(THE PEACE MAKER) தொலைந்து போன பத்து அணுகுண்டுகள்...


நரைத்த தலையோடு ஒருவன் மிக கவர்ச்சியாக இருக்க முடியுமா? உலகின் மிக அழகான செக்சியான ஆண்கள் பட்டியலில் இவன் பெயரும் இடம் பெற்றது... அந்த நடிகனின் பெயர் George Clooney பொதுவாய் இந்த நடிகனின் கண்கள் பல செய்திகளை சொல்லும்...நல்ல அற்புதமான உடல்வாகுக்கு சற்றே பொறுத்தம் இல்லாத George Clooney கண்கள்தான் அவரின் பெரிய பிளஸ்....


அமெரிக்கர்களை பொறுத்தவரை அவர்களது படங்களில் எதையாவது தொலைத்துவிட்டு தேடுவது என்றால் அவர்களுக்கு இருட்டு கடை அல்வா சாப்பிடுவது போல் ரொம்பவும் பிடித்தமான விஷயம்..
தேடிக்கண்டுபிடித்த கண்டம் என்பதால் தெடுதல் ரொம்ப பிடித்தமான விஷயம் போலும்....

பொதுவாக அணு ஆயுதம் பற்றி அதன் பிரச்சனைகள் பற்றி இந்தியர்கள் அதிகம் அறிந்து இருக்க வாய்பில்லை ... எனக்கு தெரிந்து தமிழகத்தில் விக்ரம் படம்தான் பட்டி தொட்டி ரசிகர்களுக்கு ராக்கெட் எதிரி கைகளில் மாட்டினால் ஏற்படும் சேத விபரங்களை ஓரளவு விளக்க முயற்ச்சித்து எனலாம்...

இருந்தாலும் படித்தவர்கள் இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் ஹீரோஷிமா நாகசாகி போன்ற நகரங்கள் அமெரிக்கா போட்ட அணுகுண்டால் தரைமட்டம் ஆனதை எல்லோரும் அறிவார்கள் அந்த பயம்தான் இந்த பீஸ்மேக்கர் படத்தின் அடி நாதம்....

பீஸ்மேக்கர் படத்தின் கதை இதுதான்......

ரஷ்யாவில் இருந்து பத்து அணுகுண்டுகள் ரயில் மூலம் மிகவும் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்து செல்லும் போது அந்த பத்தையும் பக்கத்து ரயில் டிராக்கில் வரும் ரயிலில் வம் எமகாதகர்கள்.. எல்லா ராணுவ வீரர்களையும் கொன்று விட்டு அந்த பத்து குண்டையும் அபேஸ் செய்து விடுகின்றார்கள்.... போகும் போது பத்து குண்டில் ஒரு குண்டை வெடிக்க செய்து அதனை விபத்து போலஜோடனை செய்கின்றனர்.... ஆனால் அமெரிக்காவின் ஒயிட் அவுசில் குப்பை கொட்டும் Julia Kelly (Nicole Kidman)க்கு மட்டும் இது விபத்து அல்ல... விபத்து போர்வையில் நடந்த அணுகுண்டு கொள்ளை என்பதை கண்டுபிடிக்கின்றாள்...Lieutenant Colonel Thomas Devoe (George Clooney) ஒரு யூ எஸ் ஆர்மி ஸ்பெஷல் ஆபிசர் ... ரஷ்யாவுக்கு போன் போட்டு கேட்கும் போது ரஷ்யா நடந்த திருட்டை மூடி மறைப்பதை அறிந்து கொண்டு...கிட்மேன்,குளுனி இருவரும் தொலைந்து போன அணு ஆயுதத்தை தேடி செல்கின்றார்கள்...

கடத்தலின் பின்புலம் என்ன???
கடத்தல்காரர்கள் யார்?
நுனியும் தெரியாமல் அடியும் தெரியாமல் அந்த இருவரும் என்ன கிழித்தார்கள்?

ஏன் ?எங்கு அணுகுண்டு தொலைந்தாலும் அமெரிக்கா பதறுகின்றது போன்ற நியாயமான கேள்விகளுக்கான விடையை வெண்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

படத்தின் இயக்குனர் Mimi Leder டீப் இம்பெக்ட் என்ற படத்தை இயக்கியவர் ...இந்த படத்தின் விறு விறுப்பும் ஆக்ஷன் காட்சிகளும் சான்சே இல்லைஎனலாம்....

படத்தின் முதல் காட்சியான அணுகுண்டு கடத்தும் அந்த முதல் காட்சியும் அதன் ஒளிப்பதிவும் அற்புதம் Dietrich Lohmann...காட்டிய உழைப்பு அந்த முதல் பத்து நிமிடம் போதுமானது....

இரண்டு ரயில்களும் மோத போகின்றது என்பதை பார்வையாளனுக்குள் ஒரு பதட்டத்தை உருவாக்க பயணிகள் ரயிலையும் அதன் சந்தோஷங்களை காண்பித்துவிட்டு அதே டிராக்கில் அணுகுண்டு ரயில் வருவதை காட்டுவதும்....

ஜன்னல் ஓர இருக்கையில் இருக்கும் தாயின் மார்பில் பால் குடித்து கொண்டு இருக்கும் குழந்தையில் இருந்து கேமரா மெல்ல வெளியே வந்து எதிர் வரும் ரயிலை காட்டி நடக்க போகும் வீபரீதத்தை புரிய வைக்க அந்த ஒரு காட்சி போதும்.....

நிக்கோல் அறிமுகம் அகும் அந்த முதல் காட்சி ஒரு நீச்சர் குள காட்சி அந்த காட்சியின் போது கேமரா தண்ணீரில் இக்கும் போது நீக்கோல் சுழல்வதை போலவே பார்வையாளனும் சழல்வதை போல் படம் எடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் Dietrich Lohmann பாராட்டபட வேண்டியவர்..

நிக்கோல் ஒரு வெள்ளை சட்டை ஒரு ஸ்கர்ட் அணிந்த படி வேகமாய் நடந்து வரும் காட்சி கவிதை ரகம்...அந்த பெரிய இடத்தின் வளமையும் நடையும் அற்புதம்... பின்ன ஒயிட் அவுசில் வேலை என்றால் சும்மாவா?

நிக்கோல் நடிகர் டாம்குரிசின் முன்னாள் மனைவி....

குளுனி பார்மல்சில் வரும் காட்சிகளில் அவர் கம்பீரம் அபாரம்...அதை விட அந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் அந்த பாலத்தில் நடக்கும் சண்டைகாட்சிகள் அற்புதம்...

குளுனி ஒரு ஸ்கிரீன் பிளே ரைட்டர்,தயாரிப்பாளர்,இயக்குனர் போன்ற பன்முகதன்மை கொண்டவர்
எனக்கு முதன் முதலில் சேர்ட்டிலைட் மூலம் பூமியில் போகும் காரின் என்னை வாசிக்க முடியும் என்பதை இந்த படத்தின் மூலம்தான் தெரிந்து கொண்டேன்..

ஆஸ்திரேலியாவில் சில விபரங்களை சேகரிக்க போகும் அந்த காட்சியும், கம்யூட்டரில் இருந்து தகவல் காப்பி செய்யும் அந்த காட்சி விரல் நகம் கடிக்க வைக்கும்....

ஒரு பென்ஸ் கார் இந்த படத்தில் குளுனியால் நாய் அடி பேய் அடி படுவதை பார்த்தால் கார் ரசிகர்களுக்கு கண்ணில் நீர் வரவழிக்க வைக்கும் காட்சி அது...அது போல் அந்த காட்சிக்கு முன் இருக்கும் கார் சேசிங் ஏ ஒன் ரகம்...

ஆக்ஷன் பட ரசிகர்கள் இந்த படத்தை தவற விட கூடாது...

அதிகார வர்க நாடுகள் தங்கள் சுய லாபத்துக்காக மேற்கொள்ளும் விஷயங்கள் எப்படி தனிமனிதனை பாதிக்கின்றது என்பதையும்....

வில்லன் அமெரிக்கவிடம் டிவியில் மிரட்டல் விடுக்கும் போது பேசும் டயலாக்குகள் மிகவும் அற்புதமானவை....

படக்குழுவினர் விபரம்....

Directed by Mimi Leder
Written by Michael Schiffer
Starring George Clooney
Nicole Kidman
Marcel Iureş
Music by Hans Zimmer
Cinematography Dietrich Lohmann
Distributed by DreamWorks
Release date(s) September 26, 1997
Running time 124 min.
Language English
Budget $50 milliom
Gross revenue Domestic:
$41,263,140
Worldwide:
$110,463,140

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

19 comments:

 1. //ஆண்கள் பட்டியலில் இவன் பெயரும் இடம் பெற்றது//

  இத்துறையில் இருக்கும் நீங்களே ஒரு நடிகனை அவன் இவன்னு சொல்றது சரியா?

  ReplyDelete
 2. ரைட்டு...லிஸ்ட்ல சேர்த்துடுவோம்!

  ReplyDelete
 3. இப்படத்தின் இயக்குனர் Mimi Leder ஒரு பெண் என்பதை குறிப்பிட மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம் ....

  //அந்த பெரிய இடத்தின் வளமையும் நடையும் அற்புதம்... //

  ரொம்ப ரசிச்சி இருக்கிற மாதிரி தெரிது......

  ReplyDelete
 5. /*

  //ஆண்கள் பட்டியலில் இவன் பெயரும் இடம் பெற்றது//

  இத்துறையில் இருக்கும் நீங்களே ஒரு நடிகனை அவன் இவன்னு சொல்றது சரியா?

  */

  அண்ணே... அது ஒரு நெருக்கத்தை கொடுக்கும்னே...

  ReplyDelete
 6. இலவச தறவிறக்கம் கிடைக்குமா? :(( :((

  ReplyDelete
 7. படத்தில் வில்லன் மேலயும் ஒரு பரிதாப உணர்வை ஏற்ப்படுத்துவது சிறப்பு!
  ஒருவேளை இயக்குனர் பெண் என்பதால் இதை செய்திருக்கலாம்!

  பெண் இயக்கி வியந்த சிறந்த ஆக்சன் படம் இது!

  ReplyDelete
 8. படத்தின் பரபரப்பு பதிவிலயும் இருக்கு.

  ReplyDelete
 9. தேடிக்கண்டுபிடித்த கண்டம் என்பதால் தெடுதல் ரொம்ப பிடித்தமான விஷயம் போலும்....4 AM TO 10 PM YOU ARE WORKING...STILL HOW YOU ARE ABLE TO THINK LIKE THIS?..!

  FROM YOUR REVIEW ONLY I AM COMING TO KNOW MORE ABOUT THE TECHNICAL CREW......

  NOW A DAYS....PEOPLE STARTED TO SEE MOVIE FOR TECHNICIANS (APART FROM HERO AND HEROINE) ALSO....

  ReplyDelete
 10. ஜாக்கி அவர்களே,
  உங்களால நான் தினமும் ஒன்று முதல் மூன்று ஹாலிவுட் படம் பார்த்துட்டு இருக்கேன்.நன்றி. ஆனாலும் இந்த வெறில போன சினிமா பைத்தியம் அகிடுவேனோ தெரியல.

  //இலவச தறவிறக்கம் கிடைக்குமா//
  www.oneclickmoviez.com பதிவர் யாரோ சொன்னது அவருக்கும் நன்றி

  ReplyDelete
 11. தொடர்ந்து கலக்குங்க...

  ReplyDelete
 12. முதல் படத்தில் இருக்கும் நபர் தசாவதார கமல் மாதிரியே இருக்கு தல..,

  ReplyDelete
 13. //பின்ன ஒயிட் அவுசில் வேலை என்றால் சும்மாவா?//

  She is not a white house employee. She is the head of U.N. Nuclear Control agency. Those bombs are to be destroyed under her supervision as per Russia and U.S treaty.

  Subu

  ReplyDelete
 14. /
  எனக்கு முதன் முதலில் சேர்ட்டிலைட் மூலம் பூமியில் போகும் காரின் என்னை வாசிக்க முடியும் என்பதை இந்த படத்தின் மூலம்தான் தெரிந்து கொண்டேன்..
  /

  ஹெலிகாப்டர்ல இருந்து பைனாகுலர்ல பாத்தா தரைல இருக்கிற வைரஸே தெரியும்ங்ணா! தமிழ்படம்லாம் பாக்கறதில்லைங்களா???
  :))))))))))))))

  ReplyDelete
 15. /
  ஆக்ஷன் பட ரசிகர்கள் இந்த படத்தை தவற விட கூடாது...
  /

  பாத்திடறேன்

  ReplyDelete
 16. படம் பார்க்குற ஒரு எஃபெக்ட கொடுக்குது உங்க விமர்சனம். போட்டோக்கள் எல்லாம் கலக்கல்.. அதுவும் குறிப்பா.....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner