நரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி பெற்ற பிரதமர்
முதலில் டிவிஷன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மன்மோகன் சிங் அரசு மிண்ணணு வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது...
டென்ஷன் துளிகள்.............................................
வாக்கெடுப்பு முடிந்து எல்லோரும் டென்ஷனாக இருந்தார்
அத்வானி தன் உதடுகளை தடவிய படியே டென்ஷனில் இருந்தார்
ஆர்வ மிகுதியால் எல்லா உறுப்பினர்களும் எழுந்து நிற்க அவர்களை அடக்க சோம்நாத் சாட்டர்ஜி தவித்து போனார்
நமது பிரதமர் எப்போதும் போல் ஒருமாதிரி ஸ்டைலாக தவக்ட்டையில் கை வைத்த படி இருந்தார்...
மண்ணனு வாக்கெடுப்புக்கு பிறகு துண்டு சீட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு டென்ஷன் எகிறியது...
120 கோடி மக்களை ஆளப்போகும் ,அடுத்து வழிநடத்த போவது யார் என்பதை அறிவிக்க ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டார்கள்...
தேவகௌடா இப்போதும் எதிர் மேஜையில் படுத்த படியே இருந்தார்...
நாங்களே எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்று நினைக்கும் சன் குழுமம் தன் செய்தி சேனலில் தூர்தர்ஷன் லோக் சபா சேனலின் ஒளிபரப்பை கடன் வாங்கி ஒளிபரப்பியது
எப்போதும் அமளி துமளியாக இருக்கும் நாடளுமன்றம் சென்னை ஜோதி தீயேட்டரில் பிட்டு போடும் போது ஏற்படும் நிசப்தத்தை ஞாபகப்படுத்தியது
முந்தைய பிரதமர் வாஜ்பய் ஒரு ஓட்டு வித்யாசத்தில் தோற்றார். அவரது கட்சியில் எல்லோரும் டென்ஷனாக இருந்தார்கள்
இறுதியில் வெற்றி அறிவிக்க பட்டது ...256லிருந்து 275 ஆக ஆதரவு உயர்ந்தது
வந்தே மாதரம் இசைக்கபட்டு நாடளுமன்றம் இன்றைய கூத்துகளை இனிதே முடித்து கொண்டது
அன்புடன் /ஜாக்கிசேகர்
Labels:
சூடான ரிப்போர்ட்
Subscribe to:
Post Comments (Atom)
சந்தோஷமான செய்தி... அணுஒப்பந்த பயங்கரம் ஒருபுறம் இருந்தாலும்,மன்மோஹன் தோற்றால் பின்விளைவுகள் படு பயங்கரமாய் இருந்திருக்கும்.. மதவாதம் மறுபடியும் ஆட்சிக்கட்டில் ஏறி இருக்கும்... அல்லது தொங்கு (அ) தூங்கு பாராளுமன்றம் அமைந்திருக்கலாம்... இல்லையேல் மறுபடியும் நமது பணத்தில் தேர்தல் திருவிழா(அரசியல்வாதிக்கு மட்டும்,நமக்கு நரக விழா) நடந்தேறி இருக்கும்...
ReplyDeleteஓரிரு மாநிலங்களிலேயே அவிங்க தொல்லைதாங்க முடியல.... இந்தியாவில ஒரு குஜராத் இருந்தா பரவாயில்லை.. இந்தியாவே குஜராத்தா மாறுச்சுன்னா ..... கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடியலை....
//நமது பணத்தில் தேர்தல் திருவிழா(அரசியல்வாதிக்கு மட்டும்,நமக்கு நரக விழா) நடந்தேறி இருக்கும்...// உண்மையான வரிகள் தமிழ்
ReplyDeleteஜேக் வணக்கம்.இதுக்கெல்லாம் கூட்டம் கூட்ற மாதிரி தெரியல.மொக்கைக்குத்தான் ஏக கிராக்கின்னு கேள்வி.
ReplyDeleteஜேக் படத்துல காமிராவ வச்சுகிட்டு போஸ் கொடுக்கிறீங்க.பின்ன படத்த யாரு எடுத்தா:)
நன்றி நடராஜன் நீங்கள் சொல்வது உண்மைதான்,மொக்கைகளுக்குதான் மதிப்பு என்றாலும் ஏதாவது ஒரு புலம் பெயர்ந்த தமிழனுக்கு இடநத செய்தி போய் சேர்ந்தால் அதுவே எனக்கு போதும், உங்களை போன்றோர் ஆதரவு இருந்தால் எனக்கு அதுவே போதும் . போட்டோவை என் நண்பர் எடுத்தார்
ReplyDelete