கமலின் மர்மயோகி திரைப்படநிழற்படங்கள் ........உங்களுக்காக.....



































எற்கனவே இந்த படங்கள் இனையத்தில் வெளிவந்து இருந்தாலும் இநத படங்
கள் பார்க்காதவர்களுக்கு

அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை




(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)





நிரு ஆறுமாத கர்பத்துடன் வேலைக்கு சென்றால், தினமும் காரில் நிருவை அவள் ஆபிஸில் விட்டுவிட்டு செல்வான்

பல சோதனைகள் மற்றும் வேதனைகளை தான்டி இரட்டை குழந்தைகளை நிரு பெற்றாள் நிரு அம்மாவுக்கு தகவல் சொல்லி அனுப்பபட்டது. அடுத்த பிளைட் பிடித்து தாயையும் சேயையும் பார்த்து விட்டு சென்றால் போகும் போது இரண்டு லட்சம் பணக்கட்டுயை நிரு அம்மா கமலிடம் கொடுத்தால் ,தேவையான பணம் இருக்கிறது , உங்கள் அன்பு மட்டும் போதும் என்றான்.

மாப்பிள்ளை ரொம்ப ஜென்டில் மேன் போல் நடந்து கொண்டதில் நிரு அம்மாவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் நாள் கழித்து நிருவின் அப்பாவும் குழந்தையை பார்க்கும் சாக்கில் வந்து ஒட்டிக்கொண்டார்

அம்மா அப்பா ஒன்று சேர்ந்ததும் நிரு மப்பு தலைக்கு ஏறிசுத்தமாக மாமனார் மாமியாரை மதிக்காமல் எடுத்து எறிந்து பேசினால் சட்டென்று ஸ்டேட்டஸ் பற்றி பேச ஆரம்பித்தால்.

கலைஞருக்கு ராமதாஸ் கொடுத்த குடைச்சல் போல் நிருவின் அனைத்து செயல்களும் இருந்தன.
நிருவன் செயல்களால் வெறுத்து போன கமல் அம்மாவும் அப்பாவும் பெஙக்ளுர் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். இவன் மட்டும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்க்கு ஒரு முறை சென்னை வந்து பார்த்து செல்வான்.

கமலு்க்கு சம்மபளம் ஏற்றப்பட்டது எவ்வளவு தெரியுமா ?மாதம் ஒரு லட்சத்துக்கு196 ஆறு ரூபாய் கம்மியாக சம்னளம் வாங்கினான்.

சசிகலா அடம் பிடித்து டான்ஸி நிலம் வாங்க சொல்லியது போல் நிரு கமலை அடம்பிடித்து பெங்களுரில் வீடு வாங்க சொன்னாள். கமல் சென்னையில் வீடு வாங்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் கெஞ்சியும் காதில் நிருபோ்ட்டு கொள்ளவில்லை.

கமல்பெங்களுரில் 65 லட்சத்துக்கு வீடு வாங்கினான். அப்போதாவது குடம்பம் நன்றாக இருக்கும் என்று நம்பினான். இரண்டு குழந்தைகளை பார்த்து கொள்வதற்க்காக நிரு அம்மா தன் மகள் கூடவே இருந்தாள்.

ஆறுமாதம் கழித்து அவள் வேலைக்குசென்றாள். கமல் எவ்வளவோ எடுத்து சொல்லியும் நிரு வேலைக்கு சென்று வந்தால், காரில் நிருவை பிக்கப் பண்ண போகும் போது எல்லாம் எல்லோரும் இந்தியர்கள் மன நிலையில் நிருவை பார்த்தார்கள்.

(இந்தியர் மன நிலை என்பது, “தன் பொண்டாட்டியை எவனும் பார்க்க கூடாது, மத்தவன் பொண்டாட்டியை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்”)

நிருவுக்கு அப்படி பார்பது பிடித்து இருந்தது, கமலுக்கு அப்படி இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.

கமல்எதிர்பாராத அதிர்ச்சியாக திடிரென நிரு பிள்ளைகளுடன் சென்னை செல்வதாக கூறினாள்,அங்கே தன் கம்பெனி மாறுதல் உத்தரவு தந்து இருப்பதாகவும். மாதம் 40,000ஆயிரம் கிடைக்கும் வேலையை விட தான் தாயராக இல்லை என்றாள். அதற்க்கு மாமியார்காரியும் ஒத்து ஊதினாள்.

வேறு வழி இல்லாமல் கமலை விட்டு விட்டு நிருவும் குழந்தைகளும் சென்னையில் குடியேறினாள். பிள்ளைகளை சென்னையல் பிரபல பள்ளியில் எல் கே ஜி சேர்த்தாள்


இதற்க்குள் தன் தங்கைக்கும் தன் தம்பிக்கும் வெகு விமர்சியாக திருமனம் செய்து வைத்தான், பெங்களுர் நண்பர்கள் பலருக்கு கேட்காமலேயே உதவி செய்தான்,

மூளை கசக்கும் வேலை செய்து வீட்டுக்க வந்தால், தன் குழந்தைகளும் மனைவியும் சென்னையில் இருப்பதால்,தன் சொந்த வீட்டில் மிக வெறுமையாக உணர்ந்தான்.

மாதம் இரண்டு முறை பெங்களுரில் இருந்து கார்மூலம் சென்னை வந்து முதலில் கல்பாக்கம் போய் அம்மா அப்பாவை பார்த்து விட்டு பிறகு மாமியார் வீடு சென்று குழந்தைகளை பார்த்து விட்டு ஞாயிறு விடியலில் காரில் பெங்களுர் செல்வான். தனைக்கு சென்னையில் இருந்து பெங்களு்ரில் தங்கி வேலைபார்க்கும் நண்பர்கள் காரில் வருவார்கள்

சனிக்கிழமை மாமியார் வீட்டில் இருந்து ஞாயிற்று கிழமை தன் அம்மாவீட்டுக்கு தன் குழந்தைகள் மற்றும் நிருவை அழைத்தால் ரொம்பவே ஷோ காட்டுவாள். கமல் வீட்டில் இருக்கும் போது எப்போதும் உம் என்று உட்கார்ந்து இருப்பாள்

மாதம்ஒருலட்சம் வரை சம்பாதித்தும் தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்று புலம்பினான். பணம் மட்டும் இருந்தால் நிம்மதி இருக்கும் என்று சொன்னவர்களை கமல் புன்சிரிப்புடன் பார்த்தான். கமல் உனக்கு என்னடா கவலை பொண்டாட்டி 40,000 ஆயிரம் சம்பாதிக்கிறா, நீ ஒரு லட்சம் சம்பாதிக்கிற என்று கல்பாக்கம் நண்பர்கள் கேலி செய்யும் போது கமல் மனதுக்குள் அழுதான்...

கமல் தன் பிள்ளைகள் பேரில் 5 ஏக்கர் நில்ம் செங்கல்பட்டு அருகே நிலம் வாங்கி விட்டு தன் நண்பர்கள் மற்றும் அம்மா அப்பாவை பார்த்து விட்டு நிரு குழந்தைகளுடன் ஊர் சுற்றி விட்டு இரவில் தன் நண்பனுடன் காரில் பெங்களுர் நோக்கி பறப்பட்டான்
வாணயம்பாடிக்கு பக்கத்தில் ஒரு டீக்கடைக்கு சற்றுதள்ளி காரை நிறுத்தி விட்டு இயற்கை உபாதை முடித்து டீ குடித்து விட்டு காரில் முதலில் கமல் நண்பன் உட்கார கார் பின் புறமாக கமல் நடந்து வந்து டிரைவிங் சீட்டில் உட்கார எத்தனிக்கும் போது பெங்களுர் செல்லும் லாரி கண்இமைக்கும் நேரத்தில் கமல் மீது மோதியது சத்தம் பெரிதாகவும் கேட்கவில்லை .

காரில் உட்கார்ந்த கமல் நண்பன் ஏன் இன்னும் கமல் ஏறவில்லை என்று கார் விடடு இறங்கி காரை சுற்றி வந்து கமலை பார்த்த போது மூன்று நிமிடத்துக்கு முன் கலகலப்பாக பேசிய கமல் தன் ஒரு பக்க முகத்தை இழந்து ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியில் கமல் நண்பன் தரையில் சாய,


ரொம்ப நேரமாக டீ குடித்து போயு்ம் அந்த கார் நகராமல் இருப்பதை பார்த்து டீகடைகாரர் மகன் கார் அருகே வந்து பார்த்த போது,
கமல் ஒரு ப்க்க முகம் சிதைந்து துடித்து கொண்டு இருப்பதையும் ஒருவர் சுய நினைவின்றி இருப்பதை பார்த்து ஆம்புலண்ஸ்க்கும் போலிஸிக்கும் தகவல் கொடுக்க,


ஆம்புலண்ஸ் மற்றும் போலீஸ் இரண்டும் சவகாசமாக வந்து சேர்ந்த போது கமல் நண்பன் பேய் பிடித்தது போல் பேந்த பேந்த விழிக்க,

கமல் என்ற, ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய சப்ட்வேர் இளைஞன் முகம் சிதைந்து ஏன் சாகிறோம் என்று தெரியாமலேயே செத்து போனான்

பொது மக்கள் கமலை“ பாடி” என்று அழைத்த போது கமலின் பெற்றோர் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனை சவகிடங்குக்கு அலறலுடன் வந்து சேர்ந்தார்கள்.....

(தொடரும்)

ஜாக்கிசேகர்

பாலச்சந்தருக்கும், ரஜினிக்கும் கோடன கோடி நன்றிகள்...
















சென்னை நகரெங்கும் உச்ச நடிகர் ரஜினி நடிக்கும் குசேலன் பட சுவரொட்டிகள் இப்போதுதான் பார்க்க நேர்ந்தது,

அதில் பசுபதி என்ற நடிகர் கூட நடிக்கிறார் போல் தெரிகிறது. படத்தில் நடிக்கவில்லை என்றால் பட போஸ்டரில் வரமுடியுமா? என்ன..

பாடல் வெளியீட்டு விழாவில் கூட ரஜினி அவர்களின் படம் தவிர வேறு எவருடைய படமும் அதில் இல்லை,

குசேலன் கதை என்ன என்று சிறு வயது முதலே நன்றாக தெரியும் அவல் கொடுத்த கதையும் அல்வா கொடுத்த கதையும் எல்லோருக்கும் தெரிந்தததே...

அதே போல் ரஜினி அங்கிள் இங்க இங்க என்று அஹஹ என்று அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்சிரிக்குமே அந்த பொண்ணு பேரு என்ன? மீனாவா அந்த பொண்ணு கூட நடிச்சிருக்குப்பா...

இருப்பினும் வியாபார தந்திரத்துக்காக பசுபதி படம் பாடல் வெளியீட்டு விழா சவரொட்டியில் விடுபட்டு இருக்கலாம்

இப்போதாவது பசுபதி படத்தை சுவரொட்டியில் சேர்த்தார்களே அதற்க்காக உச்ச நடிகர் ரஜினிக்கும், பெருமை நிகர் நிறுவனமான கவிதாலயா நிறுவனத்துக்கும் என் நன்றிகள்

சினிமா ஒரு கூட்டு முயற்சி என்று எங்கோ படித்ததாக ஞாபகம்...

இந்த சனியம் புடிச்ச ஞாபகம் இந்த மாதிரி வரி எல்லாத்தையும் சுதி மதி இல்லாம ஞாபகபடுத்தி தொலைக்குது




அன்புடன்/ ஜாக்கிசேகர்

இந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வாழ ஒரு எளிய வழி.....


புரூஸ் வில்லீஸ் மற்றும் சாமுவேல் ஜாக்சன் இருவரும் கலக்கிய படம் டைஹார்ட் பார்ட்3 அதே போல் இந்தியாவின் தொழில் நகரான சூரத் நகரில் 18 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடித்து உள்ளது காவல்துறை அது மட்டும் வெடித்து இருந்தால் சொல்ல முடியாத அளவுக்கு உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்பட்டு இருக்கும்.


முக்கிய முடிவுகள் எடுக்க முதலமைச்சர் கூட்டம் ஏற்பாடு செய்து பல முக்கிய முடிவுகள் தீவிர வாதிகளுக்கு எதிராக ,எடுக்க உ ள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்தது ஆனால் இதுவரை கூட்டவில்லை....

ராஜசேகர ரெட்டி ஆப்பிரிக்காவில் இருக்கிறார், கருணாநிதி அமெரிக்காவில் இருக்கிறார், எடியுரப்ப ஆர்டிக் பிரதேசத்தில் இருக்கிறார் பாருங்கள் இன்னும் முதலமைச்சர் கூட்டத்தை கூட்டடவில்லை.

பொதுவாக இதுவரை 50 பேர்தான் செத்து இருக்கிறார்கள், இன்னும் சாவு எண்ணிக்கை கூடும் போது யோசிப்பார்பகள் போலும்......


நாளை பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதுசூரத் மாவட்ட நிர்வாகம்..



போர்கால நடவடிக்கை என்றால் என்ன என்று இதுவரை இந்திய அரசு உணரவில்லை


பெங்களுரில் வெள்ளிக்கிழமை இறந்த இரண்டு பேரை பற்றி நாம் என்ன பெரிதாக கவலைபட்டுவிட முடியும்...
அவர்கள் குழந்தைகளுக்கு என்ன செய்து விடமுடியும் இந்திய அரசு கொடுக்கும் நிவாரன பணம் ஒருலட்சம் ரூபாய். ஒரு
எல் கே ஜி சீட் கூட வாங்க முடியாது....


நாம் கையலாகத நடுத்தர வர்கம் தானே, மிஞ்சி போனால் பிளாக் எழுதலாம் அல்லது ஹின்டுவுக்கு லட்டர் டு தி எடிட்டர் எழுதலாம்

இந்தியராய் பிறந்து உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அடுத்த ஜென்மத்தில் , சோனியா ,மன்மோகன்சிங்,அத்வானி,சிவராஜ்பாட்டில்,பிரனாப்முகர்சி, லாலூ போன்றவர்களுக்கு மகனாக,மகளாக பிறப்பதை தவிர வேறு வழியில்லை.

எனக்கு இதுவரை இதை தவிர வேறு வழி தெரியவில்லை, உங்களுக்கு??????????????????????????????????????????????????????????????????????


அன்புடன்/ ஜாக்கிசேகர்

இந்தியாவில் பொதுமக்களின் உயிரின் விலை ரூபாய் ஒருலட்சம்...

பெங்களுர் குண்டு வெடிப்பில் இரண்டு பேர் இறந்து போனார்கள், தீவிரவாதிகளின் இந்த கொடுஞ்செயலை நமது பாரத பிரதமர் கண்டித்தார்.


அப்புறம் உள்துறை அமைச்சகம் கண்டித்தது , அப்புறம் உள்துறை அமைச்சர் கண்டித்தார். அப்புறம் பெங்களுர் போலீஸ் கமிஷ்னர் கண்டித்தார், அப்புறம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவருக்கு ஒரு லட்சம் அறிவித்தார்கள்.

அப்புறம் பாரளுமன்றத்தில் மணியாட்ட போய்விட்டார்கள், செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்காவில் எங்காவது குண்டு வெடித்ததா???,

எல்லா பெரிய பொறுப்பில் உள்ள எல்லோருக்கும் கருப்பு பூனை படை இருக்கிறது. பொது மக்களுக்கு??? இந்திய நாடளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி வெடித்த போது இந்திய இறையான்மையை கேலிக்குள்ளாக்கும் செயல் என்றார்கள் இப்போது என்ன செய்ய போகிறார்கள்???


அய்யா தீவிரவாதிகளே குண்டு வைப்பது என்றால் பெரிய இடத்தில் வையுங்கள், அண்ணாடம் காய்சி பொதுமக்கள் பகுதிகளில் வைக்காதீர்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும்,எனெனில் அவர்கள் உயிரின் விலை ஜஸ்ட் ஒரு லட்சம்தான்

அன்புடன் /ஜாக்கிசேகர்

விஜய் நடித்த குருவி படம் பற்றி அடுத்த ஜோக்.....

















ஒருவர் / ஹலோ விஜய் சாருங்களா?


விஜய் / ஆமாம் விஜய்தான் பேசறன்

ஒருவர் / உங்க குருவி படத்தால எங்களுக்கு நல்ல கலெக்ஷன்


விஜய் / நீங்க எந்த தியேட்டர் ஓனர்,

ஒருவர் / நாங்க அமிர்தாஞ்சன் கம்பெனி ஓனர் பேசறன்

விஜய்/ ????????????????????????????????????,


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை





(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)



கமல் பெங்களுருவில் வீடு பார்த்தான், எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க தனி வீடு பார்த்தான்...

ஒரு சுப யோக சுப தினத்தில் தமிழர்களை வெறுக்கும் கன்னட வெறியர்கள் மண்ணில் தன் சொந்தங்களை விட்டு குடி யேறினான்.

92ல் சொந்த நாட்டிலேயே ஈழத்தமிழர் போல் பெங்களுரி்ல் உதை வாங்கிய சம்பவங்களை அவனுக்கு கல்பாக்கம் நண்பர்கள் மூலம் ஞாபகப்படுத்தப்பட்டன..

இருப்பினும் ரோஜா படத்தில் எஸ் வி சேகர் அப்பா மதுபாலாவிடம் குழி பணியாரம் கேட்டு விட்டு, ரிஷி இந்த நேரத்தில் உன்னை காஷ்மீர் அனுப்பறத நினைச்சா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்பர். அதற்க்கு நம்ம அரவிந்சாமி, “காஷ்மீர் போக ஏன் சார் பயப்படனும், காஷ்மீர் நம்ம இந்தியாவுலதான் சார் இருக்கு”என்பார் அந்த டயலாக் எல்லாம் நினைத்து மனதை தேற்றிகொண்டான்..

வீடு குடியேறிய போது எல்லா தேவையான பொருட்களையும் கமல் அம்மா,அப்பா வாங்கி வைத்தார்கள், நிரு பெண்வீட்டு பொருளாக ஏதும் எடுத்து வராததால் எல்லா பொருட்களும் வாங்கி வைத்தார்கள்...

கமலும் நிருவும் ரொம்ப சந்தோஷமாக வாழ்வை துவங்கினார்கள். அது காங்கிரஸ் இடதுசாரி கூட்டனி போல் இருந்தது...கமலுக்கு ஒரு பழக்கம் இருந்தது தினமும் வேலை விட்டு வந்து எந்த நேரமாக இருந்தாலும் அவன் அம்மாவுக்கு போன் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தான்

கிழே பேசும் அனைத்து டயலாக்குகளும் கமலும் நிருவும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டவை, எழுதும் எனக்கு சரியாக ஆங்கிலம் தெரியாததால்,அவரவர்கள் தங்கள் மனதில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொள்ளவும் (சாரி பார்த டிஸ்டபண்ஸ்)


“வீட்டுல குத்து கல்லு மாதிரி இருக்கேன் என்னை சாப்பிட்டியா, தூங்கினாயான்னு ட கேட்காம அப்படி என்ன அம்மா புன்ளைக்கு அப்படி என்ன கொஞ்சல் ”

“நிரு நான் ஒன்னும் எவகிட்டயும் பேசல எங்க அம்மா கி்ட்டதான் பேசனேன்...”

நிருவுக்கு தனிமை தந்த வெறுப்பும் தான் அம்மா ,அப்பாவிடம் பேச முடியவில்லையே என்று வெறுப்பும் கோபமாக வெடித்தன...

காங்கிரஸ் இடதுசாரி பிரச்சனை அனுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டது போல் கமல் நிருவுக்கும் கமல் அம்மாவால் பிரச்சனை ஏற்பட்டது..

எல்லா விஷயங்களையும் கமல் அம்மாவிடம் கேட்டு கேட்டு செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை

அழகிரிக்கு தயாநிதி மாறனை பிடிக்காதது போல் நிருவுக்கு கமல் அம்மாவை பிடிக்காமல் போனது.

நிரு தனிமையை விரட்ட பெங்களுருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள் .கமல் ஏதும் மறுப்பு சொல்லவில்லை.. மாதம் 15000சம்பளத்திற்க்கு சேர்ந்தாள்.

கமல் சின்சியாரிட்டியை பார்த்து அவனுக்கு பிடித்தம் எல்லாம் போக 60,000 கையில் வந்தது,நிருவின் சம்பளம் எல்லாம் சேர்த்து மாதம் 75,000 வந்தது..

கமல் கார் வாங்கினான், கார் வாங்கும் முன்பே தன் நண்பகள் கார் ஓட்டி இருப்பாதால் கார் அவனுக்கு பெங்களுர் சாலைகளில் அவன் சொன்ன பேச்சு கேட்டது.

நேராக அவன் தன் மனைவி வேலை செய்யும் அலுவலகத்துக்கு சென்றான். நிருவுக்கு கமல் கார் வாங்கியதை சொல்லவில்லை சின்ன சஸ்பெண்ஸ் மற்றும் அவள் அழகை ,சாரி அவள் கண் விரியும் அழகை ரசிக்க நினைத்தான்.

நிரு சீ த்ரு சாரியில் ஹை ஹில்சுடன் ஒய்யாரமாக கார் அருகே நடந்து வந்தால், யாரோட கார் இது கமல் ?என்றாள். என் எஜமானியம்மாவுக்கு என் பரிசு என்றான் கமல்..
உலக அழகி பட்டம் வாங்கியதும் ஐஸ்வார்யாராய் உட்பட இரண்டு கையையும் தாடையில் வைத்து அழகிகள் சிரிப்பார்களே அதே போல் நிருவும் சிரித்தால்...


கமல் தன் மனைவியுடன் மைசூர் ரோட்டில் 130கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்தான், நிரு வயிற்றை பிடித்துக் கொண்டு காரை ஓரம் நிறுத்த சொன்னாள்,காரை ஓரம் நிறுத்தியதும் கார்விட்டு இறங்கி நிரு வாந்தி எடுத்தாள்

கமல் முதலில் அது சாதரண வாந்தி என்றுதான் நினைத்தான் அப்புறம் அது கமல் நிரு இருவரும் சேர்ந்து செய்த ஓவர்டைம் வேலையால் வந்த வாந்தி என்பது நிருவின் வெட்க புன்னகையால் அறிந்து கொண்டான்.

கமல் அன்று ரொம்பவும் சந்தோஷமாக இருந்தான்.....தற்போதைக்கு நம்ம சோனியா காந்தி போல...

நரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி பெற்ற பிரதமர்


முதலில் டிவிஷன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மன்மோகன் சிங் அரசு மிண்ணணு வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது...













டென்ஷன் துளிகள்.............................................


வாக்கெடுப்பு முடிந்து எல்லோரும் டென்ஷனாக இருந்தார்

அத்வானி தன் உதடுகளை தடவிய படியே டென்ஷனில் இருந்தார்

ஆர்வ மிகுதியால் எல்லா உறுப்பினர்களும் எழுந்து நிற்க அவர்களை அடக்க சோம்நாத் சாட்டர்ஜி தவித்து போனார்

நமது பிரதமர் எப்போதும் போல் ஒருமாதிரி ஸ்டைலாக தவக்ட்டையில் கை வைத்த படி இருந்தார்...

மண்ணனு வாக்கெடுப்புக்கு பிறகு துண்டு சீட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு டென்ஷன் எகிறியது...

120 கோடி மக்களை ஆளப்போகும் ,அடுத்து வழிநடத்த போவது யார் என்பதை அறிவிக்க ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டார்கள்...

தேவகௌடா இப்போதும் எதிர் மேஜையில் படுத்த படியே இருந்தார்...

நாங்களே எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்று நினைக்கும் சன் குழுமம் தன் செய்தி சேனலில் தூர்தர்ஷன் லோக் சபா சேனலின் ஒளிபரப்பை கடன் வாங்கி ஒளிபரப்பியது

எப்போதும் அமளி துமளியாக இருக்கும் நாடளுமன்றம் சென்னை ஜோதி தீயேட்டரில் பிட்டு போடும் போது ஏற்படும் நிசப்தத்தை ஞாபகப்படுத்தியது

முந்தைய பிரதமர் வாஜ்பய் ஒரு ஓட்டு வித்யாசத்தில் தோற்றார். அவரது கட்சியில் எல்லோரும் டென்ஷனாக இருந்தார்கள்


இறுதியில் வெற்றி அறிவிக்க பட்டது ...256லிருந்து 275 ஆக ஆதரவு உயர்ந்தது


வந்தே மாதரம் இசைக்கபட்டு நாடளுமன்றம் இன்றைய கூத்துகளை இனிதே முடித்து கொண்டது

அன்புடன் /ஜாக்கிசேகர்

மன் மோகன் அரசுக்கு வாக்கெடுப்பில் வெற்றி (தப்பித்தது) அமெரிக்கா சந்தோஷப்படும்

மொத்த உறுப்பினர்கள் ........ 541

வராதவர்கள்........... 2 ( அப்படி என்ன கிழிக்கற வேலை யோ)

அதரவு......................253

எதிர்ப்பு........................232

இந்த களேபரத்துக்கு நடுவே நம் சபாநாயகர் சோம்நாத் தன் போண்டா மூக்கை நோன்டிக் கொண்டு இருந்தார்...

மன் மோகன் சிங் உடனே பாத்ரூம் செல்வது நல்லது....அவ்வளவு டென்ஷன் சாருக்கு

அன்புடன் /ஜாக்கிசேகர்

தமிழ் சினிமாவின் பரிதாப உதவி இயக்குநர்கள்
















லட்சிய இளைஞர்கள் (தமிழ் சினிமா உதவி இயக்குநர்கள்)
















அழுக்கேறிய ஜுன்சும்


ஆறுமாதகால தாடியும் தான்


இவர்களின்


அடையாளங்கள் ...







தொடர்ந்து புகைப்பதால்


தடித்த உதடுகளும்


எண்னைப் பார்க்காத தலையும்


அவர்களின்


அக்மார்க் முத்திரைகள்...



தூக்கம் தொலைந்த


கண்களில்


அரை நூற்றாண்டு


சரித்திரத்தை மாற்றும்


கனவுகள் இலவசம்.





புரிந்தாலும்


புரியாவிட்டாலும்


ஒரு நாவல் புத்தகம்


ஒரு கைக்குறிப்பேடு


இவர்களின் கையில்


நிச்சயம் இருக்கும்





தெருவோர


டீக்கடைகள் தான்


இவர்கள் இளைப்பாறும்


வேடந்தாங்கல்.





இவர்களின்


பெற்றோர்களின் கனவு


தன் மகனை


மருத்துவராகவோ


பொறியாளனாகவோ


பார்க்கத்தான் ஆசை


ஆனால்


இவர்களின் கனவோ


வேறானது...





திருமண வயதை தாண்டி


ஜன்னல் வழியாக


சாலை வெறித்துப்


பார்க்கும்


சகோதரிகள்...





ஒரு பக்க நுரையீரலை இழந்து


காச நோயால் அவதிப்படும்


அம்மா...





வெள்ளாமை பொய்த்தால்


ஐம்பது வயதிலும்


வேதனைப்படும்


அப்பா...





இது


எதுபற்றியும் இவர்களுக்கு


கவலை இல்லை


இவர்களின் ஒரே கவலை


"வாழ்நாள் கவலை"


நல்ல தமிழ் சினிமா


எடுப்பது தான்...
















(சமர்ப்பணம் சினிமா பற்றிய புரிதல் இல்லாது சினிமா பார்ப்பதாலேயே தாணும் ஒரு இயக்குநராக மாறவேண்டும் என்று தென்மாவட்டங்களிலிருந்து பஸ் பிடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும்)

தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நொந்தபடியே,

அன்புடன் - ஜாக்கிசேகர்

(புகைபடத்துக்கும் கவிதைக்கும் எந்த தொடர்பும் இல்லை)


(குறிப்பு தமிழ்மணத்தில் நான் இனைவதற்க்குமுன் எழுதிய பதிவு இது மீண்டும் நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க....)

பதிவர்கள் படித்து ரசித்து கருவிபட்டையில் ஓட்டு போடவும்

இலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....


இலங்கை தமிழனாக பிறந்து இருந்தால் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனாவது தட்டி கேட்பார். எம் மக்கள் மீது கை வைக்க நீ யார் என்று கேள்வி கேட்பார், இந்திய தமிழனாக பிறந்ததால் யாரும் கேட்க நாதியில்லை இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் சிங்கள படையால் சுடப்பட்ட இறந்து இருக்கிறார்கள்.


கர்நாடகத்தில் உதை வாங்குகிறோம், கேரளா அனை உயரம் ஏற்ற மறுக்கிறது, ஆந்திராவில் பாலாற்றில் அனைகட்ட போகிறார்கள்.


இதுவரை யாரும் கேட்டதில்லை, தலைவர் கலைஞருக்கு டயட் கன்ட்ரோல் இருக்க வேண்டும் என்று யாரோ சொல்ல அதை தவறுதலாக தன் உடன்பிறப்புகளுக்கு சொல்லி உண்ணாவிரதத்தை அறிவித்து இருக்கிறார்


விடுதலைபுலி திலீபன் இந்திய அரசு கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் இருந்தார்
அவருக்கு என்ன நிலமை ஏற்பட்டது என்று உலகம் அறியும்....
அதனால் யாராவது உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் எனக்கு சிரிப்புதான் வருகிறது...

காவிரி பிரச்சனைக்கு புரட்சி தலைவி உண்ணாவிரதம் இருந்தார்கள் , காவிரி பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ன???

அன்புடன்/ ஜாக்கிசேகர்

இனி சிங்கள ராணுவத்துக்கு கவலை இல்லை....


தமிழக மீனவர்ளை இனி இலங்கை ராணுவம் இனி தைரியமாக சுட்டு தள்ளலாம். இனி மேல் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை சுட்டாலும் ரூபாய் 5 லட்சம் தமிழக அரசு கொடுத்து விடும். இதையும் தமிழக மீனவர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.


இலங்கை ராணுவத்துக்கு எந்த பாவமும் வராமல் தமிழக அரசு காக்க போகிறது.
உலகத்தில் நாம் 5வது பெரிய இராணுவம் வைத்து இருக்கிறோம். குறைந்த பட்ச ஒரு கண்டிப்பை கூட நம் பிரதமர் தெரிவிக்கவில்லை.


நாம் உலகத்தில் 5 வது பெரிய ராணுவம் வைத்து இருக்கிறோம் என்று என் வீட்டு நாய் ஜிம்மியிடம் சொன்னேன் அது விழுந்து விழுந்து சிரித்தது. அதுவும் சாவது ஒரு தமிழன் என்றேன். அது என்னை விட கேவலமான பிறப்பாயிற்றே என்று சொன்னது அதில் உண்மை இல்லாமல் இல்லை....

அன்புடன் /ஜாக்கிசேகர்

(பாகம்...6) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை




(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)




கமலுக்கு காமத்தீ பற்றிக் கொண்டது. அந்த தீ நிருவிடமும் தன் வேலையை காட்டியது.

அம்மாவை பார்க்கும் ஆசையும் நிருவை இருட்டில் பார்க்கும் ஆசையும் அதிகமாகி போனதால், கமல் வெள்ளி இரவே பேருந்து பிடித்து சனிக்கிழமை காலை சென்னை வந்து ஞாயிற்று கிழமை இரவு சென்னையில் பஸ் ஏறி விடியலில் பெங்களுர் இறங்கி காலை ஷிப்ட் என்றால் கண்ணில் ஊளையுடன் வேலைக்கு சென்று
இருக்கிறான்


கமல் போல் இன்றும் நிறைய சாப்ட்வேர் இளைஞர்கள்,இளைஞிகள் தன் பெற்றோர் மற்றும் தன் காதலனை பார்க்க வாரம் வாரம் சென்னையும், சென்னையிலிருந்து பெங்களுரும் செல்கின்றன.

இந்த சாப்ட்வேர் இளைஞர்களின் பாசத்தையும் காதலையும் தனியார் பேருந்துகள் மனசாட்சி இல்லாமல் பேருந்து கட்டணம் என்ற போர்வையில் கொள்ளை அடிக்கின்றனர்.

சென்னையிலிருந்து குளிர்சாதன ஏசி பஸ்ஸில் பெங்களுர் செல்ல தமிழக அரசு நி்ர்னயத்த கட்டண தொகை 325ரூபாய் ஆனால் எல்லா தனியார் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி இல்லாமல் 450ரூபாய வசூலிக்கிறார்கள்அதுவும் விசேஷநாட்களில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் . ஏசி இல்லாத பேருந்துக்கு600ரூபாய் கேட்கிறார்கள், இந்த சாப்ட்வேர்காரர்களும் மாத மாதம்பெருந்தொகையை இழக்கின்றனர் இதில் கமலும் விதி விலக்கல்ல

கமல் தான் செய்யும் வேலையை காதலித்தான் எல்லோரும் 8மணி நேரம் கணக்கு பார்த்து வேலை செய்த போது 10 மணி நேரம் ஆனாலும்தனக்கு கொடுக்கபட்ட வேலையை திறம்பட தவறில்லாதமல் செய்தான்.அதனால் டீம் லீடரிடம் நல்ல பெயர் எடுத்தான்.

எல்லா ஆண்களும் வேலை நேரத்தில் பெண்கள் போதையில் மிதக்க இவன் கருமமே கண்ணாக இருந்ததால் வெகு சீக்கரத்தில் டீம் லீடர் ஆனான் .மாதம் 30,000 சம்பளம் வாங்கினான்.

பெங்களுர் பெண்கள் ஒருசிலரை தவிர எல்லோருக்கும் பாய்பிரன்ட் இருந்தார்கள். ஒருமாதம் காதல் என்ற போர்வையில் நன்றாக சுற்றுவார்கள் இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் கமல் என்று சொல்வார்கள் ஆனால் அடுத்த மாதத்தில் அவனோட டேஸ்ட் ஒத்து வரலை அதனால நான் கல்யாணத்துக்கு முன்னமே நான் தப்பிச்சுட்டேன் தேங்காட் என்பார்கள். கமல் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்பான். எல்லாம் காசு தந்த சுதந்திரம், நான் மாதம் 20,000சம்பாதிக்கிறேன் என்னை யார் கேட்க முடியும் என்ற தெனா வெட்டு....

பெற்றோர்களாலும் கேள்வி கேட்க முடியவில்லை ,எங்கே கேள்வி கேட்டால் மாதம் வரும் பணம் கூட நின்று விடும் எனெனில்,எவன் எவன் கால்ல எல்லாம் விழுந்து வட்டிக்கு வாங்கி படிக்க வச்சவனுக்குதான் அந்த வேதனை தெரியும்.

கமல் தன் செலவு மாதம் பத்தாயிரம் போக மீதி 20,000 தன் அப்பாவிடம் கொடுத்து படிப்புக்கு வாங்கிய கடன்களை அடைக்க சொன்னான்.

நிருவை பெண் கேட்டு கமல் அவள் வீடு சென்றான், பெண் கேட்டான். நிருவின் பெற்றோர்கள் இடது சாரிகள் போல் விடாப்பிடியாக இருந்தார்கள்.

ஐந்து நாள் விடுப்பில் பெங்களுரில் இருந்து வந்த கமல் அழகிரி திடும என ராயல் கேபிள் விஷன் தொடங்கியது போல் கமல் நிருவை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தான்.

விஷயம் தெரிந்த நிரு பெற்றோர், மாறன் சகோதரர்களுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அழகிரி அறிவித்தது போல் நிருவின் பெற்றோரும் அறிவித்தனர்,.

கமல் தனது கல்யாணத்துக்கான வறவேற்பை பெங்களுரிலும் கல்பாக்கத்திலும் வைத்தான் கமலுக்கு வந்து குவிந்த பரிச பொருட்களே அதற்க்கு சாட்சி. கமல் நிறைய நல்ல இதயங்களை சம்பாதித்து வைத்து இருந்தான்,



கமலும் நிருவும் தேனிலவுக்கு சிம்லா போனார்கள். தேனிலவு சாப்டர் எழுத வேண்டாம். நானும் தமிழ்படங்கள் தம்பதிகள் பால் சாப்பிட்டு பிறகு அவர்களை காட்டாமல் கேமரா குழந்தை படத்தை காண்பிக்குமே, அதே போல் விட்டு விடுவோம் மீறி நான் தேனிலவு சாப்டர் எழுதினால் சாருநிவேகிதா போல் எழுதிகிறேன் என்பார்கள் எதற்க்கு வம்பு...? அல்லது தமிழ் மணத்தில் வார்த்தை பிரயோகம் தவறு என்பார்கள்.
நானும் நிறைய காமம் என்ற வார்த்தை பயண்படுத்தி இருக்கிறேன்....

காமத்தை ரசித்தபடியே காமத்தை எதிர்க்கும் நம்மவர்களிடம் இருந்து, நான் தப்பிக்க வேண்டும் அவ்வளவே...


(தொடரும்)
(பாகம் 1)
(பாகம் 2)
(பாகம் 3)
(பாகம் 4)
(பாகம் 5)

மற்ற பாகங்களை படிக்க விரும்புவோருக்காக மேலே.....

அன்புடன்/ ஜாக்கிசேகர்

அஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்து இருக்கிறது


( தமிழ் சினிமாவை மீண்டும் தலை நிமிர வைக்க வந்திருக்கும் படம்)











1980 களில் இலக்கு இல்லாமல் சுற்றும், பாச, நேசத்துக்காக ஏங்கும் பாசக்கார பயல்களின் கதை...

1980களில் மதுரை எப்படி இருந்தது என்று நம் கண் முன் நிறுத்துகிறார்கள். இதில் அழகர்,பரமு என்ற இரண்டு நண்பர்கள் அவர்கள் இருவருக்கும்ஏற்படும் பிரச்சனைகள் அதில் அழகருக்கு ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் மோதல் என்று ரொம்ப அற்புதமாக எடுத்து இருக்கிறார்கள்

அழகராக வரும் ஜெய் மிக அற்புதமாக அவருடைய பாத்திர படைப்பை செய்து இருக்கிறார். முக்கியமாக தன் காதலியை பார்த்தவாரே கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டாதது போல் எழுந்து நின்று சிரிப்பார் பாருங்கள் அது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். சென்னை 28க்கு பிறகு அவருக்கு இது நல்ல படம் .


அழகர் காதலியாக வரும் சுவாதி தெலுங்கு இறக்குமதி.தெலுங்கு யாரடி நீ மோகினியில் பாலக்காட்டு மாமி கேரக்டரில் நடித்து இருப்பவர்,இவரின் கண்கள் படத்துக்கு பலம் சேர்கின்றன முக்கியமாக அழகரை எதிரிகள் சூழும் இடத்தில் அவர் கதறுவது அழகு்...


இயக்குநர் சமுத்திரகனி முக்கியமான பாத்திரத்தில் மிகவும் இயல்பாய் நடித்து இருக்கிறார்.
ஆட்டோவில் அவர் சசிகுமாரிடம் மாட்டும் இடத்தில் தியேட்டரே கை தட்டுகிறது



அவருக்கு நண்பராக நடித்து பட்டையை கிளப்பி இருக்கும் சசிகுமார் (இயக்குநர் , தயாரிப்பாளர்)ரொம்ப அற்புதமாக பரமு பாத்திரத்தை செய்து இரு்க்கிறார்.

காசியாக வரும் கஞ்சா கருப்பு பின்னி பெடலெடுத்து இருக்கிறார். கஞ்சா கருப்பு தன் வாழ் நாளில் பெருமையாக சொல்லிக் கொள்ளும் படியான படம்


ரெம்போன் ஆர்ட் டைரக்டர் மிக அற்புதமாக செய்து இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கு விருது கிடைத்தாலும் வியப்பதற்க்கு இல்லை.

இசை ஜேம்ஸ் வசந்தன் காம்பயரர் வேலை மட்டும் இல்லாமல் ரொம்ப அற்புதமாக செய்து இருக்கிறார்

மொத்ததில்,இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று அவதாரம் எடுத்து இருக்கும் சசிகுமார் பாராட்டுக்கு உரியவர்.
முதல் படத்திலேயே உலக தரத்துக்கு படம் செய்து இருப்பது மிகவும் பாராட்டபடவேண்டிய விஷயம்.


விமர்சனம் என்ற போர்வையில்
முழு கதையையும் சொல்லும் ஆள் நான் இல்லை. இந்த படத்தை பாருங்கள் ஒரு வித்யாசமான அனுபவத்தை நீங்கள் உணர்வீர்கள்

அன்புடன்/ஜாக்கிசேகர்

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம்5)











(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)


தன் இயல்பான முகத்தை விட்டு விட்டு புஷ் முகம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படும் மன்மோகன் சிங் போல, தன் கலாச்சார முகத்தை இழந்து ஐ ரோப்பிய முகம் மாட்டிக் கொண்டுள்ள பெங்களுர்....




பென்ஷன் வாங்குபவர்களின் சொர்க புரி பெங்களுர் என்று முன்பு சொன்னார்கள் அனால் இப்போது பெங்களுர் பிரமச்சாரிகளின் சொர்க புரி என்றால் அது மிகையாகாது.

அவ்வளவு பெண்கள்.அழகழகான பெண்கள். நம்ம தமிழநாட்டை தவிர்த்து வேறு எந்த ஸ்டேட்டிலும் கள்ளி பால் ஸ்டாக் இல்லை போலும்.

கமல் முதன்முறையாக பெண்களுக்கு கொடுக்கப் போகும் 33 பர்சன்ட் இடஒதுக்கீடுக்கு கவலைப்பட்டான்.


கமல் பல்வேறு பெண்களை தான் வளர்ந்த கல்பாக்கத்தில் பார்த்து இருந்தாலும், அதே போல் எம் பி ஏ படிக்கும் போது மிக அழகான பெண்களை பாண்டிச்சேரியில் பார்த்து இருந்தாலும்,பெங்களுர் பெண்கள் ஒரு தினுசாகவே இருந்தார்கள்.

பெங்களுர் பெண்கள் பிறரை கவரவே உடை உடுத்தினார்கள். டிசர்ட் ஜி்ன்ஸ் போட்டால் டி சர்ட் உள்ளே பிரா போடுவதை தவிர்த்தார்கள், இது பற்றி தன் நண்பர்கள் வட்டத்தில் விசாரித்த போது , “உனக்கு ஏன்டா தேவையில்லாத கவலைலாம் அது அவுங்க அவுங்க சவுரியத்தை பொறுத்தது ”என்றார்கள்

கமல் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பெங்களுர் மடிவாலாவில் வீடு எடுத்து தங்கினான். சிங்கிள் பெட்ரூம் அறைக்கு 5000 ரூபாய் வாடைகையும் 50000ரூபாய் அட்வான்ஸ் என்றார்கள். மாதம் ஆளுக்கு 1125 ரூபாய் அறைக்கு கொடுததார்கள் அந்த அறைக்குஐந்து ஆயிரம் வாடகை அதிகம்தான். இது போல் ஹவுஸ் ஓனருக்கு இனனும் 5 வீடுகள் இருப்பதாக சொன்னார்கள் மாத கணக்கு போட்டு கமல் வாய்பிளந்தான்.


இவர்கள் பில் கூட கொடுக்க போவதில்லை,வரியும் கட்ட போவதில்லை. எந்த ஹவுஸ் ஓனரையும் எந்த ஸ்டேட்டும் கட்டு படுத்தாது என்பதை புரிந்து கொண்டான். அப்படி அவர்களை கட்டு படுத்தினால் ஓட்டு அவர்களுக்கு வாராது ஏனென்றால் ரேஷன் கார்டு வைத்து ஓட்டு போடுபவர்கள் ஹவுஸ் ஓனர்கள்தான் , வாடகைக்கு குடியிருப்பவன் அல்ல...

பெங்களு்ருவில் அவன் சந்தோஷப்பட்ட விஷயம் தண்ணீர் பிரச்சனை இல்லாததுதான். சாபப்பட்ட சென்னை வாசிகள் போல் இல்லாமல், தண்ணீர் மிக தராளமாக கிடைத்தது, இனிப்பாக இருந்தது.

அதே போல் திருமணமாகாத பிரம்மச்சாரிகள் அறைக்கு வயது பெண்கள் வந்து போவதை எவரும் அலட்டிக்கொள்ளாதது ஆச்சாயம் அளித்தது.பெங்களுருவில் பணம் மட்டுமே பிரதானமாக இருந்நதது.

கூட்டம் கூட்டமாக பெண்கள் வீடு எடுத்து தங்கி இருந்தார்கள், எல்லோருக்கும் ஒரு பாய் பிரன்டு இருந்தார்கள்.எல்லா பெண்களுக்கும் ஒரு சோக கதை இருந்தது, அந்த சோககதைகள் மனதில் குறித்துக்கொண்டான் அதை நிரு மற்றும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள எண்ணனினான்.

வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் கமல் எனும் இந்திய சாப்ட்வேர் இளைஞனின் மூளை உடல் எல்லாம் அமெரிக்க முதளாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதின...

அவனிடம் இந்திய அரசு உரிமையாக போட்ட சம்பளத்தின் வரியில் பல வளர்ச்சி பணிகளில் இந்தியாவும் தன் முகத்தை மாற்றி கொண்டது.

நீங்களே யோசித்து பாருங்கள் 60ஆண்டுகால சதந்திர இந்தியாவில் கடந்த பத்து வருடங்களில்எற்ப்பட்ட வளர்ச்சி சொல்லில் அடங்காதது. அந்த வளர்ச்சியில் கமலின் உழைப்பும் வியற்வையும் இருக்கிறது.

கமல் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் அம்மாவுக்கும் நிருவுக்கும் போன் பண்ணினான்

அப்போதுதான் திருபாய் அம்பானி,, இந்தியர்கள் அதிகம் பேச ஆசைப்பட , அதுவரை ராமதாஸ் போல் ஆட்டம் போட்ட செல்போன் கம்பெனிகள் பெட்டிபாம்பாய் அடங்கிபோனார்கள்.
செல் போன் கம்பெனிகள் விலை குறைத்தன.

கமல் இரண்டு கைபேசிகள் வாங்கினான் ஒன்றை அம்மாவுக்கும் மற்றதை நிருவுக்கும் கொடுத்தான். நிரு பெற்றோர் கண்ணில் கமல் படததால்
தன் பெண்ணின் காதல் பார்த்தீபன் சீதா காதல் போல் முறிந்ததாக நினைத்துக் கொண்டார்கள்.

எப்போது கமல் வீடு வந்தாலும் அவனை அவன்தாய் இளைத்து விட்டதாக சொல்லி சொல்லி இரண்டு நாட்டு கோழிகளின் உயிருக்கு வேட்டு வைத்தாள்
கமல் குடும்பம் அவனை கொன்டாடியது. அவனும் எல்லோருக்கும் மரியாதை கொடுத்தான் .


வார வாரம் சென்னை வர ஆரம்பித்தான். நிருவை மாயஜாலில் மீட் செய்தான் தான் இன்சென்டிவ் வாங்கிய பணத்தில் நிருவை மகிழ்விக்க 80 ருபாய்க்கு மக் பாப்கானும், 150 ரூபாய் சினிமா டிக்கெட்டும் வாங்கினான்

கூட்டம் இல்லாத ஆங்கில படத்தில் இந்தியர்கள் பொதுவாய் பான்பராக் பீடா எஎஎஎஎஎஎஎஎஎஎச்சில் துப்பும் சுவற்று ஓர சீட்டை தேர்ந்து எடுத்தான்.

படம் ஓடத்துவங்கியவுடன் பயம் இல்லாது அவள் உதட்டில் தன் உதட்டால் ஊர்வலம் நடத்தியவன் மெல்ல கை நடக்கத்துடனும், கழுத்து வியற்வை பிசு பிசுப்புடன், நிரு கழுத்துக்கு கிழே கையை இறக்கினான்.

நிரு எந்த எதிர்ப்பும் காட்டாமல் தமிழ் சினிமா ஹீரோயின் போல் தன் லிப்ஸ்டிக் உதட்டை கடித்தால்....


(தொடரும்)



அன்புடன்/ ஜாக்கிசேகர்

ஜெயலலிதா, கலைஞர்,வைகோ, விஜயகாந்த் இவர்களை பற்றி எனக்கு வந்த குறுந்தகவல்





இது பழைய கள் ஆனால் புதிய மொந்தையில்...



கலைஞர் ,ஜெயலலிதா,வைகோ, மூவரும் ஹெலிகாப்டரில் செல்கிறார்கள்....


ஹெலிகாப்டர் தமிழகத்தின் மேல் சட சட சத்தத்துடன் பறக்கிறது...

( இது எப்போதுமே சாத்தியமில்லாத விஷயம்தான் மேலே படியுங்கள்)

முதலில் கலைஞர் 100 ரூபாய் எடுத்து வெளியே போடுகிறார் ,நான் ஒரு தமிழனின் குடும்பத்தின் பசியாற்றிஇருக்கிறேன் என்றார்.

உடனே வைகோ இரண்டு 50 ரூபாய் நோட்டை வெளியே போட்டு, நான் இரண்டு தமிழர்கள் குடும்பத்தின் பசியாற்றி இருக்கிறேன் என்றார்.

ஜெயலலிதா 100 ரூபாய்க்கு, ஒரு ரூபாய் சில்லரை காசுகளாக எடுத்து வெளியே வீசி நான் நூறு தமிழர்களுடைய சந்தோஷத்துக்கு காரணம் என்று எப்போதும் போல் பெருமை பேசினார்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்த பைலட், இந்த ஹெலிகாப்டரை
இப்போது தரையில் மோத விட்டு 6 கோடி தமிழ் மக்களின் சந்தோஷத்துக்கு நான் காரணமாக இருக்கப்போகிறேன்,என தரையில் ஹெலிகாப்ட்ரை மோதவிட்டான்.

இதோடு கதை முடியவில்லை , கதைப்படி ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாடு காப்பாற்ற பட்டு விட்டது.

இப்போது 75 ஆண்டுகால பாரம்பரிய மிக்க தமிழ் சினிமாவை காப்பற்ற பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு 6 கோடி தமிழர்களான நமக்கும் இருக்கிறது .

அதனால், விஜயகாந்தை ஓட்டு போட்டு தமிழக முதலமைச்சராக ஆக்கிவிட்டாள், விஜயகாந்த் தமிழ் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்.

நம் 75 ஆண்டுகால பாரம்பரியமிக்க தமிழ் சினிமா காப்பற்றபடும் எப்படி நம்ம ஐடியா ???

அன்புடன் / ஜாக்கிசேகர்

ஜுலை2008/ PIT போட்டிக்கான படங்கள்

வாழ்கை ஒரு வட்டம் மாதிரி இங்க கீழ இருக்கறவன் மேல போவான், மேல இருக்கறவன் கீழ வருவான்

( போட்டிக்கான இரவு படம் இதுவே) (1)
..............................................................................................................................................................................

இதுவும் எனக்கு பிடித்த படம்தான் மாவிலை தோரணம் போன்று மிளகாய் தோரணம்.... (2)
..................................................................................................................................................................................







எல்லா குழந்தைகளும் சந்தோஷத்தோடு சுற்றினாலும் நடுவில்உள்ள இந்த பொம்மை பெண் குழந்தை மட்டும் அரை நிர்வாண உடம்புடன் நிரந்தர புன்னகையுடன்..... (3)

..................................................................................................................................................................................

ஐயா , சாமிங்களா எனக்கு தெரிஞ்ச வரை ஏதோ எடுத்து அனுப்பி இருக்கிறேன், நண்பர்களே உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். மேலுள்ள முன்று படங்களும் டிரைப்பாடு இல்லாமல் கையில் வைத்தே எடுக்கப்பட்டது

அன்புடன் /ஜாக்கிசேகர்

கண் கட்டை அவிழ்த்துக் கொண்ட சன் டீவி, மற்றும் சன் குழுமம்

இரவு நேர 75 ஆண்டு சினிமா வரிசையில் இளமைக்கால ஜெயலலிதா படங்கள், வாரத்தில் 3 விஜயகாந்த் படங்கள். தேவைபட்டால் சரத்குமார் படங்கள் (இன்னும் கார்த்திக் படஙக்ள் லிஸ்டில் வரவில்லை) வை கோ கட்சியின் மாநாடு, மற்றும்பேரணி விளம்பரங்கள். தினகரன் மற்றும் தமிழ் முரசுகளில் மக்களை பாதிக்கும் வாடகை பிரச்னைகளைஇரண்டு நாட்கள் முன் எழுதினார்கள். 30 நாட்களில் 24 கொலைகள் எங்கே போகிறது சென்னை ?? என்று கேள்வி கேட்டார்கள். எத்தனை இன்ஸ்பெக்டர்கள் கட்ட பஞ்சாயத்து செய்தார்கள் என்ற பட்டியல் வெளியிடுகிறார்கள். மதுரை தினகரன் பிரச்சனையில் கொஞ்சம் மாறினார்கள். தினகரனுக்கும் கழகத்துக்கும் சம்மதமில்லை என்று முரசொலியில் செய்தி வெளியானவுடன் மக்கள் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுததுக் கொண்டார்கள். இறைவனுக்கு நன்றி.

