நான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர் எழுதிய பதிலும்....


ஒரு ஜனாதிபதி அதுவும் நம் தாய் மொழி நன்கு தெரிந்த நபர்.... இனிவரும் காலம் இளைஞர் காலம் என்பதை கண்டு ,தனக்கு பிள்ளை இல்லாவிட்டாலும் இந்த தேசத்தில் உள்ள எல்லா பிள்ளைகளையும் தன் பிள்ளையாக நினைக்கும் அந்த பெரியவர். அப்படி எளிமையாக நம் இந்தியநாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமுக்கு, அவர் ராஷ்ட்ரபதி பவனில் வாசம் செய்த போது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.... என்னவென்றால் அவர் சென்னை வந்த போது அவர் பாதுக்காப்பு எல்லை தாண்டி துரு துரு என்று வெளியே வந்து விடுகின்றார் என்ற செய்தி பத்திரிக்கைகளில் படித்த போது அவருக்கு ஒரு கடிதம் எழுத தோன்றியது.... அது உங்கள் பார்வைக்கு.....

20/12/2002
வெள்ளிக்கிழமை
காலை 10.30
சென்னை 87

“பாதுகாப்பு வளையங்களை மீறி பொதுமக்களை ஜனாதிபதி சந்தித்தார்” என்று நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...
ஐயா , நீங்கள் எளிமையானவர்தான்... இந்தியாவை தவிர வேறு எது குறித்தும் கவலை கொள்ளாதவர் நீங்கள்... ஆனால், எதிர்கால இந்தியா உங்களை போன்ற ஒரு சிலரை மிகுந்த நம்பிக்கையோடும், மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் கவனித்து கொண்டு இருக்கின்றது....

கவர்னர் மாளிகை காட்டுக்குள் 2 மணிநேரம் நடைபயணம்...
“அதுவும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி” இதே இடத்தில் தமிழர் வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது இது போல் கவலை கொண்டதில்லை...

நாட்டின் எதிர்காலம் இளைஞர் கையில் என்பது பலரின் எண்ணம்... சாரி அது பலரின் தவறான கணிப்பு... ஆம் உங்கள் எண்ணப்படி பள்ளிக்குழந்தைகள் கையில்தான், இந்தியாவின் எதிர்காலம் உள்ளது...அவர்கள் மனதில் இந்திய முன்னேற்ற விதை ஊன்றினால் அது பசு மரத்தானிபோல் பதிந்து விடும்... என்பதை புரிந்தவர் நீங்கள் ... அந்த வகையில் நான் உங்களுக்கு நன்றி சொல்கின்றேன்....

எந்த ஒரு தீவிரவாத குழுவும் தமிழகத்தை சிறந்த இடமாக தேர்வு செய்து கொள்கின்றன... இங்குள்ள மக்கள் வெகுளிகள்... வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புபவர்கள்...ஸ்ரீ பெரும்பத்தூர் சோககறை இன்னும் மறையவில்லை, மறக்கடிக்கபடவில்லை... சோ தயவு செய்து பாதுகாப்பு வளையத்தை மீறாதீர்கள்...
எல்லா தீவிரவாத அமைப்புகளும் உலகத்தின் கவனம் தங்கள் மீது திரும்ப எதுவும் செய்ய தயாராகிவிட்டன என்பதை நாம் கவனித்து கொண்டுதான் இருக்கின்றோம்...

வார்வில் எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம் இந்த விஷயங்கள் கவலை அளிப்பதால் இந்த கடிதம் உங்களுக்கு எழுத தோன்றியது... அதுவும் தாய் மொழியில் நான் எழுதிய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்பினேன் நீங்கள் தமிழர் என்பதால்.....

ஆடம்பரம் இல்லாத ஜனாதிபதிக்கு இந்த மடல் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...நிகழ்ச்சி நிரல் படி நடக்கும் விழாக்களை யே புறக்கனிக்கும் இந்த காலத்தில்....உங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லாம ஆலந்தூர் மகளீர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...
இந்த கடிதத்தை நீங்கள் எந்தளவுக்கு மதிப்பீர்கள் அல்லது புரிந்து கொள்வீர்கள் என்று தெரியவில்லை எதிர்காலத்தில் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமான உடம்புடன் நீர் நலமுடன் இன்னும் பபல அரிய சேவைகள் செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.....

அன்புடன்...
தனசேகரன்(ஜாக்கிசேகர்)

ஒரு மூன்றுமாதம் கழித்து அவர் அனுப்பிய பதில் கீழே....

ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்
ராஷ்ட்ரபதி பவன்
நியூடெல்லி. 1100004


திரு தனசேகரன் அவர்களுக்கு,
வணக்கம்
தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது
என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்....

கடிதம் என்கைகளில் தவழ்ந்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....

அவரை ஜனாதிபதியாக சென்னை சிவானந்த குருகுலத்துக்கு வந்த போது பத்தடி தூரத்தில் கேமரா அசிஸ்டென்டாக அந்த நிகழ்ச்சிக்கு போன போது பார்த்தது....
மிகவும் எளிமையான மனிதர் கலாம்...

அந்த நிகழ்ச்சியில் பல பிள்ளைகளின் கேள்விக்கு பதில் அளித்ததும் ரொம்ப பொறுமை காத்ததும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன....இப்படியும் ஒரு மனிதர் சுயநலமில்லாமல்.....நம்மோடு வாழ்கின்றார் அதுவே பெரிய விஷயமில்லையா???,

அன்புடன்
ஜாக்கிசேகர்

17 comments:

  1. நான் தான் ஃபஸ்டா

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சார்

    ஆனால் அவரை இப்போது இந்த அரசு மதிப்பதில்லையோனு தோனுது.. :(

    ReplyDelete
  3. நல்ல விஷயம் தான்.வாழ்த்துகள்!

    //சோ தயவு செய்து பாதுகாப்பு வளையத்தை மீறாதீர்கள்//

    சோ -விடம் சொல்ல வேண்டியதை ஏன் அவருக்கு எழுதினீர்கள்? :)

    ReplyDelete
  4. அற்புதம்..
    அக்கறையுடன் கடிதம் எழுதிய உங்கள் தன்மையும்..

    அதற்கு பதிலளித்த அவர் தன்மையும்..!

    வாழ்த்துக்கள் ஜி!

    ReplyDelete
  5. iyaa, thiruperumputhukuthan pali vaangiyaache. 30000 tmails killed raped and 300000 tmails are in camps. tmail girls are raped. ithu poothatha? ennathuku ungaluku. ithukellam intha tamilar inthayaavin poruppana a.p.j kalam pothikondu thanne irunthar. atu than avarin irakka kunamum and avareen perunthanmaiyum. IPKF killed thousands of tmils and raped. for that only he was killed. u must be proud of it. now soniya did the revenge. this is palivangum kunam. this is the pre format letter. he only signs many in every day. he never said anyting about hwat u read. one ass licking intelligence officer will read it and select for a formal reply. that is happend to u. be tamil. be a good tamil

    ReplyDelete
  6. நல்ல விஷயம் தான்.வாழ்த்துகள்

    ReplyDelete
  7. எளிமை என்றால் அது கலாம் தான் கூறவேண்டும்..

    அதற்கு உங்களுக்கு கிடைத்த பதிலே ஒரு எ.கா.

    உங்கள் சமூக அக்கறை பாராட்டத் தக்கது :))

    ReplyDelete
  8. எல்லாம் நல்லமாதிரித்தான் இருந்தது.கமெண்ட்ஸ் பாக்ஸ் வரும் வரும்வரைக்கும்!
    பக்கத்திலேயே போட்டு தொலைத்தீர்கள் 'நம்ம ஆள் " படத்தை. தொலைந்தது எல்லாம்.
    ஜிலு ஜிலு என இருந்தாலும் கலாம் அவர்களின் கடிதம் பற்றின கருத்து எழுத வரும் போது
    இப்படி ஆளை காலை வாரிவிடலாமா நண்பரே!
    இருந்தாலும் ஒரு "டாங்க்ஸ்," Shindy படங்களாக தனியாக ஒரு பதிவு இட்டு தங்களின் பாவத்தை போக்கிக்கொள்ளவும்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  10. /
    சுரேகா.. said...

    அற்புதம்..
    அக்கறையுடன் கடிதம் எழுதிய உங்கள் தன்மையும்..

    அதற்கு பதிலளித்த அவர் தன்மையும்..!

    வாழ்த்துக்கள் ஜி!
    /

    repeat

    ReplyDelete
  11. எளிமை - கலாம் , அன்பு - நீங்கள்


    ஜாலியோ ஜிம்கானா(சைடு படத்துக்கு)

    ReplyDelete
  12. நீங்க ஒரு பெரும்புள்ளி ஐயா!

    ReplyDelete
  13. எளிமையான,இனிமையான ஐயா அப்துல்கலாம் நீடுழி வாழ எல்லாம்வல்ல இறைவன் அருள்வானாக.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  15. சார் பெரிய புள்ளிதான் போலதான் இருக்கே...

    அன்பு நித்யன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner