சிறு வயதில் பள்ளி செல்லும் போது எங்கள் பள்ளி அருகே உள்ள கிளை நூலகத்தில், தினமும் கையெழுத்து போட்டு விட்டு படிக்க செல்லுவோம். படிப்பதை விட அந்த வயதில் கையெழுத்து போடுவதுதான் எங்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயம்... குப்புசாமி என்று பெயர் இருக்கின்றது என்று உதாரணத்ததுக்கு வைத்துக்கொள்வோம்..முதல் ஒரு வாரத்துக்கு குப்புசாமி பெயர் புரியும் படி எழுத்து இருக்கும் அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் வெறும் கிறுக்கலாய் இருக்கும்.... அதன் பிறகு முதல் எழுத்து மட்டும்தான் இருக்கும் அதன் பிறகு இதயதுடிப்பு கிராப்போல் வளைந்து நெளிந்து இருக்கும்....
அப்படி அடித்து பிடித்த கையெழுத்து போட்டு விட்டு முதன் முதலாக வாசிக்கும் வாசிக்கும் பேப்பர் தினத்தந்திதான்... அந்த பேப்பர் எடுத்த இரண்டாவது பக்கத்தில் படக்கதை கன்னித்தீவு இருக்கும். லைலா என்னவானாள், அவள் கடத்திய அரக்கனிடம் இந்து தப்பித்தாலா? சிந்துபாத் அவளை எப்படி காப்பாற்ற போகின்றான் என்ற கவலை எல்லாம் அப்போது எழும் அது பற்றி பேசிக்கொள்வோம்.......
அந்த சின்ன இடத்தில் மூன்றாக துடுத்து படம் போட்டு இருப்பார்கள் சில நாட்கள் சிந்துபாத் போடும் கத்தி சண்டையை வைத்து இரண்டு நாட்களுக்கு ஒப்பேற்றுவார்கள், சில நாட்களில் அவர் மட்டும் பிரேமில் இருப்பார்... அவர் யோசிப்பதாக இருக்கும் லைலாவை உடன் காப்பாற்றவேண்டும்... அவள் எங்கிருக்கின்றாள் என்று தெரியவில்லை? இதுதான் சில நாட்களில் இருக்கும் இருப்பினும் அதனை தொடர்ந்து வெக்கம் இல்லாமல் படித்துக்கொண்டு இருப்போம்....
அதன் பிறகு மெல்ல ராணிகாமிக்ஸ் வந்தது...ராணிகாமிக்சில் செவ்விந்தியர்கள், ஷெரிப், போன்ற கௌபாய் கதைகள் தொடர்ந்து வந்தன... அதிலும் அந்த கொள்ளையர்களிடமும், ஷெரிப்பின் ஷு கால்களிலும் ஒரு சின்ன சக்கரம் இருக்கும் ... அது தீபாவளி பண்டிகைக்கு அம்மா சோமாஸ் செய்யும் போது மாவின் உள்ளே தீனி வைத்து விட்டு அதனை இது போன்ற சக்கர கத்தியால்தான் கட் பண்ணி எடுப்பாள்....நகரத்துக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் ஷெரிப்புக்கு அவ்வப்போது கொள்ளையர்களால் பாதிப்பு ஏற்பட அவர்கள் கொட்டத்தை அடக்குவதுதான் ஷெரிப்பின் வேலை..... இந்த கதைகளில் அதிகம் என்னை கவர்ந்தது துப்பாக்கி சண்டைதான்..... அதே போல் டைகர் ஹென்றி, டொன்டொயிங் என்ற வார்த்தைகள் அப்போது பிரசித்தம்.... ஜேம்ஸ் பாண்ட் கதைகள் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.. சரியான நேரத்தில் நினைவு படுத்திய யாசவிக்கு என் நன்றிகள்
பேட்மேன் , மந்திரவாதி மான்ட்ரேக், ஆர்ச்சி,போன்றகதைகளும் ரொம்ப பேமஸ்.... இருப்பினும் லயன் காமிக்ஸ்ல் , முத்துக்காமிக்ஸ்,மந்திரக்கை மாயாவி கதைகள்தான் என் ஆல்டைம் பேவரிட்,கொள்ளையர்களை அவர்கள் இடத்தில் மறைந்து சென்று துப்பறிவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதிலும் அவருக்கு பவர் போய் விட்டால் ஏதாவது ஒரு கரண்ட் கனெக்ஷனில் கை வைத்து மாயமாகிவிடுவார்... அப்புறம் எனக்கு ரொம் பிடித்த கதை என்றால் ஸ்பைடர்மேன் கதைககள்தாள் , சில கதைகளில் ஸ்பைடர்மேன் வில்லனாகவும் நல்லவனாகவும் வருவார்...தலைப்புகள் எல்லாம் செம கமெடியாக வைத்து இருப்பார்கள்..... விசித்திர விமாணங்கள்,திமிங்கில அரக்கன், மர்மத்தீவில் மயாவி போன்ற அசத்தல் தலைப்புகள் இடம் பெற்று இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் கண்ணில் அதிகம் படுவதில்லை....
அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தகங்கள் கண்ணில் தென் படுகின்றன... பள்ளி வருடக்கடைசி கோடை விடுமுறையில் இந்த புத்தகங்களுக்கு நல்ல மதிப்பு எங்கள் மத்தியில், புத்தகங்கள் பகிர்ந்து கொள்வோம், அதற்காகவே சண்டை அதிகம் போட்டுகொள்ளமாட்டோம்.... சண்டை போட்டுவிட்டால் யாரிடம் போய் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் வாங்குவது சொல்லுங்கள்???
இப்போதெல்லாம் சுட்டி டிவியில் எல்லாவற்றையும் பிள்ளைகள் பார்த்து விடுகின்றார்கள். இதனால் பிள்ளைகளின் கற்பனை திறன் குறைந்து இருந்தாலும் அது வேறு வழியில் இயற்க்கை சமன் செய்து விடும்.... காரணம் முன்னைவிட பிள்ளைகள் ரொம் சுட்டியாக இருக்கின்றார்கள்,. கிராமம் நகரம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஸ்மார்ட்டாக இருக்கின்றார்கள் அதற்க்கு காரணம் டிவி என்றால் அது மிகையில்லை...
நிறைய படக்கதை படிக்க எதாவது தப்பு செய்து விட்டு ஜெயிலுக்கு போய் ஒரு அறை முழுவதும் காமிக்ஸ் பத்தகங்கள் நிரப்பி, அம்மாவின் கடைக்கு போய் வா என்ற இம்சை இல்லாமல் எந்த டிஸ்டர்பும் இல்லாமல் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைத்த காலங்ககள் எல்லாம் ஒரு காலம். நிச்சயமாக அது ஒரு கனாகாலம்தான்
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
ஆஹா! அருமை.
ReplyDeleteமுத்து காமிக்ஸ் நமக்கும் ஃபேவரைட்டு.
கையெழுத்து விடயம் நிதர்சணம்.
வேலைக்கு சேர்ந்த பிறகும் இந்த மாதிரி தான் முதல் எழுத்தை மட்டும் சுழித்து விட்டு செல்லும் பழக்கம் வந்தது.
:-)) super...
ReplyDeletejakie,
ReplyDeleteu missed lukcy look from lion comics ;-)
tex villar
james bond - rani comics
ஆமா அண்ணா... நானும் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பி நிறைய படிப்பேன். அது ஒரு வசந்த காலம், எங்க அக்கா ஹாஸ்டலில் இருந்து வந்தவுடனே "ஒரு முப்பது ரூபா கடனா தாயேன்" என்று வாங்கி சென்று காமிக்ஸ வாங்கி வருவேன். படிச்சிட்டு, "இந்தா உன்னோட முப்பது ரூபா" என்று அவகிட்டே காமிக்ஸை கொடுத்துட்டு வெளியே ஆட்டம் போட ஓடி விடுவேன், திரும்பி வந்த ஒடனே முதுகிலே நாலு சாத்து விழும். ஹூம்... பேரு மூச்சு தான் விட முடியுது இப்ப...
ReplyDeleteஜஸ்ட்டு மிஸ்சு.. தமிழிஷ்ல சேர்கலாமுன்னு சப்மிட் பண்ணிட்டேன்...
ReplyDeleteஆனா, 1 நிமிஷத்துக்கு முன்னாடி இனைச்சிட்டீங்க!
இரும்புக்கை மாயாவிதான் எனக்கு இன்னும் நினைவிலிருக்கும் காமிக்ஸ் நாயகன். நினைவைத் தட்டி எழுப்பியமைக்கு நன்றி. மறைந்திருந்து மாயம் காண்பிப்பது புராண காலத்திலிருந்தே ஒரு கவர்ச்சிதான்!
ReplyDeleteஅப்பாவுடன் இரவு கடை வீதிக்கு சென்று பழைய ராணி காமிக்ஸ் புத்தகங்களை ஒரு ரூபாய்க்கு வாங்கி அன்று இரவே படித்து முடித்து நினைவுக்கு வருகிறது. இப்பொழுது சிறுவர் சிறுமியர்களிடம் நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது :(
ReplyDeleteஇரும்பு கை மாயாவிதான் ரொம்ப பேமஸ்......நான் பைத்தியம் மாதிரி அலைந்தேன். ஒரு காலத்தில்.நினைவு படுத்தியமைக்கு நன்றி. சிறுது சுகமாகவே இருக்கு ...
ReplyDeleteஎனக்கும் சிறுவயதில் காமிக்ஸ் படித்த அனுபவம்
ReplyDeleteஇருக்கு ஜி......நினைவுகளுக்கு நன்றி.
விடிய விடிய காமிகஸ் படித்த காலத்தை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது
ReplyDeleteநிறைய படக்கதை படிக்க எதாவது \\\ தப்பு செய்து விட்டு ஜெயிலுக்கு போய் ஒரு அறை முழுவதும் காமிக்ஸ் பத்தகங்கள் நிரப்பி, அம்மாவின் கடைக்கு போய் வா என்ற இம்சை இல்லாமல் எந்த டிஸ்டர்பும் இல்லாமல் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைத்த காலங்ககள் எல்லாம் ஒரு காலம் ///
ReplyDeleteஎனக்கும் சிறுவயதில் காமிக்ஸ் படித்த அனுபவம்.
அருமையான அனுபவம்
ReplyDeleteஎனக்கு ராணி காமிக்ஸ் ரொம்ப இஷ்டம்
அது கிடைக்காவிட்டால் அவ்வளவு தான்
நினைவு படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteஜாக்கி..ஆயிரத்தில் ஒருவன்”தலை கேட்ட தங்கபுதையல்” தழுவல் என்று ஒரு பேச்சு ..ஆஸ்திரேலிய பழங்குடிகள் பற்றியும் என்று ஏஜன்சி தகவல்கள் தெரிவிக்கின்றன..
ReplyDeleteலாரன்ஸ்,டேவிட் என்னால் மறக்க முடியாதவர்கள்..
தல.. நானும் காமிக்ஸ் பத்தி எழுதணும்னு இருந்தேன்.. நீங்க எழுதறீங்க.. ரைட்டு.. கூடிய சீக்கிரம் நானும் போட்டுடுறேன்..
ReplyDeleteஜாக்கி
ReplyDeleteஅருமையான பதிவு
காமிக்ஸ் நினைவுகளை மீண்டும் நினைவு படுத்தியதற்காக.
மற்றும் அம்புலி மாமா கதைகள் அந்த ஓவியங்கள் இன்றும் பசுமையானவை. அதுபோல் விக்கிரமாதித்தன் வேதாளம் கேள்வி பதில் கதைகள்.
இன்றும் என்மேசையின் உள் சில காமிக்ஸ் புத்தகம் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.
நட்சத்திர வாழ்த்துகள் ஜாக்கி... உங்கள் எல்லா பதிவுகளையும் படித்தாலும் அலுவலகத்தில் இருந்து ஃபயர்வால் பிரச்சினையால் பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும்...
ReplyDeleteஅருமை ஜாக்கி............எனக்கும் மாயாவிதான் பிடிக்கும்
ReplyDeleteவாத்யார்,
ReplyDeleteநான் இன்னா காமிக்ஸ நெனச்சுகினு இந்த பதிவுக்கு வந்தேனோ அதே படத்த மேல பாத்த் ஒடனே கபால்னு ஆய்ட்ச்சு! சிஐடி லாரன்சும் ஜூடோ டேவிடும், ஹென்றியும், காணமல் போகும் கப்பலும், எஸ்ஓஎஸ் அனுப்பும் கேப்டனும்... மறக்கமுடியாத கதை! ஒரு எடத்துல டேவிடு கரண்டு பாய்ந்த கேட்டை நடு கம்பிய புடிச்சுகினு தாவுற காட்சி படதோட நேத்து படிச்சா மாதிரி நியாபகம் கீது! கப்பலுக்கு பெய்ன்ட் அட்சு பேரு மாத்ற டெக்னிக் இன்னிக்கும் புதுசு!
தாங்க்ஸ் வாத்யார்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
சூப்பர் . சூப்பர் !! இது மாதிரி நீங்க முன்னாடியே எழுதிடீங்க தானே ? காமிக்ஸ் பற்றி...
ReplyDeleteஎனக்கு ஜேம்ஸ் பாண்டும் மாடஸ்தி பிளைசியும் தான் பேவரிட். மாயாவியும் பிடிக்கும் ஆனால் 007 கதைகளில் உள்ள விறுவிறுப்பு மாயாவியில் இல்லை. பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு புத்தகம் 25 சதம் வாடகை கொடுத்து இன்னொருவரிடம் வாங்கி வாசிப்பது.
ReplyDeleteWhat a post "J"...I used to read all those comic books...rani comic is cheap..and it will be thin...muthu comic bit costly and thick...all the heroes are great. I had big collection of comic books and later I gave to my friend who gave to his girlfriend (during 8th standard.....big thanks taking me to my golden days
ReplyDelete:))
ReplyDeleteசூப்பர்ணா!
இப்பல்லாம் டிவியும் இணையமும்தான் :((
காற்றில் கரைந்த பார்லர்கள் என்று அண்மையில் முத்து காமிக்ஸ் கதை வாசித்தேன். இப்போதெல்லாம் கிடைப்பதில்லை இங்கே :(
ReplyDeleteகாமிக்ஸ் என்றால் எனக்கு இப்பவும் பிடிக்கும் என்ன அந்த காலத்துல ஜேம்ஸ் பாண்டு,மாயாவி இந்த மாதிரி காமிக்ஸ் பிடிக்கும், இப்ப என்னவோ சவிதா பாபி காமிக்ஸ் தன பிடிகிறது. அதிலும் சவிதா பாபி காமிக்ஸ் படம் சூப்பரா இருக்கு...
ReplyDeleteஎனக்கு xxx கமிக்ஸ் தான் பிடிக்கும்
ReplyDelete