“தினகரனுக்கும் கழகத்துக்கும் தொடர்பில்லை என்றார்கள். ஆனால் அறிவாலயத்தில் இன்னமும் இருக்கும் சன் டிவி போர்டு நேற்று கூட என்னை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தது ”

அன்புடன்/ ஜாக்கிசேகர்

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம்4)

(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)

மன்மோகன் சிங் எப்படி அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கிறாறோ, அதே போல் கமல் நிருவை காதலித்த நாட்களில் துடித்து போனான்.


உலகத்தில் எல்லோரும் அழாகாக தெரிந்தார்கள் எல்லோரையும் நேசிக்க தொடங்கினான். உலகத்தில் எவறும் தவறு செய்யாதது போல் உணர்ந்தான். மொத்ததில் பருத்திவீரன் கார்த்தி போல் மாறி போய் இருந்தான்.

கடந்த மூன்று மாதகாலமாக தமிழக எதிர்கட்சி தலைவர் கோடநாட்டில் ஓய்வு எடுத்து ஜாலியாக இருப்பதுபோல் எதுபற்றியும் கவலை கொள்ளாது ரொம் ப ஜாலியான வாழ்க்கை வாழ்ந்தால் நிருபமா...எனெனில் கமல்தான் தினமும் செல்போனில் அவள் அழகை புகழ்கிறானே.

நடிகர் சத்யராஜ் மேல் புவனகிரியில் வசிக்கும் ஒருவன், இந்திய இறையான்மைக்கு வேட்டு வைத்தார் என்று பொதுநல வழக்கு போட்டு தமிழனுக்கு தமிழனே எதிரி என்று எப்படி மீண்டும் நிருபித்தானோ, அதே போல் கமலின் நண்பன் ஒருவன் கமல் பைனல் இயர் படிக்கும் போது நிருபமா அப்பாவிடம் போட்டு கொடுத்தான்.

உண்மை தமிழர்கள் எப்படி சுப்ரமணிய சுவாமியை பார்பார்களோ அதே போல் நிருவை அவள் வீட்டில் வெறுப்பாக பார்த்தார்கள் கமலின் தராதரம் தகுதி போன்றவை குறித்து கேள்வி எழுப்பபட்டது. எதிர்பார்த்த தகுதி இல்லாத காரணத்தில் நிரு பெற்றோர் கம்லை புறக்கனிக்க சொன்னார்கள். நிரு காதலித்தாலும் தொடர்ந்து பிரைன் வாஷ் செய்ததால் அவள் குழப்பிபோனாள் எனென்றால் நிருபமா பணக்கார பெண் என்று வாசகர்கள் எற்கனவே அறிந்ததுதான்

கமல் வீட்டில் அவன் காதல் தெரிந்த போது முதலில் தயங்னகினாலும் பின் தன் மகன் ஆசைக்கு குறுக்கே நிற்க்கவில்லை, ஒரே கேள்விதான் கேட்டார்கள்
“ ஏன்டா இந்த பொண்னு உனக்கு சரியா வருவாளா?” அது சொத்துள்ள பெண் என்பதற்க்கான கேள்வி அல்ல. அவள் உடை உடுத்தி கொண்ட விதம் கமல் பெற்றோரிடம் கேள்வியாக வந்தது.

கமல் எப்படியாவது அவளை கரம் பிடிக்க, நிறைய சம்பாதித்து அவள் எப்படி பிறந்த வீட்டில் இருந்தாலோ அதை விட இன்னும் சிறப்பாக அவளை வாழ
வைக்க உறுதி எடுத்தான் அவன் நேரம் அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் பார்வையை திருப்பிய நேரம் அது...


அப்போது அம்மா ஆட்சி தொழில் தொடங்க வந்த பன்னாட்டு நிறுவனங்களிடம்
100சி என்றால் பத்து சி எனக்கு என்று கணக்கு போட, எல்லோரும் பிடரியில் கால் பட துண்டை காணோம் துணியை காணோம் என பென்ஷனர் பாரடைஸ் பெங்களுர் ஓடினார்கள் அதனால் பெங்களுருக்கு கமலும் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐமேக்ஸ் தியேட்டர் எப்படி ஐதராபாத்துக்கு ஓடியதோ அதே போல் கமலின் நண்பர்கள் சிலர் ஐதராபாத்துக்கு ஓடினார்கள்.

கமல் நிரு உதட்டில் ஊர்வலம் நடத்தி இருந்தாலும் கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்ததால் பெங்களுருவில் அவனுக்கு மாதம்15000 சம்பளத்தில் வேலை கிடைத்தது கமல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாண்டிச்சேரி மகளிர் கல்லூரியில் நிரு கம்யுட்டர் சயின்ஸ் முடித்தால்.

பெங்களுரில் வேலை கிடைத்ததை போன் மூலம் விஷயத்தை சொன்னான் ஏனெனில் நேரில் சென்றால் தன் மனது அவளை பார்த்ததும் மாறி விட கூடாது என்பதற்க்காக. கமல் பெற்றோரிடம் ஆசி பெற்ற பெங்களுர் வந்து வேலையில் சேர்ந்த முதல்நாள் கமல் யோசித்தான்

தான் அவசரப்பட்டுவிட்டோமோ? நிருதான் பேரழகி என்று நம்பி இருந்தான், அவன் வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் நிறைய நிருபமாக்கள் இருந்தார்கள்

காரணமே இல்லாமல் கொஞச்ம் வெயிட் பண்ணி இருந்தால் நல்ல செல்போன் வாங்கி இருக்கலாம் .... என்ற ஜோக் ஞாபகத்துக்கு வந்தது ..உங்களுக்கு தெரியுமா? அந்த ஜோக்???

(தொடரும்)


அன்புடன் /ஜாக்கிசேகர்

ஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யமுடியவில்லை நீங்களாக இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்??


நேற்று இரவு மிகச்ரியாக 10,15 க்கு பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வழியாக நான் கிண்டி வரவேண்டும். லேசாக மழை தூரிக்கொண்டு இருந்தது. நானும் எனது நண்பியும் எனது இரண்டு சக்கர வாகனத்தில் பயணப்பட்டோம். தாம்பரம் மேம்பாலம் ஏறும் போது சரியாக சொல்வதென்றால் பழைய அனுராக தியேட்டர் எதிரில் பலவாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

நான் வாகனங்கள் உள்ளே பயணித்து சில வாகனங்களை கடந்த போதுதான், அது மிகப்பெரிய விபத்து என்பது புரிந்தது. ஒரு பெரிய சரக்கு லாரி ரோடு ஓர மீடியனில் மோதி கவிழ்ந்து இருந்தது. லாரிக்கு கீழே 45 வயது மதிக்கதக்க ஒருவர் தலை முழுவதும் ரத்தத்துடன், கால் கை கொஞச்ம் வெட்டி வெட்டி சுய நினைவு இல்லாமல் இழுத்துக்கொண்டு இருந்தார்,இன்ஸ்பெக்டர் விறைப்பான உடுப்புடன் மேலதிகாரிகளுக்கும் , தகவல் சொல்லி கொண்டு இருந்தார் . லாரியின் டிரைவரும் கிளினரும் அதற்க்குள் புற முதுகிட்டு ஓடி இருந்தார்கள்.


யாரோ ஒரு புண்ணியவான் ரத்தத்துடன் துடித்து கொண்டுஇருந்தவருக்கு தவித்த வாய்க்கு தண்ணி ஊற்றினார் முன்று அடி தூரத்தில் டீவிஎஸ் 50தன் உருவத்தை இழுந்து அலங்கோலமாகி இருந்தது. விபத்தை பார்த்ததும் என் நண்பி என் தோள் பட்டைபிடித்து கடவுளே என்று முனகினாள் கொஞ்சம் தூரத்தில் சரவணஸ்டோர்
கட்டை பை அந்த உயிருக்கு போராடும் மனிதர் போல் அனாதையாக கிடந்தது.


எல்லா வாகனங்களும் வழிகிடைத்தால் ஓடி விடும் மனநிலையில் இருந்தன...
எனக்கு போக வழி இருந்தும் எனக்கு போக மனம் இல்லை. என்வாகனத்தையும் நண்பியையும் அங்கே நிறுத்திவிட்டு நான் விபத்து நடந்த இடம் நோக்கி நடந்தேன் அதற்க்குள் பின்னால் இருக்கும் வாகனங்கள் விழி ஏற்படுத்தி ஒரு பெரிய பேருந்து செல்ல அதன்பிறகு வந்தத ஒரு பிரஸ் வண்டி அந்த வண்டி எங்கிருந்து வநத்து என்று தெரியவில்லை...

நான்கு பேர் சின்ன டிஜிட்டல் கேமரா உடன் துடித்து கொண்டு இருப்பவரை சேர்த்து படம் எடுத்து கொண்டு இருந்தனர் . தூரத்தில்ஒரு ஏட்டு ஐயா வாக்கிடாக்கியுடன் இன்ஸ்பெக்ட்ருக்கு மிக பவ்யமாக சலாம் போட்டார். இன்னும் அந்த ஒருவர் துடித் கொண்டு இருந்தார். யாரோ ஒருவர் மிக அருகில் பார்த்து விட்டு காது வழியாக ரத்தம் வந்து விட்டது அதனால் பிழைப்பது கடினம் என்றார்.

நான் எதாவது உதவலாம் என்று சென்றேன் இன்ஸ்பெக்டர் இருந்ததால் கூடும் கூட்டம் நேற்று இல்லை, இன்ஸ்பெக்டர் அது ஒரு கடுமையான வேலை பளு என்பதால் அவர் கடுகடுப்புடன். இருந்தார்



தூரத்தில் எங்காவது சைரன் சத்தம் கேட்கிறதா? என்று பார்த்தேன் அதற்க்கான எந்த சாத்திய கூறும் இல்லை. ஒரு வேளை ரத்த சேதம் அதிகம் என்பதால் அம்புலன்ஸ் இன்னும் வர வில்லையோ? இன்ஸ்பெக்டர் இப்போது பேசினார்

செல்போனில் இன்ஸ் பேசியது தெளிவாக கேட்டது “ சார் இப்பதான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் நடந்தது ஆம்புலண்ஸ்க்கு சொல்லிட்டேன்..
ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் நினைத்து இருந்தால் எதாவது மீன்பாடி வண்டி பிடித்து அந்த ஒருவரை அனுப்பி இருக்கலாம். இன்னும் அந்த ஒருவர் ரத்த சகதியில் துடித்து கொண்டு இருந்தார்.

தூரத்தில் என் நண்பி நிற்க்கும் இடம் நோக்கி நான் பார்த்த போது அவள் லேசாக தள்ளாடுவது தெரிந்தது. அருகில் செல்லவும் அவள் என்மீது சரியவும் சரியாக இருந்தது. மயக்கம் வந்தது ஒரு பெண் என்பதால் திடிர் என்று நாலு பேர் வந்தார்கள் . ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் ஓடி வந்தார்

வந்த நாலு பேரில் ஒருவர் என்னை ரொம்ப உரிமையுடன் திட்டினார்.
“ என்சார் இந்த மாதிரி இடத்துல லேடிஸ் சோட நிக்கறீங்க” முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை மயக்கம் தெளிவித்து வண்டியில் உடக்ர்ந்து மெதுவாக வண்டி
கிளப்பினேன். அவள் என்னை முதகு பின்னே அனைத்து கொண்டாள். அவள் கைகளில் நடுக்கத்தை உணரமுடிந்தது. யாரோ ஒருவர் திட்டியது ஞாபகம் வந்தது. அந்த விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கிரம் முதலுதவி கிடைத்து உயிர் பிழைக்க வேண்டினோம்

எப்போதும் வேகம் எடுக்கும் வண்டி நேற்று நாற்பதுக்கு மேல் தாண்டவில்லை, வீடு திரும்பும் வரை நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வரும் வழி முழுவதும் வேகமாக அம்புலன்ஸ் ஏதாவது வருகிறதா என ஆர்வத்துடன் பார்த்தேன் மிஞ்சியது ஏமாற்றமே...


இதுவே கிரமமாக இருந்தால் அந்த ஒருவர் அம்புலன்ஸ் வரும் வரை துடித்து கொண்டு இருக்கமாட்டார், இந்நேரம் ஒரு டிராக்டர் அல்லது எவருடைய தோள்களே அம்புலன்ஸ் ஆகியிருக்கும் ..

வீடு வந்து வெகு நேரம் நான்துங்கவில்லை. அலங்கோலமான டீவிஎஸ் 50யும் ,சரவணாஸ்டோர் கட்டை பை யும் நினைவில் வந்து போயின....

ஜாக்கெட் போடாமல் ஆடிய நயன்தாரா... திருந்துமா ? தினத்தந்தி....


தினத்தந்தி ரொம்ப நாளைக்கு பிறகு நேற்றுதான் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும விபத்து குறித்து ரொம்ப விளாவரியாக எழுதியது. அதற்க்கு நல்ல ரெஸ்பான்ஸ். நேற்று பஸ் நிறுத்தங்களில், போலிஸ் ஷேர் அட்டோக்களை கண்கானித்தது. அதனால் சென்னை போக்குவரத்து நெரிசல் ரொம்பவும் குறைவாக இருந்தது.


இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து , வெகு ஜன மக்களால் பெரிதும் விரும்பி வாசிக்கபடும் பத்திரிக்கைகளில் வந்தால் அரசு அதிகாரிகளுக்கும் ஒருபயம் வரும். ஆனால் தினத்தந்தி எந்த கட்சி ஆளுங்கட்சியாக வந்தாலும் அதற்கு ஜால்ரா போட்டு, எழுதுவதையே வடிக்கையாக கொண்டுள்ளது. ஏனெனில் அரசு விளம்பர வருவாய் போய் விடும் என்ற பயம் காரணம். சரி நேற்று வெளியிட்ட செய்திக்கு இன்றைக்கு நகரில் என்ன நிலமை அதற்க்கு அதிகாரிகள் என்ன மாதிரி நடவடிக்கை எடுத்தார்கள் என்பது பற்றி ஒரு பாலோ அப் கொடுத்தால் என்ன குடி மூழ்கியா போய்விடும்???


நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பாராட்டினால் இன்னும் மேலும் நல்லது நடக்கும்அதை செய்யாமல் நயன்தாரா சத்யம் படத்துக்காக, ஜாக்கட் அணியாமல் துணிச்சலாக ஆடினார் என்பதை கட்டம் கட்டி போட்டு இருக்கிறார்கள். நயன்தாரா காசு கொடுத்தால் அவுத்து போட்டுகூட ஆடுவார். அதுவும் ஜாக்கட் இல்லாமல் துணிச்சலாக ஆடினாராம். அவர் என்ன துணிச்சலாக விபத்தில் கவிழப்போகும் ரயிலை நிறுத்தினாரா? அல்லது துணிச்சலாக வேறு ஏதாவத செய்தாரா? முதல்மரியாதையில் நடிகை ராதா ஜாக்கெட் போடாமல் நடித்தார்,அது வேறு காலகட்டம் இப்போது பல கதாநாயகிகள் பிரா உடன் ஆடுகிறார்கள். அது இன்னும் அந்த செய்தி சேகரித்த நிருபருக்கு தெரியவில்லை போலும்,

நயன்தாரா, ஜாக்கட் ,துணிச்சல் போன்றவை விடுத்து இன்னும் மக்களுக்கு பயன் தரும் பல விஷயங்களை தந்தியிடம் எதிர்பார்க்கிறோம். எனென்றால் எத்தனை பத்திரிக்கை வந்தாலும் தந்திக்கு தமிழ் மக்களுக்குமான உறவு ரத்த சம்மந்தமான உறவு, அதை புரிந்து மக்கள் பிரச்சனைகள் அதிகம் முன்வைக்கபட வேண்டும் என்பதே எனது விருப்பம்

அன்புடன்/ ஜாக்கிசேகர்...

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம் 3)

(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)


நிரு என்கிற நிருபமா பிறப்பிலேயே பணக்காரி, எல்லாவற்றையும் பணத்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவள். அதற்க்காக தமிழ் சினிமாவில் ஹிரோயின் காரை விட்டு இறங்கியதும், வயது வித்யாசம் பார்க்காமல் பளார் என்று வேலைக்காரர்களை அறையும் ரகம் அல்ல,


புதுச்சேரியில் கமல் படிக்கும் போது வாரம் இரண்டு விஷயங்களை தவறாது செய்வான் , ஒன்று வெள்ளி தோறும் அரவிந்தர் ஆசிரமம் செல்வான். சனி ஞாயிறு இரண் டு நாட்களும் கடற்கரை சென்று பாறைகள் மீது காலார நடந்து வருவான்

புதுச்சேரியில் ரத்னா தியேட்டர் என்ற திரை அரங்கம் இருக்கிறது . இப்போது இருக்கும் டிடீஸ் டால்பி சவுண்ட் எல்லாம் அந்த திரை அரங்க ஒலியுடன்
தாயம் வாங்க வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மிக அற்புதமாக சவுண்ட் சிஸ்ட்ம் அமைத்து இருந்தார்கள். வாரம் ஒரு முறை ஆங்கிலப்படம் அந்த தியேட்டரில் கமல் பார்ப்பான். எல்லா படித்த பணக்கார பெண்களும் , ஆண்களும்அந்த தியேட்டருக்கு வருவார்கள். சில நேரங்களில் வெளிநாட்டினரும் இருப்பார்கள்.

கமல் ஹாரிசன் ஃபோர்டு நடித்த புது ஆங்கில படத்தை தன் நண்பர்களோடு பார்க்க போனான். இடைவேளையில் அவன் நண்பர்கள் எல்லோரும் நுரையிரலில் நிக்கோடின் நிரப்பிக்கொள்ள, இவன்மட்டும் கேண்டினில் விற்க்கும் 50 பைசா சம்மோசா வாங்க கூட்டத்தோடு கலந்தான் ( அந்த தியேட்டடிரில் 50 பைசா சமோசா ரொம்ப சுவையானது) அப்போதுதான் ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் அந்த அழகு பதுமையை பார்த்தான். அதான் கஷ்டப்பட்டு பெயர் வைத்தாகி விட்டதே, நம்ம நிருவை பார்த்தான்.

அப்போதுதான் கமலிடம் அச்சில் ஏற்ற முடியாத வாக்கியம் மனதில் ஓடியது....
அந்த வாக்கியம் இதுதான் , போட்டா இந்த மாதிரி பொண்ணை போ....... எழுதற எனக்கே இப்படின்னா, நேரில் பார்த்த கமலுக்கு எப்படி இருந்து இருக்கும் என்பதை உணர்த்தவே அந்த வாக்கிய பிரயோகம்

நிருபமா அப்போதுதான் ஜஸ்கிரீம் வாங்கி திரும்பவும், ஒரு மட சாம்பிராணி டீ வாங்கி திரும்பவும் கயாஸ் தியிரிப்படி இருவரும் இடித்துக்கொள்ள சூடான டீ அவள் மீது கொட்டியது. பார்த்த எல்லோரும் பதற, சூடான டீ மட்டும் ஒரு குஜாலான உற்சாகத்தோடு அவள் கை மீது பரவியது

நிரு பழக்க தோஷத்தில் வீட்டு ஞாபகத்தில் அவனை முட்டாள் என்று திட்ட அவளை நோக்கி ஒரு கும்பல் அவேசமாய் வந்து “ தே நீயும் தெரியமா இடிச்ச ,அந்த ஆளும்தெரியாம இடிச்சான்” அவனை முட்டாள்னு திட்ற, அப்ப நீஅறிவாளியா? என்று கேள்வி எழுப்ப, கமலும் அவன் நண்பர்களும் அவளை காப்பாற்ற, நிருவும் அவள் நண்பர்களும் கமலுக்கும் அவள் நண்பர்களுக்கும் நன்றி கூறினர். செல்போன் எண்கள் மாற்றிக்கொண்டார்கள். இடைவேளைக்கு பிறகு அவன் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே அவன் செல்லுக்கு எஸ் எம் எஸ் வந்தது “ ரொம்ப நன்றி இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் ” குறுந்தகவல் வந்தவுடன் கமலுக்கு படத்தின் மீது கவனம் இல்லாமல் இருந்தான்.


ஹாரிசன் போர்டு கதாநாயகி உதட்டில் ஒத்தடம் கொடுக்க, தேவையில்லாமல் கமலுக்கு நிருவின் பள பள உதடு ஞாபகத்துக்கு வர, படம் எப்போது முடியும் அவளை எப்போது பார்போம் என்று இருந்தது. அதற்க்குள் நான்கு குறுந்தகவல் கைபேசி மூலம் பறிமாறிக்கொண்டார்கள், அந்த குறுந்தகவல்களில் எந்த சவாரஸ்யமும் இல்லாததால் நான் அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.


படம் முடிந்து திரும்ப ஏதாவது பிரச்சனை வந்தால் சமாளிக்க கமல் கொஞ்சம் அலர்ட்டாகவே இருந்தான். நல்ல வேளை பிரச்சனை ஏதும் வரவில்லை. அவள் நேராக வந்து அவன் கரம் பற்றினால் ரொம்ப நன்றி என்றால். அப்போதுதான் அவன் அவள் கையை கவனித்தான், அது கொஞ்சம் கன்னி போய் இருந்தது.. அவள் அவனிடம் கார் ஓட்ட தெரியுமா? என்றால் அவன் தெரியும் என்றான், அவனை கார் ஓட்ட சொன்னாள். கமல் தனது பைக்கை நண்பர்களிடம் கொடுத்து அவள் காரில் உட்கார்ந்தான், கார் தியேட்ரில் இருந்து குபேர் பஜார் வழியாக, சின்னகடை தாண்டி கடற்கரை ரோட்டில் வேகம் எடுக்க அதற்க்குள் பிறப்பு வளர்ப்பு பிடித்தது பிடிக்காதது எல்லாம் பேசி முடித்து இருந்தார்கள்

கமலை நிருவுக்கு பிடித்து போனது அவன் கண்ணியமாக பேசியதும் காப்பாற்றியதும் அவள், அவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தால்.
கமலுக்கு இன்னும் தான் காண்பது கனவா நனவாஎன்று கிள்ளி பார்த்து கொண்டான். கார் மெல்ல பாரதி பார்க் ஓரம் நிற்க, ரோட்டு ஓர கடையில் சூடான வேற்கடலை வாங்கி கொரித்த படியே வெட்டி கதை பேசியபடி அந்த கார் அங்கிருந்து நகர்ந்தது.

தியேட்டர் சம்பவம் நடந்த மூன்றாம் நாள் கமலின் கல்லூரி வாசலில் நீள நிற சுடிதாரில் நிருபமா நின்றாள். கமல் தன்னை நினைத்து ,தன் அதிஷ்டத்தை நினைத்து பெருமை பட்டான்.

அன்றிலிருந்து சரியாக நான்கே முக்கா நாளில் அதே ரத்னா தியேட்டர் இருட்டில் நிருபமா உதட்டில் கமலின் நாக்கு பேரணி நடத்தியது.... (தொடரும்)


அன்புடன்/ ஜாக்கிசேகர்

இரண்டு சாப்ட்வேர் இளைஞர்களின் புலம்பல்


இரண்டு சாப்ட்வேர் இளைஞர்
பேசிக்கொள்கிறார்கள்.....










ஒருவன்/ மச்சி என் டீம்ல அட்டு பிகர் ஒன்னு வந்துஇருக்கு..



மற்றவன்/ டேய் அப்படி சொல்ல கூடாதுடா ,அவளும் ஒரு பெண்ஒதானே?



ஒருவன்/ இல்ல மச்சி அவ முகமும் கலரும் தூன்னு தப்பனும்

போல இருக்கு..

மற்றவன்/ சரி மச்சி ஒருவாரம் கழிச்சி இந்த விஷயம் பத்தி பேசலாம் மாமா,



(ஒரு வாரம் கழித்து )



ஒருவன்/ மச்சி அது அட்டு பிகர்தான் பட் அவளுக்கு நல்ல குணம் டா மச்சி..

மற்றவன்/ எனக்கு இது தெரியும் மச்சி


( மூன்று வாரங்களுக்கு பிறகு)


ஒருவன்/ மச்சான் அவசெம சூப்பரா இருக்கடா


மற்றவன்/ இன்ன மச்சான் அது அட்டு பிகர் அது இதுன்னு சொன்ன...?



ஒருவன்/ மச்சான் அவளை அப்படி சொல்லாதடா , ஏன்ன அவளும்
பெண்தானேடா...



மற்றவன்/ இது எனக்கு முன்னாலேயே இது போல் நடக்கும் தெரியும் மச்சி
இன்னும் இரண்டு மாசம் கழிச்சி அவதான் உலக அழகின்ன
சொல்லுவ பாரு..


ஒருவன்/ எப்படி ம்ச்சி இப்படி போட்டு தாக்கற





மற்றவன்/ இங்க மட்டும் இல்லை உலகத்துல எல்லா இடத்துலயும் சாப்ட்வோ
இஞ்சினியர்கள் பெரிய கனவோடதான் எந்த கம்பெனிக்கும்
போறான், பட் அங்க போனதும் அந்த கம்பேனி சுட்டுசுவேஷனுக்கு
ஏத்தா போல நாம மாறி செக்கு மாட்டு வாழ்கை வாழறது
இல்லையா, அதுபோலதான் இதுவும் ஏன்னா நாம சாப்ட்வேர்
இன்சினியர்ஸ். விரும்பறது கிடைக்கலன்னா, கிடைக்கறத
விரும்புவோம்

ஒருவன்/ ????????????????.................



அன்புடன் /ஜாக்கிசேகர்

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம் 2)



(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)



கமல் தன் இளவயதில் எந்த விஷயத்தை ஒருமுறைக்கு இரு முறை யோசித்து பார்த்து முடிவு எடுக்க கூடியவன். கிரிகெட்டா? படிப்பா? என்ற கேள்வி எழுந்த போது, படிப்பு மட்டுமே என்று விளையாட்டுக்கு டாட்டா சொன்னவன்.

பண்ணிரெண்டாம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயாவில் படித்தவன்.நல்ல மதிப்பெண் பெற்று , அலுவலக சகாக்கள் மத்தியில் தன் அப்பாவை, தலைநிமர வைத்தவன். வளர்ந்த பையனிடம் அம்மா உச்சி முகர்ந்த போது ரொம்பவே வெட்கப்பட்டவன். தன் தங்கையின் நண்பிகள் கை குலுக்க முன் வந்த போது ,கை கூப்பி வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டவன்.

அவன் வயது ஒத்த நண்பர்கள் எல்லோரும்,கிண்டி ஜோதி தியேட்டருக்கும்,இல்லையென்றால் சரோஜா தேவியும் படித்த போது அதை விடுத்து என்டரண்ஸ் எக்ஸாமுக்கு படித்தவன், உழைப்பின் பலனாக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பொறியியல் கல்லுரரியில் சீட் கிடைத்தது நன்கு படித்தான் . கமல் எந்த ஆசிரியரையும் பட்ட பெயர் வைத்து அழைத்துது இல்லை.

கமலுக்கு நிறைய பெண் நண்பிகள் வட்டம், எனென்றால் சின்ன மார்போ, பெரிய மார்போ, எந்த பெண்ணாக இருந்தாலும் கண் பார்த்து பேசுபவன். ஒரு முறை அவன் தங்கை அவனை மிகவும் பாராட்டினால் காரணம் , அவள் நண்பிகள்
“ ஹேமா அண்ணன் போல் பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்தாபோல பார்க்காம ” இவ அண்ணன் ரொம்ப ஜென்டிலா இயல்பா நட்ந்துக்கிட்டான்டிஎன்று சான்றிதழ் கொடுத்தற்க்காக...

கமலுக்கு ஒரே அசைதான் தான் நன்கு படித்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் அம்மா , அப்பா பார்த்த மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். தான் எப்படி கற்புள்ள பெண்ணை எதிர்பார்க்கிறோமோ, அதே போல் தானும் ஊர் மேயவே கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டவன்.

பொறியியல் நான்கு ஆண்டு முடிந்து மேற்படிப்புக்கு அவன் தேர்வு செய்த கல்லுரரி, பீர் முப்பதுரூபாய்க்கு கொடுத்து விட்டு சைட்டிஷ் அறுபது என கொள்ளை அடிக்கும் பாண்டிச்சேரி அருகே உள்ள கல்லுரரி. எம்பிஎ நன்றாக படித்தான்.

நிறைய விஷயங்களில் கமல் நல்ல பையனாக இருந்தாலும், அவன் பீர் குடிப்பான் அதுவும் வாரத்தி்ற்க்கு ஒருமுறை. எனென்றால் அப்போதுதான் பீர் கூல்டிரிங்ஸ் லி்ஸ்டில் சேர்க்கப்ட்டது( நீங்கள் முந்திரி கொட்டை போல் அவன் குடிகாரனாகி இருப்பானோ? என்று யோசிக்க கூடாது)அப்போது கல்லுரரியில் அறிமுகமானவள் தான் நம்ம ஹிரோயின் லட்சுமி. மன்னிக்கவும் நாம என்ன ஜெயகாந்தன் காலத்துலயா இருக்கறோம்? அவ பேரு மார்டனா நிருபமானு பேர் வைக்கலாம் செல்லமா நிரு... நிருவை பார்த்த உடனே கமல் திருதிருன்னு முழிச்சான்.


சொர்னமால்யாவை பார்த்ததும் பிரகாஷராஜிக்கு எப்படி லைட் எறிஞ்சு மணி அடிச்சதோ? அதே போல இரண்டு பேருக்குமே இங்க மணி அடிச்சு லைட் எறுஞ்சுதுதான் ஆச்சர்யம்.

இப்போது நிருவை பற்றி சொல்வது என் கடமையாகிறது. கமல்ஒரு பெண்ணின் கண் தவிர்த்து பிற இடங்களை, அவன் கவனிக்கிறான் என்றால் அவளின் அழகை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

ஒருவரியில் சொல்வதென்றால் அந்த பெண்ணுக்கு எல்லாமே எடுப்பாக இருந்ததால் கமல் மனது எகிடுதகிடாக தடுமாற ஆரம்பித்தது. லோக்கல் பாஷையில் சொல்வதென்றால் அவள் குமால்டிக்கான அழகாக இருந்தாள்.

அந்த நொடியில் இருந்து சனியனை அவன் பனியனுக்குள் பிடித்து போட்டான், கமல் எனும் நல்லவன்....
( தொடரும்)


அன்புடன்/ ஜாக்கிசேகர்

நடிகர் விஜய் பற்றி வந்த இரண்டு குறுந்தகவல் என்னை சிரிப்பில் ஆழ்த்தியது


நடிகர் விஜய் பற்றி வந்த குறுஞ்செய்தி என்னை சிரிப்பில் ஆழ்த்தியது, உங்களுக்கு சிரிப்பு வந்தால் எனக்கு தெரிவியுங்கள்....

முதல் ஜோக்...

1. ஆசிரியர்/ உலகின் மிகச்சிரிய ஜோக் சொல்லு?
மாணவன்/ டாக்டர் விஜய்


2.டாக்டர்/ இவருக்கு எப்படி இவவளவு அடி பட்டிச்சு??

பஸ்டிரைவர்/ பஸ்லருந்து விழுந்துட்டார்

டாக்டர்/ பஸ் படிகட்டுல பயணம் செய்தாரா?

பஸ் டிரைவர்/ பஸ்ல விஜய் படம் போட்டேன். பழக்க தோஷத்துல,தியேட்டர்

விட்டு வெளியே போறா மாதிரி ஓடற பஸ்லருந்து வெளியே போயிட்டாரு.....


அன்புடன்/ ஜாக்கிசேகர்

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை பாகம் 1


(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)

அவன் இனியவன், எல்லோரிடமும் அன்பு பாராட்டுபவன், அவன் சோகமாக இருந்த எவரும் பார்த்ததுஇல்லை பிறந்த உடன் அழுது ஆர்பாட்டம் பண்ணாத குழந்தைகளில் இவனும் ஒருவன்.




மக்கள் திலகம் எம்ஜியாருக்கு பிறகு தாய் குலத்தையும், அன்னையை மதிப்பவன். தந்தை பேச்சுக்கு கட்டுபட்டு நடப்பவன்.

எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும், எவரும் பசியோடு இருக்க கூடாது என்று நினைப்பவன் மொத்தத்தில் அவன் iso9001பிள்ளை . 24 கேரட் கோல்ட்.

அவன் பணிவை பார்த்த பலரும் இது போல் ஒரு பிள்ளை நமக்கு பிறக்க வில்லையே என ஏக்கம் கொள்வர்.பொதுவாக அவன் பக்கத்தவிட்டு பெற்றோர் தன் குழந்தைகளை திட்டும் போது,

“ என்டா? அவன் மூத்திரத்தை வாங்கி மூனு நாளைக்க குடி அப்பவாவது புத்தி வருதா பார்ப்போம் ? ”



என்று திட்டுவார்கள்.

அவன் பிறந்தது வேறு ஊர் என்றாலும் அவன் வளர்ந்தது படித்தது எல்லாம் கல்பாக்கம்தான் அவனின் பெற்றோர் கல்பாக்கத்தில் டவுன் ஷிப்பில் வசித்து வந்தனர் .

அனுசக்தி துறையில் அவனின் அப்பாவுக்கு வேலை. அவனுக்கு ஒருதம்பி ,ஒருதங்கை. டவுன்ஷிப் வாழ்க்கையில் எல்லோர் பெற்றோருக்கும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு, தன் வீட்டில் ,கார் ,டீவி இருப்பது பெருமை போல் தன் பிள்ளை நன்றாக படிப்பதும்கூட ஒரு பெருமையாக கருதினர். அந்த பெருமைக்கு பங்கம் வராமல் அவன் படித்தான்.

அவன் வீட்டில் எல்லோருமே படித்தவர்கள் என்பதால் அவர்கள் வீட்டில் வாங்கும் ஹின்டு பேப்பர் முழு பயன் அளித்தது.ஏழு மணிக்கு வரும் ஹிந்து பேப்பர் காலை பத்து மணிக்கெல்லாம் தன் முழு கற்பையும் இழந்து விடும்.


அவனை அவன் என்று மரியாதை இல்லாமல் அழைக்கிறோம் அவனுக்க ஒரு பெயர் வைக்கலாமே? எளிதில் வாயில் நுழையும் பெயராக, கமல் என்று வைப்போம்.

(தொடரும்)

அன்புடன் /ஜாக்கிசேகர்

கலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)



கூட்டனி ஆட்சி என்பதால் அதிக முறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டியது முதல்வர் கலைஞர் அவர்கள்தான். போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும் ,தைலாபுரத்துகாரரும் அறிவார். எந்த செயல் செய்தாலும் மக்கள் தொலைகாட்சியை, லாபத்துக்காக நடத்தாமல் தமிழை வளர்க்க நடத்தப்படுவது பாராட்டுக்குறியதே... ஆனால் நீண்ட கால திட்டங்களான விமான நிலைய விரிவாக்கம், புதிய நகரம் போன்றவற்றை எதிர்த்ததை, யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதற்க்குகாரணம் தன் ஜாதி மக்கள் குடியிருப்புகளை கலைத்தால் தன் சாதி ஓட்டுக்கள் கலைந்து விடும் என்பதே... இதனால் வளரும் சென்னைக்கு ஏற்ற விமானநிலையத்தை இன்னமும் விரிவாக்க முடியாமல் அரசு இருக்கிறது. போன ஆட்சியில் எவராலும் எந்த கருத்தையும் அம்மாவிடம் துணிந்து சொல்ல முடியாது.மரியாதை கிடையாது. கூட்டனி கட்சி தலைவர்கள் கிள்ளுகிரையாகவே நடத்தப்பட்னர். அம்மா தரிசனத்துக்காக தைலாபுரத்துக்காரர் காத்து இருந்ததை போயஸ் தோட்டத்து பல்லி,பறவைகள் போன்றவைகள் பார்த்து எள்ளி நகையாட, எங்களுக்கு உரியமரியாதை இல்லை என்று வெளியே வந்ததை நாடு அறியும் . ராமதாஸ் மேல் ஒரே ஒரு விஷயத்தில் அவர்மேல் என்க்கு மரியாதை உண்டு ,அது கல்வி கட்டண உயர்வுக்கு குரல் கொடுத்தால் போன கல்வியாண்டில் நிறைய நண்கொடை வசூலிக்கப்பட்ட கல்வி நிறுவணங்கள் கண்காணிக்கப்பட்டதால், பெற்றோர் சுமை ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. தன் கலைஞர் ஆட்சியில் எல்லாவற்றிர்க்கும் ஒருநொட்ட சொல் ஒரு நொள சொல் சொன்னால் எவரால் ஏற்றுக்கொள்ள முடியும். பொதுவாக டென்டர்கள் கூட்டனி கட்சி அலோசனை படியே பிரித்து ஆர்டர் கொடுக்கப்படுகின்றது உம் கலர் டிவி, மணல் டெண்டர் போன்றவை.. பா ம க வுக்கு என்று ஓட்டு வங்கி தென்னாற்காடு மாவட்டத்தை தவிர்த்து எங்கும் இல்லை, அதே போல் போன தேர்தலில தென்னாற்காடு மாவட்டம் விருதாசலத்தில், தே,மு,தி,க விடம் தோற்றதே அதற்க்கு ஒப்பற்ற சாட்சி. அதே போல் 2011 ல் நல்லாட்சி பா.ம.க அமைக்க நல்வாழ்த்துக்கள், நமக்கு ராமன் ஆண்டாலும் ஒன்றுதான் ராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். எம்மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)
“ எத்தனை நாளைக்கு மேயற மாட்டை, நக்கற மாடு உதைப்பதை பொறுத்துக்கொள்ளும்.” கலைஞர் எடுத்த முடிவு சரியே....

அன்புடன் / ஜாக்கிசேகர்

தசவதாரம் எனது பார்வையில்.....


ஒருவழியாக பதிவுகளில் அளாளுக்கு உசுப்பு ஏற்றி 150ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கட் வாங்கி சென்னை உட்ல்ண்ட்ஸ் தியேட்டரில் படம் நேற்று பார்த்தேன், சென்னையில் ஒருநாளைக்கு 137 காட்சிகள் திரையிடப்பட்டதால் ,கற்புரம் பால் அபிஷேகம் ,பீர் அபிஷேகம் போன்றவைகள் காண கிடைக்கவில்லை, ரிலீ்ஸ்இரண்டாம் நாள் என்பதால் மயிலாப்பூர் மாமிகள் படையெடுத்து இருந்தார்கள்.படத்தின் முதல் பத்து நிமிடங்கள் நம்மைபிரமிக்க வைக்கிறார்கள்.நிறைய வேடங்கள் பேசுவது புரியவில்லை , அது தியெட்டரின் குறைபாடாக கூட இருக்கலாம், பிறகு ஒருநாளில் பொறுமையாய் படம் பார்க்க வேண்ணணணணடும். அசின் வரும் காட்சிகள் எல்லா வசனங்களும் கத்தலாய் பேசிஇருக்கிறார் .மற்றபடி படம் கமலின் உழைப்புக்காக இந்த படத்தை எல்லோரும் ஒருமுறை பார்க்க வேண்டும். ஏனெனில் கோடம்பாக்கம் ஏரியா ஓத்துக்கிட்டுவாரியா என்ற பாடலுக்காக அட்டு படங்களை எல்லாம் ஓடவைத்தவர்கள் நாம்.. படம் முடி்ந்த போது எல்லோரும் எழுந்து நின்று கைதடடினார்கள் ,அதுதான் கமல் என்ற கலைஞனுக்கு கிடைத்த வெகுமதி படத்தின் எதோ ஒரு ஒட்டாத தன்மை இசை மட்டுமே, இருப்பினும் படம் பற்றிய இடுக்கை மற்றும் பதிவுகளில இயக்குநர் ரவிக்குமார் படத்திற்க்கு படம் கோட்டு போட்டூ ஆடுவதையெல்லாம் விமர்சிப்பது கொஞச்ம்.......


அன்புடன் / ஜாக்கிசேகர்

நடிகர் கமல் தவறு செய்து விட்டார்?



வரும் 13 ம் தேதி ரீலிஸ் தேதி தசவதாரம் படத்திற்க்கு வைத்திருக்கும் நிலையில், திரும்பவும் தசவதார படத்தை தடை செய்ய சப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது ஒரு டுபாக்கர் குழு. சரி இது மாதிரியான எதிர்ப்புகள் ஏன் மற்ற நடிகர்கள் படத்திற்க்கு எழுவதில்லை. யோசித்து பார்த்தால் இதற்க்கு அப்பட்டமான பயம் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது, எப்படி? ரொம்ப சிம்பிள், அவர்கள் அனைவரும் ரசிகர்மன்றம் வைத்து இருக்கிறார்கள், ஆனால் கமல் எப்போதே ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக்கிய பெருமை தமிழ் நடிகர்களில் கமல் மட்டுமே. எனெனில் ரசிகர் மன்ற போர்வையில் ஒரு ரசிகன் வாழ்கை வீணாக கூடாது என்ற நல்ல எண்ணம் தான். ரசிகர் மன்ற போதையை கமல் ஊட்டியிருந்தால் யார் வழக்கு போட்டாலும் அங்கே குரல் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கும் அது கல் வீசும் அல்லது எதிராளியின் அம்மாவை சந்தேகிக்கும் , அதானல் வழக்கு போடும் மடைசாம்பிராணிகளுக்கு ஒரு பயம் இருக்கும். ஒருபடம் வந்து எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை, அதே போல் சென்சார் போர்ட் இல்லாத நாட்டில் படம் எடுத்தால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை, சென்சார் போர்ட் படததிற்க்கு் U சான்று அளித்துள்ளது. இங்கே இந்தியாவில் கொஞ்சம் நல்லவனாக இருப்பது என்பதே தகுதி இழப்புதான்.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

அன்புடன் /ஜாக்கி சேகர்

கற்றது தமிழ் ராமின் அடுத்த பதிவு


கடந்து போனவைகள் தொடரும

என்ற தலைப்பில் தான் பால்யகால நினைவுகளை நம் பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.. பதிவை படித்து விட்டு அவருக்கு பின்னுட்டம் இடுங்கள் . அவர் நிறைய எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிடுங்கள்


அன்புடன்/ ஜாக்கிசேகர்

கலைஞர் அழகிரி பேச்சை கேட்டு சன் டீவியுடன் மோதக்கூடாது...



கலைஞர் குடும்பத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தனது மகன் அழகிரி பேச்சை கேட்டு சன்டீவியை பகைத்து கொள்ள கூடாது. ஏனெனில் அழகிரியின் ஆளுமை என்பது மதுரை நகர் மட்டுமே ஆனால் சன் டீவியின் ஆளுமை என்பதுஉலகளாவிய ஆளுமை.. அதனை கலைஞர் புரிந்து கொள்ள வேண்டும். பாசம் கண்ணை மறைக்க கூடாது.ஏனெனில் இப்போதே அவர்கள் வாரம் இரண்டு சரத்குமார் படம் ,இரண்டு விஜயகாந் படம் போடுகிறார்கள் .அதே போல் விலைவாசி உயர்வை பாரபட்சம் இல்லாமல் காட்டுகிறார்கள் இவைகளை வர வேற்க்க வேண்டும்தான்.ஒரு நல்ல மீடியா எப்படி இருக்க வேண்டுமோ, அதுபோல் இப்போது பாரபட்சம் இல்லாமல் சன்டீவி நடந்துகொண்டு இருக்கிறது. (உம்) வைகோ நடந்துவருவதை மட்டும் காண்பிக்காமல் அவர் பேசுவதை காட்டி அவர் பிறவி பயன் அடைய காரணமாக இருக்கிறார்கள், அதே போல் சிலை போல் இருக்கும் ஜெயலலிதா போட்டோவை காட்டி செய்திகள் போடும் அவர்கள் இப்போதெல்லாம் அன்னை மலர்ந்த முகத்துடன் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடும் காட்சிகளை காட்டுகிறார்கள்.நல்ல விஷயம்தான் இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும். அதே போல் ஜெயாடீவி சரியாக நான்கு வருடங்கள் சின்ன எதிர்ப்புகள் தெரிவித்துவிட்டு தேர்தலின் போது சாக்கடையோரம் வாழும் மக்களை படம் எடுத்து போட்டு விட்டு தமிழ்நாடே அதுபோல் இருப்பதாக தொடர்ந்து தேர்தல் வரை அவதூறு பரப்புவார்கள். இதுதான் கடந்தகாலங்களில் நடந்தது. அதேபோல் தேர்தல் நேரத்தில் சன்டீவியும் சாக்கடைப்க்கம் போய் படம் எடுக்க விட கூடாது. என்னதான் மாய்ந்து மாய்ந்து செய்தாலூம் தேர்தலின் போது சாக்கடை காட்டி நம் தமிழ்நாடு இப்படிதான் இருக்கிறது என்றால்அதை கண்ணை முடி எற்றுக்கொள்வார்கள். எனெனில் காமராஜரை தோற்கடித்து ,அரிதாரம் பூசியவர்களை 5 தடவை முதல்வராகஆக்கியவர்கள் நாம்.. கலைஞர் உள்ளாட்சி தேர்தல் வைத்து எல்லா கிராமங்களிளும் வளர்ச்சி பணிகளை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன். ஆத்திரத்தில் தற்கொலை செய்து கொண்ட என்கிராமத்து பக்கத்துவீட்டுகாரர் மனைவி (சித்ரா) நான்கு பெண்களுடன் தேங்காய் நாரில் கயிறு திரித்து காலம் தள்ளி கொண்டு இருந்தார் கெரசின் வாங்க நாய் போல் அலைவார் ,டீவி பார்க்க அந்த பிள்ளைகள் என் விட்டுக்குவருவார்கள்,அரிசி வாங்க ரெஷனுக்கு அலைவார், என் அம்மா எங்களை சின்ன வயதில் வளர்க்க கஷ்ட்டப்ட்டதுபோல் அவரும் கஷ்டப்பட்டு கொன்டுஇருந்தார். கலைஞர் அரியனை ஏறினார், அந்த குடும்பம் 3 வேளை வயிறார இரண்டு ருபாய் அரிசியில் சாப்பிட்டார்கள். இலவச டீவி கொடுத்தார்கள் கொஞ்சம் குடும்பம் கலகலப்பானது. கேஸ் அடுப்பு கொடுத்தார்கள் நாயாய் கெரசினுக்கு அலைவது நிறுத்தப்பட்து , கிராமங்களுக்கு சிமெண்ட் ரோடு போடபட்டது. விஷம் போல் ஏறும் இந்த பெட்ரோல் விலை உயர்வு அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வினால் கலைஞர் அடுத்த முறை வருவது சந்தேகமே இருப்பினும் அப்படி வந்தால் இன்னும் பல சித்ரா , மல்லிகா, செல்லயி போன்ற பெண்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும். அதற்க்க கலைஞர் சன்டீவியை பகைத்து கொள்ள கூடாது அதே போல் சன்டீவி நடுநிலமையோடு, இப்போது போல் எப்போதும் இருக்க வேண்டுகிறேன்.

அன்புடன் /ஜாக்கிசேகர்

ஜூன் மாத pit புகைபட போட்டிக்கான படங்கள்














இந்த புகைபடம் கடலூர் சில்வர் பீ்ச்கோடை விழாவில் எடுத்தது, ரோந்து சென்ற தொப்பையில்லாத இளம் காவலர்கள் கட்டுமரத்தில் உட்கார்ந்து கடலை சாப்பிட்டுக் கொண்டே, கடலை போட்டுக்கொண்டு இருந்த போது எடுத்தது. தூரத்தில் இளம் பெண்கள் இங்கே தொப்பையில்லா இளம் காவலர்கள் (good combination) போட்டிக்கான படம் இதுவே....















இந்த படம் அதே விழாவில் எடுத்ததுதான். வீட்டில் ஓய்வில் இருக்கும் வயதில், அந்த ஜோசிய ரோபோ பொம்மையை மாலை3.30 மணிக்கெல்லாம் சுடும் வெயிலில் வியற்வையுடன் உதவிக்கு யாரும் இல்லாமல் அந்த ரோபோ பொம்மையை ரெடி செய்து கொண்டு இருந்தது மனதை கணக்க செய்தது.அவர் வீட்டில் அன்று இரவு உலை கொதிக்க வேண்டு்ம் அல்லவா? பிட் போட்டியில் நான் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை
படத்தை பாருங்க கருத்தை தெரிவியுங்க....








இவள் பணக்கார குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மை விற்றால்தான் இவள் குழந்தை ஒரு வேளை கஞ்சி குடிக்க முடியும்

அன்புடன் / ஜாக்கிசேகர்


இந்த கோடையில் நான் இயக்கிய குறும்படம் பற்றி.....

நான் 3 கதைகளோடு குறும்படம் எடுக்க என் சொந்த ஊர் கடலூர் சென்றேன் , நான் தேர்தெடுத்த நபர் மிகுந்த வேளை பளு இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை . அப்புறம் கதையை மாற்றி வேறு ஒரு படம் எடுத்து விட்டு வந்தேன். கதை இது தான்.திடிர் விலையேற்றம், பணவீக்கம்,ஐடி நிறுவனங்களால் ஏற்பட்ட வாடைகையேற்றம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்க பட்ட 55 வயது பெரியவரின் கதை இது. படத்தின் பெயர் பரசுராம் வயது55 நிறைய டைட்டில்கள் தேடினேன் யோசித்தேன் இந்த தலைப்பு நன்றாக இருந்ததால் வைத்து விட்டேன். பொருளாதார சுமை காரணமாக நிறைய செலவுகள் குறைத்து விட்டேன் , நானும் அந்த பெரியவர் மட்டுமே பல பகுதிகளுக்கு சென்று எடுத்தோம். என்ன, ஒன்னரை பக்க டயலாக் பேச அதுவும் ஒவ்வோறு வரியாகபேச அவர் எடுத்து கொண்ட நேரம் 3 மணி நேரங்கள் அவரை திட்ட கூட முடியவில்லை. ஆனால் இந்த கத்தரி வெயிலில் அவரை நிறைய இடங்களில் நடக்க விட்டு எடுத்தேன், இருப்பினும் என்னை பொருத்தவரை படம் ரொம்பவும் திருப்தியாகவந்து உள்ளது . எனெனில் இதற்கு முன்பு நாடக அனுபவம் சினிமா அனுபவம் ஏதும் இல்லாதவர்கள்
இருப்பினும் நல்ல செலவு செய்து எடுத்து இருந்தால் இன்னும் நிறைய குறைகளை தவிர்த்து இருக்கலாம்

அன்புடன் /ஜாக்கிசேகர்

சன் நியுஸில் பேட்டி கொடுக்கும் தமிழர்கள் பேச்சை கேட்டுஇருக்கிறீர்களா?


சன்நியுஸ் சேனல் அரை மணிக்கு ஒருமுறை செய்திகள் தருவதால் ஏதாவது செய்திகள் உடனுக்கு உடன்தந்தே ஆக வேண்டும்.சில செய்திகள் மிக சிறப்பாக இருக்கும், சிலது அட்டு கேசாக இருக்கும். நாம் செய்தி தரத்தை பற்றி பேச வர வில்லை. செய்திகளில் தலைகாட்டும் தமிழர்கள் மனைவியர் பற்றி பேச இருக்கிறோம். உ/ம் ஊட்டியில் மலர் கண்காட்சி என்று வைத்துக்கொள்வோம். அதை சன்நியுஸ் பேட்டியாளர், ஒரு இடை சிறுத்த இளம்பெண், இடுப்பு சுற்றளவு பெரிதாக கொண்ட நடுத்தர வயது பெண்மணி, ஒரே ஒரு ஆண் அதுவும் கடமைக்காக. பேட்டி எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், ரொம்ப என்ஜாய்புல்ல இருக்கு, இந்த கிளைமேட் ரொம்பவும் சூப்பர், பிளவர்ஸ்லாம் ரொம்ப பியுட்டிபுல்ல இருக்கு, எங்கப்புல்ஸ் நிறைய பேர் வராங்க பட், ரொம்ப கிரவுடு அதிகம். பொதுவாக இப்போதெல்லாம் ஆங்கிலகளப்பில்லாமல் தமிழ் பேச முடியாது. அப்படி பேசினாலும் இயக்குனர் சீமானை நக்கலாக பார்பதுபோல் பார்க்கும் நம் சமுகம், பொதுவாக நடுத்தர வயது குடும்ப பெண்கள் பேட்டி கொடுக்கும் போது, கஷ்டப்பட்டு ஆங்கில வார்த்தைகள் யோசித்து இணைத்துபேசுவதுதான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இயக்குனர் சீமான் மிக அழகாக சொல்வார், வெள்ளகாரன்கிட்ட வணக்கம் சொல்லாதிங்க, பெத்த அம்மாகிட்ட குட்மார்னிங் சொல்லாதிங்க. எவ்வளவு சத்தியமான வார்த்தை இது. ஆகவே தமிழர்களே ஒரு வாக்கியத்ததை ஒன்று முழுதாக ஆங்கிலத்தில் பேசுங்கள், அல்லது தமிழில் பேசுங்கள நடுநடுவே ஆங்கிலவார்த்தைகள் யோசித்து பேச வேண்டாம் என்கிறேன் செய்வீர்களா?
முக்கியமாக சீரியல் பார்த்து ரொம்பவே கெட்டுபோயிருக்கும் நடுத்தர குடும்ப தமிழ் பெண்மணிகள்...


அன்புடன் /ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner