(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை
(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)
நிரு ஆறுமாத கர்பத்துடன் வேலைக்கு சென்றால், தினமும் காரில் நிருவை அவள் ஆபிஸில் விட்டுவிட்டு செல்வான்
பல சோதனைகள் மற்றும் வேதனைகளை தான்டி இரட்டை குழந்தைகளை நிரு பெற்றாள் நிரு அம்மாவுக்கு தகவல் சொல்லி அனுப்பபட்டது. அடுத்த பிளைட் பிடித்து தாயையும் சேயையும் பார்த்து விட்டு சென்றால் போகும் போது இரண்டு லட்சம் பணக்கட்டுயை நிரு அம்மா கமலிடம் கொடுத்தால் ,தேவையான பணம் இருக்கிறது , உங்கள் அன்பு மட்டும் போதும் என்றான்.
மாப்பிள்ளை ரொம்ப ஜென்டில் மேன் போல் நடந்து கொண்டதில் நிரு அம்மாவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் நாள் கழித்து நிருவின் அப்பாவும் குழந்தையை பார்க்கும் சாக்கில் வந்து ஒட்டிக்கொண்டார்
அம்மா அப்பா ஒன்று சேர்ந்ததும் நிரு மப்பு தலைக்கு ஏறிசுத்தமாக மாமனார் மாமியாரை மதிக்காமல் எடுத்து எறிந்து பேசினால் சட்டென்று ஸ்டேட்டஸ் பற்றி பேச ஆரம்பித்தால்.
கலைஞருக்கு ராமதாஸ் கொடுத்த குடைச்சல் போல் நிருவின் அனைத்து செயல்களும் இருந்தன.
நிருவன் செயல்களால் வெறுத்து போன கமல் அம்மாவும் அப்பாவும் பெஙக்ளுர் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். இவன் மட்டும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்க்கு ஒரு முறை சென்னை வந்து பார்த்து செல்வான்.
கமலு்க்கு சம்மபளம் ஏற்றப்பட்டது எவ்வளவு தெரியுமா ?மாதம் ஒரு லட்சத்துக்கு196 ஆறு ரூபாய் கம்மியாக சம்னளம் வாங்கினான்.
சசிகலா அடம் பிடித்து டான்ஸி நிலம் வாங்க சொல்லியது போல் நிரு கமலை அடம்பிடித்து பெங்களுரில் வீடு வாங்க சொன்னாள். கமல் சென்னையில் வீடு வாங்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் கெஞ்சியும் காதில் நிருபோ்ட்டு கொள்ளவில்லை.
கமல்பெங்களுரில் 65 லட்சத்துக்கு வீடு வாங்கினான். அப்போதாவது குடம்பம் நன்றாக இருக்கும் என்று நம்பினான். இரண்டு குழந்தைகளை பார்த்து கொள்வதற்க்காக நிரு அம்மா தன் மகள் கூடவே இருந்தாள்.
ஆறுமாதம் கழித்து அவள் வேலைக்குசென்றாள். கமல் எவ்வளவோ எடுத்து சொல்லியும் நிரு வேலைக்கு சென்று வந்தால், காரில் நிருவை பிக்கப் பண்ண போகும் போது எல்லாம் எல்லோரும் இந்தியர்கள் மன நிலையில் நிருவை பார்த்தார்கள்.
(இந்தியர் மன நிலை என்பது, “தன் பொண்டாட்டியை எவனும் பார்க்க கூடாது, மத்தவன் பொண்டாட்டியை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்”)
நிருவுக்கு அப்படி பார்பது பிடித்து இருந்தது, கமலுக்கு அப்படி இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.
கமல்எதிர்பாராத அதிர்ச்சியாக திடிரென நிரு பிள்ளைகளுடன் சென்னை செல்வதாக கூறினாள்,அங்கே தன் கம்பெனி மாறுதல் உத்தரவு தந்து இருப்பதாகவும். மாதம் 40,000ஆயிரம் கிடைக்கும் வேலையை விட தான் தாயராக இல்லை என்றாள். அதற்க்கு மாமியார்காரியும் ஒத்து ஊதினாள்.
வேறு வழி இல்லாமல் கமலை விட்டு விட்டு நிருவும் குழந்தைகளும் சென்னையில் குடியேறினாள். பிள்ளைகளை சென்னையல் பிரபல பள்ளியில் எல் கே ஜி சேர்த்தாள்
இதற்க்குள் தன் தங்கைக்கும் தன் தம்பிக்கும் வெகு விமர்சியாக திருமனம் செய்து வைத்தான், பெங்களுர் நண்பர்கள் பலருக்கு கேட்காமலேயே உதவி செய்தான்,
மூளை கசக்கும் வேலை செய்து வீட்டுக்க வந்தால், தன் குழந்தைகளும் மனைவியும் சென்னையில் இருப்பதால்,தன் சொந்த வீட்டில் மிக வெறுமையாக உணர்ந்தான்.
மாதம் இரண்டு முறை பெங்களுரில் இருந்து கார்மூலம் சென்னை வந்து முதலில் கல்பாக்கம் போய் அம்மா அப்பாவை பார்த்து விட்டு பிறகு மாமியார் வீடு சென்று குழந்தைகளை பார்த்து விட்டு ஞாயிறு விடியலில் காரில் பெங்களுர் செல்வான். தனைக்கு சென்னையில் இருந்து பெங்களு்ரில் தங்கி வேலைபார்க்கும் நண்பர்கள் காரில் வருவார்கள்
சனிக்கிழமை மாமியார் வீட்டில் இருந்து ஞாயிற்று கிழமை தன் அம்மாவீட்டுக்கு தன் குழந்தைகள் மற்றும் நிருவை அழைத்தால் ரொம்பவே ஷோ காட்டுவாள். கமல் வீட்டில் இருக்கும் போது எப்போதும் உம் என்று உட்கார்ந்து இருப்பாள்
மாதம்ஒருலட்சம் வரை சம்பாதித்தும் தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்று புலம்பினான். பணம் மட்டும் இருந்தால் நிம்மதி இருக்கும் என்று சொன்னவர்களை கமல் புன்சிரிப்புடன் பார்த்தான். கமல் உனக்கு என்னடா கவலை பொண்டாட்டி 40,000 ஆயிரம் சம்பாதிக்கிறா, நீ ஒரு லட்சம் சம்பாதிக்கிற என்று கல்பாக்கம் நண்பர்கள் கேலி செய்யும் போது கமல் மனதுக்குள் அழுதான்...
கமல் தன் பிள்ளைகள் பேரில் 5 ஏக்கர் நில்ம் செங்கல்பட்டு அருகே நிலம் வாங்கி விட்டு தன் நண்பர்கள் மற்றும் அம்மா அப்பாவை பார்த்து விட்டு நிரு குழந்தைகளுடன் ஊர் சுற்றி விட்டு இரவில் தன் நண்பனுடன் காரில் பெங்களுர் நோக்கி பறப்பட்டான்
வாணயம்பாடிக்கு பக்கத்தில் ஒரு டீக்கடைக்கு சற்றுதள்ளி காரை நிறுத்தி விட்டு இயற்கை உபாதை முடித்து டீ குடித்து விட்டு காரில் முதலில் கமல் நண்பன் உட்கார கார் பின் புறமாக கமல் நடந்து வந்து டிரைவிங் சீட்டில் உட்கார எத்தனிக்கும் போது பெங்களுர் செல்லும் லாரி கண்இமைக்கும் நேரத்தில் கமல் மீது மோதியது சத்தம் பெரிதாகவும் கேட்கவில்லை .
காரில் உட்கார்ந்த கமல் நண்பன் ஏன் இன்னும் கமல் ஏறவில்லை என்று கார் விடடு இறங்கி காரை சுற்றி வந்து கமலை பார்த்த போது மூன்று நிமிடத்துக்கு முன் கலகலப்பாக பேசிய கமல் தன் ஒரு பக்க முகத்தை இழந்து ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியில் கமல் நண்பன் தரையில் சாய,
ரொம்ப நேரமாக டீ குடித்து போயு்ம் அந்த கார் நகராமல் இருப்பதை பார்த்து டீகடைகாரர் மகன் கார் அருகே வந்து பார்த்த போது,
கமல் ஒரு ப்க்க முகம் சிதைந்து துடித்து கொண்டு இருப்பதையும் ஒருவர் சுய நினைவின்றி இருப்பதை பார்த்து ஆம்புலண்ஸ்க்கும் போலிஸிக்கும் தகவல் கொடுக்க,
ஆம்புலண்ஸ் மற்றும் போலீஸ் இரண்டும் சவகாசமாக வந்து சேர்ந்த போது கமல் நண்பன் பேய் பிடித்தது போல் பேந்த பேந்த விழிக்க,
கமல் என்ற, ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய சப்ட்வேர் இளைஞன் முகம் சிதைந்து ஏன் சாகிறோம் என்று தெரியாமலேயே செத்து போனான்
பொது மக்கள் கமலை“ பாடி” என்று அழைத்த போது கமலின் பெற்றோர் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனை சவகிடங்குக்கு அலறலுடன் வந்து சேர்ந்தார்கள்.....
