நடிகர் கமல் தவறு செய்து விட்டார்?வரும் 13 ம் தேதி ரீலிஸ் தேதி தசவதாரம் படத்திற்க்கு வைத்திருக்கும் நிலையில், திரும்பவும் தசவதார படத்தை தடை செய்ய சப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது ஒரு டுபாக்கர் குழு. சரி இது மாதிரியான எதிர்ப்புகள் ஏன் மற்ற நடிகர்கள் படத்திற்க்கு எழுவதில்லை. யோசித்து பார்த்தால் இதற்க்கு அப்பட்டமான பயம் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது, எப்படி? ரொம்ப சிம்பிள், அவர்கள் அனைவரும் ரசிகர்மன்றம் வைத்து இருக்கிறார்கள், ஆனால் கமல் எப்போதே ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக்கிய பெருமை தமிழ் நடிகர்களில் கமல் மட்டுமே. எனெனில் ரசிகர் மன்ற போர்வையில் ஒரு ரசிகன் வாழ்கை வீணாக கூடாது என்ற நல்ல எண்ணம் தான். ரசிகர் மன்ற போதையை கமல் ஊட்டியிருந்தால் யார் வழக்கு போட்டாலும் அங்கே குரல் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கும் அது கல் வீசும் அல்லது எதிராளியின் அம்மாவை சந்தேகிக்கும் , அதானல் வழக்கு போடும் மடைசாம்பிராணிகளுக்கு ஒரு பயம் இருக்கும். ஒருபடம் வந்து எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை, அதே போல் சென்சார் போர்ட் இல்லாத நாட்டில் படம் எடுத்தால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை, சென்சார் போர்ட் படததிற்க்கு் U சான்று அளித்துள்ளது. இங்கே இந்தியாவில் கொஞ்சம் நல்லவனாக இருப்பது என்பதே தகுதி இழப்புதான்.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

அன்புடன் /ஜாக்கி சேகர்

10 comments:

 1. \\எனெனில் ரசிகர் மன்ற போர்வையில் ஒரு ரசிகன் வாழ்கை வீணாக கூடாது என்ற நல்ல எண்ணம் தான். ரசிகர் மன்ற போதையை கமல் ஊட்டியிருந்தால் யார் வழக்கு போட்டாலும் அங்கே குரல் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கும் அது கல் வீசும்\\

  அதில் தான் அவர் தனித்து நிற்கிறார்.

  \\இந்தியாவில் கொஞ்சம் நல்லவனாக இருப்பது என்பதே தகுதி இழப்புதான்.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???
  \\

  அருமையான பன்ச்

  ReplyDelete
 2. \\எனெனில் ரசிகர் மன்ற போர்வையில் ஒரு ரசிகன் வாழ்கை வீணாக கூடாது என்ற நல்ல எண்ணம் தான். ரசிகர் மன்ற போதையை கமல் ஊட்டியிருந்தால் யார் வழக்கு போட்டாலும் அங்கே குரல் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கும் அது கல் வீசும்\\

  அதில் தான் அவர் தனித்து நிற்கிறார்.

  \\இந்தியாவில் கொஞ்சம் நல்லவனாக இருப்பது என்பதே தகுதி இழப்புதான்.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???
  \\

  அருமையான பன்ச்

  ReplyDelete
 3. //இந்தியாவில் கொஞ்சம் நல்லவனாக இருப்பது என்பதே தகுதி இழப்புதான்.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???//
  நூற்றுக்கு நூறு உண்மை
  அன்புடன்
  அருப்புக்கோட்டை பாஸ்கர்

  ReplyDelete
 4. மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். கமல் என்ற நல்ல கலைஞனுக்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் மரியாதை இவ்வளவுதான். இவர் இன்னொரு மானிலத்திலோ அல்லது வேறு ஒரு நாட்டிலோ பிறந்திருந்தால் இன்னும் அதிகமான மரியாதைகள் கிடைத்திருக்கும்.

  ஐயா இந்து அமைப்புகளே எத்தனையோ படங்களிலும் பாடல்களிலும் இந்து தெய்வங்களை அவமதிக்கிறார்கள் அவை உங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையா? ஏன் நல்ல மனிதன் ஒருவனை வம்புக்கு இழுக்கின்றீர்கள்.

  ReplyDelete
 5. நன்றி தேவன். வாசித்து நல்ல கருத்து சொல்லியமைக்கு

  ReplyDelete
 6. நன்றி பாஸ்கர்,வாசித்மைக்கு

  ReplyDelete
 7. முரளி கண்ணன் தொடர்ந்து என் பதிவை படித்து என்னை உற்சாக படுத்துவதற்க்கு நன்றி

  ReplyDelete
 8. சேகர்! நீங்க சொல்றது ஒரு விதத்தில சரி தான்.எல்லாருக்கும் நல்லவனா இருக்க யாராலும் முடியாது.

  ReplyDelete
 9. நன்றி பிரேம் ஜி தங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 10. அதோட சேர்த்து வழக்குப் போட கதையோ பிற விஷயங்களோ படத்துக்கு தேவை. வர வர அது பிறர் படங்களில் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்ட நிலையில், இருக்கிற ஒருத்தர் படத்தை சுற்றியே எல்லாரும் பப்ளிசிட்டி தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஹி ஹி ஹி

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner