இந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வாழ ஒரு எளிய வழி.....


புரூஸ் வில்லீஸ் மற்றும் சாமுவேல் ஜாக்சன் இருவரும் கலக்கிய படம் டைஹார்ட் பார்ட்3 அதே போல் இந்தியாவின் தொழில் நகரான சூரத் நகரில் 18 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடித்து உள்ளது காவல்துறை அது மட்டும் வெடித்து இருந்தால் சொல்ல முடியாத அளவுக்கு உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்பட்டு இருக்கும்.


முக்கிய முடிவுகள் எடுக்க முதலமைச்சர் கூட்டம் ஏற்பாடு செய்து பல முக்கிய முடிவுகள் தீவிர வாதிகளுக்கு எதிராக ,எடுக்க உ ள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்தது ஆனால் இதுவரை கூட்டவில்லை....

ராஜசேகர ரெட்டி ஆப்பிரிக்காவில் இருக்கிறார், கருணாநிதி அமெரிக்காவில் இருக்கிறார், எடியுரப்ப ஆர்டிக் பிரதேசத்தில் இருக்கிறார் பாருங்கள் இன்னும் முதலமைச்சர் கூட்டத்தை கூட்டடவில்லை.

பொதுவாக இதுவரை 50 பேர்தான் செத்து இருக்கிறார்கள், இன்னும் சாவு எண்ணிக்கை கூடும் போது யோசிப்பார்பகள் போலும்......


நாளை பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதுசூரத் மாவட்ட நிர்வாகம்..போர்கால நடவடிக்கை என்றால் என்ன என்று இதுவரை இந்திய அரசு உணரவில்லை


பெங்களுரில் வெள்ளிக்கிழமை இறந்த இரண்டு பேரை பற்றி நாம் என்ன பெரிதாக கவலைபட்டுவிட முடியும்...
அவர்கள் குழந்தைகளுக்கு என்ன செய்து விடமுடியும் இந்திய அரசு கொடுக்கும் நிவாரன பணம் ஒருலட்சம் ரூபாய். ஒரு
எல் கே ஜி சீட் கூட வாங்க முடியாது....


நாம் கையலாகத நடுத்தர வர்கம் தானே, மிஞ்சி போனால் பிளாக் எழுதலாம் அல்லது ஹின்டுவுக்கு லட்டர் டு தி எடிட்டர் எழுதலாம்

இந்தியராய் பிறந்து உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அடுத்த ஜென்மத்தில் , சோனியா ,மன்மோகன்சிங்,அத்வானி,சிவராஜ்பாட்டில்,பிரனாப்முகர்சி, லாலூ போன்றவர்களுக்கு மகனாக,மகளாக பிறப்பதை தவிர வேறு வழியில்லை.

எனக்கு இதுவரை இதை தவிர வேறு வழி தெரியவில்லை, உங்களுக்கு??????????????????????????????????????????????????????????????????????


அன்புடன்/ ஜாக்கிசேகர்

10 comments:

 1. /
  நாம் கையலாகத நடுத்தர வர்கம் தானே, மிஞ்சி போனால் பிளாக் எழுதலாம் அல்லது ஹின்டுவுக்கு லட்டர் டு தி எடிட்டர் எழுதலாம்
  /

  :(((

  ReplyDelete
 2. நன்றி சிவா,என்ன செய்வது இது சோகமான ஒன்றுதான்

  ReplyDelete
 3. //எனக்கு இதுவரை இதை தவிர வேறு வழி தெரியவில்லை, உங்களுக்கு??????????????????????????????????????????????????????????????????????//

  எனக்கும் தெரியல....:-(((((

  ReplyDelete
 4. என்னய்யா நீயாவது ஏதாவது சொல்வன்னு பார்த்தால் நீயும் என்ன மாதிரியே சொல்றியேபா

  ReplyDelete
 5. //டைஹார்ட் பார்ட்3 அதே போல் இந்தியாவின் தொழில் நகரான சூரத் நகரில் 18 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடித்து உள்ளது//

  :-))))

  //அது மட்டும் வெடித்து இருந்தால் சொல்ல முடியாத அளவுக்கு உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்பட்டு இருக்கும்.//

  :-((((

  //பொதுவாக இதுவரை 50 பேர்தான் செத்து இருக்கிறார்கள், இன்னும் சாவு எண்ணிக்கை கூடும் போது யோசிப்பார்பகள் போலும்......//

  ஆட்சி போய்டும் என்று தெரிந்து விட்டதால் ஒரு வேளை இருக்கிற நேரத்துல எப்படி சீக்கிரமா சுருட்டுறதுன்னு கலந்து ஆலோசித்துட்டு இருப்பாகன் :-)

  //போர்கால நடவடிக்கை என்றால் என்ன என்று இதுவரை இந்திய அரசு உணரவில்லை//

  எப்ப தான் உணருவாங்கன்னும் புரியல

  //இந்திய அரசு கொடுக்கும் நிவாரன பணம் ஒருலட்சம் ரூபாய். ஒரு
  எல் கே ஜி சீட் கூட வாங்க முடியாது....//

  டியூஷன் பீஸ் க்கு சரியா போய்டும்

  //நாம் கையலாகத நடுத்தர வர்கம் தானே, மிஞ்சி போனால் பிளாக் எழுதலாம் அல்லது ஹின்டுவுக்கு லட்டர் டு தி எடிட்டர் எழுதலாம்//

  இல்லைனா ஒரு வாரத்துக்கு பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் புலம்பலாம்

  //எனக்கு இதுவரை இதை தவிர வேறு வழி தெரியவில்லை, உங்களுக்கு??????????????????????????????????????????????????????????????????????//

  இவங்க வீட்டுல எல்லாம் ஒரு குண்டை போட சொல்லி தீவிரவாதிகளை வேண்டிக்கலாம்

  ReplyDelete
 6. நன்றி கிரி, இந்த பதிவைஉங்களை போன்ற நட்சத்திர பதிவர்கள் விரிவாய் அலசியதற்க்கு

  ReplyDelete
 7. நன்றி நடராஜன் தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 8. //இந்த பதிவைஉங்களை போன்ற நட்சத்திர பதிவர்கள் விரிவாய் அலசியதற்க்கு//

  ஏங்க உங்களுக்கு என் மேல இன்னும் கோபம் தீரவில்லையா? எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் :-))

  ReplyDelete
 9. ஹலோ தலைவரே உங்கமேல எனக்கு எந்த கோபமும் இல்லை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் நட்சத்திர பதிவர்தான்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner