாவின் சர்விஸ் லேனில் காவாளிப்பசங்கள் ரேஸ் விடுகின்றார்கள்... அமைதியாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போதே காது கிழியும் ஓசையுடன் விருட்டென கிளம்பும் பைக்கின் ஓசை .... வியிற்றில் பயத்தை தோற்றுவிக்கின்றது..... எதாவது சின்ன குழந்தைகள் கிராஸ் செய்தால் அந்த குழந்தை நிலையை நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கின்றது....

ஒரு வாரத்துக்கு முன் இப்படித்தான் நான் சர்வீஸ் லேனில் வந்து கொண்டு இருக்கும் போது ஒரு சனியன் வீலீங் செய்து பைக்கின், முன் சக்கரம் என் வலது கை பக்கம் அருகே சக்கரம் வரும் அளவு மிக நெருக்கமாக.... ஒரு சகடை வீலீங் செய்து என்னை வெறியேற்றியது... இவர்கள் ஒரு குழுவாக இருக்கின்றனர்.. தனியாக இருந்தாலும் புரட்டி எடுக்கலாம்... ஒருவனை புரட்டினால் ஒரு குழுவாக நம்மை புரட்டி விடுவார்கள் என்பதால் என் யோசனையை ஒத்தி வைத்து இருக்கின்றேன்...

மூன்று நாட்கள் முன் டி ஷர்ட் அணிந்த இரு் பெண்கள் பீச்சில் வண்டியை நிறுத்தி ஸ்டேன்ட் போட இரண்டு பேர் அவர்களை அசத்த ஸபீடாக பைக்கின் முன் சக்கரத்தை, யானை தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்வது போல் முன் சக்கரத்தை மிக வேகமாக தூக்கி கொண்டு செல்ல.... ரொம்பவும் பைக்கை...மேலே தூக்க பைக் பேலன்ஸ் தவறி... இவர்கள் மேல் விழுந்தது... ஒருவன் காலில், சைலன்சர் சூடு வேறு போட்டுக்கொள்ள.... என்னையும் சேர்த்து யாருமே கீழே விழுந்தவனை தூக்கிவிடாமல் அவன் விழுந்ததை கைதட்டி பலர் ஆரவாரித்தோம்... அதன் பிறகு,காதில் கடுக்கன் போட்ட அவன் நண்பர்கள் குழு வந்தே, அவர்களை தூக்கிவிட்டது... எதிரில் கடை வைத்து இருக்கும் பலர் அவர்கள் விழுந்ததை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை... பீச்சில் வாக்கிங் போன பலரின் எண்ணம் இன்னும் வேண்டும் என்பது போல் இருந்தது.... ஏன் இப்படி இந்த வாலிபர்கள் மற்றவர்கள் வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள்... இவர்கள் விழுந்து காலை முறித்துகொண்டால் சோறு போட சொத்து இருக்கின்றது... ஆனால் மற்றவர்களுக்கு......

மிக்சர்...
வாசித்ததில் வருந்தியது.....

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்குழு நாட்டுநல பணிதிட்டத்திற்க்காக, ஒரு கோவிலை சுத்தபடுத்தியது.. மதியம் சாப்பிடுவதற்க்கு முன் ஆசிரியர்கள் முதலில் அந்த கோவில் குளத்தில் குளித்து கரையேறி, அந்த குளத்தில் பிள்ளைகளை குளிக்க சொல்ல, குளித்து முடித்து கரையேறிய மாணவர்களில் ஒருவன் தன் தம்பியை கானோம் என கூச்சல்போட ,அந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் குளத்தின் சேற்றில் பினமாக....
அழைத்து போன ஆசிரியர்கள்,உடன் இருந்த மாணவர்கள், பக்கத்தில்ஒன்றாக குளித்த அவன் அண்ணன், அவர்கள் மனநிலையை சற்றே நினைத்து பாருங்கள்....

பிராத்தனை...
சகபதிவர் சிங்கைநாதனுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், பனி போல் விலகவும் அதற்க்காக தோள் கொடுக்கும் எமது சக பதிவுலக நண்பர்களுக்கும் நினைத்தத எல்லாம் நடக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...


இந்த வாரம் குமுதம் புத்தகத்தில் வந்த விளம்பரம்... எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா....????

வழக்கம் போல் நான்வெஜ் காரம் கம்மியாக இருப்பதாக பல நண்பர்கள் குறைபட்டுக்கொள்கின்றார்கள்....அதாவது நான்வெஜ் ஒரு சின்ன ரிலாக்சுக்காக எழுதுவது... அவ்வளவே...காரம் ஜாஸ்த்தி ஆனால் கண்ணீல் ஜலம் வந்துவிடும் அல்லவா? எப்போதாவது வரலாம்.... அடிக்கடி வருவது உடம்புக்கு நல்லது அல்ல என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல....


வாழ்த்துக்கள்... எனது நண்பர் கேபிள் இந்தவார தமிழ்மண நட்சத்திர பதிவாராக தேர்ந்து எடுக்கபட்டு இருக்கின்றார்...அவர் சிறப்புடன் செயல்பட வாழ்த்துகின்றேன்....

நன்றி....
படித்தபோது எனது நினைவு வந்து போட்டோ போட்டிக்காக லின்க் கொடுத்து என்னோடு தொபேசியில் செய்தி தெரிவித்த பதிவர் நண்பர் அகநாழிகை வாசுதேவனுக்கு என் நன்றிகள்....


விஷுவல் டேஸ்ட்... நான் எடுத்ததில் பிடித்து.....
படங்களை கிளிக்கி பார்க்கவும்.....

தண்ணீ்ரில் மூழ்கி வெளிவரும் போது எத்தனை நாளைக்குதான் போட்டோ எடுப்பது....ஊட்டியில் தேயிலை பசுமை ஆற்றில் மூழ்கி வெளிவந்தால் எப்படி இருக்கும்??? படத்தில் இருப்பது மாடல் அல்ல எனது மச்சான்...

இது கலிபோர்னியா மேம்பாலம் அல்ல..... சென்னை கத்திப்பரா மேம்பாலம்... பின்புறத்தில் நியான் எழுத்தில் ஜொலிப்பது ... பணக்காரர்கள் இளைப்பாறும் லீராயல் மெரிடின் ஹோட்டல்....
கிண்டி கத்திப்பாரா பாலத்தின் ஒரு அரை வட்டம்....
கிண்டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பூந்தமல்லி நோக்கி வேகம் எடுக்கும் வாகனங்கள்....

நான்வெஜ்....

ஜோக்..1
ஒரு வயசுக்கு மேல ஆம்பிளையா இருக்கட்டும், பொம்பளையா இருக்கட்டும்... கிருஸ்மஸ் மரம் போலதான்.... அந்த மரத்தில் இருக்கும் பால்,பெல், போல எல்லாம் அலங்காரத்துக்குதான்... இது கொஞ்சம் காமெடியானாலும், அதுதான் நிஜம்...

ஜோக்...2
ஒரு நல்ல வேலை ஆணுக்கு கிடைக்க 100பர்சென்ட் டேலன்ட் தேவைபடுகின்றது... ஆனால் பெண்ணுக்கு 4 பர்சென்ட் போதுமானது... மீதி அவர்களிடம்தான் 34.24.36 =96 இருக்கின்றதே.....


ஒரு சின்ன கருத்து....

பூக்களின் மரணம் பெண்களின் கொண்டையில்...
ஆண்களின் மரணம் பெண்களின் புன்......
(பிக்காலி பயலுவலா தப்பா நினைக்கறதே உங்க அம்புட்டு பேருக்கும் பொழப்பா போச்சு.... )புன்னகையில்னு சொல்ல வந்தேன்.....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

29 comments:

  1. மச்சானும் அவரை எடுத்த போட்டோவும் அழகு.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  3. இந்த வாரம் சாண்ட்விச் கலக்கல்.

    நான் வெஜ்... ஜோக் மாதிரி என்பதைவிட மிகச் சிறந்த தத்துவம் அய்யா அது..

    புகைப் படங்கள் அனைத்தும் அருமை. அதிலும் கத்திப்பாரா மேம்பாலம் ரொம்ப பிடித்து இருந்தது. மச்சானை மாடலாக்கியது அருமையிலும் அருமை.

    கேபிளாருக்கு என்னோட வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. செம கலக்கல் சாண்ட்விச்...
    ///தனியாக இருந்தாலும் புரட்டி எடுக்கலாம்////
    ஏன் இந்த கோல வெறி ....
    வயசான காலத்தில Risk ஏதும் எடுக்காதீங்க

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு ஜாக்கி.

    குமுதம் வாங்கினவன் மட்டும் பார்க்க வேண்டிய விளம்பரத்தை உலகமே பார்க்க வலையில் எடுத்து போடணுமா..??

    ReplyDelete
  6. இந்த வாரம் நான்வெஜ்....
    அவ்வளவு டேஸ்டாக இல்லை....

    ஒருவேளை உங்களுக்கும் வயசாயிடிச்சோ !!!....

    ReplyDelete
  7. ஆஹா... மச்சான் போட்டோ சூப்பர்....

    ReplyDelete
  8. //ஒரு சின்ன கருத்து....

    பூக்களின் மரணம் பெண்களின் கொண்டையில்...
    ஆண்களின் மரணம் பெண்களின் புன்......
    (பிக்காலி பயலுவலா தப்பா நினைக்கறதே உங்க அம்புட்டு பேருக்கும் பொழப்பா போச்சு.... )புன்னகையில்னு சொல்ல வந்தேன்.....//
    நாங்க ஒன்னும் தப்பா நினைக்கல..
    என்னத்துக்கு " புன்... " நீங்க நிப்பாட்டுனீங்க?

    ReplyDelete
  9. //இவர்கள் ஒரு குழுவாக இருக்கின்றனர்.. தனியாக இருந்தாலும் புரட்டி எடுக்கலாம்... //

    கரெக்ட் ஆ சொன்னிங்க அண்ணே....

    ReplyDelete
  10. நைட் எபெக்ட்ல் கிண்டி கத்திப்பாரா மேம்பால புகைப்படங்கள் அருமை :)

    ReplyDelete
  11. இது ரொம்ப அனியாயம் ஜாக்கி,
    இப்படி ஒன்னு ஒன்னா போட்டு ”ஜவ்வடி அடிக்கலாம்” என்று திட்டம் வேண்டாம். அட்சய பாத்திரமாக அல்ல அல்ல குறையாதது. பேசாமல் ஒரு பதிவாக போட்டுவிடுங்க நண்பரே! புண்ணியமா போவும்..

    ReplyDelete
  12. மச்சானும் அவரை எடுத்த போட்டோவும் அழகு.--//

    நன்றி ஜமால் மிக்க நன்றி

    ReplyDelete
  13. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜாக்கி.//
    நன்றி கேபிள்

    ReplyDelete
  14. இந்த வாரம் சாண்ட்விச் கலக்கல்.

    நான் வெஜ்... ஜோக் மாதிரி என்பதைவிட மிகச் சிறந்த தத்துவம் அய்யா அது..

    புகைப் படங்கள் அனைத்தும் அருமை. அதிலும் கத்திப்பாரா மேம்பாலம் ரொம்ப பிடித்து இருந்தது. மச்சானை மாடலாக்கியது அருமையிலும் அருமை.

    கேபிளாருக்கு என்னோட வாழ்த்துகள்.//

    நன்றி ராகவன் தங்களின் தொடர் வாசிப்புக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  15. arumai... arumai....arumai...

    hahahaha...hahaha..//
    நன்றி நைனா...

    ReplyDelete
  16. செம கலக்கல் சாண்ட்விச்...
    ///தனியாக இருந்தாலும் புரட்டி எடுக்கலாம்////
    ஏன் இந்த கோல வெறி ....
    வயசான காலத்தில Risk ஏதும் எடுக்காதீங்க//

    சரிங்க தலைவா

    ReplyDelete
  17. இந்த வாரம் நான்வெஜ்....
    அவ்வளவு டேஸ்டாக இல்லை....

    ஒருவேளை உங்களுக்கும் வயசாயிடிச்சோ !!!....//

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ராஜன்...

    ReplyDelete
  18. நல்லாயிருக்கு ஜாக்கி.

    குமுதம் வாங்கினவன் மட்டும் பார்க்க வேண்டிய விளம்பரத்தை உலகமே பார்க்க வலையில் எடுத்து போடணுமா..??//
    இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜம் சூர்யா..

    ReplyDelete
  19. //ஒரு சின்ன கருத்து....

    பூக்களின் மரணம் பெண்களின் கொண்டையில்...
    ஆண்களின் மரணம் பெண்களின் புன்......
    (பிக்காலி பயலுவலா தப்பா நினைக்கறதே உங்க அம்புட்டு பேருக்கும் பொழப்பா போச்சு.... )புன்னகையில்னு சொல்ல வந்தேன்.....//
    நாங்க ஒன்னும் தப்பா நினைக்கல..
    என்னத்துக்கு " புன்... " நீங்க நிப்பாட்டுனீங்க?//

    அது ஜோக்கு தலைவா...

    ReplyDelete
  20. //இவர்கள் ஒரு குழுவாக இருக்கின்றனர்.. தனியாக இருந்தாலும் புரட்டி எடுக்கலாம்... //

    கரெக்ட் ஆ சொன்னிங்க அண்ணே....//


    நன்றி ஜெட்லி...

    தனிபதிவாக இதனை பற்றி எழுத எண்ணம் உள்ளது...

    ReplyDelete
  21. இது ரொம்ப அனியாயம் ஜாக்கி,
    இப்படி ஒன்னு ஒன்னா போட்டு ”ஜவ்வடி அடிக்கலாம்” என்று திட்டம் வேண்டாம். அட்சய பாத்திரமாக அல்ல அல்ல குறையாதது. பேசாமல் ஒரு பதிவாக போட்டுவிடுங்க நண்பரே! புண்ணியமா போவும்..//

    மாணிக்கம் புண்ணியம் கிடைக்கறது அப்புறம்... போரடிச்சுபுடும்

    ReplyDelete
  22. நைட் எபெக்ட்ல் கிண்டி கத்திப்பாரா மேம்பால புகைப்படங்கள் அருமை :)//
    நன்றி பிளாக் பாண்டி தங்கள் பாராட்டுக்கு

    ReplyDelete
  23. நன்றி சின்ன பையன் தங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு

    ReplyDelete
  24. //பூக்களின் மரணம் பெண்களின் கொண்டையில்...
    ஆண்களின் மரணம் பெண்களின் புன்......
    //

    அண்ணா, அதுக்கு மூணு சுழி "ண்" வரும்ண்ணா!

    ReplyDelete
  25. பிக்காலி பயலுவலா தப்பா நினைக்கறதே உங்க அம்புட்டு பேருக்கும் பொழப்பா போச்சு.... //

    அண்ணா நாங்க தப்பா நெனக்கலீங்கண்ணா. நீங்க தான் தப்பா நெனச்சி பிழையா எழுதிட்டீங்கண்ணர்

    ReplyDelete
  26. அனைத்து படங்களும் அருமை.

    மச்சான் பார்க்கிறதுக்கு கோலங்கள் சீரியல்ல அபி தம்பியா வர்றவர் மாதிரி இருக்கு ??!!.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner