(BourneSupremacy) ஓடு.... ஓடிக்கொண்டேஇரு....

இரவில் கனவில் சிறு வயதில் ஒரு பாம்பு என்னை வெகு நாட்களாக துரத்திக்கொண்டே இருந்தது... அது எங்கு போனாலும் உயிரை வந்து எடுக்கு்ம் இவ்வளவு ஏன்.. கிராமத்தில் டூ பாத்ரூம் போக முள் செடிகளுக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு டைம்பாசுக்கு எதி்ரில் இருக்கும் சிறு கற்களை எடுத்து வேறு ஒரு பெரிய கல்லில் அடித்த படி விளையாட,அப்படியும் இல்லை என்றால் அருகில் இருக்கும் பூண்டு செடி இலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி நேரத்தை கடத்தும் போது பக்கத்தில் வந்து ஹலோ சொல்லும் அந்த பாம்பு.... இதெல்லாம் கனவில்தான்...

காலையில் விழித்ததும் அம்மாவிடம் சொன்னேன்... அம்மா சொன்னால் பாம்பு கடித்தால் நல்லது என்று... அப்புறம் அந்த பாம்பு என்னை ஒரு நாள் இரவு கனவில் கடித்தும் வைத்ததும்... அதன் பிறகு எங்கு போனாலும் என் கால் கட்டை விரலை கடித்த படி என்னோடு மண்ணில் புரண்ட படி வந்து கொண்டே இருக்கும், கிளாஸ் ரூம், கோவில் என்று நான் எங்கு சென்றாலும் தொடர்ந்து என் காலை கடித்தபடி வந்து கொண்டே இருக்கும்...... அதன் பிறகு அந்த கனவு ஒரு சில வயதுக்குமேல் வரவில்லை....

கனவில் சிலது நடக்கும் சட்டென நம்மை தொட்டு விடும் தூரத்தில் விழப்பு வேறு வந்து தொலையும்...உடல் எங்கும் வியற்வையோடு.. தண்ணிரை தொண்டையி்ல் களுக்கி கொண்டால் அதன் பிறகு தூக்கம் ஓஹோகயாதான்...... இப்படி தொடர்ந்து கனவு வந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கும் ஒருவனுக்கு... அந்த கணவின் விடை தேடி புறப்படும் படம்தான்BourneSupremacy படத்தின்கதை....

BourneSupremacy படத்தின் கதை இதுதான்....


இந்த கதை இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் போர்னை எதிரிகள் துரத்த அதிலிருந்து தப்பிக்க உதவி செய்த பெண் உடன் இந்தியாவில் கோவாவில் ஒரு ரிசார்ட்டில் தங்கி இருக்கின்றான்....
போர்ன் பாத்திரத்தை Matt Damon செய்து இருக்கின்றார்.... போர்னுக்கு தினமும் கனவில் பெர்லினில் உள்ள ஒரு ஓட்டலில் உள்ள ஒரு அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தை கொலை செய்த கனவு தினமும் வாட்டுகின்றது.... போர்ன் ஒரு சீஐஎ ஏஜென்ட் அவனுக்கு கொடுக்கபட்ட அல்லது பயற்சி அளிக்கப்டடதே யாரை எப்போது சொன்னாலும் கேள்வி கேட்காமல் கொலை செய்ய வேண்டும் என்பதுதான்... ஆனால் இதற்க்கு நடுவில் ஒரு பெரிய பணமாற்றமும்,கோப்பு மாற்றமும் நடக்க.... இதை அறிந்த ஒரு ஆயில் பிசினஸ் டான், அந்த பைலையும், பெரும் தொகையையும் இடையில் புகுந்து கிரில் என்பவனை வைத்து இரண்டையும் அடித்து விடுகின்றான்.....

சீஐஏவின் பைலும் போச்சு பணமும் போச்சு.... பெரிய அவமானமாக போய் விடுகின்றது... போர்னை உலகம் முழுவதும் வலை வீசி தேடி வருகின்றது இந்தியாவில் இருக்கும் போர்னை இந்தியாவில் வைத்தே தீர்த்து கட்டி விட்டால் பணத்தையும், பைலயும் போர்ன் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று கதை கட்டிவிடலாம் என்று எண்ணி இந்தியாவந்து அவனை கொலை செய்ய முயல... அவனுக்கு பதில் போர்ன் காதலி இறக்கின்றாள்.....

தன் காதலியை கொலை செய்தவனை கண்டு பிடித்து பழி வாங்கினான? சீஐஏவிடம் போர்ன் மாட்னானா? அவ்ன் தரப்பை எப்படி விளக்கினான்? குற்றவாளிகளை அடையாளம் காட்டினானா? போன்றவற்றை வெண்திரையில் பாருங்கள்.....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

முதல் காட்சியே இந்தியாவில் கோவா என்று டைட்டில் போடும் போதே மனம் புல்லரிக்க தொடங்கும்.....

இந்தியாவில் கோவாவில் போர்ன் உடற்பயிற்ச்சிக்கா காலையில் கோவா கடற்க்ரையில் ஓட அதனை ஆலிவர் உட்டின் கேமரா விடாமல் துரத்த அதற்க்கு ஒரு இந்திய இசையான தப்பு மேளத்தை கலந்து பேக் ரவுன்டில் ஒரு இசையும் போர்னின் ஓட்டமும் உற்சாகமான காட்சி அது.....

கோவாவில் நடக்கும் அந்த கார் துரத்தல் காட்சி அற்புதமான காட்சி அமைப்பு... சேலை கட்டிய நம்மூர் பெண்களை எல்லாம் காட்டும் போது எனக்கு மரிழ்வை தந்தது...

இந்த படத்தின் கேமரா ஒரு சில காட்சிகள் தவிர படம் முழவதும் ஸ்டெடிகேமில் வைத்தே படம் பிடித்து இருப்பார்கள்....

ஏனெனில் திரைக்கதை அப்படியான திரைக்கதை... அதற்க்கு வேகம் கொடுத்து கேமரா பயணி்க்க வேண்டும் ... அதற்க்கு ஈடு கொடுத்து ஒளிப்பதிவாளர்ஆலிவர் வுட் ஒர்க் செய்து இருப்பார்....

ஓட்டம் ஓட்டம் படம் முழுவதும் அதிகார வர்கம் துரத்த தனிமனிதன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்....

சிங்கத்தை அதன் குகையில் சந்திக்க ஒரு கட்ஸ் வேண்டும் அல்லவா? அந்த கட்ஸ் ஹீரோவுக்கு இருப்பதாக பின்னபட்ட திரைக்கதையி்ல் அந்த காட்சி ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது....

Matt Damon ரொம்ப சிறிப்பாக் அவருக்கு கொடுக்கபட்ட வேலையை ரொம்ப சீரியசாக முகத்தை வைத்து கொண்டு படம் முழுக்க விளையாடி இருப்பார்...

இந்த படத்தை பார்த்து முடித்த உடன் ஒரு நிறைவு இருக்கும் அதே போல் அந்த விடாக்கண்டன் வில்லன் உங்கள் நினைவில் இருப்பான்....


ஊரெல்லாம் இவனை தேடிக்கொண்டு இருக்கு சீஐஏ பில்டிங் பக்கத்தில் இருந்து பேசும் அந்த காட்சியை நீங்கள் பார்த்து அனுபவியுங்கள்...

Robert Ludlum என்பவர் எழுதிய கதையின் திரைவடிவம் இந்த படம்....

முடிவில் தான் செய்த தப்புக்கு பிராயசித்தமாக அந்த பெண்ணை சந்திக்க போவது கண்ணீல் நீர் வரவழைக்கும் காட்சி அது... சின்ன டூவிஸ்டுடன் படத்தை பயணிக்க வைத்த இயக்குனர்Paul Greengrass யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...படம் பெற்ற விருதுகளும் பரிந்துரையும்.....
Awards
Year Organization Award Category/Recipient Result
2005 ASCAP Film and Television Music Awards ASCAP Award Top Box Office Films: John Powell Won
2005 Academy of Science Fiction, Fantasy & Horror Films, USA Saturn Award Best Action/Adventure/Thriller Film and Best Actor- Matt Damon Nominated
2005 Broadcast Film Critics Association Critics Choice Award Best Popular Movie Nominate
2005 Cinema Audio Society Awards C.A.S. Award Outstanding Achievement in Sound Mixing for Motion Pictures Nominated
2005 Edgar Allan Poe Awards Edgar Best Motion Picture Screenplay Nominated
2005 Empire Awards, UK Empire Award Best Actor- Matt Damon and Best Film Won
2005 Empire Awards, UK Empire Award Best British Director of the Year- Paul Greengrass Nominated
2005 London Critics Circle Film Awards ALFS Award Best British Director- Paul Greengrass and Scene of the Year- the Moscow car chase sequence Nominated
2005 MTV Movie Award MTV Movie Award Best Action Sequence-the Moscow car chase sequence and Best Male Performance- Matt Damon Nominated
2005 Motion Picture Sound Editors, USA Golden Reel Award Best Sound Editing in Domestic Features - Dialogue & ADR and Best Sound Editing in Domestic Features - Sound Effects & Foley Nominated
2005 People's Choice Awards, USA People's Choice Award Favorite Movie Drama Nominated
2005 Teen Choice Award Teen Choice Award Choice Movie Actor: Action/Adventure/Thriller-Matt Damon and Choice Movie: Action/Adventure Nominated
2005 USC Scripter Award USC Scripter Award Tony Gilroy (screenwriter) and Robert Ludlum (author) Nominated
2005 World Soundtrack Award World Soundtrack Award Best Original Soundtrack of the Year-John Powell and Soundtrack Composer of the Year-John Powell Nominated
2005 World Stunt Awards Taurus Award Best Stunt Coordinator and/or 2nd Unit Director and Best Work with a Vehicle Won
2005 World Stunt Awards Taurus Award Best Fight- Darrin Prescott and Chris O'Hara Nominated

படக்குழவினர் விபரம்....

Directed by Paul Greengrass
Produced by Patrick Crowley
Frank Marshall
Paul L. Sandberg
Doug Liman
Written by Screenplay:
Tony Gilroy
Brian Helgeland
(uncredited)
Novel:
Robert Ludlum
Starring Matt Damon
Franka Potente
Brian Cox
Julia Stiles
Karl Urban
Gabriel Mann
Joan Allen
Music by John Powell
Cinematography Oliver Wood
Editing by Christopher Rouse
Rick Pearson
Distributed by Universal Studios
Release date(s) July 23, 2004
Running time 108 min.
Language English, Russian, German, Italian
Budget $75 million[1]
Gross revenue $288,500,217[1]

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

16 comments:

 1. A brilliant film. One of my favourites. May be you should have started with Bourne identity, then supremacy and finally Ultimatum!.
  Write about Fugitive(a film copied and murdred by M.Bhat)!

  ReplyDelete
 2. நல்லாஇருக்கு தலைவா.........

  ஆமா இந்த டி.வி.டி எல்லாம் எங்கிருந்து வாங்குறீங்க எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க தலைவா நானும் பார்த்து உங்களமாதிரி இந்த திரைப்பட தொழில்நுட்ப தகவல்களை எல்லாம் தெரிஞ்சுக்கனும்னு ஆவாலாய் இருக்கு, எனக்கு புகைப்படத் துறை மீது ஆர்வம் அதிகம், அதன் நுணுக்கங்களை எங்கே அறிந்துகொள்வது என்கிற தகவல்களை கொஞ்சம் சொல்லுங்கள் (உங்களுக்கு நேரமிருந்தால்).

  கோகுலகிருட்டிணன்

  ReplyDelete
 3. I saw two weeks before

  I like the music which really makes interesting to watch movie. But of all climax is nice and soft

  ReplyDelete
 4. கிராமத்தில் டூ பாத்ரூம் போக முள் செடிகளுக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு டைம்பாசுக்கு எதி்ரில் இருக்கும் சிறு கற்களை எடுத்து வேறு ஒரு பெரிய கல்லில் அடித்த படி விளையாட]]


  சேம் சேம் பிளட் ...

  ReplyDelete
 5. மூன்று பாக்த்தையும் மொத்தமாக எழுதியிருக்கலாம்!

  இந்த படத்தின் திரைகதை என்னை மிகவும் கவர்ந்தது!

  ReplyDelete
 6. Bourne Supremacy இந்த படத்தை கொண்டடாத Directors இல்லை. படத்தின் மைய கருவை பார்த்தல் நமது உலக நாயகன் கமல் நடித்த வெற்றிவிழா படத்தின் கரு போன்று இருக்கும். நான் மிகவும் ரசித்து பார்த்த படம் . முன்று பாகங்களும் நச். Bourne அடுத்த படைப்பு 2011 ஒன்றில் வெளி வருகிறது.

  ReplyDelete
 7. அழகாக ஆரம்பித்து அருமையான விமர்சனம்.அட்டகாசம்.

  ReplyDelete
 8. hai mr.Jackie
  விமர்சனம் அருமை.
  "The Bourne Identity" 1988ல் டிவில 2 பாகமா வந்தது இல்லையா?
  அதோட விமர்சனம் எப்போ?

  thanks.

  ReplyDelete
 9. ரொம்ப அருமையான விமர்சனம், பதிவுங்க அண்ணே.
  மேட் டெமான் நல்ல நடிகர்.
  சீரீஸ் வகை படங்களில் நல்ல வசூலையும். எதிர்பார்ப்பையும் பெற்ற, பூர்த்தி செய்த படம்.
  லட்னம் நல்ல எழுத்தாளர்.
  எனக்கு முதல் & இரண்டாம் பாகங்கள் பிடித்தாற்போல மூன்றால் பாகம் ஈர்க்கவில்லை.
  நான்காம் பாகம் எப்படி இருக்கும்? என்று பார்ப்போம்.

  அண்ணே யூ டியூப் வீடியோ டிரைலரயும் இணையுங்கள்

  எம்பெட் என்னும் குறியீட்டை
  காபி செய்து.
  உங்கள் எடிட் ப்ளாக்கில் பேஸ்ட் செய்யுங்கள் .இப்போது வீடியோ உங்கள் வலையில்.

  வோட்டு போட்டாச்சு.

  ReplyDelete
 10. Bourne Ultimatum is the ultimate film in this sequence....looking for that review....

  Bourne identity - speed
  Borune supremacy - super fast
  Bourne Ultimatum - jet

  Robert Ludlum my one of favorite writer

  அருகில் இருக்கும் பூண்டு செடி இலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி நேரத்தை கடத்தும்.....same blood

  ReplyDelete
 11. வணக்கம் jackiesekar
  கலக்கல்
  தொடருங்கள்,

  ReplyDelete
 12. மூன்று படமும் பார்த்திருக்கிறேன் மிக நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 13. இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். கோவா காட்சிகள் சிறப்பாக இருந்தன.
  இது போல கனவு எனக்கும் அடிக்கடி வந்துக்கொண்டிருந்தது ஆனால் இப்ப சில வருடங்களாக வருவதில்லை.
  என் கனவில் எப்பொழுதும் துப்பாக்கி வரும். அதை வைத்து அநியாயம் செய்பவர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்வது போலவே எப்பொழுதும் வரும். இதில் ஜோக் என்னவென்றால் காலையில் படித்த செய்திகளின் அடிப்படையிலும் பலமுறை கனவு வரும்.ஆனா இப்ப எல்லாம் ஏனோ அந்த கனவு வருவதில்லை.

  ReplyDelete
 14. படம் அற்புதம் தலைவா,
  நான் 1989 la வந்த 2 partu , இந்த 3 parts எல்லாம் parthuten,
  ரொம்ப speeda இருக்கும், screen play supera இருக்கும்,

  ReplyDelete
 15. 1989la வந்த பார்ட் ஓல்ட எருபதள இப்ப அது புடிக்கும்னு சொல்ல முடியாது,
  அனா இந்த identity,supremacy,ultimum டாப் classa இருக்கும். 100% entrainment , photography செமையா இருக்கும்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner