சாண்ட்விச் அன்ட் நான்வெஜ் (03,08,09)

ஆல்பம்....

நேரம் என்பது என்ன தெரியுமா?
வீட்டில் வெட்டி ஆபிசராக உட்கார்ந்து கொண்டு ஒரு நாளைக்கு 3 பதிவுகள் 4 பதிவுகள் போட்டபோதெல்லாம், தமிழ்மண நட்சத்திர பதிவராக அழைக்கும் மெயில் எனக்கு வரவில்லை... இப்போது காலையில் 5,30க்கு போனால் இரவு 8,30க்குதான் வீடு வரும் அளவுக்கு பெண்டு கிழியும் வேலை... இப்போது தமிம்ண நட்சத்திர பதிவராக எழுதும் வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது.... என்ன செய்வது இதுதான் நேரம் என்பது.....ஆனால் ஒரு நாளைக்கு ஒரு பதிவு நிச்சயம்..... கடவுளின் கருனையும் நேரமும் கிடைத்தால் மேலும்....

நீயா நானாவில் தான் கலந்து கொண்டு தனக்கு பணமுடிப்போ அல்லது பரிசுமுடிப்போ, கொடுக்கின்றேன் என்று சொல்லி ஏமாற்றிய கதையை எழுத்தாளர் சாரு வருத்தப்பட்டு விகடனில்எழுதி இருந்தார்... அதற்க்கு நீயா நானா தயாரிப்பாளர் இயக்குநர் ஆண்டனி, பிரபலங்கள் யாருக்க பண முடிப்பு கொடுப்பதில்லை என்றும், அவர்களுக்கு பணம் கொடுத்தால் அது செட் செய்ததது போல் ஆகிவிடும் என்று சொல்லிஉள்ளார்.... ஒரு இடத்திற்க்கு ஒரு பிரபலத்தை வரச்செய்து அவர்களை வைத்து ஷோவும் நடத்திவிட்டு ஏதும் கொடுப்பதில்லை என்று சொல்வதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை...நிச்சயமாக 3000 ரூபாய் மதிப்புள்ள எதாவது ஒரு பரிசுப்பொருளை அன்பளிப்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா பிரபலத்துக்கும் கொடுக்கவேண்டும் அதுதான் அந்த கலைஞனுக்கு செய்யும் மரியாதை... இந்த இடத்தில் சாரு அல்லாத வேறு எந்த பிரபலமாக இருந்தாலும் நான் வாதாடி இருப்பேன்... பிரபலம் என்பதாலும் அந்த கான்செப்டுக்கு அந்த பிரபலம் செட் ஆவார் என்றுதானே அழைக்கின்றீர்கள்... ரோட்டில் போகும் குப்பனையோ சுப்பனையோ அழைக்கவில்லையே.... சரி இதுவே ஒரு அனாதை ஆசிரமத்துக்கு நிதி திரட்ட போய் அங்கு பேசி எனக்கு எதுவும் கொடுக்கவில்லை என்று சொன்னால் அது அந்த பிரபலத்துக்கு இழுக்கு....

நீங்கள் அந்த நிகழ்ச்சிமூலம் வருமானம் பார்க்கின்றீர்கள்.... அதற்க்கு ஒரு கருவியாக பிரபலத்தை பயன்படுத்துகின்றீர்கள்....நீங்கள் கொடுப்பதை சில பிரபலங்கள் வாங்கவில்லையா?.... அது அவர்கள் பெருந்தன்மை... வந்த விருந்தினருக்கு கொடுப்பது உங்கள் கடமை அல்லவா?

விஜய் டிவியில் நீயா நானா, சமுக முன்னேற்றத்திற்க்காக இலவசமாகவா ஒளிபரப்பு செய்கின்றார்கள்???? அல்லது கோபி போன்றவர்கள்தான் இலவசமாக ஷோ நடத்தகிறார்களா?????

மிக்சர்....

நிறைய நண்பர்கள் படங்களின் லிஸ்ட் கேட்கின்றார்கள், நேற்று கூட தமிழ் படங்களின் லிஸ்ட் வேண்டும் என்று மெயில் அனுப்பியிருந்தார் நண்பர் ஒருவர்....நான் பார்த்த பல படங்கள் உலக படங்கள்,அந்த படங்களை உலக படவிழாக்களில் பார்த்து, அதன் டிவிடிக்கள் உங்களுக்கு கிடைக்காது ரொம்ப ரேர்... எப்போதோ பார்த்த படங்களை நினைவில் வைத்து நெட்டில் அலசி ஆராய்ந்து எழுதுகின்றேன் அவ்வளவே....இதுவரை அறிமுகப்படுத்திய படங்களின் லிஸ்ட் லேபிளில் இருக்கின்றது.... படித்து பயன் பெறவும்.....

விளையாட்டு இல்லாத நேரங்களில் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை தாங்கள் எங்கு இருக்கின்றோம் என்பதை கிரிக்கெட் வீரர்கள் சொல்ல வேண்டும் எனபதெல்லாம் ரொம்ப ஓவர் நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்....


விஷுவல் டேஸ்ட்.... நான் எடுத்ததில் பிடித்தது......

சென்னையில் கோயம்பேட்டில் ஒரு மாலைநேரப்போழுது.....

பரிணாமத்தின் வளர்ச்சிதான் இந்த காட்சி, என்ன அச்சம் என்பது மடமையடா என்று குதிரை வண்டி ஓட்டி ,பாடும் பாக்கியத்தை இழந்ததுவிட்டோம் நாம், என்ன செய்ய.....

ஊட்டி ஏரிக்கு எதிரே கேரட் விற்க்கும் மலைவாசிபெண்....

சின்ன சின்ன ஆசை.... ஊட்டியில் குதிரை மீது அமர்ந்து போஸ் கொடு்க்கும் இளைஞனும் அவன் ஆசையை சட்டத்திற்க்குள் பதிவு செய்ய முயற்ச்சிக்கும் குதிரை ஓட்டியும்.....( படங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்)


நான்வெஜ்.....

நைட் ஷீப்டுக்கு போய் உடல்நிலை சரியில்லாமல் உடனே வீடு வந்த கணவன் மனைவியிடம் சொன்னான்... யார் போன் செய்தாலும் நான் வீட்ல இல்லைன்னு சொல்லு என்றான்... அவன்சொல்லி முடிச்ச அடுத்த செகன்ட் போன் வந்தது டிரிங் டிரிங் என்று, அவள் போன் எடுத்தாள்....ஹலோ, அவர் இருக்கார் என்று சொன்னாள்.... கணவன் கோபத்துடன் சன்டாளி ஏன்டி அப்படி சொன்னே? என்று கேட்டான் அதற்க்கு அவள் சொன்னாள் அது என் லவ்வர் என்று.....

பரிணாம வளர்ச்சி....
17ம் நூற்றாண்டில் தாய் மகனுக்கு சொன்னாள், நம்ம ஜாதியிலேயே பொண்னை கல்யாணம் பண்ணிக்கோ என்றாள்...18ம் நூற்றாண்டில் நம்ம மதத்து பொண்னா பார்த்து கல்யானம் செய்துக்கோ என்றாள்.19 ம்நூற்றாண்டில் நம்ம அந்தஸ்த்துக்கு குறைவில்லாத பொண்ணை கல்யாணம் செய்துக்கோ என்றாள்...20 நூற்றாண்டில் நமது நாட்டு பெண்ணையே கல்யாணம செய்துக்கொள் என்றாள்....21 ம் நுற்றாண்டில் தாய் தன் மகனிடம் கெஞ்சுகின்றாள் எதுவா இருந்தாலும் பரவாயில்லை தயவு செஞ்சு பொம்பளை புள்ளய கல்யாணம் செய்துக்கோ என்று......
மேலுள்ள பரிணாம வளர்ச்சி ஜோக்குக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நண்பர்களே...

நேற்று பிரண்ட்ஷீப்டே அதற்க்காக ஒரு பஞ்ச்....

காதல் என்பது காக்கா சுட்ட வடை மாதிரி, ஒழுங்காக பாத்துக்கலைன்னா காக்கா தூக்கிட்டு போயிடும்.... ஆனா நட்பு என்பது அந்த வடை சுட்டஆயா மாதிரி எவனும் தூக்கிட்டு போகமாட்டான்...


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

28 comments:

  1. அண்ணாச்சி மானாட மயிலாட நிகழ்ச்சி ஒரு எபிசோட்டுக்கு ஹாய் மச்சான்ஸ் புகழ் நமீக்கு ஒரு லட்சம் கொடுக்கின்றார்களாம். பிரபலங்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதில் தப்பில்லை. குளோபல் வார்மிங் போல பொருளாதார நெருக்கடி பற்றிய ஒரு படம் மின்னஞ்சலில் உலாவுகிறது கிடைக்கவில்லையா?

    ReplyDelete
  2. வண்ணத்துப்பூச்சியாரை ரிப்பீட்டு

    ReplyDelete
  3. வண்ணத்துபூச்சியார் said...
    விஷீவல்.. அருமை.



    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  4. நான்வெஜ்தான் நமக்கு புடிச்சது..

    ReplyDelete
  5. பரிணாம வளர்ச்சி நன்றாக இருக்கிறது, இந்த Global Warming படம் ரொம்பவே சூப்பர், எதிர்காலத்தில இப்படி காயவைக்கவே தேவை இல்லையோ?

    ReplyDelete
  6. இங்க தான் சாண்ட்விச் என்றால் அங்கயுமா ....

    நல்லா இருக்கு சாண்ட்விச்

    அருமையான போட்டோக்கள்

    ReplyDelete
  7. //விஜய் டிவியில் நீயா நானா, சமுக முன்னேற்றத்திற்க்காக இலவசமாகவா ஒளிபரப்பு செய்கின்றார்கள்???? அல்லது கோபி போன்றவர்கள்தான் இலவசமாக ஷோ நடத்தகிறார்களா?????
    //
    உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்....