(தொடரும்)
ஜாக்கிசேகர்
Labels:
கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா இருக்கு.
ReplyDelete:((((
ReplyDeleteஎன்னதிது?
//இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை//
கடைசி வரி கற்பனை என நம்புகிறேன்.
எல்லாப்பாகமும் இப்பத்தான் படிச்சேன்.
நல்ல முயற்சி. வாழ்த்துகள். :)
பி.கு.:இப்பக் கதை சோகமா இருக்கறதால, (தோணின) கேள்வி எதுவும் கேக்கல :-|
:((
ReplyDeleteபாவம் கமல்
நன்றி அவனும் அவளும்
ReplyDeleteநன்றி நியு பி தங்கள் பாராட்டுக்கு, தங்கள்வருகைக்கு
ReplyDeleteஜெகதீசன் தங்களுக்கு என் நன்றிகள், கமல் குடும்பத்தாரை நினைத்து பாருங்கள்
ReplyDeleteசேகர் மிக அழகாக கதையை எடுத்து செல்கிறீர்கள்.
ReplyDeleteவிபத்தை தவிர்த்து இதே போல பல சம்பவங்கள் கேள்விப்பட்டதுண்டு.
/
ReplyDeleteநிரு ஆறுமாத கர்பத்துடன் வேலைக்கு சென்றால், தினமும் காரில் நிருவை அவள் ஆபிஸில் விட்டுவிட்டு செல்வான்
பல சோதனைகள் மற்றும் வேதனைகளை தான்டி இரட்டை குழந்தைகளை நிரு பெற்றாள் நிரு அம்மாவுக்கு தகவல் சொல்லி அனுப்பபட்டது. அடுத்த பிளைட் பிடித்து தாயையும் சேயையும் பார்த்து விட்டு சென்றால் போகும் போது இரண்டு லட்சம் பணக்கட்டுயை நிரு அம்மா கமலிடம் கொடுத்தால் ,தேவையான பணம் இருக்கிறது , உங்கள் அன்பு மட்டும் போதும் என்றான்.
/
''ள்'' னு மாத்தீடுங்க.
நன்றி
/
ReplyDeletejackiesekar said...
ஜெகதீசன் தங்களுக்கு என் நன்றிகள், கமல் குடும்பத்தாரை நினைத்து பாருங்கள்
/
இந்த விபத்து உங்கள் கற்பனையாக இருக்கட்டும்.
நன்றி சிவா தங்கள் வருகைக்கும் தங்கள் வாழ்த்துக்கும்
ReplyDeleteஅவசரமாக தேடி தேடி அடிக்கும் போது இந்த மாதிரி வார்ததை பிழைகள் ஏற்பட்டு விடுகின்றன நிச்சயம் நிவர்த்தி செய்கிறேன் சிவா
ReplyDeleteஇல்லை சிவா அந்த விபத்து கற்பனை அல்ல, அதே போல் கமல் நிரு இருவரையும் நான் நேரில் பார்த்ததும் இல்லை, என் சக தோழியர் கமல் இறப்பை ஜிரனிக்க முடியாமல் புலம்பிய போது அவன் கதை கேட்டு கொஞ்சம் கற்பனை சேர்த்து எழுதியது ..........
ReplyDelete/
ReplyDeletejackiesekar said...
இல்லை சிவா அந்த விபத்து கற்பனை அல்ல,
/
மிக மிக வருத்தமான விசயம்
:((((((((((
Cannot comment in your new post. It doesn't open the window at all. Also, it doesn't show the commentors name. you may need to fix the layout jackie..
ReplyDelete