(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)
நிரு என்கிற நிருபமா பிறப்பிலேயே பணக்காரி, எல்லாவற்றையும் பணத்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவள். அதற்க்காக தமிழ் சினிமாவில் ஹிரோயின் காரை விட்டு இறங்கியதும், வயது வித்யாசம் பார்க்காமல் பளார் என்று வேலைக்காரர்களை அறையும் ரகம் அல்ல,
புதுச்சேரியில் கமல் படிக்கும் போது வாரம் இரண்டு விஷயங்களை தவறாது செய்வான் , ஒன்று வெள்ளி தோறும் அரவிந்தர் ஆசிரமம் செல்வான். சனி ஞாயிறு இரண் டு நாட்களும் கடற்கரை சென்று பாறைகள் மீது காலார நடந்து வருவான்
புதுச்சேரியில் ரத்னா தியேட்டர் என்ற திரை அரங்கம் இருக்கிறது . இப்போது இருக்கும் டிடீஸ் டால்பி சவுண்ட் எல்லாம் அந்த திரை அரங்க ஒலியுடன்
தாயம் வாங்க வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மிக அற்புதமாக சவுண்ட் சிஸ்ட்ம் அமைத்து இருந்தார்கள். வாரம் ஒரு முறை ஆங்கிலப்படம் அந்த தியேட்டரில் கமல் பார்ப்பான். எல்லா படித்த பணக்கார பெண்களும் , ஆண்களும்அந்த தியேட்டருக்கு வருவார்கள். சில நேரங்களில் வெளிநாட்டினரும் இருப்பார்கள்.
கமல் ஹாரிசன் ஃபோர்டு நடித்த புது ஆங்கில படத்தை தன் நண்பர்களோடு பார்க்க போனான். இடைவேளையில் அவன் நண்பர்கள் எல்லோரும் நுரையிரலில் நிக்கோடின் நிரப்பிக்கொள்ள, இவன்மட்டும் கேண்டினில் விற்க்கும் 50 பைசா சம்மோசா வாங்க கூட்டத்தோடு கலந்தான் ( அந்த தியேட்டடிரில் 50 பைசா சமோசா ரொம்ப சுவையானது) அப்போதுதான் ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் அந்த அழகு பதுமையை பார்த்தான். அதான் கஷ்டப்பட்டு பெயர் வைத்தாகி விட்டதே, நம்ம நிருவை பார்த்தான்.
அப்போதுதான் கமலிடம் அச்சில் ஏற்ற முடியாத வாக்கியம் மனதில் ஓடியது....
அந்த வாக்கியம் இதுதான் , போட்டா இந்த மாதிரி பொண்ணை போ....... எழுதற எனக்கே இப்படின்னா, நேரில் பார்த்த கமலுக்கு எப்படி இருந்து இருக்கும் என்பதை உணர்த்தவே அந்த வாக்கிய பிரயோகம்
நிருபமா அப்போதுதான் ஜஸ்கிரீம் வாங்கி திரும்பவும், ஒரு மட சாம்பிராணி டீ வாங்கி திரும்பவும் கயாஸ் தியிரிப்படி இருவரும் இடித்துக்கொள்ள சூடான டீ அவள் மீது கொட்டியது. பார்த்த எல்லோரும் பதற, சூடான டீ மட்டும் ஒரு குஜாலான உற்சாகத்தோடு அவள் கை மீது பரவியது
நிரு பழக்க தோஷத்தில் வீட்டு ஞாபகத்தில் அவனை முட்டாள் என்று திட்ட அவளை நோக்கி ஒரு கும்பல் அவேசமாய் வந்து “ தே நீயும் தெரியமா இடிச்ச ,அந்த ஆளும்தெரியாம இடிச்சான்” அவனை முட்டாள்னு திட்ற, அப்ப நீஅறிவாளியா? என்று கேள்வி எழுப்ப, கமலும் அவன் நண்பர்களும் அவளை காப்பாற்ற, நிருவும் அவள் நண்பர்களும் கமலுக்கும் அவள் நண்பர்களுக்கும் நன்றி கூறினர். செல்போன் எண்கள் மாற்றிக்கொண்டார்கள். இடைவேளைக்கு பிறகு அவன் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே அவன் செல்லுக்கு எஸ் எம் எஸ் வந்தது “ ரொம்ப நன்றி இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் ” குறுந்தகவல் வந்தவுடன் கமலுக்கு படத்தின் மீது கவனம் இல்லாமல் இருந்தான்.
ஹாரிசன் போர்டு கதாநாயகி உதட்டில் ஒத்தடம் கொடுக்க, தேவையில்லாமல் கமலுக்கு நிருவின் பள பள உதடு ஞாபகத்துக்கு வர, படம் எப்போது முடியும் அவளை எப்போது பார்போம் என்று இருந்தது. அதற்க்குள் நான்கு குறுந்தகவல் கைபேசி மூலம் பறிமாறிக்கொண்டார்கள், அந்த குறுந்தகவல்களில் எந்த சவாரஸ்யமும் இல்லாததால் நான் அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
படம் முடிந்து திரும்ப ஏதாவது பிரச்சனை வந்தால் சமாளிக்க கமல் கொஞ்சம் அலர்ட்டாகவே இருந்தான். நல்ல வேளை பிரச்சனை ஏதும் வரவில்லை. அவள் நேராக வந்து அவன் கரம் பற்றினால் ரொம்ப நன்றி என்றால். அப்போதுதான் அவன் அவள் கையை கவனித்தான், அது கொஞ்சம் கன்னி போய் இருந்தது.. அவள் அவனிடம் கார் ஓட்ட தெரியுமா? என்றால் அவன் தெரியும் என்றான், அவனை கார் ஓட்ட சொன்னாள். கமல் தனது பைக்கை நண்பர்களிடம் கொடுத்து அவள் காரில் உட்கார்ந்தான், கார் தியேட்ரில் இருந்து குபேர் பஜார் வழியாக, சின்னகடை தாண்டி கடற்கரை ரோட்டில் வேகம் எடுக்க அதற்க்குள் பிறப்பு வளர்ப்பு பிடித்தது பிடிக்காதது எல்லாம் பேசி முடித்து இருந்தார்கள்
கமலை நிருவுக்கு பிடித்து போனது அவன் கண்ணியமாக பேசியதும் காப்பாற்றியதும் அவள், அவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தால்.
கமலுக்கு இன்னும் தான் காண்பது கனவா நனவாஎன்று கிள்ளி பார்த்து கொண்டான். கார் மெல்ல பாரதி பார்க் ஓரம் நிற்க, ரோட்டு ஓர கடையில் சூடான வேற்கடலை வாங்கி கொரித்த படியே வெட்டி கதை பேசியபடி அந்த கார் அங்கிருந்து நகர்ந்தது.
தியேட்டர் சம்பவம் நடந்த மூன்றாம் நாள் கமலின் கல்லூரி வாசலில் நீள நிற சுடிதாரில் நிருபமா நின்றாள். கமல் தன்னை நினைத்து ,தன் அதிஷ்டத்தை நினைத்து பெருமை பட்டான்.
அன்றிலிருந்து சரியாக நான்கே முக்கா நாளில் அதே ரத்னா தியேட்டர் இருட்டில் நிருபமா உதட்டில் கமலின் நாக்கு பேரணி நடத்தியது.... (தொடரும்)
அன்புடன்/ ஜாக்கிசேகர்
/
ReplyDeleteஅன்றிலிருந்து சரியாக நான்கே முக்கா நாளில் அதே ரத்னா தியேட்டர் இருட்டில் நிருபமா உதட்டில் கமலின் நாக்கு பேரணி நடத்தியது....
/
கொக்க மக்கா நடத்தட்டும்!! நடத்தட்டும்!!!
ஓஓ.... இது தொடர்கதையா... :))
ReplyDeleteதலைப்ப பார்த்துட்டு ஏதோ கட்டுரை போலன்னு நெனைச்சு ரெண்டு பாகத்த மிஸ்(டர்ரு) பண்ணிட்டேன்.. படிச்சுட்டு வர்றேன்.
(ஒரு சிறிய விண்ணப்பம்.. தயவுசெஞ்சு பின்னூட்டபெட்டியை பாப் அப் விண்டோவிலிருந்து மாற்றவும். பின்னூட்டமிட சிரமமாக உள்ளது. :( )
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......
ReplyDeleteஎன்னா பாக்குறீங்க.. கடைசி லைன படிச்சிட்டு நான் விட்ட பெருமூச்சுதான் இது...
சென்ஷி எனக்கு பெரிய கம்யுட்டர் அறிவெல்லாம் இல்லை பாப்பப் வின்டோவ் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது நண்பர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்கிறேன். யார் வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் படித்து பின்னுட்டம் இடுவது என்பது பெரிய விஷயம், இந்த உற்சாகம்தான் என்னை இன்னும் சிறப்பாக எழுத தூன்டும் நன்றி சென்ஷி
ReplyDeleteஹாய் சிவா, தொடர்ந்து பின்னுட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்துவதற்க்கு நன்றி
ReplyDeleteவெண் இன்னும் எவ்வளவோ இருக்கு அதுக்குள்ள இப்படியா?
ReplyDeleteஜாக்கிசேகர் தொடர்ந்து எழுதுங்கள் கவனமாக படித்துவருகின்றேன் ஏன் என்றால் எனது துறையை பற்றியல்லவா தலைப்பு இட்டுள்ளீர்கள்.
ReplyDeleteமுயற்சி தொடர வாழ்த்துக்கள்.நேரமிருந்தால் எனது வலைப்பதிவிற்கு வந்து போகவும்.
வரவேற்றமைக்கு மிக்க நன்றி... மக்களுக்கு நல்லது செய்ய எதாவது ஒன்று செய்து கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆஹா... என்ன அற்புதமான காதல்! எனக்கு ஒரு நிருபமா கிடைக்கலையே! கார் அடிக்கடி கடற்கரையில் பயனித்து கடலை தின்னட்டும்.
ReplyDeleteஆஹா... என்ன அற்புதமான காதல்! எனக்கு ஒரு நிருபமா கிடைக்கலையே! கார் அடிக்கடி கடற்கரையில் பயனித்து கடலை தின்னட்டும்.
ReplyDeleteநன்றி சத்யா
ReplyDelete//அதே ரத்னா தியேட்டர் இருட்டில் நிருபமா உதட்டில் கமலின் நாக்கு பேரணி நடத்தியது.... //
ReplyDeleteஇதுக்குதான்யா முதல்லையே சொன்னேன் கமல் எங்குறதுக்கு பதிலா இவன் என்று பெயர் வைங்க என்னு கேட்டாத்தானே இந்த ஜாக்கிசேகர்
என்ன செய்ய கமல் என்று பெயர் வைத்தாகிவிட்டதே ,இவன். வேண்டம் என்றால் ஒன்று செய்யலாம் கமல் என்று வரும் இடங்களில் எல்லாம் இனி நீங்கள் மட்டும் இவன் என வாசிக்கவும். நான் என்ன செய்ய??
ReplyDelete