மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை பாகம் 1
(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)
அவன் இனியவன், எல்லோரிடமும் அன்பு பாராட்டுபவன், அவன் சோகமாக இருந்த எவரும் பார்த்ததுஇல்லை பிறந்த உடன் அழுது ஆர்பாட்டம் பண்ணாத குழந்தைகளில் இவனும் ஒருவன்.
மக்கள் திலகம் எம்ஜியாருக்கு பிறகு தாய் குலத்தையும், அன்னையை மதிப்பவன். தந்தை பேச்சுக்கு கட்டுபட்டு நடப்பவன்.
எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும், எவரும் பசியோடு இருக்க கூடாது என்று நினைப்பவன் மொத்தத்தில் அவன் iso9001பிள்ளை . 24 கேரட் கோல்ட்.
அவன் பணிவை பார்த்த பலரும் இது போல் ஒரு பிள்ளை நமக்கு பிறக்க வில்லையே என ஏக்கம் கொள்வர்.பொதுவாக அவன் பக்கத்தவிட்டு பெற்றோர் தன் குழந்தைகளை திட்டும் போது,
“ என்டா? அவன் மூத்திரத்தை வாங்கி மூனு நாளைக்க குடி அப்பவாவது புத்தி வருதா பார்ப்போம் ? ”
என்று திட்டுவார்கள்.
அவன் பிறந்தது வேறு ஊர் என்றாலும் அவன் வளர்ந்தது படித்தது எல்லாம் கல்பாக்கம்தான் அவனின் பெற்றோர் கல்பாக்கத்தில் டவுன் ஷிப்பில் வசித்து வந்தனர் .
அனுசக்தி துறையில் அவனின் அப்பாவுக்கு வேலை. அவனுக்கு ஒருதம்பி ,ஒருதங்கை. டவுன்ஷிப் வாழ்க்கையில் எல்லோர் பெற்றோருக்கும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு, தன் வீட்டில் ,கார் ,டீவி இருப்பது பெருமை போல் தன் பிள்ளை நன்றாக படிப்பதும்கூட ஒரு பெருமையாக கருதினர். அந்த பெருமைக்கு பங்கம் வராமல் அவன் படித்தான்.
அவன் வீட்டில் எல்லோருமே படித்தவர்கள் என்பதால் அவர்கள் வீட்டில் வாங்கும் ஹின்டு பேப்பர் முழு பயன் அளித்தது.ஏழு மணிக்கு வரும் ஹிந்து பேப்பர் காலை பத்து மணிக்கெல்லாம் தன் முழு கற்பையும் இழந்து விடும்.
அவனை அவன் என்று மரியாதை இல்லாமல் அழைக்கிறோம் அவனுக்க ஒரு பெயர் வைக்கலாமே? எளிதில் வாயில் நுழையும் பெயராக, கமல் என்று வைப்போம்.
(தொடரும்)
அன்புடன் /ஜாக்கிசேகர்
Labels:
கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
சார்...
ReplyDeleteராம் ரேஞ்சுல போட்டுத் தாக்க போறீங்களா...
பாப்போம் பாப்போம்.
யாரை சொல்ல வருகிறீர்கள்?
ReplyDeleteதொடருங்கள்... படிக்க ரெடியாகியாச்சு :)
ReplyDelete//அவனை அவன் என்று மரியாதை இல்லாமல் அழைக்கிறோம் அவனுக்க ஒரு பெயர் வைக்கலாமே? எளிதில் வாயில் நுழையும் பெயராக, கமல் என்று வைப்போம். //
ReplyDeleteஎதுக்குங்க கமல் எல்லாம்?
என் கதையைச் சொல்லிட்டுப் போறீங்க..பேசாம என் பெயரையே வச்சிடுங்க :P
அப்புறம் இங்கிட்டு http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_19.html
ReplyDeleteஉங்களைப் போட்டு கும்மிட்டேன்..
வந்து எட்டிப்பார்த்தீங்கன்னா ஒரு பிராயச்சித்தம் :P
அப்புறம் இங்கிட்டு http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_19.html
ReplyDeleteஉங்களைப் போட்டு கும்மிட்டேன்..
வந்து எட்டிப்பார்த்தீங்கன்னா ஒரு பிராயச்சித்தம் :P
தொடர் கதையோ ?
ReplyDeleteஅன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
நன்றி நித்யா, ராம் ரேஞ்சே வேறங்க, அவர் சிந்தனை சிற்பி...
ReplyDeleteயாரையும் குறிப்பிட்டு சொல்ல வரவல்லை, எவர் மனதையும் நோகடிக்க போவதில்லை... நன்றி தமிழ் சினிமா
ReplyDeleteநன்றி தோக, நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்...
ReplyDeleteவிசைப்பலகையில் தட்ட ஈசியான பெயர் கமல் அதனால் தான் நன்றி, ரிஷான்.
ReplyDeleteதொடர் கதையல்ல.. இது எழுத முடியும் வரை எழுதுகிறேன்
ReplyDeleteநன்றி பாஸ்கர்
ReplyDeleteஅடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்...
ReplyDelete/
ReplyDeleteஎளிதில் வாயில் நுழையும் பெயராக, கமல் என்று வைப்போம்.
/
????
rishaan பேரே வெச்சிடுங்க!!
:)))
கதை நல்லா போகுது அடுத்த பகுதியையும் வாசித்து விடுகிறேன்
ReplyDelete//ஏழு மணிக்கு வரும் ஹிந்து பேப்பர் காலை பத்து மணிக்கெல்லாம் தன் முழு கற்பையும் இழந்து விடும்.//
இந்த வரி சூப்பர்
நன்றி இவன், இது போன்று வரிகளை விமர்சிக்கும் போதுதான் முன்பை விட யோசித்து எழுத தோன்றுகிறது ....
ReplyDelete