    ReplyDelete
  8. நட்சத்திர வாழ்த்துக்கள் தலைவா.

    ReplyDelete
  9. //ஆனால் ஒரு நாளைக்கு ஒரு பதிவு நிச்சயம்.....//

    நட்சத்திர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ஜாக்கி

    அறிமுகம் பதிவில் என் பெயர் போடாததால் இரண்டு கட்டிங் கூடுதலாக அடிக்கப்படும் (உங்க பார்ட்டியில்), கேபிலாரும் அப்படியே முடிவு செய்திருப்பதால் சீக்கிரமே எல்லார் பேரயும் சேத்துடுங்க.
    சிறிது நேரமே பார்த்து இருந்தாலும் நிஜமாகவே உங்களுடன் நீண்ட நாள் பழகிய உணர்வு எனக்கு,
    மீண்டும் வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    ஸ்ரீராம், பாஸ்டன்

    ReplyDelete
  11. கோயம்பேடு போட்டோ A1 க்ளாஸ்...
    டிவிடி லிஸ்ட் கேட்டவர்களில் நானும் ஒருவன்..அப்புறம், அடுத்த உலக பட விழா பத்தி முன்னாடியே சொல்லுங்க.மறந்துடாதீங்க ஸார்...

    ReplyDelete
  12. நீயா நானா பத்தின உங்கள் கருது எனக்கு ஒப்பவில்லை ஏனெனில் அங்கு சிறப்பு அழைபாலர்களாக வருபவர்கள் பேராசிரியர்,சமூக ஆர்வலர்கள் போன்ற துறையில் வல்லவர்கள வருகிறார்களே தவிர காசுக்காக நடிப்பவர்கள் இல்லை மேலும் ஒரு நாளைக்கி ஒரு லட்சம் சம்பதிபவருக்கு ஆயிரம் ருபாய் கொடுப்பது அவரை அவமானபடுத்துவது போலாகும் அவர்கள் கூப்பிடும்போதே எனக்கு இவ்வளவு தரவேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டியது தானே இல்லாவிட்டால் வரமுடியாது என்று சொல்லுவது தானே அதை விடுத்தது பிறகு கூப்பாடு போடுவது என்ன நியாயம் அப்படியே அவர்கள் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அதை திரை மறைவில் தான் கொடுக்க வேண்டும் மற்றபடி சண்ட்விச் சூப்பர் .

    ReplyDelete
  13. நட்சத்திர வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete
  14. //மேலுள்ள பரிணாம வளர்ச்சி ஜோக்குக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நண்பர்களே...//

    ம்ம்ம்......நம்பிட்டோம்

    ReplyDelete
  15. நட்சத்திர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. விஷீவல்.. அருமை.



    நட்சத்திர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. நட்சத்திர வாழ்த்துக்கள் ஜாக்கி...

    ReplyDelete
  18. நட்சத்திர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. Global Warming ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌த்தை ஆஸ்டினில் உள்ள‌ டெக்ஸ‌ஸ் ப‌ல்க‌லை க‌ழ‌க‌ பேராசிரிய‌ர் ஜொனாத‌ன் செஸ்ல‌ர் (Jonathan Sessler - வேதிய‌ல்த் துறை), அவ‌ருடைய‌ ஆராய்ச்சி உரையின் போது காண்பித்தார். அதே ப‌ட‌த்தை நீங்க‌ளும் வெளியிட்டு இருப்ப‌து ம‌கிழ்ச்சி. ந‌ட்ச‌த்திர‌ம் ஆன‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  20. விளையாட்டு இல்லாத நேரங்களில் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை தாங்கள் எங்கு இருக்கின்றோம் என்பதை கிரிக்கெட் வீரர்கள் சொல்ல வேண்டும் எனபதெல்லாம் ரொம்ப ஓவர் நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்....THIS IS TOO MUCH....

    ALL PHOTOS ARE NICE...

    NON VEG JOKE - GREAT

    பரிணாம வளர்ச்சி....THIS IS GOING TO HAPPEN IN NEAR FUTURE

    GLOBAL WARMING PROOF....what a proof...what a proof...

    ReplyDelete
  21. அன்பின் ஜாக்கி சேகர்

    சாண்ட் விச் நன்றாகவே இருந்தது. நீயா நானா நிகழ்ச்சி - சாரு - அந்தோணி வருத்தத்தைத் தவிர.

    நன்வெஜ் பரவாய் இல்லை

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  23. //அவர்கள் கூப்பிடும்போதே எனக்கு இவ்வளவு தரவேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டியது தானே இல்லாவிட்டால் வரமுடியாது என்று சொல்லுவது தானே அதை விடுத்தது பிறகு கூப்பாடு போடுவது என்ன நியாயம்//

    ரிப்பீட்டு.....

    நான்வெஜ் அருமை

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner