(EXECUTIVE DECISION) பாம் வெடித்தால் 14 மில்லியன் வாஷிங்டன் நகர வாழ் மக்கள் காலி



பொதுவாய் அமெரிக்கர்கள் அவர்கள் நாட்டையும் கொடியையும் ,ஏன் அவர்கள் அதிபரை கூட கேவலபடுத்துவார்கள் ஆனால் சத்தம் இல்லாமல் அவர்கள் நாட்டின் மதிப்பை படங்கள் மூலம் உணர வைத்துவிடுவார்கள்.... நீங்கள் ஹாலிவுட் படங்களை கூர்ந்து கவனித்தால் அவற்றை புரிந்து கொள்ள முடியும்...

இன்டிபண்டன்ஸ்டே படத்தில் அமெரிக்க அதிபர் உரையாற்றுவதாய் ஒரு காட்சி இருக்கும் அந்த காட்சியை உற்று நோக்கினால் உங்களுக்கு உள்ளே ஒரு சிலிர்ப்பு ஓடும் ... அது போல் நம்முடைய படங்களில் எனக்கு தெரிந்து ரோஜாவில் அர்விந்தசாமி கொடி எறிப்பை தடுக்கும் போது எனக்குள் அந்த உணர்ச்சி, சிலிர்ப்பு...நிகழ்ந்தது. ஆனால் பல படங்களில் அவர்கள் நாட்டை நேசிக்க செய்யும் ,அலட்டும் விஷயங்கள் அதிகம்....

அமெரிக்கர்களை பொறுத்தவரை அவர்களால் ஏதுவும் முடியும் என்பதில் இறுமாப்பு உடையவர்கள்...அவர்கள் பேச்சில் செயலில் எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம் குடி கொண்டு இருக்கும்... உலக நாடுகளின் ராஜா என்பதாக நினைத்து அது எடுத்துவரும் முடிவுகள், பல நாடுகளின் வயிற்றில் மண் அள்ளி போட்டது வரலாறு...

பலநாடுகளில் முக்கியமாக அரபு தேசங்கள் எதுவும் அமெரிக்கா அடிவருடிகள் அல்ல.. எல்லாம் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே சிரித்து பேசிகொண்டு காலத்தை கடத்துகின்றன... ஆனால் அரபு மக்கள் அமெரிக்கா மீது கோபமாக இருக்கின்றார்கள்... அது அவர்களுக்கும் தெரியும்.... அப்படி அமெரிக்கா மீது வெறுப்பு உள்ள ஒரு தீவிரவாத கூட்டம் ஏதென்சில் இருந்து,அமெரிக்கா போகும்.... பிளைட்டை கடத்தினால் என்னவாகும் என்பதே எக்சிகியுட்டிவ் டிசிஷன் படத்தின் கதை....


EXECUTIVE DECISION படத்தின் கதை இதுதான்....

ஒரு பெரிய தீவரவாதிகளின் தலைவன்... அவன் மகளுக்கு கல்யாணம் அந்தநேரத்தில் அவன் அசந்த நேரம் பார்த்து அவனை போலிஸ் கைது செய்து விடுகின்றது... அவனுக்கு ஒரு தம்பி... அந்த சட்டிசாம்பார் தன் அண்ணை விடுவிக்க ஏதென்சில் இருந்து 400 அமெரிக்கர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் ஓசியானிக் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்துகின்றார்கள்... அதில் என்ன விசேஷம் என்றால் பிளைட்டில் சாதாரணபாம் வைக்கவில்லை கெமிக்கல்பாம் வைத்து இருக்கின்றார்கள்...எப்படி பட்ட கெமிக்கல் தெரியுமா? ஒருசொட்டு ..ஒரே ஒரு சொட்டு உஜலா சொட்டு போல கிழே விழுந்தாலே, ஒரு 10 பேர் செத்து போயிடுவாங்க... அவன் வாஷிங்டன் மொத்தத்தையும் அழிக்க அதாவது 14 மில்லியன் மக்களை அழிக்க கிலோ கணக்குல பிளைட்ல கெமிக்கல் பாம் வச்சி இருக்கினறான்....

அதாவது திருச்சி ரயில்ல பாம் வச்சி இருக்கறேன்னு சொன்னா விழுப்புரம் ஜங்ஷன்ல வண்டியை நிறுத்தி தரோவா செக் பண்ணி அனுப்பலாம்.. பாம் வச்சி இருககறது பிளைட்ல என்ன பண்ணறதுன்னு தெரியாம... அமெரிக்க கவர்மென்ட் விழி பிதுங்கி நிக்குது... என்ன மாதிரிEXECUTIVE DECISION
எடுத்தார்கள்... பிளைட் வாஷிங்டன் நெருங்கறதுக்குள்ள எதாவது முடிவு எடுத்தாகனும் இல்லைன்னா கடலுக்கு நடுவுலயே 400 அமெரிக்கர்களுக்கு ஜலசமாதி செய்யனும்.. என்ன செய்தார்கள் என்பதை விறு விறுப்பாய் சொல்லி அசத்தி இருக்கின்றார்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

ஒரு விமானம் எப்படி இருக்கும் அதனுள் என்ன அமைப்பில் இருக்கும் என்பதையும் இதுவரை விமானம் ஏறாதவர்கள் இந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்... ஒரு விமானத்தை அதுவும் போயிங் விமானத்தை அக்கு வேற அணிவேறாக பிரித்து காட்டி இருப்பார்கள்....


இந்த படத்தின் திரைக்கதை ஸ்பீடு படத்தின் திரைக்கதையை ஒத்து இருக்கும் அந்த அளவுக்கு அடுத்தது என்ன , அடுத்தது என்ன என்று விரல் நகம் கடிக்க வைக்கும் திரைக்கதை...
கதாநாயகியாக(விமானபணிப்பெண்ணாக) ஹெலிபெர்ரி நடித்து இருப்பார்... இந்த பெண் ஒரு கருப்பு தேவதை என்றால் மிகையில்லை... அந்த பெண்ணின் கண்களுக்கு நான் ரசிகன்...

400 அமெரிக்கர்களாக இருந்தாலும் அவர்கள் அமெரிக்கர்கள் அல்லவா? அவர்கள் உயிரை காக்க அவர்கள் எடுக்கும் முடிவுகள் சூப்பர்.... நாமும்தான் இருக்கின்றோமே....

அதுமட்டும் அல்ல அவர்கள் கமண்டோ படை வீரர்கள் எதையும் செய்ய வல்லவர்கள் போல எப்போதும் அவர்கள் படத்தில் காட்ட முயல்வார்கள்...

விமானத்தில் கமென்டோ விரர்கள் ஏறும் காட்சி நம்ப முடியாது என்ற சொன்னாலும் நம்ப வைப்பது போல் படத்தை எடுப்பவர்கள் அவர்கள்...

அதிரடி மன்னன் ஸ்டிவன் சிக்ல இந்த படத்தில் கேஸ்ட் ரோல்தான் செய்து இருப்பார் இருந்தாலும் அப்போது அவருக்கு இருந்த மார்கெட்டை படக்குழு நன்கு பயண்படு்த்திக்கொண்டது எனலாம் பத்த நிமிடம் மட்டும் திரையில் வருபவரை எல்லா வால் போஸ்டர்களிலும் வருவது போல் பார்த்துக்கொண்டார்கள்....

படத்தின் ஹீரோவாக கர்ட் ரசல் நடித்த இருப்பார்.....


அற்புதமான திரைக்கதை கொண்ட விறு விறு ப்பான படம் இது என்பேன்...

நகம் கடித்து நகரும் நிமிடங்களில் ஒரு டயலாக் வரும்

கால் த பிரசிடென்ட் ..இட்ஸ் ஆன் எக்சிகியூட்டிவ் டிசிஷன் நவ் என்று சொல்லும் போது ஒரு விதமான சிலிர்ப்பு வரும்...



படக்குழுவினர் விபரம்

Directed by Stuart Baird
Produced by Joel Silver
Written by Jim Thomas
John Thomas
Starring Kurt Russell
Halle Berry
John Leguizamo
Oliver Platt
Joe Morton
David Suchet
J.T. Walsh
Marla Maples
Ahmed Ahmed
Richard Riehle
and Steven Seagal
Music by Jerry Goldsmith
Editing by Frank J. Urioste
Distributed by Warner Bros.
Release date(s) March 15, 1996
Running time 134 minutes
Language Engli
டிரைலரை பாருங்கள்....



அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

17 comments:

  1. பெர்ரி புகைப்படம் சூப்பர்...

    ReplyDelete
  2. /கதாநாயகியாக(விமானபணிப்பெண்ணாக) ஹெலிபெர்ரி நடித்து இருப்பார்... இந்த பெண் ஒரு கருப்பு தேவதை என்றால் மிகையில்லை... அந்த பெண்ணின் கண்களுக்கு நான் ரசிகன்...
    //

    நான் காட்டுத்தனமான ரசிகன் பெர்ரிக்கு..

    ReplyDelete
  3. நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

    அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

    கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

    நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

    இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

    இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

    முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  4. பொதுவாய் அமெரிக்கர்கள் அவர்கள் நாட்டையும் கொடியையும் ,ஏன் அவர்கள் அதிபரை கூட கேவலபடுத்துவார்கள் ஆனால் சத்தம் இல்லாமல் அவர்கள் நாட்டின் மதிப்பை படங்கள் மூலம் உணர வைத்துவிடுவார்கள்]]

    சரியா சொன்னேள் ...

    ReplyDelete
  5. ட்ரைலரே அசத்தலா இருக்கு. நல்ல பதிவு.

    ReplyDelete
  6. பெர்ரி புகைப்படம் சூப்பர்...//
    நன்றி ஜெட்லி

    ReplyDelete
  7. /கதாநாயகியாக(விமானபணிப்பெண்ணாக) ஹெலிபெர்ரி நடித்து இருப்பார்... இந்த பெண் ஒரு கருப்பு தேவதை என்றால் மிகையில்லை... அந்த பெண்ணின் கண்களுக்கு நான் ரசிகன்...
    //

    நான் காட்டுத்தனமான ரசிகன் பெர்ரிக்கு..//
    நன்றி சூரியன்

    ReplyDelete
  8. நன்றி ஞானி இப்போது நான் வேறு ஒர படத்தில் கேமரமேன் அசிஸ்டென்டாக பணி ஆற்றிக்கொண்டு இருக்கின்றேன்...

    மற்றபடி நண்பர்களுக்கு இதை பற்றி சொல்லுகின்றேன்

    ReplyDelete
  9. பொதுவாய் அமெரிக்கர்கள் அவர்கள் நாட்டையும் கொடியையும் ,ஏன் அவர்கள் அதிபரை கூட கேவலபடுத்துவார்கள் ஆனால் சத்தம் இல்லாமல் அவர்கள் நாட்டின் மதிப்பை படங்கள் மூலம் உணர வைத்துவிடுவார்கள்]]

    சரியா சொன்னேள் ..//
    நன்றி ஜமால்

    ReplyDelete
  10. ட்ரைலரே அசத்தலா இருக்கு. நல்ல பதிவு.//
    நன்றி பிளாக் பாண்டி...

    ReplyDelete
  11. halle Berry யின் கண்கள் மட்டும்தான் பிடிக்குமா!

    ReplyDelete
  12. ட்ரைலர் இனைப்பை பதிவு தொடக்கத்திலேயே கொடுக்கவும்,அடுத்து பதிவு தலைப்பில்[ வீடியோ இனைப்பு] என்று எழுதவும். ஹிட் ரேட்டோட எங்கள் ஹார்ட் பீட்டும்,எகிற போகுது தல.

    ReplyDelete
  13. அந்த பெண்ணின் கண்களுக்கு நான் ரசிகன்..
    //


    இடையில் ரெண்டு என்ற சொல் விடுபட்டு விட்டதா.. :)

    ReplyDelete
  14. \\ அதாவது திருச்சி ரயில்ல பாம் வச்சி இருக்கறேன்னு சொன்னா விழுப்புரம் ஜங்ஷன்ல வண்டியை நிறுத்தி தரோவா செக் பண்ணி அனுப்பலாம்..//

    அப்படி என்ன தலிவரே திருச்சி காரங்க மேல கோவம்.....ஸுதூ வாது தெரியாத பசங்க திருச்சி காரங்க.....தலிவரே இப்படி பொசுக்குனு திருச்சிரயிலு பாம் நு சொல்லிபுடிகலே

    \\அந்த பெண்ணின் கண்களுக்கு நான் ரசிகன்...//

    அப்படி பாத்த தெரியலையே......வேற ஒன்னுக்கு (மன்னிக்கணும் இரண்டுக்கு) ரஷிகன் மாதிரில தெரயுது.............

    ReplyDelete
  15. அருமையான பட அறிமுகம்!

    ReplyDelete
  16. /
    இந்த பெண் ஒரு கருப்பு தேவதை என்றால் மிகையில்லை... அந்த பெண்ணின் கண்களுக்கு நான் ரசிகன்...
    /

    நம்பறோம்

    ஏன்னா நாங்களூம்தான்
    :))))))))))))))))

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner