(Cinema Paradiso) (உலக சினிமா / இத்தாலி)நெஞ்சை தொடும் கதை....
நான் கடலூர் கமலம் தியேட்டரில் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தேன்...3ம் வகுப்பு டிக்கெட்தான் என்னிடம் கொடுக்க சொல்லி கொடுப்பார்கள்..தனசேகரன் என்று எழுதிய அலுமினிய டப்பாவில் 25 ரூபாய்க்கு சில்லரை போட்டு தருவார்கள்...60 டிக்கெட் என்றால் எந்த எண் வரை கொடுக்க வேண்டும் என்று எண்ணி மடித்து வைத்து கொடுப்பார்கள்... நாம் அந்த மடித்து வைத்து இருக்கும் டிக்கெட் வரை கொடுக்க வேண்டும்...
டிக்கெட் புக்கை எடுத்துக்கொண்டு கவுண்டர் நோக்கி நடக்கையில் சிறைக்கைதிகள் போல டிக்கெட் வாங்க நெருக்கி கொண்டு இருக்கும் மனிதர்களை பார்க்கையில் கண்களில் ஒரு இறுமாப்பு இருக்கும்...(இப்போது நினைத்து பார்க்கின்றேன்... டிக்கெட் கொடுக்கற எனக்கே இவ்வளவு தடிப்புன்னா? போலிஸ்காரன்களுக்கு எப்படி இருக்கும்???)
நான் கவுண்டர் உள்ளே போய் உடனே கதவு திறக்க மாட்டேன் வத்தி ஏத்தி சாமி கும்பிட்டு விட்டு கவுன்டர் கதவை திறந்தால் பத்து கைகள் அந்த சிறிய ஓட்டை வழியாக கை நீட்டிக்கொண்டு இருக்கும் ஒவ்வொறு விரல்களிலும் விதவிதமான கசங்கிய ரூபாய்தாள்கள் இருக்கும்.....
கடலூர் கிருஷணாலா திரை அரங்கில் அபூர்வ சகோதர்கள் படத்துக்கு 2ரூபாய் டிக்கெட்டுக்கு நெரிசலில் சிக்கி, எனக்கு மேலே கவுண்ட்ரில் ஏறி போனவன் என் மேல் கால் வைக்க, அவன் காலை கடித்து அவனை அலறவைத்து கூட்ட நெரிசலில் மிதிபட்டு சட்டை கிழிந்து....தியேட்டர் உள்ளே போனால் கமல் கவுதமி இருவரும் மனதில் நிற்க்காமல் கிழிந்த சட்டையும் அப்பாவின் கோபமுகமும் நினைவில் நின்றது....
எங்கள் கூத்தப்பாக்ம் ஊருக்கு பக்கத்தில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டூரிங் டாக்கிசில் மாலை புனல் ஸ்பிக்கரில் வளையபட்டி தவில் போடும் போதே, இங்கு அன்று பார்க்க போகும் சினிமா பற்றி எனக்குள் மனத்திரையில் வேறு ஒரு படம் ஓடும்.... டாக்கி்சில் 4 இன்டர்வெல் விடும் போது விற்க்கும் தேங்காய் ரொட்டி முறுக்கு எனக்கு பிடித்தமான ஒன்று....
படம் இன்டர்வெல்லில் ஆப்பரேட்டர்ரூமில் பிலிம் சுற்றுவதையும் பிலிம் மாட்டுவதையும் தூர நின்று ரசித்து இருக்கின்றேன்..
எங்கள் ஊர் முத்தையா தியேட்ட்ரில் பிட்டு படம் பார்க்க போய் முகத்தை மறைத்து...இன்டர்வெல்லில் பெண்கள் பாத்ரூம் பக்கம் போய் டிக்கெட் கவுன்டரில் மறைந்து கொண்டு இருந்து இருக்கின்றேன்....
அதே தியேட்டரில் பிட் தியேட்டரில் ஓடும் போது காமம் தலைக்கு எறிய ஒருவன் 5 வது சீட்டில் கைமதுனம்செய்ய... அவன் சீட்டில் போடும் வேகம் எங்கள் வரிசையில் உள்ள எல்லேரையும் அவன் போட்ட ஆட்டத்தை உணரவைத்தான் , அவன் யாரை பற்றியும் கவலை படாமல் செய்ததை பார்த்து திகைத்து போய் இருக்கி்றேன்...
கடலூர் பாலாஜி தியேட்டரில் இதே போல் பிட் பார்க்க போய் பெண்கள் கவுன்ட்ரில் ஒளிந்து இருக்கும் போது 40 வயது மதிக்கதக்க ஆள், மெல்ல பேச்சு கொடுத்து 5 வது பிட்டு சூப்பர் இல்ல என்று சொல்லி விட்டு, பணம் எவ்வளவு வேண்டமானாலும் தரேன் அந்த மறைவுக்கு வா என்று என்னை அழைக்க, எனக்கு கை கால் நடுங்கி அங்கு பிடித்த ஓட்டம் வீட்டில் வந்துதான் நின்றேன்... ஒருவாரத்துக்கு அந்த பதட்டம் எனக்கு தனியவில்லை...
அதே முத்தையா தியேட்டர்,ஒரு ஆங்கில படம். படத்தில் பிட் ஓடும் போதுஇவன் எதோ அவனை இருட்டில் ஏதோ செய்து இருக்க வேண்டும்.... பளார் என்று அரை விழும் சத்தம் கேட்க அடிவாங்கியவன் சட்டென எழுந்து ஓடி விட்டான்... நாங்கள் யார் அடித்தார், யார் உதை வாங்கினார்கள் என்று தெரியாமல் குழம்மி போய் இருந்து கொண்டு திரும்பி பார்த்து, திரும்பி பார்த்து படம் பாத்தோம்..
கடலூர் பாடலி தியேட்டரில்செம்பருத்தி படம் டிக்கெட் எடுக்கும் போது எவனோ ஒருவன் எதோ சின்ன பிரச்சனையில் எங்கள் மூவரையும்,“ ங்கோத்தா” என்று திட்ட, நான் ங்கொம்மா கு..... என்று ஆரம்பித்து பேட் வேர்ட் யூஸ் செய்து அவன் உதட்டை கிழிக்க, நாங்கள் மூவரும் முதல் வகுப்பில் படம் பார்க்க சட்டென யாரோ தேடுவது போல் ஜாக்கி இன்ஸ்டிங்ட் சொல்ல, திரும்மி பார்த்தால் உதடு சற்றே வீங்கிய வாரே மார்கெட் காலனி பசங்க,எட்டு பேருடன் எங்களை அவன் தேட... ,நாங்கள் மூவரும் புறமுதுகிட்டு துண்டைகானோம் துணியைகனோம் என்று திரைக்கு முதல் வரிசை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.... அந்த படத்தில் “பட்டு பூவே மெட்டு போடு” பாட்டில் நீச்சல் குள காட்சி தவிர படம் மனதில் ஒட்டாமல் சாமி ஆண்டவா இவன்க கையில சிக்காம விடு போய் சேர ஆண்டவனை பிரார்த்திப்பதிலேயே கவனமாய் இருந்தேன்...
சென்னை வந்து வயிற்று பிழைப்புக்காக, அலங்கார், தேவிதியேட்டரில் பிளாக்கி டிக்கெட் விற்று ரவுடி கும்பலால் மிரட்டபட்டு அதை விட்டேன்...
சத்தியம் தியேட்ட்ரில் அரை நிர்வாணம் மற்றும் உடலுறவு காட்சிகளை , வெக்கபடாமல் பார்த்த பெண்களை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்....
சத்தியத்தில் படம் பார்த்து கொண்டு இருக்கும் போது சட்டென கரெண்ட் போய் எமர்ஜென்வி விளக்கு சட்டென எறிய... இன்டெர்வலுக்கு இன்னும் அரை மணிநேரம் இருக்கும் என்று கணக்கு போட்ட அந்த காமம் தலைக்கேறிய காதலன், அந்த பெண்ணின் முன் பக்க சுடிதாரை கொஞ்சமும் பயம் இல்லாமல் உயர்த்தி பட்டினத்தார் சொன்னது போல் கறந்த இடத்தை, மெல்லிய சினிமா வெளிச்சத்தில் பார்த்துகொண்டு இருக்க..., சட்டென விளக்கு எறிய அந்த பெண் ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்து குனிந்து கொள்ள அவன் உடைகளை சரி செய்ததான், இருவரும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. திரும்பவும் படம் போட்ட போது அவர்கள் எஸ்கேப்.....
என்னதான் எத்தனை தியேட்டர் வந்தாலும் எனக்கு எனோ சென்னை தேவி தியேட்டர் ஸ்கிரின் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்....
இப்படி தியேட்டர் அனுபவங்களை இன்னும் நான் பத்து பக்கத்துக்கு மேல் எழுதவேன்... அந்தளவுக்கு எனக்கு தியேட்டர் அனுபவங்கள் எனக்குள் உண்டு...அப்படி இத்தாலியில் உள்ள சினிமா பாரடைசோ தியேட்டர் ஆபபேரட்டருக்கும் அந்த பகுதி்யில் வசிக்கும் பையனுக்கும் எற்படும் அழகான உறவை மையபடுத்தி சொன்னபடம்தான் சினிமா பாரடைஸோ...
சினிமா பாரடைசோ படத்தின் கதை இதுதான்.....
செல்வேடர் எனும் பெரிய இயக்குனர் வீட்டில் வந்து படு்க்கின்றார்.. அவரது படுக்கையில் இருக்கும் பெண்மணி உங்கள் அம்மா போன் பண்ணினாங்க... என்று சொல்ல என்ன வென்று கேட்க? அல்பிரடோ என்பவர் இறந்து விட்டதாகவும் உங்களுக்கு தகவல் சொல்ல சொன்னாகள் என்று அவள் சொல்ல... அப்படியே பிளாஷ் பேக்கில் காட்சிகள் விரிய... அல்பரடோ சினிமா பாரைடைசோ என்ற தியேட்டரில் ஆபரேட்டர்... செல்வேடர் அப்பா இரண்டாம் உலக யுத்தித்தில் இறந்து போனவர். அம்மா இளம் விதவை செல்வேடரை வளர்க்க கஷ்டபட எப்போதும் சினிமா தியேட்டரில் இருக்கும் பிள்ளையை நினைத்து கவலை கொள்கின்றாள்...அதன் பிறகு அல்பரோடுவுக்கும் செல்வடோருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது... இதில் அல்பரோடுவுக்கு தியேட்டரில் ஏற்படும் தீ விபத்தில் பார்வை போய்விட, திரும்பவும் தியேட்டர் புதுப்பித்து ஆப்பரேட்டராக 10வயதுசெல்வேடர் படம் ஓட்டுகின்றான்... அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்னவானது... செல்வேடருக்கு ஏற்படும் காதல் என்னவானது?அவர்கள் இவரும் என்னவானார்கள்? போன்றவற்றை செல்வேடர் பார்வையில் விரியும் பிளாஷ்பேக் காட்சிகளில் ரசித்து மகிழுங்கள்....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
ஒரு தியேட்டரில் என்ன என்ன நிகழ்வுகள் நிகழும் என்பதை அற்புதமாக பதிய வைத்து இருப்பார்கள்... தமிழில் ஹவுஸ்புல் படம் முழுக்க முழுக்க தியேட்டர் பின்னனியில் வந்த படம்... வேறு ஏதாவது இருந்தால் சொல்லவும் சட்டென நினைவில் இல்லை..
இந்த படத்தை இத்தாலியில்155 நிமிஷமாக ரிலிஸ் செய்தார்கள்..ஆனால் உலகம் எங்கும் ரிலிஸ் செய்யும் போது படத்தின் நீளத்தை குறைத்து 124 நிமிடங்களுக்கு ரிலிஸ் செய்தார்கள்...
உலகசினிமா பார்க்க ஆசைபடுபவர்கள் முதலில் இந்த படத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்லது என்பது எனது கருத்து...
தியேட்டரில் நடக்கும் கூத்துக்களை நகைச்சுவை இழையோட சொல்லி இருப்பது அழகு...
இந்த படத்தின் கதாபாத்திரங்கள் படம் பார்த்து ஒரு வாரத்துக்கு நம்மோடு வாழ்வார்கள்..
நம் சந்தோஷப்படுத்திய தியேட்டர்கள் இடிபட்டால் எனக்கு ஒரு மாதிரி அன்று முழுவதும் இருக்கும்... அப்படித்தான் சென்னை ஆனந் தியேட்டர் இடிக்கபட்ட போது அதனை புகைபடம் எடுத்து வைத்து்கொண்டேன்... அது போல் இந்த படத்தில் அந்த சினிமா பாராடைசோ தியேட்டர் சிதிலமடைந்து கிடக்கும் போது அந்த கதாபாத்திரங்கள் அதனை பார்க்கும் போது நமக்கும் அந்த பிலிங் வந்து விடும்....
படத்தின் டைட்டில் மிக நன்றாக இருக்கும்....
தியேட்டர் தீ விபத்தில் எறிந்த உடன் அதனை புதுபித்து அதற்க்கு சிறுவனாக இருக்கும் செல்வடரை ஆப்பரேட்டராக இருக்க செய்வது கண்களில் நீர் வர வைக்கும் காட்சிகள்...
அல்பரடோ...இறக்கும் முன் தன் மனைவியிடம் செல்வடருக்கு கிப்டாக கொடுக்கும் பிலிம் ரோலை திரையில் போட்டு பார்த்து அவன் கண்கள் கலங்கும் போது நம் கண்களும் தன்னாலே கலங்கும்...
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர்Blasco Giurato இன்டோரிலும் அவுட்டோரிலும் பல காட்சிகள் உறுத்தல் இல்லாமல் பதியவைத்து இருப்பார்.. முக்கியமாக சினிமா அரங்கில் உள்ளே எடுக்கபட்ட காட்சிகள் அற்புதம்...
சிலருடைய காமம் மட்டும் வயதானாலும் தீர்த்து்கொள்கின்றார்கள்... அதற்க்கு இந்த படத்தின் காட்சி சாட்சி...
அதே போல் தான் காதலித்த பென்னை போல் இருக்கும் பெண் தன் காதலியின் மகள் என்று அறியும் காட்சியில் காரில் இருக்கும் ரிவர்வியூ மிரர் மூலம் காட்டி கேமரா கோனம் மாறும் காட்சிகள் கவிதை..
இந்த படத்தின் சில காட்சிகள் தெலுங்கில் சித்தார்த் நடித்த ஆட்டா படத்தில் அப்படியே யூ்ஸ் செய்து இருப்பார்கள்
விருதுகள்...
Awards
Preceded by
Pelle the Conqueror Academy Award for Best Foreign Language Film
1989 Succeeded by
Journey of Hope
Preceded by
A World Apart
(award then called Grand Prix Special du Jury) Grand Prix du Jury, Cannes
1989
tied with Trop belle pour toi Succeeded by
Tilaï tied with
The Sting of Death
Preceded by
Pelle the Conqueror Golden Globe for Best Foreign Language Film
1990 Succeeded by
Cyrano de Bergerac
Preceded by
Life and Nothing But BAFTA Award for Best Film Not in the English Language
1990 Succeeded by
The Nasty Girl
படத்தின் டிரைலரை பார்த்து மகிழுங்கள்....
படக்குழுவினர் விபரம்....
Directed by Giuseppe Tornatore
Produced by Franco Cristaldi
Giovanna Romagnoli
Written by Giuseppe Tornatore
Starring Salvatore Cascio
Marco Leonardi
Philippe Noiret
Jacques Perrin
Music by Ennio Morricone
Cinematography Blasco Giurato
Editing by Mario Morra
Release date(s) 1988
Running time 155 Mins Italy
121 Mins Cut USA
174 Mins
Director's Cut
Country Italy
Language Italian
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
உங்கள் சினிமா தியேட்டர் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது :))
ReplyDeleteநன்றி செந்தில் வேலன்... மிக்க நன்றி...
ReplyDeleteஇரண்டு பதிவாக போட்டிருக்கலாம்.
ReplyDeleteதலைப்பை cinima paradiso + எனது தியேட்டர் அனுபவங்கள் என்று மாற்றவும். ....
கலக்கு ஜாக்கி..
Super.
ReplyDeleteஜாக்கியின் உலக சினிமா என்று தொலைக்காட்சியில் weekly program வந்தால் எப்படி இருக்கும் என்று
கற்பனை செய்து பார்த்தேன். அந்த program அவருடைய பதிவுகளை போலவே நன்றாக இருக்கும்.
சில வாரங்கள் முன்புதான் இப்படத்தை பார்த்தேன். டோடோவாக வரும் சிறுவனின் நடிப்பு மிக அருமை, அழகும் கூட.
ReplyDeleteஒவ்வொரு சீனிலும் எதாவது பொதிந்து இருப்பது போல இருக்கும். தாங்கள் பிட் படத்திற்கு போனதை சொல்லும்போது, எல்லா சினிமா தியட்டேர்லயும் இப்படித்தான் நடக்கும் போல என்று நினைத்து கொண்டேன் :) .
Super introduction!!!
ReplyDeleteOne of my alltime favorite movies.
//அதே தியேட்டரில் பிட் தியேட்டரில் ஓடும் போது காமம் தலைக்கு எறிய ஒருவன் 5 வது சீட்டில் கைமதுனம்செய்ய... அவன் சீட்டில் போடும் வேகம் எங்கள் வரிசையில் உள்ள எல்லேரையும் அவன் போட்ட ஆட்டத்தை உணரவைத்தான் , அவன் யாரை பற்றியும் கவலை படாமல் செய்ததை பார்த்து திகைத்து போய் இருக்கி்றேன்...
//
:)
//சத்தியத்தில் படம் பார்த்து கொண்டு இருக்கும் போது சட்டென கரெண்ட் போய் எமர்ஜென்வி விளக்கு சட்டென எறிய... இன்டெர்வலுக்கு இன்னும் அரை மணிநேரம் இருக்கும் என்று கணக்கு போட்ட அந்த காமம் தலைக்கேறிய காதலன், அந்த பெண்ணின் முன் பக்க சுடிதாரை கொஞ்சமும் பயம் இல்லாமல் உயர்த்தி பட்டினத்தார் சொன்னது போல் கறந்த இடத்தை, மெல்லிய சினிமா வெளிச்சத்தில் பார்த்துகொண்டு இருக்க..., சட்டென விளக்கு எறிய அந்த பெண் ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்து குனிந்து கொள்ள அவன் உடைகளை சரி செய்ததான், இருவரும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. திரும்பவும் படம் போட்ட போது அவர்கள் எஸ்கேப்.....//
I feel pity for them. :(
//உலகசினிமா பார்க்க ஆசைபடுபவர்கள் முதலில் இந்த படத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்லது என்பது எனது கருத்து...
//
True.
உங்கள் தியேட்டர் அனுபவம் ரொம்ப கலக்கல்...
ReplyDeleteகண்டிப்பா பார்கிறேன்..சினிமா பாரடிசோ
அண்ணே நீங்க My Girl(Thai) படம் பார்த்து இருக்கீங்களா.
எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.முடிந்தால் அதை பற்றியும்
எழுதவும்
ஒளிவு மறைவு இல்லாத உங்க அனுபவங்கள் அருமை சார்... படத்தை பற்றிய உங்கள் பாணி விமர்சனம் பார்க்க தூண்டுகிறது.. டிவிடி கிடைச்சா நிச்சயம் பார்க்கணும்..
ReplyDeletesooper review jackie!
ReplyDeleteஎம்பூட்டு அனுபவங்கள் உங்களுக்கு.
ReplyDelete--------------------
வெயில் படம் ஏனோ கண்ணில் நிழலாடுகிறாது
//இன்டெர்வலுக்கு இன்னும் அரை மணிநேரம் இருக்கும் என்று கணக்கு போட்ட அந்த காமம் தலைக்கேறிய காதலன், அந்த பெண்ணின் முன் பக்க சுடிதாரை கொஞ்சமும் பயம் இல்லாமல் உயர்த்தி//
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது!
இதுகெல்லாம் தியேட்டரை யூஸ் பண்ணினா லாட்ஜ்காரங்க எப்படி பிழைப்பாங்க!
melena என்ற படம் எடுத்தவரும் இவர் தான் என்று ஜீரணிக்கவே எனக்கு இரண்டு மாதம் ஆகியது!
ReplyDeleteஇரண்டு பதிவாக போட்டிருக்கலாம்.
ReplyDeleteதலைப்பை cinima paradiso + எனது தியேட்டர் அனுபவங்கள் என்று மாற்றவும். ....
கலக்கு ஜாக்கி..
Thursday, August 27, 2009 --//
நன்றி சூர்யா... இரண்டு பதிவில் போடலாம் ஆனால் ஒரே மூசசில் படித்தால் டெம்ட் குறையாமல் இருக்கும் அல்லவா அதனால்தான்...
Super.
ReplyDeleteஜாக்கியின் உலக சினிமா என்று தொலைக்காட்சியில் weekly program வந்தால் எப்படி இருக்கும் என்று
கற்பனை செய்து பார்த்தேன். அந்த program அவருடைய பதிவுகளை போலவே நன்றாக இருக்கும்//
உங்கள் கற்பனையை விட என் திறமை மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு என் நன்றிகள்... பி்ஸ்கோத்துபயல்
சில வாரங்கள் முன்புதான் இப்படத்தை பார்த்தேன். டோடோவாக வரும் சிறுவனின் நடிப்பு மிக அருமை, அழகும் கூட.
ReplyDeleteஒவ்வொரு சீனிலும் எதாவது பொதிந்து இருப்பது போல இருக்கும். தாங்கள் பிட் படத்திற்கு போனதை சொல்லும்போது, எல்லா சினிமா தியட்டேர்லயும் இப்படித்தான் நடக்கும் போல என்று நினைத்து கொண்டேன் :) ///
நன்றி இளங்கோ... இந்த படத்தில் காட்டும காட்சிகள் நான் உண்மையாக அரங்குகளில் பார்த்த விசயங்கள்தான்..
I feel pity for them. :(//
ReplyDeleteஉண்மைதான்
நன்றி இந்தியன் விமர்சனத்தை ரசித்து படித்தற்க்கு
உங்கள் தியேட்டர் அனுபவம் ரொம்ப கலக்கல்...
ReplyDeleteகண்டிப்பா பார்கிறேன்..சினிமா பாரடிசோ
அண்ணே நீங்க My Girl(Thai) படம் பார்த்து இருக்கீங்களா.
எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.முடிந்தால் அதை பற்றியும்
எழுதவும்//
நன்றி ரெட் கண்டிப்பாக டிவிடி இருந்தால் நான் பார்க்க முயற்ச்சிக்கின்றேன்
ஒளிவு மறைவு இல்லாத உங்க அனுபவங்கள் அருமை சார்... படத்தை பற்றிய உங்கள் பாணி விமர்சனம் பார்க்க தூண்டுகிறது.. டிவிடி கிடைச்சா நிச்சயம் பார்க்கணும்.. கண்டிப்பா பாருங்கள் கிஷோர் நிச்சயம் இந்த படம் ரசிக்க செய்யும்
ReplyDeletesooper review jackie!
ReplyDeleteநன்றி 23சீ
எம்பூட்டு அனுபவங்கள் உங்களுக்கு.
ReplyDelete--------------------
வெயில் படம் ஏனோ கண்ணில் நிழலாடுகிறாது...
ஜமால் என் அப்பாவும் அப்படிதான்....
//இன்டெர்வலுக்கு இன்னும் அரை மணிநேரம் இருக்கும் என்று கணக்கு போட்ட அந்த காமம் தலைக்கேறிய காதலன், அந்த பெண்ணின் முன் பக்க சுடிதாரை கொஞ்சமும் பயம் இல்லாமல் உயர்த்தி//
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது!
இதுகெல்லாம் தியேட்டரை யூஸ் பண்ணினா லாட்ஜ்காரங்க எப்படி பிழைப்பாங்க!///
லட்ஜ விட சிற்றின்பத்துக்கு இதுதான் சேப் மற்றும் சேலவு குறைச்சல்...
பதிவர் ஜெட்லி அவர் பதிவில் மகாபலியுரம் போகும் சாலையில் உள்ள தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே டார்ச் லைட் அடித்து டார்ச்சர் கொடுப்பாங்களாம்...
கடைசியில் தியேட்டர் இடிக்கும் காட்சியை தவிர இப்படத்திற்கும், வெயிலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!
ReplyDeleteஇப்படத்தை பொறுத்தவரை நாயகன் சினிமா காதலன்(நம்ம ஜாக்கி மாதிரி),
ஆனால் வெயிலில் அம்மாதிரி எதுவும் இல்லை, தியேட்டர் மூலம் அவனுக்கு ஒரு காதலி கிடைத்தாள் என்று வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம்.
melena என்ற படம் எடுத்தவரும் இவர் தான் என்று ஜீரணிக்கவே எனக்கு இரண்டு மாதம் ஆகியது... உண்மைதான்
ReplyDeleteமெலினா விரைவில் விமர்சனமாய்...
ரசிச்சு பார்த்திருக்க்கேன்.....உங்க தியேட்டர் அனுபவங்கள் சுவாரசியமா இருக்கே....இந்த படத்துக்கும்..நம்ம பாக்யராஜோட "தாவணிக்கனவுகள்" படத்துக்கும் கதை/ திரைக்கதையில் ஒற்றுமை இருக்கே கவனிச்சீங்களா.....ஆனா, இந்த படம் வருவதற்கு முன்னயே பாக்யராஜ் படம் வந்திருச்சு.
ReplyDeleteசினிமா காதலர்கள் வாழ்கையில் நடந்த சம்பவஙக்ள் எல்லாமே சினிமா பாரடைசோவில் வரும். ராஜ்.
ReplyDeleteவாலு.. மெலினாவுக்கு என்ன குறைச்சல்..?
Your theatre experience is much more interesting than that Italy film.
ReplyDeleteexpecting more your theatre experiences.
இருட்டு வாழ்க்கை என்பதற்கு இப்படி ஒரு அர்த்தமா! திரையரங்குகளை வைத்து ஒருவனின் வாழ்வங்கத்தை சொன்ன தமிழ்ப்படம் வெயில். சி.பே-வின் தாக்கம் தெரியும்!
ReplyDeleteமீண்டும் ஒருமுறை சொல்லி கொள்கிறேன்,
ReplyDeleteவெயிலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை!
வெயிலில் இருந்தது பிழைப்பாக்கான ஏக்கம், இந்த தியேட்டர் மீதான காதல்!, கொடுத்த காசை திருப்பி கொடுத்தது வாழ்வின் மீது இருந்த அதிர்ப்தி, காதலியை இழந்த சோகம்.
ஆனால் சி.போ வில் இருந்தது சினிமா மீதான காதல்!
அதனால் தான் அவனால் ஒரு படம் எடுக்கமுடிந்தது!
அருமையான படம் ..
ReplyDelete//உலகசினிமா பார்க்க ஆசைபடுபவர்கள் முதலில் இந்த படத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்லது என்பது எனது கருத்து...//
I would suggest My Sassy Girl .. :)
This comment has been removed by the author.
ReplyDeleteSorry to digress from the topic ...
ReplyDelete// இப்போது நினைத்து பார்க்கின்றேன்... டிக்கெட் கொடுக்கற எனக்கே இவ்வளவு தடிப்புன்னா? போலிஸ்காரன்களுக்கு எப்படி இருக்கும்??? //
இதை படிக்கும்போது ஏனோ Stanford University Psychology experiment ஞாபகம் வருகிறது ... நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள் ... This experiment shows how human mind tends to behave when authority/power is given over a fellow human ...
http://en.wikipedia.org/wiki/Stanford_prison_experiment
http://www.prisonexp.org/
உங்கள் தியேட்டர் அனுபவங்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது :))
ReplyDeleteதல உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.
ReplyDeleteவணக்கம் ஜாக்கி சார்,
ReplyDeleteஇந்த படம் என்கிட்டே ஒரு வருசமா இருக்கு ஆனா நான் படம் பார்க்கவே இல்ல,நேத்து நைட் தான் சார் பாத்தேன்.. ரொம்ப அற்புதம் போங்க.
நீங்க சொன்ன "படத்தின் சுவாரஸ்யங்களில் சில" எல்லாமே எனக்கும் புடிச்சது..
அப்புறம் நீங்க சொல்லாதது சில :)
1. படத்தோட backround music சூப்பரா இருக்கும் சார்,
அந்த கிளைமாக்ஸ் back round மியூசிக் இன்னும் என் காதுக்கு கேக்குது சார்.
2.அந்த CINEMA PARADISO theator வெடி வச்சு வர soundla அந்த Theator owner ஒரு reaction கட்டுவரு அற்புதமான நடிப்பு சார்..
3.அல்பிரோடோ கண்ணு போக இந்த பயனும் ஒரு காரணம், ஆனா அந்த மனுஷன் அத யோசிக்காம , பயனுக்கு நன்றி சொல்லுவாரு பாருங்க . ...ச்சே என்ன அழகு சார் அது..
4.அல்பிரடோ வோட நடிப்பு , அந்த எக்ஸாம் ஹல்லா விடை தெரியாம பையன் கிட்ட கெஞ்சும் பொது. ...... என்னும் நெறய இருக்கு சார்..
நீங்க சொன்ன மாதிரி இந்த படத்தோட பாதிப்பு ரொம்ப நாள் இருக்கும் சார்.
இந்தா படம் என்கிட்டே 1hr 58min தான் இருக்கு. Director Cut version(174 min) தேடுறேன்.
Thanks jakki sir,
உங்கள் சினிமா தியேட்டர் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது :))
ReplyDeleteSame Blood For Me too
தல உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.
ReplyDeletejakie,
ReplyDeleteசினிமா தவிர சிண்டி கிராபோர்ட் ஆல்பம் இருந்தா போடறது
தங்களது படபடப்பான தியேட்டர் அனுபவங்கள் மிகவும் பரபரப்பானவை.
ReplyDeleteவெயில் படத்தில் சிறுவன் பசுபதிக்கும் தியேட்டரிலே வேலைபார்க்கும் பெரியவருக்கும் இதுபோன்ற ஒரு புரிதல் இருக்கும்.
நண்பர் கானாபிரபா இதே படத்தையும் அவரது திரையரங்க அனுபவங்களையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவரது மடத்துவாசல் பிள்லையாரடி வலைப்பூவில் பதிவாக எழுதி இருந்தார்.
வாழ்த்துக்கள்.Keep Rocking.
ReplyDeletehi. is the movie available in online. if so can u give me the link. and tell me in which site we can see world movies?
ReplyDelete