வாத்தியார் மாமா (சிறுகதை)

வாத்தியார் மாமா (சிறுகதை)





எங்கள் பள்ளியில் நாதமுனி வாத்தியார் மாணவர்களின் அபிமானம் பெற்ற வாத்தியார்...எல்லோரும் மாணவர்களை அடக்க பிறம்போடு திடிர் கூட்டனி சேர்கையில், வாத்தியார் நாதமுனி மட்டும் அன்பால் அடக்குபவர்.., மன்னிக்கவும் அன்பால் மாணவர்களை கட்டுக்குள் கொண்டு வருபவர்..பாடம் நடத்தும் போது கூட தன் நகைச்சுவை உணர்வோடு சப்ஜெக்ட்டையும் கலந்து தரும் மந்திரக்காரர்....


உலக விஷயங்களையும் உள்ளுர் விஷயங்களையும் பாடத்தின் போது கலந்தது வகுப்பு எடுப்பதால், வகுப்பில் எந்த மாணவனும் தூங்கிநான் பார்த்து இல்லை...பள்ளியின் வளாகத்தில் பட்டபெயர் வைத்து அழைக்காத ஒரே வாத்தியார் நாதமுனி வாத்தியார்தான்.....சைக்கிளில் நாதமுனி வாத்தியார் வீட்டுக்கு போகையில் அவர் சைக்கிள் பின் சீட்டில் அவர் வீட்டை தான்டி செல்லும் யாரவது ஒரு பையன் உட்கார்ந்து செல்வான்....


இவைகள் எல்லாவற்றையும் விட,நாதமுனி வாத்தியாரை எல்லா மாணவர்களுக்கு பிடிக்க மற்றுமொறுக்காரணம் பரிட்சை ஹாலில் சூப்பர்வைஸ் செய்ய வரும் வாத்தியார்கள் எல்லாம் இஞ்சி தின்ன குரங்கு போல் முகத்தை வைத்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பின்புறம் கைகட்டி தர்பார் மண்டபத்தில் நடப்பது போல் நடக்கும் போது, ஒன்மார்க் கேள்விகளுக்கு விடை சொல்லி கொடுக்கும் ஒரே வாத்தியார் நாதமுனி வாத்தியார்தான்.


தொண்டையில் இருக்கும் ஆனால் எழுத வராது பேந்த, பேந்த திருட்டு முழி முழிக்கும், மாணவன் அருகில் வந்து அவன் கேட்காமலேயே தொண்டையில் இருக்கும் வார்த்தையை எடுத்துகொடுப்பவர் அவர்தான்.... அதற்க்காக அவர் மாணவர்களை காப்பி அடிக்க ஒருபோதும் அவர் அனுமதித்ததில்லை... அப்படி ஒரு பரிட்சையில் நாதமுனிவாத்தியார்தானே... செம ஜாலி பார்ட்டி... நம்மல எங்க பிடிக்கபோறாறு ?என்று அலட்சிய்த்தோடு காப்பியடித்த மாணவனை பேப்பரை வாங்கி கொண்டு, அந்த பையனை பரிட்சைஹாலை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்..

அவன் கெஞ்சினான், கதறினான், கண்ணில் நீர் வைத்தான்.. கடைசிவரை அவர் உறுதியாய் நின்றார்...அப்போதுதான் நாமுனி வாத்தியர் எவ்வளவு ஜாலிடைப்போ அதே போல் அவர் ரொம்ப சீரியசாகவும் மாறுவார் என்பதை மாணவர்கள் அந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்தார்கள் என்னையும் சேர்த்துதான்..


நான் அவரை வாத்தியார் மாமா என்று அழைப்பேன். அவர் எனக்கு தூரத்து சொந்தமும் கூட எங்கள் வீட்டில் இருந்து அவர் வீடு பத்து வீடுகள் தள்ளி இருந்தது. அவருக்கு மூன்றுஆண் ஒரு பெண் குழந்தை இருந்தது...என் வீட்டில் நான் ஒரே பையன் என்பதால் நான் அவர் வீட்டில்தான் போய் விளையாடுவேன், அவர் பையன்கள்தான் எனக்கு நண்பர்கள்...என் அப்பாவும் அவரும் பால்ய சிநேகிதர்கள்.... வாத்தியார் மனைவி அதாவது என் அத்தை அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் பிள்ளைகள் போலவே என்னையும் ஒரு பிள்ளையாக பார்த்துக்கொண்டார்...

வாத்தியார் மாமா எவ்வளவு ஜாலியான ஆளாக என்னிடம் அவர் வீட்டில் பழகினாலும், பள்ளியில் என்னை ஏறெடுத்து கூட பார்க்கமாட்டார்..இவ்வளவு ஏன் அதே பள்ளியில்தான் அவர் மூன்று மகன்களும் படித்தார்கள்...அவர்களோடு ஒருநாள் கூட பேசி எனக்கு நினைவு இல்லை...பரிட்சை சமயத்தில் பேப்பர் கட்டுகளை பள்ளி முடிந்ததும் தன் மூன்று மகன்களில் யாரிடமாவது கொடுத்து பத்திரமாக வீட்டுக்கு எடுத்து செல்ல பணிப்பார்... அதே போல் அவர்கள் மகன்களும் ஒருநாளும் பள்ளியில் தான் வாத்தியதர் மகன் என்று பெருமை கொண்டதில்லை... சிறு வயதில் நான் அவர் வீட்டு தோட்டத்தை கடக்கையில் வாத்தியார் மாமா என்னை குட்டியானை என்று அழைப்பார்... ஏன் என்றால் என் அப்பா சற்று உடல் பருமன் உள்ளவர்.. அதனால் அவர் பெரிய யானை அதனால் நாதமுனிவாத்தியாருக்கு மாமாவுக்கு நான் குட்டியானை ஆகிவிட்டேன்.... தோட்டத்தில் கோமணம் அணிந்து வெண்டை ,கீரைச்செடிகளுக்கு அவர் நீர் பாய்ச்சும் அழகே அழகுதான்...

பள்ளியில் நான் பரிச்சை எழுதும்,பரிட்சை ஹாலுக்கு அவர் வந்தாலும் கூட அவர் எனக்கு எதையும் சொல்லிதந்தது இல்லை, நானும் அதை எதிர்பார்தது இல்லை...தெரிந்ததை எழுதுவேன் தெரியாததை எழுதமாட்டேன்... அவர் இருக்கும் போது முழிப்பதோ,அல்லது பாவமாக அவர் முகத்தை பார்பதோ எனக்கு பிடிக்காத விஷயங்கள்...அவருக்கும்தான்..

வாத்தியார் மாமா என்னை இரண்டு முறை திட்டி இருக்கின்றார். ஒன்று அவர் புது வீடு கட்டிய போது, புதுதாய் கட்டிய சிமென்ட் சுவருக்கு தண்ணீர் ஊற்றும் போது நான் ஒரு புது சில்வர் குடத்தை போட்டு உடைத்தேன்...அது புதிய குடம் என்பதால் “மம்ட்டி, மம்டடி ஒரு குடத்தை புடிக்க கூட துப்பில்லை என்று தி்ட்டினார்...

அடுத்த திட்டு அரையாண்டு பரிச்சை பேப்பர் திருத்தும் போது எனது நண்பனின் தம்பி மார்க்கை பார்த்தவிட்டு அவனிடம் சொல்ல அது பள்ளி முழுவதும் தெரிய, என்னை அழைத்த நாதமுனி வாத்தியார் மாமா இனி என் வீட்டு பக்கம் தலை வைத்து படுக்காதே என்றார்...

நான் செய்தது தப்பு என்றாலும் வீட்டுவாசல் மிதிக்காதே என்ற வார்த்தை என்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டது.அதன் பிறகு அவர் வீட்டு வாசல் நான் மிதித்ததே இல்லை.. அவர் எதி்ரில் வந்தால் கூட அவருக்கு ஒரு வணக்கம் கூட வைக்காமல் அவரை முறைப்போடு கடந்து போவேன்...அவர் பள்ளி ஆண்டு விழாவில் அசிரியர்கள் குழு நடத்திய தெரு கூத்து நிகழ்ச்சியில் அவர்தான் கெட்டிக்காரன்.

மாணவர்கள் எல்லோரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து டேய் உங்க வாத்தியார் மாமா கலக்குறார்டா என்று எண்ணிடம் கமென்ட் அடித்த போது எனக்கு அது ரசிப்பாய் இருக்கவில்லை.. எப்படி வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லலாம் என்ற கோபம் எனக்குள் ஆழ பதிந்து விட்டது....

அவர் பிள்ளைகளிடம் மட்டும் பள்ளியில் பேசுவதுண்டு...சிறு வயதில் இருந்து பாகிய பழக்கமாயிற்றே....அதே போல் எங்கள் அந்தை எங்கள் ஊர் பொன்விளைந்த களத்தூர் கோவிலுக்கு வாரந்தோரும் வெள்ளிக்கிழமை வரும் போது என்னை பார்த்து நலம் விசாரிப்பாள்...

“மாமா ஏதோ கோபத்துல ஒரு வார்த்தை சொல்லிட்டார், அதுக்காக வீட்டு பக்கமே வராம இருக்குறாதா? ” மாமா உன்ன்னை பத்தி அடிக்கடி விசாரிப்பாருடா? ஒரு வார்த்தை சொல்ல கூட அவருக்கு உரிமை இல்லையா? என்று திட்டி விட்டு போனாள்...

அவர் அதன் பிறகு 9ம் வகுப்பு நான் படித்த போது வாத்தியார் மாமாவுக்கு உடம்புக்கு முடியாமல் போய் விட்டது என் அப்பா அவரை மருத்துவமனையில் போய் பாத்து விட்டு இந்த வாரம் தாண்டுவது சந்தேகம் என்று கண்கலங்கி ரொம்ப வருத்தப்பட்டு சொன்னார்...அதன் பிறகு நான் வாத்தியார் மாமாவை மறந்துபோய்விட்டேன்..

ஒரு மாதம் கழித்து ஒரு வியாழக்கிழமை அன்று பள்ளி விட்டு மாலை நாங்கள் வெளிவரும் போது, நாதமுனி வாத்தியார் இறந்து விட்டதாக சொன்னார்கள்...எனக்கு எந்த வருத்தமும் இல்லை..என் நண்பன் லெனின் நாளைக்கு வீவு மச்சான் என்று சொல்லி குதித்தான். இன்னொரு வெளியூர் நண்பன் வெள்ளி, சனி,ஞாயிறு மூன்று நாளும் லீவு என்று கணக்கு போட்டு ஆனந்த கூத்தாடினான்...

நான் பள்ளியை விட்டு வீட்டுக்கு வரும் போதே ஊரில் சாவு மேளம் காதை கிழித்தது. தென்னை மட்டைகள் வெட்டி தெருவோரம் நட்டார்கள்...ஊரில் பெரிய சாவு என்பதால் ஊரே சோகத்தில் ஆழ்ந்தது இருந்தது...என்னை எந்த சோகமும் தாக்கவில்லை சில காலனி பெண்கள் ஆண்டைய்யா என்ற மார்பில் அடித்து கொண்டு தலைவிரி கோலமாக ஓடிக்கொண்டு இருந்தார்கள்..நான் புத்தகபையை வீட்டில் வைத்து முகம் கழுவும் போது அம்மா தலை குளித்து பாவாடை மேலேற்றி மார்பில் கட்டி, தலை குனிந்து முடியை துண்டால் அடித்து சிக்கு எடுத்துக்கொண்டே, அம்மா சொன்னாள்...

“நான் சாவு வீட்டுக்கு போயிட்டு வந்துட்டேன் செம கூட்டம்”.
அப்பா கள்ளகுறிச்சி வரை போயிருக்கார், அவருவர்ர வரைக்கும் நீ,சாவு வீட்ல அப்பா சார்பா இரு என்று அம்மா சொன்னாள்...

என்னை வீட்டு பக்கம் தலை வைத்து படுக்காதே என்று உயிரோடு சொன்ன வாத்தியார் மாமாவை உயிர் இல்லாமல் பார்க்க நான் என் வீட்டில் இருந்து கிளம்பினேன்...
அவர் உயிரோடு இருந்தவரை அவர் வீட்டு பக்கம் போகவில்லை...நான் அங்கு போன போது ஊரில் உள்ள எல்லா பெரிய தலைகளும் இரும்பு சேரில் உட்கார்ந்து மாலைமலர் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தனர்..இன்னும் சில பேர் சாவுக்கு வந்தவர்களுக்கு டீ,காபி கொடுத்க்கொண்டு இருந்தனர்.
எங்கள் ஊர் நாட்டமைகாரர் இரவு 5 பெட்ரோமாக்ஸ் லைட்டு வேண்டும் என்று, லைட்டுகாரரிடம் ஆர்டர் கொடுத்து கொண்டு இருந்தார்..

வீட்டின் ஒப்பாரி சத்தம் தெருவில் கேட்டது...நான் உள்ளே போனேன் நல்ல கூட்டம், போகும் போதே என்னிடம் வாத்தியார் பெரிய பையன் கண்ணீரும் கம்பலையுமாக,
“டேய், மாமாவை பாருடா நம்மளை எல்லாம் விட்டுட்டுரொம்ப சீக்கிரமா மேல போயிட்டாரு.. என்று கதற இதுவரை அவன் அழுது பார்க்காத நான் அவன் அழுகை என்னை கொஞ்சம் சலனபடுத்தியது...
சவம் ஹாலில் வைக்கபட்டு இருந்தது என்னை பார்த்ததும் என் அத்தை,வாத்தியார் மாமா சவத்திடம்,

ஐயா, பாருய்யா உயிரில்லாத உன் உடம்பை பார்க்க ரோஷக்காரன் வந்து இருக்கான்யா,
“அப்படி என்ன சொல்லிட்டேன்? அந்த குட்டியானையை??? கோபத்துல ஒரு வார்த்தை சொல்லிபுட்டேன், அதுக்காக இந்த பய ,இந்த வீட்டு பக்கமே வரமாட்டேன்கிறானேன்னு சொல்லி நீ எப்பவுமே வருத்தபடுவியே,

“என்ராசா, இப்ப வந்திருக்கான் பாருயா...உன்னை பார்க்க குட்டியானை வந்துருக்கான், கண்முழுச்சி பாருய்யா”

என்று என் அத்தை மார்பில் அடித்தக்கொண்டு அழுத போது, என் கண்களில் எங்கிருந்து கண்ணீர் சுரந்தது என்று தெரியவில்லை, வாத்தியார் மாமா என்னை விட்டுட்டு போயிட்டியே என்று கத்தி தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தேன்... பெருங்குரல் எடுத்து அழுத என்னை ஊரில் உள்ளவர்கள் வித்யாசமாக பார்த்தார்கள்.......


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

18 comments:

  1. வாத்தியார்(மாமா)வின் மீட்டெடுப்பு அருமை

    கடைசியில் கண்கலங்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  2. அருமை... அருமை..... அருமையான கதை.

    ReplyDelete
  3. வாத்தியார் மாமா ரொம்பவே உருக்கிட்டார்

    உங்கள் அனுபவம் ரொம்ப அருமை

    உங்க மேல அம்பூட்டு பாசம்

    ReplyDelete
  4. கலங்கடித்து விட்டீர்கள்...

    உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. வாத்தியார்கள் எப்பவும் வணக்கத்துக்குரியவர்கள் ஜாக்கி..(ராகவன் சார் எப்படி இருக்கீங்க?)

    ReplyDelete
  6. உண்மையான கதையா பாஸ்?
    நெகிழ்ச்சியா இருக்கு..

    ReplyDelete
  7. அருமையான கதை.
    கடைசியில் கண்கலங்க வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  8. கடைசியில் கண்கலங்க வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  9. ஜாக்கி
    தினமும் பதிவிடுவது முக்கியம்தான் (especially நட்சத்திர பதிவராக), ஆனால், முன்தினம் பின்னூட்டம் இட்டவர்களுக்கு பதில் சொல்வதும் முக்கியம்.
    என்றும் அன்புடன்
    ஸ்ரீராம் Boston USA

    ReplyDelete
  10. Sriram said...
    ஜாக்கி
    தினமும் பதிவிடுவது முக்கியம்தான் (especially நட்சத்திர பதிவராக), ஆனால், முன்தினம் பின்னூட்டம் இட்டவர்களுக்கு பதில் சொல்வதும் முக்கியம்.
    என்றும் அன்புடன்
    ஸ்ரீராம் Boston USA

    Naanum idhai vali moligiren..um.krish

    ReplyDelete
  11. ஜாக்கி
    இப்போதுதான் பதிவை படித்தேன், இது கதையா இல்லை சொந்த அனுபவமா? நிஜமாகவே அனுபவத்தை படித்து போல் இருந்தது. இது முழுக்க கற்பனை என்றால் - நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்று அர்த்தம்.
    என்றும் அன்புடன்
    ஸ்ரீராம், Boston

    ReplyDelete
  12. சேகர்
    நானும் நாதமுனி வாத்தியாரிடம் படித்தவன் , ஜாக்கி வாத்தியாரை பற்றி சொன்னது அனைத்தும் உண்மை, நாதமுனி வாத்தியார் இறந்தபோது நானும் பள்ளியிலிருந்து சென்று பார்த்தேன்

    ReplyDelete
  13. வணக்கம் ஜாக்கி

    மாதா, பிதா, குரு தெய்வம் .... என்ற வரிசைக்கு மிக பொருத்தமானவர் நாதமுனி வாத்தியார்.

    ReplyDelete
  14. ரொம்ப வள வளன்னு இருக்கு தலை.
    கடைசீயில் உங்க டச் பிரமாதம். கலங்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  15. அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஜாக்கி.

    ஹரி ராஜகோபாலன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner