என் மனைவியை நேற்று அலுவலகத்தில் இருந்து அழைத்து வரும் போது வேளச்சேரி பக்கம் வந்தேன்... எல்லோரும் ஆப்பரேஷன் தியேட்டர் போவதற்க்கு தயாராய் இருப்பது போல் எல்லோரும் முகமுடி அணிந்து இருந்தார்கள்...
பேருந்தில் ஜன்னல் ஓர சீட்டுகளில் உட்கார்ந்து உள்ள பெண்கள் எல்லாம் யாரோ பேருந்தின் பின் சீட்டில் உட்கார்ந்த ஒருவன், வாயுவை வெளியேற்றிய எபக்டில் எல்லோரும் ஷாலால் முகம் பொத்தி சேப்டி பிரிகாஷன் எடுத்துகொண்டு இருந்தார்கள்...
பொதுவாக பேருந்தில் உள்ளவர்கள் பக்கத்தில் குப்பை வண்டி கிராஸ் செய்து, துரைப்பாக்கம் பக்கம் போகும் போது முகம் பொத்தி இருப்பதை கவனித்து இருக்கின்றேன் ஆனால் இப்போது எல்லோரும் அப்படி இருப்பது வேளச்சேரி வாசிகள் மீதுள்ள பயத்தை காட்டுகின்றது....
மடிப்பாக்த்தில் இருக்கும் எனது சகோதரிவீட்டுக்கு போன போது வைரஸ் தொல்லை தீரும் வரை யார் வீட்டுக்கும் போகாதேடா? என்ற போதே அவ்வளவு ஏன் நான் ஊன் வீட்டுக்கே வரலை என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.....பசங்களை யாரோடும் நட்பு பாராட்ட வேண்டாம் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்...... ஒரே மகனை கல்லூரிக்கு நாளை அனுப்பவதா என்று குழம்பி போய் உள்ளார்கள்.... எந்த நேரமும் செய்தி சேனலை பார்த்தபடி இருக்கின்றார்கள்...
ஒரு வைரஸ் எப்படி வேண்டுமானாலும் யார் மூலமாக வேண்டுமானலும் பரவும்... இறந்து போன வேளச்சேரி சிறுவனின் அப்பார்மென்டுக்கு வந்த கூரியர்பாயின் ஒன்னுவிட்ட சித்தப்பா சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இருக்கலாம், அதற்க்கு பக்கத்து சீட்டில்ஜரோப்பிய நாட்டில் இருந்து வந்தவன் வைரசை இவருக்கு பரப்பி இருக்கலாம்... இப்படி நிறைய முறையில் பரவும்.....
ஒரு வைரஸ் எப்படி பரவும், அந்த வைரசால் பாதிக்க படுபவர்கள் எப்படி பாதிக்கபடுகின்றார்கள் , அப்படி பாதிக்கபட்டவர்களை எப்படி நோய் தடுப்பு செய்ய வேண்டும்...வேளச்சேரியில் ஒரு பையன் ஆனால் சென்னையில் பாதி இடங்களில் இந்த வைரஸ் தாக்கினால் எப்படி இருக்கும்? அப்போது அரசு எடுக்கும் முடிவுகள் என்ன? அது எப்படி மக்களை டீரீட் செய்யும்? அதற்கு பாதிக்கபட்ட மக்களின் ரியாக்ஷன் என்ன? என்பதை அவுட் பிரேக் படம் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்....
ஆவுட் பிரேக் படத்தின் கதை இதுதான்....
மொடாபா வைரஸ் ஆப்பிரிக்காவில் இருக்கும் அறு... அதன் பக்கத்தில் இருக்கும் ஆர்மீ கேம்பில் பலர் ஒரு பெயர் தெரியாத வைரஸ் தாக்கி இறக்க அந்த இடத்தையே இராணுவம் பாம் போட்டு அழித்து விடுகின்றது... அது நடந்தது 1965 அது ஒரு டாப் சீக்ரேட்...
ஆனால் அந்த வைரஸ் அங்கு இருந்த குரங்குகளுக்கு பரவி தொலைக்கின்றது...
1995ல் ஒருவன் வைரஸ் பரவிய குரங்கை வலை போட்டு பிடித்து சட்ட விரோதமாக அதனை கப்பல் மூலம் ஏற்றி அதனை அமெரிக்காவில் விற்று தொலைக்க அந்த குரங்கை ஜம்போ என்பவன் வாங்கி அதனை வேறு ஒரு இடத்தில் விற்க்க அந்த கடைக்காரர் இது கலப்பு பாலினம் அதனால் விலை போகாது என்று சொல்ல அந்த குரங்கை காட்டில் விட்டு விடுகின்றான்... இதற்கு முன் அந்த குரங்கு அவன் கையையும் அந்த கடைக்காரர் கைடியயும் கடித்து வைத்து விடுகின்றது...
தன் காதலியை சந்திக்க பாஸ்டன் போகும் ஜம்போ அங்கு ஏர்போர்ட்டில் தன் காதலிக்கு உதட்டு முத்தம் இட்டு விட்டு மயங்கி சரிய அவ்வளவுதான் அந்த வைரஸ் காய்சல் நகரம் எங்கும் பரவுகின்றது.....USAMRIID (United States Army Medical Research Institute of Infectious Diseases) ல் இந்த மொடாபா வைரஸ் கண்டுபிடிக்கும் கேசை எடுத்து துப்பறியும்Colonel Sam Daniels (Dustin Hoffman) அவருடைய முன்னாள் மனைவி Robby Keough (Rene Russo)அவள் ஒரு சயின்டிஸ்ட் CDC (Centers for Disease Control) ல் பணி புரிகின்றாள்... பாதிக்கபட்ட ஜம்போ அவன் காதலி எல்லாம் பாஸ்டனில் இருக்கும் மருத்துவமனையில் இருக்க,( பாஸ்டன் ஸ்ரீராம் ஜாக்கிரதை) ஊரில் தொற்று நோய் பரவ அந்த நோய் எதிர்பு சக்தி அந்த காட்டில் விட்ட குரங்கிடம் இருந்துதான் எடுக்க வேண்டும் என்று கண்டு பிடிக்க ஊரே தொற்றில் மாட்டி இருக்கும் போது ராஷவம் அந்த குறிப்பிட்ட ஊரை மட்டும் பாதுகாப்பு வளையத்தில் வைக்க.... குரங்கை தேடி போனார்களா? அந்த குரங்குதான் காரணம் என்பதை எப்படி கண்டு பிடித்தார்கள்?
அவ்வளவு பெரிய காட்டில் அந்த குரங்கை எப்படி தேடினார்கள்.. என்பதை விரல் நகம் கடித்த படி, முட்டிக்கொண்டு இருக்கும் மூத்திரத்தை பாத்ரூம் போய் கொட்டி விட்டு வர முடியாத படி நம்மை திரைக்கதையில் கட்டி போட்டு சொல்லி இருக்கின்றார்கள்.....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
இந்த படம் 1995 ல் வெளி வந்து சக்கை போடு போட்ட படம்.....
இந்த படத்தின் இயக்குனர் டிராய், எர்போர்ஸ் ஒன்,பாபெக்ட் ஸ்டோர்ம், படத்தின் இயக்குனர் Wolfgang Petersen....
இந்த படத்தில் மார்கன் பிரிமேன்,கெவின்ஸ்பேசி போன்றவர்களும் நடித்த இருக்கின்றார்கள்
இந்த படத்தின் கதாநாயகி ரெனி ரூசோவை எனக்கு ரொம்ப பிடிக்கும்
வைரஸ் பரவுவதை வெகு ஜனமக்களுக்கு மிக அழகாக புரியும் படி திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இந்த படகுழுவுக்கு எனது நன்றிகள்....
ஏரோபிளேனில் காய்சலில் வரும் ஜம்போ ஒரு பிஸ்கட் தின்று வைக்க அதனை ஒரு சிறுவன் எடுத்து கொள்லாமா? என்று அனுமதி கேட்டு அந்த பிஸ்கட்டை எடுக்கும் போது அவ்ன தடுக்கபடும் போது நமக்கு ஒரு நிம்மதி...
அந்த குரங்கு கடித்து வைக்கும் போதே அந்த வைரஸ் பரவும் காட்சிகளை எடுத்து இருக்கும் விதம் அருமையான ஒன்று...
அதை விட தியேட்டரில் ஒருவன் இரும்ப..... அந்த கிருமி தியேட்டர் இருட்டில் பயணப்பட்டு படத்தின் காட்சிக்கு சிரிக்கும் ஒவ்வொறு பார்வையாளன் வாய்புறமாகவும் மூக்கு வழியாகவும் உள்ளே செல்லும் போது.... அதனை காட்சி படுத்தி இருக்கும் காட்சி அழகு... அதை பார்க்கும் நமக்கு பயம் நிச்சயம் தொற்றிக்கொள்ளும்...
இந்த படம் பார்த்த பிறகுதான், நான் இந்த மாதிரி நோய் தொற்று இருக்கும் நாட்களில் தியேட்டர் செல்வதை தவிர்த்தேன்.. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்....
நோய் தொற்றி வரும் மக்கள் கதறும் கதறலை நன்றாக காட்சி படுத்தி எடுத்து இருப்பார்கள்
குரங்கை கண்டுபிடிப்பதும், அதற்க்கு முன் எப்படி அந்த குரங்கு அமெரிக்கா வந்து இருக்கும் என்பதை இன்வெஸ்ட்டிகேஷன் செய்வது விறுவிறுப்பான அழகு...
இதற்கு மத்தியில் இராணுவத்தில் இருக்கும் ஆபிசர்கள் மத்தியில் இருக்கும் ஈகோ எல்லா இராணுவ படத்திலும் வருவதுதான்....
ராணுவம் தேவைபட்டால் சொந்த நாட்டு மக்களையே சுட்டு கோள்ளும் என்பதற்கு இந்த படத்தின் சில காட்சிகள் நல்ல எடுத்துக்காட்டு....
வாழ்வில் எல்லோரும் பார்க்க வேண்டியபடம்....
இந்த படத்தின் விருதுகளும்... பரிந்துரைப்பும்....
ASCAP Award
* Top Box Office Film (Won)
Saturn Award
* Best Science Fiction Film (Nominated)
NAACP Image Award
* Cuba Gooding, Jr. - Outstanding Supporting Actor in a Motion Picture (Nominated)
படம் மற்றும் படக்குழுவினர் பற்றி....
Directed by Wolfgang Petersen
Produced by Arnold Kopelson
Anne Kopelson
Wolfgang Peterson
Gail Katz
Written by Laurence Dworet
Robert Roy Pool
Starring Dustin Hoffman
Rene Russo
Morgan Freeman
Cuba Gooding, Jr.
Patrick Dempsey
With Donald Sutherland
And Kevin Spacey
Music by James Newton Howard
Editing by Neil Travis
Distributed by Warner Brothers
Release date(s) March 10, 1995
Running time 127 min.
Language English
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நடந்து கொண்டிருக்கும் ஒரு
ReplyDelete‘கால’ நிகழ்வோடு
ஒரு பட ஒப்பீடும் விமர்சணமும்.
ம்ம்ம் ... நல்ல முயற்சிதான்.
படத்தை விரைவில் வாங்கிப் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது உங்கள் விமர்சனம். (அவசரமாக எழுதியது போல தோன்றுகிறது)
ReplyDeleteகாலத்துக்கேத்தாப்புல பதிவு போடுற..!
ReplyDeleteரொம்ப முன்னேறிட்டப்பூ..!
//ஒரு வைரஸ் எப்படி வேண்டுமானாலும் யார் மூலமாக வேண்டுமானலும் பரவும்... இறந்து போன வேளச்சேரி சிறுவனின் அப்பார்மென்டுக்கு வந்த கூரியர்பாயின் ஒன்னுவிட்ட சித்தப்பா சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இருக்கலாம், அதற்க்கு பக்கத்து சீட்டில்ஜரோப்பிய நாட்டில் இருந்து வந்தவன் வைரசை இவருக்கு பரப்பி இருக்கலாம்... இப்படி நிறைய முறையில் பரவும்.....//
ReplyDeleteஎளிமையான விளக்கம்.
காலத்திற்கேற்ற திரைப்பட விமர்சனம்.
எழுத்து நடையும் நன்றாக உள்ளது.
நீங்க வேற தலைவா.........
ReplyDeleteஎதோ ஒரு தொலைகாட்சிலே யாரோ ஒரு மருத்துவர் வெளிய போயிட்டு வீட்டுக்கு வரவங்க உப்பு போட்டு கொதிக்க வச்ச தண்ணியில முகம், கை, கால், வாய் எல்லாம் கழுவிட்டு தான் வீட்டுக்குள்ள வரனுமின்னு சொன்னத கேட்டு, ரெண்டு நாளா அலுவலகத்தில இருந்து வீட்டுக்கு போன வாசல்லையே நிறுத்தி கொதிக்கிற உப்புத் தண்ணிய கொடுத்து முகம், கை, கால், வாய் எல்லாம் கழுவினாதான் உள்ளேயே வரணும்னு சொல்லிட்டா எம்பொண்டாட்டி, என்ன செய்ய உத்திரவ மீறமுடியுமா
சவின் ப்ளு வைரஸ திட்டிகிட்டே பாதி உடம்ப நனைச்சுக்கிட்டு தான் வீட்டுக்குள்ள போறேன்.............
கோகுலகிருட்டிணன்
:))
ReplyDeleteஐயா சாமி,
ReplyDeleteவணக்கம். நீங்க ஊரு சுத்துற விவகாரமெல்லாம் எனக்கு ரொம்ப நலலா தெரியும். எங்கிட்ட இருந்து வாங்கிட்டு போன DVD எல்லாம் சத்தியமா இப்பவே வந்து தரணும்னு கேட்க மாட்டேன். பொறுமையா அடுத்த வருஷம் வாங்கிக்கறேன். கட்டாயம் வீட்டுக்கு வர்றதா இருந்தா உங்களுக்குன்னு ஒரு பக்கெட் தண்ணி ரெடியா வீட்டுக்கு வெளியில காத்துக்கிட்டு இருக்கு...
நல்லா கௌப்புறாங்கய்யா பீதிய...
அன்பு நித்யன்.
டைமிங்-கான போஸ்ட்.
ReplyDeleteபாத்துடறேன்.
review is good.....prologue for review is sooooo good
ReplyDeleteவருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
ReplyDeleteவைத்தூறு போலக் கெடும்.
-திருவள்ளுவர்.
இப்போதுள்ள சூழ்நிலைக்கேற்ற விமர்சனம்
ReplyDeleteஅருமையான படம்
ReplyDeleteஇதே தலைப்பில் ராபின் குக் எழுதிய புதினம் ஒன்று உள்ளது. அதிலிருந்து கதை சிறிது மாறுபட்டிருக்கும்
தீநுண்மம் (வைரஸ்) பரவாமல் தடுக்க ஊரையை குண்டு வீசி காலி செய்ய முயல்வதை பார்த்தால் திகிலடிக்கும்
--
இந்த எபோலா, மார்போக் இவர்களுடன் ஒப்பிட்டால் H1N1 வெறும் பச்சா !!!
I watched Twelve monkeys recently..the movie is like a mix of outbreak and terminator...and also has a good cast (bruce willis and Brad pitt)..nalla irunthuchu..oru naal thookathayum keduthuchu
ReplyDeleteI am not criticisng, It looks like, S Ramakrishnan's writing , siriya velicham.
ReplyDeletejacky,
ReplyDeleteThe last image in your post is from the movie "dawn of dead".
that's not in outbreak.
Regards,
இந்த குரங்கு கமலின் தசாவதாரத்தில் நடித்திருக்குமே ....
ReplyDeleteசும்மா ஜாலிக்கு பகுதியை இரசித்தேன் :)
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். காலத்திற்கு ஏற்ற பதிவு.
ReplyDeleteநடந்து கொண்டிருக்கும் ஒரு
ReplyDelete‘கால’ நிகழ்வோடு
ஒரு பட ஒப்பீடும் விமர்சணமும்.
ம்ம்ம் ... நல்ல முயற்சிதான்.--
நன்றி ஜமால் உங்களின் தொடர் ஆதரவுக்கு
காலத்துக்கேத்தாப்புல பதிவு போடுற..!
ReplyDeleteரொம்ப முன்னேறிட்டப்பூ..!//
ஏதோ பெரியவங்க நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்
படத்தை விரைவில் வாங்கிப் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது உங்கள் விமர்சனம். (அவசரமாக எழுதியது போல தோன்றுகிறது//
ReplyDeleteஇல்லை ராஜா படம் பாத்தது குறிப்பெடுத்த எழுத 4 மணி நேரம் ஆயிற்று...
எளிமையான விளக்கம்.
ReplyDeleteகாலத்திற்கேற்ற திரைப்பட விமர்சனம்.
எழுத்து நடையும் நன்றாக உள்ளது.//
நன்றி துபாய் ராஜா....
சவின் ப்ளு வைரஸ திட்டிகிட்டே பாதி உடம்ப நனைச்சுக்கிட்டு தான் வீட்டுக்குள்ள போறேன்.............
ReplyDeleteகோகுலகிருட்டிணன்//
எல்லா இடத்திலியும் இதே காமெடிதான் தலைவா....
நன்றி நாஞ்சில்நாதம், மங்களுர் சிவா....
ReplyDeleteஒரு பக்கெட் தண்ணி ரெடியா வீட்டுக்கு வெளியில காத்துக்கிட்டு இருக்கு...
ReplyDeleteநல்லா கௌப்புறாங்கய்யா பீதிய...
அன்பு நித்யன்.//
யோவ் இதுக்குன்னே வீட்டுக்கு வரேன்யா...
review is good.....prologue for review is sooooo good//
ReplyDeleteநன்றி ராஜ்குமார்
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
ReplyDeleteவைத்தூறு போலக் கெடும்.
-திருவள்ளுவர்.//
நன்றி பிளாக் பாண்டி
நன்றி அத்திரி ,விக்னேஷ்வரன்
ReplyDeleteவணக்கம் ஜாக்கிசேகர்
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி ,
பீதியடையரது எப்படின்னு ?
அன்பு ஜாக்கீ
ReplyDeleteபிரகாஷ் எழுதுவது . இந்த வலைப்பூவை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருகிறேன். ட்ராய் திரைக்காவியத்தை உங்கள் வார்த்தைகளில் விமர்சனமாக படிக்க ஆசை. நான் என் வாழ்நாளில் பார்த்த மிகச் சிறந்த மூன்று படங்களில் அதுவும் ஒன்று. தங்கள் விமர்சனத்தை படித்த பின்பு மற்ற இரண்டு திரைப்படங்களைப் பற்றி தெரியப்படுத்துகிறேன்.
நன்றி
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Hi Jackie,
ReplyDeleteYesterday I saw this movie by downloaing that from torrent.
WOW...the movie was awesome....
Thank for intro for such a great movies...keep going sir...
P.S. Now i am downloading Peacemaker ;))
Will tell abut that tomorrow.
Cheers,
Kamalkanth