அஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்து இருக்கிறது


( தமிழ் சினிமாவை மீண்டும் தலை நிமிர வைக்க வந்திருக்கும் படம்)











1980 களில் இலக்கு இல்லாமல் சுற்றும், பாச, நேசத்துக்காக ஏங்கும் பாசக்கார பயல்களின் கதை...

1980களில் மதுரை எப்படி இருந்தது என்று நம் கண் முன் நிறுத்துகிறார்கள். இதில் அழகர்,பரமு என்ற இரண்டு நண்பர்கள் அவர்கள் இருவருக்கும்ஏற்படும் பிரச்சனைகள் அதில் அழகருக்கு ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் மோதல் என்று ரொம்ப அற்புதமாக எடுத்து இருக்கிறார்கள்

அழகராக வரும் ஜெய் மிக அற்புதமாக அவருடைய பாத்திர படைப்பை செய்து இருக்கிறார். முக்கியமாக தன் காதலியை பார்த்தவாரே கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டாதது போல் எழுந்து நின்று சிரிப்பார் பாருங்கள் அது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். சென்னை 28க்கு பிறகு அவருக்கு இது நல்ல படம் .


அழகர் காதலியாக வரும் சுவாதி தெலுங்கு இறக்குமதி.தெலுங்கு யாரடி நீ மோகினியில் பாலக்காட்டு மாமி கேரக்டரில் நடித்து இருப்பவர்,இவரின் கண்கள் படத்துக்கு பலம் சேர்கின்றன முக்கியமாக அழகரை எதிரிகள் சூழும் இடத்தில் அவர் கதறுவது அழகு்...


இயக்குநர் சமுத்திரகனி முக்கியமான பாத்திரத்தில் மிகவும் இயல்பாய் நடித்து இருக்கிறார்.
ஆட்டோவில் அவர் சசிகுமாரிடம் மாட்டும் இடத்தில் தியேட்டரே கை தட்டுகிறது



அவருக்கு நண்பராக நடித்து பட்டையை கிளப்பி இருக்கும் சசிகுமார் (இயக்குநர் , தயாரிப்பாளர்)ரொம்ப அற்புதமாக பரமு பாத்திரத்தை செய்து இரு்க்கிறார்.

காசியாக வரும் கஞ்சா கருப்பு பின்னி பெடலெடுத்து இருக்கிறார். கஞ்சா கருப்பு தன் வாழ் நாளில் பெருமையாக சொல்லிக் கொள்ளும் படியான படம்


ரெம்போன் ஆர்ட் டைரக்டர் மிக அற்புதமாக செய்து இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கு விருது கிடைத்தாலும் வியப்பதற்க்கு இல்லை.

இசை ஜேம்ஸ் வசந்தன் காம்பயரர் வேலை மட்டும் இல்லாமல் ரொம்ப அற்புதமாக செய்து இருக்கிறார்

மொத்ததில்,இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று அவதாரம் எடுத்து இருக்கும் சசிகுமார் பாராட்டுக்கு உரியவர்.
முதல் படத்திலேயே உலக தரத்துக்கு படம் செய்து இருப்பது மிகவும் பாராட்டபடவேண்டிய விஷயம்.


விமர்சனம் என்ற போர்வையில்
முழு கதையையும் சொல்லும் ஆள் நான் இல்லை. இந்த படத்தை பாருங்கள் ஒரு வித்யாசமான அனுபவத்தை நீங்கள் உணர்வீர்கள்

அன்புடன்/ஜாக்கிசேகர்

13 comments:

  1. //விமர்சனம் என்ற போர்வையில்
    முழு கதையையும் சொல்லும் ஆள் நான் இல்லை.//

    வரவேற்கிறேன். அப்படியே வழிமொழிகிறேன்.
    நல்ல விமர்சனம். படத்தை பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. படத்தின் இயக்குனர் அமிரின் உதவியாளர் என்று கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  2. நன்றி ராஜா,உண்மைதான் படத்தின் இயக்குநர் சசி அமி்ர் உதவியாளர்தான். படத்தின் பல இடங்களில் அதன் பாதிப்பு தெரியும்

    ReplyDelete
  3. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் பதிவு. நன்றி.

    ReplyDelete
  4. //சுவாதி தெலுங்கு இறக்குமதி.தெலுங்கு யாரடி நீ மோகினியில் பாலக்காட்டு மாமி கேரக்டரில் நடித்து இருப்பவர்//

    இவர் சுவாதியாக இருக்கலாம். ஆனால் அந்த ரோல் செய்தவரின் பெயர் சரண்யா - பாலகாடு.

    Here's the bio data:

    Saranya Mohan, I BA English, St. Joseph College for Women, Alappuzha,

    புள்ளி விவரத்துல தெளிவா இருப்போம் இல்ல? :))

    ReplyDelete
  5. புள்ளி விவரத்தில் நீங்கள் தெளிவானவர்தான. சுப்ரமணியபுரத்தில் நடித்த சுவாதி யாரடி நீ மோகினி தெலுங்கு பதிப்பில் நடித்தவர் யாரடி நீ மோகினி படம் ஒரு தெலுங்கு படத்தின் ரிமேக் அது தெலுங்கில் அடவாரி மாட்டலுக்கே அர்த்தமே வெறு

    அவர்தானா? என்பதை அறிய கிழே கிளிக் செய்யவும்
    http://www.indiaglitz.com/channels/telugu/gallery/m/Movies/amav/200316.html

    ReplyDelete
  6. //தெலுங்கு பதிப்பில் நடித்தவர் //

    சாரி, தெலுங்கு பதிப்பு என்ற வார்த்தையை நான் கவனிக்கலை. மாப்பு, மன்னிப்பு. :))

    ReplyDelete
  7. I will watch this movie this weekend, I have been reading a lot of reviews throwing praise on the director & actors of this movie!

    ReplyDelete
  8. ஜோ நீங்கள் ஹப் வலை தளத்தில் எனது சுப்ரமணியபுரம் பற்றிய பதிவை லீங் கொடுத்து இருக்கிறீர்கள் என்று எண்னுகிறேன், அதற்க்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் . அதே போல் இந்த படடத்தை பற்றி முதல் விமர்சனம் செய்தது நான்தான். மீண்டும் நன்றி ஜோ

    ReplyDelete
  9. நேற்றுதான் நண்பா சுப்ரமணியபுரம் பார்த்தேன். அருமையான படம். குறை ஏதும் சிறிதும் சொல்ல முடியாத அருமையான நடிப்பு.



    "கண்கள் இரண்டால் கட்டி இழுத்தாய்" பாடல் ஒன்றே போதும், ஜேம்ஸ் வசந்தனின் முதல் இசையமைப்பாளர் முயற்சி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

    ReplyDelete
  10. Hi,
    I really enjoyed Subramaniyapuram.
    And Anjaathey is also awesome.


    Senthil

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner