(POINT BREAK)முன்னாள் அமெரிக்க அதிபர்கள் கொள்ளை அடித்தால்...????


கொள்ளை அடிப்பது ஒரு கலை...அந்த கலையை திரில்லுக்காக செய்வது என்பது சிலருக்கு பொழுது போக்கு...ஆனால் செய்யும் தொழிலில்.. எந்த தொழிலாக இருந்தாலும் மற்றவர் கவனிக்கும்படி செய்வது என்பது, பலருக்கு பிடித்து காரியம்தான் ... லீகலாக செய்வது என்பது எப்போதும் பிரச்சனை வராது ...

ஆனால் சட்டத்துக்கு புறம்பாக செய்யும் வேலையை பலர் கவனிக்கும்படி செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல... அதற்க்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்... வாழ்க்கையில் எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டும்....மிகுந்த கட்ஸ் வேண்டும்... நெஞ்சில் உதை வாங்கும் தில் வேண்டும்

எல்லோராலும் இது போன்ற திரில்லை அனுபவிக்க முடியாது....கமிட்மென்ட் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இது சாத்தியம்.... கூட இருக்கும் நண்பர்களிடத்திலும் இந்த தைரியம் வேண்டும்..... அப்படி பேங்கை கொள்ளை அடிக்கும் திரில் திருடர்களை பற்றிய கதைதான் அவுட் பிரேக் படத்தின் கதை...

பாயின்ட் பிரேக் படத்தின் கதை இதுதான்...
அவர்கள் வித்யாசமான பேங்க் கொள்ளையர்கள்... அவர்கள் கொள்ளை அடிக்கும் போது முன்னாள் ஜனாதிபதிகளின் முகமூடிகளை அனிந்து கொள்ளை அடிப்பார்கள்.. (உம் )ரீகன், நிக்சன்.....

4 பேர்,27 பேங்க் கொள்ளைகள்... மூன்று வருடமாக செய்து கொண்டு இருக்கின்றார்கள்...ஒருவரையும் சுட்டது இல்லை... எவருக்கும் காயம் ஏற்படு்த்தியது இல்லை...பேங்க் லாக்கருக்கு போய் டைம் வேஸ்ட் செய்வதில்லை.. காலை பத்து மணியில் இருந்து மதியம் இரண்டு வரை கலெக்ஷன் ஆகும் பேங்க் கல்லா பணத்தைதான் அவர்கள் கொள்ளை அடிப்பார்கள்... எந்த பேங்கிலும் 90செகன்ட் அதாவது ஒன்றரை நிமிடம்தான் அவர்கள் நேரத்தை செலவிடுவார்கள்.... போகும் போது ஒருவன் மட்டும் பேண்டை அவிழ்த்து பின்பக்கம் ஒரு பக்கத்தில் தேங்கும் மற்றோரு பக்கத்தில் யூவும் எழுதியதை அவிழ்த்து காட்டி விட்டு செல்வார்கள்.... தேங்க்யுவை அவன் பட்டில் எழுதியது தவிர போலிசிடம் வேறு எந்த க்ளுவும் இல்லை.....


இந்த கேசை கண்டுபிடிக்க Johnny Utah (Keanu Reeves) வருகின்றார் அவருக்கு நண்பராகAngelo Pappas (Gary Busey) துப்பறிகின்றார்கள்...அவர்கள் கடல் அலையில் சறுக்கி விளையாடுபவர்கள் என்பதை கண்டுபிடிக்கின்றார்கள்.... கடல் சறுக்கல் கற்றுக்கெள்ள போய் அவர்களை பிடிக்கலாம் என்று நினைக்கின்றான்.... அதற்க்குTyler Endicott (Lori Petty) உதவுகின்றாள்... அவன் அந்த முன்னாள்அமெரிக்க அதிபர்கள் முகமுடி பேட்டு கொள்ளை அடிக்கும் அந்த கொள்ளை கூட்டத்தை எப்படி கண்டுபிடித்தான் என்பதை விறுவிறுப்பாய் வெண்திரையில் காணுங்கள்......

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

நம்புங்கள் இந்த திரில்லர் படத்தின் இயக்குனர் ஒரு பெண்...செம அட்டகாசமான திரைக்கதை....
மேலே இருக்கற ரெண்டு படத்திலயும் இருக்கும் இந்த அம்மாதான் இந்த படத்தைதோட இயக்குனர் இவர் நடிகையும் கூட..

இந்த படத்தின் தயாரிப்பாளார் நம்ம டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரோன்...இந்த படம் எடுக்கும் போதுதான் தலைவருக்கு திருமணம் நடந்தது..

படத்தின் ஹீரோ கெனுரிவீஸ் இந்த படத்திற்க்கு ஒப்பந்தம் போட்ட போது ஒரு சின்ன கதாபாத்திரத்துக்கு அழைத்து பின்பு பெரிய கதாபாத்திரம் வழங்கபட்டது..

இந்த படத்தின் உண்மையான ஹீரோ படத்தின் ஒளிபதிவாளர்Donald Petermanதான் என்றால் சந்தேகமே இல்லை...

கடல் சறுக்கு பற்றிய பின்புலம் என்பதால் படத்தின் பல காட்சிகள் ஓல்டுஸ்பைஸ் விளம்பரத்தை நினைவு படுத்தும்....கேமரா கோணங்கள் சான்சே இல்லை....


முக்கிய காட்சியாககெனு ஒரு கொள்ளைகாரனை துரத்தும் காட்சி பத்து நிமிட காட்சி... இந்த காட்சியில் கேமராமேனின் உழைப்பும் டைரக்டரின் எண்ணமும் திரையில் பிசகு இல்லாமல் காட்சிபடுத்தி இருப்பார்கள்...இந்த காட்சி பரபரப்பான காட்சி என்பேன்....என்னதான் படத்தை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்தாலும் கிளைமாக்ஸ் மற்றும் பல காட்சிகள் இடைவேளைக்கு பிறகு கொஞசம் போர்.... அந்த தொய்வை நீக்கி இருந்தால் இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் போய் இருக்கும்...இருந்தாலும் பார்க்கவேண்டிய படம் இது.... ஒளிப்பதிவுக்காக கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்...

காதலிக்காக, அவள் உயிருக்காக எத்தனை பேரை ஒரு எப் பி் ஐ காரன் இழப்பான் என்று என் மனைவி படம் முடிந்ததும் கேட்டால்... அது நியாயமான கேள்வியும் கூட...

படக்குழுவினர்விபரம்...

Directed by Kathryn Bigelow
Produced by James Cameron
Peter Abrams
Robert L. Levy
Written by W. Peter Iliff
Starring Patrick Swayze
Keanu Reeves
Gary Busey
Lori Petty
John C. McGinley
James LeGros
Cinematography Donald Peterman
Editing by Howard L. Smith
Distributed by 20th Century Fox
Release date(s) July 12, 1991
Running time 123 minutes
Country United States
Language English
Budget $24,000,000 (estimated)
Gross revenue $83,531,958 (Worldwide)


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

19 comments:

 1. Great review JackieSekar!!!

  Hari Rajagopalan

  ReplyDelete
 2. சொல்லிட்டிங்களே... பார்த்துருவோம்....

  ReplyDelete
 3. தேங்க்ஸ் தலைவா,"படமும்"-விமர்சனமும் சூப்பர் தல.
  தினமும் மேயுற வலைப்பதிவுகளில் உங்களையும் சேர்த்துகிட்டேன்.
  "ஜெரி ஈசானந்தா"-மதுரை.[ஒட்டு -போட்டாச்சு ]

  ReplyDelete
 4. நன்றி ஹரிராஜகோபாலன்...

  ReplyDelete
 5. நன்றி பிளாக் பாண்டி

  ReplyDelete
 6. தேங்க்ஸ் தலைவா,"படமும்"-விமர்சனமும் சூப்பர் தல.
  தினமும் மேயுற வலைப்பதிவுகளில் உங்களையும் சேர்த்துகிட்டேன்.
  "ஜெரி ஈசானந்தா"-மதுரை.[ஒட்டு -போட்டாச்சு ]//
  நன்றி ஜெர்ரி தொடர்ந்து வாசிக்க போவதற்க்கு.....

  ReplyDelete
 7. கமிட்மென்ட் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இது சாத்தியம்]]


  சரியா சொன்னீர்கள் நண்பரே.

  ReplyDelete
 8. பார்த்து விடுவோம் இன்னைக்கே !!!

  அப்புறம் படத்தின் பெயர்
  POINT BREAK கா? அல்லது OUT BREAK கா..?

  ReplyDelete
 9. படம் பார்த்துறலாம் தலைவா !!!!

  ReplyDelete
 10. அப்புறம் படத்தின் பெயர்
  POINT BREAK கா? அல்லது OUT BREAK கா..?

  போட்டோவில் point break என்று இருக்க சில இடங்களில் out break என்று மாற்றி எழுதி விட்டீர்

  திருத்தவும் :)

  ReplyDelete
 11. கமிட்மென்ட் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இது சாத்தியம்]]


  சரியா சொன்னீர்கள் நண்பரே.\\

  நன்றி ஜமால்

  ReplyDelete
 12. பார்த்து விடுவோம் இன்னைக்கே !!!

  அப்புறம் படத்தின் பெயர்
  POINT BREAK கா? அல்லது OUT BREAK கா..?“

  அப்புறம் படத்தின் பெயர்
  POINT BREAK கா? அல்லது OUT BREAK கா..?

  போட்டோவில் point break என்று இருக்க சில இடங்களில் out break என்று மாற்றி எழுதி விட்டீர்

  திருத்தவும் :)//


  தவற்றை சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி மின்னல்

  ReplyDelete
 13. படம் பார்த்துறலாம் தலைவா !!!!//
  நன்றி இளவட்டம் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்கும்....

  ReplyDelete
 14. நன்றி ஜாக்கி, தேடி பிடிச்சு பாத்துட்டுதான் இருக்கேன்!

  கீழ்கண்ட தளத்தில dvd கிடைக்காதவங்க பார்க்கலாம்!

  http://salloumi.com

  ReplyDelete
 15. Kadaisi 45 nimisham thaan padathoda highlight-ey .. chancey illa atakaasam.

  yendha padathilayum Sky Diving-ah ivlo super-aah kamichadhila.. also Surfing-aiyum atakaasama kamichirukaanga..

  but starting-la surfing scenes thavira onnumey ila, konjam bore adichiruchu..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner